இ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 9
இக்கும் 1
இகல் 1
இகழும் 1
இங்கு 7
இச்சை 1
இசை 3
இட்ட 9
இட்டதே 1
இட்டமாம் 1
இட்டு 6
இட 2
இடத்தினார் 1
இடம் 6
இடமா 1
இடமும் 1
இடி 1
இடு 2
இடும் 3
இடை 2
இடைக்கு 1
இடைச்சி 1
இடைந்து 1
இடையும் 1
இடையே 1
இணங்கின 1
இணை 1
இத்தனையும் 1
இதழ் 3
இதழி 1
இதழியொடு 1
இதன் 1
இது 5
இதுவும் 1
இதுவே 1
இதுவேல் 1
இந்த 1
இந்தா 1
இந்திரன் 3
இந்திரனாம் 1
இம்மை 1
இமய 1
இமிர் 1
இமை 1
இமைப்பினில் 1
இமையா 1
இமையோர் 1
இயல் 5
இயன்ற 1
இரக்கின்ற 1
இரங்கலையால் 1
இரங்கு 2
இரங்குதி 1
இரங்குமால் 1
இரசதம் 1
இரண்டால் 1
இரண்டு 2
இரண்டும் 1
இரண்டே 1
இரியும் 1
இரு 11
இருக்க 2
இருக்கவும் 1
இருக்கும் 3
இருண்ட 1
இருத்தி 1
இருத்திரால் 1
இருந்த 5
இருந்தது 1
இருந்தன 1
இருந்து 2
இருந்தோய் 1
இருப்பது 1
இருப்பவர் 1
இருப்பீர் 2
இரும் 1
இரும்பும் 1
இருமையும் 1
இருவருக்கும் 1
இருள் 2
இருளியின் 1
இரை 2
இல் 5
இல்லையால் 1
இல 1
இலது 3
இலதும் 1
இலார் 1
இலை 5
இலையோ 1
இவ் 2
இவ்வணம் 1
இவட்கு 2
இவர் 1
இவர்க்கே 1
இவள் 2
இவளுக்கு 1
இவன் 1
இழந்தாய் 1
இழந்து 2
இழைத்திடும் 1
இழையும் 1
இள 4
இளங்கன்றும் 1
இளநீரும் 1
இளம் 5
இளம்பிறை 1
இளமகளிர் 1
இளமதி 1
இளமூரலே 1
இளவாடை 1
இளைப்பும் 1
இளையாள்-தன் 1
இறங்குபு 1
இறங்கும் 1
இறுத்ததும் 1
இறும் 1
இறும்பூது 1
இறுமா-கொல் 1
இறைமை 1
இன் 1
இன்பும் 1
இன்மை 1
இன்றி 1
இன்று 3
இன்னமுமே 1
இன்னியம் 1
இனி 4
இனிது 1
இனிப்போடு 1
இனிமையை 1
இனைய 1

இ (9)

பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3
தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3
பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும் – மதுரைக்கலம்பகம்:2 56/2
இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள் – மதுரைக்கலம்பகம்:2 56/3
கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள் – மதுரைக்கலம்பகம்:2 66/3
இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2
சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/3

மேல்

இக்கும் (1)

கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும் – மதுரைக்கலம்பகம்:2 63/2

மேல்

இகல் (1)

எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1

மேல்

இகழும் (1)

மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

இங்கு (7)

அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/3
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 52/2
பழகிய சொற்கு பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே – மதுரைக்கலம்பகம்:2 53/4
தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்கு தோயீர் வாளா – மதுரைக்கலம்பகம்:2 62/3
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3

மேல்

இச்சை (1)

எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2

மேல்

இசை (3)

அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1
ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1
கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

இட்ட (9)

கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/2
திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4
செல் இட்ட பொழில் மதுரை தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று – மதுரைக்கலம்பகம்:2 77/1
நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4
கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2
செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3

மேல்

இட்டதே (1)

பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4

மேல்

இட்டமாம் (1)

இட்டமாம் சொக்கரை கரையேற்றினீர் – மதுரைக்கலம்பகம்:2 69/2

மேல்

இட்டு (6)

அரும்பு இட்டு பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள் – மதுரைக்கலம்பகம்:2 1/31
அரும்பு இட்டு பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள் – மதுரைக்கலம்பகம்:2 1/31
தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்கு தோயீர் வாளா – மதுரைக்கலம்பகம்:2 62/3
கொங்கு உரை ஆற்றில் இட்டு குளத்தினில் தேட நீடும் – மதுரைக்கலம்பகம்:2 74/1
எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4
எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4

மேல்

இட (2)

இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/2
வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய் – மதுரைக்கலம்பகம்:2 20/3

மேல்

இடத்தினார் (1)

தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1

மேல்

இடம் (6)

திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர் – மதுரைக்கலம்பகம்:2 3/3
இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும் – மதுரைக்கலம்பகம்:2 33/1
அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று – மதுரைக்கலம்பகம்:2 70/3
இம்மை இடம் கொண்டார்க்கு இனி – மதுரைக்கலம்பகம்:2 70/4
இடம் கொண்டு இருந்த இமையா முக்கண் – மதுரைக்கலம்பகம்:2 87/12
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

இடமா (1)

கொடி இடமா போந்த குறை – மதுரைக்கலம்பகம்:2 54/4

மேல்

இடமும் (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

இடி (1)

உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/9

மேல்

இடு (2)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3

மேல்

இடும் (3)

ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார் – மதுரைக்கலம்பகம்:2 6/1
கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1
கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2

மேல்

இடை (2)

கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

இடைக்கு (1)

கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2

மேல்

இடைச்சி (1)

எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர் – மதுரைக்கலம்பகம்:2 62/2

மேல்

இடைந்து (1)

தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

இடையும் (1)

இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்

இடையே (1)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

இணங்கின (1)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின
பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/4,5

மேல்

இணை (1)

பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2

மேல்

இத்தனையும் (1)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/2

மேல்

இதழ் (3)

சேய் இதழ் விரிக்கும் பொன் பொகுட்டு அம்புயம் – மதுரைக்கலம்பகம்:2 47/2
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
முள் தாள் பாசடை நெட்டு இதழ் கமலத்து – மதுரைக்கலம்பகம்:2 87/1

மேல்

இதழி (1)

பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி
இந்தா நிலம் மேவு என சொலார் என் செய்வாள் – மதுரைக்கலம்பகம்:2 10/2,3

மேல்

இதழியொடு (1)

வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1

மேல்

இதன் (1)

மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/3

மேல்

இது (5)

குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2
மூவா முதலார் மதுரை இது அன்றோ மொழிவாயே – மதுரைக்கலம்பகம்:2 65/4
வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம் – மதுரைக்கலம்பகம்:2 67/1
விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ – மதுரைக்கலம்பகம்:2 78/2
விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே – மதுரைக்கலம்பகம்:2 84/3

மேல்

இதுவும் (1)

ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ – மதுரைக்கலம்பகம்:2 4/2

மேல்

இதுவே (1)

இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2

மேல்

இதுவேல் (1)

திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4

மேல்

இந்த (1)

நகையே அமையும் இந்த நாகரிக நோக்கு – மதுரைக்கலம்பகம்:2 40/1

மேல்

இந்தா (1)

இந்தா நிலம் மேவு என சொலார் என் செய்வாள் – மதுரைக்கலம்பகம்:2 10/3

மேல்

இந்திரன் (3)

தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3
தான வெம் களிறோடும் இந்திரன் சாபமும் தொலையா – மதுரைக்கலம்பகம்:2 43/1
இந்திரன் அமைத்த சுந்தர விமானத்து – மதுரைக்கலம்பகம்:2 102/23

மேல்

இந்திரனாம் (1)

அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம்
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/1,2

மேல்

இம்மை (1)

இம்மை இடம் கொண்டார்க்கு இனி – மதுரைக்கலம்பகம்:2 70/4

மேல்

இமய (1)

ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய
தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும் – மதுரைக்கலம்பகம்:2 45/2,3

மேல்

இமிர் (1)

ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம் – மதுரைக்கலம்பகம்:2 49/1

மேல்

இமை (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3

மேல்

இமைப்பினில் (1)

மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1

மேல்

இமையா (1)

இடம் கொண்டு இருந்த இமையா முக்கண் – மதுரைக்கலம்பகம்:2 87/12

மேல்

இமையோர் (1)

திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4

மேல்

இயல் (5)

தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4
விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா – மதுரைக்கலம்பகம்:2 14/2
அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர் கண்ணே – மதுரைக்கலம்பகம்:2 44/4
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/4

மேல்

இயன்ற (1)

பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி – மதுரைக்கலம்பகம்:2 1/55

மேல்

இரக்கின்ற (1)

என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/2

மேல்

இரங்கலையால் (1)

சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

இரங்கு (2)

என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/2
கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1

மேல்

இரங்குதி (1)

ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம் – மதுரைக்கலம்பகம்:2 49/1

மேல்

இரங்குமால் (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

இரசதம் (1)

இரசதம் குயின்ற திரு மா மன்றகம் – மதுரைக்கலம்பகம்:2 47/9

மேல்

இரண்டால் (1)

வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 84/1

மேல்

இரண்டு (2)

குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும் – மதுரைக்கலம்பகம்:2 6/3
எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1

மேல்

இரண்டும் (1)

எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1

மேல்

இரண்டே (1)

ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார் – மதுரைக்கலம்பகம்:2 6/1

மேல்

இரியும் (1)

நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4

மேல்

இரு (11)

இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ் – மதுரைக்கலம்பகம்:2 1/58
இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு
கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும் – மதுரைக்கலம்பகம்:2 9/2,3
அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/4
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2
இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ – மதுரைக்கலம்பகம்:2 34/1
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே – மதுரைக்கலம்பகம்:2 47/14
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு
கோட்டு குருகு மதி கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே – மதுரைக்கலம்பகம்:2 79/3,4
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4
இரு பெரும் குரவரின் ஒரு பழி சுமந்த – மதுரைக்கலம்பகம்:2 87/15
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3
இரு நில மடந்தைக்கு ஒரு முடி கவித்தாங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/22

மேல்

இருக்க (2)

அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/4
பட்டு இருக்க தோல் அசைஇ பாண்டரங்க கூத்து ஆடும் – மதுரைக்கலம்பகம்:2 8/1

மேல்

இருக்கவும் (1)

கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும்
பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/3,4

மேல்

இருக்கும் (3)

மட்டு இருக்கும் நீப வனத்தானே கட்ட – மதுரைக்கலம்பகம்:2 8/2
கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும் – மதுரைக்கலம்பகம்:2 9/3
பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4

மேல்

இருண்ட (1)

இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 2/2

மேல்

இருத்தி (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

இருத்திரால் (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

இருந்த (5)

பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/57
இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம் – மதுரைக்கலம்பகம்:2 57/3
இடம் கொண்டு இருந்த இமையா முக்கண் – மதுரைக்கலம்பகம்:2 87/12
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1

மேல்

இருந்தது (1)

உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4

மேல்

இருந்தன (1)

வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன
மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1,2

மேல்

இருந்து (2)

கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1
வீற்றுவீற்று இருந்து நோற்பன கடுக்கும் – மதுரைக்கலம்பகம்:2 87/6

மேல்

இருந்தோய் (1)

ஏகமாய் இருந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/39

மேல்

இருப்பது (1)

இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/2

மேல்

இருப்பவர் (1)

தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1

மேல்

இருப்பீர் (2)

கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1
உள்ளத்து இருப்பீர் எம் உள்ளத்தையும் உமதா – மதுரைக்கலம்பகம்:2 96/3

மேல்

இரும் (1)

இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4

மேல்

இரும்பும் (1)

இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன் – மதுரைக்கலம்பகம்:2 84/2

மேல்

இருமையும் (1)

இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது – மதுரைக்கலம்பகம்:2 1/27

மேல்

இருவருக்கும் (1)

இருவருக்கும் காண்பு அரிய ஈசர் மதுரேசனார் – மதுரைக்கலம்பகம்:2 13/1

மேல்

இருள் (2)

இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 2/2
எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

இருளியின் (1)

இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ – மதுரைக்கலம்பகம்:2 34/1

மேல்

இரை (2)

மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4
இரை வர உறங்கும் குருகு விரி சிறை – மதுரைக்கலம்பகம்:2 87/2

மேல்

இல் (5)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1
மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே – மதுரைக்கலம்பகம்:2 69/3
மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா – மதுரைக்கலம்பகம்:2 74/2
ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் – மதுரைக்கலம்பகம்:2 87/5
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

இல்லையால் (1)

உண்பது நஞ்சமால் உறக்கம் இல்லையால்
வண் பதி கூடலே வாய்த்தது என்னுமால் – மதுரைக்கலம்பகம்:2 25/1,2

மேல்

இல (1)

ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் – மதுரைக்கலம்பகம்:2 87/5

மேல்

இலது (3)

இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/23
இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/23
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்

இலதும் (1)

இலதும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/48

மேல்

இலார் (1)

ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார்
என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/1,2

மேல்

இலை (5)

மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார் – மதுரைக்கலம்பகம்:2 5/1
ஊற்று ஒன்று இவளுக்கு உயிர் ஒன்று இலை உண்டு உடம்பு ஒன்றுமே – மதுரைக்கலம்பகம்:2 5/4
ஆனாலும் காயம் இலை ஐயரவர்க்கு அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/5
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3

மேல்

இலையோ (1)

இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2

மேல்

இவ் (2)

தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4

மேல்

இவ்வணம் (1)

தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம்
மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/1,2

மேல்

இவட்கு (2)

விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா – மதுரைக்கலம்பகம்:2 14/2
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

இவர் (1)

இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3

மேல்

இவர்க்கே (1)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4

மேல்

இவள் (2)

மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/3
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

இவளுக்கு (1)

ஊற்று ஒன்று இவளுக்கு உயிர் ஒன்று இலை உண்டு உடம்பு ஒன்றுமே – மதுரைக்கலம்பகம்:2 5/4

மேல்

இவன் (1)

இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை – மதுரைக்கலம்பகம்:2 1/22

மேல்

இழந்தாய் (1)

எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

இழந்து (2)

பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1

மேல்

இழைத்திடும் (1)

பிழைத்திடும் கூடலே இழைத்திடும் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 21/2

மேல்

இழையும் (1)

தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4

மேல்

இள (4)

தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/15
குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2
ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4

மேல்

இளங்கன்றும் (1)

சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3

மேல்

இளநீரும் (1)

கரும்பும் கனியும் இளநீரும் பார் எங்கும் கண்களினே – மதுரைக்கலம்பகம்:2 84/4

மேல்

இளம் (5)

எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4
ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன் – மதுரைக்கலம்பகம்:2 63/1
மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/4
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 102/24

மேல்

இளம்பிறை (1)

காற்று ஒன்று இளம்பிறை கீற்று ஒன்று கார் கடல் ஒன்று கண்ணீர் – மதுரைக்கலம்பகம்:2 5/3

மேல்

இளமகளிர் (1)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1

மேல்

இளமதி (1)

ஈரம் வைத்த இளமதி வெண்ணிலா – மதுரைக்கலம்பகம்:2 41/3

மேல்

இளமூரலே (1)

ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே
வாடாத செங்கோல் வளர்ப்பீர் என கன்னி வள நாடு எனும் – மதுரைக்கலம்பகம்:2 39/2,3

மேல்

இளவாடை (1)

ஈரித்த தென்றல் இளவாடை திங்கள் என்று ஓர் – மதுரைக்கலம்பகம்:2 31/1

மேல்

இளைப்பும் (1)

எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி – மதுரைக்கலம்பகம்:2 18/1

மேல்

இளையாள்-தன் (1)

எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி – மதுரைக்கலம்பகம்:2 18/1

மேல்

இறங்குபு (1)

விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த – மதுரைக்கலம்பகம்:2 102/12

மேல்

இறங்கும் (1)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்

இறுத்ததும் (1)

எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/2

மேல்

இறும் (1)

சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3

மேல்

இறும்பூது (1)

ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

இறுமா-கொல் (1)

சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3

மேல்

இறைமை (1)

இறைமை உண்டாயினும் ஆக குறுகி நின் – மதுரைக்கலம்பகம்:2 1/65

மேல்

இன் (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

இன்பும் (1)

அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 86/2

மேல்

இன்மை (1)

புன் தொழில் ஒருவற்கு புகல் இன்மை தெரீஇ – மதுரைக்கலம்பகம்:2 87/16

மேல்

இன்றி (1)

சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே – மதுரைக்கலம்பகம்:2 98/3

மேல்

இன்று (3)

நடம் கொண்டது ஓர் வெள்ளிமன்று ஏறுதும் இன்று நாளையிலே – மதுரைக்கலம்பகம்:2 33/4
ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன் – மதுரைக்கலம்பகம்:2 63/1
முளை இன்று முளைத்த மூல லிங்கத்து – மதுரைக்கலம்பகம்:2 102/28

மேல்

இன்னமுமே (1)

ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/4

மேல்

இன்னியம் (1)

இன்னியம் துவைப்ப சங்கம் ஏங்கிட செழியர் ஈன்ற – மதுரைக்கலம்பகம்:2 60/1

மேல்

இனி (4)

நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/2
இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/2
படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனி பங்கய பூம் – மதுரைக்கலம்பகம்:2 33/2
இம்மை இடம் கொண்டார்க்கு இனி – மதுரைக்கலம்பகம்:2 70/4

மேல்

இனிது (1)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

இனிப்போடு (1)

நாடு ஆளவைத்தாளும் நகையாது இனிப்போடு நகையாடவே – மதுரைக்கலம்பகம்:2 39/4

மேல்

இனிமையை (1)

அருமையை உணர்வுறின் அமிழ்தினும் இனிமையை – மதுரைக்கலம்பகம்:2 1/28

மேல்

இனைய (1)

இனைய நின் தன்மை மற்று எம்மனோரும் – மதுரைக்கலம்பகம்:2 102/34

மேல்