நெ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ 1
நெஞ்ச 1
நெஞ்சகத்தும் 1
நெஞ்சகம் 2
நெஞ்சத்து 1
நெஞ்சம் 6
நெஞ்சமும் 2
நெஞ்சமொடு 1
நெஞ்சிடம் 1
நெஞ்சினர் 1
நெஞ்சினும் 1
நெஞ்சு 8
நெஞ்சுற 1
நெஞ்சொடு 1
நெட்டா 1
நெட்டு 14
நெட்டுயிர்ப்பு 2
நெட்டுயிர்ப்பெறிதல் 1
நெடியோன் 4
நெடு 41
நெடுநாள் 4
நெடும் 61
நெடுமலை 1
நெடுமாலுக்கு 1
நெடுமாலோன் 1
நெடுமையும் 2
நெடுவேள் 1
நெய் 6
நெய்த்து 2
நெய்தல் 2
நெய்தலில் 1
நெய்தலும் 1
நெய்தலுள் 1
நெய்தலை 1
நெய்ப்பிலி 1
நெய்ம்மிதி 1
நெரிஞ்சில் 1
நெருக்கல் 1
நெருக்கியும் 1
நெருக்கு 2
நெருக்குபு 1
நெருக்குற 1
நெருங்கி 2
நெருங்கிய 1
நெருங்கு 1
நெருநல் 1
நெருப்பின் 1
நெருப்பு 6
நெருப்பும் 1
நெருப்புறு 1
நெருப்பொடு 2
நெல் 3
நெற்று 2
நெறி 6
நெறித்தும் 1
நெறிப்ப 1

நெகிழ (1)

கழை தோள் நெகிழ தழை உடல் குழைய – கல்லாடம்:2 87/11

மேல்

நெஞ்ச (1)

அன்பு கொடு வேய்ந்த நெஞ்ச மண்டபத்து – கல்லாடம்:2 22/47

மேல்

நெஞ்சகத்தும் (1)

கல்வியர் உளத்தும் கவர் நெஞ்சகத்தும்
தெய்வம் விடுத்து பொய் கொள் சிந்தையினும் – கல்லாடம்:2 52/18,19

மேல்

நெஞ்சகம் (2)

நிறை நீர் ஊர நெஞ்சகம் பிரிக்கும் – கல்லாடம்:2 57/6
நெஞ்சகம் நிறைந்து நினைவினுள் மறைந்து – கல்லாடம்:2 76/11

மேல்

நெஞ்சத்து (1)

மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர் விட – கல்லாடம்:2 38/9

மேல்

நெஞ்சம் (6)

கொலையினர் நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும் – கல்லாடம்:2 14/44
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் – கல்லாடம்:2 17/16
நிலையா சூளின் நிலையா நெஞ்சம்
கொண்டனள் என் என என் முகம் நாடி – கல்லாடம்:2 23/44,45
கடும் கான் தள்ளி தடைதரு நெஞ்சம்
கயிலை தென்-பால் கானகம் தனித்த – கல்லாடம்:2 31/5,6
பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம்
சென்றுழி சென்றுழி சேறலும் உளவோ – கல்லாடம்:2 82/46,47
அரும் துணை நெஞ்சம் நிற்கு உறும் பயன் கேள்-மதி – கல்லாடம்:2 88/5

மேல்

நெஞ்சமும் (2)

புன்னை அம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும்
மீன் உணவு உள்ளியிருந்த வெண் குருகு என – கல்லாடம்:2 21/16,17
நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும் – கல்லாடம்:2 100/33

மேல்

நெஞ்சமொடு (1)

கவையா நெஞ்சமொடு பொரு வினை சென்றோர் – கல்லாடம்:2 46/16

மேல்

நெஞ்சிடம் (1)

உய்ய கூறில் ஓர் நெஞ்சிடம் பொறாதே – கல்லாடம்:2 16/41

மேல்

நெஞ்சினர் (1)

கவையா வென்றி நெஞ்சினர் நோக்க – கல்லாடம்:2 30/22

மேல்

நெஞ்சினும் (1)

நெஞ்சினும் கிடந்து நீண்ட வல் இரவில் – கல்லாடம்:2 8/31

மேல்

நெஞ்சு (8)

படிறர் சொல் என கடு நெஞ்சு இறைப்ப – கல்லாடம்:2 16/6
முன்னம் எள்ளினர் நெஞ்சு கெட துவைப்ப – கல்லாடம்:2 18/15
தேவர் நெஞ்சு உடைக்கும் தாமரை ஏவின் – கல்லாடம்:2 31/7
அல்குல் இடை என நெஞ்சு உழல கொடுத்து – கல்லாடம்:2 33/8
கண்ணால் வாங்கி நெஞ்சு அறை நிறைப்ப – கல்லாடம்:2 41/8
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல – கல்லாடம்:2 42/30
நெஞ்சு அறை பெரும் துயர் ஓவாது உடற்ற – கல்லாடம்:2 46/15
நான் முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து – கல்லாடம்:2 72/2

மேல்

நெஞ்சுற (1)

இரண்டு முகிழ்செய்து நெஞ்சுற பெருகும் – கல்லாடம்:2 18/20

மேல்

நெஞ்சொடு (1)

புறன் வழங்காது நெஞ்சொடு கொதித்தனள் – கல்லாடம்:2 2/23

மேல்

நெட்டா (1)

ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டா கோட்டு – கல்லாடம்:2 6/25

மேல்

நெட்டு (14)

இரு தலை குவிந்த நெட்டு உடல் தண்ணுமை – கல்லாடம்:2 8/21
நெட்டு உடல் பேழ் வாய் பெரும் சுறவு தடியும் – கல்லாடம்:2 15/21
கொடுமரம் பற்றி நெட்டு இதண் பொலிந்தும் – கல்லாடம்:2 22/38
நெட்டு இலை அரம்பை குறுங்காய் மானும் – கல்லாடம்:2 24/12
பாசடை புதைத்த நெட்டு ஆற்று ஏரியுள் – கல்லாடம்:2 24/31
வானவில் நிறத்த நெட்டு உடல் வாளை – கல்லாடம்:2 27/20
நெட்டு இலை குறும் புகர் குருதி வேலவ – கல்லாடம்:2 28/3
நெட்டு உடல் பேழ் வாய் கழுதும் உறங்க – கல்லாடம்:2 43/7
நெட்டு இதண் ஏறும் இ புனத்தினளே – கல்லாடம்:2 51/24
நெட்டு இலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில் – கல்லாடம்:2 54/23
நின் பதி மறைந்த நெட்டு இரவகத்துள் – கல்லாடம்:2 68/6
அலகை நெட்டு இரதம் புனல் என காட்டினை – கல்லாடம்:2 69/17
நெட்டு எறி ஊதை நெருப்பொடு கிடந்து – கல்லாடம்:2 77/3
நெட்டு உகிர் கரும் கால் தோல் முலை பெரும் பேய் – கல்லாடம்:2 88/15

மேல்

நெட்டுயிர்ப்பு (2)

நெட்டுயிர்ப்பு எறிய முலை-முகம் நெருக்கியும் – கல்லாடம்:2 48/19
நெட்டுயிர்ப்பு எறிந்து நெடும் கண் நீர் உகுத்து – கல்லாடம்:2 55/36

மேல்

நெட்டுயிர்ப்பெறிதல் (1)

நெட்டுயிர்ப்பெறிதல் எறிந்து நின்று இரட்டல் – கல்லாடம்:2 21/47

மேல்

நெடியோன் (4)

படி முழுது அளந்த நெடியோன் ஆகியும் – கல்லாடம்:2 11/16
நெடியோன் முதலாம் தேவர் கூடி – கல்லாடம்:2 19/12
நெடியோன் துயிலாது அறிவொடு துயில – கல்லாடம்:2 23/18
பாக பக்க நெடியோன் உறையுளும் – கல்லாடம்:2 41/27

மேல்

நெடு (41)

வடவை நெடு நாக்கின் கிளைகள் விரிந்து என்ன – கல்லாடம்:1 2/5
அமையா வென்றி அரத்த நெடு வேலோய் – கல்லாடம்:1 2/15
கூடம் சுமந்த நெடு முடி நேரி – கல்லாடம்:1 2/47
குறுமுனி தேற நெடு மறை விரித்தோய் – கல்லாடம்:1 2/49
எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 1/6
நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை – கல்லாடம்:2 6/3
பொதிய பொருப்பும் நெடு முதுகு வருந்தி – கல்லாடம்:2 17/18
நெடு வளி உயிர்த்து மழை மதம் ஒழுக்கி – கல்லாடம்:2 19/1
அ நெடு வேணியில் கண்ணி என இருந்து – கல்லாடம்:2 19/32
தனி நெடு விசும்பு திருவுடல் ஆக – கல்லாடம்:2 20/26
நெடு மலை விழித்த கண்ணே ஆகி – கல்லாடம்:2 22/8
கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி – கல்லாடம்:2 25/19
கூடம் சூழ்ந்த நெடு முடி பொதியத்து – கல்லாடம்:2 28/12
நெருக்கு பொழில் புக்கும் நெடு மலை கூயும் – கல்லாடம்:2 28/27
வளைத்த ஞான்று நெடு விண் தடைய – கல்லாடம்:2 33/23
வலி உடை கற்பின் நெடு வளி சுழற்றி – கல்லாடம்:2 36/10
கடல் மா கொன்ற தீ படர் நெடு வேல் – கல்லாடம்:2 41/10
நிரைத்து கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும் – கல்லாடம்:2 44/21
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில் – கல்லாடம்:2 47/8
நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும் – கல்லாடம்:2 50/18
நெடு மதில் கூடல் விரி புனல் வையையுள் – கல்லாடம்:2 55/26
நெடு வரை பொங்கர் புனம் எரி காழ் அகில் – கல்லாடம்:2 59/1
நெடு நகர் இரட்டும் களி அரி கிணையே – கல்லாடம்:2 59/13
தாரை எட்டு உடைய கூர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 61/10
பறவை செல்லாது நெடு முகடு உருவிய – கல்லாடம்:2 66/22
ஐந்து என பெயரிய நெடு மரம் ஒடித்து – கல்லாடம்:2 67/18
நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்கு – கல்லாடம்:2 68/4
நெடு முடி அருவி அகிலொடு கொழிக்கும் – கல்லாடம்:2 68/29
நிலம் இரண்டு அளந்த நெடு முகில் மான – கல்லாடம்:2 72/4
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல் – கல்லாடம்:2 73/8
வானவர் நெடு முடி மணி தொகை திரட்டி – கல்லாடம்:2 76/13
நிலம் பெற்று இமைத்து நெடு வரை இறும்பிடை – கல்லாடம்:2 78/12
நெடு மரத்து இளம் கா நிலைத்தலானும் – கல்லாடம்:2 81/5
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி – கல்லாடம்:2 81/8
விட மா கொன்ற நெடு வேல் குளவன் – கல்லாடம்:2 83/9
விண்ணகம் புடைத்து நெடு வரை கரக்கும் – கல்லாடம்:2 86/18
கொடும் சூர் கொன்ற கூரிய நெடு வேல் – கல்லாடம்:2 86/19
நேமி அம் குன்று அகழ் நெடு வேல் காளையன் – கல்லாடம்:2 87/38
நெடு மரை அதள் வேய் சில் இட குரம்பையில் – கல்லாடம்:2 96/25
புகர் இலை நெடு வேல் அறு முக குளவன் – கல்லாடம்:2 98/55
தகரம் கமழும் நெடு வரை காட்சி – கல்லாடம்:2 98/56

மேல்

நெடுநாள் (4)

அடு மால் அகற்றி நெடுநாள் புரக்க – கல்லாடம்:2 55/24
அளவா நோன்மையில் நெடுநாள் வருந்தி – கல்லாடம்:2 58/22
நெடுநாள் திருவயிற்று அருளுடன் இருந்த – கல்லாடம்:2 75/11
அன்றியும் நெடுநாள் அமைந்து உடன் வருமோ – கல்லாடம்:2 82/50

மேல்

நெடும் (61)

பெரும் காற்று விடுத்த நெடும் புழை கரத்த – கல்லாடம்:1 1/20
குண்டு நீர் உடுத்த நெடும் பார் எண்ணமும் – கல்லாடம்:1 1/23
நீட்டி வலி தள்ளிய நெடும் கயிற்று ஊசலும் – கல்லாடம்:1 1/35
களவு உடை நெடும் சூர் கிளை களம் விட்டு ஒளித்த – கல்லாடம்:2 1/3
நெடும் கடல் கிடங்கும் ஒருங்கு உயிர் பருகிய – கல்லாடம்:2 6/39
நெடும் சுரம் நீங்க தம் கால் – கல்லாடம்:2 6/43
நெடும் தாள் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப – கல்லாடம்:2 7/28
மாவொடும் கொன்ற மணி நெடும் திரு வேல் – கல்லாடம்:2 8/6
நெடும் சுனை புதைய புகுந்து எடுத்து அளித்தும் – கல்லாடம்:2 13/14
நெடும் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை – கல்லாடம்:2 13/16
நிரைநிரை நாற்றி நெடும் காய் மயிர் அமைத்து – கல்லாடம்:2 14/6
நெடும் சடை கிடந்த குறும்பிறை கொழுந்தும் – கல்லாடம்:2 15/23
நெடும் கடல் கலக்கும் ஒரு மீன் படுத்த – கல்லாடம்:2 15/28
பழம் குறி கண்ட நெடும் கண் மாதரும் – கல்லாடம்:2 16/2
நெடும் கை வேலால் அடும் தொழில் செய்தும் – கல்லாடம்:2 16/34
பொன் நெடும் குன்றம் மன்னிய தோளன் – கல்லாடம்:2 16/36
கல் உயர் நெடும் தோள் அண்ணல் – கல்லாடம்:2 18/40
நெடும் கார் கிடந்து படும் புனல் பிழியும் – கல்லாடம்:2 19/23
மூன்று மத நெடும் புனல் கான்று மயல் உவட்டி – கல்லாடம்:2 20/37
வளைத்த நெடும் கார் புனத்து இருவீரும் – கல்லாடம்:2 22/31
கலம் எனும் நெடும் தேர் தொலையாது ஓட – கல்லாடம்:2 23/24
சுறவ வேந்து நெடும் படை செய்ய – கல்லாடம்:2 23/26
பாசடை நெடும் காடு காணிகொள் நீர்நாய் – கல்லாடம்:2 27/19
நெடும் குழை கிழிப்ப கடும் கயல் பாயும் – கல்லாடம்:2 27/30
நெடும் கால் குற்றுழி இதண் உழை காத்தும் – கல்லாடம்:2 28/16
நெடும் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை – கல்லாடம்:2 29/5
ஈயாது உண்ணுநர் நெடும் பழி போல – கல்லாடம்:2 30/6
வற்றிய நரம்பின் நெடும் குரல் பேழ் வாய் – கல்லாடம்:2 34/1
பெரும் கடல் முகந்து வயிறு நிறை நெடும் கார் – கல்லாடம்:2 37/2
நெடும் கால் பாய்ந்து படுத்த ஒண் தொழில் – கல்லாடம்:2 37/19
யாணர் கொடிஞ்சி நெடும் தேர் இசைப்பும் – கல்லாடம்:2 39/13
உருள் இணர் கடம்பின் நெடும் தார் கண்ணியன் – கல்லாடம்:2 41/11
நெடும் பொருள் ஈட்ட நின் பிரிந்து இறந்து – கல்லாடம்:2 53/3
நெடும் சடை காட்டினை அடும் தீ கொழுந்து என – கல்லாடம்:2 55/6
கிடந்து ஒளி பிறழும் நெடும் சடை பெருமான் – கல்லாடம்:2 55/11
மற்றவன்-தன்னை நெடும் துயில் வருத்தி – கல்லாடம்:2 55/15
நெட்டுயிர்ப்பு எறிந்து நெடும் கண் நீர் உகுத்து – கல்லாடம்:2 55/36
தவம் கற்று ஈன்ற நெடும் கற்பு அன்னை – கல்லாடம்:2 58/15
நின்றன கண்டு நெடும் பயன் படைத்த – கல்லாடம்:2 58/24
நெடும் கயல் எறி விழி குறும் தொடி திருவினள் – கல்லாடம்:2 61/16
கொடுங்கோல் கொற்றவன் நெடும் படை அனைத்தும் – கல்லாடம்:2 64/3
நெடும் கயல் விழியும் நிறை மலை முலையும் – கல்லாடம்:2 65/28
நெடும் பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் – கல்லாடம்:2 66/24
வன்மீன் நெடும் கயல் பொது வினையகத்து – கல்லாடம்:2 69/18
நெடும் கடல் பரப்பும் அடும் தொழில் அரக்கரும் – கல்லாடம்:2 70/3
நெடும் கழி குறும் கயல் நெய்தலுள் மறைந்தும் – கல்லாடம்:2 72/18
மற்றவள் தர நெடும் கற்பே – கல்லாடம்:2 73/29
நெடும் சால் போகி கடும் கயல் துரக்கும் – கல்லாடம்:2 74/8
நெடும் சடை குறும் சுடர் நீக்கி ஐந்து அடுக்கிய – கல்லாடம்:2 75/6
நெடும் சடை உக்கிரன் பயந்தருள் நிமலன் – கல்லாடம்:2 75/12
பாசடை உம்பர் நெடும் சுனை விரிந்த – கல்லாடம்:2 81/6
நெடும் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே – கல்லாடம்:2 81/44
நெய்தல் பாசடை நெடும் காட்டு ஒளிக்கும் – கல்லாடம்:2 82/37
நோக்கம் மறைத்த பரிதி கொள் நெடும் தேர் – கல்லாடம்:2 82/45
குறும்பிறை முடித்த நெடும் சடை ஒருத்தனை – கல்லாடம்:2 83/13
பூம் புனல் ஊரனை பொருந்தா நெடும் கண் – கல்லாடம்:2 83/27
நிலை அருள் கற்பு என நெடும் கற்புடையோள் – கல்லாடம்:2 86/36
கொழும் சுடர் கிளைத்த நெடும் சடை புயங்கன் – கல்லாடம்:2 91/5
விடுவது நெடும் புகழ் அடு வேலோயே – கல்லாடம்:2 97/26
அமுத வாய் கடு விழி குறும் தொடி நெடும் குழல் – கல்லாடம்:2 98/48
நின் உளம் நிறைந்த நெடும் கற்பு அதனால் – கல்லாடம்:2 99/45

மேல்

நெடுமலை (1)

நெடுமலை பெற்ற ஒரு மகள் காண – கல்லாடம்:2 21/27

மேல்

நெடுமாலுக்கு (1)

திரு நெடுமாலுக்கு ஒருவிசை புரிந்து – கல்லாடம்:2 18/5

மேல்

நெடுமாலோன் (1)

புவி அளந்து உண்ட திரு நெடுமாலோன்
இரு கரம் அடுக்கி பெரு நீர் வார்ப்ப – கல்லாடம்:2 30/12,13

மேல்

நெடுமையும் (2)

குறுமையும் நெடுமையும் கோடல்பெற்று ஐதாய் – கல்லாடம்:2 82/4
அங்குலி நெடுமையும் அமைத்து உள் தூர்ந்தே – கல்லாடம்:2 82/14

மேல்

நெடுவேள் (1)

நெடுவேள் கடவுள் மயில் கொடி முன்றில் – கல்லாடம்:2 24/3

மேல்

நெய் (6)

ஒருமையுள் ஒருங்கி இரு கை நெய் வார்த்து – கல்லாடம்:1 2/32
நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை – கல்லாடம்:2 6/3
நீர் நெய் வார்த்து சகரர் அமைத்த – கல்லாடம்:2 23/30
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்ப – கல்லாடம்:2 30/11
அரக்கர்-தம் கூட்டம் தொலைத்து நெய் உண்டு – கல்லாடம்:2 72/5
மணி சுடர் நறு நெய் கவர் மதி கருப்பைக்கு – கல்லாடம்:2 94/33

மேல்

நெய்த்து (2)

நீடி செறிந்து நெய்த்து உடல் குளிர்ந்த – கல்லாடம்:2 35/16
நெய்த்து பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு – கல்லாடம்:2 98/19

மேல்

நெய்தல் (2)

விரி வலை நுளையர் நெய்தல் ஏந்தி – கல்லாடம்:2 38/14
நெய்தல் பாசடை நெடும் காட்டு ஒளிக்கும் – கல்லாடம்:2 82/37

மேல்

நெய்தலில் (1)

குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி – கல்லாடம்:2 100/15

மேல்

நெய்தலும் (1)

கடுவும் சங்கமும் ஒளிர்தலின் நெய்தலும்
ஆக தனது பேர் அருள் மேனியில் – கல்லாடம்:2 64/19,20

மேல்

நெய்தலுள் (1)

நெடும் கழி குறும் கயல் நெய்தலுள் மறைந்தும் – கல்லாடம்:2 72/18

மேல்

நெய்தலை (1)

கரும் கழி நெய்தலை காவல்செய் கண் என – கல்லாடம்:2 72/27

மேல்

நெய்ப்பிலி (1)

சந்தை நெய்ப்பிலி என தரு பதினாறு – கல்லாடம்:2 98/25

மேல்

நெய்ம்மிதி (1)

நெய்ம்மிதி உண்ணாது அவன் கட களிறே – கல்லாடம்:2 61/25

மேல்

நெரிஞ்சில் (1)

சிற்றிலை நெரிஞ்சில் பொன் பூ என்ன – கல்லாடம்:2 62/15

மேல்

நெருக்கல் (1)

வாளுடன் நெருக்கல் மார்பொடு முனைதல் – கல்லாடம்:2 49/10

மேல்

நெருக்கியும் (1)

நெட்டுயிர்ப்பு எறிய முலை-முகம் நெருக்கியும்
ஊடியும் வணங்கியும் உவந்து அளி கூறியும் – கல்லாடம்:2 48/19,20

மேல்

நெருக்கு (2)

நெருக்கு பொழில் புக்கும் நெடு மலை கூயும் – கல்லாடம்:2 28/27
நெருக்கு பொழில் கூடல் அன்ன செம் மகளிர் – கல்லாடம்:2 33/25

மேல்

நெருக்குபு (1)

பணைத்து எழு சாலி நெருக்குபு புகுந்து – கல்லாடம்:2 69/12

மேல்

நெருக்குற (1)

நீர்_அரமகளிர் நெருக்குற புகுந்து – கல்லாடம்:2 63/1

மேல்

நெருங்கி (2)

மருங்கு கூண்டு எழுந்து கரும் காய் நெருங்கி
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும் – கல்லாடம்:2 21/20,21
மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி
சூர் அர கன்னியர் உடல் பனிசெய்யும் – கல்லாடம்:2 41/30,31

மேல்

நெருங்கிய (1)

மக்களொடு நெருங்கிய வீதி புறமும் – கல்லாடம்:2 41/29

மேல்

நெருங்கு (1)

இடை வளி போகாது நெருங்கு முலை கொடிச்சியர் – கல்லாடம்:2 22/19

மேல்

நெருநல் (1)

நெருநல் கண்ட எற்கு உதவிய இன்பம் – கல்லாடம்:2 81/45

மேல்

நெருப்பின் (1)

தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின் – கல்லாடம்:2 98/16

மேல்

நெருப்பு (6)

நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன் – கல்லாடம்:2 5/18
நெருப்பு உருத்து அன்ன செரு திறல் வரைந்த – கல்லாடம்:2 6/7
பொருப்பு மலி தோளினும் நெருப்பு உமிழ் வேலினும் – கல்லாடம்:2 20/1
நிரை தலை சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும் – கல்லாடம்:2 41/15
கரு நெருப்பு எடுத்த மறம் அருள் மாலை – கல்லாடம்:2 71/22
முகில் துகில் மூடி மணி நெருப்பு அணைத்து – கல்லாடம்:2 100/2

மேல்

நெருப்பும் (1)

விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும்
நிலை விட்டு படராது காணியில் நிலைக்க – கல்லாடம்:1 1/16,17

மேல்

நெருப்புறு (1)

நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும் – கல்லாடம்:2 23/41

மேல்

நெருப்பொடு (2)

நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத்து அவ் அழல் – கல்லாடம்:2 76/21
நெட்டு எறி ஊதை நெருப்பொடு கிடந்து – கல்லாடம்:2 77/3

மேல்

நெல் (3)

அணங்காட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க – கல்லாடம்:2 16/24
விளை வயல் ஒடுங்கும் உதிர் நெல் உணவினும் – கல்லாடம்:2 20/22
நெல் பிடித்து உரைக்கும் குறியினோளும் – கல்லாடம்:2 30/3

மேல்

நெற்று (2)

நெடும் தாள் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப – கல்லாடம்:2 7/28
பட்டு உலர் கள்ளி நெற்று உடை வாகை – கல்லாடம்:2 59/20

மேல்

நெறி (6)

கருவி நுனி கொள் நெறி இலை ஈந்தின் – கல்லாடம்:2 24/10
இனைய பல் நெறி பண்ணை எங்கும் – கல்லாடம்:2 28/32
மூரி வீழ்ந்த நெறி சடை முனிவர் – கல்லாடம்:2 33/11
புலன் நெறி வழக்கில் புணர் உலகவர்க்கும் – கல்லாடம்:2 63/22
பல் நாள் பல் நெறி அழுங்கினர் இன்று – கல்லாடம்:2 85/19
பல் நெறி வளம் நிற பூட்சியின் புல்லும் – கல்லாடம்:2 92/9

மேல்

நெறித்தும் (1)

நிறுத்தியும் நிறைத்தும் நெறித்தும் செறித்தும் – கல்லாடம்:2 54/19

மேல்

நெறிப்ப (1)

கட்செவி சுழல தாழ் சடை நெறிப்ப
இதழி தாது உதிர்ப்ப பிறை அமுது உகுக்க – கல்லாடம்:2 34/11,12

மேல்