சு – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


சுடர் (3)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

சுடுவது (1)

செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3

மேல்

சுந்தர (3)

விடம் உண்ட கந்தர சுந்தர சுந்தர மீனவனே – மதுரைக்கலம்பகம்:2 3/4
விடம் உண்ட கந்தர சுந்தர சுந்தர மீனவனே – மதுரைக்கலம்பகம்:2 3/4
இந்திரன் அமைத்த சுந்தர விமானத்து – மதுரைக்கலம்பகம்:2 102/23

மேல்

சுந்தரமாற (1)

மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4

மேல்

சுந்தரரே (1)

கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1

மேல்

சுமந்த (1)

இரு பெரும் குரவரின் ஒரு பழி சுமந்த
புன் தொழில் ஒருவற்கு புகல் இன்மை தெரீஇ – மதுரைக்கலம்பகம்:2 87/15,16

மேல்

சுமந்ததே (2)

செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே
அரும்பு இட்டு பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள் – மதுரைக்கலம்பகம்:2 1/30,31
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே
ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர் – மதுரைக்கலம்பகம்:2 1/34,35

மேல்

சுமந்தன (1)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன
மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/3,4

மேல்

சுமந்திருந்ததும் (1)

தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே – மதுரைக்கலம்பகம்:2 26/1

மேல்

சுமந்து (3)

உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11
அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க – மதுரைக்கலம்பகம்:2 93/1
சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே – மதுரைக்கலம்பகம்:2 98/3

மேல்

சுரந்த (2)

கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ – மதுரைக்கலம்பகம்:2 17/2
பெரு வளம் சுரந்த விரி தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 102/21

மேல்

சுரந்தது (1)

அன்று அருள் சுரந்தது ஒன்றோ சென்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 87/17

மேல்

சுரந்து (1)

குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2

மேல்

சுரம் (1)

விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே – மதுரைக்கலம்பகம்:2 84/3

மேல்

சுரி (2)

மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ – மதுரைக்கலம்பகம்:2 1/1
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்

சுரிகையொடு (1)

உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12

மேல்

சுருதி (1)

மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/15

மேல்

சுருப்பு (1)

கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3

மேல்

சுரும்பர் (1)

கரும் பொறி சுரும்பர் செவ்வழி பாட – மதுரைக்கலம்பகம்:2 47/1

மேல்

சுவல் (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

சுவை (3)

பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம் – மதுரைக்கலம்பகம்:2 1/19
ஐம்புல வழக்கின் அரும் சுவை அறியா – மதுரைக்கலம்பகம்:2 1/61
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13

மேல்

சுழல் (1)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6

மேல்

சுழன்றிடும் (1)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4

மேல்

சுளகில் (1)

சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/2

மேல்

சுற்றி (1)

பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5

மேல்

சுற்றும் (2)

கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும்
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/2,3

மேல்