ஒ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்கல் 1
ஒக்கலொடு 1
ஒசிந்து 1
ஒட்டல் 1
ஒட்டுவிட்டு 1
ஒடித்து 1
ஒடு 1
ஒடுக்கம் 1
ஒடுக்கி 2
ஒடுக்கும் 1
ஒடுங்க 7
ஒடுங்கா 1
ஒடுங்கி 3
ஒடுங்கின 2
ஒடுங்கும் 3
ஒண் 1
ஒத்த 4
ஒத்ததுவே 1
ஒத்தன 1
ஒதுங்க 1
ஒதுங்கி 1
ஒதுங்கிய 1
ஒதுங்கினை 1
ஒப்பு 1
ஒப்புடைத்தாய 2
ஒப்புடையாய் 1
ஒப்புற்று 1
ஒப்புறு 1
ஒரு 85
ஒரு-பால் 1
ஒருக்கி 1
ஒருகால் 8
ஒருங்கா 1
ஒருங்கி 1
ஒருங்கு 5
ஒருங்குபு 2
ஒருங்கும் 1
ஒருங்குழி 2
ஒருங்குற 1
ஒருங்கே 1
ஒருசார் 1
ஒருத்தல் 3
ஒருத்தன் 2
ஒருத்தனை 1
ஒருத்தி 4
ஒருத்தியை 2
ஒருநாள் 5
ஒருநாளில் 1
ஒருப்படும் 1
ஒருபால் 6
ஒருபுடை 2
ஒருபுறமொட்டல் 1
ஒருமை 1
ஒருமையர் 1
ஒருமையுள் 1
ஒருவ 1
ஒருவரின்ஒருவர் 1
ஒருவழி 2
ஒருவன் 5
ஒருவனும் 1
ஒருவாய் 1
ஒருவி 4
ஒருவிசை 2
ஒருவுக 2
ஒருவும் 1
ஒருவேற்கு 1
ஒருவேன் 1
ஒரொரு 1
ஒரோ 1
ஒரோவொரு 1
ஒல்கிய 1
ஒல்லையின் 1
ஒலி 6
ஒலிக்க 1
ஒலித்தலும் 1
ஒலிப்ப 2
ஒலியின் 1
ஒலிவர 1
ஒழி 1
ஒழிக்கும் 1
ஒழிக 1
ஒழித்து 1
ஒழிந்த 1
ஒழிந்து 1
ஒழியா 1
ஒழுக்கமும் 1
ஒழுக்கி 3
ஒழுக்கிய 3
ஒழுக்கியும் 1
ஒழுக்கு 2
ஒழுக்கும் 1
ஒழுக 1
ஒழுகா 1
ஒழுகும் 1
ஒழுங்கு 1
ஒள் 1
ஒளி 17
ஒளிக்கும் 1
ஒளித்த 1
ஒளித்து 1
ஒளிப்ப 1
ஒளியினை 1
ஒளிர் 5
ஒளிர்தலின் 1
ஒளிர்வித்து 1
ஒளிர 2
ஒற்ற 1
ஒற்றி 1
ஒற்றிய 1
ஒற்றினர்க்கு 1
ஒற்றை 4
ஒன்பது 1
ஒன்றா 1
ஒன்றாய் 1
ஒன்றால் 3
ஒன்றி 4
ஒன்றிய 3
ஒன்றியது 1
ஒன்றில் 4
ஒன்றினுக்கு 2
ஒன்றினுக்கொன்று 1
ஒன்றினும் 2
ஒன்றினொடு 1
ஒன்று 11
ஒன்றுடன் 1
ஒன்றுபட்டு 2
ஒன்றும் 3
ஒன்றுவமும் 1
ஒன்றே 1
ஒன்றை 2
ஒன்னலர் 4

ஒக்கல் (1)

ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை – கல்லாடம்:2 98/41

மேல்

ஒக்கலொடு (1)

பொன் உடல் தேவர் ஒக்கலொடு மயங்கி – கல்லாடம்:2 40/9

மேல்

ஒசிந்து (1)

உள் கலந்து எடுத்தல் ஒசிந்து இடம் அழைத்தல் – கல்லாடம்:2 49/13

மேல்

ஒட்டல் (1)

ஆநநத்து ஒட்டல் அணி மயில் புரோகம் – கல்லாடம்:2 49/12

மேல்

ஒட்டுவிட்டு (1)

ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டா கோட்டு – கல்லாடம்:2 6/25

மேல்

ஒடித்து (1)

ஐந்து என பெயரிய நெடு மரம் ஒடித்து
கண் உளத்து அளவா எள் உணவு உண்டு – கல்லாடம்:2 67/18,19

மேல்

ஒடு (1)

பிடவமும் களவும் ஒடு நிறை பூப்ப – கல்லாடம்:2 94/4

மேல்

ஒடுக்கம் (1)

மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கம் என்று – கல்லாடம்:2 98/9

மேல்

ஒடுக்கி (2)

விரி சினை பொதுளிய பாசிலை ஒடுக்கி
பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்க – கல்லாடம்:2 43/12,13
உடையோர் திமிர்ப்ப வரும் உயிர்ப்பு ஒடுக்கி
உயிர் பிரிவுற்றமை காட்டி அவர் நீங்க – கல்லாடம்:2 90/19,20

மேல்

ஒடுக்கும் (1)

விண் விரித்து ஒடுக்கும் இரவி வண் கவிகைக்கு – கல்லாடம்:2 81/31

மேல்

ஒடுங்க (7)

உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க
மாறனும் புலவரும் மயங்குறு காலை – கல்லாடம்:2 3/10,11
உந்தி தோற்றம் ஓசை நின்று ஒடுங்க
பாலையில் எழுப்பி அமர் இசை பயிற்றி – கல்லாடம்:2 43/28,29
உலகு உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க
இசை விதி பாடிய இசை_பகை துரந்த – கல்லாடம்:2 43/32,33
அளிகள் பாட்டு எடுப்ப புறவு பாட்டு ஒடுங்க
காந்தள் அம் கடுக்கை கனல் தனம் மலர – கல்லாடம்:2 94/1,2
கண மயில் நடன் எழ காளி கூத்து ஒடுங்க
சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப – கல்லாடம்:2 94/16,17
தண் மதி கலைகள் தான் அற ஒடுங்க
எரிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய – கல்லாடம்:2 95/10,11
நாணி நின்று ஒடுங்க தானும் ஓர் நாடகம் – கல்லாடம்:2 99/25

மேல்

ஒடுங்கா (1)

பகல் இரவு ஒடுங்கா விடு வளி ஆக – கல்லாடம்:2 20/31

மேல்

ஒடுங்கி (3)

ஒரொரு பனி கலை ஒடுங்கி நின்று அடைதலின் – கல்லாடம்:2 13/10
ஒடுங்கி நின்று அமைதி இ நிலை அறிந்தே – கல்லாடம்:2 13/27
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின் – கல்லாடம்:2 65/23

மேல்

ஒடுங்கின (2)

அணிபெறு முலை மேல் கோதையும் ஒடுங்கின
செங்கோல் அரசன் முறை தொழில் போல – கல்லாடம்:2 45/6,7
தம் உடல் மயங்கின ஒடுங்கின உறங்கின – கல்லாடம்:2 71/29

மேல்

ஒடுங்கும் (3)

விளை வயல் ஒடுங்கும் உதிர் நெல் உணவினும் – கல்லாடம்:2 20/22
சென்று எறிந்து ஒடுங்கும் துறுமிடை திருத்தி – கல்லாடம்:2 99/15
காலமுற்று ஒடுங்கும் நீள் முகில் கூட்டமும் – கல்லாடம்:2 99/48

மேல்

ஒண் (1)

நெடும் கால் பாய்ந்து படுத்த ஒண் தொழில் – கல்லாடம்:2 37/19

மேல்

ஒத்த (4)

முழை வாய் அரக்கர் பாடு கிடந்து ஒத்த
நிறை கிடை பொற்றை வரை கடந்து இறந்தால் – கல்லாடம்:2 27/11,12
ஊருணி ஒத்த பொது வாய் தம்பலம் – கல்லாடம்:2 56/17
கரியுடன் உண்ணார் பழி உளம் ஒத்த
இருள் உடை பெரு முகில் வழி தெரிந்து ஏகன்-மின் – கல்லாடம்:2 93/8,9
ஒத்த நற்குணம் உடைய பன்னிரண்டும் – கல்லாடம்:2 98/20

மேல்

ஒத்ததுவே (1)

காய் பார் உகுத்த விதி ஒத்ததுவே – கல்லாடம்:2 83/33

மேல்

ஒத்தன (1)

இரு செவி புக்கது ஒத்தன இவட்கே – கல்லாடம்:2 75/30

மேல்

ஒதுங்க (1)

குழுவினுக்கு உடைந்து குளிர் மதி ஒதுங்க
தெய்வ பிறை இருந்த திரு நுதல் பேதையை – கல்லாடம்:2 55/3,4

மேல்

ஒதுங்கி (1)

புடைபுடை ஒதுங்கி அரவு வாய் பிளப்ப – கல்லாடம்:2 55/9

மேல்

ஒதுங்கிய (1)

பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல – கல்லாடம்:2 32/2

மேல்

ஒதுங்கினை (1)

கரும் கடத்து எறிந்த கொடும் புலிக்கு ஒதுங்கினை
வரி உடல் செம் கண் வரால் இனம் எதிர்ப்ப – கல்லாடம்:2 69/4,5

மேல்

ஒப்பு (1)

வேறு ஒப்பு எடுத்துக்கூறுவது நீக்கமும் – கல்லாடம்:2 18/12

மேல்

ஒப்புடைத்தாய (2)

ஒப்புடைத்தாய வட்ட வாய் தொண்டகம் – கல்லாடம்:2 24/14
ஒப்புடைத்தாய இ பொன் தொடி மடந்தை – கல்லாடம்:2 45/26

மேல்

ஒப்புடையாய் (1)

கூடல் ஒப்புடையாய் குல உடு தடவும் – கல்லாடம்:2 77/17

மேல்

ஒப்புற்று (1)

ஒப்புற்று அடை மலர் சுமந்த – கல்லாடம்:2 52/26

மேல்

ஒப்புறு (1)

ஒப்புறு பொன் தொடி சிற்றிடை மடந்தை-தன் – கல்லாடம்:2 35/12

மேல்

ஒரு (85)

கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/17
மாயா பெரு வரத்து ஒரு மயில் ஆகி – கல்லாடம்:1 2/18
போழ்பட கிடந்த ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/26
ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும் – கல்லாடம்:2 3/4
நிறை நீர் கயத்துள் ஒரு தாள் நின்று – கல்லாடம்:2 3/19
குறிபடு திங்கள் ஒரு பதும் புகாது – கல்லாடம்:2 5/14
மூ_இரு திருமுகத்து ஒரு வேலவற்கு – கல்லாடம்:2 7/8
ஒரு விரல் தெறித்தும் ஐ விரல் குவித்தும் – கல்லாடம்:2 8/13
பெரு வாய் ஒரு முக படகம் பெருக்க – கல்லாடம்:2 8/14
ஒரு வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த – கல்லாடம்:2 8/17
ஒரு முகம் தாழ்த்தி இரு கடிப்பு ஒலிப்ப – கல்லாடம்:2 8/22
மரக்கால் அன்ன ஒரு வாய் கோதை – கல்லாடம்:2 8/27
நின்றான் உண்டு ஒரு காளை – கல்லாடம்:2 9/28
பல உலகு எடுத்த ஒரு திறத்தானும் – கல்லாடம்:2 11/2
திருவடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும் – கல்லாடம்:2 13/3
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின் – கல்லாடம்:2 14/2
முன் ஒரு காலத்து அடு கொலைக்கு அணைந்த – கல்லாடம்:2 14/25
மறைத்து ஒரு சிறுகுடி பரதவன் ஆகி – கல்லாடம்:2 15/26
நெடும் கடல் கலக்கும் ஒரு மீன் படுத்த – கல்லாடம்:2 15/28
ஒரு மதி முறித்து ஆண்டு இரு கவுள் செருகிய – கல்லாடம்:2 16/31
நெடுமலை பெற்ற ஒரு மகள் காண – கல்லாடம்:2 21/27
சிறந்த ஒரு சுனை இ மலை ஆட – கல்லாடம்:2 22/21
ஒரு கணன் நிலைக்க மருவுதியாயின் – கல்லாடம்:2 22/26
ஒரு கடல் இரண்டு திரு பயந்தாங்கு – கல்லாடம்:2 22/30
ஒரு கால் முன் வைத்து இரு கால் வளைப்ப – கல்லாடம்:2 25/25
சிறுநகை கொண்ட ஒரு பெரும் தீயின் – கல்லாடம்:2 25/27
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து – கல்லாடம்:2 25/41
ஒரு செந்தாமரை நடு மலர்ந்து என்ன – கல்லாடம்:2 27/4
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய – கல்லாடம்:2 27/6
வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும் – கல்லாடம்:2 27/10
மூவா திருப்பதத்து ஒரு தனி பெருமான் – கல்லாடம்:2 27/15
முன் ஒரு நாளில் நால் படை உடன்று – கல்லாடம்:2 32/6
ஒரு நாள் மூன்று புரம் தீ கொளுவ – கல்லாடம்:2 33/21
களியுடன் நிறைந்த ஒரு பரங்குன்றமும் – கல்லாடம்:2 41/13
ஒரு திசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும் – கல்லாடம்:2 44/7
முன் ஒரு வணிகன் மகப்பேறு இன்மையின் – கல்லாடம்:2 44/14
பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி – கல்லாடம்:2 48/3
ஒரு நீ விடுத்தனை யான் அவை கொடுத்தனன் – கல்லாடம்:2 48/16
ஒரு தனி அடியாற்கு உதவுதல் வேண்டி – கல்லாடம்:2 49/7
ஒரு வழி அளிக்கும் இரும் கதிர் சிறுவனை – கல்லாடம்:2 50/11
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை – கல்லாடம்:2 55/28
ஒரு பரங்குன்றம் மருவிய கூடல் – கல்லாடம்:2 56/12
வெள்ளி முகிழ்த்த ஒரு கண் பார்ப்பான் – கல்லாடம்:2 57/10
இரந்தன வரத்தால் ஒரு சடை இருத்திய – கல்லாடம்:2 57/25
முன் ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர் – கல்லாடம்:2 58/16
இரு நிலம் உருவிய ஒரு தழல் தூணத்து – கல்லாடம்:2 58/26
உலகு பெற்றெடுத்த ஒரு தனி செல்வி – கல்லாடம்:2 58/29
அருவி அம் சாரல் ஒரு பரங்குன்றம் – கல்லாடம்:2 59/32
பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும் – கல்லாடம்:2 61/18
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு – கல்லாடம்:2 65/9
பல நாள் பெருகி ஒரு நாள் உடைந்து – கல்லாடம்:2 66/16
விதி நிறை தவறா ஒரு பங்கு உடைமையும் – கல்லாடம்:2 66/21
உலகு விண் பனிக்கும் ஒரு சயமகட்கு – கல்லாடம்:2 73/18
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை இன்று – கல்லாடம்:2 74/3
இமையவர் வேண்ட ஒரு நகை முகிழ்ப்ப – கல்லாடம்:2 74/25
உளது என குரிசில் ஒரு மொழி சாற்ற – கல்லாடம்:2 75/3
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன் – கல்லாடம்:2 75/19
ஒரு கணம் கூடி ஒருங்கே – கல்லாடம்:2 75/29
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன் – கல்லாடம்:2 77/16
வெள்ளி அம் குன்றகம் உள்ளுற புகுந்து ஒரு
தேவனும் அதன் முடி மேவும் உளனாம் – கல்லாடம்:2 78/15,16
பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும் – கல்லாடம்:2 78/18
ஒரு பால் பொலிந்த உயர் நகர் கூடல் – கல்லாடம்:2 79/14
ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து – கல்லாடம்:2 85/21
மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை – கல்லாடம்:2 85/35
வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு
பொய்யினள் அன்றி மெய்யினை நீயும் – கல்லாடம்:2 86/5,6
இரு மன பொய் உளத்து ஒரு மகள்-தன்னை – கல்லாடம்:2 87/4
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல் – கல்லாடம்:2 87/34
ஒரு தாள் எழு புவி ஒருவ திண் தோள் – கல்லாடம்:2 88/34
ஒரு நடம் குலவிய திருவடி உரவோன் – கல்லாடம்:2 88/36
உலகு உயிர் மகவு உடை பசும்_கொடிக்கு ஒரு பால் – கல்லாடம்:2 89/9
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ – கல்லாடம்:2 90/3
தனி நடை நிறையும் ஒரு தனி கோலத்து – கல்லாடம்:2 90/6
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன் – கல்லாடம்:2 93/23
இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு – கல்லாடம்:2 94/36
ஒரு கால் தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த – கல்லாடம்:2 95/15
ஒரு நுதல் கண்ணவன் உறைதரு கூடல் – கல்லாடம்:2 95/40
ஒரு கால் இரதத்து எழு பரி பூட்டி – கல்லாடம்:2 96/9
ஆங்கு ஒரு பதின்மூன்று அடைந்தன குற்றமும் – கல்லாடம்:2 98/44
பாணியில் சிரம் பதித்து ஒரு நடை பதித்து – கல்லாடம்:2 99/8
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி – கல்லாடம்:2 99/12
பாண்டரங்கத்து ஒரு பாடு பெற்று அமைந்த – கல்லாடம்:2 99/26
ஒரு தாள் மிதித்து விண் உற விட்ட – கல்லாடம்:2 99/30
முன் ஒரு நாளில் முழு கதி அடைந்த – கல்லாடம்:2 99/39
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை – கல்லாடம்:2 99/43
ஒற்றை தாரி ஒரு நரம்பு இரட்ட – கல்லாடம்:2 100/17

மேல்

ஒரு-பால் (1)

பேர் அருள் குன்றம் ஒரு-பால் பொலிந்த – கல்லாடம்:2 48/12

மேல்

ஒருக்கி (1)

உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி
முக்கவர் திருநதி துணையுடன் மூழ்கி – கல்லாடம்:2 44/16,17

மேல்

ஒருகால் (8)

இருவேம் ஒருகால் எரி அதர் இறந்து – கல்லாடம்:2 12/2
அன்று எனின் நும்மில் ஒன்றுபட்டு ஒருகால்
இவளோ துயரம் பெறுவது என் என்று – கல்லாடம்:2 23/47,48
தள்ளா மொய்ம்பின் உள் உடைந்து ஒருகால்
வேதியன் முதலா அமரரும் அரசனும் – கல்லாடம்:2 25/12,13
அறுத்திடும் வழக்கு கிடக்க ஒருகால்
வான் வரநதி கரை மருள் மகம் எடுத்த – கல்லாடம்:2 60/13,14
ஒருகால் தவறா உடைமைத்து என்ன – கல்லாடம்:2 61/14
தெய்வம் என்று ஒருகால் தெளியவும் உளத்து இலள் – கல்லாடம்:2 61/17
இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால்
வாடா தேவர்கள் மணத்தலானும் – கல்லாடம்:2 81/10,11
வட்கு உடை மையல் அகற்றி அன்பு ஒருகால்
கூறவும் பெறுமே ஆறது நிற்க – கல்லாடம்:2 92/18,19

மேல்

ஒருங்கா (1)

இமையா சூரும் பல கண்டு ஒருங்கா
துடியின் கண்ணில் துஞ்சா கண்ணினர் – கல்லாடம்:2 83/19,20

மேல்

ஒருங்கி (1)

ஒருமையுள் ஒருங்கி இரு கை நெய் வார்த்து – கல்லாடம்:1 2/32

மேல்

ஒருங்கு (5)

நெடும் கடல் கிடங்கும் ஒருங்கு உயிர் பருகிய – கல்லாடம்:2 6/39
ஒருங்கு வந்து இமையா அரும் கடன் முற்றிய – கல்லாடம்:2 7/13
மருங்கு பின் நோக்காது ஒருங்கு விட்டு அகல – கல்லாடம்:2 7/44
பெருஞ்சூடகமும் ஒருங்கு பெற்று அணிக – கல்லாடம்:2 14/41
கரும் கடல் பொரிய ஒருங்கு வேல் விடுத்த – கல்லாடம்:2 75/16

மேல்

ஒருங்குபு (2)

துனைவுடன் செல்லல் ஒருங்குபு புரிந்தே – கல்லாடம்:2 47/31
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர – கல்லாடம்:2 94/37

மேல்

ஒருங்கும் (1)

ஒருங்கும் உண்டேல் பேசுவிர் எமக்கே – கல்லாடம்:2 35/18

மேல்

ஒருங்குழி (2)

பெரும் கத திருநதி ஒருங்குழி மடங்க – கல்லாடம்:2 57/23
மயங்கிய துறை இனம் ஒருங்குழி வளர்ந்தே – கல்லாடம்:2 72/33

மேல்

ஒருங்குற (1)

பிறந்து அருள் குன்றம் ஒருங்குற பெற்ற – கல்லாடம்:2 73/11

மேல்

ஒருங்கே (1)

ஒரு கணம் கூடி ஒருங்கே
இரு செவி புக்கது ஒத்தன இவட்கே – கல்லாடம்:2 75/29,30

மேல்

ஒருசார் (1)

அவ்வுழி ஒருசார் அவன் மாதுலன் என – கல்லாடம்:2 44/24

மேல்

ஒருத்தல் (3)

நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப்பு ஒலி வரைப்பகை – கல்லாடம்:2 30/8
குழி கண் பரூஉ தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல்
சினை தழை விளைத்த பழுமரம் என்ன – கல்லாடம்:2 32/14,15
நாமகள் பெரும் கடல் நால் கோட்டு ஒருத்தல்
புண்ணியம் இவை முதல் வெள் உடல் கொடுக்கும் – கல்லாடம்:2 57/14,15

மேல்

ஒருத்தன் (2)

வெள்ளை மதி முடித்த செம் சடை ஒருத்தன்
உடல் உயிர் ஆட ஆடுறும் அனலமும் – கல்லாடம்:1 1/10,11
விண் உடைத்து உண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறி திரை கடலுள் மா என கவிழ்ந்த – கல்லாடம்:2 59/27,28

மேல்

ஒருத்தனை (1)

குறும்பிறை முடித்த நெடும் சடை ஒருத்தனை
தெய்வம் கொள்ளார் சிந்தையது என்ன – கல்லாடம்:2 83/13,14

மேல்

ஒருத்தி (4)

உள் நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி
மலை குஞ்சரத்தின் கட குழி ஆகி – கல்லாடம்:2 22/6,7
தண்ணம்துறைவற்கு இன்று இவள் ஒருத்தி
நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும் – கல்லாடம்:2 23/40,41
பின்னும் தழுவ உன்னும் அவ் ஒருத்தி
அவளே ஆகுவள் யானே தவல் அரும் – கல்லாடம்:2 55/37,38
ஆங்கு அவர் துயர்பெற ஈன்ற என் ஒருத்தி
புகல் விழும் அன்பு அதற்கு இன்றி – கல்லாடம்:2 76/24,25

மேல்

ஒருத்தியை (2)

மு முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட – கல்லாடம்:2 30/20
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை
ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும் – கல்லாடம்:2 54/13,14

மேல்

ஒருநாள் (5)

ஒருநாள் கண்ட பெருமான் இறைவன் – கல்லாடம்:2 22/42
ஒருநாள் அருச்சனை புரி நாடலர்க்கும் – கல்லாடம்:2 25/33
துலக்கு மலை ஒருநாள் கலக்குவ போல – கல்லாடம்:2 29/13
மறை அடி வழுத்திய மறைவனத்து ஒருநாள்
மணி சுடர் நறு நெய் கவர் மதி கருப்பைக்கு – கல்லாடம்:2 94/32,33
வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து – கல்லாடம்:2 99/1

மேல்

ஒருநாளில் (1)

முன் ஒருநாளில் உடல் உயிர் நீ என – கல்லாடம்:2 70/11

மேல்

ஒருப்படும் (1)

அருச்சனை விடாது அங்கு ஒருப்படும் மூவரில் – கல்லாடம்:2 25/29

மேல்

ஒருபால் (6)

ஒருபால் பசும்_கொடி நிறை பாட்டு அயர – கல்லாடம்:2 7/32
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/4
விட்டு ஒளிர் மாணிக்க மலையின் ஒருபால்
அடங்க படர்ந்த பசும்_கொடி அதனை – கல்லாடம்:2 17/41,42
புரியா கதமோடு ஒருபால் அடங்கும் – கல்லாடம்:2 19/30
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி – கல்லாடம்:2 22/13
ஒருபால் அணைந்த இவ் உயர் மதி பாணற்கு – கல்லாடம்:2 91/15

மேல்

ஒருபுடை (2)

அவர் திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க – கல்லாடம்:2 71/32
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று – கல்லாடம்:2 89/15

மேல்

ஒருபுறமொட்டல் (1)

பேசா கீழிசை ஒருபுறமொட்டல்
நெட்டுயிர்ப்பெறிதல் எறிந்து நின்று இரட்டல் – கல்லாடம்:2 21/46,47

மேல்

ஒருமை (1)

ஒருமை காண்குவர் துகிர் கிளை கொடியே – கல்லாடம்:2 3/22

மேல்

ஒருமையர் (1)

இரு சரண் அகலா ஒருமையர் உளம் என – கல்லாடம்:2 84/9

மேல்

ஒருமையுள் (1)

ஒருமையுள் ஒருங்கி இரு கை நெய் வார்த்து – கல்லாடம்:1 2/32

மேல்

ஒருவ (1)

ஒரு தாள் எழு புவி ஒருவ திண் தோள் – கல்லாடம்:2 88/34

மேல்

ஒருவரின்ஒருவர் (1)

ஒருவரின்ஒருவர் உள்ளத்து அடக்கி – கல்லாடம்:2 64/7

மேல்

ஒருவழி (2)

இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக – கல்லாடம்:2 7/17
ஒருவழி படர்ந்தது என் அ திரு முகம் – கல்லாடம்:2 57/20

மேல்

ஒருவன் (5)

அரும் தழல் சுரத்தில் ஒருவன் அன்பு எடுத்தே – கல்லாடம்:2 7/46
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன்
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்ப – கல்லாடம்:2 30/10,11
கண்டுகண்டு ஒருவன் மாழ்கி – கல்லாடம்:2 49/20
அவர் குறை அன்றால் ஒருவன் படைத்த – கல்லாடம்:2 70/14
திருவறம் வந்த ஒருவன் தூதுகள் – கல்லாடம்:2 100/30

மேல்

ஒருவனும் (1)

ஆயிரம் பணாடவி அரும் தவத்து ஒருவனும்
கண்ணால் வாங்கி நெஞ்சு அறை நிறைப்ப – கல்லாடம்:2 41/7,8

மேல்

ஒருவாய் (1)

ஐம்புல கேளிரும் ஒருவாய் புக்கன – கல்லாடம்:2 98/53

மேல்

ஒருவி (4)

முடி தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி
பொன்னுறு ஞாழல் பூவுடன் கடுக்கும் – கல்லாடம்:2 50/5,6
கோலுடன் படரும் குறுநகை ஒருவி
பூ விலை தொழில்மகன் காவல் கைவிட்டு – கல்லாடம்:2 57/11,12
அயலும் உம்பரும் அடக்கு புனல் ஒருவி
தே அருள் கல்லார் சிந்தையின் புரண்ட – கல்லாடம்:2 83/16,17
கிடைதரவு ஒருவி களவு அலர் கிடத்தி – கல்லாடம்:2 84/18

மேல்

ஒருவிசை (2)

புகர்_முக புழை கை ஒருவிசை தடிந்தும் – கல்லாடம்:2 13/12
திரு நெடுமாலுக்கு ஒருவிசை புரிந்து – கல்லாடம்:2 18/5

மேல்

ஒருவுக (2)

தன்னை நின்று அளித்த என்னையும் ஒருவுக
பல் மணி கலன்கள் உடற்கு அழகு அளித்து என – கல்லாடம்:2 7/4,5
ஒருவுக உள்ளத்து பெருகிய நடுக்கம் – கல்லாடம்:2 24/18

மேல்

ஒருவும் (1)

மருவுதல் ஒருவும் மதி ஆகுவனே – கல்லாடம்:2 67/26

மேல்

ஒருவேற்கு (1)

நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்கு
குரு மணி கொழிக்கும் புனல் மலை கோட்டுழி – கல்லாடம்:2 68/4,5

மேல்

ஒருவேன் (1)

மதி தாமரையே மயங்கிய ஒருவேன்
நின்-பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள – கல்லாடம்:2 21/12,13

மேல்

ஒரொரு (1)

ஒரொரு பனி கலை ஒடுங்கி நின்று அடைதலின் – கல்லாடம்:2 13/10

மேல்

ஒரோ (1)

மூ உடல் அணைத்த மு முகத்து ஒரோ முகத்து – கல்லாடம்:2 85/22

மேல்

ஒரோவொரு (1)

அரிக்கு கரும் கடற்கு ஒரோவொரு கணை விடுத்து – கல்லாடம்:2 95/35

மேல்

ஒல்கிய (1)

ஒற்றை அம் பசும் கழை ஒல்கிய போல – கல்லாடம்:2 69/26

மேல்

ஒல்லையின் (1)

அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்து – கல்லாடம்:2 66/27

மேல்

ஒலி (6)

உடனுடன் பயந்த கடல் ஒலி ஏற்றும் – கல்லாடம்:2 12/9
நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப்பு ஒலி வரைப்பகை – கல்லாடம்:2 30/8
காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை – கல்லாடம்:2 69/20
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி – கல்லாடம்:2 69/22
குருகு ஒலி ஓவா பனிமலை வாவி – கல்லாடம்:2 86/21
ஒலி கடல் இப்பி தரளம் சூல்கொள – கல்லாடம்:2 94/29

மேல்

ஒலிக்க (1)

உருள் வாய் கொக்கரை உம்பர்நாட்டு ஒலிக்க
கரம் கால் காட்டி தலையம் இயக்கி – கல்லாடம்:2 85/25,26

மேல்

ஒலித்தலும் (1)

தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும்
ஆங்கு அவை நான்கும் அணி உழை ஆக்கி – கல்லாடம்:2 100/22,23

மேல்

ஒலிப்ப (2)

நெடும் தாள் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப
திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறி – கல்லாடம்:2 7/28,29
ஒரு முகம் தாழ்த்தி இரு கடிப்பு ஒலிப்ப
திருமலர் எழுதிய வரை இருபத்தைந்து – கல்லாடம்:2 8/22,23

மேல்

ஒலியின் (1)

கடு விசை துரந்த கான்யாற்று ஒலியின்
எள்ளினர் உட்க வள் இனம் மடக்கி முன் – கல்லாடம்:2 14/22,23

மேல்

ஒலிவர (1)

ஒலிவர ஓதிமம் எரி மலர் தவிசு இருந்து – கல்லாடம்:2 93/13

மேல்

ஒழி (1)

பேதை கொள்ளாது ஒழி மனம் கடுத்தே – கல்லாடம்:2 82/52

மேல்

ஒழிக்கும் (1)

இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல் சென்மே – கல்லாடம்:2 95/43

மேல்

ஒழிக (1)

பேறு ஆங்கு ஒழிக பெரு நாண் கற்பினர் – கல்லாடம்:2 36/13

மேல்

ஒழித்து (1)

பொய் பல புகன்றும் மெய் ஒழித்து இன்பம் – கல்லாடம்:2 56/15

மேல்

ஒழிந்த (1)

தூற்றும் மறு ஒழிந்த ஏற்றத்தானும் – கல்லாடம்:2 19/33

மேல்

ஒழிந்து (1)

பெரும் தீ குணனும் ஒழிந்து உளம் குளிரும் – கல்லாடம்:2 65/24

மேல்

ஒழியா (1)

உடன் நிறைந்து ஒழியா உட்பகை ஐந்தும் – கல்லாடம்:2 53/14

மேல்

ஒழுக்கமும் (1)

ஒழுக்கமும் குலனும் அமுக்கு அறு தவமும் – கல்லாடம்:2 42/11

மேல்

ஒழுக்கி (3)

நெடு வளி உயிர்த்து மழை மதம் ஒழுக்கி
எழு மலை விழு மலை புடை மணி ஆக – கல்லாடம்:2 19/1,2
முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி
தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து – கல்லாடம்:2 21/9,10
ஐம்பது_நூறுடன் அகன்று சுற்று ஒழுக்கி
பெரும் களவு இணர் தந்து அவை கீழ் குலவிய – கல்லாடம்:2 83/7,8

மேல்

ஒழுக்கிய (3)

முலை குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம் – கல்லாடம்:2 44/9
வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திரு வட – கல்லாடம்:2 53/10
மலை நிரைத்து ஒழுக்கிய கரம் இருபத்தும் – கல்லாடம்:2 78/19

மேல்

ஒழுக்கியும் (1)

ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் – கல்லாடம்:2 54/15

மேல்

ஒழுக்கு (2)

குறுவெயிர்ப்பு ஒழுக்கு என பிறை அமுது எடுக்க – கல்லாடம்:2 16/5
உந்தி ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும் – கல்லாடம்:2 27/9

மேல்

ஒழுக்கும் (1)

விண்டு நறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய் – கல்லாடம்:2 22/15

மேல்

ஒழுக (1)

ஒழுக புக்கு தழுவி எடுத்தும் – கல்லாடம்:2 16/30

மேல்

ஒழுகா (1)

மறை வழி ஒழுகா மன்னவன் வாழும் – கல்லாடம்:2 8/34

மேல்

ஒழுகும் (1)

உள்ளமும் தொடாது விள் அமுது ஒழுகும்
குதலை வாய் துடிப்ப குல கடை உணங்கியும் – கல்லாடம்:2 56/20,21

மேல்

ஒழுங்கு (1)

ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தன போல் – கல்லாடம்:2 58/13

மேல்

ஒள் (1)

ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும் – கல்லாடம்:2 87/13

மேல்

ஒளி (17)

நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில் – கல்லாடம்:2 19/15
அறிவு ஒளி நிறைவே ஓர் உரு தரிந்து வந்து – கல்லாடம்:2 44/25
ஒளி வளர் நோக்கம் உற்றனையாயின் – கல்லாடம்:2 49/5
முழுக்கியும் தபுத்தியும் முலை ஒளி நோக்கியும் – கல்லாடம்:2 54/16
கிடந்து ஒளி பிறழும் நெடும் சடை பெருமான் – கல்லாடம்:2 55/11
வையகம் அளித்த மணி ஒளி கடவுள் – கல்லாடம்:2 55/25
களவு உடல் பிளந்த ஒளி கெழு திரு வேல் – கல்லாடம்:2 59/29
பேர் ஒளி இணையா கூடல் மா மணி – கல்லாடம்:2 66/19
தமக்கு என காட்டும் ஒளி கண் கெடலும் – கல்லாடம்:2 69/31
பேர் ஒளி மேனியன் பார் உயிர்க்கு ஓர் உயிர் – கல்லாடம்:2 73/6
விதிர் ஒளி காற்ற கனல் குளிர் மழுவும் – கல்லாடம்:2 77/15
பேர் ஒளி நாயகன் கார் ஒளி மிடற்றோன் – கல்லாடம்:2 80/10
பேர் ஒளி நாயகன் கார் ஒளி மிடற்றோன் – கல்லாடம்:2 80/10
உடை திரை அருவி ஒளி மணி காலும் – கல்லாடம்:2 91/3
உணவு உளம் கருதி ஒளி இசை பாட – கல்லாடம்:2 91/13
குடுமி சேகர சமன் ஒளி சூழ்ந்த – கல்லாடம்:2 98/12
பன்னு சாதரங்க ஒளி குணம் பத்தும் – கல்லாடம்:2 98/30

மேல்

ஒளிக்கும் (1)

நெய்தல் பாசடை நெடும் காட்டு ஒளிக்கும்
கண் என குறித்த கரும் கயல் கணத்தை – கல்லாடம்:2 82/37,38

மேல்

ஒளித்த (1)

களவு உடை நெடும் சூர் கிளை களம் விட்டு ஒளித்த
அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் என – கல்லாடம்:2 1/3,4

மேல்

ஒளித்து (1)

தனித்தனி ஒளித்து தணக்கினும் அரிது என – கல்லாடம்:2 77/19

மேல்

ஒளிப்ப (1)

பேழ் வாய் ஒளிப்ப வேட்டுவ பெயர் அளி – கல்லாடம்:2 27/21

மேல்

ஒளியினை (1)

உரிவை மூடி ஒளியினை மறைத்து – கல்லாடம்:2 29/15

மேல்

ஒளிர் (5)

பொன் துணர் தாமம் புரிந்து ஒளிர் மணி தேர் – கல்லாடம்:2 10/26
விட்டு ஒளிர் மாணிக்க மலையின் ஒருபால் – கல்லாடம்:2 17/41
இருந்து ஒளிர் அரும் தேன் இலதால் நீரும் – கல்லாடம்:2 81/50
ஒளிர் மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும் – கல்லாடம்:2 85/12
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று – கல்லாடம்:2 89/15

மேல்

ஒளிர்தலின் (1)

கடுவும் சங்கமும் ஒளிர்தலின் நெய்தலும் – கல்லாடம்:2 64/19

மேல்

ஒளிர்வித்து (1)

ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து
மூ உடல் அணைத்த மு முகத்து ஒரோ முகத்து – கல்லாடம்:2 85/21,22

மேல்

ஒளிர (2)

ஏன கோடு வெண்_பொடி புறத்து ஒளிர
பொலன் மிளிர் மன்ற பொதுவகம் நாடி – கல்லாடம்:2 85/37,38
கரியோன் கடுப்ப துகில் கவர்ந்து ஒளிர
விதியினும் பன்மை செய் முகம் படைத்து அளவா – கல்லாடம்:2 87/5,6

மேல்

ஒற்ற (1)

வெறி விழி சவரர் மா அடி ஒற்ற
மணந்து உடன் போகுநர்க்கு உயங்கு வழி மறுப்ப – கல்லாடம்:2 94/22,23

மேல்

ஒற்றி (1)

உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி
செறி இருள் குழம்பகம் சென்று பளிங்கு எடுத்த – கல்லாடம்:2 85/16,17

மேல்

ஒற்றிய (1)

முன் துடி மணியில் ஒற்றிய பாணியை – கல்லாடம்:2 99/36

மேல்

ஒற்றினர்க்கு (1)

வாலுகம் பரப்பி வலை வலிது ஒற்றினர்க்கு
ஈது என அறியாது ஒன்றி வெள்ளிடையாம் – கல்லாடம்:2 67/6,7

மேல்

ஒற்றை (4)

ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர் – கல்லாடம்:2 30/14
ஒற்றை அம் பசும் கழை ஒல்கிய போல – கல்லாடம்:2 69/26
நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து – கல்லாடம்:2 82/23
ஒற்றை தாரி ஒரு நரம்பு இரட்ட – கல்லாடம்:2 100/17

மேல்

ஒன்பது (1)

ஒன்பது தந்திரி உறுத்தி நிலை நீக்கி – கல்லாடம்:2 82/15

மேல்

ஒன்றா (1)

உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும் – கல்லாடம்:2 14/43

மேல்

ஒன்றாய் (1)

இரண்டு உடல் ஒன்றாய் கரைந்து கண்படாமல் – கல்லாடம்:2 5/1

மேல்

ஒன்றால் (3)

ஒன்றால் இரு மலை அன்று ஏந்தியது என – கல்லாடம்:2 27/8
பாடலம் புது தார் காளை பின் ஒன்றால்
தள்ளா விதியின் செல்குநள் என்று – கல்லாடம்:2 40/17,18
மாங்கனி இரண்டில் ஆம் கனி ஒன்றால்
முன் ஒரு நாளில் முழு கதி அடைந்த – கல்லாடம்:2 99/38,39

மேல்

ஒன்றி (4)

ஒன்றி விளைந்து சென்றாட்கு உடைத்து – கல்லாடம்:2 17/55
மாதுடன் ஒன்றி என் மனம் புகுந்து – கல்லாடம்:2 22/43
ஒன்றி அழுங்க நின்ற நிலை பெருகி – கல்லாடம்:2 39/14
ஈது என அறியாது ஒன்றி வெள்ளிடையாம் – கல்லாடம்:2 67/7

மேல்

ஒன்றிய (3)

நின்று அறி கல்வி ஒன்றிய மாந்தர் – கல்லாடம்:2 45/1
ஒன்றிய திருவுரு நின்று நனி காட்டி – கல்லாடம்:2 58/33
ஒன்றிய உவமம் இன்று இவண் உளவால் – கல்லாடம்:2 73/28

மேல்

ஒன்றியது (1)

உடலும் உயிரும் ஒன்றியது என்ன – கல்லாடம்:2 58/5

மேல்

ஒன்றில் (4)

மூன்று புரத்து ஒன்றில் அரசு உடை வாணன் – கல்லாடம்:2 21/31
தாமரை ஒன்றில் தடைந்து வளர்செய்த – கல்லாடம்:2 39/3
தன் உரு ஒன்றில் அருள் உரு இருத்திய – கல்லாடம்:2 72/13
அதற்கு சாரணி அருள் கரம் ஒன்றில்
பாணி இரண்டும் தாளம் ஆக்கி – கல்லாடம்:2 99/28,29

மேல்

ஒன்றினுக்கு (2)

முதல் ஏழ் அதனை ஒன்றினுக்கு ஏழ் என – கல்லாடம்:2 99/34
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்து – கல்லாடம்:2 100/26

மேல்

ஒன்றினுக்கொன்று (1)

ஒன்றினுக்கொன்று துன்றிய நடுக்கொடு – கல்லாடம்:2 55/10

மேல்

ஒன்றினும் (2)

அறையல் அன்றி மற்று ஒன்றினும் அடாதே – கல்லாடம்:2 12/21
ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தன போல் – கல்லாடம்:2 58/13

மேல்

ஒன்றினொடு (1)

ஒன்றினொடு ஒன்று சென்று தலைமயங்கும் – கல்லாடம்:2 50/25

மேல்

ஒன்று (11)

நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால் – கல்லாடம்:2 13/8
தன்னை நின்று உணர்ந்து தாமும் ஒன்று இன்றி – கல்லாடம்:2 13/25
ஒன்று கிளக்க நின்று இவை கேண்-மின் – கல்லாடம்:2 16/3
நின்-பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள – கல்லாடம்:2 21/13
புந்தி ஒன்று இன்றி புகல் இலன் என்று அயர் – கல்லாடம்:2 44/23
ஒன்றினொடு ஒன்று சென்று தலைமயங்கும் – கல்லாடம்:2 50/25
ஒன்று அற அகற்றி உடன் கலந்திலனேல் – கல்லாடம்:2 55/33
உள சுருள் விரிக்கும் நல தகு கல்வி ஒன்று
உளது என குரிசில் ஒரு மொழி சாற்ற – கல்லாடம்:2 75/2,3
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும் – கல்லாடம்:2 76/2
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற புனைந்தும் – கல்லாடம்:2 89/20
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என – கல்லாடம்:2 99/56

மேல்

ஒன்றுடன் (1)

ஒன்றுடன் நில்லா மொழியை மறுத்த – கல்லாடம்:2 86/10

மேல்

ஒன்றுபட்டு (2)

அன்று எனின் நும்மில் ஒன்றுபட்டு ஒருகால் – கல்லாடம்:2 23/47
உலகு உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க – கல்லாடம்:2 43/32

மேல்

ஒன்றும் (3)

வடிவம் எட்டினுள் மகிழ்ந்த ஒன்றும்
சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும் – கல்லாடம்:2 29/26,27
துஞ்சல்_இல் இரண்டும் சொல் அரும் ஒன்றும்
ஆருயிர் வாழ அருள் வர நிறுத்திய – கல்லாடம்:2 38/24,25
மா என கவிழ்ந்த மறி கடல் ஒன்றும்
கடும் கனல் பூழிபடும்படி நோக்கிய – கல்லாடம்:2 61/8,9

மேல்

ஒன்றுவமும் (1)

உயர்ந்த இன்பதற்கு ஒன்றுவமும் உண்டு எனின் – கல்லாடம்:2 12/11

மேல்

ஒன்றே (1)

குறித்த இவ் இடைநிலை ஒன்றே
மறி குலத்து உழையின் விழி நோக்கினளே – கல்லாடம்:2 70/21,22

மேல்

ஒன்றை (2)

யாதினை கருதியது ஒன்றை
ஓதல் வேண்டும் வாழிய பெரிதே – கல்லாடம்:2 31/17,18
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி – கல்லாடம்:2 99/12

மேல்

ஒன்னலர் (4)

ஒன்னலர் இடும் திறை செலினும் – கல்லாடம்:2 62/31
வில் எடுத்து ஒன்னலர் புரம் எரியூட்டி – கல்லாடம்:2 72/7
அமர் பெற்று ஒன்னலர் அறிவுற படர – கல்லாடம்:2 88/16
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர – கல்லாடம்:2 94/37

மேல்