ஆ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆஆ 1
ஆக்கி 1
ஆக்கினேம் 1
ஆக 2
ஆகமே 1
ஆகார் 1
ஆகி 2
ஆகிடு 1
ஆகில் 1
ஆங்கு 6
ஆசியே 1
ஆசை 1
ஆட 4
ஆடகத்து 1
ஆடல் 1
ஆடல்செயும் 1
ஆடலே 1
ஆடாது 1
ஆடாள் 1
ஆடி 1
ஆடு 2
ஆடுக 2
ஆடும் 5
ஆடை 1
ஆண்டவர் 1
ஆண்மை 1
ஆதி 1
ஆம் 5
ஆமாகில் 1
ஆமையே 1
ஆயினும் 1
ஆர் 5
ஆர்க்கும் 1
ஆர்ந்து 2
ஆர்ப்ப 1
ஆருக்கு 1
ஆலயம் 1
ஆவது 1
ஆவமே 1
ஆவி 3
ஆவியுமே-கொலாம் 1
ஆவியே 1
ஆவியை 1
ஆழி 2
ஆழியான் 1
ஆள்செய்யும் 1
ஆளவைத்தாளும் 1
ஆளார் 1
ஆளுடைய 1
ஆற்றல் 1
ஆற்றலாம் 1
ஆற்றா 1
ஆற்றாது 1
ஆற்றில் 1
ஆற்றும் 1
ஆறு 5
ஆன் 3
ஆனதுவும் 1
ஆனந்த 2
ஆனாலும் 1
ஆனை 4
ஆனைக்கு 1
ஆனைக்கே 1

ஆ (1)

என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ
குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும் – மதுரைக்கலம்பகம்:2 6/2,3

மேல்

ஆஆ (1)

ஆஆ என்னே தென்னவர்கோற்கு அன்று அணி சாந்தம் – மதுரைக்கலம்பகம்:2 65/1

மேல்

ஆக்கி (1)

நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2

மேல்

ஆக்கினேம் (1)

கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம்
இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2,3

மேல்

ஆக (2)

இறைமை உண்டாயினும் ஆக குறுகி நின் – மதுரைக்கலம்பகம்:2 1/65
செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு – மதுரைக்கலம்பகம்:2 28/3

மேல்

ஆகமே (1)

எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/2

மேல்

ஆகார் (1)

வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/2

மேல்

ஆகி (2)

மொழிக்கு அயல் ஆகி வேத முடிவினில் முடிந்து நின்ற – மதுரைக்கலம்பகம்:2 66/1
நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2

மேல்

ஆகிடு (1)

மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார் – மதுரைக்கலம்பகம்:2 98/2

மேல்

ஆகில் (1)

உண் அமுதம் நஞ்சு ஆகில் ஒண் மதுரை சொக்கருக்கு என் – மதுரைக்கலம்பகம்:2 10/1

மேல்

ஆங்கு (6)

பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு
இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ் – மதுரைக்கலம்பகம்:2 1/57,58
எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ – மதுரைக்கலம்பகம்:2 74/3
தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு
இரு பெரும் குரவரின் ஒரு பழி சுமந்த – மதுரைக்கலம்பகம்:2 87/14,15
உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2
மீனவர் பெருமான் மான வேல் பிழைத்து ஆங்கு
எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என – மதுரைக்கலம்பகம்:2 102/10,11
வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்து ஆங்கு
ஆற்றல் கொடு உற்ற பாகு அலைத்தனர் பற்ற – மதுரைக்கலம்பகம்:2 102/14,15

மேல்

ஆசியே (1)

அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3

மேல்

ஆசை (1)

அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4

மேல்

ஆட (4)

அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/4
கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட
கம்ம கலனும் சிலம்பும் கலந்து ஆர்ப்ப – மதுரைக்கலம்பகம்:2 23/1,2
மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

ஆடகத்து (1)

அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4

மேல்

ஆடல் (1)

கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே – மதுரைக்கலம்பகம்:2 22/1

மேல்

ஆடல்செயும் (1)

பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2

மேல்

ஆடலே (1)

கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே
ஊடலும் உடம்பு ஒன்றிலே கூடலும் ஒரு கொம்பரோ – மதுரைக்கலம்பகம்:2 22/1,2

மேல்

ஆடாது (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/3,4

மேல்

ஆடாள் (1)

ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/4

மேல்

ஆடி (1)

எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2

மேல்

ஆடு (2)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4
அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர் கண்ணே – மதுரைக்கலம்பகம்:2 44/4

மேல்

ஆடுக (2)

அம் மென் மருங்கு ஒசிய ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/4
அழகு எறிக்கும் பூண் முலையீர் ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/5

மேல்

ஆடும் (5)

பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2
பட்டு இருக்க தோல் அசைஇ பாண்டரங்க கூத்து ஆடும்
மட்டு இருக்கும் நீப வனத்தானே கட்ட – மதுரைக்கலம்பகம்:2 8/1,2
வான் நிமிர்ந்திட ஆடும் ஒண் கொடி வால சந்திரனும் – மதுரைக்கலம்பகம்:2 43/3
மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
குங்கும சேறு ஆடும் கொடி மாட வீதியில் வெண் – மதுரைக்கலம்பகம்:2 70/1

மேல்

ஆடை (1)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6

மேல்

ஆண்டவர் (1)

தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/2

மேல்

ஆண்மை (1)

இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2

மேல்

ஆதி (1)

அரசு வீற்றிருந்த ஆதி அம் கடவுள் நின் – மதுரைக்கலம்பகம்:2 1/59

மேல்

ஆம் (5)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4
தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி – மதுரைக்கலம்பகம்:2 63/3
கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால் – மதுரைக்கலம்பகம்:2 65/3
இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம்
முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/2,3
வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம்
இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன் – மதுரைக்கலம்பகம்:2 84/1,2

மேல்

ஆமாகில் (1)

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில்
அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/3,4

மேல்

ஆமையே (1)

உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2

மேல்

ஆயினும் (1)

செம்பொன் மன்றினும் சிறந்தன்று ஆயினும்
கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும் – மதுரைக்கலம்பகம்:2 47/11,12

மேல்

ஆர் (5)

வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/4
ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே – மதுரைக்கலம்பகம்:2 39/2
ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2
இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

ஆர்க்கும் (1)

நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும்
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/3,4

மேல்

ஆர்ந்து (2)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

ஆர்ப்ப (1)

கம்ம கலனும் சிலம்பும் கலந்து ஆர்ப்ப
மும்மை தமிழ் மதுரை முக்கண் அப்பன் சீர் பாடி – மதுரைக்கலம்பகம்:2 23/2,3

மேல்

ஆருக்கு (1)

ஆருக்கு உரைக்கேம் அடிகேள் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 31/4

மேல்

ஆலயம் (1)

அரங்கும் ஐயற்கு வெள்ளியரங்கமே ஆலயம் பிற எள்ளியர் அங்கமே – மதுரைக்கலம்பகம்:2 38/1

மேல்

ஆவது (1)

அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/4

மேல்

ஆவமே (1)

ஆவமே நாணே அடு கணையே அ மதவேள் – மதுரைக்கலம்பகம்:2 29/1

மேல்

ஆவி (3)

சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ – மதுரைக்கலம்பகம்:2 83/1
இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/3
சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே – மதுரைக்கலம்பகம்:2 98/3

மேல்

ஆவியுமே-கொலாம் (1)

அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம்
பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/2,3

மேல்

ஆவியே (1)

உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2

மேல்

ஆவியை (1)

பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4

மேல்

ஆழி (2)

மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ – மதுரைக்கலம்பகம்:2 1/1
ஒர் ஏழ் ஆழி சீர்பெற பூண்டு – மதுரைக்கலம்பகம்:2 102/7

மேல்

ஆழியான் (1)

ஊழி முதல்வர்க்கு உரு அழிந்தேன் ஆழியான்
சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும் – மதுரைக்கலம்பகம்:2 75/2,3

மேல்

ஆள்செய்யும் (1)

அரும்பு இட்டு பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள் – மதுரைக்கலம்பகம்:2 1/31

மேல்

ஆளவைத்தாளும் (1)

நாடு ஆளவைத்தாளும் நகையாது இனிப்போடு நகையாடவே – மதுரைக்கலம்பகம்:2 39/4

மேல்

ஆளார் (1)

ஆளார் கடம்பவனத்து ஐயரும் மற்று என் நீயும் – மதுரைக்கலம்பகம்:2 67/3

மேல்

ஆளுடைய (1)

ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1

மேல்

ஆற்றல் (1)

ஆற்றல் கொடு உற்ற பாகு அலைத்தனர் பற்ற – மதுரைக்கலம்பகம்:2 102/15

மேல்

ஆற்றலாம் (1)

கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2

மேல்

ஆற்றா (1)

குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா
சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/1,2

மேல்

ஆற்றாது (1)

தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது
ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/1,2

மேல்

ஆற்றில் (1)

கொங்கு உரை ஆற்றில் இட்டு குளத்தினில் தேட நீடும் – மதுரைக்கலம்பகம்:2 74/1

மேல்

ஆற்றும் (1)

கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2

மேல்

ஆறு (5)

விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/17
தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/18
ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

ஆன் (3)

மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/14
அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/52
ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ – மதுரைக்கலம்பகம்:2 4/2

மேல்

ஆனதுவும் (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும்
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/1,2

மேல்

ஆனந்த (2)

காண் தகைய செல்வ கடம்பவனத்து ஆனந்த
தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/1,2
அளவையின் அளவா ஆனந்த மா கடல் – மதுரைக்கலம்பகம்:2 102/29

மேல்

ஆனாலும் (1)

ஆனாலும் காயம் இலை ஐயரவர்க்கு அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/5

மேல்

ஆனை (4)

போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1
கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ – மதுரைக்கலம்பகம்:2 17/2
ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3
ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4

மேல்

ஆனைக்கு (1)

கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ – மதுரைக்கலம்பகம்:2 17/2

மேல்

ஆனைக்கே (1)

வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய் – மதுரைக்கலம்பகம்:2 20/3

மேல்