ஈ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈசர் (1)

இருவருக்கும் காண்பு அரிய ஈசர் மதுரேசனார் – மதுரைக்கலம்பகம்:2 13/1

மேல்

ஈட்டும் (1)

செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும்
எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/3,4

மேல்

ஈடு (1)

இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள் – மதுரைக்கலம்பகம்:2 56/3

மேல்

ஈந்து (1)

மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து
பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவ கடலும் போக்கினீரே – மதுரைக்கலம்பகம்:2 90/3,4

மேல்

ஈர் (2)

ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

ஈர (1)

ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன் – மதுரைக்கலம்பகம்:2 63/1

மேல்

ஈரம் (1)

ஈரம் வைத்த இளமதி வெண்ணிலா – மதுரைக்கலம்பகம்:2 41/3

மேல்

ஈரித்த (1)

ஈரித்த தென்றல் இளவாடை திங்கள் என்று ஓர் – மதுரைக்கலம்பகம்:2 31/1

மேல்

ஈறு (1)

ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார் – மதுரைக்கலம்பகம்:2 19/2

மேல்

ஈன்ற (2)

பொருள் நான்கு ஒருங்கு ஈன்ற பொன் மாட கூடல் – மதுரைக்கலம்பகம்:2 2/1
இன்னியம் துவைப்ப சங்கம் ஏங்கிட செழியர் ஈன்ற
கன்னியை மணந்தே அன்றோ கன்னிநாடு எய்தப்பெற்றார் – மதுரைக்கலம்பகம்:2 60/1,2

மேல்

ஈன்றளித்த (1)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1

மேல்

ஈன்றாள் (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்