நெ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கிலை 1
நெக்கு 4
நெக்குநெக்கு 4
நெக 3
நெகவும் 1
நெகவே 2
நெகா 1
நெகாதவரை 1
நெகிழவிடேன் 1
நெகும் 1
நெகுவது 1
நெஞ்ச 2
நெஞ்சத்து 2
நெஞ்சம் 6
நெஞ்சமே 2
நெஞ்சாய் 2
நெஞ்சில் 5
நெஞ்சின் 1
நெஞ்சு 6
நெஞ்சும் 1
நெஞ்சுளே 1
நெஞ்சே 8
நெடியவனும் 1
நெடு 2
நெடுந்தகை 1
நெடுந்தகையே 1
நெடும் 6
நெடுமால் 2
நெடுமாலும் 1
நெய் 3
நெயை 1
நெரித்த 1
நெரித்தருளி 1
நெரித்திட்டு 1
நெரித்து 1
நெரிய 1
நெருங்கி 1
நெருங்கும் 1
நெருப்பு 2
நெருப்பும் 1
நெருப்பை 2
நெல்லி 1
நெல்லிக்கனி 1
நெற்றி 2
நெற்றி_கண்ணனே 1
நெறி 12
நெறி-தன்னை 1
நெறிக்கே 1
நெறிகள் 1
நெறிதரு 1
நெறியாக 1
நெறியானே 1
நெறியும் 1
நெறியே 4
நென்னலை 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

நெக்கிலை (1)

நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம் – திருவா:5 33/3
மேல்


நெக்கு (4)

உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து – திருவா:7 4/7
ஊடிஊடி உடையாயொடு கலந்து உள் உருகி பெருகி நெக்கு
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே – திருவா:32 11/3,4
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு – திருவா:35 4/3
நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு
வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா – திருவா:35 10/2,3
மேல்


நெக்குநெக்கு (4)

என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி – திருவா:4/80
பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன் – திருவா:5 100/1,2
ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு – திருவா:27 2/3
நெக்குநெக்கு உள் உருகிஉருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் – திருவா:27 8/1
மேல்


நெக (3)

அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன் – திருவா:5 98/1
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்த தேன் சொரியும் – திருவா:10 3/3
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும் – திருவா:23 1/1
மேல்


நெகவும் (1)

அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும்
புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே – திருவா:32 6/1,2
மேல்


நெகவே (2)

அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர – திருவா:5 29/2
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது – திருவா:38 7/3
மேல்


நெகா (1)

மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/1,2
மேல்


நெகாதவரை (1)

அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 7/4
மேல்


நெகிழவிடேன் (1)

கை-தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டுகொள்ளே – திருவா:5 1/4
மேல்


நெகும் (1)

நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/3
மேல்


நெகுவது (1)

நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி – திருவா:5 36/3
மேல்


நெஞ்ச (2)

வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால் – திருவா:7 7/7
வல் நெஞ்ச கள்வன் மன வலியன் என்னாதே – திருவா:10 11/1
மேல்


நெஞ்சத்து (2)

மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி – திருவா:19 5/2,3
இருந்து உறையும் என் நெஞ்சத்து இன்று – திருவா:47 5/4
மேல்


நெஞ்சம் (6)

வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள் – திருவா:5 80/1
நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம்
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 10/3,4
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக கருணையினால் – திருவா:15 4/1
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் – திருவா:36 3/1
நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே – திருவா:45 6/4
மேல்


நெஞ்சமே (2)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினை பட்டு – திருவா:5 20/1
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மாறு உரை – திருவா:48 1/3,4
மேல்


நெஞ்சாய் (2)

வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு – திருவா:5 21/1,2
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா – திருவா:5 21/3
மேல்


நெஞ்சில் (5)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க – திருவா:1/2
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட – திருவா:1/65
மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும் – திருவா:17 6/2
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார் – திருவா:17 6/3
நிச்சம் என நெஞ்சில் மன்னி யான் ஆகி நின்றானே – திருவா:34 9/4
மேல்


நெஞ்சின் (1)

நிற்பானை போல என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி – திருவா:15 4/2
மேல்


நெஞ்சு (6)

கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் – திருவா:5 56/3
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/4
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் – திருவா:8 11/2
கல் நெஞ்சு உருக்கி கருணையினால் ஆண்டுகொண்ட – திருவா:10 11/2
அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும் – திருவா:19 7/3
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் – திருவா:51 5/2
மேல்


நெஞ்சும் (1)

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் – திருவா:5 90/1
மேல்


நெஞ்சுளே (1)

நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து – திருவா:16 4/4
மேல்


நெஞ்சே (8)

பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய் – திருவா:5 19/2,3
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே
தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/3,4
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே – திருவா:5 32/3,4
மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல் – திருவா:5 33/1,2
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே – திருவா:5 35/3,4
இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம் தரும் காண் – திருவா:47 10/2
மருளும் கெட நெஞ்சே வாழ்த்து – திருவா:48 3/4
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் – திருவா:48 6/3
மேல்


நெடியவனும் (1)

நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா – திருவா:51 11/3
மேல்


நெடு (2)

கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி – திருவா:6 30/3
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே – திருவா:6 42/4
மேல்


நெடுந்தகை (1)

நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு – திருவா:6 12/1
மேல்


நெடுந்தகையே (1)

நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/4
மேல்


நெடும் (6)

நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் – திருவா:3/80
கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம் – திருவா:5 38/3
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/3
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய – திருவா:13 12/3
சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/4
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
மேல்


நெடுமால் (2)

போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று – திருவா:4/4
வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற – திருவா:24 3/3
மேல்


நெடுமாலும் (1)

செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய – திருவா:8 1/1
மேல்


நெய் (3)

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – திருவா:1/46
மெள்ளெனவே மொய்க்கும் நெய் குடம்-தன்னை எறும்பு எனவே – திருவா:6 24/4
பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
மேல்


நெயை (1)

தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக – திருவா:5 38/2
மேல்


நெரித்த (1)

வாரி நெரித்த ஆறு உந்தீ பற – திருவா:14 15/2
மேல்


நெரித்தருளி (1)

சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி
உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே – திருவா:13 6/2,3
மேல்


நெரித்திட்டு (1)

இந்திரனை தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து – திருவா:8 15/2
மேல்


நெரித்து (1)

சோமன் முகன் நெரித்து உந்தீ பற – திருவா:14 13/2
மேல்


நெரிய (1)

மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப – திருவா:40 7/1,2
மேல்


நெருங்கி (1)

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து – திருவா:4/31
மேல்


நெருங்கும் (1)

நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் – திருவா:21 7/3
மேல்


நெருப்பு (2)

சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம் – திருவா:6 31/1
நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் – திருவா:15 5/1
மேல்


நெருப்பும் (1)

நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் – திருவா:5 80/3
மேல்


நெருப்பை (2)

நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை – திருவா:27 3/1
நினைய பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை – திருவா:27 7/1
மேல்


நெல்லி (1)

நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை – திருவா:27 4/3
மேல்


நெல்லிக்கனி (1)

தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் – திருவா:3/162
மேல்


நெற்றி (2)

கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை – திருவா:8 8/4
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி_கண்ணனே விண் உளார் பிரானே – திருவா:29 2/1
மேல்


நெற்றி_கண்ணனே (1)

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி_கண்ணனே விண் உளார் பிரானே – திருவா:29 2/1
மேல்


நெறி (12)

நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி – திருவா:5 39/2
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே – திருவா:13 8/1
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே – திருவா:13 11/3
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் – திருவா:24 9/3
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் – திருவா:43 2/2
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற – திருவா:50 3/3
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை – திருவா:51 1/1
பத்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்வண்ணம் – திருவா:51 1/2
நெறி அல்லா நெறி-தன்னை நெறியாக நினைவேனை – திருவா:51 2/1
உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை – திருவா:51 7/3
மேல்


நெறி-தன்னை (1)

நெறி அல்லா நெறி-தன்னை நெறியாக நினைவேனை – திருவா:51 2/1
மேல்


நெறிக்கே (1)

புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம் – திருவா:6 28/1,2
மேல்


நெறிகள் (1)

சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் – திருவா:51 2/2
மேல்


நெறிதரு (1)

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் – திருவா:17 5/1
மேல்


நெறியாக (1)

நெறி அல்லா நெறி-தன்னை நெறியாக நினைவேனை – திருவா:51 2/1
மேல்


நெறியானே (1)

பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி – திருவா:39 1/1,2
மேல்


நெறியும் (1)

குறியும் நெறியும் குணமும் இலா குழாங்கள்-தமை – திருவா:40 4/1
மேல்


நெறியே (4)

நெறியே போற்றி நினைவே போற்றி – திருவா:4/115
மறையோர் கோல நெறியே போற்றி – திருவா:4/179
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 11/3,4
சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம் – திருவா:51 4/3
மேல்


நென்னலை (1)

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை – திருவா:7 6/1

மேல்