ஓ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 11
ஓங்காரத்து 1
ஓங்காரம் 1
ஓங்கி 5
ஓங்கிய 1
ஓங்கு 2
ஓங்கும் 1
ஓங்குவிக்கும் 1
ஓச்சுவார் 1
ஓசை 2
ஓசையால் 1
ஓசையில் 1
ஓட்டா 1
ஓட்டு 1
ஓட 2
ஓடாமே 1
ஓடாவண்ணம் 1
ஓடி 2
ஓடியவா 1
ஓடிற்றிலேன் 1
ஓடும் 1
ஓத்தானே 1
ஓத 3
ஓதம் 1
ஓதி 2
ஓம்புகின்றேன் 1
ஓம்புதல்பொருட்டு 1
ஓய்வு 1
ஓய 1
ஓயாதே 2
ஓர் 89
ஓராதார் 1
ஓரியூரில் 1
ஓலம் 3
ஓலமிட்டு 4
ஓலை 1
ஓவா 1
ஓவாது 2
ஓவாள் 1
ஓவி 1
ஓவிய 1
ஓவின 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

ஓ (11)

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று – திருவா:1/85
அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று – திருவா:1/91
போற்றி ஓ நமச்சிவாய புயங்களே மயங்குகின்றேன் – திருவா:5 62/1
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை – திருவா:5 62/2
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய் – திருவா:5 62/3
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி – திருவா:5 62/4
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ
சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 7/3,4
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ
இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் – திருவா:25 1/2,3
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவே ஓ
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ – திருவா:25 2/2,3
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 2/3,4
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 5/3,4
மேல்


ஓங்காரத்து (1)

உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை – திருவா:51 7/3
மேல்


ஓங்காரம் (1)

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற – திருவா:1/33
மேல்


ஓங்கி (5)

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே – திருவா:1/35
கேத குட்டம் கையற ஓங்கி
இரு மு சமயத்து ஒரு பேய்த்தேரினை – திருவா:3/78,79
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி
தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி – திருவா:3/151,152
ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி
மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன் – திருவா:18 8/2,3
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி – திருவா:31 9/2
மேல்


ஓங்கிய (1)

ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள் – திருவா:3/86
மேல்


ஓங்கு (2)

ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின் – திருவா:39 1/3
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில் – திருவா:43 5/3
மேல்


ஓங்கும் (1)

பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும்
பரு மிக்க நாத பறை – திருவா:19 8/3,4
மேல்


ஓங்குவிக்கும் (1)

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – திருவா:1/10
மேல்


ஓச்சுவார் (1)

உலக்கை பல ஓச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே – திருவா:9 6/1
மேல்


ஓசை (2)

சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே – திருவா:49 7/1
சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே – திருவா:49 8/1
மேல்


ஓசையால் (1)

ஓசையால் உணர்வார்க்கு உணர்வு_அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கி – திருவா:41 8/2
மேல்


ஓசையில் (1)

வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே – திருவா:49 6/4
மேல்


ஓட்டா (1)

உருவ அருள்_நீர் ஓட்டா அரு வரை – திருவா:3/88
மேல்


ஓட்டு (1)

சிந்தி திசைதிசையே தேவர்களை ஓட்டு உகந்த – திருவா:8 15/4
மேல்


ஓட (2)

இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/3,4
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே – திருவா:36 2/4
மேல்


ஓடாமே (1)

உண்ண புகுந்த பகன் ஒளித்து ஓடாமே
கண்ணை பறித்தவாறு உந்தீ பற – திருவா:14 12/1,2
மேல்


ஓடாவண்ணம் (1)

தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான் – திருவா:16 6/4
மேல்


ஓடி (2)

கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி – திருவா:2/135
நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின் – திருவா:34 5/2
மேல்


ஓடியவா (1)

ஓடியவா பாடி உந்தீ பற – திருவா:14 5/2
மேல்


ஓடிற்றிலேன் (1)

ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன் நின்று உழைத்தனனே – திருவா:6 45/4
மேல்


ஓடும் (1)

ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து – திருவா:40 1/1
மேல்


ஓத்தானே (1)

ஓத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் ஆய் – திருவா:38 8/2
மேல்


ஓத (3)

ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் – திருவா:7 10/5
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 5/4
காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 6/4
மேல்


ஓதம் (1)

ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே அடியேற்கு உன் – திருவா:38 3/3
மேல்


ஓதி (2)

இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள் – திருவா:41 7/1,2
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
மேல்


ஓம்புகின்றேன் (1)

ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே – திருவா:5 38/4
மேல்


ஓம்புதல்பொருட்டு (1)

ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே – திருவா:5 40/4
மேல்


ஓய்வு (1)

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து – திருவா:5 39/1
மேல்


ஓய (1)

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் – திருவா:1/20
மேல்


ஓயாதே (2)

ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே – திருவா:5 38/4
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை – திருவா:8 7/1
மேல்


ஓர் (89)

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த – திருவா:1/49
ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப – திருவா:2/40
முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் – திருவா:4/43
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது – திருவா:4/74
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி – திருவா:4/155
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/3,4
உண்டு ஓர் ஒள் பொருள் என்று உணர்வார்க்கு எலாம் – திருவா:5 42/1
மேலை வானவரும் அறியாதது ஓர்
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே – திருவா:5 43/1,2
காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர்
வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என – திருவா:5 44/1,2
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல – திருவா:5 65/1
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/3
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் – திருவா:5 73/1
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் – திருவா:5 75/2
உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் – திருவா:5 77/2
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் – திருவா:5 78/2
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/3,4
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனை பருக நின்றது ஓர்
துப்பனே சுடர் முடியனே துணையாளனே தொழும்பாளர் எய்ப்பினில் – திருவா:5 98/2,3
ஈதே எம் தோழி பரிசு எல் ஓர் எம்பாவாய் – திருவா:7 1/8
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 2/8
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 3/8
எண்ணி குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 4/8
ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 5/8
ஏனோர்க்கும் தம் கோனை பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 6/8
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 7/8
ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 8/8
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 9/8
ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 10/8
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 11/8
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 12/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/8
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/8
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான் – திருவா:7 15/1
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/8
என்ன பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 16/8
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா – திருவா:7 17/2
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/8
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 19/8
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/8
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே – திருவா:10 3/1
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின் – திருவா:10 4/1
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் – திருவா:11 1/2
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் – திருவா:11 1/3
கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:11 8/1
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/4
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து – திருவா:13 3/1
ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற – திருவா:14 2/2
பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய – திருவா:15 10/1
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு அன்னே என்னும் – திருவா:17 4/1,2
தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர் – திருவா:17 9/1
திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 2/3
உரை உணர்வு இறந்துநின்று உணர்வது ஓர் உணர்வே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே – திருவா:22 3/4
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/3
கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே – திருவா:22 6/4
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 8/3
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர்
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் – திருவா:24 9/2,3
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன் – திருவா:25 10/2
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர் – திருவா:26 4/1
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே – திருவா:26 9/2
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல் வினை சிறு குடில் இது இத்தை – திருவா:26 10/1
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய் – திருவா:28 10/3
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் – திருவா:30 1/2
உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின் – திருவா:30 1/3
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார் – திருவா:32 3/3
மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா – திருவா:32 10/1
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/2
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் – திருவா:33 5/3
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 7/3
வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன் எனக்கே – திருவா:34 2/4
மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு – திருவா:35 1/3
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன – திருவா:35 2/3
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் – திருவா:36 3/3
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/2
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 1/4
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே – திருவா:41 2/1
வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 2/4
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/4
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் – திருவா:42 2/3
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே – திருவா:44 1/4
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே – திருவா:45 6/2
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:51 9/3
மேல்


ஓராதார் (1)

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே – திருவா:1/68
மேல்


ஓரியூரில் (1)

ஓரியூரில் உகந்து இனிது அருளி – திருவா:2/68
மேல்


ஓலம் (3)

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு – திருவா:5 75/1
ஓலம் இடினும் உணராய் உணராய் காண் – திருவா:7 5/7
நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும் – திருவா:13 5/3
மேல்


ஓலமிட்டு (4)

உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி – திருவா:3/150,151
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய் – திருவா:23 9/3
ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 2/3,4
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன் – திருவா:29 2/2
மேல்


ஓலை (1)

கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:11 8/1
மேல்


ஓவா (1)

நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/3
மேல்


ஓவாது (2)

உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அருளாயே – திருவா:32 2/4
ஓவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ள கருணையினால் – திருவா:45 1/2
மேல்


ஓவாள் (1)

சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர – திருவா:7 15/2
மேல்


ஓவி (1)

ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி – திருவா:18 8/2
மேல்


ஓவிய (1)

ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 8/4
மேல்


ஓவின (1)

ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு – திருவா:20 3/2

மேல்