சோ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

சோத்தம் (3)

தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் – திருவா:6 44/3
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி – திருவா:9 8/2
தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே – திருவா:25 4/2
மேல்


சோதி (20)

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே – திருவா:1/62
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் – திருவா:2/41
தூய மேனி சுடர் விடு சோதி
காதலன் ஆகி கழுநீர் மாலை – திருவா:2/112,113
அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு – திருவா:3/20
பரம்பரம் சோதி பரனே போற்றி – திருவா:4/222
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி – திருவா:7 14/5
தங்கு உலவு சோதி தனி உருவம் வந்தருளி – திருவா:16 9/2
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை – திருவா:18 1/3
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி – திருவா:22 8/4
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர – திருவா:25 9/2
முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/3,4
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/3,4
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து – திருவா:36 2/2
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி
இன்பமே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 10/3,4
எழில்கொள் சோதி எம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்றுஎன்று – திருவா:42 8/2
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும் – திருவா:43 1/1,2
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து – திருவா:43 9/1
துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே – திருவா:49 7/2
மேல்


சோதியனே (1)

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே – திருவா:1/72
மேல்


சோதியாய் (2)

சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய – திருவா:22 9/1
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து – திருவா:47 11/2
மேல்


சோதியான் (1)

யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான்
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/3,4
மேல்


சோதியில் (1)

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் – திருவா:2/55
மேல்


சோதியும் (2)

சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/2
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா – திருவா:10 1/3
மேல்


சோதியே (2)

இரந்துஇரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் – திருவா:22 6/1
சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே சுரி குழல் பணை முலை மடந்தை – திருவா:29 1/1
மேல்


சோதியை (4)

சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண் – திருவா:7 1/2
தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் – திருவா:36 6/2
முத்தனை முதல் சோதியை முக்கண்_அப்பனை முதல் வித்தனை – திருவா:42 10/1
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
மேல்


சோமன் (2)

சோமன் முகன் நெரித்து உந்தீ பற – திருவா:14 13/2
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும் – திருவா:15 11/3
மேல்


சோமியும் (1)

சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
மேல்


சோர்ந்த (1)

துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர் – திருவா:5 57/3
மேல்


சோர (1)

வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா – திருவா:35 10/3
மேல்


சோரனேன் (1)

பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய் – திருவா:5 57/2
மேல்


சோரனை (1)

ஒளிக்கும் சோரனை கண்டனம் – திருவா:3/141
மேல்


சோராமல் (1)

பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய் – திருவா:5 57/2
மேல்


சோரும் (1)

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை – திருவா:1/54
மேல்


சோரேன் (1)

அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே – திருவா:5 22/3,4
மேல்


சோலை (9)

தேன் அமர் சோலை திருவாரூரில் – திருவா:2/73
தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் – திருவா:8 1/4
தெங்கு உலவு சோலை திரு உத்தரகோசமங்கை – திருவா:16 9/1
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ – திருவா:18 4/1
கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ – திருவா:18 10/1
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும் – திருவா:19 3/1
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன் – திருவா:19 10/1
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து – திருவா:43 1/3
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி – திருவா:43 7/3
மேல்


சோலைகள் (1)

தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் – திருவா:42 3/2
மேல்


சோழன் (1)

தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய் – திருவா:18 7/4
மேல்


சோறு (1)

பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம் – திருவா:15 7/4

மேல்