தூ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

தூக்கல் (1)

தூக்கல் வளையுடன் தொடர் பதம் எறிந்து – கல்லாடம்:2 99/5

மேல்

தூக்கி (4)

மண் சிறுக விரித்த மணி படம் தூக்கி
விழுங்கிய பல் கதிர் வாய்-தொறும் உமிழ்ந்து என – கல்லாடம்:1 2/20,21
கருமா எயிறு திருமார்பு தூக்கி
வையகத்து உயிர்கள் வழக்கு அறல் கருதி – கல்லாடம்:2 26/17,18
ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து – கல்லாடம்:2 85/21
மோக புயங்க முறை துறை தூக்கி
அதற்கு சாரணி அருள் கரம் ஒன்றில் – கல்லாடம்:2 99/27,28

மேல்

தூக்கின் (1)

தூக்கின் தகட்டின் சுடர் வாய் வெயிலின் – கல்லாடம்:2 98/17

மேல்

தூக்கு-மின் (1)

சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின்
பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின் – கல்லாடம்:2 84/10,11

மேல்

தூங்க (1)

அருவி தூங்க கண்ணீர் கொண்டும் – கல்லாடம்:2 23/42

மேல்

தூங்கல் (1)

துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல் – கல்லாடம்:2 21/56

மேல்

தூங்கலும் (3)

தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் – கல்லாடம்:2 43/30
தூங்கலும் துள்ளலும் துவக்க நின்று இசைப்ப – கல்லாடம்:2 82/29
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும் – கல்லாடம்:2 100/22

மேல்

தூங்கி (2)

வஞ்சனை தூங்கி ஆரல் உண்ணும் – கல்லாடம்:2 36/3
சென்னி தூங்கி நின்றது காட்டும் – கல்லாடம்:2 96/24

மேல்

தூங்கு (1)

களி தூங்கு உளத்தொடும் மெல்லென சேர்த்தி – கல்லாடம்:2 18/28

மேல்

தூண்டா (1)

தூண்டா விளக்கின் ஈண்டு அவள் உதவும் – கல்லாடம்:2 22/28

மேல்

தூண்டில் (2)

வளை வாய் தூண்டில் கரும் கயிறு பரிந்து – கல்லாடம்:2 37/17
உள் கவை தூண்டில் உரம் புகுந்து உழக்கும் – கல்லாடம்:2 57/5

மேல்

தூணத்து (1)

இரு நிலம் உருவிய ஒரு தழல் தூணத்து
எரி மழு நவ்வி தமருகம் அமைத்த – கல்லாடம்:2 58/26,27

மேல்

தூணம் (1)

தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு – கல்லாடம்:2 5/16

மேல்

தூதினர்க்கு (1)

சேறி என்று இசைப்ப செல் பணி தூதினர்க்கு
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன் – கல்லாடம்:2 93/22,23

மேல்

தூது (1)

நல் பெரும் தூது காட்டும் – கல்லாடம்:2 84/21

மேல்

தூதுகள் (1)

திருவறம் வந்த ஒருவன் தூதுகள்
இன்பமும் இயற்கையும் இகழா காமமும் – கல்லாடம்:2 100/30,31

மேல்

தூதுவர் (2)

மறலி விடுக்க வந்த தூதுவர்
உயிர்-தொறும் வளைந்து என உயிர் சுமந்து உழலும் – கல்லாடம்:2 26/8,9
கடும் கால் கொற்றத்து அடும் தூதுவர் என – கல்லாடம்:2 96/7

மேல்

தூமமும் (1)

புனம் பட எறிந்த கார் அகில் தூமமும்
அந்தணர் பெருக்கிய செம் தீ புகையும் – கல்லாடம்:2 50/19,20

மேல்

தூய் (1)

போது தூய் இரப்ப புணரா மயக்கம் – கல்லாடம்:2 25/14

மேல்

தூர்ந்தே (1)

அங்குலி நெடுமையும் அமைத்து உள் தூர்ந்தே
ஒன்பது தந்திரி உறுத்தி நிலை நீக்கி – கல்லாடம்:2 82/14,15

மேல்

தூர (1)

தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி – கல்லாடம்:2 22/11

மேல்

தூவல் (1)

கொக்கின் தூவல் அப்புறம் ஆக – கல்லாடம்:2 16/11

மேல்

தூவி (4)

தூவி அம் தோகை வெள் ஓதிமம் தொடர் உழை – கல்லாடம்:2 7/16
ஆய் மலர் தெரிந்திட்டு வான் பலி தூவி
தெய்வம் பராய மெய்யரும் திருவினர் – கல்லாடம்:2 15/12,13
சிறை விரி தூவி செம் கால் அன்னம் – கல்லாடம்:2 34/22
இரு நால் திசையும் உண் பலி தூவி
நால் நூல் மாக்கள் நணி குறி சொற்று – கல்லாடம்:2 47/6,7

மேல்

தூவு-மின் (1)

பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின் – கல்லாடம்:2 84/11

மேல்

தூற்ற (1)

களவு அலர் தூற்ற தளவு கொடி நடுங்க – கல்லாடம்:2 20/4

மேல்

தூற்றி (1)

இலவு அலர் தூற்றி அனிச்சம் குழைத்து – கல்லாடம்:2 90/1

மேல்

தூற்று-மின் (1)

சுண்ணமும் தாதும் துணை துகள் தூற்று-மின்
கரும் பெயல் குளிரின் களி மயில் என்ன – கல்லாடம்:2 84/12,13

மேல்

தூற்றும் (2)

தூற்றும் மறு ஒழிந்த ஏற்றத்தானும் – கல்லாடம்:2 19/33
அம்பல் தூற்றும் இவ் ஊர் அடக்கி – கல்லாடம்:2 64/9

மேல்