தே – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 2
தேக்கிட 1
தேக்கியும் 1
தேச 1
தேசம் 1
தேசன் 2
தேசனே 3
தேசா 1
தேசு 2
தேட 4
தேடி 5
தேடிய 1
தேடியும் 1
தேடிற்றிலேன் 1
தேடினர்க்கு 1
தேடு-மின் 1
தேடுகின்றிலை 1
தேடும் 2
தேடுவேன் 1
தேய் 2
தேய்கின்றேன் 1
தேய்த்தருளி 1
தேய்ந்துதேய்ந்து 1
தேர் 5
தேர்ந்து 1
தேரும் 1
தேரை 1
தேவ 3
தேவ_தேவன் 1
தேவதேவன் 2
தேவர் 25
தேவர்-தம் 3
தேவர்_கோ 1
தேவர்_கோவே 1
தேவர்க்கு 3
தேவர்க்கும் 1
தேவர்கட்கு 1
தேவர்கட்கும் 2
தேவர்கள் 2
தேவர்கள்-பால் 1
தேவர்களும் 2
தேவர்களே 1
தேவர்களை 1
தேவரும் 4
தேவற்கே 3
தேவன் 5
தேவா 2
தேவியும் 2
தேவு 1
தேவூர் 1
தேவே 2
தேற்ற 2
தேற்றம் 1
தேற்றனே 1
தேற்றாயே 1
தேறலின் 1
தேறலை 2
தேறி 2
தேறினன் 1
தேறுகின்றிலம் 1
தேறும் 2
தேன் 37
தேன்_வெள்ளம் 1
தேனிப்பார் 1
தேனினை 1
தேனுடன் 1
தேனே 5
தேனை 4
தேனையும் 2
தேனொடு 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

தே (2)

தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 7/4
தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான் – திருவா:13 20/2
மேல்


தேக்கிட (1)

தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை – திருவா:3/171
மேல்


தேக்கியும் (1)

திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 10/2
மேல்


தேச (1)

தேச பளிங்கின் திரளே போற்றி – திருவா:4/103
மேல்


தேசம் (1)

தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/3
மேல்


தேசன் (2)

தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி – திருவா:1/12
தேசன் சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள் – திருவா:7 2/7
மேல்


தேசனே (3)

தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே – திருவா:1/63
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:5 51/4
தேசனே ஒர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே – திருவா:5 78/4
மேல்


தேசா (1)

தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க – திருவா:21 6/3
மேல்


தேசு (2)

தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி – திருவா:6 50/3
தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 7/3
மேல்


தேட (4)

செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் – திருவா:5 7/2
எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால் – திருவா:8 12/2
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/4
தேட இருந்த சிவபெருமான் சிந்தனைசெய்து அடியோங்கள் உய்ய – திருவா:43 4/2
மேல்


தேடி (5)

தேடுவேன் தேடி சிவன் கழலே சிந்திப்பேன் – திருவா:8 17/4
தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி – திருவா:9 11/3
வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி – திருவா:18 8/1,2
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 3/2
பாதி எனும் இரவு உறங்கி பகல் எமக்கே இரை தேடி
வேதனையில் அகப்பட்டு வெந்து விழ கடவேனை – திருவா:51 12/1,2
மேல்


தேடிய (1)

பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/3
மேல்


தேடியும் (1)

ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன் – திருவா:29 2/2
மேல்


தேடிற்றிலேன் (1)

தேடிற்றிலேன் சிவன் எ இடத்தான் எவர் கண்டனர் என்று – திருவா:6 45/3
மேல்


தேடினர்க்கு (1)

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் – திருவா:3/126
மேல்


தேடு-மின் (1)

தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி – திருவா:9 11/3
மேல்


தேடுகின்றிலை (1)

தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/4
மேல்


தேடும் (2)

போம் வழி தேடும் ஆறு உந்தீ பற – திருவா:14 14/2
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து – திருவா:40 1/2
மேல்


தேடுவேன் (1)

தேடுவேன் தேடி சிவன் கழலே சிந்திப்பேன் – திருவா:8 17/4
மேல்


தேய் (2)

மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன் – திருவா:6 46/3
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 10/4
மேல்


தேய்கின்றேன் (1)

திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன்
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய – திருவா:32 8/2,3
மேல்


தேய்த்தருளி (1)

சந்திரனை தேய்த்தருளி தக்கன்-தன் வேள்வியினில் – திருவா:8 15/1
மேல்


தேய்ந்துதேய்ந்து (1)

சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 7/3
மேல்


தேர் (5)

கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை – திருவா:3/178
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி – திருவா:6 10/2
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் – திருவா:10 2/3
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய் – திருவா:13 18/3
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
மேல்


தேர்ந்து (1)

சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன் – திருவா:19 1/2
மேல்


தேரும் (1)

கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே – திருவா:12 15/1
மேல்


தேரை (1)

தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம் – திருவா:14 19/1
மேல்


தேவ (3)

தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன் – திருவா:42 1/1
மேல்


தேவ_தேவன் (1)

தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன் – திருவா:42 1/1
மேல்


தேவதேவன் (2)

தேவதேவன் திரு பெயர் ஆகவும் – திருவா:2/122
தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
மேல்


தேவர் (25)

வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய் – திருவா:1/29
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே – திருவா:5 4/4
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே – திருவா:5 29/4
தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
தேசனே ஒர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே – திருவா:5 78/4
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய் – திருவா:8 14/1
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் – திருவா:9 5/2
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் – திருவா:10 5/1
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் – திருவா:10 5/1
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் – திருவா:10 5/1
மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 5/4
அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே – திருவா:11 4/1
அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம் – திருவா:11 5/1
தக்கனையும் எச்சையும் தலை அறுத்து தேவர் கணம் – திருவா:12 5/1
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ – திருவா:12 8/4
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ – திருவா:15 7/3
காணா கடவுள் கருணையினால் தேவர் குழாம் – திருவா:16 5/2
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
எம் பெருமான் தேவர் பிரான் என்று – திருவா:19 1/4
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/4
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன – திருவா:35 2/3
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன – திருவா:35 2/3
ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில் – திருவா:43 6/2
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
மேல்


தேவர்-தம் (3)

ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் – திருவா:23 5/1
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/4
தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 9/2
மேல்


தேவர்_கோ (1)

தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
மேல்


தேவர்_கோவே (1)

செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே – திருவா:5 29/4
மேல்


தேவர்க்கு (3)

கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி – திருவா:4/143
எரி மூன்று தேவர்க்கு இரங்கி அருள்செய்தருளி – திருவா:13 6/1
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி – திருவா:25 3/3
மேல்


தேவர்க்கும் (1)

விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை – திருவா:8 10/1
மேல்


தேவர்கட்கு (1)

வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/4
மேல்


தேவர்கட்கும் (2)

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை – திருவா:11 3/1,2
வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன் – திருவா:13 12/1,2
மேல்


தேவர்கள் (2)

கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன் – திருவா:11 10/1
சாடிய வேள்வி சரிந்திட தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற – திருவா:14 5/1,2
மேல்


தேவர்கள்-பால் (1)

செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால்
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா – திருவா:7 17/1,2
மேல்


தேவர்களும் (2)

வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 4/1
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள் – திருவா:16 2/2
மேல்


தேவர்களே (1)

மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே
நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-பாலே – திருவா:11 14/1,2
மேல்


தேவர்களை (1)

சிந்தி திசைதிசையே தேவர்களை ஓட்டு உகந்த – திருவா:8 15/4
மேல்


தேவரும் (4)

தேவரும் அறியா சிவனே காண்க – திருவா:3/56
விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள் – திருவா:20 9/1
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
தேவரும் காணா சிவபெருமான் மா ஏறி – திருவா:47 9/2
மேல்


தேவற்கே (3)

மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 5/4
வித்தக தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 6/4
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 14/4
மேல்


தேவன் (5)

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – திருவா:1/15
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/4
நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ – திருவா:12 17/2
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன்
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/2,3
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன் – திருவா:42 1/1
மேல்


தேவா (2)

பிச்சை தேவா என் நான் செய்கேன் பேசாயே – திருவா:5 81/4
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி – திருவா:25 3/3
மேல்


தேவியும் (2)

தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/4
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால் – திருவா:36 10/2
மேல்


தேவு (1)

பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே – திருவா:10 5/2
மேல்


தேவூர் (1)

தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில் – திருவா:2/71
மேல்


தேவே (2)

தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 9/2
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மேல்


தேற்ற (2)

தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனையுள் – திருவா:1/82
தேறும் வகை என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ – திருவா:33 5/4
மேல்


தேற்றம் (1)

தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே – திருவா:36 10/4
மேல்


தேற்றனே (1)

தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனையுள் – திருவா:1/82
மேல்


தேற்றாயே (1)

தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மேல்


தேறலின் (1)

தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 1/3
மேல்


தேறலை (2)

தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக – திருவா:5 38/2
தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில் – திருவா:8 18/3
மேல்


தேறி (2)

உற்று அடியேன் மிக தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே – திருவா:6 23/4
தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 11/3,4
மேல்


தேறினன் (1)

சிவன் என யானும் தேறினன் காண்க – திருவா:3/62
மேல்


தேறுகின்றிலம் (1)

தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல் – திருவா:5 33/2
மேல்


தேறும் (2)

தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ – திருவா:33 5/2
தேறும் வகை என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ – திருவா:33 5/4
மேல்


தேன் (37)

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று – திருவா:1/47
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே – திருவா:1/63
தேன் அமர் சோலை திருவாரூரில் – திருவா:2/73
கோல்_தேன் கொண்டு செய்தனன் – திருவா:3/157
குரம்பு கொண்டு இன் தேன் பாய்த்தினன் நிரம்பிய – திருவா:3/173
கருணை வான் தேன் கலக்க – திருவா:3/180
தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம் – திருவா:5 12/3
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன் – திருவா:5 40/3
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனை பருக நின்றது ஓர் – திருவா:5 98/1,2
அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய் – திருவா:7 5/3
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த – திருவா:8 4/5
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/4
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப – திருவா:8 13/2
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய் – திருவா:8 16/2
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/4
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 2/4
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே – திருவா:10 3/1
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்த தேன் சொரியும் – திருவா:10 3/3
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 15/4
தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன் – திருவா:12 14/1
அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த – திருவா:13 2/3
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் – திருவா:13 5/1
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு – திருவா:16 2/3
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ – திருவா:18 4/1
தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப – திருவா:19 6/3
கோல்_தேன் மொழி கிள்ளாய் கோது_இல் பெருந்துறை கோன் – திருவா:19 7/1
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய் – திருவா:24 10/3
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 2/3
கோல்_தேன் எனக்கு என்கோ-குரை கடல்-வாய் அமுது என்கோ – திருவா:34 8/1
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 10/3
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான் – திருவா:38 10/2
சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி – திருவா:40 5/3
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ – திருவா:47 1/3
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்_வெள்ளம் – திருவா:48 2/1
மேல்


தேன்_வெள்ளம் (1)

உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்_வெள்ளம்
தரும் பரியின் மேல் வந்த வள்ளல் – திருவா:48 2/1,2
மேல்


தேனிப்பார் (1)

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை – திருவா:21 9/1
மேல்


தேனினை (1)

தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 9/3
மேல்


தேனுடன் (1)

பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய் – திருவா:13 11/1
மேல்


தேனே (5)

தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை – திருவா:5 55/2
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் – திருவா:5 85/2
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் – திருவா:5 90/3
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் – திருவா:20 9/3
சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 8/3
மேல்


தேனை (4)

தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக – திருவா:5 38/2
தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம் – திருவா:5 58/1
தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல – திருவா:9 15/2
நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை – திருவா:27 4/3
மேல்


தேனையும் (2)

தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து – திருவா:6 21/3
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய – திருவா:8 14/4
மேல்


தேனொடு (1)

நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி – திருவா:5 36/3

மேல்