செ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செகுத்து 1
செங்கல் 1
செங்கோல் 1
செங்கோன்மை 1
செட்டு 1
செந்நெல் 1
செப்பினுள் 1
செம் 8
செம்பாதி 1
செம்பொருள் 1
செம்பொன் 2
செம்மல் 1
செம்மலையே 1
செம்மாப்புறூஉம் 1
செய் 2
செய்கேன் 1
செய்கை 1
செய்கைக்கு 1
செய்தாங்கு 1
செய்து 1
செய்யாள் 1
செய்வார் 1
செய்வாள் 2
செயற்கை 1
செயும் 1
செரு 1
செருவில் 1
செல் 1
செல்ல 1
செல்லா 1
செல்லும் 1
செல்வ 2
செல்வனாரே 1
செல்வீர் 1
செலுத்தினையே 1
செலும் 1
செவ்வழி 1
செவ்வியின் 1
செவி 1
செவிமடுத்தனையே 1
செழியர் 2
செற்ற 1
சென்றது 1
சென்றாள் 1
சென்று 2
சென்றே 1
சென்னி 2

செகுத்து (1)

தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/14

மேல்

செங்கல் (1)

கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2

மேல்

செங்கோல் (1)

வாடாத செங்கோல் வளர்ப்பீர் என கன்னி வள நாடு எனும் – மதுரைக்கலம்பகம்:2 39/3

மேல்

செங்கோன்மை (1)

தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி – மதுரைக்கலம்பகம்:2 63/3

மேல்

செட்டு (1)

பலம் கொண்ட செட்டு உமக்கு பலித்தது நன்றால் நீர் இ பாவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 7/3

மேல்

செந்நெல் (1)

கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல்
வயல் வண்ண பண்ணை மதுரை பிரான் வெற்பில் வஞ்சியன்னாள் – மதுரைக்கலம்பகம்:2 12/2,3

மேல்

செப்பினுள் (1)

சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே – மதுரைக்கலம்பகம்:2 81/4

மேல்

செம் (8)

செம் தேறல் குனிக்கின்றவா பத்தி கொத்து அரும்ப – மதுரைக்கலம்பகம்:2 37/2
செம் சேவடிக்கு அடிமைசெய்யார் போல் துஞ்சாது – மதுரைக்கலம்பகம்:2 44/2
கடவுள் செம் கைக்கு படி எடுப்பு ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 47/4
செம் மேனிக்கு உண்டாம்-கொல் தீங்கு – மதுரைக்கலம்பகம்:2 56/4
எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே – மதுரைக்கலம்பகம்:2 58/3
செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3
செம் கால் நாரைக்கு சிவபதம் கிடைத்து என – மதுரைக்கலம்பகம்:2 87/3
செம் நா முற்றத்து நல் நடம் புரியும் – மதுரைக்கலம்பகம்:2 102/3

மேல்

செம்பாதி (1)

செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு – மதுரைக்கலம்பகம்:2 28/3

மேல்

செம்பொருள் (1)

செம்பொருள் செல்வ நின் சீர் அடி தொழும்புக்கு – மதுரைக்கலம்பகம்:2 1/62

மேல்

செம்பொன் (2)

செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/8
செம்பொன் மன்றினும் சிறந்தன்று ஆயினும் – மதுரைக்கலம்பகம்:2 47/11

மேல்

செம்மல் (1)

குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/4

மேல்

செம்மலையே (1)

எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே
வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 58/3,4

மேல்

செம்மாப்புறூஉம் (1)

செம்மாப்புறூஉம் திறம் பெறல் பொருட்டே – மதுரைக்கலம்பகம்:2 1/68

மேல்

செய் (2)

செய்யாள் செய் சரக்கறையாம் திருஆலவாயில் உறை செல்வனாரே – மதுரைக்கலம்பகம்:2 18/4
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

செய்கேன் (1)

எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன்
திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/3,4

மேல்

செய்கை (1)

மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

செய்கைக்கு (1)

செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/30

மேல்

செய்தாங்கு (1)

தூய்மை செய்தாங்கு பால் நிலா விரிந்த – மதுரைக்கலம்பகம்:2 47/8

மேல்

செய்து (1)

தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர் – மதுரைக்கலம்பகம்:2 96/2

மேல்

செய்யாள் (1)

செய்யாள் செய் சரக்கறையாம் திருஆலவாயில் உறை செல்வனாரே – மதுரைக்கலம்பகம்:2 18/4

மேல்

செய்வார் (1)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4

மேல்

செய்வாள் (2)

இந்தா நிலம் மேவு என சொலார் என் செய்வாள்
மந்தா நிலமே வரின் – மதுரைக்கலம்பகம்:2 10/3,4
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/3

மேல்

செயற்கை (1)

திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4

மேல்

செயும் (1)

குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும்
அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/3,4

மேல்

செரு (1)

செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3

மேல்

செருவில் (1)

செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4

மேல்

செல் (1)

செல் இட்ட பொழில் மதுரை தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று – மதுரைக்கலம்பகம்:2 77/1

மேல்

செல்ல (1)

தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4

மேல்

செல்லா (1)

தாரோடு மனம் செல்ல தளையோடும் தான் செல்லா தமியள்தானே – மதுரைக்கலம்பகம்:2 91/4

மேல்

செல்லும் (1)

சித்திர பாட்டியல் தேர்ந்தன செல்லும்
தடம் பணை உடுத்த தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 87/10,11

மேல்

செல்வ (2)

செம்பொருள் செல்வ நின் சீர் அடி தொழும்புக்கு – மதுரைக்கலம்பகம்:2 1/62
காண் தகைய செல்வ கடம்பவனத்து ஆனந்த – மதுரைக்கலம்பகம்:2 96/1

மேல்

செல்வனாரே (1)

செய்யாள் செய் சரக்கறையாம் திருஆலவாயில் உறை செல்வனாரே – மதுரைக்கலம்பகம்:2 18/4

மேல்

செல்வீர் (1)

எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர்
கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/2,3

மேல்

செலுத்தினையே (1)

பெண்ணரசு தர கொண்ட பேரரசு செலுத்தினையே
தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து – மதுரைக்கலம்பகம்:2 1/10,11

மேல்

செலும் (1)

கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும்
இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/2,3

மேல்

செவ்வழி (1)

கரும் பொறி சுரும்பர் செவ்வழி பாட – மதுரைக்கலம்பகம்:2 47/1

மேல்

செவ்வியின் (1)

சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3

மேல்

செவி (1)

கண் புலம் கதுவாது செவி புலம் புக்கு – மதுரைக்கலம்பகம்:2 102/1

மேல்

செவிமடுத்தனையே (1)

வழிந்து ஒழுகும் தீம் தமிழின் மழலை செவிமடுத்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/20

மேல்

செழியர் (2)

உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12
இன்னியம் துவைப்ப சங்கம் ஏங்கிட செழியர் ஈன்ற – மதுரைக்கலம்பகம்:2 60/1

மேல்

செற்ற (1)

கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 61/1

மேல்

சென்றது (1)

அன்று அருள் சுரந்தது ஒன்றோ சென்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 87/17

மேல்

சென்றாள் (1)

பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2

மேல்

சென்று (2)

கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 39/1
கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/2

மேல்

சென்றே (1)

திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4

மேல்

சென்னி (2)

பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2
வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே – மதுரைக்கலம்பகம்:2 1/12

மேல்