வை – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

வைகறை-காறும் (1)

இரவிக்கு அண்ணிய வைகறை-காறும்
அலமரல் என்னை-கொல் அறிந்திலம் யாமே – கல்லாடம்:2 34/15,16

மேல்

வைகி (1)

கண் எதிர் வைகி முகன் கொளின் கலங்கியும் – கல்லாடம்:2 44/5

மேல்

வைகு (1)

வட புல விஞ்சையன் வைகு இடத்து அகன் கடை – கல்லாடம்:2 43/25

மேல்

வைகுதலால் (1)

மாண் இழை மகளிர் வயின் வைகுதலால்
கரு முகிற்கு அணி நிற தழல் கண் பிறை எயிற்று – கல்லாடம்:2 37/8,9

மேல்

வைத்த (5)

எங்கும் முகம் வைத்த கங்கை காலும் – கல்லாடம்:2 21/7
சலபதி ஆய்ந்து சேம நிலை வைத்த
முத்து மணி கிடக்கும் செறி இருள் அரங்காய் – கல்லாடம்:2 23/20,21
மற்றொருவற்கு வைத்த நடம் அறிந்து – கல்லாடம்:2 25/31
உலவா பொன்னுலகு அடைதர வைத்த
சுந்தர கடவுள் கந்தர கறையோன் – கல்லாடம்:2 25/36,37
கல்_இபம் அதனை கரும்புகொள வைத்த
ஆலவாய் அமர்ந்த நீலம் நிறை கண்டன் – கல்லாடம்:2 29/10,11

மேல்

வைத்தது (1)

கடல் அமுது எடுத்து கரையில் வைத்தது போல் – கல்லாடம்:2 3/14

மேல்

வைத்தவர் (1)

இரு பதம் உள் வைத்தவர் போல – கல்லாடம்:2 67/25

மேல்

வைத்து (17)

புடவி வைத்து ஆற்றிய பல் தலை பாந்தள் – கல்லாடம்:1 2/19
நான்மறை விதியை நடுங்கு சிறை வைத்து
படைப்பு முதல் மாய வான் முதல் கூடி – கல்லாடம்:1 2/44,45
வைத்து அமையா முன் மகிழ்ந்து உணவு உண்டு அவன் – கல்லாடம்:2 14/34
தண் மதி கடும் சுடர் வெவ் அழல் கண் வைத்து
அளவா பாதம் மண் பரப்பு ஆக – கல்லாடம்:2 20/24,25
கரும் கால் கவணிடை செம் மணி வைத்து
பெரும் தேன் இறாலொடு குறி விழ எறிந்தும் – கல்லாடம்:2 22/33,34
தேக்கு இலை விரித்து நால் திசை வைத்து
மனவு அணி முதியோள் வரை அணங்கு அயர்ந்து – கல்லாடம்:2 24/6,7
ஒரு கால் முன் வைத்து இரு கால் வளைப்ப – கல்லாடம்:2 25/25
வெள்ள பெரு நதி கொள்ளை முகம் வைத்து
நீட நிறை பாயும் வான வாவிக்குள் – கல்லாடம்:2 27/2,3
அளவா கற்பம் அளி வைத்து நிலைஇய – கல்லாடம்:2 27/18
முலை என சொல் என வர வர வைத்து
மெய்யினை பரப்பி பொய்யினை காட்டி – கல்லாடம்:2 33/6,7
உயிர் வைத்து உடலம் உழன்றன போல – கல்லாடம்:2 53/2
இரு பதம் உள் வைத்து இருந்தவர் வினை போல் – கல்லாடம்:2 53/19
கடல் மகள் உள் வைத்து வடவை மெய் காயவும் – கல்லாடம்:2 76/1
சயமகள் சீற்ற தழல் மனம் வைத்து
திணி புகும் வென்றி செரு அழல் கூடவும் – கல்லாடம்:2 76/5,6
அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும் – கல்லாடம்:2 87/3
வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவ – கல்லாடம்:2 95/29
விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும் – கல்லாடம்:2 100/21,22

மேல்

வைத்துவைத்து (1)

வைத்துவைத்து எடுக்கும் சாரல் நாடன் – கல்லாடம்:2 42/9

மேல்

வைத்தோய் (1)

வணங்கி நின்று ஏத்த குரு மொழி வைத்தோய்
ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய – கல்லாடம்:1 2/42,43

மேல்

வைப்ப (1)

விண் தலை உடைத்து பிறை வாய் வைப்ப
குணங்கு இனம் துள்ள கூளியும் கொட்ப – கல்லாடம்:2 41/2,3

மேல்

வைப்பினளே (1)

தெறித்திடு முத்தம் திரட்டு வைப்பினளே
நீயே அணி கெழு நவமணி அலர் என தொடுத்த – கல்லாடம்:2 51/20,21

மேல்

வைப்பு (1)

நெடும் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே – கல்லாடம்:2 81/44

மேல்

வையகத்து (2)

வையகத்து உருவினர் மலரா அறிவினை – கல்லாடம்:2 7/34
வையகத்து உயிர்கள் வழக்கு அறல் கருதி – கல்லாடம்:2 26/18

மேல்

வையகம் (1)

வையகம் அளித்த மணி ஒளி கடவுள் – கல்லாடம்:2 55/25

மேல்

வையம் (2)

தேர் வரை வையம் ஆக திருத்தி – கல்லாடம்:2 25/23
பொன் உருள் வையம் போவது காண்க – கல்லாடம்:2 69/10

மேல்

வையை (9)

பெரு நீர் வையை வளை நீர் கூடல் – கல்லாடம்:2 2/7
விரி திரை வையை திரு நதி சூழ்ந்த – கல்லாடம்:2 9/18
உடல் புலவு மாற்றும் பட திரை வையை
நிறை நீர் வளைக்கும் புகழ் நீர் கூடல் – கல்லாடம்:2 26/25,26
தோழியின் தீர்க்கும் வையை துழனியும் – கல்லாடம்:2 41/34
வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த – கல்லாடம்:2 42/28
மண் அகழ்ந்து எடுத்து வரு புனல் வையை
கூலம் சுமக்க கொட்டாள் ஆகி – கல்லாடம்:2 47/22,23
திரு மருங்கு அணைந்து வரு புனல் வையை
வரை புரண்டு என்ன திரை நிரை துறையகத்து – கல்லாடம்:2 54/10,11
வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு – கல்லாடம்:2 86/5
அரும் புனல் வையை புது நீர் அன்றே – கல்லாடம்:2 87/42

மேல்

வையையில் (1)

வையையில் மறித்தும் அன்னவள்-தன்னுடன் – கல்லாடம்:2 87/17

மேல்

வையையுள் (1)

நெடு மதில் கூடல் விரி புனல் வையையுள்
பிடி குளிசெய்யும் களிறது போல – கல்லாடம்:2 55/26,27

மேல்