நெ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


நெக்குடைந்து (1)

உள்ளும் புறம்பும் கசிந்து ஊற்று எழ நெக்குடைந்து குதிகொள்ளும் – மதுரைக்கலம்பகம்:2 37/1

மேல்

நெக்குருக (2)

என்போடு உள்ளமும் நெக்குருக புக்கு என்போல்வார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 86/1
உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

நெஞ்சகத்தும் (1)

கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும்
வருந்தியும் வழங்கல் வேண்டும் – மதுரைக்கலம்பகம்:2 47/12,13

மேல்

நெஞ்சம் (3)

இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4
வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 84/1
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

நெஞ்சமே (1)

படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனி பங்கய பூம் – மதுரைக்கலம்பகம்:2 33/2

மேல்

நெஞ்சிரே (1)

கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே
உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/1,2

மேல்

நெஞ்சு (1)

அஞ்சேல் மட நெஞ்சு அபிடேக சொக்கர் அருள் – மதுரைக்கலம்பகம்:2 44/1

மேல்

நெஞ்சும் (1)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4

மேல்

நெஞ்சே (1)

ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம் – மதுரைக்கலம்பகம்:2 49/1

மேல்

நெட்டு (3)

கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
முள் தாள் பாசடை நெட்டு இதழ் கமலத்து – மதுரைக்கலம்பகம்:2 87/1

மேல்

நெட்டுயிர்ப்பும் (1)

நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1

மேல்

நெடு (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

நெடுந்தகை (1)

தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும் – மதுரைக்கலம்பகம்:2 27/2

மேல்

நெடுநிலை (1)

நெடுநிலை பெயரா நிலை தேர் ஊர்ந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/9

மேல்

நெடும் (4)

நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும் – மதுரைக்கலம்பகம்:2 16/2
எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3
நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2

மேல்

நெய் (3)

புதியதும் தம் உயிர் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய் சொக்கர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 52/4
புழுகு நெய் சொக்கர் அபிடேக சொக்கர் கர்ப்பூர சொக்கர் – மதுரைக்கலம்பகம்:2 53/1
நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇ – மதுரைக்கலம்பகம்:2 102/20

மேல்

நெய்க்குள் (1)

கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

நெருங்குமால் (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால்
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/3,4

மேல்

நெருப்பு (1)

நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1

மேல்

நெல் (1)

நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3

மேல்

நெற்றி-நின்று (1)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்

நெறி (1)

மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3

மேல்

நெறியினை (1)

அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை
இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது – மதுரைக்கலம்பகம்:2 1/26,27

மேல்