வெ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெகுளி 1
வெகுளுநர் 1
வெட்சி 2
வெடி 2
வெண் 21
வெண்_பொடி 2
வெண்குடையே 1
வெண்கூதளத்தில் 1
வெண்சுடர் 3
வெண்ணெயும் 1
வெண்மையிட 1
வெண்மையின் 1
வெதுப்பு 1
வெதுப்புற 1
வெப்பம் 1
வெம் 3
வெம்மையும் 1
வெம்மையொடு 1
வெயில் 2
வெயிலின் 1
வெரீஇ 1
வெருகின் 1
வெருண்டு 1
வெருவி 1
வெவ் 1
வெள் 18
வெள்_அணி_விழவில் 1
வெள்ள 3
வெள்ளத்துள் 1
வெள்ளம் 1
வெள்ளமும் 3
வெள்ளறிவேமும் 1
வெள்ளாங்குருகு 1
வெள்ளி 6
வெள்ளிடை 1
வெள்ளிடையாம் 1
வெள்ளிடையில் 1
வெள்ளியம் 1
வெள்ளியம்பலத்துள் 2
வெள்ளியம்பலம் 1
வெள்ளை 3
வெளிப்பட்டு 1
வெளிப்பட 1
வெளிப்படுத்தலின் 1
வெளியகத்து 1
வெளியும் 1
வெளியுற 2
வெளுத்த 1
வெற்பன் 1
வெற்பனின் 1
வெறி 8
வெறியாட்டாளன் 1
வெறியில் 1
வெறுத்த 1
வெறுப்ப 2
வெறும் 1
வென்றி 5

வெகுளி (1)

கருகி நொய்தாதல் காற்று வெகுளி
திருகல் முரணே செம்மண் இறுகல் – கல்லாடம்:2 98/21,22

மேல்

வெகுளுநர் (1)

காமம் ஆறுள் கவர்தரும் வெகுளுநர்
படிறு உளம் கமழும் செறிதரு தீ உறழ் – கல்லாடம்:2 97/9,10

மேல்

வெட்சி (2)

வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழல் கால் – கல்லாடம்:1 2/56
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி – கல்லாடம்:2 24/4

மேல்

வெடி (2)

நாசி காகுளி வெடி குரல் வெள்ளை – கல்லாடம்:2 21/45
வெடி வால் பைம் கண் குறுநரி இனத்தினை – கல்லாடம்:2 42/13

மேல்

வெண் (21)

சிவந்த வாய்-தொறும் வெண் பொரி சிதற – கல்லாடம்:2 18/23
இல் உறை கல்லின் வெண் மலர் பரப்பி – கல்லாடம்:2 18/26
செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை – கல்லாடம்:2 21/4
மீன் உணவு உள்ளியிருந்த வெண் குருகு என – கல்லாடம்:2 21/17
வெண் துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் – கல்லாடம்:2 22/35
பெடை குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு – கல்லாடம்:2 23/8
கரும் கை வெண் கோட்டு சிறு கண் பெரும் களிறு – கல்லாடம்:2 25/3
வெண் நகை கரும் குழல் செம் தளிர் சீறடி – கல்லாடம்:2 26/3
வெண் நகை செவ் வாய் கரும் குழல் மகளிர் – கல்லாடம்:2 32/11
வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை – கல்லாடம்:2 33/27
வெண் முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து – கல்லாடம்:2 34/17
வெண் திருநீற்று செக்கர் மேனியன் – கல்லாடம்:2 39/9
வெண் கார் பெய்யும் நாள் குறித்து உழுநரும் – கல்லாடம்:2 47/10
வெண் கார் கழனி குருகு எழ புகுந்து – கல்லாடம்:2 63/11
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும் – கல்லாடம்:2 67/4
வெண் சிறை முடித்த செம் சடை பெருமான் – கல்லாடம்:2 67/23
குளிர் வெண் தரள குவால் இவை காண்க – கல்லாடம்:2 69/16
கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை – கல்லாடம்:2 72/20
எழில் மதி விரித்த வெண் தளை இதழ் தாமரை – கல்லாடம்:2 78/4
ஏன கோடு வெண்_பொடி புறத்து ஒளிர – கல்லாடம்:2 85/37
கைதை வெண் குருகு எழ மொய் திரை உகளும் – கல்லாடம்:2 92/13

மேல்

வெண்_பொடி (2)

வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை – கல்லாடம்:2 33/27
ஏன கோடு வெண்_பொடி புறத்து ஒளிர – கல்லாடம்:2 85/37

மேல்

வெண்குடையே (1)

மற்று அவள் ஊரன் கொற்ற வெண்குடையே
ஏழ் உளை புரவியோடு எழு கதிர் நோக்கிய – கல்லாடம்:2 62/13,14

மேல்

வெண்கூதளத்தில் (1)

வெண்கூதளத்தில் விளரி நின்று இசைத்தும் – கல்லாடம்:2 54/4

மேல்

வெண்சுடர் (3)

வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு – கல்லாடம்:2 10/14
உலக இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
காலம் கோடா முறைமுறை தோற்ற – கல்லாடம்:2 23/11,12
உலகு இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
பிரமன் உட்பட்ட நில உயிர் அனைத்தும் – கல்லாடம்:2 69/29,30

மேல்

வெண்ணெயும் (1)

கண்ணன் கரமும் வெண்ணெயும் போல – கல்லாடம்:2 24/30

மேல்

வெண்மையிட (1)

எக்கர் புளினம் வெண்மையிட மறைக்கும் – கல்லாடம்:2 34/21

மேல்

வெண்மையின் (1)

குறையா பாண்டில் வெண்மையின் மலர்ந்த – கல்லாடம்:2 21/11

மேல்

வெதுப்பு (1)

புறவிதழ் புதவு அடைத்து அதன் வெதுப்பு உறுக்கவும் – கல்லாடம்:2 76/4

மேல்

வெதுப்புற (1)

குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற
நிலமகள் உடலமும் திங்களும் குளிர – கல்லாடம்:2 94/27,28

மேல்

வெப்பம் (1)

கடும் சுரம் தந்த கல் அதர் வெப்பம்
தேவர் மருந்தும் தென் தமிழ் சுவையும் – கல்லாடம்:2 53/5,6

மேல்

வெம் (3)

இட்ட வெம் கொடும் சிறை பட்ட கார் குலம் – கல்லாடம்:2 20/33
வெம் சுடர் தண் மதி என புகழ் நிறீஇய – கல்லாடம்:2 28/2
எரியகல் ஏந்தி வெம் புயங்கம் மிசை ஆக்கி – கல்லாடம்:2 85/32

மேல்

வெம்மையும் (1)

வெம்மையும் தண்மையும் வினை உடற்கு ஆற்றும் – கல்லாடம்:2 75/18

மேல்

வெம்மையொடு (1)

வெம்மையொடு கூடியும் தண்மை பொருந்தியும் – கல்லாடம்:2 23/10

மேல்

வெயில் (2)

புதை இருள் துரக்கும் வெயில் மணி திருவும் – கல்லாடம்:2 14/38
இடங்கரும் ஆமையும் எழு வெயில் கொளுவும் – கல்லாடம்:2 74/19

மேல்

வெயிலின் (1)

தூக்கின் தகட்டின் சுடர் வாய் வெயிலின்
குச்சையின் மத்தக குறியின் ஓரத்தின் – கல்லாடம்:2 98/17,18

மேல்

வெரீஇ (1)

குறும் பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ
சேவலும் இனமும் சூழும் – கல்லாடம்:2 34/23,24

மேல்

வெருகின் (1)

வலம்புரி சத்தமும் வெருகின் புணர்ச்சியும் – கல்லாடம்:2 21/53

மேல்

வெருண்டு (1)

நாகொடு வெருண்டு கழை கரும்பு உழக்க – கல்லாடம்:2 27/28

மேல்

வெருவி (1)

குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவி
பாசடை குடம்பையூடு கண்படுப்ப – கல்லாடம்:2 64/28,29

மேல்

வெவ் (1)

தண் மதி கடும் சுடர் வெவ் அழல் கண் வைத்து – கல்லாடம்:2 20/24

மேல்

வெள் (18)

செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது – கல்லாடம்:2 5/7
தூவி அம் தோகை வெள் ஓதிமம் தொடர் உழை – கல்லாடம்:2 7/16
விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு – கல்லாடம்:2 12/3
வெள் வாய் குதட்டிய விழுது உடை கரும் தடி – கல்லாடம்:2 14/33
சொரி வெள் அலகரும் பழுது_இல் வாய்மையர் – கல்லாடம்:2 15/7
கள் அமர் கோதையர் வெள்_அணி_விழவில் – கல்லாடம்:2 19/9
கரும் கழி கொடுக்கும் வெள் இறவு அருந்த – கல்லாடம்:2 23/6
இறால் நறவு அளாய செந்தினை வெள் இடி – கல்லாடம்:2 24/5
வெள் உடல் பேழ் வாய் தழல் விழி மடங்கல் – கல்லாடம்:2 26/11
வெள் உடல் கரும் கண் கயல் நிரை உகைப்ப – கல்லாடம்:2 54/27
புண்ணியம் இவை முதல் வெள் உடல் கொடுக்கும் – கல்லாடம்:2 57/15
அலவன் கவை கால் அன்ன வெள் அலகும் – கல்லாடம்:2 67/5
வெள் இறவு உணங்கல் காவலாக – கல்லாடம்:2 67/10
வெள் இறவு உண்ண விழைந்து புகு குருகு இனம் – கல்லாடம்:2 72/26
வெள் உடல் ஓதிமம் தன்னுடை பெடை என – கல்லாடம்:2 74/13
வெள் உடல் கூர் வாய் செம் தாள் குருகு இனம் – கல்லாடம்:2 82/39
கையடை கொடுத்த வெள் நிண வாய் குழவி – கல்லாடம்:2 88/18
வெறி குறும் கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர் – கல்லாடம்:2 97/1

மேல்

வெள்_அணி_விழவில் (1)

கள் அமர் கோதையர் வெள்_அணி_விழவில்
ஐங்கணை_கிழவன் காட்சியுள் மகிழ – கல்லாடம்:2 19/9,10

மேல்

வெள்ள (3)

வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும் – கல்லாடம்:2 25/17
வெள்ள பெரு நதி கொள்ளை முகம் வைத்து – கல்லாடம்:2 27/2
பெருக்கெடுத்து இழிதரும் வெள்ள பிரச – கல்லாடம்:2 97/3

மேல்

வெள்ளத்துள் (1)

வற்றா மேனி வெள்ளத்துள் மறிய – கல்லாடம்:2 18/21

மேல்

வெள்ளம் (1)

மு கண் மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த – கல்லாடம்:1 1/6

மேல்

வெள்ளமும் (3)

வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும் – கல்லாடம்:2 6/38
மலை கொடு மலைந்த முதுநீர் வெள்ளமும்
மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந்து உடைந்து – கல்லாடம்:2 54/32,33
வெள்ளமும் மற்றையர் கள்ளமும் கடந்து – கல்லாடம்:2 64/11

மேல்

வெள்ளறிவேமும் (1)

போகர் அணங்குறும் வெள்ளறிவேமும்
ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும் – கல்லாடம்:1 1/31,32

மேல்

வெள்ளாங்குருகு (1)

மதியம் உடல் குறைத்த வெள்ளாங்குருகு இனம் – கல்லாடம்:2 78/1

மேல்

வெள்ளி (6)

முனிவர் ஏமுற வெள்ளி அம் பொதுவில் – கல்லாடம்:2 18/7
வெள்ளி இரும்பு பொன் எனப்பெற்ற – கல்லாடம்:2 22/40
விடையா வடந்தை செய் வெள்ளி அம் சிலம்பினும் – கல்லாடம்:2 52/10
வெள்ளி முகிழ்த்த ஒரு கண் பார்ப்பான் – கல்லாடம்:2 57/10
வெள்ளி அம் குன்றகம் உள்ளுற புகுந்து ஒரு – கல்லாடம்:2 78/15
வெள்ளி அம் குன்றம் விளங்க வீற்றிருந்த – கல்லாடம்:2 82/34

மேல்

வெள்ளிடை (1)

வேம் உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப – கல்லாடம்:2 7/27

மேல்

வெள்ளிடையாம் (1)

ஈது என அறியாது ஒன்றி வெள்ளிடையாம்
மாது உடை கழிக்கரை சேரி ஓர் பாங்கர் – கல்லாடம்:2 67/7,8

மேல்

வெள்ளிடையில் (1)

பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டு என – கல்லாடம்:2 88/2

மேல்

வெள்ளியம் (1)

வெள்ளியம் பொதுவில் கள் அவிழ் குழலொடும் – கல்லாடம்:2 26/27

மேல்

வெள்ளியம்பலத்துள் (2)

வெள்ளியம்பலத்துள் துள்ளிய பெருமான் – கல்லாடம்:2 34/13
வெள்ளியம்பலத்துள் துள்ளிய ஞான்று – கல்லாடம்:2 76/20

மேல்

வெள்ளியம்பலம் (1)

வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை – கல்லாடம்:2 59/23

மேல்

வெள்ளை (3)

வெள்ளை மதி முடித்த செம் சடை ஒருத்தன் – கல்லாடம்:1 1/10
நாசி காகுளி வெடி குரல் வெள்ளை
பேசா கீழிசை ஒருபுறமொட்டல் – கல்லாடம்:2 21/45,46
வெள்ளை கொள் சிந்துர நல் அணி ஆகி – கல்லாடம்:2 22/10

மேல்

வெளிப்பட்டு (1)

களிப்பு உடை அடியர்க்கு வெளிப்பட்டு என்ன – கல்லாடம்:2 25/40

மேல்

வெளிப்பட (1)

நின் புனம் அல்ல என்று என் புலம் வெளிப்பட
அறைதல் வேண்டும் அ புனம் நீரேல் – கல்லாடம்:2 81/51,52

மேல்

வெளிப்படுத்தலின் (1)

மறை வெளிப்படுத்தலின் கலைமகள் இருத்தலின் – கல்லாடம்:2 11/13

மேல்

வெளியகத்து (1)

இடைநிலை அற்ற படர் பெரு வெளியகத்து
உடல் முடக்கு எடுத்த தொழில் பெரு வாழ்க்கை – கல்லாடம்:2 78/7,8

மேல்

வெளியும் (1)

கள்ளமும் வெளியும் உள்ளம் உறை அனைத்தும் – கல்லாடம்:2 25/42

மேல்

வெளியுற (2)

வெளியுற தோன்றி இருளுற மறைந்த – கல்லாடம்:2 52/21
வெளியுற தோன்றிய இருள் மணி மிடற்றோன் – கல்லாடம்:2 87/37

மேல்

வெளுத்த (1)

கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும் – கல்லாடம்:2 15/24

மேல்

வெற்பன் (1)

வெற்பன் காதல் கால் உலை வேலையில் – கல்லாடம்:2 36/9

மேல்

வெற்பனின் (1)

பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே – கல்லாடம்:2 8/38

மேல்

வெறி (8)

வேலனும் வெறி களன் ஏறுதல் ஆக – கல்லாடம்:2 16/23
வெறி வீ சந்தின் நிரை இடை எறிந்து – கல்லாடம்:2 28/14
வெறி விழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை – கல்லாடம்:2 42/2
வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும் – கல்லாடம்:2 81/40
வெறி மறி மடை குரல் தோல் காய்த்து என்ன – கல்லாடம்:2 92/1
வெறி விழி சவரர் மா அடி ஒற்ற – கல்லாடம்:2 94/22
வெறி கண் கவை அடி கடும் கால் மேதி – கல்லாடம்:2 96/20
வெறி குறும் கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர் – கல்லாடம்:2 97/1

மேல்

வெறியாட்டாளன் (1)

மனவு அணி மடந்தை வெறியாட்டாளன்
வேல்மகன் குறத்தி மா மதி முதியோள் – கல்லாடம்:2 7/10,11

மேல்

வெறியில் (1)

அயரா வெறியில் தண்டா வரு நோய் – கல்லாடம்:2 30/5

மேல்

வெறுத்த (1)

குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்த நின் – கல்லாடம்:2 53/8

மேல்

வெறுப்ப (2)

சாதகம் வெறுப்ப சரிந்து அகழ்ந்து ஆர்த்து – கல்லாடம்:2 68/19
உடை நறவு உண்டு வருடை வெறுப்ப
அகில் சுடு பெரும் புனம் உழு பதன் காட்ட – கல்லாடம்:2 94/20,21

மேல்

வெறும் (1)

மென் நடை குழை செவி பெறா வெறும் கரும் பிடி – கல்லாடம்:2 42/3

மேல்

வென்றி (5)

அமையா வென்றி அரத்த நெடு வேலோய் – கல்லாடம்:1 2/15
ஓடா வென்றி பொலம் பூண் குரிசில் – கல்லாடம்:2 2/16
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க – கல்லாடம்:2 30/22
முளையா வென்றி இவள் முகம் மதிக்கே – கல்லாடம்:2 60/29
திணி புகும் வென்றி செரு அழல் கூடவும் – கல்லாடம்:2 76/6

மேல்