மா – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 37
மாக்கள் 7
மாங்கனி 1
மாங்கி 1
மாசற 1
மாசறு 3
மாசுணம் 1
மாடத்து 2
மாடம் 1
மாடமும் 1
மாண் 3
மாண்ட 1
மாண்டு 1
மாணிக்க 1
மாணிக்கத்தின் 1
மாத்திரை 5
மாத்திரைக்கு 2
மாதர் 1
மாதரும் 1
மாதவர் 1
மாதவன் 2
மாதிர 1
மாதினரே 1
மாது 2
மாதுடன் 3
மாதுலன் 1
மாதுளம் 1
மாதோ 1
மாந்த 1
மாந்தர் 4
மாந்தளிர் 1
மாந்தியும் 1
மாந்தும் 1
மாநிலம் 1
மாமி 1
மாமை 1
மாய்க்க 1
மாய்ந்த 1
மாய 2
மாயமும் 1
மாயவன் 1
மாயா 3
மாயாது 1
மாயை 1
மார்பகம் 1
மார்பத்து 1
மார்பமும் 1
மார்பில் 1
மார்பு 1
மார்பொடு 1
மாரீசன் 1
மால் 3
மாலவன் 1
மாலை 6
மாலையிட்டாங்கு 1
மாலையும் 1
மாலையை 1
மாவின் 1
மாவுடை 1
மாவும் 1
மாவொடும் 1
மாழ்கலை 1
மாழ்கி 4
மாழ்கியும் 1
மாழ்கின 1
மாழ்கினள் 1
மாழ்குறும் 2
மாற்றி 2
மாற்றிய 2
மாற்றும் 1
மாறனும் 1
மாறா 2
மாறி 2
மாறின் 1
மாறுகொண்டு 1
மாறுபட்டு 1
மாறுபாடு 1
மான் 6
மான 5
மானவும் 1
மானிட 2
மானின் 1
மானும் 4

மா (37)

சின்னம் கிடந்த கொடிஞ்சி மா தேர் – கல்லாடம்:2 2/17
கூடல் மா நகர் ஆட எடுத்த – கல்லாடம்:2 5/19
வாய் செறித்திட்ட மா கடிப்பு இதுவே – கல்லாடம்:2 6/11
வேல்மகன் குறத்தி மா மதி முதியோள் – கல்லாடம்:2 7/11
மா தவர் வழுத்தும் கூடற்கு இறைவன் – கல்லாடம்:2 11/30
கூடல் மா நகர் ஆடிய அமுதை – கல்லாடம்:2 16/19
திரை கடல் குடித்த கரத்த மா முனிக்கும் – கல்லாடம்:2 17/14
அணியும் மா மகிழ்நர் பதி உறை புகுந்தால் – கல்லாடம்:2 17/20
புறம் ஆர் கல்வி அற மா மகளை – கல்லாடம்:2 17/23
மதுரை மா நகர் செழியன் ஆகி – கல்லாடம்:2 21/61
கதிர் முடி கவித்த இறைவன் மா மணி – கல்லாடம்:2 21/62
முழக்காது தழங்கும் மா முரசு ஆகி – கல்லாடம்:2 23/17
உலகம் ஈன்று அளித்த உமையும் மா அறனும் – கல்லாடம்:2 24/24
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/11
கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி – கல்லாடம்:2 34/14
கடல் மா கொன்ற தீ படர் நெடு வேல் – கல்லாடம்:2 41/10
வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த – கல்லாடம்:2 42/28
திரு மிடற்று இருள் என செறிதரும் மா முகில் – கல்லாடம்:2 47/29
மா உயிர் வௌவலின் தீ விழி கூற்றும் – கல்லாடம்:2 56/4
மயக்குறு மாலை மா மகள் எதிர – கல்லாடம்:2 57/19
சென்னி மா புரம் சேரன் திருத்தளி – கல்லாடம்:2 59/25
மறி திரை கடலுள் மா என கவிழ்ந்த – கல்லாடம்:2 59/28
மா என கவிழ்ந்த மறி கடல் ஒன்றும் – கல்லாடம்:2 61/8
பேர் ஒளி இணையா கூடல் மா மணி – கல்லாடம்:2 66/19
பனை கை கட_மா எருத்து உறு பூழி – கல்லாடம்:2 68/24
பேர் அருள் அளித்த மா தவர் போல – கல்லாடம்:2 70/10
மா தவ கூடல் மதி சடை காரணன் – கல்லாடம்:2 73/12
நீர் மா கொன்ற சேயோன் குன்றமும் – கல்லாடம்:2 80/17
வரப்பெறு மா தவம் பெரிது உடையேமே – கல்லாடம்:2 80/34
அரும் தவ கண்ணினோடு அடைந்த மா முனி-பால் – கல்லாடம்:2 81/17
விட மா கொன்ற நெடு வேல் குளவன் – கல்லாடம்:2 83/9
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன் – கல்லாடம்:2 93/23
மா குயில் மாழ்கி கூக்குரல் அடைப்ப – கல்லாடம்:2 94/18
வெறி விழி சவரர் மா அடி ஒற்ற – கல்லாடம்:2 94/22
பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற – கல்லாடம்:2 95/14
மா குகன் நதி விட ஊக்கி வனத்து – கல்லாடம்:2 95/31
மா தவராம் என மேல் மலை மறைந்தனன் – கல்லாடம்:2 96/11

மேல்

மாக்கள் (7)

திருவடி வினவா கரு உறை மாக்கள்
நெஞ்சினும் கிடந்து நீண்ட வல் இரவில் – கல்லாடம்:2 8/30,31
புண்ணிய கல்வி உள் நிகழ் மாக்கள்
பரிபுர கம்பலை இரு செவி உண்ணும் – கல்லாடம்:2 11/24,25
மானிட மாக்கள் அரக்கி கை பட்டு என – கல்லாடம்:2 42/7
அரை பெற பிணித்த கல் குளி மாக்கள்
உள்ளம் தீக்கும் உவர் கடல் உடுத்த – கல்லாடம்:2 43/2,3
மற்று அவன் தாயம் வவ்வுறு மாக்கள்
காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை – கல்லாடம்:2 44/19,20
வளை விலை மாக்கள் வடிவு எடுத்தருளி – கல்லாடம்:2 45/15
நால் நூல் மாக்கள் நணி குறி சொற்று – கல்லாடம்:2 47/7

மேல்

மாங்கனி (1)

மாங்கனி இரண்டில் ஆம் கனி ஒன்றால் – கல்லாடம்:2 99/38

மேல்

மாங்கி (1)

மாங்கி சகந்தி வளர் காஞ்சு உண்டை என்று – கல்லாடம்:2 98/43

மேல்

மாசற (1)

மாசற படைத்து மணியுடன் நிறத்த – கல்லாடம்:2 65/29

மேல்

மாசறு (3)

யோசனை அடுத்த மாசறு காட்சி – கல்லாடம்:2 61/4
மாசறு திருமகள் மலர் புகுந்து ஆயிரம் – கல்லாடம்:2 76/3
பாசம் இலாமை மாசறு நிட்களம் – கல்லாடம்:2 86/28

மேல்

மாசுணம் (1)

மற்று அவன் அசைத்த மாசுணம் பரப்பி – கல்லாடம்:2 41/46

மேல்

மாடத்து (2)

தவள மாடத்து அகல் முதுகு பற்றி – கல்லாடம்:2 19/22
நீயே எழு நிலை மாடத்து இள முலை மகளிர் – கல்லாடம்:2 51/17

மேல்

மாடம் (1)

பொன் அணி மாடம் பொலி நகர் கூடல் – கல்லாடம்:2 78/24

மேல்

மாடமும் (1)

மாடமும் ஓங்கிய மணி நகர் கூடல் – கல்லாடம்:2 80/19

மேல்

மாண் (3)

இமயம் பூத்த சுனை மாண் தொட்டில் – கல்லாடம்:1 2/39
தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு – கல்லாடம்:2 5/16
மாண் இழை மகளிர் வயின் வைகுதலால் – கல்லாடம்:2 37/8

மேல்

மாண்ட (1)

மின்னல் மாண்ட கவிர் அலர் பூத்த – கல்லாடம்:1 2/27

மேல்

மாண்டு (1)

பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள் – கல்லாடம்:2 23/14

மேல்

மாணிக்க (1)

விட்டு ஒளிர் மாணிக்க மலையின் ஒருபால் – கல்லாடம்:2 17/41

மேல்

மாணிக்கத்தின் (1)

மாணிக்கத்தின் வளைத்த சுவர் என – கல்லாடம்:2 16/12

மேல்

மாத்திரை (5)

அவ்வுழி மாத்திரை அரை எழு காலை – கல்லாடம்:2 87/23
சச்ச புடத்தில் தனி எழு மாத்திரை
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி – கல்லாடம்:2 99/11,12
மங்கல பாணி மாத்திரை நான்குடன் – கல்லாடம்:2 99/14
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து – கல்லாடம்:2 99/22
நாதம் கூட்டி மாத்திரை அறுத்து – கல்லாடம்:2 99/37

மேல்

மாத்திரைக்கு (2)

ஞெள்ளலில் குனித்த இரு மாத்திரைக்கு
பட்டடை எடுக்க புலிதம் பரப்பி – கல்லாடம்:2 99/16,17
பதினான்கு அமைத்து விடு மாத்திரைக்கு
வனமும் பிதாவும் பாணியில் வகுத்து – கல்லாடம்:2 99/19,20

மேல்

மாதர் (1)

மைந்தர் கண் சென்று மாதர் உள் தடைந்த – கல்லாடம்:2 81/38

மேல்

மாதரும் (1)

பழம் குறி கண்ட நெடும் கண் மாதரும்
ஒன்று கிளக்க நின்று இவை கேண்-மின் – கல்லாடம்:2 16/2,3

மேல்

மாதவர் (1)

ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்
அன்பினர் உள்ளமொடு என்பு கரைந்து உருக – கல்லாடம்:2 21/38,39

மேல்

மாதவன் (2)

மாதவன் அங்கி வளி குதை எழு நுனி – கல்லாடம்:2 25/21
உரகன் வாய் கீண்ட மாதவன் போல – கல்லாடம்:2 47/21

மேல்

மாதிர (1)

மாதிர களிற்றினை செவிடுற கொடுக்கும் – கல்லாடம்:2 39/15

மேல்

மாதினரே (1)

கழுநீர் மலையும் வயல் மாதினரே
அயல் புலம் எறியும் எயினர் மர துடி – கல்லாடம்:2 59/11,12

மேல்

மாது (2)

வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த – கல்லாடம்:2 42/28
மாது உடை கழிக்கரை சேரி ஓர் பாங்கர் – கல்லாடம்:2 67/8

மேல்

மாதுடன் (3)

மாதுடன் தோன்றி கூடலுள் நிறைந்தோன் – கல்லாடம்:2 13/24
மாதுடன் ஒன்றி என் மனம் புகுந்து – கல்லாடம்:2 22/43
பனிமலை பயந்த மாதுடன் தீர்த்து அருள் – கல்லாடம்:2 35/10

மேல்

மாதுலன் (1)

அவ்வுழி ஒருசார் அவன் மாதுலன் என – கல்லாடம்:2 44/24

மேல்

மாதுளம் (1)

வன்னி மாதுளம் பூவிதை என்ன – கல்லாடம்:2 98/29

மேல்

மாதோ (1)

யாது என நிலைக்கிலன் மாதோ
பேதை கொள்ளாது ஒழி மனம் கடுத்தே – கல்லாடம்:2 82/51,52

மேல்

மாந்த (1)

மற்று அவர் மகத்துள் வளர் அவி மாந்த
விடையோன் அருச்சனைக்கு உரிமையின் முன்னவன் – கல்லாடம்:2 95/2,3

மேல்

மாந்தர் (4)

நிறை உடை கல்வி பெறு மதி மாந்தர்
ஈன்ற செம் கவி என தோன்றி நனி பரந்து – கல்லாடம்:2 2/4,5
ஈயா மாந்தர் பொருள் தேய்ந்து என்ன – கல்லாடம்:2 25/44
துறவால் அறனால் பெறல்_இல் மாந்தர்
விள்ளா அறிவின் உள்ளமும் என்னவும் – கல்லாடம்:2 38/29,30
நின்று அறி கல்வி ஒன்றிய மாந்தர்
புனை பெரும் கவியுள் தரு பொருள் என்ன – கல்லாடம்:2 45/1,2

மேல்

மாந்தளிர் (1)

முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி – கல்லாடம்:2 33/9

மேல்

மாந்தியும் (1)

தழல் விழி பாந்தள் தான் இரை மாந்தியும்
மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும் – கல்லாடம்:2 60/6,7

மேல்

மாந்தும் (1)

வாடி நிலைநின்றும் ஊடியே மாந்தும்
என் முகம் அளக்கும் கால் அ குறியை – கல்லாடம்:2 18/35,36

மேல்

மாநிலம் (1)

மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி – கல்லாடம்:2 98/3

மேல்

மாமி (1)

மாமி ஆட புணரி அழைத்த – கல்லாடம்:2 25/38

மேல்

மாமை (1)

மாமை ஊர்தரும் மணி நிறத்து இவட்கே – கல்லாடம்:2 59/36

மேல்

மாய்க்க (1)

தோகை மண் புடைக்கும் காய் புலி மாய்க்க
வாய் செறித்திட்ட மா கடிப்பு இதுவே – கல்லாடம்:2 6/10,11

மேல்

மாய்ந்த (1)

எரியிடை மாய்ந்த கனல் விழி அரக்கர்க்கு – கல்லாடம்:2 25/35

மேல்

மாய (2)

படைப்பு முதல் மாய வான் முதல் கூடி – கல்லாடம்:1 2/45
மாய வல் அரக்கர் தட்டி – கல்லாடம்:2 83/32

மேல்

மாயமும் (1)

மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும் – கல்லாடம்:2 87/1

மேல்

மாயவன் (1)

பாற்கடல் உறங்கும் மாயவன் போல – கல்லாடம்:2 19/21

மேல்

மாயா (3)

மாயா பெரு வரத்து ஒரு மயில் ஆகி – கல்லாடம்:1 2/18
மாயா நல் அறம் வளர் நாட்டினையே – கல்லாடம்:2 51/14
மாயா வரத்த பெரும் குருகு அடித்து – கல்லாடம்:2 67/22

மேல்

மாயாது (1)

மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின் – கல்லாடம்:2 52/5

மேல்

மாயை (1)

பேர் இருள் மாயை பெண் மகவு இரக்க – கல்லாடம்:2 81/18

மேல்

மார்பகம் (1)

ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் – கல்லாடம்:2 78/26

மேல்

மார்பத்து (1)

மணி கெழு மார்பத்து அணிபெற புகுத்தலின் – கல்லாடம்:2 50/14

மேல்

மார்பமும் (1)

மார்பமும் இருத்தியது என்ன கூன் புறத்து – கல்லாடம்:2 85/36

மேல்

மார்பில் (1)

நின்ற நாரணன் பரந்த மார்பில்
கலவா குங்குமம் நிலவியது என்ன – கல்லாடம்:2 17/33,34

மேல்

மார்பு (1)

மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த – கல்லாடம்:2 84/7

மேல்

மார்பொடு (1)

வாளுடன் நெருக்கல் மார்பொடு முனைதல் – கல்லாடம்:2 49/10

மேல்

மாரீசன் (1)

கராதி மாரீசன் கவந்தன் உயிர் மடித்து – கல்லாடம்:2 95/32

மேல்

மால் (3)

அடு மால் அகற்றி நெடுநாள் புரக்க – கல்லாடம்:2 55/24
மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய் – கல்லாடம்:2 57/9
மால் அயன் தேடி மறை அறிந்து அறியா – கல்லாடம்:2 72/12

மேல்

மாலவன் (1)

வேதியன் படைக்க மாலவன் காக்க – கல்லாடம்:2 28/4

மேல்

மாலை (6)

செம் மகள் மாலை இம்முறை என்றால் – கல்லாடம்:2 5/31
செக்கர் தீயொடு புக்க நல் மாலை
என் உயிர் வளைந்த தோற்றம் போல – கல்லாடம்:2 38/31,32
மயக்குறு மாலை மா மகள் எதிர – கல்லாடம்:2 57/19
கரு நெருப்பு எடுத்த மறம் அருள் மாலை
நின் வரற்கு ஏவர் நல்குநர் நின் வரல் – கல்லாடம்:2 71/22,23
என பெறின் மாலை என் உயிர் உளைப்பதும் – கல்லாடம்:2 71/31
தமிழ் கலை மாலை சூடி தாவா – கல்லாடம்:2 92/7

மேல்

மாலையிட்டாங்கு (1)

வரையுடன் நிறைய மாலையிட்டாங்கு
நெடு முடி அருவி அகிலொடு கொழிக்கும் – கல்லாடம்:2 68/28,29

மேல்

மாலையும் (1)

மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும் – கல்லாடம்:2 83/29

மேல்

மாலையை (1)

அணி தலை மாலையை நிறைமதி திரள் என – கல்லாடம்:2 55/8

மேல்

மாவின் (1)

கீழ் இணர் நின்ற மேற்பகை மாவின்
ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த – கல்லாடம்:1 2/11,12

மேல்

மாவுடை (1)

மாவுடை கூற்றம் மலர் அயன் தண்டம் – கல்லாடம்:2 73/7

மேல்

மாவும் (1)

மேல் கடல் கவிழ் முக பொரி உடல் மாவும்
நெடும் கடல் பரப்பும் அடும் தொழில் அரக்கரும் – கல்லாடம்:2 70/2,3

மேல்

மாவொடும் (1)

மாவொடும் கொன்ற மணி நெடும் திரு வேல் – கல்லாடம்:2 8/6

மேல்

மாழ்கலை (1)

வறு நீர் மலர் என மாழ்கலை விடு-மதி – கல்லாடம்:2 94/31

மேல்

மாழ்கி (4)

வணங்கார் இனம் என மாழ்கி
குணம் குடி போய்வித்த ஆய் உளம் தவறே – கல்லாடம்:2 15/30,31
கண்டுகண்டு ஒருவன் மாழ்கி
விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே – கல்லாடம்:2 49/20,21
மற்று அவர் கவை மனம் மாழ்கி
செற்றம் நின் புகைவர் இ கால் தீண்டலையே – கல்லாடம்:2 78/28,29
மா குயில் மாழ்கி கூக்குரல் அடைப்ப – கல்லாடம்:2 94/18

மேல்

மாழ்கியும் (1)

வழங்குறு கிளவியின் திசை என மாழ்கியும்
ஒரு திசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும் – கல்லாடம்:2 44/6,7

மேல்

மாழ்கின (1)

மது பொழி முளரியின் மாழ்கின என்றால் – கல்லாடம்:2 79/18

மேல்

மாழ்கினள் (1)

மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள்
பாடலம் புது தார் காளை பின் ஒன்றால் – கல்லாடம்:2 40/16,17

மேல்

மாழ்குறும் (2)

மலை முலை பகை அட மாழ்குறும் நுசுப்பு – கல்லாடம்:2 41/45
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே – கல்லாடம்:2 45/28

மேல்

மாற்றி (2)

கடுக்கை மலர் மாற்றி வேப்பு அலர் சூடி – கல்லாடம்:2 2/9
பேசுறு குற்றம் அசைவொடும் மாற்றி
வண்டின் தாரியும் கஞ்ச நாதமும் – கல்லாடம்:2 21/49,50

மேல்

மாற்றிய (2)

மலை மறை அதகம் மாற்றிய அது போல் – கல்லாடம்:2 6/17
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே – கல்லாடம்:2 6/44

மேல்

மாற்றும் (1)

உடல் புலவு மாற்றும் பட திரை வையை – கல்லாடம்:2 26/25

மேல்

மாறனும் (1)

மாறனும் புலவரும் மயங்குறு காலை – கல்லாடம்:2 3/11

மேல்

மாறா (2)

மாறா கற்பின் அன்னை – கல்லாடம்:2 2/24
அடும் தீ மாறா மடைப்பள்ளி ஆகி – கல்லாடம்:2 23/37

மேல்

மாறி (2)

மாறி குனித்த நீறு அணி பெருமாற்கு – கல்லாடம்:2 23/35
காவில் மாறி துயில் அழுங்குதற்கே – கல்லாடம்:2 34/25

மேல்

மாறின் (1)

பீரமும் நோயும் மாறின்
வாரி துறைவற்கு என் ஆதும்மே – கல்லாடம்:2 30/24,25

மேல்

மாறுகொண்டு (1)

மாறுகொண்டு அறையும் மதி நூல் கடல் கிளர் – கல்லாடம்:2 62/25

மேல்

மாறுபட்டு (1)

வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து – கல்லாடம்:2 99/1

மேல்

மாறுபாடு (1)

மாறுபாடு கூறுதல் இலனே – கல்லாடம்:2 16/28

மேல்

மான் (6)

போன நம் தனி நமர் புள் இயல் மான் தேர் – கல்லாடம்:2 14/21
கரம் மான் தரித்த பெருமான் இறைவன் – கல்லாடம்:2 36/5
கொய் உளை கடு மான் கொளுவிய தேரொடு – கல்லாடம்:2 68/11
கடு_மான் கீழ்ந்த கட_மலை பல் மருப்பு – கல்லாடம்:2 68/16
பொரி குறி மட மான் சுழி தலை கவிழ – கல்லாடம்:2 94/11
மான் தலை கரத்தினில் கூடை வயக்கி – கல்லாடம்:2 99/4

மேல்

மான (5)

கரை அற அணியும் மான கலனுள் – கல்லாடம்:2 19/17
நல்வழி மான புல் வழி புரண்டது – கல்லாடம்:2 26/6
உடல் நிழல் மான உனது அருள் நிற்கும் – கல்லாடம்:2 62/18
நிலம் இரண்டு அளந்த நெடு முகில் மான
அரக்கர்-தம் கூட்டம் தொலைத்து நெய் உண்டு – கல்லாடம்:2 72/4,5
அரக்கர் துய்த்து உடற்றும் அதுவே மான
பாசடை மறைத்து எழு முளரி அம் கயத்துள் – கல்லாடம்:2 90/9,10

மேல்

மானவும் (1)

வீரம் அங்கு ஈந்த பின் விளிவது மானவும்
இருள் உடல் அரக்கியர் கலைமகள் கண்டு – கல்லாடம்:2 73/20,21

மேல்

மானிட (2)

மானிட மாக்கள் அரக்கி கை பட்டு என – கல்லாடம்:2 42/7
மானிட மகளிர்தாமும் நின்று எதிர்ந்து – கல்லாடம்:2 73/16

மேல்

மானின் (1)

மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும் – கல்லாடம்:2 17/3

மேல்

மானும் (4)

நெட்டு இலை அரம்பை குறுங்காய் மானும்
முளியம் தறிந்த கணைகொள் வாய் திரிகல் – கல்லாடம்:2 24/12,13
பாவையும் மானும் தெருள்பவர் ஊரும் – கல்லாடம்:2 29/4
கடல் திரை உகளும் குறும் கயல் மானும்
கடும் கான் தள்ளி தடைதரு நெஞ்சம் – கல்லாடம்:2 31/4,5
அவன் கழல் சொல்லுநர் அருவினை மானும்
மலை முலை பகை அட மாழ்குறும் நுசுப்பு – கல்லாடம்:2 41/44,45

மேல்