தி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 6
திகழ் 3
திகைத்த 1
திகைப்ப 1
திங்கள் 3
திங்களும் 2
திசை 14
திசை-நின்று 1
திசைதிசை 1
திசையும் 1
திசையுள் 1
திசையோன் 1
திட்டை 1
திடர் 1
திடர்செய்து 1
திண் 2
திண்மையும் 1
திணி 3
திணை 3
திமிர்ந்து 1
திமிர்ப்ப 2
தியங்கி 1
தியங்கும் 1
திரட்டி 3
திரட்டு 1
திரண்ட 2
திரள் 11
திரளும் 2
திரன் 1
திரிகல் 1
திரிதரும் 1
திரிந்து 6
திரிந்தே 1
திரியும் 1
திரிவும் 1
திரு 78
திரு_நுதலே 1
திருக்கண் 1
திருக்களம் 1
திருக்குளம் 1
திருக்குறள் 1
திருகல் 1
திருகி 2
திருகு 1
திருத்தளி 1
திருத்தி 2
திருத்திய 1
திருந்தா 1
திருந்திய 1
திருந்து 2
திருந்து_இழை 1
திருநடம் 2
திருநடுவூர் 1
திருநதி 3
திருநீற்று 1
திருநுதல் 1
திருநூல் 1
திருப்பதத்து 1
திருமகட்கு 2
திருமகள் 3
திருமகளை 1
திருமணம் 1
திருமதி 1
திருமலர் 3
திருமார்பு 1
திருமுகத்து 1
திருமுகம் 1
திருமுடிக்கு 1
திருமுன் 1
திருவடி 13
திருவடிவு 1
திருவம் 1
திருவயிற்று 1
திருவறம் 1
திருவின் 1
திருவினட்கு 1
திருவினர் 2
திருவினள் 3
திருவினை 1
திருவுடல் 2
திருவுடன் 2
திருவும் 3
திருவுரு 2
திருவுருவு 1
திருவுலகு 1
திருவொடு 1
திருவொடும் 2
திருஆலவாய் 1
திரை 34
திரைத்து 1
திரையிடை 1
திரையொடு 1
தில்லை 1
திலகம் 1
திவலையும் 1
திளைத்தும் 1
திளையா 1
திறத்தானும் 1
திறந்து 4
திறப்ப 1
திறம் 2
திறல் 3
திறன் 3
திறை 1
தின்று 1
தினை 2

திக்கு (6)

எண் திக்கு அளந்துகொண்டன என்ன – கல்லாடம்:2 16/15
மண் புலன் அகழ்ந்து திக்கு நிலை மயக்கி – கல்லாடம்:2 19/29
திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும் – கல்லாடம்:2 21/2
திக்கு படர் ஆணை வேலி கோலி – கல்லாடம்:2 37/13
எரி அலர் முண்டகத்து அடவி திக்கு எறிய – கல்லாடம்:2 54/26
திக்கு விண் பெருக திருமதி கைலை – கல்லாடம்:2 57/13

மேல்

திகழ் (3)

மற்று அது பூத்த பொன் திகழ் தாமரை – கல்லாடம்:2 18/19
எண் திகழ் பகுவாம் இன மணி பாந்தள் – கல்லாடம்:2 23/32
கடு திகழ் கண்ணி அ கல்லை இ கணமே – கல்லாடம்:2 91/17

மேல்

திகைத்த (1)

எதிர் சொல் கேட்ப கால் புக திகைத்த
நெருக்கு பொழில் புக்கும் நெடு மலை கூயும் – கல்லாடம்:2 28/26,27

மேல்

திகைப்ப (1)

தென்கால் திகைப்ப வடகால் வளர – கல்லாடம்:2 94/7

மேல்

திங்கள் (3)

திங்கள் முடி பொறுத்த பொன்மலை அருவி – கல்லாடம்:1 1/1
குறிபடு திங்கள் ஒரு பதும் புகாது – கல்லாடம்:2 5/14
திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும் – கல்லாடம்:2 17/15

மேல்

திங்களும் (2)

திங்களும் புயலும் பரிதியும் சுமந்த – கல்லாடம்:2 2/2
நிலமகள் உடலமும் திங்களும் குளிர – கல்லாடம்:2 94/28

மேல்

திசை (14)

மூடிய நால் திசை முகில் துகில் விரித்து – கல்லாடம்:2 14/3
போற்றுறு திருவம் நால் திசை பொலிய – கல்லாடம்:2 14/8
இரும் திசை போக்கு பெரும் தோள் ஆக – கல்லாடம்:2 20/27
தேக்கு இலை விரித்து நால் திசை வைத்து – கல்லாடம்:2 24/6
எண் திசை கரு இருந்து இன மழை கான்றது – கல்லாடம்:2 26/2
நெடும் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை – கல்லாடம்:2 29/5
நால் திசை நடக்கும் அணங்கின் அவயவத்து – கல்லாடம்:2 31/2
தென் திசை பாணன் அடிமை யான் என – கல்லாடம்:2 43/26
வழங்குறு கிளவியின் திசை என மாழ்கியும் – கல்லாடம்:2 44/6
ஒரு திசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும் – கல்லாடம்:2 44/7
தேம் படர்ந்தனன் எனின் திசை குறிக்குநரால் – கல்லாடம்:2 71/37
விண் உடைத்து அரற்றவும் திசை உட்க முரியவும் – கல்லாடம்:2 78/20
எண் திசை சாகை கொண்டு இருள் மனம் பொதுளி – கல்லாடம்:2 83/2
தென் திசை கோமகன் பகடு பொலிந்து அன்ன – கல்லாடம்:2 96/3

மேல்

திசை-நின்று (1)

திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறி – கல்லாடம்:2 7/29

மேல்

திசைதிசை (1)

தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச – கல்லாடம்:2 82/32

மேல்

திசையும் (1)

இரு நால் திசையும் உண் பலி தூவி – கல்லாடம்:2 47/6

மேல்

திசையுள் (1)

பத்து திசையுள் எட்டு அவை உடைப்ப – கல்லாடம்:2 88/35

மேல்

திசையோன் (1)

தென்கீழ் திசையோன் தெறுதரு தீயும் – கல்லாடம்:1 1/12

மேல்

திட்டை (1)

திட்டை ஏறு சிவந்த விதாயம் – கல்லாடம்:2 98/40

மேல்

திடர் (1)

பளிங்க பொருப்பின் திடர் கொள் மூதூர் – கல்லாடம்:2 61/5

மேல்

திடர்செய்து (1)

தென்கடல் நடு திடர்செய்து உறைந்து இமையவர் – கல்லாடம்:2 48/9

மேல்

திண் (2)

இரும் திண் போர்வை பிணி விசி முரசம் – கல்லாடம்:2 18/14
ஒரு தாள் எழு புவி ஒருவ திண் தோள் – கல்லாடம்:2 88/34

மேல்

திண்மையும் (1)

திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட – கல்லாடம்:2 80/13

மேல்

திணி (3)

தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன – கல்லாடம்:2 5/25
கண் புதை யாப்பு திணி இருள் விடிய – கல்லாடம்:2 45/19
திணி புகும் வென்றி செரு அழல் கூடவும் – கல்லாடம்:2 76/6

மேல்

திணை (3)

மீனும் கொடியும் விரி திணை ஐந்தும் – கல்லாடம்:2 9/11
திணை ஐந்து அமைத்த இணையிலி நாயகன் – கல்லாடம்:2 64/21
ஈங்கு இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும் – கல்லாடம்:2 71/28

மேல்

திமிர்ந்து (1)

சுண்ணமும் கலந்து திமிர்ந்து உடல் ஊற்றி – கல்லாடம்:2 87/14

மேல்

திமிர்ப்ப (2)

முடி தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும் – கல்லாடம்:2 47/18
உடையோர் திமிர்ப்ப வரும் உயிர்ப்பு ஒடுக்கி – கல்லாடம்:2 90/19

மேல்

தியங்கி (1)

தியங்கி உடல் ஈட்டிய கரும் கடு வினையால் – கல்லாடம்:2 70/16

மேல்

தியங்கும் (1)

புலனொடு தியங்கும் பொய் உளம் கடந்த – கல்லாடம்:2 62/27

மேல்

திரட்டி (3)

பரப்பின் தமிழ் சுவை திரட்டி மற்று அவர்க்கு – கல்லாடம்:2 3/15
வேங்கையும் பொன்னும் ஓருழி திரட்டி
வரை_அரமகளிர்க்கு அணி அணி கொடுத்து – கல்லாடம்:2 68/22,23
வானவர் நெடு முடி மணி தொகை திரட்டி
பதுக்கைசெய் அம்பல திரு பெரும் பதியினும் – கல்லாடம்:2 76/13,14

மேல்

திரட்டு (1)

தெறித்திடு முத்தம் திரட்டு வைப்பினளே – கல்லாடம்:2 51/20

மேல்

திரண்ட (2)

இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து – கல்லாடம்:2 19/28
இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட அ காவதம் – கல்லாடம்:2 83/4

மேல்

திரள் (11)

செங்கதிர் திரள் எழு கரும் கடல் போல – கல்லாடம்:1 1/5
தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடு திரள்
பொரியின் கொறிப்ப புரிந்த பொருள் நாடி – கல்லாடம்:1 2/29,30
பெரும் திரள் கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து – கல்லாடம்:2 15/10
ஏழு உயர் கரி திரள் கதமொடு பிளிறும் – கல்லாடம்:2 20/38
எழு கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க – கல்லாடம்:2 21/33
எண்ணில் பெறாத அண்ட பெரும் திரள்
அடைவு ஈன்று அளித்த பிறை நுதல் கன்னியொடும் – கல்லாடம்:2 27/16,17
கவை துகிர் வடவையின் திரள் சிகை பரப்பி – கல்லாடம்:2 43/1
அணி தலை மாலையை நிறைமதி திரள் என – கல்லாடம்:2 55/8
கனல் தலை பழுத்த திரள் பரல் முரம்பு – கல்லாடம்:2 59/6
திரள் பளிங்கு உடைத்து சிதறுவது என்ன – கல்லாடம்:2 68/20
ஆர் எரி மணி திரள் அருளியது எனவும் – கல்லாடம்:2 73/24

மேல்

திரளும் (2)

அன்ன திரளும் பெரும் கரி ஆக – கல்லாடம்:2 21/23
திரு உடல் நிறை விழி ஆயிர திரளும்
இமையாது விழித்த தோற்றம் போல – கல்லாடம்:2 23/2,3

மேல்

திரன் (1)

அண்ட பெரும் திரன் அடைவு ஈன்று அளித்த – கல்லாடம்:2 6/35

மேல்

திரிகல் (1)

முளியம் தறிந்த கணைகொள் வாய் திரிகல்
ஒப்புடைத்தாய வட்ட வாய் தொண்டகம் – கல்லாடம்:2 24/13,14

மேல்

திரிதரும் (1)

வளர் மறி தகர் என திரிதரும் பாண்மகன் – கல்லாடம்:2 89/13

மேல்

திரிந்து (6)

செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது – கல்லாடம்:2 5/7
பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில் – கல்லாடம்:2 17/28
விண் திரிந்து முழங்கி வீழாதாக – கல்லாடம்:2 37/3
மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந்து உடைந்து – கல்லாடம்:2 54/33
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல் – கல்லாடம்:2 70/13
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம் – கல்லாடம்:2 72/15

மேல்

திரிந்தே (1)

அடையலர் போல மருள் மனம் திரிந்தே – கல்லாடம்:2 66/31

மேல்

திரியும் (1)

செறி பிறப்பு இறப்பு என இரு வகை திரியும்
நெடும் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை – கல்லாடம்:2 13/15,16

மேல்

திரிவும் (1)

செய்குறி குணனும் சிந்தையுள் திரிவும்
உழை நின்று அறிந்து பழங்கண் கவர்ந்தும் – கல்லாடம்:2 44/3,4

மேல்

திரு (78)

ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு – கல்லாடம்:1 2/50
கூறாம் மதிய திரு நுதல் கொடியே – கல்லாடம்:2 2/25
திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில் – கல்லாடம்:2 4/2
விரிதரு கூழையும் திரு முடி கூடாது – கல்லாடம்:2 5/26
மாவொடும் கொன்ற மணி நெடும் திரு வேல் – கல்லாடம்:2 8/6
தேன் உறை தமிழும் திரு உறை கூடலும் – கல்லாடம்:2 9/12
விரி திரை வையை திரு நதி சூழ்ந்த – கல்லாடம்:2 9/18
குவலய திரு மலர் கொணர்ந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/27
திரு பெரு வதுவை பொருந்திய அ நாள் – கல்லாடம்:2 10/18
நீங்கா திரு உடை நலனும் – கல்லாடம்:2 14/47
கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும் – கல்லாடம்:2 15/24
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/4
திரு நெடுமாலுக்கு ஒருவிசை புரிந்து – கல்லாடம்:2 18/5
நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில் – கல்லாடம்:2 19/15
திரு மலர் எடுத்து கொன்றை காட்ட – கல்லாடம்:2 20/9
வழு அறு திரு மறை ஓசைகள் அனைத்தும் – கல்லாடம்:2 20/28
அ மலை திரு நுதற்கு அழியாது அமைத்த – கல்லாடம்:2 22/9
ஒரு கடல் இரண்டு திரு பயந்தாங்கு – கல்லாடம்:2 22/30
மூன்று புரம் வேவ திரு நகை விளையாட்டு – கல்லாடம்:2 22/41
இரு தாள் பெற்றவர் பெறும் திரு போல – கல்லாடம்:2 22/52
வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே – கல்லாடம்:2 22/55
திரு உடல் நிறை விழி ஆயிர திரளும் – கல்லாடம்:2 23/2
உளத்து நின்று அளிக்கும் திரு தகும் அருநூல் – கல்லாடம்:2 25/4
பெறாததோர் திரு உருத்தான் பெரிது நிறுத்தி – கல்லாடம்:2 28/5
புவி அளந்து உண்ட திரு நெடுமாலோன் – கல்லாடம்:2 30/12
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/11
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/11
அருள் திரு எழுத்தும் பொருள் திரு மறையும் – கல்லாடம்:2 38/19
அருள் திரு எழுத்தும் பொருள் திரு மறையும் – கல்லாடம்:2 38/19
விரும்பிய குணமும் அரும் திரு உருவும் – கல்லாடம்:2 38/20
திரு மிடற்று இருள் என செறிதரும் மா முகில் – கல்லாடம்:2 47/29
சேவல் அன்னம் திரு மலர் கள்ளினை – கல்லாடம்:2 49/18
வரை என நிறுத்திய திரு உறை பெரும் தோள் – கல்லாடம்:2 52/6
செய்ததும் அன்றி திரு மனம் பணைத்து – கல்லாடம்:2 52/8
பெரு மறை முழங்கும் திரு நகர் கூடல் – கல்லாடம்:2 52/25
நுனி கவின் நிறைந்த திரு பெரு வடிவினள் – கல்லாடம்:2 53/1
வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திரு வட – கல்லாடம்:2 53/10
திரு மருங்கு அணைந்து வரு புனல் வையை – கல்லாடம்:2 54/10
நெட்டு இலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில் – கல்லாடம்:2 54/23
தெய்வ பிறை இருந்த திரு நுதல் பேதையை – கல்லாடம்:2 55/4
இரு புறம் தழைத்த திரு நிழல் இருக்கும் – கல்லாடம்:2 56/11
ஒருவழி படர்ந்தது என் அ திரு முகம் – கல்லாடம்:2 57/20
திரு அஞ்செழுத்து குறையாது இரட்ட – கல்லாடம்:2 58/25
ஆயிரம் திரு முகத்து அருள் நதி சிறுமதி – கல்லாடம்:2 58/31
கன்னி செங்கோட்டம் கரியோன் திரு உறை – கல்லாடம்:2 59/26
களவு உடல் பிளந்த ஒளி கெழு திரு வேல் – கல்லாடம்:2 59/29
திரு நுதல் நோக்கத்து எரிபெற கடந்து – கல்லாடம்:2 62/24
சேர வறந்த திரு தகு நாளில் – கல்லாடம்:2 64/4
திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும் – கல்லாடம்:2 65/3
திரு உலரு அளிக்கும் கடல் மட மகளே – கல்லாடம்:2 65/31
நிலை உடை பெரும் திரு நேர்படு காலை – கல்லாடம்:2 66/1
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன் – கல்லாடம்:2 69/33
மந்திர திரு வேல் மறம் கெழு மயிலோன் – கல்லாடம்:2 70/5
நிறை உடல் அடங்க திரு விழி நிறைத்து – கல்லாடம்:2 71/3
இனைய எவ்வுலகும் தொழுது எழு திரு வேல் – கல்லாடம்:2 72/8
பல் தலை பாந்தள் சுமை திரு தோளில் – கல்லாடம்:2 75/9
தரித்து உலகு அளிக்கும் திரு தகு நாளில் – கல்லாடம்:2 75/10
பகுத்து உண்டு ஈகுநர் நிலை திரு முன்னர் – கல்லாடம்:2 75/23
பதுக்கைசெய் அம்பல திரு பெரும் பதியினும் – கல்லாடம்:2 76/14
உறை சூர் பகையினன் பெறு திரு வயிற்றினள் – கல்லாடம்:2 79/13
மண் திரு வேட்டு பஞ்சவன் பொருத – கல்லாடம்:2 80/11
திரு மனம் கொள்ளா சேக்கையது ஆக – கல்லாடம்:2 80/29
திரு பெறும் அயலவர் காண – கல்லாடம்:2 80/33
அளவா திரு மணி அளித்தலானும் – கல்லாடம்:2 81/2
மணி வேல் குமரன் திரு வளர் குன்றம் – கல்லாடம்:2 81/14
திரு முத்தமிழும் பெருகு தென்மலையத்து – கல்லாடம்:2 81/28
பெரும் திரு கூடல் அரும் தவர் பெருமான் – கல்லாடம்:2 84/8
கழுவிய திரு மணி கால் பெற்று என்ன – கல்லாடம்:2 84/20
அற்புத கோப திரு வரவு அதற்கே – கல்லாடம்:2 84/22
திரு நுதல் கண்ணும் மலைமகள் பக்கமும் – கல்லாடம்:2 87/24
தீ வாய் புலியினை திரு தவர் நகைப்ப – கல்லாடம்:2 87/27
திரு நகர் காசி பதியகத்து என்றும் – கல்லாடம்:2 87/36
சேயோன் குன்று அக திரு பெறு கூடல் – கல்லாடம்:2 91/4
இரு விழி பொலி அ திரு நகர்ப்புறத்து – கல்லாடம்:2 93/7
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன் – கல்லாடம்:2 93/23
இரு வகை ஏழ் எனும் திரு உலகு அனைத்தும் – கல்லாடம்:2 94/34
செங்கதிர் விரித்த செம் திரு மலர் தாமரை – கல்லாடம்:2 95/16
எழு கதிர் விரிக்கும் திரு மணி எடுத்து – கல்லாடம்:2 98/4

மேல்

திரு_நுதலே (1)

வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே – கல்லாடம்:2 22/55

மேல்

திருக்கண் (1)

திருக்கண் கண்ட பெருக்கினர் போல – கல்லாடம்:2 50/30

மேல்

திருக்களம் (1)

திருக்களம் கறுத்த அருள் பெரு நாயகன் – கல்லாடம்:2 51/31

மேல்

திருக்குளம் (1)

திருக்குளம் முளைத்த கண் தாமரை கொடு – கல்லாடம்:2 31/9

மேல்

திருக்குறள் (1)

தேரான் தெளிவு எனும் திருக்குறள் புகுந்தும் – கல்லாடம்:2 60/2

மேல்

திருகல் (1)

திருகல் முரணே செம்மண் இறுகல் – கல்லாடம்:2 98/22

மேல்

திருகி (2)

செம் மனம் திருகி உள்ளம் துடித்து – கல்லாடம்:2 2/22
கனை கதிர் திருகி கல் சேர்ந்து முறை புக – கல்லாடம்:2 38/2

மேல்

திருகு (1)

திருகு புரி கோட்டு தகர் வரு மதியோய் – கல்லாடம்:1 2/34

மேல்

திருத்தளி (1)

சென்னி மா புரம் சேரன் திருத்தளி
கன்னி செங்கோட்டம் கரியோன் திரு உறை – கல்லாடம்:2 59/25,26

மேல்

திருத்தி (2)

தேர் வரை வையம் ஆக திருத்தி
சென்னி மலை ஈன்ற கன்னி வில் பிடிப்ப – கல்லாடம்:2 25/23,24
சென்று எறிந்து ஒடுங்கும் துறுமிடை திருத்தி
ஞெள்ளலில் குனித்த இரு மாத்திரைக்கு – கல்லாடம்:2 99/15,16

மேல்

திருத்திய (1)

விதிவர திருத்திய மேதினி பொறையை – கல்லாடம்:2 52/3

மேல்

திருந்தா (1)

சீறுணவு இன்ப திருந்தா வாழ்க்கையை – கல்லாடம்:2 80/4

மேல்

திருந்திய (1)

திருந்திய திருநுதல் துகிர் இளம்_கொடியே – கல்லாடம்:2 42/34

மேல்

திருந்து (2)

முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது – கல்லாடம்:2 5/24
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை – கல்லாடம்:2 66/11

மேல்

திருந்து_இழை (1)

எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் – கல்லாடம்:2 66/11,12

மேல்

திருநடம் (2)

திருநடம் நவின்ற உலகு உயிர் பெருமான் – கல்லாடம்:2 41/9
திருநடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை – கல்லாடம்:2 90/13

மேல்

திருநடுவூர் (1)

வட திருஆலவாய் திருநடுவூர்
வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை – கல்லாடம்:2 59/22,23

மேல்

திருநதி (3)

முக்கவர் திருநதி துணையுடன் மூழ்கி – கல்லாடம்:2 44/17
பெரும் கத திருநதி ஒருங்குழி மடங்க – கல்லாடம்:2 57/23
சேகரத்து இறங்கும் திருநதி துறையும் – கல்லாடம்:2 66/23

மேல்

திருநீற்று (1)

வெண் திருநீற்று செக்கர் மேனியன் – கல்லாடம்:2 39/9

மேல்

திருநுதல் (1)

திருந்திய திருநுதல் துகிர் இளம்_கொடியே – கல்லாடம்:2 42/34

மேல்

திருநூல் (1)

பேர் அருள் திருநூல் பெரும் துறவு எங்கும் – கல்லாடம்:2 86/32

மேல்

திருப்பதத்து (1)

மூவா திருப்பதத்து ஒரு தனி பெருமான் – கல்லாடம்:2 27/15

மேல்

திருமகட்கு (2)

திருமகட்கு அடுத்தது என் என்று – கல்லாடம்:2 3/21
அரும் பொருள் செல்வி எனும் திருமகட்கு
மானிட மகளிர்தாமும் நின்று எதிர்ந்து – கல்லாடம்:2 73/15,16

மேல்

திருமகள் (3)

முல்லை அம் திருமகள் கோபம் வாய் மலர்ந்து – கல்லாடம்:2 14/18
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை இன்று – கல்லாடம்:2 74/3
மாசறு திருமகள் மலர் புகுந்து ஆயிரம் – கல்லாடம்:2 76/3

மேல்

திருமகளை (1)

செம் திருமகளை செயம்கொள் மங்கையை – கல்லாடம்:2 20/2

மேல்

திருமணம் (1)

அரு மறை விதிக்க திருமணம் புணர்ந்து – கல்லாடம்:2 12/13

மேல்

திருமதி (1)

திக்கு விண் பெருக திருமதி கைலை – கல்லாடம்:2 57/13

மேல்

திருமலர் (3)

திருமலர் எழுதிய வரை இருபத்தைந்து – கல்லாடம்:2 8/23
திருமலர் இருந்த முதியவன் போல – கல்லாடம்:2 72/1
குழவி அம் கதிர் பெற திருமலர் அணங்க – கல்லாடம்:2 94/25

மேல்

திருமார்பு (1)

கருமா எயிறு திருமார்பு தூக்கி – கல்லாடம்:2 26/17

மேல்

திருமுகத்து (1)

மூ_இரு திருமுகத்து ஒரு வேலவற்கு – கல்லாடம்:2 7/8

மேல்

திருமுகம் (1)

மதி மலி புரிசை திருமுகம் கூறி – கல்லாடம்:2 11/27

மேல்

திருமுடிக்கு (1)

கொடுமர தழும்பு திருமுடிக்கு அணிந்து – கல்லாடம்:2 48/5

மேல்

திருமுன் (1)

பாலை கிழத்தி திருமுன் நாட்டிய – கல்லாடம்:2 17/45

மேல்

திருவடி (13)

திருவடி வினவா கரு உறை மாக்கள் – கல்லாடம்:2 8/30
பொன் பழித்து எடுத்த இன்புறு திருவடி
உளம் விழுங்காத களவினர் போல என் – கல்லாடம்:2 36/6,7
திருவடி சுமந்த அருளினர் போல – கல்லாடம்:2 39/17
திருவடி புகழுநர் செல்வம் போலும் – கல்லாடம்:2 41/42
கூடல் பெருமான் பொன் பிறழ் திருவடி
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல – கல்லாடம்:2 42/29,30
சே கொள் முளரி அலர்த்திய திருவடி
கண் பருகாத களவினர் உளம் போல் – கல்லாடம்:2 46/11,12
திருவடி பெரும் தேன் பருகுநர் போல – கல்லாடம்:2 48/14
மது மலர் பறித்து திருவடி நிறைத்த – கல்லாடம்:2 54/7
நாயகன் திருவடி நண்ணலர் போல – கல்லாடம்:2 56/14
திருவடி பெருவிரல் தலை நக நுதியால் – கல்லாடம்:2 78/22
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும் – கல்லாடம்:2 87/40
ஒரு நடம் குலவிய திருவடி உரவோன் – கல்லாடம்:2 88/36
கனவிலும் காணா புனைவரும் திருவடி
மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி – கல்லாடம்:2 98/2,3

மேல்

திருவடிவு (1)

திருவடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும் – கல்லாடம்:2 13/3

மேல்

திருவம் (1)

போற்றுறு திருவம் நால் திசை பொலிய – கல்லாடம்:2 14/8

மேல்

திருவயிற்று (1)

நெடுநாள் திருவயிற்று அருளுடன் இருந்த – கல்லாடம்:2 75/11

மேல்

திருவறம் (1)

திருவறம் வந்த ஒருவன் தூதுகள் – கல்லாடம்:2 100/30

மேல்

திருவின் (1)

நின் உயிர்க்கு இன்னல் நேர்தர திருவின்
தன் உயிர்க்கு இன்னல் தவறில ஆஆ – கல்லாடம்:2 97/22,23

மேல்

திருவினட்கு (1)

நுனித்த மேனி திருவினட்கு அடைத்த – கல்லாடம்:2 20/44

மேல்

திருவினர் (2)

தெய்வம் பராய மெய்யரும் திருவினர்
கரும் கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த – கல்லாடம்:2 15/13,14
ஆறு எதிர்ப்பட்ட அரும் தவ திருவினர்
தணியா கொடும் சுரம் தரும் தழல் தாவி – கல்லாடம்:2 40/7,8

மேல்

திருவினள் (3)

நல் அறம் பூத்த முல்லை அம் திருவினள்
நின் உளத்து இன்னல் மன் அற களைந்து – கல்லாடம்:2 50/32,33
நெடும் கயல் எறி விழி குறும் தொடி திருவினள்
தெய்வம் என்று ஒருகால் தெளியவும் உளத்து இலள் – கல்லாடம்:2 61/16,17
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ – கல்லாடம்:2 90/3

மேல்

திருவினை (1)

முலை மூன்று அணைந்த சிலை நுதல் திருவினை
அரு மறை விதிக்க திருமணம் புணர்ந்து – கல்லாடம்:2 12/12,13

மேல்

திருவுடல் (2)

தனி நெடு விசும்பு திருவுடல் ஆக – கல்லாடம்:2 20/26
இருவினை துரந்த திருவுடல் மூழ்கி – கல்லாடம்:2 40/2

மேல்

திருவுடன் (2)

செங்கோல் திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய – கல்லாடம்:2 64/1
துறவு எனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர் – கல்லாடம்:2 80/8

மேல்

திருவும் (3)

அமுதமும் திருவும் உதவுதலானும் – கல்லாடம்:2 11/7
புதை இருள் துரக்கும் வெயில் மணி திருவும்
தண்ணம் பிறையும் தலை பெற நிறுத்துக – கல்லாடம்:2 14/38,39
கல்வியும் திருவும் காலமும் கொடியும் – கல்லாடம்:2 80/18

மேல்

திருவுரு (2)

ஒன்றிய திருவுரு நின்று நனி காட்டி – கல்லாடம்:2 58/33
உலகு உயிர்க்கு உயிர் எனும் திருவுரு அணைந்து – கல்லாடம்:2 69/27

மேல்

திருவுருவு (1)

எரி மழு நவ்வியும் பெறும் அருள் திருவுருவு
எடுத்து உடன் அந்த கடு கொலை அரவினை – கல்லாடம்:2 87/25,26

மேல்

திருவுலகு (1)

திருவுலகு அளிக்கும் பருதி வானவனே – கல்லாடம்:2 29/31

மேல்

திருவொடு (1)

அருள் முக திருவொடு மலர் முகம் குவிய – கல்லாடம்:2 64/24

மேல்

திருவொடும் (2)

செறிக இன்று அம்ம திருவொடும் பொலிந்தே – கல்லாடம்:2 64/34
தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி – கல்லாடம்:2 68/8

மேல்

திருஆலவாய் (1)

வட திருஆலவாய் திருநடுவூர் – கல்லாடம்:2 59/22

மேல்

திரை (34)

கடல் திரை சிறுக மலக்கு துயர் காட்டும் – கல்லாடம்:1 1/29
பாய் திரை உடுத்த ஞால முடிவு என்ன – கல்லாடம்:1 2/1
செம் துகிர் படரும் திரை கடல் புக்கு – கல்லாடம்:1 2/6
திரை எறி மலைகளின் கவடு பல போக்கி – கல்லாடம்:1 2/8
அகல் திரை பரப்பின் சடை அசைந்து அலையாது – கல்லாடம்:1 2/10
விரி திரை வையை திரு நதி சூழ்ந்த – கல்லாடம்:2 9/18
இரு திரை எடுக்க பொரு திரை எடுத்தும் – கல்லாடம்:2 9/22
இரு திரை எடுக்க பொரு திரை எடுத்தும் – கல்லாடம்:2 9/22
மறி திரை பெரு நதி வரவழைத்து அருளிய – கல்லாடம்:2 10/22
வரை நிரை கிடந்த திரை உவர் புகுந்து – கல்லாடம்:2 15/22
அ பெரும் கங்கை கக்கிய திரை என – கல்லாடம்:2 16/10
செறி திரை பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற – கல்லாடம்:2 17/9
திரை கடல் குடித்த கரத்த மா முனிக்கும் – கல்லாடம்:2 17/14
உடல் புலவு மாற்றும் பட திரை வையை – கல்லாடம்:2 26/25
மறி திரை பரவை புடை வயிறு குழம்ப – கல்லாடம்:2 29/12
எடுத்து மூடி எறி திரை பழனத்து – கல்லாடம்:2 29/19
கடல் திரை உகளும் குறும் கயல் மானும் – கல்லாடம்:2 31/4
கொண்மூ பல் திரை புனலுடன் தாழ்த்தி – கல்லாடம்:2 40/10
நடை திரை பரவை நால் கடல் அணைத்து – கல்லாடம்:2 52/1
வரை புரண்டு என்ன திரை நிரை துறையகத்து – கல்லாடம்:2 54/11
நூலொடு துவளும் தோல் திரை உரத்தின் – கல்லாடம்:2 57/8
மறி திரை கடலுள் மா என கவிழ்ந்த – கல்லாடம்:2 59/28
எறி திரை பழன கூடல் – கல்லாடம்:2 64/33
மணி திரை உகைக்கும் கடலினின் கவினி – கல்லாடம்:2 71/6
கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை – கல்லாடம்:2 72/20
விண் தொட எழுந்து விழும் திரை குழுவினை – கல்லாடம்:2 72/29
கலி திரை பரவையும் கனன்று எழு வடவையும் – கல்லாடம்:2 73/2
திரை விழி பருந்து இனம் வளை உகிர் படையால் – கல்லாடம்:2 79/3
திரை கடல் தெய்வம் முன் தெளி சூள் வாங்கியும் – கல்லாடம்:2 79/21
திரை நிரை திரைத்து கரை கரை கொல்லும் – கல்லாடம்:2 86/4
திரை எதிர் தள்ளி மலர் துகில் கண் புதைத்து – கல்லாடம்:2 87/12
முதிர் திரை அடிக்கும் பரிதி அம் தோழம் – கல்லாடம்:2 89/23
உடை திரை அருவி ஒளி மணி காலும் – கல்லாடம்:2 91/3
கைதை வெண் குருகு எழ மொய் திரை உகளும் – கல்லாடம்:2 92/13

மேல்

திரைத்து (1)

திரை நிரை திரைத்து கரை கரை கொல்லும் – கல்லாடம்:2 86/4

மேல்

திரையிடை (1)

மீன் பாய்ந்து மறிக்க திரையிடை மயங்கி – கல்லாடம்:2 21/14

மேல்

திரையொடு (1)

ஊடி ஆடுநர் திரையொடு பிணங்கி – கல்லாடம்:2 41/33

மேல்

தில்லை (1)

தில்லை கண்ட புலிக்கால்_முனிவனும் – கல்லாடம்:2 41/5

மேல்

திலகம் (1)

செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம் – கல்லாடம்:2 98/31

மேல்

திவலையும் (1)

கறங்கு இசை அருவி அறைந்து நிமிர் திவலையும்
துருத்தி வாய் அதுக்கிய குங்கும காண்டமும் – கல்லாடம்:2 50/15,16

மேல்

திளைத்தும் (1)

விளி மொழி ஏற்றும் விதலையின் திளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும் – கல்லாடம்:2 54/17,18

மேல்

திளையா (1)

திளையா தாரைகள் சேரா – கல்லாடம்:2 60/28

மேல்

திறத்தானும் (1)

பல உலகு எடுத்த ஒரு திறத்தானும்
நிறையும் பொறையும் பெறும் நிலையானும் – கல்லாடம்:2 11/2,3

மேல்

திறந்து (4)

ஒரு வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த – கல்லாடம்:2 8/17
அருப்பு முலை கண் திறந்து உமிழ் மது பால் – கல்லாடம்:2 46/3
நிரை இதழ் திறந்து மது வண்டு அருந்தும் – கல்லாடம்:2 58/1
பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும் – கல்லாடம்:2 78/18

மேல்

திறப்ப (1)

சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப
மா குயில் மாழ்கி கூக்குரல் அடைப்ப – கல்லாடம்:2 94/17,18

மேல்

திறம் (2)

சமய கணக்கர்-தம் திறம் கடந்து – கல்லாடம்:2 62/26
அவர் திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க – கல்லாடம்:2 71/32

மேல்

திறல் (3)

நெருப்பு உருத்து அன்ன செரு திறல் வரைந்த – கல்லாடம்:2 6/7
நிறைந்து உறை முக்கண் பெரும் திறல் அடிகள் – கல்லாடம்:2 24/34
அடும் திறல் இனைய கொடும் தொழில் பெருக்கிய – கல்லாடம்:2 67/21

மேல்

திறன் (3)

வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும் – கல்லாடம்:2 27/10
உளையோ மன திறன் ஓதுகவே – கல்லாடம்:2 38/34
செவ்விதின் செல்லும் திறன் இனி யானே – கல்லாடம்:2 44/29

மேல்

திறை (1)

ஒன்னலர் இடும் திறை செலினும் – கல்லாடம்:2 62/31

மேல்

தின்று (1)

சொன்றி பெரு மலை தின்று நனி தொலைத்த – கல்லாடம்:2 10/19

மேல்

தினை (2)

வரி புற அணில் வால் கரும் தினை வளை குரல் – கல்லாடம்:2 4/23
தினை குரல் அறையும் கிளி கணம் கடிந்தும் – கல்லாடம்:2 22/39

மேல்