கா – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
காக்க 1
காக்கவும் 1
காகளம் 1
காகுளி 1
காசம் 1
காசி 1
காஞ்சி 1
காஞ்சு 1
காட்சி 7
காட்சிக்கு 1
காட்சிகொண்டு 1
காட்சிகொள 1
காட்சியது 3
காட்சியள் 1
காட்சியில் 1
காட்சியும் 3
காட்சியுள் 2
காட்ட 4
காட்டலின் 3
காட்டலும் 1
காட்டாது 1
காட்டி 15
காட்டிய 4
காட்டிவைத்து 1
காட்டின 1
காட்டினும் 1
காட்டினை 3
காட்டு 3
காட்டும் 12
காட்டுவல் 1
காட்டுழி 1
காட்டை 2
காடு 5
காண் 1
காண்-மதி 1
காண்-மின் 2
காண்க 6
காண்குவர் 1
காண்டமும் 1
காண்டி 2
காண்பன் 1
காண்பான் 1
காண 8
காணா 5
காணாது 4
காணி 1
காணிகொடுத்த 1
காணிகொள் 1
காணியில் 1
காணின் 1
காணும் 8
காணேன் 1
காத்த 1
காத்தலின் 2
காத்து 1
காத்தும் 1
காதல் 2
காதலர் 2
காதலில் 1
காதலின் 1
காந்தள் 1
காநம் 1
காப்பு 3
காப்புற 1
காம்பு 2
காம்பே 1
காம 3
காமத்து 1
காமம் 1
காமம்கொண்டு 1
காமமும் 3
காமர் 2
காமரு 1
காமனை 1
காய் 10
காய்க்கு 1
காய்த்து 1
காய்ந்த 1
காய்ந்து 1
காய்ந்தோன் 1
காயவும் 1
காயா 1
கார் 28
காரணன் 2
காரான் 1
காருடன் 1
கால் 59
கால 3
காலத்து 1
காலம் 6
காலமும் 3
காலமுற்று 1
காலன் 1
காலனை 2
காலால் 2
காலில் 1
காலினன் 1
காலுடன் 1
காலும் 5
காலே 1
காலை 7
காவதம் 1
காவல் 7
காவல்கொண்டு 1
காவல்கொள் 1
காவல்செய் 1
காவலனை 1
காவலாக 1
காவலானும் 1
காவலில் 1
காவலும் 1
காவி 1
காவில் 1
காவினும் 1
காழ் 1
காளி 3
காளை 2
காளையன் 1
காற்ற 1
காற்றியும் 1
காற்றின் 1
காற்று 3
காற்றை 1
கான் 3
கான்யாற்று 1
கான்யாறு 1
கான்ற 5
கான்றது 1
கான்றிடு 1
கான்று 2
கானகம் 1
கானத்து 1
கானம் 3
கானல் 3
கானவன் 1
கானிடை 1
கானினும் 1

கா (1)

நெடு மரத்து இளம் கா நிலைத்தலானும் – கல்லாடம்:2 81/5

மேல்

காக்க (1)

வேதியன் படைக்க மாலவன் காக்க
பெறாததோர் திரு உருத்தான் பெரிது நிறுத்தி – கல்லாடம்:2 28/4,5

மேல்

காக்கவும் (1)

காக்கவும் குரிசில் கருத்துறும் போலும் – கல்லாடம்:2 52/9

மேல்

காகளம் (1)

காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை – கல்லாடம்:2 69/20

மேல்

காகுளி (1)

நாசி காகுளி வெடி குரல் வெள்ளை – கல்லாடம்:2 21/45

மேல்

காசம் (1)

மத்தக குழிவு காசம் இலைச்சுமி – கல்லாடம்:2 98/23

மேல்

காசி (1)

திரு நகர் காசி பதியகத்து என்றும் – கல்லாடம்:2 87/36

மேல்

காஞ்சி (1)

பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே – கல்லாடம்:2 59/9

மேல்

காஞ்சு (1)

மாங்கி சகந்தி வளர் காஞ்சு உண்டை என்று – கல்லாடம்:2 98/43

மேல்

காட்சி (7)

மீளா காட்சி தருதி இன்று எனவே – கல்லாடம்:1 2/65
மை_இல் காட்சி கொய் உளை நிற்ப – கல்லாடம்:2 17/49
கண்ட காட்சி சேணின் குறியோ – கல்லாடம்:2 22/1
கண்டன கவரும் காட்சி போல – கல்லாடம்:2 42/19
கண்டவர் காணா காட்சி செய் நகரினும் – கல்லாடம்:2 52/16
யோசனை அடுத்த மாசறு காட்சி
பளிங்க பொருப்பின் திடர் கொள் மூதூர் – கல்லாடம்:2 61/4,5
தகரம் கமழும் நெடு வரை காட்சி
உற்றனள் ஆதல் வேண்டும் – கல்லாடம்:2 98/56,57

மேல்

காட்சிக்கு (1)

மலை வரும் காட்சிக்கு உரிய ஆகலின் – கல்லாடம்:2 2/3

மேல்

காட்சிகொண்டு (1)

இன்னும் காணா காட்சிகொண்டு இருந்த – கல்லாடம்:2 21/22

மேல்

காட்சிகொள (1)

கண் நுழையாது காட்சிகொள தோற்றிய – கல்லாடம்:2 28/13

மேல்

காட்சியது (3)

கண்ணுற உருப்பெறும் காட்சியது என்ன – கல்லாடம்:2 62/3
கண் முகம் காட்டிய காட்சியது என்ன – கல்லாடம்:2 63/2
கலை கலை சிந்திய காட்சியது என்ன – கல்லாடம்:2 68/15

மேல்

காட்சியள் (1)

பொறை அழி காட்சியள் ஆகி – கல்லாடம்:2 48/21

மேல்

காட்சியில் (1)

துணை மீன் காட்சியில் விளை கரு என்ன – கல்லாடம்:2 5/27

மேல்

காட்சியும் (3)

கண்டு நின்று உவந்த காட்சியும் இதுவே – கல்லாடம்:2 6/28
விளக்கமும் புதுமையும் அளப்பு_இல் காட்சியும்
வேறு ஒப்பு எடுத்துக்கூறுவது நீக்கமும் – கல்லாடம்:2 18/11,12
இளமையும் இன்பமும் வளனும் காட்சியும்
பின்புற நேடின முன்பவை அன்றி – கல்லாடம்:2 20/42,43

மேல்

காட்சியுள் (2)

ஐங்கணை_கிழவன் காட்சியுள் மகிழ – கல்லாடம்:2 19/10
கண் எனும் தெய்வ காட்சியுள் பட்டோர் – கல்லாடம்:2 33/26

மேல்

காட்ட (4)

திரு மலர் எடுத்து கொன்றை காட்ட
இறை வளை நில்லாது என்பன நிலைக்க – கல்லாடம்:2 20/9,10
பழுதறு தெய்வம் காட்ட பண்டையின் – கல்லாடம்:2 85/1
அகில் சுடு பெரும் புனம் உழு பதன் காட்ட
வெறி விழி சவரர் மா அடி ஒற்ற – கல்லாடம்:2 94/21,22
அன்றியும் இமையா கண் எனல் காட்ட
ஆயிரம் பணாடவி அரவு கடு வாங்க – கல்லாடம்:2 95/5,6

மேல்

காட்டலின் (3)

பரப்பி காட்டலின் பதுமன் ஆகியும் – கல்லாடம்:2 9/2
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின்
வளர் குறி மயங்கா வணிகன் ஆகியும் – கல்லாடம்:2 9/14,15
அருள் வழி காட்டலின் இரு விழி ஆகியும் – கல்லாடம்:2 11/20

மேல்

காட்டலும் (1)

பொருத்தலும் பிரித்தலும் பொரு பகை காட்டலும்
உட்பகை அமைத்தலும் உணர்ந்து சொல் பொருத்தலும் – கல்லாடம்:2 3/2,3

மேல்

காட்டாது (1)

வயிறு குழிவாங்கி அழு முகம் காட்டாது
நாசி காகுளி வெடி குரல் வெள்ளை – கல்லாடம்:2 21/44,45

மேல்

காட்டி (15)

குன்றா வாய்மை நின்று நிலை காட்டி
தங்குவன கண்டும் வலி மனம் கூடி – கல்லாடம்:2 4/13,14
வடமீன் காட்டி விளக்கு அணி எடுத்து – கல்லாடம்:2 18/32
எழுந்து காட்டி பாடுசெய் கதிர் போல் – கல்லாடம்:2 20/19
காட்டி உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது – கல்லாடம்:2 21/42
அரும் பெறல் உளதாம் பெரும்பதம் காட்டி
எரியிடை மாய்ந்த கனல் விழி அரக்கர்க்கு – கல்லாடம்:2 25/34,35
மெய்யினை பரப்பி பொய்யினை காட்டி
அல்குல் இடை என நெஞ்சு உழல கொடுத்து – கல்லாடம்:2 33/7,8
நீர்_அரமகளிர் செவ் வாய் காட்டி
பசும் தாள் சே கொள் ஆம்பல் மலர – கல்லாடம்:2 38/16,17
கார் உடல் காட்டி கண்ட கண் புதைய – கல்லாடம்:2 43/22
தாரியில் காட்டி தரும் சாதாரி – கல்லாடம்:2 43/31
ஒன்றிய திருவுரு நின்று நனி காட்டி
பேர் அருள் கொடுத்த கூடல் அம் பதியோன் – கல்லாடம்:2 58/33,34
எழில் மதி காட்டி நிறை வளை சூல் உளைந்து – கல்லாடம்:2 74/18
கடு வினை அங்குரம் காட்டி உள் அழுக்காறு – கல்லாடம்:2 83/1
கரம் கால் காட்டி தலையம் இயக்கி – கல்லாடம்:2 85/26
உயிர் பிரிவுற்றமை காட்டி அவர் நீங்க – கல்லாடம்:2 90/20
கிளையில் காட்டி ஐ முறை கிளத்தி – கல்லாடம்:2 100/14

மேல்

காட்டிய (4)

ஆடி நிழல் காட்டிய பீடதுவானும் – கல்லாடம்:2 19/16
ஈது என காட்டிய மயல் மடவரற்கு – கல்லாடம்:2 44/13
கண் முகம் காட்டிய காட்சியது என்ன – கல்லாடம்:2 63/2
காவல் காட்டிய வழியும் – கல்லாடம்:2 77/21

மேல்

காட்டிவைத்து (1)

காளி முன் காவல் காட்டிவைத்து ஏகும் – கல்லாடம்:2 7/25

மேல்

காட்டின (1)

கொன்றை புறவு அகற்றி நின்ற இருள் காட்டின
சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர் போல – கல்லாடம்:2 1/21,22

மேல்

காட்டினும் (1)

மகிழ் நடம் பேய் பெறும் வடவன காட்டினும்
அரு மறை முடியினும் அடியவர் உளத்தினும் – கல்லாடம்:2 76/16,17

மேல்

காட்டினை (3)

பாசடை குவளை சுழல் மண காட்டினை
கரு வரி செம் கண் வரால் இனம் கலக்க – கல்லாடம்:2 54/24,25
நெடும் சடை காட்டினை அடும் தீ கொழுந்து என – கல்லாடம்:2 55/6
அலகை நெட்டு இரதம் புனல் என காட்டினை
வன்மீன் நெடும் கயல் பொது வினையகத்து – கல்லாடம்:2 69/17,18

மேல்

காட்டு (3)

செம் கண் குறவர் கரும் காட்டு வளர்த்த – கல்லாடம்:1 2/37
குவளை அம் காட்டு குருகொடு புதாவே – கல்லாடம்:2 59/17
நெய்தல் பாசடை நெடும் காட்டு ஒளிக்கும் – கல்லாடம்:2 82/37

மேல்

காட்டும் (12)

கடல் திரை சிறுக மலக்கு துயர் காட்டும்
உடல் எனும் வாயில் சிறை நடுவு புக்கு – கல்லாடம்:1 1/29,30
இமையோர்புரத்தை நிறை மணம் காட்டும்
கூடல் அம் பதி அகம் வீடுபெற இருந்தோன் – கல்லாடம்:2 22/50,51
சருக்கம் காட்டும் அரு மறை சொல்லி – கல்லாடம்:2 33/12
கடைந்த செம்பவள தொத்துடன் காட்டும்
இரும்பு கவைத்து அன்ன கரும் கோட்டு புன்னை – கல்லாடம்:2 34/18,19
பழ உடல் காட்டும் தீரா பெரும் பழி – கல்லாடம்:2 35/9
ஓருடல்செய்து மறு மனம் காட்டும்
மாண் இழை மகளிர் வயின் வைகுதலால் – கல்லாடம்:2 37/7,8
தமக்கு என காட்டும் ஒளி கண் கெடலும் – கல்லாடம்:2 69/31
தேவர் காட்டும் பாசறையினுமே – கல்லாடம்:2 77/22
நல் பெரும் தூது காட்டும்
அற்புத கோப திரு வரவு அதற்கே – கல்லாடம்:2 84/21,22
சென்னி தூங்கி நின்றது காட்டும்
நெடு மரை அதள் வேய் சில் இட குரம்பையில் – கல்லாடம்:2 96/24,25
ஆம் என காட்டும் அணி இருள் மின்னலின் – கல்லாடம்:2 97/7
கானம் காட்டும் புள் அடி துணையினர் – கல்லாடம்:2 100/12

மேல்

காட்டுவல் (1)

கண்டு உடல் இடைந்தன காட்டுவல் காண்-மதி – கல்லாடம்:2 71/24

மேல்

காட்டுழி (1)

கவைஇய கற்பினை காட்டுழி இதுவே – கல்லாடம்:2 6/22

மேல்

காட்டை (2)

கட்புலன் காணாது காட்டை கெட உந்தலின் – கல்லாடம்:2 36/11
காட்டை உள் இம்பர் காண – கல்லாடம்:2 89/24

மேல்

காடு (5)

குழல் காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய் – கல்லாடம்:1 2/36
நாடு கரிந்து அன்ன காடு கடந்து இயங்கி – கல்லாடம்:2 3/6
பாசடை நெடும் காடு காணிகொள் நீர்நாய் – கல்லாடம்:2 27/19
பைம் காடு நகைத்த எண் மலர் கொய்தும் – கல்லாடம்:2 28/29
பரு காடு உறுத்தி பலி முதல் பராவ – கல்லாடம்:2 93/3

மேல்

காண் (1)

காண் குறி பெருத்து கச்சது கடிந்தே – கல்லாடம்:2 45/4

மேல்

காண்-மதி (1)

கண்டு உடல் இடைந்தன காட்டுவல் காண்-மதி
மண் உடல் பசந்து கறுத்தது விண்ணமும் – கல்லாடம்:2 71/24,25

மேல்

காண்-மின் (2)

கண்ணிடை உளத்திடை காண்-மின் கருது-மின் – கல்லாடம்:2 10/10
கலத்தும் என்று எழு-மின் கண் அளி காண்-மின்
வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு – கல்லாடம்:2 10/13,14

மேல்

காண்க (6)

குட கோ சேரன் கிடைத்து இது காண்க என – கல்லாடம்:2 11/26
பொன் உருள் வையம் போவது காண்க
ஆறலை எயினர் அமர் கலிக்கு அழுங்கினை – கல்லாடம்:2 69/10,11
கழுநீர் களைநர்-தம் கம்பலை காண்க
தழல் தலை பழுத்த பரல் முரம்பு அடுத்தனை – கல்லாடம்:2 69/13,14
குளிர் வெண் தரள குவால் இவை காண்க
அலகை நெட்டு இரதம் புனல் என காட்டினை – கல்லாடம்:2 69/16,17
கிடங்கு என பெயரிய கரும் கடல் காண்க
காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை – கல்லாடம்:2 69/19,20
ஈங்கு இது காண்க முத்து எழில் நகை கொடியே – கல்லாடம்:2 69/35

மேல்

காண்குவர் (1)

ஒருமை காண்குவர் துகிர் கிளை கொடியே – கல்லாடம்:2 3/22

மேல்

காண்டமும் (1)

துருத்தி வாய் அதுக்கிய குங்கும காண்டமும்
குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும் – கல்லாடம்:2 50/16,17

மேல்

காண்டி (2)

விரித்து கூறி பொருத்தமும் காண்டி
ஈயா மாந்தர் பொருள் தேய்ந்து என்ன – கல்லாடம்:2 25/43,44
பொருத்தம் காண்டி வண்டு ஆரும் – கல்லாடம்:2 50/34

மேல்

காண்பன் (1)

சென்று அழியாது நின்று அயர் காண்பன்
உறுவதும் இ பயன் அன்றேல் – கல்லாடம்:2 56/27,28

மேல்

காண்பான் (1)

ஆனா இன்னல் அழிபட காண்பான்
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பி – கல்லாடம்:2 47/3,4

மேல்

காண (8)

புவனம் காண பொருளொடு பொலிந்தோய் – கல்லாடம்:1 2/25
நெடுமலை பெற்ற ஒரு மகள் காண
நான்முக விதியே தாளம் தாக்க – கல்லாடம்:2 21/27,28
பாங்குடன் காண தோன்றி உள் நின்று – கல்லாடம்:2 22/48
மண்ணவர் காண வட்டணை வாள் எடுத்து – கல்லாடம்:2 49/8
அரும் தமிழ் கூடல் பெரும் தவர் காண
வெள்ளியம்பலத்துள் துள்ளிய ஞான்று – கல்லாடம்:2 76/19,20
திரு பெறும் அயலவர் காண
வரப்பெறு மா தவம் பெரிது உடையேமே – கல்லாடம்:2 80/33,34
தனி கொடி காண எவ்விடத்து உயிர் தழைப்ப – கல்லாடம்:2 85/39
காட்டை உள் இம்பர் காண
தோட்டி நின்று அளிக்கும் தொன்மை அது பெறுமே – கல்லாடம்:2 89/24,25

மேல்

காணா (5)

இன்னும் காணா காட்சிகொண்டு இருந்த – கல்லாடம்:2 21/22
கண்டவர் காணா காட்சி செய் நகரினும் – கல்லாடம்:2 52/16
அருள் கரை காணா அன்பு எனும் பெரும் கடல் – கல்லாடம்:2 66/15
கனவினும் காணா கண்ணிலர் துயரும் – கல்லாடம்:2 75/22
கனவிலும் காணா புனைவரும் திருவடி – கல்லாடம்:2 98/2

மேல்

காணாது (4)

பவள வாயில் சுவை காணாது
பொன் குட முகட்டு கரு மணி அமைத்து என – கல்லாடம்:2 5/9,10
பேணா உள்ளம் காணாது நடந்து – கல்லாடம்:2 22/44
கட்புலன் காணாது காட்டை கெட உந்தலின் – கல்லாடம்:2 36/11
கண்ணினில் காணாது உளத்தினில் புணராது – கல்லாடம்:2 58/23

மேல்

காணி (1)

காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை – கல்லாடம்:2 44/20

மேல்

காணிகொடுத்த (1)

தமிழ் எனும் கடலை காணிகொடுத்த
பொதிய பொருப்பும் நெடு முதுகு வருந்தி – கல்லாடம்:2 17/17,18

மேல்

காணிகொள் (1)

பாசடை நெடும் காடு காணிகொள் நீர்நாய் – கல்லாடம்:2 27/19

மேல்

காணியில் (1)

நிலை விட்டு படராது காணியில் நிலைக்க – கல்லாடம்:1 1/17

மேல்

காணின் (1)

தெளி வேல் கண் குறுந்தொடியினர் காணின்
நின்-பால் அளியும் நீங்கி – கல்லாடம்:2 95/41,42

மேல்

காணும் (8)

கள்வரை காணும் உள்ளம் போல – கல்லாடம்:2 2/21
கோடா மறைமொழி நீடுற காணும்
கதிர் உடல் வழி போய் கல் உழை நின்றோர் – கல்லாடம்:2 6/5,6
அறிவோர் காணும் குறியாய் இருந்தன – கல்லாடம்:2 18/13
முகனுற காணும் கரியோர் போல – கல்லாடம்:2 18/30
சிறு முகம் காணும் ஆடி ஆகி – கல்லாடம்:2 22/20
கவையா உளத்து காணும் கழலும் – கல்லாடம்:2 58/18
கல்வியில் அறிவில் காணும் முடியும் – கல்லாடம்:2 58/19
காணும் நின் கனவினுள் கவர் மனத்தவரை – கல்லாடம்:2 68/10

மேல்

காணேன் (1)

புனைய காணேன் சொல் ஆயினவே – கல்லாடம்:2 20/46

மேல்

காத்த (1)

இரண்டு பெயர் காத்த தோலா கற்பு – கல்லாடம்:2 18/29

மேல்

காத்தலின் (2)

அவ் உயிர் எவ் உயிர் அனைத்தும் காத்தலின்
செவ்வி கொள் கரு முகில் செல்வன் ஆகியும் – கல்லாடம்:2 9/3,4
இரு நிலம் காத்தலின் மதி உடை வேந்தும் – கல்லாடம்:2 56/8

மேல்

காத்து (1)

வளனில் காத்து வருவன அருளும் – கல்லாடம்:2 41/23

மேல்

காத்தும் (1)

நெடும் கால் குற்றுழி இதண் உழை காத்தும்
தேவர்_கோமான் சிறை அரி புண்ணினுக்கு – கல்லாடம்:2 28/16,17

மேல்

காதல் (2)

அளவா காதல் கைம்மிக்கு அணைந்தனள் – கல்லாடம்:2 22/22
வெற்பன் காதல் கால் உலை வேலையில் – கல்லாடம்:2 36/9

மேல்

காதலர் (2)

மலர் கழல் வழுத்தும் நம் காதலர் பாசறை – கல்லாடம்:2 71/15
காதலர் முனை படை கனன்று உடற்றும் எரியால் – கல்லாடம்:2 74/6

மேல்

காதலில் (1)

வற்றா காதலில் கொண்ட மதி அன்றி – கல்லாடம்:2 20/3

மேல்

காதலின் (1)

சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின்
கரும் கை வெண் கோட்டு சிறு கண் பெரும் களிறு – கல்லாடம்:2 25/2,3

மேல்

காந்தள் (1)

காந்தள் அம் கடுக்கை கனல் தனம் மலர – கல்லாடம்:2 94/2

மேல்

காநம் (1)

முரன்று எழு காநம் முயன்று வாது இயைந்த – கல்லாடம்:2 43/24

மேல்

காப்பு (3)

ஐ_வாய் காப்பு விட்டு அணி பூண் அணிந்து – கல்லாடம்:2 2/10
மணி மிளிர் பெரும் கட்கு இமை காப்பு என்ன – கல்லாடம்:2 7/2
சுடு பொடி காப்பு உடல் துளங்க சுரி குரல் – கல்லாடம்:2 88/20

மேல்

காப்புற (1)

காப்புற துயிற்றும் கடி நகர் கூடல் – கல்லாடம்:2 46/6

மேல்

காம்பு (2)

காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்தி – கல்லாடம்:2 17/29
இட்டுறை காம்பு என விட்டு எழு காம்பே – கல்லாடம்:2 81/32

மேல்

காம்பே (1)

இட்டுறை காம்பு என விட்டு எழு காம்பே
மரகதம் சினைத்த சிறை மயில் குலமே – கல்லாடம்:2 81/32,33

மேல்

காம (3)

தளை கரை கடந்த காம கடல் உள் – கல்லாடம்:2 5/3
கொழுநர் கூடும் காம உததியை – கல்லாடம்:2 19/7
தணந்தோர் உளத்தில் காம தீ புக – கல்லாடம்:2 38/8

மேல்

காமத்து (1)

மயக்கம் நிறை காமத்து இயக்கம் கொண்டு – கல்லாடம்:2 17/32

மேல்

காமம் (1)

காமம் ஆறுள் கவர்தரும் வெகுளுநர் – கல்லாடம்:2 97/9

மேல்

காமம்கொண்டு (1)

கட்டு உடை சூர் உடல் காமம்கொண்டு
பற்றி உட்புகுந்து பசும் கடல் கண்டு – கல்லாடம்:2 8/4,5

மேல்

காமமும் (3)

சநந பீழையும் தள்ளா காமமும்
தன் படு துயரமும் அடைவு கெட்டு இறத்தலும் – கல்லாடம்:1 2/60,61
குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற – கல்லாடம்:2 94/27
இன்பமும் இயற்கையும் இகழா காமமும்
அன்பும் சூளும் அளியுற தந்து என் – கல்லாடம்:2 100/31,32

மேல்

காமர் (2)

தாமரை உடைத்த காமர் சேவடி – கல்லாடம்:2 68/32
தாமரை குவித்த காமர் சீறடி – கல்லாடம்:2 90/2

மேல்

காமரு (1)

காமரு கூடற்கு இறைவன் கழல் இணை – கல்லாடம்:2 25/39

மேல்

காமனை (1)

காமனை அயனை நாம காலனை – கல்லாடம்:2 17/38

மேல்

காய் (10)

வளை காய் விட்ட புளி அருந்தாது – கல்லாடம்:2 5/6
தோகை மண் புடைக்கும் காய் புலி மாய்க்க – கல்லாடம்:2 6/10
சே இதழ் இலவத்து உடை காய் பஞ்சி – கல்லாடம்:2 7/18
நிரைநிரை நாற்றி நெடும் காய் மயிர் அமைத்து – கல்லாடம்:2 14/6
மருங்கு கூண்டு எழுந்து கரும் காய் நெருங்கி – கல்லாடம்:2 21/20
நடு உடல் வரிந்த கொடி காய் பத்தர் – கல்லாடம்:2 40/3
பால் முக களவின் குறும் காய் பச்சிணர் – கல்லாடம்:2 43/14
கடுக்கை சிறு காய் அமைத்த வால் கருப்பை – கல்லாடம்:2 63/12
காய் பார் உகுத்த விதி ஒத்ததுவே – கல்லாடம்:2 83/33
வேலி அம் குறும் சூல் விளை காய் பஞ்சு இனம் – கல்லாடம்:2 88/1

மேல்

காய்க்கு (1)

படர் காய்க்கு அணைந்த புன் கூழை அம் குறுநரி – கல்லாடம்:2 90/18

மேல்

காய்த்து (1)

வெறி மறி மடை குரல் தோல் காய்த்து என்ன – கல்லாடம்:2 92/1

மேல்

காய்ந்த (1)

காலனை காய்ந்த காலினன் கூடல் – கல்லாடம்:2 54/9

மேல்

காய்ந்து (1)

இரு_நான்கு குற்றம் அடி அற காய்ந்து இவ் – கல்லாடம்:2 40/6

மேல்

காய்ந்தோன் (1)

கூடற்கு இறையவன் காலன் காய்ந்தோன்
திருநடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை – கல்லாடம்:2 90/12,13

மேல்

காயவும் (1)

கடல் மகள் உள் வைத்து வடவை மெய் காயவும்
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும் – கல்லாடம்:2 76/1,2

மேல்

காயா (1)

காயா கண்கொள முல்லை எயிறு உறழ – கல்லாடம்:2 94/14

மேல்

கார் (28)

கார் விரித்து ஓங்கிய மலை தலை கதிர் என – கல்லாடம்:1 2/23
செடி தலை கார் உடல் இடி குரல் கிராதர் – கல்லாடம்:2 6/12
சே இதழ் முளரியும் கார் இதழ் குவளையும் – கல்லாடம்:2 6/32
கார் உடல் சிறுநகை குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 10/20
ஆருயிர் கவரும் கார் உடல் செம் கண் – கல்லாடம்:2 15/19
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில் – கல்லாடம்:2 17/35
நெடும் கார் கிடந்து படும் புனல் பிழியும் – கல்லாடம்:2 19/23
இட்ட வெம் கொடும் சிறை பட்ட கார் குலம் – கல்லாடம்:2 20/33
வளைத்த நெடும் கார் புனத்து இருவீரும் – கல்லாடம்:2 22/31
துறை நீர் ஆட பரந்த கார் மதமும் – கல்லாடம்:2 26/22
புயல் கார் பாசடை எண்பட படர்ந்த – கல்லாடம்:2 27/1
கார் உடல் பெற்ற தீ விழி குறளினை – கல்லாடம்:2 33/17
பொன்மலை பிடுங்கி கார் முகம் என்ன – கல்லாடம்:2 33/22
கார் உடல் பிறை எயிற்று அரக்கனை கொன்று – கல்லாடம்:2 35/7
பெரும் கடல் முகந்து வயிறு நிறை நெடும் கார்
விண் திரிந்து முழங்கி வீழாதாக – கல்லாடம்:2 37/2,3
பொங்கர் கிடந்த சூல் கார் குளிறலும் – கல்லாடம்:2 39/11
கார் உடல் காட்டி கண்ட கண் புதைய – கல்லாடம்:2 43/22
வெண் கார் பெய்யும் நாள் குறித்து உழுநரும் – கல்லாடம்:2 47/10
புனம் பட எறிந்த கார் அகில் தூமமும் – கல்லாடம்:2 50/19
சின்னக்குறளும் செழும் கார் போல – கல்லாடம்:2 52/24
வெண் கார் கழனி குருகு எழ புகுந்து – கல்லாடம்:2 63/11
வானவர் இறைவன் கடவு கார் பிடித்து – கல்லாடம்:2 67/16
வட்டம் முக்கோணம் சதுரம் கார் முகம் – கல்லாடம்:2 77/10
பேர் ஒளி நாயகன் கார் ஒளி மிடற்றோன் – கல்லாடம்:2 80/10
பெரும் கார் கரும் கடு அரும்பிய மிடற்றோன் – கல்லாடம்:2 81/25
இவை முதல் மணக்க எழுந்த கார் கண்டை – கல்லாடம்:2 94/30
கார் உடல் அனுங்கிய பைம் கண் கறையடி – கல்லாடம்:2 96/23
புனம் எரி கார் அகில் புகை பல கொள்ளும் – கல்லாடம்:2 100/3

மேல்

காரணன் (2)

மா தவ கூடல் மதி சடை காரணன்
இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என – கல்லாடம்:2 73/12,13
கணிச்சி அம் கைத்தலத்து அருள் பெரும் காரணன்
உலகு உயிர் மகவு உடை பசும்_கொடிக்கு ஒரு பால் – கல்லாடம்:2 89/8,9

மேல்

காரான் (1)

காரான் இனங்கள் சேடு எறிந்து உழக்கும் – கல்லாடம்:2 90/11

மேல்

காருடன் (1)

காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில் – கல்லாடம்:2 46/13

மேல்

கால் (59)

ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும் – கல்லாடம்:1 1/32
கால் முகம் ஏற்ற துளை கொள் வாய் கறங்கும் – கல்லாடம்:1 1/33
வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழல் கால்
குழந்தை அன்பினொடு சென்னி-தலை கொள்ளுதும் – கல்லாடம்:1 2/56,57
கறங்கு கால் அருவி பரங்குன்று உடுத்த – கல்லாடம்:2 1/8
நெடும் சுரம் நீங்க தம் கால்
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே – கல்லாடம்:2 6/43,44
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே – கல்லாடம்:2 6/44
புவி புனல் அனல் கால் மதி புலவோன் என – கல்லாடம்:2 10/15
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின் – கல்லாடம்:2 14/2
இரு கால் முகனிற்கு அருகா துரந்து – கல்லாடம்:2 17/51
பங்கு உடை செம் கால் பாட்டு அளி அரி பிடர் – கல்லாடம்:2 18/2
கைஞ்ஞின்றவன் செம் கால் கண்டவர் போல – கல்லாடம்:2 18/10
இலவு அலர் வாட்டிய செம் கால் பிடித்து – கல்லாடம்:2 18/27
என் முகம் அளக்கும் கால் அ குறியை – கல்லாடம்:2 18/36
நீர்நிலை நின்று கால் கறுத்து எழுந்து – கல்லாடம்:2 21/1
புள் கால் தும்புரு மணம் கந்திருவர் – கல்லாடம்:2 21/35
கால் தலை கொள்ளா கையினர் போல – கல்லாடம்:2 21/63
எண்தக போற்றி நின் கால் வணங்குதுமே – கல்லாடம்:2 21/66
கரும் கால் கவணிடை செம் மணி வைத்து – கல்லாடம்:2 22/33
ஒரு கால் முன் வைத்து இரு கால் வளைப்ப – கல்லாடம்:2 25/25
ஒரு கால் முன் வைத்து இரு கால் வளைப்ப – கல்லாடம்:2 25/25
பண் கால் உழவர் பகடு பிடர் பூண்ட – கல்லாடம்:2 27/24
நெடும் கால் குற்றுழி இதண் உழை காத்தும் – கல்லாடம்:2 28/16
மறு அறு செம் மணி கால் கவண் நிறுத்தி – கல்லாடம்:2 28/24
எதிர் சொல் கேட்ப கால் புக திகைத்த – கல்லாடம்:2 28/26
கால் கொடுத்து அன்ன கந்திகள் நிமிர்ந்து – கல்லாடம்:2 33/24
குழி விழி பிறழ் பல் தெற்றல் கரும் கால்
தாளி போந்தின் தரு மயிர் பெரும் தலை – கல்லாடம்:2 34/2,3
சிறை விரி தூவி செம் கால் அன்னம் – கல்லாடம்:2 34/22
வெற்பன் காதல் கால் உலை வேலையில் – கல்லாடம்:2 36/9
நெடும் கால் பாய்ந்து படுத்த ஒண் தொழில் – கல்லாடம்:2 37/19
தாய் கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள் – கல்லாடம்:2 40/14
கரும் கால் மள்ளர் உழவ சேடியர் – கல்லாடம்:2 42/25
புள் கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த – கல்லாடம்:2 43/15
மலைய தமிழ் கால் வாவியுள் புகுந்து – கல்லாடம்:2 51/5
கால் படை கொடியினன் கருணையொடு அமர்ந்த – கல்லாடம்:2 61/11
அலவன் கவை கால் அன்ன வெள் அலகும் – கல்லாடம்:2 67/5
பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக – கல்லாடம்:2 69/3
மற்ற தன் சேக்கையுள் வதிபெறும் செம் கால்
வெள் உடல் ஓதிமம் தன்னுடை பெடை என – கல்லாடம்:2 74/12,13
கால் வழி இறந்து பாசடை பூத்த – கல்லாடம்:2 74/16
பைம் கால் தடவி செம் கயல் துரந்து உண்டு – கல்லாடம்:2 78/2
செற்றம் நின் புகைவர் இ கால் தீண்டலையே – கல்லாடம்:2 78/29
இரு கால் கவணிற்கு எரி மணி சுமந்த – கல்லாடம்:2 81/43
நெடும் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே – கல்லாடம்:2 81/44
தோள் கால் வதிந்து தொழிற்பட தோன்றும் – கல்லாடம்:2 82/17
அரவ பசும் தலை அரும்பு அவிழ் கணை கால்
நெய்தல் பாசடை நெடும் காட்டு ஒளிக்கும் – கல்லாடம்:2 82/36,37
கவலையும் கால் குறி கண்டு பொழில் துள்ளும் – கல்லாடம்:2 83/18
கழுவிய திரு மணி கால் பெற்று என்ன – கல்லாடம்:2 84/20
ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து – கல்லாடம்:2 85/21
கரம் கால் காட்டி தலையம் இயக்கி – கல்லாடம்:2 85/26
கரி கால் அன்ன மொந்தை கலித்து இரங்க – கல்லாடம்:2 85/29
நெட்டு உகிர் கரும் கால் தோல் முலை பெரும் பேய் – கல்லாடம்:2 88/15
பேழ் வாய் இடாகினி கால் தொழுது ஏத்தி – கல்லாடம்:2 88/17
இட்ட செம் பந்தர் இடையிடை கால் என – கல்லாடம்:2 88/24
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன் – கல்லாடம்:2 93/23
ஒரு கால் தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த – கல்லாடம்:2 95/15
இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல் சென்மே – கல்லாடம்:2 95/43
கடும் கால் கொற்றத்து அடும் தூதுவர் என – கல்லாடம்:2 96/7
ஒரு கால் இரதத்து எழு பரி பூட்டி – கல்லாடம்:2 96/9
வெறி கண் கவை அடி கடும் கால் மேதி – கல்லாடம்:2 96/20
புற கால் மடித்து குறித்து எறி நிலையம் – கல்லாடம்:2 99/18

மேல்

கால (3)

கால குறி-கொல் அன்றியும் முன்னை – கல்லாடம்:2 70/15
கால குறியை மனம் தடுமாறி – கல்லாடம்:2 70/17
பூதம் ஐந்து உடையும் கால கடையினும் – கல்லாடம்:2 71/9

மேல்

காலத்து (1)

முன் ஒரு காலத்து அடு கொலைக்கு அணைந்த – கல்லாடம்:2 14/25

மேல்

காலம் (6)

அளவியல் மண நிலை பரப்பும் காலம்
தளை கரை கடந்த காம கடல் உள் – கல்லாடம்:2 5/2,3
காலம் கருதி தோன்றி கை குலைப்ப – கல்லாடம்:2 20/7
விளைக்கும் காலம் முளைத்த காலை – கல்லாடம்:2 20/16
காலம் கோடா முறைமுறை தோற்ற – கல்லாடம்:2 23/12
காலம் முடிய கணக்கின் படியே – கல்லாடம்:2 26/7
காலம் கோடா வரை வளர் பண்டம் – கல்லாடம்:2 42/21

மேல்

காலமும் (3)

கொய்யும் காலமும் நாள்பெற குறித்து – கல்லாடம்:2 4/24
மூன்று காலமும் தோன்ற கூற – கல்லாடம்:2 24/8
கல்வியும் திருவும் காலமும் கொடியும் – கல்லாடம்:2 80/18

மேல்

காலமுற்று (1)

காலமுற்று ஒடுங்கும் நீள் முகில் கூட்டமும் – கல்லாடம்:2 99/48

மேல்

காலன் (1)

கூடற்கு இறையவன் காலன் காய்ந்தோன் – கல்லாடம்:2 90/12

மேல்

காலனை (2)

காமனை அயனை நாம காலனை
கண்ணால் உகிரால் மலர் கொள் காலால் – கல்லாடம்:2 17/38,39
காலனை காய்ந்த காலினன் கூடல் – கல்லாடம்:2 54/9

மேல்

காலால் (2)

கண்ணால் உகிரால் மலர் கொள் காலால்
சுட்டும் கொய்தும் உதைத்தும் தணித்த – கல்லாடம்:2 17/39,40
காலால் தடுத்து கனன்று எதிர் கறுத்தும் – கல்லாடம்:2 66/2

மேல்

காலில் (1)

நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்தி – கல்லாடம்:2 99/7

மேல்

காலினன் (1)

காலனை காய்ந்த காலினன் கூடல் – கல்லாடம்:2 54/9

மேல்

காலுடன் (1)

காலுடன் சுழல ஆடிய காளி – கல்லாடம்:2 99/24

மேல்

காலும் (5)

விசைத்த நடை போகும் சகட காலும்
நீட்டி வலி தள்ளிய நெடும் கயிற்று ஊசலும் – கல்லாடம்:1 1/34,35
அலமரு காலும் அலகை தேரும் – கல்லாடம்:1 1/36
எங்கும் முகம் வைத்த கங்கை காலும்
கொண்டு குளிர் பரந்த மங்குல் வாவிக்குள் – கல்லாடம்:2 21/7,8
கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர் காலும்
வெண் கார் பெய்யும் நாள் குறித்து உழுநரும் – கல்லாடம்:2 47/9,10
உடை திரை அருவி ஒளி மணி காலும்
சேயோன் குன்று அக திரு பெறு கூடல் – கல்லாடம்:2 91/3,4

மேல்

காலே (1)

மது மலர் அளைந்த மலய காலே
எழு சிறை தீயும் எருவையும் பருந்தும் – கல்லாடம்:2 59/15,16

மேல்

காலை (7)

மாறனும் புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெரு மறை முளைத்து அருள் வாக்கால் – கல்லாடம்:2 3/11,12
நெடும் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை
முன்னையின் புனைந்தும் முகமன் அளித்தும் – கல்லாடம்:2 13/16,17
பெரும் சேற்று கழனி கரும்பு பெறு காலை
கொள்வோர்க்கு அன்றி அவ் வயல் சாயா – கல்லாடம்:2 17/26,27
விளைக்கும் காலம் முளைத்த காலை
அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும் – கல்லாடம்:2 20/16,17
போகா காலை புணர்க்குவது என் ஆம் – கல்லாடம்:2 30/7
நிலை உடை பெரும் திரு நேர்படு காலை
காலால் தடுத்து கனன்று எதிர் கறுத்தும் – கல்லாடம்:2 66/1,2
அவ்வுழி மாத்திரை அரை எழு காலை
திரு நுதல் கண்ணும் மலைமகள் பக்கமும் – கல்லாடம்:2 87/23,24

மேல்

காவதம் (1)

இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட அ காவதம்
சுற்றுடல் பெற்று துணை பதினாயிரம் – கல்லாடம்:2 83/4,5

மேல்

காவல் (7)

காளி முன் காவல் காட்டிவைத்து ஏகும் – கல்லாடம்:2 7/25
காவல் அடைகிடக்கும் கைதை அம் பொழிலே – கல்லாடம்:2 23/9
தேவர்க்கு அரசனும் காவல் தருவும் – கல்லாடம்:2 24/25
இருவரை காவல் மருவுதல் ஈந்து – கல்லாடம்:2 25/30
பூ விலை தொழில்மகன் காவல் கைவிட்டு – கல்லாடம்:2 57/12
காவல் காட்டிய வழியும் – கல்லாடம்:2 77/21
நாரணன் ஆங்கு அவன் கூர் உடை காவல்
சேர துடைக்கும் பேர் அருள் நாளின் – கல்லாடம்:2 87/31,32

மேல்

காவல்கொண்டு (1)

சேவல் அம் கொடியோன் காவல்கொண்டு இருந்த – கல்லாடம்:2 8/7

மேல்

காவல்கொள் (1)

இளமை நீங்காது காவல்கொள் அமுதம் – கல்லாடம்:2 22/16

மேல்

காவல்செய் (1)

கரும் கழி நெய்தலை காவல்செய் கண் என – கல்லாடம்:2 72/27

மேல்

காவலனை (1)

பேர் அன்பு உருவ பசு காவலனை
உலகினில் தமது முக்குறியாக – கல்லாடம்:2 55/19,20

மேல்

காவலாக (1)

வெள் இறவு உணங்கல் காவலாக
உலகு உயிர் கவரும் கொடு நிலை கூற்றம் – கல்லாடம்:2 67/10,11

மேல்

காவலானும் (1)

தேவர் மூவரும் காவலானும்
தமனிய பராரை சயிலம் ஆகியும் – கல்லாடம்:2 11/4,5

மேல்

காவலில் (1)

காவலில் கவன்றும் கல்வியில் கருதியும் – கல்லாடம்:2 79/24

மேல்

காவலும் (1)

கண்ணனும் காவலும் முனியும் பசுவும் – கல்லாடம்:2 58/12

மேல்

காவி (1)

வாவியில் கேட்ட காவி அம் களத்தினன் – கல்லாடம்:2 50/29

மேல்

காவில் (1)

காவில் மாறி துயில் அழுங்குதற்கே – கல்லாடம்:2 34/25

மேல்

காவினும் (1)

தேரினும் காவினும் அடிக்கடி கண்டு – கல்லாடம்:2 55/35

மேல்

காழ் (1)

நெடு வரை பொங்கர் புனம் எரி காழ் அகில் – கல்லாடம்:2 59/1

மேல்

காளி (3)

காளி முன் காவல் காட்டிவைத்து ஏகும் – கல்லாடம்:2 7/25
கண மயில் நடன் எழ காளி கூத்து ஒடுங்க – கல்லாடம்:2 94/16
காலுடன் சுழல ஆடிய காளி
நாணி நின்று ஒடுங்க தானும் ஓர் நாடகம் – கல்லாடம்:2 99/24,25

மேல்

காளை (2)

நின்றான் உண்டு ஒரு காளை
என்றால் இ தொழில் செய்வது புகழே – கல்லாடம்:2 9/28,29
பாடலம் புது தார் காளை பின் ஒன்றால் – கல்லாடம்:2 40/17

மேல்

காளையன் (1)

நேமி அம் குன்று அகழ் நெடு வேல் காளையன்
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு – கல்லாடம்:2 87/38,39

மேல்

காற்ற (1)

விதிர் ஒளி காற்ற கனல் குளிர் மழுவும் – கல்லாடம்:2 77/15

மேல்

காற்றியும் (1)

புண்ணிய நீறு என பொலி கதிர் காற்றியும்
நின்றனை பெருமதி நின் தொழுது ஏற்கும் – கல்லாடம்:2 13/6,7

மேல்

காற்றின் (1)

ஆற்றாது அழன்று காற்றின் முகம் மயங்கி – கல்லாடம்:2 71/26

மேல்

காற்று (3)

பெரும் காற்று விடுத்த நெடும் புழை கரத்த – கல்லாடம்:1 1/20
ஆற்றாது அலந்து காற்று என கொட்புற்று – கல்லாடம்:2 91/2
கருகி நொய்தாதல் காற்று வெகுளி – கல்லாடம்:2 98/21

மேல்

காற்றை (1)

பாடல் சால் பச்சை கோடக காற்றை
மை_இல் காட்சி கொய் உளை நிற்ப – கல்லாடம்:2 17/48,49

மேல்

கான் (3)

கடும் கான் தள்ளி தடைதரு நெஞ்சம் – கல்லாடம்:2 31/5
பொருள் கான் தடைந்தும் பாசறை பொருந்தியும் – கல்லாடம்:2 79/22
துணையும் இளவலும் தொடர கான் படர்ந்து – கல்லாடம்:2 95/30

மேல்

கான்யாற்று (1)

கடு விசை துரந்த கான்யாற்று ஒலியின் – கல்லாடம்:2 14/22

மேல்

கான்யாறு (1)

கான்யாறு உந்தும் கல் வரை நாட – கல்லாடம்:2 97/4

மேல்

கான்ற (5)

சோறு நறை கான்ற கைதைய மலரும் – கல்லாடம்:2 21/18
பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில் – கல்லாடம்:2 32/3
நிலவு பகல் கான்ற புண்ணிய அருள் பொடி – கல்லாடம்:2 40/1
மணி புறம் கான்ற புரி வளை விம்மி – கல்லாடம்:2 77/4
கிடந்த வல் இரவில் கிளர் மழை கான்ற
அயலும் உம்பரும் அடக்கு புனல் ஒருவி – கல்லாடம்:2 83/15,16

மேல்

கான்றது (1)

எண் திசை கரு இருந்து இன மழை கான்றது
வெண் நகை கரும் குழல் செம் தளிர் சீறடி – கல்லாடம்:2 26/2,3

மேல்

கான்றிடு (1)

கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து – கல்லாடம்:2 80/5

மேல்

கான்று (2)

மூன்று மத நெடும் புனல் கான்று மயல் உவட்டி – கல்லாடம்:2 20/37
கான்று அலர் கடி மலர் கரந்து உறைந்து உண்ணும் – கல்லாடம்:2 82/41

மேல்

கானகம் (1)

கயிலை தென்-பால் கானகம் தனித்த – கல்லாடம்:2 31/6

மேல்

கானத்து (1)

மணத்துடன் விரிந்த கைதை அம் கானத்து
ஓடா வென்றி பொலம் பூண் குரிசில் – கல்லாடம்:2 2/15,16

மேல்

கானம் (3)

கூடிய கானம் அன்பொடு பரவ – கல்லாடம்:2 21/57
கானம் பாடி சுற்றி நின்று ஆட – கல்லாடம்:2 34/5
கானம் காட்டும் புள் அடி துணையினர் – கல்லாடம்:2 100/12

மேல்

கானல் (3)

கூடல் அம் கானல் பெடையுடன் புல்லி – கல்லாடம்:2 49/17
பூ உதிர் கானல் புறம் கண்டனன் என – கல்லாடம்:2 68/12
கரும் கழி கிடந்த கானல் அம் கரை-வாய் – கல்லாடம்:2 82/42

மேல்

கானவன் (1)

பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி – கல்லாடம்:2 48/3

மேல்

கானிடை (1)

சுள்ளி அம் கானிடை சுரர் தொழுது ஏத்த – கல்லாடம்:2 88/26

மேல்

கானினும் (1)

பேர் அழல் கானினும் நாடும் என் உளத்தினும் – கல்லாடம்:2 7/31

மேல்