போ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கலின் 1
போக்கி 5
போக்கிய 1
போக்கு 6
போக்கும் 1
போக 2
போகர் 1
போகா 2
போகாது 1
போகி 5
போகிய 3
போகுநர்க்கு 1
போகும் 3
போது 1
போதும் 1
போந்தது 1
போந்தனிர் 1
போந்தின் 1
போம் 2
போய் 2
போய்வித்த 1
போயின 1
போர் 1
போர்த்த 1
போர்வை 1
போல் 14
போல 92
போலவும் 2
போலும் 6
போவது 1
போழ்பட 1
போற்ற 2
போற்றி 1
போற்று 1
போற்றும் 1
போற்றுறு 1
போன 1
போனகம் 3

போக்கலின் (1)

உயிர் பரிந்து அளித்தலின் புலம் மிசை போக்கலின்
படி முழுது அளந்த நெடியோன் ஆகியும் – கல்லாடம்:2 11/15,16

மேல்

போக்கி (5)

திரை எறி மலைகளின் கவடு பல போக்கி
கல் செறி பாசியின் சினை குழை பொதுளி – கல்லாடம்:1 2/8,9
பொன் சிலை வளைத்து வாயில் போக்கி
சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலம் தார் – கல்லாடம்:2 14/4,5
இன்ப கிளவி அன்பினர் போக்கி
முடி தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி – கல்லாடம்:2 50/4,5
பூவை அம் புது மலர் போக்கி அரக்கு அடுத்த – கல்லாடம்:2 84/19
கறையடி சென்னியின் நக நுதி போக்கி
குருத்து அயில் பேழ் வாய் பல் படை சீயம் – கல்லாடம்:2 96/4,5

மேல்

போக்கிய (1)

அன்னையின் போக்கிய அரும் பெரும் தவறு – கல்லாடம்:2 83/28

மேல்

போக்கு (6)

போக்கு வழி படையாது உள் உயிர் விடுத்தலின் – கல்லாடம்:1 1/27
இரும் திசை போக்கு பெரும் தோள் ஆக – கல்லாடம்:2 20/27
போக்கு என உழையர் அயர்ப்பிடை கிளப்பினும் – கல்லாடம்:2 44/8
போக்கு அற வளைந்து புணர் இருள் நாளும் – கல்லாடம்:2 77/20
போக்கு அரும் கடும் சுரம் போக முன் இறந்தும் – கல்லாடம்:2 79/23
பொழி மது புது மலர் போக்கு உடை சுரும்பே – கல்லாடம்:2 81/39

மேல்

போக்கும் (1)

நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும் – கல்லாடம்:2 21/64

மேல்

போக (2)

செம் மகள் கரியோற்கு அறுதி போக
மகவின் இன்பம் கடல் சென்றிலவால் – கல்லாடம்:2 17/10,11
போக்கு அரும் கடும் சுரம் போக முன் இறந்தும் – கல்லாடம்:2 79/23

மேல்

போகர் (1)

போகர் அணங்குறும் வெள்ளறிவேமும் – கல்லாடம்:1 1/31

மேல்

போகா (2)

போகா காலை புணர்க்குவது என் ஆம் – கல்லாடம்:2 30/7
போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி – கல்லாடம்:2 43/27

மேல்

போகாது (1)

இடை வளி போகாது நெருங்கு முலை கொடிச்சியர் – கல்லாடம்:2 22/19

மேல்

போகி (5)

அறிவு நிலை போகி அருச்சனை விடுத்த – கல்லாடம்:2 25/16
சிறியோன் செரு என முறிய போகி
உழவ கணத்தை குல குடி புகுத்தும் – கல்லாடம்:2 54/34,35
முயங்கிய உள்ளம் போகி
மயங்கிய துறை இனம் ஒருங்குழி வளர்ந்தே – கல்லாடம்:2 72/32,33
நெடும் சால் போகி கடும் கயல் துரக்கும் – கல்லாடம்:2 74/8
மற்று அது நீண்டு மணி உடல் போகி
ஐம்பது_நூறுடன் அகன்று சுற்று ஒழுக்கி – கல்லாடம்:2 83/6,7

மேல்

போகிய (3)

ஓ அற போகிய சிறை விரி முதுகில் – கல்லாடம்:1 2/24
வீதி போகிய வால் உளை பரவி – கல்லாடம்:2 42/15
இரு வான் போகிய எரி சுடர் கடவுள் – கல்லாடம்:2 96/10

மேல்

போகுநர்க்கு (1)

மணந்து உடன் போகுநர்க்கு உயங்கு வழி மறுப்ப – கல்லாடம்:2 94/23

மேல்

போகும் (3)

விசைத்த நடை போகும் சகட காலும் – கல்லாடம்:1 1/34
தவ நதி போகும் அரு மறை தாபதர் – கல்லாடம்:2 6/14
கொன்று உணல் அஞ்சா குறியினர் போகும்
கடும் சுரம் தந்த கல் அதர் வெப்பம் – கல்லாடம்:2 53/4,5

மேல்

போது (1)

போது தூய் இரப்ப புணரா மயக்கம் – கல்லாடம்:2 25/14

மேல்

போதும் (1)

நீல போதும் பேதையும் விழித்த – கல்லாடம்:2 81/34

மேல்

போந்தது (1)

தம் உளம் தவறி போந்தது இவ்விடனே – கல்லாடம்:2 63/30

மேல்

போந்தனிர் (1)

அரிதின் போந்தனிர் என்று ஓர் – கல்லாடம்:2 8/37

மேல்

போந்தின் (1)

தாளி போந்தின் தரு மயிர் பெரும் தலை – கல்லாடம்:2 34/3

மேல்

போம் (2)

போம் என வாய் சொல் கேட்பினும் புகைந்தும் – கல்லாடம்:2 44/11
போம் வழி எனும் கடும் சுரம் மருதம் – கல்லாடம்:2 59/35

மேல்

போய் (2)

கதிர் உடல் வழி போய் கல் உழை நின்றோர் – கல்லாடம்:2 6/6
செம் மலர் குழல் இவள் போய் அறிவுறுத்த – கல்லாடம்:2 73/25

மேல்

போய்வித்த (1)

குணம் குடி போய்வித்த ஆய் உளம் தவறே – கல்லாடம்:2 15/31

மேல்

போயின (1)

போயின துனைவினை நோக்கி – கல்லாடம்:2 53/20

மேல்

போர் (1)

போர் வலி அவுணர் புக பொருது உடற்றிய – கல்லாடம்:2 88/30

மேல்

போர்த்த (1)

நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்கு – கல்லாடம்:2 68/4

மேல்

போர்வை (1)

இரும் திண் போர்வை பிணி விசி முரசம் – கல்லாடம்:2 18/14

மேல்

போல் (14)

கடல் அமுது எடுத்து கரையில் வைத்தது போல்
பரப்பின் தமிழ் சுவை திரட்டி மற்று அவர்க்கு – கல்லாடம்:2 3/14,15
மலை மறை அதகம் மாற்றிய அது போல்
கொடுமர கொலைஞர் ஆற்றிடை கவர – கல்லாடம்:2 6/17,18
குடத்தியர் இழுக்கிய அளை சிதறிய போல்
கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப – கல்லாடம்:2 14/10,11
எழுந்து காட்டி பாடுசெய் கதிர் போல்
தோன்றி நில்லா நிலை பொருள் செய்ய – கல்லாடம்:2 20/19,20
பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல்
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர் – கல்லாடம்:2 35/2,3
கூடி உண்ணும் குணத்தினர் கிளை போல்
நீடி செறிந்து நெய்த்து உடல் குளிர்ந்த – கல்லாடம்:2 35/15,16
என் போல் இ நிலை நின்றவர் படைக்கும் – கல்லாடம்:2 36/12
பதினெண் கிளவி ஊர் துஞ்சிய போல்
புள் குலம் பொய்கை-வாய் தாள்கொள – கல்லாடம்:2 38/3,4
கண் பருகாத களவினர் உளம் போல்
காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில் – கல்லாடம்:2 46/12,13
இரு பதம் உள் வைத்து இருந்தவர் வினை போல்
போயின துனைவினை நோக்கி – கல்லாடம்:2 53/19,20
ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தன போல்
நீடி நின்று உதவும் கற்பு உடை நிலையினர் – கல்லாடம்:2 58/13,14
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம் – கல்லாடம்:2 72/15
இணை முலை நன்னர் இழந்தன அது போல்
மற்று அவர் கவை மனம் மாழ்கி – கல்லாடம்:2 78/27,28
கடுக்கை அம் சடையினன் கழல் உளத்து இலர் போல்
பொய் வரும் ஊரன் புகல் அரும் இல் புக – கல்லாடம்:2 79/15,16

மேல்

போல (92)

கரு மணி கொழித்த தோற்றம் போல
இரு கவுள் கவிழ்த்த மத நதி உவட்டின் – கல்லாடம்:1 1/2,3
செங்கதிர் திரள் எழு கரும் கடல் போல
மு கண் மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த – கல்லாடம்:1 1/5,6
அறிவு புறம்போய உலண்டது போல
கடல் திரை சிறுக மலக்கு துயர் காட்டும் – கல்லாடம்:1 1/28,29
சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர் போல
கறுத்து சிவந்தன கண் இணை மலரே – கல்லாடம்:2 1/22,23
பேர் அருள் நாயகன் சீர் அருள் போல
மணத்துடன் விரிந்த கைதை அம் கானத்து – கல்லாடம்:2 2/14,15
கள்வரை காணும் உள்ளம் போல
செம் மனம் திருகி உள்ளம் துடித்து – கல்லாடம்:2 2/21,22
பேர் அருள் விளையா சீரிலர் போல
துலங்கிய அமுதம் கலங்கியது என்ன – கல்லாடம்:2 5/21,22
தாள் தலை தரித்த கோளினர் போல
நெடும் சுரம் நீங்க தம் கால் – கல்லாடம்:2 6/42,43
புலன் நிரை மறைத்த புணர்ப்பது போல
குளிர்கொண்டு உறையும் தெளி நீர் வாவியை – கல்லாடம்:2 7/35,36
இன்புகள் நோக்கா இயல்பது போல
மருங்கு பின் நோக்காது ஒருங்கு விட்டு அகல – கல்லாடம்:2 7/43,44
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க – கல்லாடம்:2 8/2,3
பழி நாட்டு ஆர்ந்த பாவம் போல
சேர மறைந்த கூர் இருள் நடுநாள் – கல்லாடம்:2 8/35,36
இரு சரண் பெருகுநர் போல
பெருமதி நீடுவர் சிறுமதி_நுதலே – கல்லாடம்:2 11/31,32
அடங்கினர் போல நீயும் – கல்லாடம்:2 13/26
கூடல் நின்று ஏத்தினர் குல கிளை போல
துணர் பெறு கோதையும் ஆரமும் புனைக – கல்லாடம்:2 14/36,37
நட்டு பகையினர் உட்குடி போல
உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும் – கல்லாடம்:2 14/42,43
விருந்து கொண்டு உண்ணும் பெரும் தவர் போல
நீங்கா திரு உடை நலனும் – கல்லாடம்:2 14/46,47
சோதிட கலைமகள் தோற்றம் போல
சொரி வெள் அலகரும் பழுது_இல் வாய்மையர் – கல்லாடம்:2 15/6,7
கூற்றம் உருத்து எழுந்த கொள்கை போல
நெட்டு உடல் பேழ் வாய் பெரும் சுறவு தடியும் – கல்லாடம்:2 15/20,21
கைஞ்ஞின்றவன் செம் கால் கண்டவர் போல
விளக்கமும் புதுமையும் அளப்பு_இல் காட்சியும் – கல்லாடம்:2 18/10,11
முகனுற காணும் கரியோர் போல
இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ – கல்லாடம்:2 18/30,31
பாற்கடல் உறங்கும் மாயவன் போல
தவள மாடத்து அகல் முதுகு பற்றி – கல்லாடம்:2 19/21,22
தளையொடு நிறை நீர் விடுவன போல
புரைசையொடு பாசம் அற உடல் நிமிர்ந்து – கல்லாடம்:2 20/34,35
பல தலை அரக்கர் பேரணி போல
மருங்கு கூண்டு எழுந்து கரும் காய் நெருங்கி – கல்லாடம்:2 21/19,20
கால் தலை கொள்ளா கையினர் போல
நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும் – கல்லாடம்:2 21/63,64
இரு தாள் பெற்றவர் பெறும் திரு போல
மருவிய பண்ணை இன்பமொடு விளை நலம் – கல்லாடம்:2 22/52,53
இமையாது விழித்த தோற்றம் போல
கஞ்ச கொள்ளை இடையற மலர்ந்து – கல்லாடம்:2 23/3,4
கண்ணன் கரமும் வெண்ணெயும் போல
பாசடை புதைத்த நெட்டு ஆற்று ஏரியுள் – கல்லாடம்:2 24/30,31
வள்ளியோர் ஈதல் வரையாது போல
எண் திசை கரு இருந்து இன மழை கான்றது – கல்லாடம்:2 26/1,2
அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழி போல
நெடும் குழை கிழிப்ப கடும் கயல் பாயும் – கல்லாடம்:2 27/29,30
துலக்கு மலை ஒருநாள் கலக்குவ போல
உழுவை உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல் – கல்லாடம்:2 29/13,14
தரைபடு மறுக்கம் தடைந்தன போல
விண்ணுற விரித்த கரு முகில் படாம் கொடு – கல்லாடம்:2 29/16,17
வண்டொடு மலர்ந்த வண்ணம் போல
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி – கல்லாடம்:2 29/21,22
ஈயாது உண்ணுநர் நெடும் பழி போல
போகா காலை புணர்க்குவது என் ஆம் – கல்லாடம்:2 30/6,7
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போல
பீரமும் நோயும் மாறின் – கல்லாடம்:2 30/23,24
பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல
பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில் – கல்லாடம்:2 32/2,3
கரும் குழல் பெரு மணம் போல
ஒருங்கும் உண்டேல் பேசுவிர் எமக்கே – கல்லாடம்:2 35/17,18
உளம் விழுங்காத களவினர் போல என் – கல்லாடம்:2 36/7
கருவொடு வாடும் பைங்கூழ் போல
கற்பு நாண் மூடி பழங்கண்கொள்ள – கல்லாடம்:2 37/4,5
உயர் மரம் முளைத்த ஊரி போல
ஓருடல்செய்து மறு மனம் காட்டும் – கல்லாடம்:2 37/6,7
பொய்யினர் செய்யும் புல்லம் போல
பேரா வாய்மை ஊரன் – கல்லாடம்:2 37/22,23
கோடிய கோலினன் செருமுகம் போல
கனை கதிர் திருகி கல் சேர்ந்து முறை புக – கல்லாடம்:2 38/1,2
இருள்மகள் கொண்ட குறுநகை போல
முல்லையும் மௌவலும் முருகு உயிர்த்து அவிழ – கல்லாடம்:2 38/6,7
என் உயிர் வளைந்த தோற்றம் போல
நால் படை வேந்தன் பாசறையோர்க்கும் – கல்லாடம்:2 38/32,33
திருவடி சுமந்த அருளினர் போல
கரும் தேன் உடைத்து செம் மணி சிதறி – கல்லாடம்:2 39/17,18
முடங்கு_உளை கண்ட பெரும் துயர் போல
உயிரினும் நுனித்த அவ் உரு கொடு – கல்லாடம்:2 41/51,52
கண்டன கவரும் காட்சி போல
வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய – கல்லாடம்:2 42/19,20
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல
சலியா சார்பு நிலை அற நீங்கி – கல்லாடம்:2 42/30,31
செங்கோல் அரசன் முறை தொழில் போல
அமுதமும் கடுவும் வாளும் படைத்த – கல்லாடம்:2 45/7,8
செய் குறை முடிப்பவர் செனனம் போல
பத மலர் மண் மிசை பற்றி படர்ந்தன – கல்லாடம்:2 45/10,11
உரகன் வாய் கீண்ட மாதவன் போல
மண் அகழ்ந்து எடுத்து வரு புனல் வையை – கல்லாடம்:2 47/21,22
அடைப்பது போல உடைப்பது நோக்கி – கல்லாடம்:2 47/25
திருவடி பெரும் தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர் தழை – கல்லாடம்:2 48/14,15
பொன்மலை கண்ட பொலிவு போல
மணி கெழு மார்பத்து அணிபெற புகுத்தலின் – கல்லாடம்:2 50/13,14
திருக்கண் கண்ட பெருக்கினர் போல
முளரி அம் கோயில் தளைவிட வந்து – கல்லாடம்:2 50/30,31
பெருந்தகை வேந்தன் அரும் குணம் போல
மணந்தோர்க்கு அமுதும் தணந்தோர்க்கு எரியும் – கல்லாடம்:2 51/2,3
கரு முகில் வளைந்து பெருகிய போல
நிலை கெட பரந்த கடல் கெழு விடத்தை – கல்லாடம்:2 51/28,29
கூடல் கூடினர் போல
நாடல் நீ இவள் கழை தோள் நசையே – கல்லாடம்:2 51/32,33
சின்னக்குறளும் செழும் கார் போல
பெரு மறை முழங்கும் திரு நகர் கூடல் – கல்லாடம்:2 52/24,25
உயிர் வைத்து உடலம் உழன்றன போல
நெடும் பொருள் ஈட்ட நின் பிரிந்து இறந்து – கல்லாடம்:2 53/2,3
உடலொடு படரும் நிலை நிழல் போல
நீங்கா பவ தொகை நிகழ் முதல் நான்கும் – கல்லாடம்:2 53/12,13
செய்தன எல்லாம் செய்யலர் போல என் – கல்லாடம்:2 54/22
பிடி குளிசெய்யும் களிறது போல
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை – கல்லாடம்:2 55/27,28
தலை நடுக்குற்ற தன்மை போல
ஒன்று அற அகற்றி உடன் கலந்திலனேல் – கல்லாடம்:2 55/32,33
நாயகன் திருவடி நண்ணலர் போல
பொய் பல புகன்றும் மெய் ஒழித்து இன்பம் – கல்லாடம்:2 56/14,15
ஆழி வலவன் அடர்த்தன போல
புன் தலை மேதி புனல் எழ முட்டிய – கல்லாடம்:2 57/2,3
செம்மையர் போல கோடாது – கல்லாடம்:2 57/27
மன் நிலை கட வா மனத்தவர் போல
ஒன்னலர் இடும் திறை செலினும் – கல்லாடம்:2 62/30,31
வானவர் மங்கையர் மயக்கம் போல
பிணர் கரு மருப்பின் பிதிர்பட உழக்கி – கல்லாடம்:2 63/9,10
சொல்லினும் தொடக்கும் புல்லம் போல
எம்மிடத்து இலதால் என்னை – கல்லாடம்:2 63/28,29
கண்ணொடு கண்ணில் கழறிய போல
ஒருவரின்ஒருவர் உள்ளத்து அடக்கி – கல்லாடம்:2 64/6,7
அடையலர் போல மருள் மனம் திரிந்தே – கல்லாடம்:2 66/31
இரு பதம் உள் வைத்தவர் போல
மருவுதல் ஒருவும் மதி ஆகுவனே – கல்லாடம்:2 67/25,26
கிளைஞர்கள் நச்சா பொருளினர் போல
சாதகம் வெறுப்ப சரிந்து அகழ்ந்து ஆர்த்து – கல்லாடம்:2 68/18,19
நிறை உளம் தரித்தவர் போல
குறை உளம் நீங்கி இன்பு ஆகுவனே – கல்லாடம்:2 68/33,34
ஒற்றை அம் பசும் கழை ஒல்கிய போல
உலகு உயிர்க்கு உயிர் எனும் திருவுரு அணைந்து – கல்லாடம்:2 69/26,27
பேர் அருள் அளித்த மா தவர் போல
முன் ஒருநாளில் உடல் உயிர் நீ என – கல்லாடம்:2 70/10,11
புகை உடல் புடைத்த விட வினை போல
மனம் கடந்து ஏறா மதில் வளைத்து எங்கும் – கல்லாடம்:2 71/20,21
திருமலர் இருந்த முதியவன் போல
நான் முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து – கல்லாடம்:2 72/1,2
அடியினும் முடியினும் அணைந்தன போல
பசும் தழை தோகையும் செம் சிறை சேவலும் – கல்லாடம்:2 73/3,4
உமிழ்வன போல சுரி முக சூல் வளை – கல்லாடம்:2 74/22
பிறவி பேதத்து உறையது போல
ஆரிய பதம் கொள் நாரத பேரியாழ் – கல்லாடம்:2 82/9,10
வரை உலகு அனைத்தும் வருவது போல
திரை நிரை திரைத்து கரை கரை கொல்லும் – கல்லாடம்:2 86/3,4
மலை புள் போல நிலை குரல் அணைந்து ஆங்கு – கல்லாடம்:2 91/12
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல
இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு – கல்லாடம்:2 94/35,36
இரு சரண் அடைந்த மறுவிலர் போல
அருளுடன் தமியை வாடினை ஐய – கல்லாடம்:2 96/15,16
கோளினர் போல குறி பல குறித்தே – கல்லாடம்:2 97/19
கூடல் கூடா குணத்தினர் போல
முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/46,47
உலகியல் மறந்த கதியினர் போல
நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின – கல்லாடம்:2 98/50,51
பகழி செய் கம்மியர் உள்ளம் போல
ஐம்புல கேளிரும் ஒருவாய் புக்கன – கல்லாடம்:2 98/52,53
சீறிதழ் சாதி பெருமணம் போல
நின் உளம் நிறைந்த நெடும் கற்பு அதனால் – கல்லாடம்:2 99/44,45
புண்ணியம் தொடரும் புணர்ச்சி போல
காலமுற்று ஒடுங்கும் நீள் முகில் கூட்டமும் – கல்லாடம்:2 99/47,48

மேல்

போலவும் (2)

நிறைய பேசா குறையினர் போலவும்
கல்லா மனனினும் செல்லுதி பெரும – கல்லாடம்:2 20/40,41
தொக்க தீ பெருவினை சூழ்ந்தன போலவும்
துறவால் அறனால் பெறல்_இல் மாந்தர் – கல்லாடம்:2 38/28,29

மேல்

போலும் (6)

தன் கண் போலும் என் கண் நோக்கி – கல்லாடம்:2 2/20
திருவடி புகழுநர் செல்வம் போலும்
அண்ணாந்து எடுத்த அணிவுறு வன முலை – கல்லாடம்:2 41/42,43
பழம் கொள் தத்தை வழங்கு சொல் போலும்
மழலை கிளவியும் இருநிலத்து இன்பமும் – கல்லாடம்:2 50/9,10
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
விடையா வடந்தை செய் வெள்ளி அம் சிலம்பினும் – கல்லாடம்:2 52/9,10
கற்பகம் போலும் அற்புதம் பழுத்த – கல்லாடம்:2 62/10
புரந்தரன் போலும் பொன் எயில் எறிந்த – கல்லாடம்:2 81/13

மேல்

போவது (1)

பொன் உருள் வையம் போவது காண்க – கல்லாடம்:2 69/10

மேல்

போழ்பட (1)

போழ்பட கிடந்த ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/26

மேல்

போற்ற (2)

நான்முகன் முதலா மூவரும் போற்ற
முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்ப – கல்லாடம்:2 82/30,31
இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு – கல்லாடம்:2 94/36

மேல்

போற்றி (1)

எண்தக போற்றி நின் கால் வணங்குதுமே – கல்லாடம்:2 21/66

மேல்

போற்று (1)

சோற்று கடன் கழிக்க போற்று உயிர் அழிக்கும் – கல்லாடம்:2 29/28

மேல்

போற்றும் (1)

ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும் – கல்லாடம்:1 1/32

மேல்

போற்றுறு (1)

போற்றுறு திருவம் நால் திசை பொலிய – கல்லாடம்:2 14/8

மேல்

போன (1)

போன நம் தனி நமர் புள் இயல் மான் தேர் – கல்லாடம்:2 14/21

மேல்

போனகம் (3)

பூழி போனகம் புதுவுடன் உண்டும் – கல்லாடம்:2 9/23
அமுத போனகம் கதுமென உதவும் – கல்லாடம்:2 23/36
பூழி அம் போனகம் பொதுவுடன் உண்டும் – கல்லாடம்:2 85/4

மேல்