தி – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திகழும் 1
திகிரி 1
திகைக்கு 1
திங்கள் 2
திசை 1
திடம் 1
திடுக்கம் 1
திரள் 1
திரிந்தன 1
திரியும் 2
திரிவார் 1
திரிவார்கள் 1
திரு 8
திருக்கு 1
திருக்கோயிலுள் 1
திருந்து 2
திருந்து_இழையும் 1
திருநகரம் 1
திருப்பீர் 1
திருமந்திரம் 1
திருமார்பும் 1
திருமுகத்தில் 1
திருமுடி 1
திருமுன் 1
திருவடி 1
திருவை 1
திருஆலவாயில் 1
திரை 3
திளைத்திரால் 1
திறம் 1
திறல் 1
தின்று 1
தினம் 3

திகழும் (1)

மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

திகிரி (1)

திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1

மேல்

திகைக்கு (1)

எண்மர் புறந்தரூஉம் ஒண் பெரும் திகைக்கு
தூய்மை செய்தாங்கு பால் நிலா விரிந்த – மதுரைக்கலம்பகம்:2 47/7,8

மேல்

திங்கள் (2)

ஈரித்த தென்றல் இளவாடை திங்கள் என்று ஓர் – மதுரைக்கலம்பகம்:2 31/1
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4

மேல்

திசை (1)

குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/3

மேல்

திடம் (1)

திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர் – மதுரைக்கலம்பகம்:2 3/3

மேல்

திடுக்கம் (1)

திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/4

மேல்

திரள் (1)

சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும் – மதுரைக்கலம்பகம்:2 75/3

மேல்

திரிந்தன (1)

உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன
உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/9,10

மேல்

திரியும் (2)

நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4
திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என – மதுரைக்கலம்பகம்:2 102/16

மேல்

திரிவார் (1)

மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1

மேல்

திரிவார்கள் (1)

சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே – மதுரைக்கலம்பகம்:2 98/3

மேல்

திரு (8)

செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு – மதுரைக்கலம்பகம்:2 28/3
திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4
இரசதம் குயின்ற திரு மா மன்றகம் – மதுரைக்கலம்பகம்:2 47/9
மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/4
திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1
உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணை – மதுரைக்கலம்பகம்:2 100/1

மேல்

திருக்கு (1)

கள்ள திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம் – மதுரைக்கலம்பகம்:2 36/3

மேல்

திருக்கோயிலுள் (1)

உள்ள திருக்கோயிலுள் – மதுரைக்கலம்பகம்:2 36/4

மேல்

திருந்து (2)

தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4

மேல்

திருந்து_இழையும் (1)

தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும்
மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/4,5

மேல்

திருநகரம் (1)

செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/8

மேல்

திருப்பீர் (1)

மெள்ள திருப்பீர் மிக – மதுரைக்கலம்பகம்:2 96/4

மேல்

திருமந்திரம் (1)

எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4

மேல்

திருமார்பும் (1)

மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/5

மேல்

திருமுகத்தில் (1)

திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4

மேல்

திருமுடி (1)

செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/30

மேல்

திருமுன் (1)

விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ – மதுரைக்கலம்பகம்:2 78/2

மேல்

திருவடி (1)

கரு மிடற்று ஒருவ நின் திருவடி வழுத்துதும் – மதுரைக்கலம்பகம்:2 87/13

மேல்

திருவை (1)

திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1

மேல்

திருஆலவாயில் (1)

செய்யாள் செய் சரக்கறையாம் திருஆலவாயில் உறை செல்வனாரே – மதுரைக்கலம்பகம்:2 18/4

மேல்

திரை (3)

மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ – மதுரைக்கலம்பகம்:2 1/1
எறி திரை கரும் கடல் ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 44/3
விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த – மதுரைக்கலம்பகம்:2 102/12

மேல்

திளைத்திரால் (1)

கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால்
பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/3,4

மேல்

திறம் (1)

செம்மாப்புறூஉம் திறம் பெறல் பொருட்டே – மதுரைக்கலம்பகம்:2 1/68

மேல்

திறல் (1)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4

மேல்

தின்று (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

தினம் (3)

கனவட்டம் தினம் வட்டமிட கண்டு களிப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/16
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்