தே – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 2
தே_மொழி 1
தேக்க 1
தேக்கி 1
தேக்கிட 1
தேக்கிய 2
தேக்கின் 1
தேக்கு 2
தேடி 1
தேம் 1
தேம்படு 1
தேய்க்கும் 1
தேய்த்த 1
தேய்ந்த 1
தேய்ந்தது 1
தேய்ந்து 1
தேய்ப்ப 1
தேய்ப்புண்டு 1
தேர் 12
தேர்க்கு 1
தேரான் 1
தேரினும் 1
தேரினை 1
தேரும் 4
தேரே 1
தேரொடு 1
தேவ 2
தேவர் 18
தேவர்-தம் 3
தேவர்_கோமான் 1
தேவர்_கோன் 1
தேவர்க்கு 1
தேவர்கள் 5
தேவரும் 2
தேவனின் 1
தேவனும் 1
தேற்றமும் 1
தேற 1
தேறவும் 1
தேறா 1
தேன் 16
தேன்மழை 1
தேனுடன் 1
தேனும் 3
தேனொடு 1
தேனொடும் 1

தே (2)

தே அருள் கல்லார் சிந்தையின் புரண்ட – கல்லாடம்:2 83/17
சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/58

மேல்

தே_மொழி (1)

சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/58

மேல்

தேக்க (1)

அருள் தரும் கேள்வி அமைய தேக்க
பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல் – கல்லாடம்:2 35/1,2

மேல்

தேக்கி (1)

செங்கோல் முளையிட்டு அருள் நீர் தேக்கி
கொலை களவு என்னும் படர் களை கட்டு – கல்லாடம்:2 37/11,12

மேல்

தேக்கிட (1)

தேக்கிட அருத்தி அலர் மலர் தொட்டில் – கல்லாடம்:2 46/5

மேல்

தேக்கிய (2)

தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும் – கல்லாடம்:2 1/5
செந்தமிழ் பாடலும் தேக்கிய பொருளும் – கல்லாடம்:2 58/3

மேல்

தேக்கின் (1)

தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின் – கல்லாடம்:2 98/16

மேல்

தேக்கு (2)

தேக்கு இலை விரித்து நால் திசை வைத்து – கல்லாடம்:2 24/6
ஆற்றாது அகன்று தேக்கு வழி கண்ட – கல்லாடம்:2 74/15

மேல்

தேடி (1)

மால் அயன் தேடி மறை அறிந்து அறியா – கல்லாடம்:2 72/12

மேல்

தேம் (1)

தேம் படர்ந்தனன் எனின் திசை குறிக்குநரால் – கல்லாடம்:2 71/37

மேல்

தேம்படு (1)

வாங்கி கடைந்த தேம்படு கடலில் – கல்லாடம்:2 19/13

மேல்

தேய்க்கும் (1)

புலைசெய்து உடன்று நிலைநிலை தேய்க்கும்
தள்ளா மொய்ம்பின் உள் உடைந்து ஒருகால் – கல்லாடம்:2 25/11,12

மேல்

தேய்த்த (1)

மெய் அணி அளறா கை முழம் தேய்த்த
பேர் அன்பு உருவ பசு காவலனை – கல்லாடம்:2 55/18,19

மேல்

தேய்ந்த (1)

எண்ணி விரல் தேய்ந்த செம் கரம் கூப்புக – கல்லாடம்:2 94/39

மேல்

தேய்ந்தது (1)

தவம் என தேய்ந்தது துடி எனும் நுசுப்பே – கல்லாடம்:2 1/19

மேல்

தேய்ந்து (1)

ஈயா மாந்தர் பொருள் தேய்ந்து என்ன – கல்லாடம்:2 25/44

மேல்

தேய்ப்ப (1)

விழி உடை தொண்டர் குழீஇ முடி தேய்ப்ப
தளிர்த்து சிவந்த தண்டை அம் துணை தாள் – கல்லாடம்:2 92/4,5

மேல்

தேய்ப்புண்டு (1)

நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து அலறியும் – கல்லாடம்:2 60/23

மேல்

தேர் (12)

கொங்கு தேர் வாழ்க்கை செந்தமிழ் கூறி – கல்லாடம்:2 1/11
சின்னம் கிடந்த கொடிஞ்சி மா தேர்
நொச்சி பூ உதிர் நள்ளிருள் நடுநாள் – கல்லாடம்:2 2/17,18
பொன் துணர் தாமம் புரிந்து ஒளிர் மணி தேர்
வீதி வந்தது வரலால் நம்தம் – கல்லாடம்:2 10/26,27
போன நம் தனி நமர் புள் இயல் மான் தேர்
கடு விசை துரந்த கான்யாற்று ஒலியின் – கல்லாடம்:2 14/21,22
கலம் எனும் நெடும் தேர் தொலையாது ஓட – கல்லாடம்:2 23/24
தேர் வரை வையம் ஆக திருத்தி – கல்லாடம்:2 25/23
யாணர் கொடிஞ்சி நெடும் தேர் இசைப்பும் – கல்லாடம்:2 39/13
பொன் கொடி தேர் மிசை பொலிகுவை அன்றே – கல்லாடம்:2 51/22
நோக்கம் மறைத்த பரிதி கொள் நெடும் தேர்
பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம் – கல்லாடம்:2 82/45,46
இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு – கல்லாடம்:2 94/36
ஒரு கால் தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த – கல்லாடம்:2 95/15
உழல் தேர் பத்தினன் மகவு என நாறி – கல்லாடம்:2 95/25

மேல்

தேர்க்கு (1)

கொலைஞர் பொலிந்த கொடி தேர்க்கு அணங்கினை – கல்லாடம்:2 69/7

மேல்

தேரான் (1)

தேரான் தெளிவு எனும் திருக்குறள் புகுந்தும் – கல்லாடம்:2 60/2

மேல்

தேரினும் (1)

தேரினும் காவினும் அடிக்கடி கண்டு – கல்லாடம்:2 55/35

மேல்

தேரினை (1)

கடும் சுடர் இரவி விடும் கதிர் தேரினை
மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து – கல்லாடம்:2 97/14,15

மேல்

தேரும் (4)

அலமரு காலும் அலகை தேரும்
குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும் – கல்லாடம்:1 1/36,37
துயிலா கேளுடன் உயிர் இரை தேரும்
நெட்டு உடல் பேழ் வாய் கழுதும் உறங்க – கல்லாடம்:2 43/6,7
பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் – கல்லாடம்:2 56/25
மணி தரு தெருவில் கொடி தரு தேரும்
நால் குறி புலவர் கூட்டு எழு நனி புகழ் – கல்லாடம்:2 99/49,50

மேல்

தேரே (1)

தன் நிலை கடவாது அவன் பரி தேரே – கல்லாடம்:2 62/32

மேல்

தேரொடு (1)

கொய் உளை கடு மான் கொளுவிய தேரொடு
பூ உதிர் கானல் புறம் கண்டனன் என – கல்லாடம்:2 68/11,12

மேல்

தேவ (2)

தேவ நாயகன் கூடல் வாழ் இறைவன் – கல்லாடம்:2 12/18
இன்ப நடம் புரியும் தேவ நாயகன் – கல்லாடம்:2 26/28

மேல்

தேவர் (18)

தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடு திரள் – கல்லாடம்:1 2/29
தேவர் மூவரும் காவலானும் – கல்லாடம்:2 11/4
நெடியோன் முதலாம் தேவர் கூடி – கல்லாடம்:2 19/12
தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து – கல்லாடம்:2 21/10
அமுது அயில் வாழ்க்கை தேவர்_கோன் இழிச்சிய – கல்லாடம்:2 28/6
தேவர்_கோமான் சிறை அரி புண்ணினுக்கு – கல்லாடம்:2 28/17
தேவர் நெஞ்சு உடைக்கும் தாமரை ஏவின் – கல்லாடம்:2 31/7
அருள் நடம் புரிந்த தேவர் நாயகன் – கல்லாடம்:2 33/20
தேவர் கண் பனிப்ப முனிவர் வாய் குழற – கல்லாடம்:2 34/8
பொன் உடல் தேவர் ஒக்கலொடு மயங்கி – கல்லாடம்:2 40/9
தும்பி உண்ணா தொங்கல் தேவர்
மக்களொடு நெருங்கிய வீதி புறமும் – கல்லாடம்:2 41/28,29
நாரணன் படர தேவர் கெட்டு ஓட – கல்லாடம்:2 51/26
தேவர் மருந்தும் தென் தமிழ் சுவையும் – கல்லாடம்:2 53/6
தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகி – கல்லாடம்:2 71/4
தேவர் காட்டும் பாசறையினுமே – கல்லாடம்:2 77/22
மயங்கா தேவர் மருந்து வாய் மடுக்க – கல்லாடம்:2 83/30
தேவர் உண் மருந்து உடல் நீட நின்று உதவ – கல்லாடம்:2 95/7
நாரணன் முதலாம் தேவர் படை தோற்ற – கல்லாடம்:2 95/9

மேல்

தேவர்-தம் (3)

தரு நிழல் தேவர்-தம் உடல் பனிப்ப – கல்லாடம்:2 59/3
தேவர்-தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து – கல்லாடம்:2 73/19
இருக்கினும் இறக்கினும் உதவா தேவர்-தம்
பொய் வழி கதியகம் மெய் என புகாத – கல்லாடம்:2 92/2,3

மேல்

தேவர்_கோமான் (1)

தேவர்_கோமான் சிறை அரி புண்ணினுக்கு – கல்லாடம்:2 28/17

மேல்

தேவர்_கோன் (1)

அமுது அயில் வாழ்க்கை தேவர்_கோன் இழிச்சிய – கல்லாடம்:2 28/6

மேல்

தேவர்க்கு (1)

தேவர்க்கு அரசனும் காவல் தருவும் – கல்லாடம்:2 24/25

மேல்

தேவர்கள் (5)

புக்க தேவர்கள் பொரு கடல் படையினை – கல்லாடம்:2 4/7
வாடா தேவர்கள் மணத்தலானும் – கல்லாடம்:2 81/11
தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச – கல்லாடம்:2 82/32
பெரு நில தேவர்கள் மறை நீர் உகுப்ப – கல்லாடம்:2 95/1
கதிர் நிரை பரப்பும் மணி முடி தேவர்கள்
கனவிலும் காணா புனைவரும் திருவடி – கல்லாடம்:2 98/1,2

மேல்

தேவரும் (2)

முத்தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும் – கல்லாடம்:2 84/4
முனிவரும் தேவரும் கர மலர் முகிழ்ப்ப – கல்லாடம்:2 87/29

மேல்

தேவனின் (1)

தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகி – கல்லாடம்:2 71/4

மேல்

தேவனும் (1)

தேவனும் அதன் முடி மேவும் உளனாம் – கல்லாடம்:2 78/16

மேல்

தேற்றமும் (1)

திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட – கல்லாடம்:2 80/13

மேல்

தேற (1)

குறுமுனி தேற நெடு மறை விரித்தோய் – கல்லாடம்:1 2/49

மேல்

தேறவும் (1)

குறுமுனி தேறவும் பெறு முதல் புலவர்கள் – கல்லாடம்:2 63/20

மேல்

தேறா (1)

இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என – கல்லாடம்:2 73/13

மேல்

தேன் (16)

தேன் உறை தமிழும் திரு உறை கூடலும் – கல்லாடம்:2 9/12
பெரும் தேன் இறாலொடு குறி விழ எறிந்தும் – கல்லாடம்:2 22/34
குறிஞ்சி பெரும் தேன் இறாலொடு சிதைத்து – கல்லாடம்:2 25/6
பெரும் தேன் செவியும் கரும் தேன் தொடர்ச்சியும் – கல்லாடம்:2 26/30
பெரும் தேன் செவியும் கரும் தேன் தொடர்ச்சியும் – கல்லாடம்:2 26/30
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர் – கல்லாடம்:2 35/3
கரும் தேன் உடைத்து செம் மணி சிதறி – கல்லாடம்:2 39/18
திருவடி பெரும் தேன் பருகுநர் போல – கல்லாடம்:2 48/14
பெரும் தேன் கவரும் சிறுகுடி மகளே – கல்லாடம்:2 51/12
வானக மங்கையும் தேன் வரை வள்ளியும் – கல்லாடம்:2 56/10
நான்முகன் தாங்கும் தேன் உடை தாமரை – கல்லாடம்:2 67/14
இருந்து ஒளிர் அரும் தேன் இலதால் நீரும் – கல்லாடம்:2 81/50
இறால் புணர் புது தேன் ஈத்து உடன் புணரும் – கல்லாடம்:2 87/16
பெரும் தேன் அருந்தி எ பேர் இசை அனைத்தினும் – கல்லாடம்:2 95/17
நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை – கல்லாடம்:2 96/19
செம் மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர – கல்லாடம்:2 97/2

மேல்

தேன்மழை (1)

சருக்கரை குன்றில் தேன்மழை நான்று என – கல்லாடம்:2 21/37

மேல்

தேனுடன் (1)

தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும் – கல்லாடம்:2 1/5

மேல்

தேனும் (3)

வண்டும் தேனும் மருள் கிளை முரற்றி – கல்லாடம்:2 41/40
வண்டும் தேனும் ஞிமிறும் சுரும்பும் – கல்லாடம்:2 54/5
பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய – கல்லாடம்:2 58/7

மேல்

தேனொடு (1)

குரு மணி விரித்தலின் தேனொடு கிடந்து – கல்லாடம்:2 52/4

மேல்

தேனொடும் (1)

தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி – கல்லாடம்:2 68/8

மேல்