கட்டுருபன்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

-கண் (3)

புறம்பு தோன்றி நின்-கண் ஆகுவனே – கல்லாடம்:2 39/22
கவிழ்ந்த முகத்தை எக்-கண் மனம் தோன்ற – கல்லாடம்:2 86/12
சாதக புள்-கண் தாமரை கழுநீர் – கல்லாடம்:2 98/27

மேல்

-கண்ணும் (1)

கொலையினர்-கண்ணும் குன்றாது இயைந்து – கல்லாடம்:2 52/20

மேல்

-காறும் (1)

இரவிக்கு அண்ணிய வைகறை-காறும்
அலமரல் என்னை-கொல் அறிந்திலம் யாமே – கல்லாடம்:2 34/15,16

மேல்

-கொல் (4)

அலமரல் என்னை-கொல் அறிந்திலம் யாமே – கல்லாடம்:2 34/16
கால குறி-கொல் அன்றியும் முன்னை – கல்லாடம்:2 70/15
பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல்
நனவிடை நவிற்ற கனவிடை கண்ட – கல்லாடம்:2 70/18,19
பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும்-கொல் என – கல்லாடம்:2 88/13

மேல்

-கொல்லோ (2)

கண்ணினும் கவரும்-கொல்லோ
உள் நிறைந்திருந்த வாழிய மனனே – கல்லாடம்:2 46/17,18
இடைவழி நீங்கி என் எதிர் உறும்-கொல்லோ
அன்றியும் நெடுநாள் அமைந்து உடன் வருமோ – கல்லாடம்:2 82/49,50

மேல்

-தம் (11)

புன குடி கணியர்-தம் மலர் கை ஏடு அவிழ்த்து – கல்லாடம்:2 4/22
யாவர்-தம் பகையும் யாவையின் பகையும் – கல்லாடம்:2 41/22
புள் குலம் சூழ்ந்த பொருப்பு உடை குறவர்-தம்
பெரும் தேன் கவரும் சிறுகுடி மகளே – கல்லாடம்:2 51/11,12
தரு நிழல் தேவர்-தம் உடல் பனிப்ப – கல்லாடம்:2 59/3
சமய கணக்கர்-தம் திறம் கடந்து – கல்லாடம்:2 62/26
கழுநீர் களைநர்-தம் கம்பலை காண்க – கல்லாடம்:2 69/13
புரந்தரன் புதல்வி எயினர்-தம் பாவை – கல்லாடம்:2 71/11
அரக்கர்-தம் கூட்டம் தொலைத்து நெய் உண்டு – கல்லாடம்:2 72/5
தேவர்-தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து – கல்லாடம்:2 73/19
பறைவர தழீஇ பெற்று உவை-தம் கம்பலைக்கு – கல்லாடம்:2 74/14
இருக்கினும் இறக்கினும் உதவா தேவர்-தம்
பொய் வழி கதியகம் மெய் என புகாத – கல்லாடம்:2 92/2,3

மேல்

-தம்மினும் (2)

செம் தாள் விடுத்து உறை அந்தர்கள்-தம்மினும்
மூவா தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் – கல்லாடம்:2 7/39,40
குன்றும் அ சூளினர்-தம்மினும் கொடிதே – கல்லாடம்:2 92/23

மேல்

-தலை (2)

குழந்தை அன்பினொடு சென்னி-தலை கொள்ளுதும் – கல்லாடம்:1 2/57
நிழல்-தலை மணந்த புனல் கிடவாது – கல்லாடம்:2 63/7

மேல்

-தன் (2)

ஒப்புறு பொன் தொடி சிற்றிடை மடந்தை-தன்
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு – கல்லாடம்:2 35/12,13
பெற்று உயிர்த்த அரும் பொன் தொடி மடந்தை-தன்
இரு விழி பொலி அ திரு நகர்ப்புறத்து – கல்லாடம்:2 93/6,7

மேல்

-தனக்கு (2)

வள்ளுவன்-தனக்கு வளர் கவி புலவர் முன் – கல்லாடம்:2 13/22
எம் எதிர் கூறிய இ மொழி-தனக்கு
பெருமை நோக்கின் சிறுமையது உண்டே – கல்லாடம்:2 17/7,8

மேல்

-தன்னால் (2)

சயம் பெறு வீரனை தந்து அவன்-தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த – கல்லாடம்:2 4/4,5
மற்று அவன்-தன்னால் வடவையின் கொழுந்து சுட்டு – கல்லாடம்:2 75/13

மேல்

-தன்னுடன் (2)

வையையில் மறித்தும் அன்னவள்-தன்னுடன்
கெழுமிய விழவுள் புகு-மதி நீயே – கல்லாடம்:2 87/17,18
அன்னவன்-தன்னுடன் கடிகை ஏழ் அமர – கல்லாடம்:2 95/4

மேல்

-தன்னுள் (1)

தீ குண தக்கன் செருக்களம்-தன்னுள்
கண்-தொறும் விசைத்த கருப்பு தரளமும் – கல்லாடம்:2 60/15,16

மேல்

-தன்னை (4)

துன்பு பசப்பு ஊரும் கண் நிழல்-தன்னை
திரு மலர் எடுத்து கொன்றை காட்ட – கல்லாடம்:2 20/8,9
மருமான்-தன்னை மகவு என சடங்குசெய்து – கல்லாடம்:2 44/15
மற்றவன்-தன்னை நெடும் துயில் வருத்தி – கல்லாடம்:2 55/15
இரு மன பொய் உளத்து ஒரு மகள்-தன்னை
கரியோன் கடுப்ப துகில் கவர்ந்து ஒளிர – கல்லாடம்:2 87/4,5

மேல்

-தன்னொடும் (1)

வான் முதல் ஈன்ற மலைமகள்-தன்னொடும்
முழுது உணர் ஞானம் எல்லாம் உடைமை – கல்லாடம்:2 86/25,26

மேல்

-தொறும் (11)

விழுங்கிய பல் கதிர் வாய்-தொறும் உமிழ்ந்து என – கல்லாடம்:1 2/21
உயிர் புகும் சட்டகம் உழி-தொறும் உழி-தொறும் – கல்லாடம்:2 8/1
உயிர் புகும் சட்டகம் உழி-தொறும் உழி-தொறும்
பழவினை புகுந்த பாடகம் போல – கல்லாடம்:2 8/1,2
சிவந்த வாய்-தொறும் வெண் பொரி சிதற – கல்லாடம்:2 18/23
உயிர்-தொறும் வளைந்து என உயிர் சுமந்து உழலும் – கல்லாடம்:2 26/9
உடல்-தொறும் பிணித்த பாவமும் புலர – கல்லாடம்:2 45/20
கண்-தொறும் விசைத்த கருப்பு தரளமும் – கல்லாடம்:2 60/16
இருவினை நாடி உயிர்-தொறும் அமைத்த – கல்லாடம்:2 62/8
கண்டன மகம்-தொறும் கலி பெற சென்று – கல்லாடம்:2 77/12
வரி உடல் ஈயல் வாய்-தொறும் எதிர்ப்ப – கல்லாடம்:2 94/9
அதர்-தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன் – கல்லாடம்:2 96/6

மேல்

-தோறு (3)

உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
கொள்ளிவாய் குணங்கு உள்ளு-தோறு இவரிய – கல்லாடம்:2 97/11

மேல்

-தோறும் (1)

பெரு மறை கூறி அறை விதி-தோறும்
முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று – கல்லாடம்:2 60/11,12

மேல்

-நின்று (1)

திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறி – கல்லாடம்:2 7/29

மேல்

-பால் (10)

நின்-பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள – கல்லாடம்:2 21/13
நுங்கள் இன்பம் பெரும் துணை என்-பால்
தண்ணம்துறைவற்கு இன்று இவள் ஒருத்தி – கல்லாடம்:2 23/39,40
பள்ளி கணக்கர்-பால் பட்டாங்கு – கல்லாடம்:2 25/5
கயிலை தென்-பால் கானகம் தனித்த – கல்லாடம்:2 31/6
வட-பால் பரிந்த பலி மண கோட்டமும் – கல்லாடம்:2 41/20
பேர் அருள் குன்றம் ஒரு-பால் பொலிந்த – கல்லாடம்:2 48/12
அரும் தவ கண்ணினோடு அடைந்த மா முனி-பால்
பேர் இருள் மாயை பெண் மகவு இரக்க – கல்லாடம்:2 81/17,18
பட்டு உலர் கள்ளியம்-பால் துயில்கொள்ளும் – கல்லாடம்:2 88/25
எங்கையர் புலவியில் இயம்பின நம்-பால்
தனது முன் புன்மொழி நீள தந்தும் – கல்லாடம்:2 89/18,19
நின்-பால் அளியும் நீங்கி – கல்லாடம்:2 95/42

மேல்

-பாலே (1)

அருத்தி அம் கோதை மன்னவன்-பாலே – கல்லாடம்:2 50/35

மேல்

-மதி (6)

வளர் முலை இன்பு எனின் மறித்து நோக்கு-மதி
பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே – கல்லாடம்:2 31/15,16
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி
அமரர்கள் முனி கணத்தவை முன் தவறு – கல்லாடம்:2 69/22,23
கண்டு உடல் இடைந்தன காட்டுவல் காண்-மதி
மண் உடல் பசந்து கறுத்தது விண்ணமும் – கல்லாடம்:2 71/24,25
கெழுமிய விழவுள் புகு-மதி நீயே – கல்லாடம்:2 87/18
அரும் துணை நெஞ்சம் நிற்கு உறும் பயன் கேள்-மதி
மண்ணுளர் வணங்கும் தன்னுடை தகைமையும் – கல்லாடம்:2 88/5,6
வறு நீர் மலர் என மாழ்கலை விடு-மதி
மறை அடி வழுத்திய மறைவனத்து ஒருநாள் – கல்லாடம்:2 94/31,32

மேல்

-மின் (25)

சிறிது நின்று இயம்ப உழை இனம் கேண்-மின் இன்று – கல்லாடம்:2 4/16
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின் – கல்லாடம்:2 10/2
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின் – கல்லாடம்:2 10/2
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின் – கல்லாடம்:2 10/2
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின்
கட்டுதிர் கோதை கடி மலர் அன்பொடு – கல்லாடம்:2 10/2,3
முண்டக முகையின் முலை-முகம் தரு-மின்
உருளின் பூழி உள்ளுற ஆடு-மின் – கல்லாடம்:2 10/4,5
உருளின் பூழி உள்ளுற ஆடு-மின்
எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின் – கல்லாடம்:2 10/5,6
எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின் – கல்லாடம்:2 10/6
எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின் – கல்லாடம்:2 10/6
எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின் – கல்லாடம்:2 10/6
எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின்
கருப்புரம் துதைந்த கல் உயர் மணி தோள் – கல்லாடம்:2 10/6,7
வாசம் படரும் மருத்தினும் உறு-மின்
பெரும் கவின் முன் நாள் பேணிய அரும் தவம் – கல்லாடம்:2 10/8,9
கண்ணிடை உளத்திடை காண்-மின் கருது-மின் – கல்லாடம்:2 10/10
கண்ணிடை உளத்திடை காண்-மின் கருது-மின்
பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறி-மின் – கல்லாடம்:2 10/10,11
பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறி-மின்
யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றி – கல்லாடம்:2 10/11,12
யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றி – கல்லாடம்:2 10/12
கலத்தும் என்று எழு-மின் கண் அளி காண்-மின் – கல்லாடம்:2 10/13
கலத்தும் என்று எழு-மின் கண் அளி காண்-மின்
வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு – கல்லாடம்:2 10/13,14
ஒன்று கிளக்க நின்று இவை கேண்-மின்
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/3,4
சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின் – கல்லாடம்:2 84/10
சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின்
பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின் – கல்லாடம்:2 84/10,11
பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின் – கல்லாடம்:2 84/11
பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின்
சுண்ணமும் தாதும் துணை துகள் தூற்று-மின் – கல்லாடம்:2 84/11,12
சுண்ணமும் தாதும் துணை துகள் தூற்று-மின்
கரும் பெயல் குளிரின் களி மயில் என்ன – கல்லாடம்:2 84/12,13
இருள் உடை பெரு முகில் வழி தெரிந்து ஏகன்-மின்
அரிமான் உறுத்த நூற்றுவர் மதித்த – கல்லாடம்:2 93/9,10

மேல்

-முகம் (3)

முண்டக முகையின் முலை-முகம் தரு-மின் – கல்லாடம்:2 10/4
நெட்டுயிர்ப்பு எறிய முலை-முகம் நெருக்கியும் – கல்லாடம்:2 48/19
புன்னை அம் பொதும்பர் குழை முகம் குழை-முகம்
கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை – கல்லாடம்:2 72/19,20

மேல்

-வயின் (4)

நந்து இன குழுவும் வளம்-வயின் நந்தி – கல்லாடம்:2 60/19
முழுமதி உடு கணம் அக-வயின் விழுங்கி – கல்லாடம்:2 74/21
தாமரை அக-வயின் சே இதழ் வாட்டிய – கல்லாடம்:2 78/21
முன்னுறும் உழு-வயின் பன்னிரு வருடம் – கல்லாடம்:2 93/16

மேல்

-வாய் (3)

வீதி-வாய் தென்றல் மெல்லென்று இயங்கும் – கல்லாடம்:2 17/36
புள் குலம் பொய்கை-வாய் தாள்கொள – கல்லாடம்:2 38/4
கரும் கழி கிடந்த கானல் அம் கரை-வாய்
மெய் படு கடும் சூள் மின் என துறந்தவர் – கல்லாடம்:2 82/42,43

மேல்