மூ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 9
மூ_இலை 2
மூ_உலகு 2
மூ_உலகுக்கு 1
மூ_உலகுக்கும் 1
மூ_உலகும் 1
மூ_ஏழ் 2
மூக்கின்றேன் 1
மூக்கொடு 1
மூங்கில் 2
மூடி 2
மூடிய 1
மூத்தானே 1
மூத்து 2
மூதாதை 1
மூதூர் 3
மூப்பு 1
மூர்க்கரொடும் 1
மூர்க்கனேற்கே 1
மூர்க்கனேன் 1
மூர்த்தி 2
மூர்த்திகட்கு 1
மூர்த்தியான் 1
மூர்த்தீ 2
மூரி 1
மூல 1
மூல_பண்டாரம் 1
மூலம் 1
மூவர் 4
மூவர்க்கு 1
மூவர்க்கும் 2
மூவராலும் 1
மூவரும் 2
மூவரை 1
மூவா 2
மூவாத 2
மூழ்கி 1
மூளை 1
மூன்றாய் 1
மூன்று 6
மூன்றும் 4

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மூ (9)

ஈர் அடியாலே மூ_உலகு அளந்து – திருவா:4/2
மூ_ஏழ் சுற்றமும் முரணுறு நரகிடை – திருவா:4/118
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூ_உலகுக்கு – திருவா:6 9/2
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/4
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட – திருவா:27 9/1
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே – திருவா:28 9/3
சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல – திருவா:39 2/1
முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் – திருவா:42 6/3
மேல்


மூ_இலை (2)

பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே – திருவா:6 9/4
சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல – திருவா:39 2/1
மேல்


மூ_உலகு (2)

ஈர் அடியாலே மூ_உலகு அளந்து – திருவா:4/2
மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே – திருவா:28 9/3
மேல்


மூ_உலகுக்கு (1)

விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூ_உலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 9/2,3
மேல்


மூ_உலகுக்கும் (1)

முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் – திருவா:42 6/3
மேல்


மூ_உலகும் (1)

எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
மேல்


மூ_ஏழ் (2)

மூ_ஏழ் சுற்றமும் முரணுறு நரகிடை – திருவா:4/118
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட – திருவா:27 9/1
மேல்


மூக்கின்றேன் (1)

முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க – திருவா:32 2/2,3
மேல்


மூக்கொடு (1)

எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து – திருவா:28 5/3
மேல்


மூங்கில் (2)

திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி – திருவா:5 89/3
திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் – திருவா:32 8/2
மேல்


மூடி (2)

புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை – திருவா:1/53,54
அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை – திருவா:25 5/1
மேல்


மூடிய (1)

மறைந்திட மூடிய மாய இருளை – திருவா:1/51
மேல்


மூத்தானே (1)

மூத்தானே மூவாத முதலானே முடிவு_இல்லா – திருவா:38 8/1
மேல்


மூத்து (2)

நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து – திருவா:10 10/1
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து – திருவா:37 2/2
மேல்


மூதாதை (1)

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை – திருவா:5 30/2
மேல்


மூதூர் (3)

தில்லை மூதூர் ஆடிய திருவடி – திருவா:2/1
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் – திருவா:3/158
சித்தர் சூழ சிவபிரான் தில்லை மூதூர் நடம்செய்வான் – திருவா:42 4/2
மேல்


மூப்பு (1)

பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும் – திருவா:31 6/1
மேல்


மூர்க்கரொடும் (1)

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை – திருவா:51 1/1
மேல்


மூர்க்கனேற்கே (1)

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/4
மேல்


மூர்க்கனேன் (1)

முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் – திருவா:5 79/2,3
மேல்


மூர்த்தி (2)

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை – திருவா:5 30/2
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் – திருவா:42 2/1
மேல்


மூர்த்திகட்கு (1)

ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய – திருவா:2/121
மேல்


மூர்த்தியான் (1)

மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/2
மேல்


மூர்த்தீ (2)

செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 5/3
தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே – திருவா:37 7/3
மேல்


மூரி (1)

முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரி தழல் முழுகும் – திருவா:6 44/1
மேல்


மூல (1)

மூல_பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து-மினே – திருவா:36 5/4
மேல்


மூல_பண்டாரம் (1)

மூல_பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து-மினே – திருவா:36 5/4
மேல்


மூலம் (1)

மூலம் ஆகிய மு_மலம் அறுக்கும் – திருவா:2/111
மேல்


மூவர் (4)

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல் – திருவா:5 4/3
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை – திருவா:5 30/2
எண் உடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்து – திருவா:15 9/1
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியா – திருவா:18 5/3
மேல்


மூவர்க்கு (1)

இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு – திருவா:4/162
மேல்


மூவர்க்கும் (2)

முன்னானை மூவர்க்கும் முற்றும் ஆய் முற்றுக்கும் – திருவா:8 19/1
முழு_முதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்-தனக்கும் – திருவா:21 4/1
மேல்


மூவராலும் (1)

மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/2
மேல்


மூவரும் (2)

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் – திருவா:20 8/1
மூவரும் முப்பத்துமூவரும் மற்று ஒழிந்த – திருவா:47 9/1
மேல்


மூவரை (1)

உய்ய வல்லார் ஒரு மூவரை காவல் கொண்டு – திருவா:14 4/1
மேல்


மூவா (2)

மூவா நான்மறை முதல்வா போற்றி – திருவா:4/94
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனை ஆண்ட – திருவா:27 10/2
மேல்


மூவாத (2)

மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள் – திருவா:16 2/1,2
மூத்தானே மூவாத முதலானே முடிவு_இல்லா – திருவா:38 8/1
மேல்


மூழ்கி (1)

முதலை செம் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலை செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த – திருவா:6 41/1,2
மேல்


மூளை (1)

மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த – திருவா:25 2/1
மேல்


மூன்றாய் (1)

தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி – திருவா:4/139
மேல்


மூன்று (6)

நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால் – திருவா:12 4/3
எரி மூன்று தேவர்க்கு இரங்கி அருள்செய்தருளி – திருவா:13 6/1
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி – திருவா:13 6/2
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 6/4
மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத – திருவா:16 2/1
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்று எரித்த – திருவா:29 7/1
மேல்


மூன்றும் (4)

தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில் – திருவா:12 15/3
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ – திருவா:12 16/4
உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே – திருவா:13 6/3
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்_வெள்ளம் – திருவா:48 2/1

மேல்