தோ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 5
தோகையர் 1
தோகையும் 3
தோட்டி 1
தோட்டிய 1
தோட்டு 1
தோடு 1
தோணியதானும் 1
தோம் 1
தோமும் 1
தோய்ந்த 2
தோய்ந்து 1
தோய்ந்தோர் 1
தோல் 5
தோலா 1
தோலில் 1
தோலின் 1
தோழம் 1
தோழி 1
தோழியின் 1
தோழியும் 1
தோழியை 1
தோள் 18
தோள்வளை 1
தோளன் 1
தோளில் 3
தோளினும் 2
தோளும் 1
தோற்ற 3
தோற்றம் 7
தோற்றமும் 3
தோற்றி 3
தோற்றிடும் 1
தோற்றிய 1
தோற்று 1
தோற்றுவித்து 1
தோன்ற 3
தோன்றா 3
தோன்றாது 2
தோன்றி 16
தோன்றிய 3
தோன்றினர் 1
தோன்றினர்க்கு 1
தோன்றும் 1

தோகை (5)

தோகை மண் புடைக்கும் காய் புலி மாய்க்க – கல்லாடம்:2 6/10
தூவி அம் தோகை வெள் ஓதிமம் தொடர் உழை – கல்லாடம்:2 7/16
இணை முக பறை அறை கடிப்பு உடை தோகை
வயிற்றுள் அடக்கி வளை கிடைகிடக்கும் – கல்லாடம்:2 83/23,24
நிலம் படர் தோகை குலம் கொள் சேதாவும் – கல்லாடம்:2 87/22
கூர் அரிவாளின் தோகை அம் சேவல்_கொடியோன் – கல்லாடம்:2 89/6

மேல்

தோகையர் (1)

தோகையர் கண் என சுடு சரம் துரக்கும் – கல்லாடம்:2 4/20

மேல்

தோகையும் (3)

பொன் அம் தோகையும் மணி அரி சிலம்பும் – கல்லாடம்:2 41/14
பசும் தழை தோகையும் செம் சிறை சேவலும் – கல்லாடம்:2 73/4
தோகையும் சூலமும் தோளில் முன்கையில் – கல்லாடம்:2 88/28

மேல்

தோட்டி (1)

தோட்டி நின்று அளிக்கும் தொன்மை அது பெறுமே – கல்லாடம்:2 89/25

மேல்

தோட்டிய (1)

பல் முக விளக்கின் பரிதியின் தோட்டிய
வேலை குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த – கல்லாடம்:2 81/23,24

மேல்

தோட்டு (1)

வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டு அலர் சூட்டி – கல்லாடம்:2 87/15

மேல்

தோடு (1)

தோடு அணி கடுக்கை கூடல் எம் பெருமான் – கல்லாடம்:2 65/20

மேல்

தோணியதானும் (1)

வான கடலில் தோணியதானும்
கொழுநர் கூடும் காம உததியை – கல்லாடம்:2 19/6,7

மேல்

தோம் (1)

சொல்லினர் தோம் என துணை முலை பெருத்தன – கல்லாடம்:2 1/17

மேல்

தோமும் (1)

இல் எனும் தீ சொல் இறுத்தனர் தோமும்
அனைத்து உயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர் – கல்லாடம்:2 75/24,25

மேல்

தோய்ந்த (2)

குருவில் தோய்ந்த அரி கெழு மரகத – கல்லாடம்:2 18/3
ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் – கல்லாடம்:2 78/26

மேல்

தோய்ந்து (1)

மூன்று அழல் நான் மறை முனிவர் தோய்ந்து
மறை நீர் உகுத்தலின் மறையோன் ஆகியும் – கல்லாடம்:2 9/9,10

மேல்

தோய்ந்தோர் (1)

மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி – கல்லாடம்:2 98/3

மேல்

தோல் (5)

விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு – கல்லாடம்:2 12/3
உரிவை மூடி கரி தோல் விரித்து – கல்லாடம்:2 26/12
நூலொடு துவளும் தோல் திரை உரத்தின் – கல்லாடம்:2 57/8
நெட்டு உகிர் கரும் கால் தோல் முலை பெரும் பேய் – கல்லாடம்:2 88/15
வெறி மறி மடை குரல் தோல் காய்த்து என்ன – கல்லாடம்:2 92/1

மேல்

தோலா (1)

இரண்டு பெயர் காத்த தோலா கற்பு – கல்லாடம்:2 18/29

மேல்

தோலில் (1)

மற்று அதன் தோலில் உற்று இருவீரும் – கல்லாடம்:2 96/26

மேல்

தோலின் (1)

கோலின் கரத்தின் தோலின் புடைப்ப – கல்லாடம்:2 90/16

மேல்

தோழம் (1)

முதிர் திரை அடிக்கும் பரிதி அம் தோழம்
காட்டை உள் இம்பர் காண – கல்லாடம்:2 89/23,24

மேல்

தோழி (1)

செல்லவும் உரியம் தோழி நில்லாது – கல்லாடம்:2 8/32

மேல்

தோழியின் (1)

தோழியின் தீர்க்கும் வையை துழனியும் – கல்லாடம்:2 41/34

மேல்

தோழியும் (1)

குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ – கல்லாடம்:2 89/3

மேல்

தோழியை (1)

இரண்டு என கவைத்த நல் ஆண்டருள் தோழியை
செரு விழும் இச்சையர் தமது உடல் பெற்ற – கல்லாடம்:2 7/41,42

மேல்

தோள் (18)

முடங்கு உளை முகத்து பல் தோள் அவுணனொடு – கல்லாடம்:1 2/2
கருப்புரம் துதைந்த கல் உயர் மணி தோள்
வாசம் படரும் மருத்தினும் உறு-மின் – கல்லாடம்:2 10/7,8
கல் உயர் வரை தோள் செம் மன குரிசிலும் – கல்லாடம்:2 15/1
கல் உயர் நெடும் தோள் அண்ணல் – கல்லாடம்:2 18/40
இரும் திசை போக்கு பெரும் தோள் ஆக – கல்லாடம்:2 20/27
மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடும் – கல்லாடம்:2 21/32
கலவையும் பூவும் தோள் முடி கமழ – கல்லாடம்:2 38/13
சுத்தி அமர் நீறுடன் தோள் வலன் பூண்டு – கல்லாடம்:2 40/4
நாடல் நீ இவள் கழை தோள் நசையே – கல்லாடம்:2 51/33
வரை என நிறுத்திய திரு உறை பெரும் தோள்
தரித்தும் அணைத்தும் தான் என கண்டும் – கல்லாடம்:2 52/6,7
தோள் கால் வதிந்து தொழிற்பட தோன்றும் – கல்லாடம்:2 82/17
முண்டக முலையின் சாந்து அழித்து அமை தோள்
எழுதிய கழை கரும்பு எறிந்தும் நூல் வளர்த்த – கல்லாடம்:2 87/8,9
கழை தோள் நெகிழ தழை உடல் குழைய – கல்லாடம்:2 87/11
மு கண் பிறை எயிற்று எண் தோள் செல்வி – கல்லாடம்:2 88/31
ஒரு தாள் எழு புவி ஒருவ திண் தோள்
பத்து திசையுள் எட்டு அவை உடைப்ப – கல்லாடம்:2 88/34,35
ஐந்து அமர் கதுப்பினள் அமை தோள் நசைஇ – கல்லாடம்:2 97/20
பெரும் தோள் சிறுநகை முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/49
சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/58

மேல்

தோள்வளை (1)

சூடகம் தோள்வளை கிடந்து வில் வீச – கல்லாடம்:2 41/21

மேல்

தோளன் (1)

பொன் நெடும் குன்றம் மன்னிய தோளன்
செவ்வே தந்தமை துயர் இருப்ப – கல்லாடம்:2 16/36,37

மேல்

தோளில் (3)

பல் தலை பாந்தள் சுமை திரு தோளில்
தரித்து உலகு அளிக்கும் திரு தகு நாளில் – கல்லாடம்:2 75/9,10
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும் – கல்லாடம்:2 79/19
தோகையும் சூலமும் தோளில் முன்கையில் – கல்லாடம்:2 88/28

மேல்

தோளினும் (2)

பொருப்பு மலி தோளினும் நெருப்பு உமிழ் வேலினும் – கல்லாடம்:2 20/1
மருமமும் தோளினும் வரையற புல்லி – கல்லாடம்:2 55/29

மேல்

தோளும் (1)

தோளும் இசையும் கூறிடும் கலையும் – கல்லாடம்:2 38/18

மேல்

தோற்ற (3)

காலம் கோடா முறைமுறை தோற்ற
மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி – கல்லாடம்:2 23/12,13
எல்லாம் தோற்ற இருந்த தோற்றமும் – கல்லாடம்:2 90/4
நாரணன் முதலாம் தேவர் படை தோற்ற
தண் மதி கலைகள் தான் அற ஒடுங்க – கல்லாடம்:2 95/9,10

மேல்

தோற்றம் (7)

கரு மணி கொழித்த தோற்றம் போல – கல்லாடம்:1 1/2
விண்ணம் சுமந்து தோற்றம் செய்து என – கல்லாடம்:2 2/19
சோதிட கலைமகள் தோற்றம் போல – கல்லாடம்:2 15/6
இமையாது விழித்த தோற்றம் போல – கல்லாடம்:2 23/3
பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல – கல்லாடம்:2 32/2
என் உயிர் வளைந்த தோற்றம் போல – கல்லாடம்:2 38/32
உந்தி தோற்றம் ஓசை நின்று ஒடுங்க – கல்லாடம்:2 43/28

மேல்

தோற்றமும் (3)

தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல் செய் – கல்லாடம்:2 86/17
நின் நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும்
துவர தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன் – கல்லாடம்:2 88/11,12
எல்லாம் தோற்ற இருந்த தோற்றமும்
தன்னுள் தோன்றி தான் அதில் தோன்றா – கல்லாடம்:2 90/4,5

மேல்

தோற்றி (3)

புரை அறும் அன்பினர் விழி பெற தோற்றி
வானவர் நெடு முடி மணி தொகை திரட்டி – கல்லாடம்:2 76/12,13
துவைப்ப நின்று அமை கரத்து கவைகள் தோற்றி
கரி கால் அன்ன மொந்தை கலித்து இரங்க – கல்லாடம்:2 85/28,29
சூளும் வாய்மையும் தோற்றி
நீளவும் பொய்த்தற்கு அவர் மனம் கரியே – கல்லாடம்:2 85/42,43

மேல்

தோற்றிடும் (1)

துணை கரம் பிடித்து என தோற்றிடும் பொழில் சூழ் – கல்லாடம்:2 97/16

மேல்

தோற்றிய (1)

கண் நுழையாது காட்சிகொள தோற்றிய
வெறி வீ சந்தின் நிரை இடை எறிந்து – கல்லாடம்:2 28/13,14

மேல்

தோற்று (1)

பழன குருநாடு அளி பதி தோற்று
முன்னுறும் உழு-வயின் பன்னிரு வருடம் – கல்லாடம்:2 93/15,16

மேல்

தோற்றுவித்து (1)

வேற்று அருள் பிறவி தோற்றுவித்து எடுத்து – கல்லாடம்:2 72/3

மேல்

தோன்ற (3)

மூன்று காலமும் தோன்ற கூற – கல்லாடம்:2 24/8
ஈன்ற என் உளமும் தோன்ற மொழி பயின்ற – கல்லாடம்:2 29/1
கவிழ்ந்த முகத்தை எக்-கண் மனம் தோன்ற
அரும்பிய நகையை அன்றே நின் கேழ் – கல்லாடம்:2 86/12,13

மேல்

தோன்றா (3)

கற்பில் தோன்றா கடன் ஆகுகவே – கல்லாடம்:2 36/15
தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி – கல்லாடம்:2 64/8
தன்னுள் தோன்றி தான் அதில் தோன்றா
தனி நடை நிறையும் ஒரு தனி கோலத்து – கல்லாடம்:2 90/5,6

மேல்

தோன்றாது (2)

முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது
தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன – கல்லாடம்:2 5/24,25
தோன்றாது அடங்கிய தொன்மைத்து என்ன – கல்லாடம்:2 65/22

மேல்

தோன்றி (16)

மணிக்கால் அறிஞர் பெரும் குடி தோன்றி
இறையோன் பொருட்கு பரணர் முதல் கேட்ப – கல்லாடம்:1 2/52,53
ஈன்ற செம் கவி என தோன்றி நனி பரந்து – கல்லாடம்:2 2/5
மாதுடன் தோன்றி கூடலுள் நிறைந்தோன் – கல்லாடம்:2 13/24
மரகத தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 14/9
காலம் கருதி தோன்றி கை குலைப்ப – கல்லாடம்:2 20/7
தோன்றி நில்லா நிலை பொருள் செய்ய – கல்லாடம்:2 20/20
பாங்குடன் காண தோன்றி உள் நின்று – கல்லாடம்:2 22/48
அவன் என தோன்றி அரும் சிறை விடுத்த – கல்லாடம்:2 32/9
புறம்பு தோன்றி நின்-கண் ஆகுவனே – கல்லாடம்:2 39/22
ஏழிடம் தோன்றி இனன் நூற்கு இயைந்து – கல்லாடம்:2 42/14
வெளியுற தோன்றி இருளுற மறைந்த – கல்லாடம்:2 52/21
தோன்றி நின்று அழியா துகள் அறு பெரும் தவம் – கல்லாடம்:2 65/10
பசும் தாள் தோன்றி மலர் நனி மறித்து – கல்லாடம்:2 77/2
உவண_கொடியினன் உந்தி மலர் தோன்றி
பார் முதல் படைத்தவன் நடு தலை அறுத்து – கல்லாடம்:2 77/7,8
நிலை நீர் மொக்குளின் விளைவாய் தோன்றி
வான் தவழ் உடல் கறை மதி என சுருங்கி – கல்லாடம்:2 80/1,2
தன்னுள் தோன்றி தான் அதில் தோன்றா – கல்லாடம்:2 90/5

மேல்

தோன்றிய (3)

அழுதுடன் தோன்றிய உரிமையானும் – கல்லாடம்:2 19/14
கொடுத்த மெய் பிண்டம் குறியுடன் தோன்றிய
எழு நிற சகரர்கள் ஏழ் அணி நின்று – கல்லாடம்:2 81/20,21
வெளியுற தோன்றிய இருள் மணி மிடற்றோன் – கல்லாடம்:2 87/37

மேல்

தோன்றினர் (1)

தோன்றினர் ஆதலின் நீயே மட மகள் – கல்லாடம்:2 14/24

மேல்

தோன்றினர்க்கு (1)

சூர் பகை உலகில் தோன்றினர்க்கு அழகு – கல்லாடம்:2 22/3

மேல்

தோன்றும் (1)

தோள் கால் வதிந்து தொழிற்பட தோன்றும்
தும்புரு கருவியும் துன்னி நின்று இசைப்ப – கல்லாடம்:2 82/17,18

மேல்