போ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


போக்கினீரே (1)

பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவ கடலும் போக்கினீரே – மதுரைக்கலம்பகம்:2 90/4

மேல்

போகமாய் (1)

போகமாய் விளைந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/37

மேல்

போது (2)

மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/1,2
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3

மேல்

போந்த (1)

கொடி இடமா போந்த குறை – மதுரைக்கலம்பகம்:2 54/4

மேல்

போந்து (1)

மனனிடை துஞ்சி வாயிடை போந்து
செம் நா முற்றத்து நல் நடம் புரியும் – மதுரைக்கலம்பகம்:2 102/2,3

மேல்

போமோ (1)

தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ
அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/3,4

மேல்

போய் (1)

கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய்
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/3,4

மேல்

போர் (3)

புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1
கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட – மதுரைக்கலம்பகம்:2 23/1

மேல்

போர்க்கும் (1)

ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4

மேல்

போர்த்து (1)

மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1

மேல்

போர்வை (3)

பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5
கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ – மதுரைக்கலம்பகம்:2 17/2
கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1

மேல்

போரினுக்கே (1)

புறம்தந்தவா அணங்கே நன்று காம வெம் போரினுக்கே – மதுரைக்கலம்பகம்:2 16/4

மேல்

போருக்கு (1)

ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3

மேல்

போல் (9)

கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 1/53
வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர் – மதுரைக்கலம்பகம்:2 7/1
கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல்
பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/3,4
செம் சேவடிக்கு அடிமைசெய்யார் போல் துஞ்சாது – மதுரைக்கலம்பகம்:2 44/2
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே – மதுரைக்கலம்பகம்:2 74/4
தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/3
கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல்
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/1,2
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

போல்வாள் (1)

நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள்
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/3,4

மேல்

போல்வீர் (1)

தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர்
புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/2,3

மேல்

போலும் (2)

வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய் – மதுரைக்கலம்பகம்:2 20/3
எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும்
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/3,4

மேல்

போலுமால் (2)

குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/4
தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால்
எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/2,3

மேல்

போற்றி (1)

பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2

மேல்