நி – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகழ்த்துதும் 1
நித்தில 1
நிமலனே 1
நிமிர் 1
நிமிர்ந்த 1
நிமிர்ந்திட 1
நிமிர்ந்திடவே 1
நிமிர்ந்திடு 1
நிமிர 1
நிமிராதால் 1
நிரம்ப 1
நிரம்பா 1
நிருபர் 1
நில 1
நிலம் 2
நிலமே 1
நிலவு 3
நிலன் 1
நிலனும் 1
நிலா 6
நிலாவும் 1
நிலை 1
நிலையும் 1
நிழல் 1
நிற்க 1
நிற்கும் 1
நிற்ப 3
நிற்பது 1
நிறம் 1
நிறமும் 1
நிறை 1
நிறையினொடும் 1
நின் 15
நின்ற 3
நின்றதினும் 1
நின்றதும் 1
நின்றதுவும் 1
நின்றவர் 1
நின்றன 1
நின்றாய் 2
நின்றாய்க்கு 1
நின்றில 1
நின்று 7
நின்றே 1
நின்றோய் 1
நின்னதே 1
நின்னை 1
நினக்கு 1
நினது 1
நினை 1
நினைத்தது 1
நினையவும் 1

நிகழ்த்துதும் (1)

நின் பெருந்தன்மையை நிகழ்த்துதும் யாம் என – மதுரைக்கலம்பகம்:2 102/30

மேல்

நித்தில (1)

நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3

மேல்

நிமலனே (1)

நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4

மேல்

நிமிர் (1)

தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1

மேல்

நிமிர்ந்த (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

நிமிர்ந்திட (1)

வான் நிமிர்ந்திட ஆடும் ஒண் கொடி வால சந்திரனும் – மதுரைக்கலம்பகம்:2 43/3

மேல்

நிமிர்ந்திடவே (1)

கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 43/4

மேல்

நிமிர்ந்திடு (1)

கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 43/4

மேல்

நிமிர (1)

மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇ – மதுரைக்கலம்பகம்:2 1/1

மேல்

நிமிராதால் (1)

கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால்
மூவா முதலார் மதுரை இது அன்றோ மொழிவாயே – மதுரைக்கலம்பகம்:2 65/3,4

மேல்

நிரம்ப (1)

தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13

மேல்

நிரம்பா (1)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/3,4

மேல்

நிருபர் (1)

கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே – மதுரைக்கலம்பகம்:2 64/1

மேல்

நில (1)

இரு நில மடந்தைக்கு ஒரு முடி கவித்தாங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/22

மேல்

நிலம் (2)

இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ் – மதுரைக்கலம்பகம்:2 1/58
இந்தா நிலம் மேவு என சொலார் என் செய்வாள் – மதுரைக்கலம்பகம்:2 10/3

மேல்

நிலமே (1)

மந்தா நிலமே வரின் – மதுரைக்கலம்பகம்:2 10/4

மேல்

நிலவு (3)

ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/3
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

நிலன் (1)

இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ – மதுரைக்கலம்பகம்:2 34/1

மேல்

நிலனும் (1)

நிலனும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/42

மேல்

நிலா (6)

தூய்மை செய்தாங்கு பால் நிலா விரிந்த – மதுரைக்கலம்பகம்:2 47/8
வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

நிலாவும் (1)

சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும்
எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/2,3

மேல்

நிலை (1)

நெடுநிலை பெயரா நிலை தேர் ஊர்ந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/9

மேல்

நிலையும் (1)

நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3

மேல்

நிழல் (1)

இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ் – மதுரைக்கலம்பகம்:2 1/58

மேல்

நிற்க (1)

அடுத்து அங்கு உலவா கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்க
தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/1,2

மேல்

நிற்கும் (1)

நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3

மேல்

நிற்ப (3)

தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப
அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும் – மதுரைக்கலம்பகம்:2 1/6,7
கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப
ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/3,4
அடுத்த பதஞ்சலியார் அஞ்சலியா நிற்ப
எடுத்த பதம் சலியாரேனும் தடுத்தவற்கா – மதுரைக்கலம்பகம்:2 82/1,2

மேல்

நிற்பது (1)

காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/4

மேல்

நிறம் (1)

நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும் – மதுரைக்கலம்பகம்:2 16/2

மேல்

நிறமும் (1)

எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

நிறை (1)

பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/2

மேல்

நிறையினொடும் (1)

நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4

மேல்

நின் (15)

ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர் – மதுரைக்கலம்பகம்:2 1/35
அரசு வீற்றிருந்த ஆதி அம் கடவுள் நின்
பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும் – மதுரைக்கலம்பகம்:2 1/59,60
செம்பொருள் செல்வ நின் சீர் அடி தொழும்புக்கு – மதுரைக்கலம்பகம்:2 1/62
இறைமை உண்டாயினும் ஆக குறுகி நின்
சிற்றடியர்க்கே குற்றேவல் தலைக்கொண்டு – மதுரைக்கலம்பகம்:2 1/65,66
தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1
விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 8/3
கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/2
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே – மதுரைக்கலம்பகம்:2 47/14
மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும் – மதுரைக்கலம்பகம்:2 73/2
கரு மிடற்று ஒருவ நின் திருவடி வழுத்துதும் – மதுரைக்கலம்பகம்:2 87/13
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2
நின் பெருந்தன்மையை நிகழ்த்துதும் யாம் என – மதுரைக்கலம்பகம்:2 102/30
இனைய நின் தன்மை மற்று எம்மனோரும் – மதுரைக்கலம்பகம்:2 102/34
வாழிய எம் பெரும நின் தகவே – மதுரைக்கலம்பகம்:2 102/36

மேல்

நின்ற (3)

பால் நின்ற பச்சை பசும் கொடியே முற்றும் பாலிக்குமால் – மதுரைக்கலம்பகம்:2 49/3
தேன் நின்ற ஐந்தரு சிந்தாமணியொடு அ தேனுவுமே – மதுரைக்கலம்பகம்:2 49/4
மொழிக்கு அயல் ஆகி வேத முடிவினில் முடிந்து நின்ற
வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/1,2

மேல்

நின்றதினும் (1)

ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

நின்றதும் (1)

எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/2

மேல்

நின்றதுவும் (1)

கான் நின்றதுவும் ஒர் கற்பகமே அந்த கற்பகத்தின் – மதுரைக்கலம்பகம்:2 49/2

மேல்

நின்றவர் (1)

தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும் – மதுரைக்கலம்பகம்:2 27/2

மேல்

நின்றன (1)

பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன
புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/5,6

மேல்

நின்றாய் (2)

நீவா நின்றாய் நின்றில காமானலம் என்னே – மதுரைக்கலம்பகம்:2 65/2
வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1

மேல்

நின்றாய்க்கு (1)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

நின்றில (1)

நீவா நின்றாய் நின்றில காமானலம் என்னே – மதுரைக்கலம்பகம்:2 65/2

மேல்

நின்று (7)

வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று
சிந்திப்பதும் அன்றி சித்திவிநாயகன் சேவடியே – மதுரைக்கலம்பகம்:1 1/3,4
அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1
எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி – மதுரைக்கலம்பகம்:2 18/1
அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1
ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம் – மதுரைக்கலம்பகம்:2 49/1
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2
புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே – மதுரைக்கலம்பகம்:2 98/4

மேல்

நின்றே (1)

என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/2

மேல்

நின்றோய் (1)

எண்ணிறந்து நின்றோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/40

மேல்

நின்னதே (1)

பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை – மதுரைக்கலம்பகம்:2 25/3

மேல்

நின்னை (1)

ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2

மேல்

நினக்கு (1)

நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1

மேல்

நினது (1)

இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது
அருமையை உணர்வுறின் அமிழ்தினும் இனிமையை – மதுரைக்கலம்பகம்:2 1/27,28

மேல்

நினை (1)

குறியிலன் அலது ஒரு குணமிலன் என நினை
அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை – மதுரைக்கலம்பகம்:2 1/25,26

மேல்

நினைத்தது (1)

நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3

மேல்

நினையவும் (1)

நினையவும் சில சொல் புனையவும் புரிதலின் – மதுரைக்கலம்பகம்:2 102/35

மேல்