பி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிடர் 3
பிடர்ப்பு 1
பிடவ 1
பிடவமும் 1
பிடவு 1
பிடி 3
பிடிக்கு 1
பிடித்த 1
பிடித்து 6
பிடிப்ப 1
பிடியும் 1
பிடுங்கி 2
பிண்டம் 1
பிணங்கி 2
பிணங்கும் 1
பிணம் 1
பிணர் 4
பிணவுடன் 1
பிணாவினர் 1
பிணி 2
பிணிக்க 1
பிணித்த 3
பிணித்தும் 1
பிணிதர 1
பிணிமுக 1
பிணைத்த 1
பிணைந்த 1
பித்தினர் 1
பிதாவும் 1
பிதிர் 1
பிதிர்பட 1
பிரச 1
பிரசமும் 1
பிரமம் 1
பிரமன் 2
பிரிக்கும் 1
பிரித்தலும் 1
பிரித்து 1
பிரிந்த 1
பிரிந்தன 1
பிரிந்து 1
பிரியா 1
பிரியாது 1
பிரிவு 1
பிரிவுற்றமை 1
பிலம் 1
பிலிற்றிய 2
பிழிந்து 1
பிழியும் 1
பிழை 1
பிழைக்குக 1
பிழைத்த 1
பிழைத்து 1
பிழைத்தோர்க்கு 1
பிள்ளை 2
பிள்ளையும் 2
பிளந்த 1
பிளப்ப 1
பிளவாது 1
பிளிறு 1
பிளிறும் 1
பிறக்கிட்டு 1
பிறங்க 1
பிறந்தவர் 1
பிறந்து 1
பிறந்தும் 1
பிறப்பு 2
பிறவா 2
பிறவி 2
பிறவியின் 1
பிறவியும் 1
பிறவும் 1
பிறழ் 3
பிறழும் 1
பிறிது 2
பிறிதும் 1
பிறை 18
பிறையவன் 1
பிறையும் 1
பிறையை 1
பிறையோன் 2
பின் 9
பின்புற 1
பின்முன் 1
பின்னர் 1
பின்னல் 1
பின்னும் 2
பின்னொடும் 1

பிடர் (3)

பங்கு உடை செம் கால் பாட்டு அளி அரி பிடர்
குருவில் தோய்ந்த அரி கெழு மரகத – கல்லாடம்:2 18/2,3
பண் கால் உழவர் பகடு பிடர் பூண்ட – கல்லாடம்:2 27/24
மத மலை இரு_நான்கு பிடர் சுமந்து ஓங்கி – கல்லாடம்:2 28/7

மேல்

பிடர்ப்பு (1)

நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப்பு ஒலி வரைப்பகை – கல்லாடம்:2 30/8

மேல்

பிடவ (1)

முல்லை அம் படர் கொடி நீங்கி பிடவ
சொரி அலர் தள்ளி துணர் பொலம் கடுக்கை – கல்லாடம்:2 84/16,17

மேல்

பிடவமும் (1)

பிடவமும் களவும் ஒடு நிறை பூப்ப – கல்லாடம்:2 94/4

மேல்

பிடவு (1)

பிடவு அலர் பரப்பி பூவை பூ இட்டு – கல்லாடம்:2 14/12

மேல்

பிடி (3)

வேற்று பிடி புணர்ந்து தீரா புலவி – கல்லாடம்:2 25/1
மென் நடை குழை செவி பெறா வெறும் கரும் பிடி
கணி பணை கவட்டும் மணல் சுனை புறத்தும் – கல்லாடம்:2 42/3,4
பிடி குளிசெய்யும் களிறது போல – கல்லாடம்:2 55/27

மேல்

பிடிக்கு (1)

மென் நடை பிடிக்கு கை பிடித்து உதவி – கல்லாடம்:2 25/7

மேல்

பிடித்த (1)

நடை_மலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை – கல்லாடம்:2 57/1

மேல்

பிடித்து (6)

இலவு அலர் வாட்டிய செம் கால் பிடித்து
களி தூங்கு உளத்தொடும் மெல்லென சேர்த்தி – கல்லாடம்:2 18/27,28
மென் நடை பிடிக்கு கை பிடித்து உதவி – கல்லாடம்:2 25/7
நெல் பிடித்து உரைக்கும் குறியினோளும் – கல்லாடம்:2 30/3
கண்ட நீள் கதுப்பினர் கை குவி பிடித்து
குருகு அணி செறித்த தனி முதல் நாயகன் – கல்லாடம்:2 45/21,22
வானவர் இறைவன் கடவு கார் பிடித்து
பஞ்சு எழ பிழிந்து தண் புனல் பருகி – கல்லாடம்:2 67/16,17
துணை கரம் பிடித்து என தோற்றிடும் பொழில் சூழ் – கல்லாடம்:2 97/16

மேல்

பிடிப்ப (1)

சென்னி மலை ஈன்ற கன்னி வில் பிடிப்ப
ஒரு கால் முன் வைத்து இரு கால் வளைப்ப – கல்லாடம்:2 25/24,25

மேல்

பிடியும் (1)

மேகமும் பிடியும் தொடர – கல்லாடம்:2 32/17

மேல்

பிடுங்கி (2)

கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி
பவ சுவர் இடித்து புதுக்க கட்டி – கல்லாடம்:2 22/45,46
பொன்மலை பிடுங்கி கார் முகம் என்ன – கல்லாடம்:2 33/22

மேல்

பிண்டம் (1)

கொடுத்த மெய் பிண்டம் குறியுடன் தோன்றிய – கல்லாடம்:2 81/20

மேல்

பிணங்கி (2)

ஊடி ஆடுநர் திரையொடு பிணங்கி
தோழியின் தீர்க்கும் வையை துழனியும் – கல்லாடம்:2 41/33,34
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே – கல்லாடம்:2 45/28

மேல்

பிணங்கும் (1)

புள்ளொடு பிணங்கும் புள் கவராது – கல்லாடம்:2 67/9

மேல்

பிணம் (1)

பிணம் பிரித்து உண்ணும் குணங்கு இனம் கொடுப்ப – கல்லாடம்:2 79/8

மேல்

பிணர் (4)

வெறி விழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை – கல்லாடம்:2 42/2
தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே – கல்லாடம்:2 59/19
பிணர் கரு மருப்பின் பிதிர்பட உழக்கி – கல்லாடம்:2 63/10
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/17

மேல்

பிணவுடன் (1)

முசுக்கலை பிணவுடன் முழை உறை அடங்க – கல்லாடம்:2 94/15

மேல்

பிணாவினர் (1)

மறி கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில் – கல்லாடம்:2 56/26

மேல்

பிணி (2)

இரும் திண் போர்வை பிணி விசி முரசம் – கல்லாடம்:2 18/14
பிணி மொழி பாணன் உடன் உறை நீக்கி – கல்லாடம்:2 57/7

மேல்

பிணிக்க (1)

மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க
பல் முக விளக்கின் பரிதியின் தோட்டிய – கல்லாடம்:2 81/22,23

மேல்

பிணித்த (3)

அரை பெற பிணித்த கல் குளி மாக்கள் – கல்லாடம்:2 43/2
உடல்-தொறும் பிணித்த பாவமும் புலர – கல்லாடம்:2 45/20
பசி மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற – கல்லாடம்:2 46/1

மேல்

பிணித்தும் (1)

எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும்
கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்து – கல்லாடம்:2 54/20,21

மேல்

பிணிதர (1)

பிணிதர விசித்த முருகியம் துவைக்க – கல்லாடம்:2 16/25

மேல்

பிணிமுக (1)

பிணிமுக மஞ்ஞை செரு முகத்து ஏந்திய – கல்லாடம்:2 7/7

மேல்

பிணைத்த (1)

வள்ளம் பிணைத்த செம் கரடிகை மல்க – கல்லாடம்:2 85/31

மேல்

பிணைந்த (1)

உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி – கல்லாடம்:2 85/16

மேல்

பித்தினர் (1)

சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர் புலன் – கல்லாடம்:2 97/5

மேல்

பிதாவும் (1)

வனமும் பிதாவும் பாணியில் வகுத்து – கல்லாடம்:2 99/20

மேல்

பிதிர் (1)

பிதிர் கனல் மணி சூழ் முடி நடுங்காது – கல்லாடம்:2 21/43

மேல்

பிதிர்பட (1)

பிணர் கரு மருப்பின் பிதிர்பட உழக்கி – கல்லாடம்:2 63/10

மேல்

பிரச (1)

பெருக்கெடுத்து இழிதரும் வெள்ள பிரச
கான்யாறு உந்தும் கல் வரை நாட – கல்லாடம்:2 97/3,4

மேல்

பிரசமும் (1)

பிரசமும் வண்டும் இரவி தெறு மணியும் – கல்லாடம்:2 28/21

மேல்

பிரமம் (1)

ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய – கல்லாடம்:1 2/43

மேல்

பிரமன் (2)

அக மலர் வாழ்தலின் பிரமன் ஆகியும் – கல்லாடம்:2 11/14
பிரமன் உட்பட்ட நில உயிர் அனைத்தும் – கல்லாடம்:2 69/30

மேல்

பிரிக்கும் (1)

நிறை நீர் ஊர நெஞ்சகம் பிரிக்கும்
பிணி மொழி பாணன் உடன் உறை நீக்கி – கல்லாடம்:2 57/6,7

மேல்

பிரித்தலும் (1)

பொருத்தலும் பிரித்தலும் பொரு பகை காட்டலும் – கல்லாடம்:2 3/2

மேல்

பிரித்து (1)

பிணம் பிரித்து உண்ணும் குணங்கு இனம் கொடுப்ப – கல்லாடம்:2 79/8

மேல்

பிரிந்த (1)

பெரும் பகலிடையே பொதும்பரில் பிரிந்த
வளை கண் கூர் உகிர் கூக்குரல் மொத்தையை – கல்லாடம்:2 71/17,18

மேல்

பிரிந்தன (1)

பிறவியும் கூற்றமும் பிரிந்தன போல – கல்லாடம்:2 30/23

மேல்

பிரிந்து (1)

நெடும் பொருள் ஈட்ட நின் பிரிந்து இறந்து – கல்லாடம்:2 53/3

மேல்

பிரியா (1)

பிரியா கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த – கல்லாடம்:2 61/15

மேல்

பிரியாது (1)

பெரும் தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த – கல்லாடம்:2 65/19

மேல்

பிரிவு (1)

நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் – கல்லாடம்:2 66/12

மேல்

பிரிவுற்றமை (1)

உயிர் பிரிவுற்றமை காட்டி அவர் நீங்க – கல்லாடம்:2 90/20

மேல்

பிலம் (1)

பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும் – கல்லாடம்:2 78/18

மேல்

பிலிற்றிய (2)

மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி – கல்லாடம்:2 41/30
பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய
இன்பு அமர் சொல்லி நண்பும் மன குறியும் – கல்லாடம்:2 58/7,8

மேல்

பிழிந்து (1)

பஞ்சு எழ பிழிந்து தண் புனல் பருகி – கல்லாடம்:2 67/17

மேல்

பிழியும் (1)

நெடும் கார் கிடந்து படும் புனல் பிழியும்
கூடல் வீற்றிருந்த நாடக கடவுள் – கல்லாடம்:2 19/23,24

மேல்

பிழை (1)

உழை நின்றீரும் பிழை அறிந்தீரும் – கல்லாடம்:2 16/1

மேல்

பிழைக்குக (1)

பின்னர் நின்று எற்ற கைத்தாயையும் பிழைக்குக
கரும் தலை சாரிகை செவ் வாய் பசுங்கிளி – கல்லாடம்:2 7/14,15

மேல்

பிழைத்த (1)

ஈன்ற செம் சூழல் கவர் வழி பிழைத்த
வெறி விழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை – கல்லாடம்:2 42/1,2

மேல்

பிழைத்து (1)

அன்பு மக பிழைத்து கல் அறை பொழிந்த – கல்லாடம்:2 96/21

மேல்

பிழைத்தோர்க்கு (1)

நன்றிசெய்குநர் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும் – கல்லாடம்:2 4/12

மேல்

பிள்ளை (2)

சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/24
பசி மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற – கல்லாடம்:2 46/1

மேல்

பிள்ளையும் (2)

பிள்ளையும் பெடையும் பறை வர தழீஇ – கல்லாடம்:2 43/8
திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும்
மதி எனும் மகவும் மலர் உலகு அறிய – கல்லாடம்:2 65/3,4

மேல்

பிளந்த (1)

களவு உடல் பிளந்த ஒளி கெழு திரு வேல் – கல்லாடம்:2 59/29

மேல்

பிளப்ப (1)

புடைபுடை ஒதுங்கி அரவு வாய் பிளப்ப
ஒன்றினுக்கொன்று துன்றிய நடுக்கொடு – கல்லாடம்:2 55/9,10

மேல்

பிளவாது (1)

நான்மறை துள்ளும் வாய் பிளவாது
காட்டி உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது – கல்லாடம்:2 21/41,42

மேல்

பிளிறு (1)

எழிலி வான் சுழல பிளிறு குரல் பகட்டு இனம் – கல்லாடம்:2 26/21

மேல்

பிளிறும் (1)

ஏழு உயர் கரி திரள் கதமொடு பிளிறும்
பெரு நகர் கூடல் உறைதரு கடவுளை – கல்லாடம்:2 20/38,39

மேல்

பிறக்கிட்டு (1)

அதள் பிறக்கிட்டு குதி பாய் நவ்வியின் – கல்லாடம்:2 26/14

மேல்

பிறங்க (1)

குருதி தாரை கல்லொடு பிறங்க
மெய் அணி அளறா கை முழம் தேய்த்த – கல்லாடம்:2 55/17,18

மேல்

பிறந்தவர் (1)

பிறந்தவர் பிறவா பெரும் பதி அகத்தும் – கல்லாடம்:2 52/14

மேல்

பிறந்து (1)

பிறந்து அருள் குன்றம் ஒருங்குற பெற்ற – கல்லாடம்:2 73/11

மேல்

பிறந்தும் (1)

உவர் கடல் பிறந்தும் குறை உடல் கோடியும் – கல்லாடம்:2 60/4

மேல்

பிறப்பு (2)

செறி பிறப்பு இறப்பு என இரு வகை திரியும் – கல்லாடம்:2 13/15
ஆயிரத்தெட்டில் அமைந்தன பிறப்பு
பிறவி பேதத்து உறையது போல – கல்லாடம்:2 82/8,9

மேல்

பிறவா (2)

பிறந்தவர் பிறவா பெரும் பதி அகத்தும் – கல்லாடம்:2 52/14
பிறவா பேர் ஊர் பழ நகரிடத்தும் – கல்லாடம்:2 76/15

மேல்

பிறவி (2)

வேற்று அருள் பிறவி தோற்றுவித்து எடுத்து – கல்லாடம்:2 72/3
பிறவி பேதத்து உறையது போல – கல்லாடம்:2 82/9

மேல்

பிறவியின் (1)

குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும் – கல்லாடம்:1 1/37

மேல்

பிறவியும் (1)

பிறவியும் கூற்றமும் பிரிந்தன போல – கல்லாடம்:2 30/23

மேல்

பிறவும் (1)

இவ் வகை பிறவும் எதிர் அமர் ஏறி – கல்லாடம்:2 49/15

மேல்

பிறழ் (3)

எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று – கல்லாடம்:2 27/13
குழி விழி பிறழ் பல் தெற்றல் கரும் கால் – கல்லாடம்:2 34/2
கூடல் பெருமான் பொன் பிறழ் திருவடி – கல்லாடம்:2 42/29

மேல்

பிறழும் (1)

கிடந்து ஒளி பிறழும் நெடும் சடை பெருமான் – கல்லாடம்:2 55/11

மேல்

பிறிது (2)

பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே – கல்லாடம்:2 31/16
தன் உடல் அன்றி பிறிது உண் கனை இருள் – கல்லாடம்:2 32/1

மேல்

பிறிதும் (1)

பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி – கல்லாடம்:2 48/3

மேல்

பிறை (18)

பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கி – கல்லாடம்:2 4/19
கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த – கல்லாடம்:2 13/11
குறுவெயிர்ப்பு ஒழுக்கு என பிறை அமுது எடுக்க – கல்லாடம்:2 16/5
அடைவு ஈன்று அளித்த பிறை நுதல் கன்னியொடும் – கல்லாடம்:2 27/17
இதழி தாது உதிர்ப்ப பிறை அமுது உகுக்க – கல்லாடம்:2 34/12
கார் உடல் பிறை எயிற்று அரக்கனை கொன்று – கல்லாடம்:2 35/7
கரு முகிற்கு அணி நிற தழல் கண் பிறை எயிற்று – கல்லாடம்:2 37/9
விண் தலை உடைத்து பிறை வாய் வைப்ப – கல்லாடம்:2 41/2
கவை தலை மணி வேல் பிறை தலை கன்னி – கல்லாடம்:2 41/19
ஆக்கிய விஞ்சை பிறை முடி அந்தணன் – கல்லாடம்:2 42/16
அற பெரும் கூடல் பிறை சடை பெருமான் – கல்லாடம்:2 48/13
தெய்வ பிறை இருந்த திரு நுதல் பேதையை – கல்லாடம்:2 55/4
பிறை சடை முடியினன் பேர் அருள் அடியவர்க்கு – கல்லாடம்:2 61/13
கவை தலை பிறை எயிற்று இருள் எழில் அரக்கன் – கல்லாடம்:2 78/9
பிறை நுதல் நாட்டி கடு வளர் கண்டி – கல்லாடம்:2 79/11
பசும் பிறை அமுதொடு நிரம்பியது என்ன – கல்லாடம்:2 85/34
மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை
மார்பமும் இருத்தியது என்ன கூன் புறத்து – கல்லாடம்:2 85/35,36
மு கண் பிறை எயிற்று எண் தோள் செல்வி – கல்லாடம்:2 88/31

மேல்

பிறையவன் (1)

இறையவன் பிறையவன் கறை கெழு மிடற்றோன் – கல்லாடம்:2 71/14

மேல்

பிறையும் (1)

தண்ணம் பிறையும் தலை பெற நிறுத்துக – கல்லாடம்:2 14/39

மேல்

பிறையை (1)

அணி வான் பெற்ற இ பிறையை
பணிவாய் புரிந்து தாமரை_மகளே – கல்லாடம்:2 19/34,35

மேல்

பிறையோன் (2)

பொன் நகர் கூடல் சென்னி அம் பிறையோன்
பொதிய பொருப்பன் மதிய கருத்தினை – கல்லாடம்:2 1/9,10
பெண் உடல் பெற்ற சென்னி அம் பிறையோன்
பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என – கல்லாடம்:2 41/38,39

மேல்

பின் (9)

மருங்கு பின் நோக்காது ஒருங்கு விட்டு அகல – கல்லாடம்:2 7/44
பாடலம் புது தார் காளை பின் ஒன்றால் – கல்லாடம்:2 40/17
தணந்தோர் உள்ளத்துள் உற புகுந்த பின்
கார் உடல் காட்டி கண்ட கண் புதைய – கல்லாடம்:2 43/21,22
அ புலத்து உயிர்கொடுத்து அருள் பொருள் கொண்ட பின்
மற்று அவன் தாயம் வவ்வுறு மாக்கள் – கல்லாடம்:2 44/18,19
வீரம் அங்கு ஈந்த பின் விளிவது மானவும் – கல்லாடம்:2 73/20
முன் இடைக்காடன் பின் எழ நடந்து – கல்லாடம்:2 76/9
கொடுத்து உண்டவர் பின் கரந்தமை கடுக்கும் – கல்லாடம்:2 81/48
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின்
வளர் மறி தகர் என திரிதரும் பாண்மகன் – கல்லாடம்:2 89/12,13
குளிர் நிழல் அடவி இறைகொண்டு அகன்ற பின்
அனைத்து உள வஞ்சமும் அழித்து நிரை மீட்சி – கல்லாடம்:2 93/18,19

மேல்

பின்புற (1)

பின்புற நேடின முன்பவை அன்றி – கல்லாடம்:2 20/43

மேல்

பின்முன் (1)

பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல் – கல்லாடம்:2 70/18

மேல்

பின்னர் (1)

பின்னர் நின்று எற்ற கைத்தாயையும் பிழைக்குக – கல்லாடம்:2 7/14

மேல்

பின்னல் (1)

பின்னல் விட்டு அமைத்த தன் தலை மலர் இணைஇ – கல்லாடம்:2 14/31

மேல்

பின்னும் (2)

பின்னும் தழுவ உன்னும் அவ் ஒருத்தி – கல்லாடம்:2 55/37
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த – கல்லாடம்:2 59/31

மேல்

பின்னொடும் (1)

பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம் – கல்லாடம்:2 82/46

மேல்