பா – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 1
பாகத்தன் 2
பாகத்தான் 1
பாகத்து 2
பாகம் 6
பாகம்-அது 1
பாகமும் 1
பாகன் 3
பாகனுக்கு 1
பாகனை 1
பாகா 5
பாகை 1
பாங்காய் 2
பாங்கினொடு 1
பாங்கு 3
பாச 2
பாசத்தை 1
பாசம் 12
பாட்டின் 1
பாட 1
பாடகம் 1
பாடல் 5
பாடலொடு 1
பாடவே 1
பாடவேண்டும் 1
பாடாரோ 1
பாடி 91
பாடிநின்று 1
பாடிப்பாடி 6
பாடியும் 1
பாடிற்றிலேன் 1
பாடினோம் 1
பாடு 3
பாடு-மின் 1
பாடு-மின்கள் 1
பாடுகின்றிலை 1
பாடுகோ 1
பாடுதல் 1
பாடுதும் 20
பாடும் 5
பாடுவன 1
பாடுவனே 1
பாடுவித்த 1
பாடே 1
பாடேன் 1
பாண்டி 13
பாண்டியற்கு 2
பாண்டியன்-தன்னை 1
பாண்டியன்-தனக்கு 1
பாண்டியனார் 3
பாண்டூர் 1
பாணனேன் 1
பாணே 1
பாத 13
பாத_மலர் 4
பாதகமே 1
பாதங்கள் 3
பாதத்து 1
பாதம் 33
பாதமே 3
பாதனே 1
பாதாளத்தார் 2
பாதாளம் 2
பாதாளர் 1
பாதி 2
பாதியனை 3
பாதியும் 1
பாதியே 1
பாதுகாத்து 1
பாம்பின் 1
பாம்பு 1
பாய் 2
பாய்த்தினன் 1
பாய்ந்திலளேல் 1
பாய்ந்து 6
பாய்ந்துபாய்ந்து 1
பாய 2
பாயவும் 1
பாயாதால் 1
பாயும் 2
பாயும்-அது 1
பார் 8
பார்_மகளும் 1
பார்க்கோ 1
பார்த்து 1
பார்ப்பதியும் 1
பார்ப்பதியை 1
பார்ப்பது 1
பார்ப்பான் 1
பார்ப்பானே 1
பார்ப்பு 1
பாராதே 1
பாரார் 1
பாரிக்கும் 1
பாரிடை 2
பாரில் 1
பாரொடு 2
பாரோர் 1
பால் 15
பால்_மொழி-தன்னொடும் 1
பாலகன் 1
பாலகனார்க்கு 1
பாலின் 1
பாலும் 1
பாலை 2
பாலையும் 2
பாலையுள் 1
பாவ 2
பாவ_நாச 1
பாவ_நாசா 1
பாவக 1
பாவகத்தால் 2
பாவகம் 1
பாவங்கள் 1
பாவம் 4
பாவனை 2
பாவி 1
பாவித்து 1
பாவிய 3
பாவியன் 1
பாவியேற்கு 1
பாவியேற்கும் 1
பாவியேன் 1
பாவியேனுடைய 1
பாவியேனை 1
பாவு 1
பாவை 2
பாவைக்கூத்தாட்டு 1
பாழ் 2
பாழ்த்த 1
பாழுக்கு 1
பாற்கடல் 2
பாற்கடலான் 1
பாறும்வண்ணம் 1
பானல் 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பா (1)

பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் – திருவா:24 8/3
மேல்


பாகத்தன் (2)

பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 8/2
மாது ஆடு பாகத்தன் உத்தரகோசமங்கை – திருவா:16 6/1
மேல்


பாகத்தான் (1)

மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி – திருவா:19 3/2
மேல்


பாகத்து (2)

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை – திருவா:5 30/2
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால் – திருவா:25 10/3
மேல்


பாகம் (6)

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் – திருவா:2/78
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி – திருவா:4/152
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் – திருவா:5 17/2,3
மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி – திருவா:12 7/1
ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று – திருவா:14 6/1
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் – திருவா:42 2/3
மேல்


பாகம்-அது (1)

பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
மேல்


பாகமும் (1)

தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே – திருவா:5 37/2
மேல்


பாகன் (3)

தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய் – திருவா:18 8/4
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி – திருவா:48 3/2
மேல்


பாகனுக்கு (1)

பணை முலை_பாகனுக்கு உந்தீ பற – திருவா:14 8/3
மேல்


பாகனை (1)

பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில் – திருவா:8 10/4
மேல்


பாகா (5)

மெய்யா விமலா விடை பாகா வேதங்கள் – திருவா:1/34
தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம் – திருவா:23 3/2
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/2,3
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/3,4
மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா
செந்நாவலர் பசும் புகழ் திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 1/2,3
மேல்


பாகை (1)

ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
மேல்


பாங்காய் (2)

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் – திருவா:2/47
பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு – திருவா:2/62
மேல்


பாங்கினொடு (1)

பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை – திருவா:31 9/1
மேல்


பாங்கு (3)

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி – திருவா:4/159
பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் – திருவா:7 3/4
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் – திருவா:7 9/4
மேல்


பாச (2)

பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/4
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி – திருவா:37 7/1
மேல்


பாசத்தை (1)

பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் – திருவா:8 20/5
மேல்


பாசம் (12)

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே – திருவா:1/64
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம் – திருவா:7 2/1
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட – திருவா:18 9/3
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை – திருவா:31 4/3
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி – திருவா:31 7/1
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/3
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/3
பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ – திருவா:42 10/3
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக – திருவா:45 3/2
பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி – திருவா:51 7/2
படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும் – திருவா:51 11/1
மேல்


பாட்டின் (1)

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் – திருவா:1/93
மேல்


பாட (1)

சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண் – திருவா:7 1/2
மேல்


பாடகம் (1)

பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு – திருவா:9 7/3
மேல்


பாடல் (5)

பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் – திருவா:8 8/1
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 8/4
நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன் – திருவா:11 13/3
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 13/4
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 16/4
மேல்


பாடலொடு (1)

பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே – திருவா:49 1/5
மேல்


பாடவே (1)

பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே – திருவா:5 99/4
மேல்


பாடவேண்டும் (1)

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு – திருவா:5 100/1
மேல்


பாடாரோ (1)

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை – திருவா:7 3/7
மேல்


பாடி (91)

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு – திருவா:5 100/1
கண்ணுக்கு இனியானை பாடி கசிந்து உள்ளம் – திருவா:7 4/6
சீலமும் பாடி சிவனே சிவனே என்று – திருவா:7 5/6
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் – திருவா:7 6/6
கையால் குடைந்துகுடைந்து உன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் – திருவா:7 11/2,3
சீத புனல் ஆடி சிற்றம்பலம் பாடி
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி – திருவா:7 14/3,4
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி – திருவா:7 14/4
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி – திருவா:7 14/4,5
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி – திருவா:7 14/5
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி – திருவா:7 14/5,6
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி – திருவா:7 14/6
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன் – திருவா:7 14/6,7
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/8
வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/7,8
நங்கள் பெருமானை பாடி நலம் திகழ – திருவா:7 17/7
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/7,8
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/3,4
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 4/4
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/3,4
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/3,4
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே – திருவா:9 14/2,3
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல் – திருவா:9 16/1
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று – திருவா:9 17/3
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி
கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/1,2
கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/2
கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட – திருவா:9 18/2,3
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட – திருவா:9 18/3
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி – திருவா:9 19/1
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி – திருவா:9 19/1
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி – திருவா:9 19/1,2
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி – திருவா:9 19/2
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி
கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/2,3
கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/3
கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/3
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 19/4
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 1/4
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 2/4
சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 3/4
சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 4/4
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 5/4
திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 6/4
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 7/4
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 8/4
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/2,3
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 11/4
தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 12/4
நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன் – திருவா:11 13/3
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 13/4
நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 18/4
கண்ணார வந்துநின்றான் கருணை கழல் பாடி
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 19/3,4
குலம் பாடி கொக்கு_இறகும் பாடி கோல் வளையாள் – திருவா:11 20/1
குலம் பாடி கொக்கு_இறகும் பாடி கோல் வளையாள் – திருவா:11 20/1
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும் – திருவா:11 20/2
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும் – திருவா:11 20/2
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 20/4
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 1/4
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 4/4
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 7/4
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 8/4
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 9/4
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 10/4
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 11/4
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 13/4
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 14/4
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 15/4
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 16/4
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 17/4
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 18/4
ஓடியவா பாடி உந்தீ பற – திருவா:14 5/2
துஞ்சியவா பாடி உந்தீ பற – திருவா:14 10/2
கூட்டியவா பாடி உந்தீ பற – திருவா:14 11/2
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/4
கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 15/4
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 1/5,6
கோன் தங்கு இடைமருது பாடி குல மஞ்ஞை – திருவா:16 2/5
மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடி
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/5,6
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/5,6
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால் – திருவா:16 6/5
என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில் பாடி
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/5,6
மாலுக்கு அரியானை வாயார நாம் பாடி
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 8/5,6
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
சித்தனை சிவலோகனை திருநாமம் பாடி திரிதரும் – திருவா:42 10/2
மேல்


பாடிநின்று (1)

நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/4
மேல்


பாடிப்பாடி (6)

மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே – திருவா:9 6/4
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 8/4
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி – திருவா:9 9/3
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி
தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி – திருவா:9 11/2,3
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/4
பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத – திருவா:27 10/3
மேல்


பாடியும் (1)

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் – திருவா:4/62
மேல்


பாடிற்றிலேன் (1)

பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன் – திருவா:6 45/1
மேல்


பாடினோம் (1)

கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ – திருவா:7 8/4
மேல்


பாடு (3)

ஏனோர்க்கும் தம் கோனை பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 6/8
ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 8/8
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் – திருவா:26 5/1
மேல்


பாடு-மின் (1)

பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/2
மேல்


பாடு-மின்கள் (1)

மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள்
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/2,3
மேல்


பாடுகின்றிலை (1)

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர் – திருவா:5 31/2
மேல்


பாடுகோ (1)

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய – திருவா:47 2/1,2
மேல்


பாடுதல் (1)

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை – திருவா:20 5/2
மேல்


பாடுதும் (20)

அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/6
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 2/6
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/6
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 4/6
ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 5/6
ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 6/6
ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 7/6
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 8/6
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 9/6
அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 10/6
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 11/6
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/6
ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 13/6
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 14/6
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 15/6
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 17/6
அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 18/6
அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 19/6
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 20/6
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/6
மேல்


பாடும் (5)

ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 10/8
பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும் – திருவா:11 13/1
பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும் – திருவா:11 13/1
பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும்
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட – திருவா:11 13/1,2
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட – திருவா:11 13/2
மேல்


பாடுவன (1)

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் – திருவா:5 17/1
மேல்


பாடுவனே (1)

பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னை பாடுவனே – திருவா:6 44/4
மேல்


பாடுவித்த (1)

நாயேனை தன் அடிகள் பாடுவித்த நாயகனை – திருவா:10 12/1
மேல்


பாடே (1)

இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே – திருவா:19 6/1
மேல்


பாடேன் (1)

அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/3
மேல்


பாண்டி (13)

பாண்டி நாடே பழம் பதி ஆகவும் – திருவா:2/118
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை – திருவா:8 10/3
அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த – திருவா:8 11/3
தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை – திருவா:8 19/4
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டி பிரான் – திருவா:13 2/2
பாண்டி நல் நாடரால் அன்னே என்னும் – திருவா:17 5/2
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை – திருவா:17 5/3
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய் – திருவா:18 2/4
தென் பாண்டி நாடே தெளி – திருவா:19 2/4
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு – திருவா:36 5/3
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/3
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/6
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே – திருவா:50 7/3
மேல்


பாண்டியற்கு (2)

பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி – திருவா:4/214
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் – திருவா:36 1/1
மேல்


பாண்டியன்-தன்னை (1)

தண்டாலே பாண்டியன்-தன்னை பணிகொண்ட – திருவா:13 16/3
மேல்


பாண்டியன்-தனக்கு (1)

பாண்டியன்-தனக்கு பரிமா விற்று – திருவா:2/38
மேல்


பாண்டியனார் (3)

பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் – திருவா:36 3/2,3
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே – திருவா:36 6/4
பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார்
புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார் – திருவா:36 9/2,3
மேல்


பாண்டூர் (1)

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் – திருவா:2/70
மேல்


பாணனேன் (1)

பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனை – திருவா:5 44/3
மேல்


பாணே (1)

பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி – திருவா:5 84/2
மேல்


பாத (13)

பாத சிலம்பு ஒலி காட்டிய பண்பும் – திருவா:2/53
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர் – திருவா:5 31/2
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன் – திருவா:5 37/3
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா – திருவா:5 52/1
பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து – திருவா:6 47/1
பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/8
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர் – திருவா:7 20/1
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர் – திருவா:13 9/1
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 9/3,4
பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/3,4
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே – திருவா:38 3/4
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர் – திருவா:38 4/1
மேல்


பாத_மலர் (4)

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே – திருவா:5 31/2,3
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா – திருவா:5 52/1
பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர்
போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே – திருவா:7 10/1,2
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர்
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள் – திருவா:7 20/1,2
மேல்


பாதகமே (1)

பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம் – திருவா:15 7/4
மேல்


பாதங்கள் (3)

நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த – திருவா:9 6/3
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட – திருவா:18 9/3
மேல்


பாதத்து (1)

ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/3,4
மேல்


பாதம் (33)

படிம பாதம் வைத்த அ பரிசும் – திருவா:2/76
பாதம் எய்தினர் பாதம் எய்தவும் – திருவா:2/137
பாதம் எய்தினர் பாதம் எய்தவும் – திருவா:2/137
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன் – திருவா:5 13/1
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/3
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/3
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின் – திருவா:5 56/2
புகுவேன் எனதே நின் பாதம் போற்றும் அடியார் உள் நின்று – திருவா:5 60/1
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி – திருவா:5 63/2
பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி – திருவா:5 66/2
தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே – திருவா:5 68/4
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி – திருவா:5 69/4
எனைத்து எனைத்து அது எ புறத்தது எந்தை பாதம் எய்தவே – திருவா:5 76/4
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் – திருவா:5 89/2
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும் – திருவா:7 2/6
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம்
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 12/7,8
செங்கமல பொன் பாதம் தந்தருளும் சேவகனை – திருவா:7 17/5
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள் – திருவா:7 20/3,4
பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி – திருவா:8 1/2
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால் – திருவா:18 1/2
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 4/3,4
தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே – திருவா:32 8/4
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி – திருவா:35 4/2
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி – திருவா:35 7/3
மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக – திருவா:38 9/1
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர – திருவா:44 5/1
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம்
மருளும் கெட நெஞ்சே வாழ்த்து – திருவா:48 3/3,4
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே – திருவா:49 1/4
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 4/6
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 5/2
மேல்


பாதமே (3)

பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
மேல்


பாதனே (1)

வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/2,3
மேல்


பாதாளத்தார் (2)

பாரார் விசும்பு உள்ளார் பாதாளத்தார் புறத்தார் – திருவா:8 2/1
விண்ணோர் முழு_முதல் பாதாளத்தார் வித்து – திருவா:11 19/1
மேல்


பாதாளம் (2)

பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால் – திருவா:18 1/2
மேல்


பாதாளர் (1)

பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும் – திருவா:11 13/1
மேல்


பாதி (2)

பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற – திருவா:26 2/3
பாதி எனும் இரவு உறங்கி பகல் எமக்கே இரை தேடி – திருவா:51 12/1
மேல்


பாதியனை (3)

மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை – திருவா:8 7/3,4
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை – திருவா:8 18/1,2
மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை
தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை – திருவா:8 19/3,4
மேல்


பாதியும் (1)

பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு – திருவா:9 20/3
மேல்


பாதியே (1)

பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
மேல்


பாதுகாத்து (1)

பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு – திருவா:5 77/3
மேல்


பாம்பின் (1)

உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா_பேதத்த கடு விடம் எய்தி – திருவா:4/56,57
மேல்


பாம்பு (1)

பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி – திருவா:1/27
மேல்


பாய் (2)

பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு என் – திருவா:17 7/3
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 10/3
மேல்


பாய்த்தினன் (1)

குரம்பு கொண்டு இன் தேன் பாய்த்தினன் நிரம்பிய – திருவா:3/173
மேல்


பாய்ந்திலளேல் (1)

சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் – திருவா:12 7/3
மேல்


பாய்ந்து (6)

பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து – திருவா:3/84
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/8
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/8
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ – திருவா:12 7/4
மேல்


பாய்ந்துபாய்ந்து (1)

பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம் – திருவா:7 13/5
மேல்


பாய (2)

மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப – திருவா:8 13/2
கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/3
மேல்


பாயவும் (1)

எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
மால்-அது ஆகி மயக்கம் எய்தியும் – திருவா:2/132,133
மேல்


பாயாதால் (1)

வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
மேல்


பாயும் (2)

அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும்
கழுக்கடை காண் கைக்கொள் படை – திருவா:19 7/3,4
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 5/3
மேல்


பாயும்-அது (1)

சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ – திருவா:12 7/2
மேல்


பார் (8)

பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் – திருவா:2/69
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள் – திருவா:7 15/4
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும் – திருவா:11 13/1
பத்தர் எல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் – திருவா:19 3/3
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார் – திருவா:36 3/2
பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும் – திருவா:44 1/1
மேல்


பார்_மகளும் (1)

சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
மேல்


பார்க்கோ (1)

பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய – திருவா:47 2/2
மேல்


பார்த்து (1)

பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி – திருவா:6 42/3
மேல்


பார்ப்பதியும் (1)

சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின் – திருவா:9 1/3
மேல்


பார்ப்பதியை (1)

பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை – திருவா:14 8/1
மேல்


பார்ப்பது (1)

பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற – திருவா:14 8/2
மேல்


பார்ப்பான் (1)

பத்தர் சூழ பராபரன் பாரில் வந்து பார்ப்பான் என – திருவா:42 4/1
மேல்


பார்ப்பானே (1)

பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத – திருவா:27 10/3
மேல்


பார்ப்பு (1)

வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என – திருவா:5 44/2
மேல்


பாராதே (1)

பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/2,3
மேல்


பாரார் (1)

பாரார் விசும்பு உள்ளார் பாதாளத்தார் புறத்தார் – திருவா:8 2/1
மேல்


பாரிக்கும் (1)

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே – திருவா:1/64
மேல்


பாரிடை (2)

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி – திருவா:4/137
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட – திருவா:18 9/3
மேல்


பாரில் (1)

பத்தர் சூழ பராபரன் பாரில் வந்து பார்ப்பான் என – திருவா:42 4/1
மேல்


பாரொடு (2)

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 1/1
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/2
மேல்


பாரோர் (1)

பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி – திருவா:25 7/1
மேல்


பால் (15)

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – திருவா:1/46
பஞ்சப்பள்ளியில் பால்_மொழி-தன்னொடும் – திருவா:2/13
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி – திருவா:5 36/3
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய் – திருவா:7 5/3
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும் – திருவா:10 18/2
தென் பால் உகந்து ஆடும் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 9/1
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ – திருவா:12 9/2
பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர் – திருவா:12 9/3
இன் பால் மொழி கிள்ளாய் எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 8/1
முன் பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால் – திருவா:19 8/2
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய – திருவா:37 9/1
கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
பால் திருநீற்று எம் பரமனை பரம் கருணையோடு எதிர்ந்து – திருவா:44 6/1
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும் – திருவா:48 1/1
மேல்


பால்_மொழி-தன்னொடும் (1)

பஞ்சப்பள்ளியில் பால்_மொழி-தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும் – திருவா:2/13,14
மேல்


பாலகன் (1)

பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் – திருவா:2/69
மேல்


பாலகனார்க்கு (1)

பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட – திருவா:14 17/1
மேல்


பாலின் (1)

பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
மேல்


பாலும் (1)

பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய் – திருவா:13 11/1
மேல்


பாலை (2)

தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம் – திருவா:5 58/1
நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை – திருவா:27 4/3
மேல்


பாலையும் (2)

தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து – திருவா:6 21/3
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய – திருவா:8 14/4
மேல்


பாலையுள் (1)

அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும் – திருவா:2/98,99
மேல்


பாவ (2)

பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே – திருவா:5 99/4
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
மேல்


பாவ_நாச (1)

பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே – திருவா:5 99/4
மேல்


பாவ_நாசா (1)

பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 9/1
மேல்


பாவக (1)

படி உற பயின்ற பாவக போற்றி – திருவா:4/211
மேல்


பாவகத்தால் (2)

புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால்
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/3,4
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி – திருவா:31 8/1
மேல்


பாவகம் (1)

பாவகம் பலபல காட்டிய பரிசும் – திருவா:2/82
மேல்


பாவங்கள் (1)

பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான் – திருவா:16 7/3
மேல்


பாவம் (4)

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி – திருவா:1/52
பாவம் நாசம் ஆக்கிய பரிசும் – திருவா:2/57
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே – திருவா:5 4/4
அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் – திருவா:11 8/2
மேல்


பாவனை (2)

இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே – திருவா:5 37/4
பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே – திருவா:49 3/2
மேல்


பாவி (1)

ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம் – திருவா:10 7/3
மேல்


பாவித்து (1)

பல்கால் உன்னை பாவித்து பரவி பொன்னம்பலம் என்றே – திருவா:21 10/3
மேல்


பாவிய (3)

மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து – திருவா:24 6/1
வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே – திருவா:34 10/1
ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன் – திருவா:34 10/2
மேல்


பாவியன் (1)

நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே – திருவா:34 10/4
மேல்


பாவியேற்கு (1)

பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே – திருவா:5 77/3,4
மேல்


பாவியேற்கும் (1)

பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து – திருவா:32 5/3
மேல்


பாவியேன் (1)

பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன்
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா – திருவா:24 1/2,3
மேல்


பாவியேனுடைய (1)

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய – திருவா:37 9/1,2
மேல்


பாவியேனை (1)

பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய் – திருவா:5 54/2
மேல்


பாவு (1)

தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள் – திருவா:24 6/2
மேல்


பாவை (2)

இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் – திருவா:5 22/2,3
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை – திருவா:12 13/1
மேல்


பாவைக்கூத்தாட்டு (1)

தோலின் பாவைக்கூத்தாட்டு ஆய் சுழன்று விழுந்து கிடப்பேனை – திருவா:50 3/2
மேல்


பாழ் (2)

பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே – திருவா:5 19/2
பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு – திருவா:40 9/1
மேல்


பாழ்த்த (1)

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே – திருவா:5 16/4
மேல்


பாழுக்கு (1)

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனை பணியாதே – திருவா:15 13/2
மேல்


பாற்கடல் (2)

செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து – திருவா:3/168
பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட – திருவா:14 17/1
மேல்


பாற்கடலான் (1)

செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல் – திருவா:19 1/3
மேல்


பாறும்வண்ணம் (1)

பத்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்வண்ணம்
சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட – திருவா:51 1/2,3
மேல்


பானல் (2)

பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே – திருவா:5 19/2
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4

மேல்