பூ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


பூங்கொடி-தன்னொடு (1)

புள் கொடி எடுத்து ஒரு பூங்கொடி-தன்னொடு
மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/5,6

மேல்

பூண் (3)

பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி – மதுரைக்கலம்பகம்:2 1/55
அழகு எறிக்கும் பூண் முலையீர் ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/5
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

பூண்டு (3)

தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 1/6
தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/2
ஒர் ஏழ் ஆழி சீர்பெற பூண்டு
முடவு படத்த கடிகையுள் கிடந்து – மதுரைக்கலம்பகம்:2 102/7,8

மேல்

பூத்த (2)

தண் துழாய் பூத்த தடம் – மதுரைக்கலம்பகம்:2 2/4
கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து – மதுரைக்கலம்பகம்:2 45/1

மேல்

பூத்து (1)

பொன் பூத்து அலர்ந்த கொன்றை பீர் பூப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/50

மேல்

பூப்ப (1)

பொன் பூத்து அலர்ந்த கொன்றை பீர் பூப்ப
கரும் சினை வேம்பு பொன் முடி சூடி – மதுரைக்கலம்பகம்:2 1/50,51

மேல்

பூம் (5)

பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/3
படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனி பங்கய பூம்
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/2,3
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம்
குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/3,4
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3

மேல்

பூமிக்குள் (1)

பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவ கடலும் போக்கினீரே – மதுரைக்கலம்பகம்:2 90/4

மேல்

பூவை (1)

புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4

மேல்

பூவைமார்க்கு (1)

போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு
காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/3,4

மேல்