கை – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கை (24)

தாமரை பழித்த கை மருங்கு அமைத்தோய் – கல்லாடம்:1 2/31
ஒருமையுள் ஒருங்கி இரு கை நெய் வார்த்து – கல்லாடம்:1 2/32
புன குடி கணியர்-தம் மலர் கை ஏடு அவிழ்த்து – கல்லாடம்:2 4/22
கை வளர் கொழுந்து மெய் பொடியாகு என – கல்லாடம்:2 6/20
புகர்_முக புழை கை ஒருவிசை தடிந்தும் – கல்லாடம்:2 13/12
நெடும் கை வேலால் அடும் தொழில் செய்தும் – கல்லாடம்:2 16/34
காலம் கருதி தோன்றி கை குலைப்ப – கல்லாடம்:2 20/7
பூதம் துள்ள பேய் கை மறிப்ப – கல்லாடம்:2 21/58
கை பார்த்து இருக்கும் மட பெடை குருகே – கல்லாடம்:2 23/7
கரும் கை வெண் கோட்டு சிறு கண் பெரும் களிறு – கல்லாடம்:2 25/3
மென் நடை பிடிக்கு கை பிடித்து உதவி – கல்லாடம்:2 25/7
வாய் சொரி மழை மத தழை செவி புழை கை
குழி கண் பரூஉ தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 32/13,14
வச்சிர தட கை வரைப்பகை சுமந்த – கல்லாடம்:2 35/8
மருந்து கை கொண்டு வானவர்க்கு ஊட்டிய – கல்லாடம்:2 41/26
புகர் முக புழை_கை துயில்தரு கனவில் – கல்லாடம்:2 41/50
மானிட மாக்கள் அரக்கி கை பட்டு என – கல்லாடம்:2 42/7
கண்ட நீள் கதுப்பினர் கை குவி பிடித்து – கல்லாடம்:2 45/21
கண் மலர் கவர்ந்தும் கை மலர் குவித்தும் – கல்லாடம்:2 48/18
மெய் அணி அளறா கை முழம் தேய்த்த – கல்லாடம்:2 55/18
பெரு நிலவு எறித்த புகர் முக துளை கை
பொழி மத கறையடி அழிதர கடந்து – கல்லாடம்:2 62/21,22
பனை கை கட_மா எருத்து உறு பூழி – கல்லாடம்:2 68/24
கை விளக்கு எடுத்து கரை இனம் கரைய – கல்லாடம்:2 79/7
கடும் சூள் தந்தும் கை புனை புனைந்தும் – கல்லாடம்:2 85/3
உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி – கல்லாடம்:2 85/16

மேல்

கைக்கிளை (2)

துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப – கல்லாடம்:2 38/15
துத்தம் தாரம் கைக்கிளை அதனுக்கு – கல்லாடம்:2 100/25

மேல்

கைக்கொண்ட (1)

காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை – கல்லாடம்:2 44/20

மேல்

கைஞ்ஞின்றவன் (1)

கைஞ்ஞின்றவன் செம் கால் கண்டவர் போல – கல்லாடம்:2 18/10

மேல்

கைத்தலத்து (1)

கணிச்சி அம் கைத்தலத்து அருள் பெரும் காரணன் – கல்லாடம்:2 89/8

மேல்

கைத்தாயையும் (1)

பின்னர் நின்று எற்ற கைத்தாயையும் பிழைக்குக – கல்லாடம்:2 7/14

மேல்

கைத்திரி (2)

குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க – கல்லாடம்:2 8/12
கயந்தலை அடி என கயிறு அமை கைத்திரி
இரு விரல் உயர்த்தி செரு நிலை இரட்ட – கல்லாடம்:2 8/19,20

மேல்

கைதை (6)

மணத்துடன் விரிந்த கைதை அம் கானத்து – கல்லாடம்:2 2/15
கைதை அம் கரை சேர் பொய்தல் பாவையோடு – கல்லாடம்:2 9/21
முட உடல் கைதை மடல் முறித்திட்டும் – கல்லாடம்:2 9/25
காவல் அடைகிடக்கும் கைதை அம் பொழிலே – கல்லாடம்:2 23/9
கைதை முள் செறிந்த கூர் எயிற்று அரவினை – கல்லாடம்:2 33/16
கைதை வெண் குருகு எழ மொய் திரை உகளும் – கல்லாடம்:2 92/13

மேல்

கைதைகள் (1)

அரவு எயிறு அணைத்த முள் இலை முட கைதைகள்
கான்று அலர் கடி மலர் கரந்து உறைந்து உண்ணும் – கல்லாடம்:2 82/40,41

மேல்

கைதைய (1)

சோறு நறை கான்ற கைதைய மலரும் – கல்லாடம்:2 21/18

மேல்

கைதையுள் (1)

அரவு எயிற்று அணி முள் கைதையுள் அடங்கியும் – கல்லாடம்:2 72/28

மேல்

கைம்மிக்கு (1)

அளவா காதல் கைம்மிக்கு அணைந்தனள் – கல்லாடம்:2 22/22

மேல்

கையகன்றிடலும் (1)

கரை நிலையின்றி கையகன்றிடலும்
எடுத்து அடை கல் மலர் தொடுத்தவை சாத்திய – கல்லாடம்:2 66/17,18

மேல்

கையகன்று (1)

கடியும் துனைவில் கையகன்று எரி மணி – கல்லாடம்:2 83/21

மேல்

கையடை (1)

கையடை கொடுத்த வெள் நிண வாய் குழவி – கல்லாடம்:2 88/18

மேல்

கையின் (1)

பற்றி நின்று அடர்த்தல் உள் கையின் முறித்தல் – கல்லாடம்:2 49/11

மேல்

கையினர் (1)

கால் தலை கொள்ளா கையினர் போல – கல்லாடம்:2 21/63

மேல்

கையினில் (1)

கையினில் கொள்ளவும் கரி உரி மூடவும் – கல்லாடம்:2 76/22

மேல்

கையுற (1)

கரும் புகை வானம் கையுற பொதிந்து – கல்லாடம்:2 59/2

மேல்

கையுறை (1)

கையுறை சுமந்தும் கடி தழை தாங்கியும் – கல்லாடம்:2 85/6

மேல்

கையொடு (1)

கையொடு கட்டல் கடிந்து உள் அழைத்தல் என்று – கல்லாடம்:2 49/14

மேல்

கைலை (2)

திக்கு விண் பெருக திருமதி கைலை
நாமகள் பெரும் கடல் நால் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 57/13,14
கைலை வீற்றிருந்த கண்_நுதல் விண்ணவன் – கல்லாடம்:2 68/30

மேல்

கைவிட்டு (1)

பூ விலை தொழில்மகன் காவல் கைவிட்டு
திக்கு விண் பெருக திருமதி கைலை – கல்லாடம்:2 57/12,13

மேல்

கைவிட (1)

சூயை கைவிட பதஞ்சலி ஆகிய – கல்லாடம்:2 41/6

மேல்