த – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்கன் 2
தகட்டின் 1
தகடு 1
தகர் 2
தகரம் 1
தகளியது 1
தகு 3
தகுணித்தம் 1
தகும் 1
தகுமே 1
தகைமையும் 1
தங்க 1
தங்கி 1
தங்கிய 2
தங்கியும் 1
தங்கும் 2
தங்குவன 1
தங்கையை 1
தசை 1
தட்ட 1
தட்டி 3
தட்டை 1
தட 2
தடவ 1
தடவி 1
தடவும் 1
தடா 1
தடி 1
தடிந்தும் 2
தடியும் 2
தடுத்து 1
தடுமாறி 1
தடை 1
தடைகொண்டு 1
தடைதரு 1
தடைந்த 1
தடைந்தன 1
தடைந்து 2
தடைந்தும் 2
தடைய 2
தடையா 2
தடையாது 1
தண் 10
தண்_சுடர் 1
தண்டம் 1
தண்டமும் 1
தண்டலை 1
தண்டா 2
தண்டி 1
தண்டில் 1
தண்டின் 1
தண்டு 1
தண்டை 1
தண்ணம் 3
தண்ணம்துறைவற்கு 1
தண்ணீர் 1
தண்ணுமை 2
தண்மை 1
தண்மையும் 1
தணக்க 1
தணக்கினும் 1
தணந்த 1
தணந்தோர் 3
தணந்தோர்க்கு 1
தணப்பு 1
தணிக்க 1
தணித்த 1
தணிப்ப 1
தணியா 2
தத்தை 1
தந்த 5
தந்தமை 1
தந்திரி 3
தந்து 7
தந்தும் 2
தப்பியும் 1
தபு 1
தபுத்தியும் 1
தம் 9
தம்பலம் 1
தம்மில் 2
தம்முடை 1
தம்மையும் 1
தமக்கு 1
தமக்கும் 1
தமது 4
தமர் 2
தமருகம் 1
தமனிய 2
தமியில் 1
தமியே 1
தமியை 1
தமிழ் 15
தமிழும் 2
தயங்க 1
தயங்கிய 1
தர 2
தரக்கின் 3
தரக்கு 1
தரக்கும் 1
தரள 3
தரளத்தினை 1
தரளம் 4
தரளமும் 3
தரித்த 7
தரித்தலின் 1
தரித்தவர் 1
தரித்து 3
தரித்தும் 1
தரிந்து 1
தரு 18
தரு-மின் 1
தருக்கத்து 1
தருகிலீர் 1
தருதலின் 1
தருதி 1
தரும் 12
தரும 1
தருமிக்கு 1
தருமே 1
தருவன 1
தருவின் 1
தருவினுள் 1
தருவும் 3
தரைபடு 1
தலை 52
தலைக்கடை 1
தலைபெறும் 1
தலைமயங்கும் 1
தலையம் 1
தலையின் 1
தலையினும் 1
தலைவன் 2
தலைவனும் 1
தலைவிரல் 1
தலைவைத்து 1
தலைவைத்தும் 1
தவ 6
தவத்தானும் 1
தவத்தினை 1
தவத்து 1
தவம் 10
தவம்செய்து 1
தவமும் 1
தவர் 7
தவராம் 1
தவல் 2
தவழ் 1
தவழ 1
தவழும் 1
தவள 2
தவளையும் 1
தவறா 3
தவறாவால் 1
தவறி 1
தவறில 1
தவறு 5
தவறே 1
தவிசு 1
தவிர் 1
தவிர்தி 1
தவிர்மோ 1
தழங்கிய 1
தழங்கும் 1
தழல் 27
தழலுக்கு 1
தழலும் 1
தழீஇ 2
தழீஇனள் 1
தழும்பு 1
தழுவ 1
தழுவி 1
தழை 17
தழைக்க 1
தழைக்கும் 1
தழைத்த 3
தழைத்தலின் 1
தழைத்து 1
தழைதலின் 1
தழைப்ப 1
தள்ளா 3
தள்ளி 4
தள்ளிய 1
தளர் 1
தளர 1
தளவு 1
தளிர் 3
தளிர்க்கும் 1
தளிர்த்து 2
தளை 2
தளையது 1
தளையொடு 1
தளைவிட 1
தறிந்த 1
தறியினை 1
தறுகண் 1
தன் 17
தன்மை 1
தன்னால் 1
தன்னுடை 2
தன்னுழை 1
தன்னுள் 1
தன்னை 2
தனது 3
தனம் 1
தனமும் 1
தனி 21
தனித்த 1
தனித்தனி 2

தக்கன் (2)

இருள் மன தக்கன் பெரு மகம் உண்ண – கல்லாடம்:2 4/6
தீ குண தக்கன் செருக்களம்-தன்னுள் – கல்லாடம்:2 60/15

மேல்

தகட்டின் (1)

தூக்கின் தகட்டின் சுடர் வாய் வெயிலின் – கல்லாடம்:2 98/17

மேல்

தகடு (1)

பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என – கல்லாடம்:2 41/39

மேல்

தகர் (2)

திருகு புரி கோட்டு தகர் வரு மதியோய் – கல்லாடம்:1 2/34
வளர் மறி தகர் என திரிதரும் பாண்மகன் – கல்லாடம்:2 89/13

மேல்

தகரம் (1)

தகரம் கமழும் நெடு வரை காட்சி – கல்லாடம்:2 98/56

மேல்

தகளியது (1)

தண்டில் நின்று எரியும் தகளியது ஆகி – கல்லாடம்:2 23/33

மேல்

தகு (3)

சேர வறந்த திரு தகு நாளில் – கல்லாடம்:2 64/4
உள சுருள் விரிக்கும் நல தகு கல்வி ஒன்று – கல்லாடம்:2 75/2
தரித்து உலகு அளிக்கும் திரு தகு நாளில் – கல்லாடம்:2 75/10

மேல்

தகுணித்தம் (1)

இதழ் அவிழ் தாமரை எனும் தகுணித்தம்
துவைப்ப நின்று அமை கரத்து கவைகள் தோற்றி – கல்லாடம்:2 85/27,28

மேல்

தகும் (1)

உளத்து நின்று அளிக்கும் திரு தகும் அருநூல் – கல்லாடம்:2 25/4

மேல்

தகுமே (1)

உற்று இவள் பெற்றாள் என்பதும் தகுமே – கல்லாடம்:2 73/30

மேல்

தகைமையும் (1)

மண்ணுளர் வணங்கும் தன்னுடை தகைமையும்
இருள் அறு புலனும் மெய் பொருள் உறும் கல்வியும் – கல்லாடம்:2 88/6,7

மேல்

தங்க (1)

இரவினில் தங்க எளிவரல் இரந்தும் – கல்லாடம்:2 85/13

மேல்

தங்கி (1)

அறிவின் தங்கி அறு தாய் முலை உண்டு – கல்லாடம்:1 2/40

மேல்

தங்கிய (2)

செங்கோல் வேந்தும் தங்கிய குடியும் – கல்லாடம்:2 24/27
இருள் அக சோலையுள் இரவு என தங்கிய
மற்ற தன் சேக்கையுள் வதிபெறும் செம் கால் – கல்லாடம்:2 74/11,12

மேல்

தங்கியும் (1)

தாங்கியும் மலர் கரம் தங்கியும் நிலைத்த – கல்லாடம்:2 73/5

மேல்

தங்கும் (2)

திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும் – கல்லாடம்:2 17/15
செம் கண் பகடு தங்கும் வயல் ஊரர்க்கு – கல்லாடம்:2 63/15

மேல்

தங்குவன (1)

தங்குவன கண்டும் வலி மனம் கூடி – கல்லாடம்:2 4/14

மேல்

தங்கையை (1)

எங்கையர் குழுமி எமக்கும் தங்கையை
புணர்த்தினன் பாண் தொழில் புல்லன் என்று இவனை – கல்லாடம்:2 90/14,15

மேல்

தசை (1)

நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை
வெறி கண் கவை அடி கடும் கால் மேதி – கல்லாடம்:2 96/19,20

மேல்

தட்ட (1)

முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க – கல்லாடம்:2 8/28

மேல்

தட்டி (3)

உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி
வளை வாய் கரும் பருந்து இடை பறித்து உண்ண – கல்லாடம்:2 6/26,27
நான் முகம் தட்டி நடு முகம் உரப்ப – கல்லாடம்:2 8/16
மாய வல் அரக்கர் தட்டி
காய் பார் உகுத்த விதி ஒத்ததுவே – கல்லாடம்:2 83/32,33

மேல்

தட்டை (1)

அலைதரு தட்டை கரும்புற மலை மடல் – கல்லாடம்:2 31/3

மேல்

தட (2)

அடுக்கு நிலை சுமந்த வலி தட பொன்மலை – கல்லாடம்:2 25/18
வச்சிர தட கை வரைப்பகை சுமந்த – கல்லாடம்:2 35/8

மேல்

தடவ (1)

பேர் அழல் வாடை ஆருயிர் தடவ
விளைக்கும் காலம் முளைத்த காலை – கல்லாடம்:2 20/15,16

மேல்

தடவி (1)

பைம் கால் தடவி செம் கயல் துரந்து உண்டு – கல்லாடம்:2 78/2

மேல்

தடவும் (1)

கூடல் ஒப்புடையாய் குல உடு தடவும்
தலை மதில் வயிற்றுள் படும் அவர் உயிர் கணம் – கல்லாடம்:2 77/17,18

மேல்

தடா (1)

தடா உடல் உம்பர் தலைபெறும் முழவம் – கல்லாடம்:2 8/15

மேல்

தடி (1)

வெள் வாய் குதட்டிய விழுது உடை கரும் தடி
வைத்து அமையா முன் மகிழ்ந்து உணவு உண்டு அவன் – கல்லாடம்:2 14/33,34

மேல்

தடிந்தும் (2)

புகர்_முக புழை கை ஒருவிசை தடிந்தும்
மது இதழ் குவளை என்று அடு கண் மலர்ந்த – கல்லாடம்:2 13/12,13
புனமும் எம் உயிரும் படர் கரி தடிந்தும்
அழுங்குறு புனல் எடுத்து அகில் புகை ஊட்டியும் – கல்லாடம்:2 85/10,11

மேல்

தடியும் (2)

அதிர் வளை தடியும் அளக்கர் ஆகியும் – கல்லாடம்:2 11/10
நெட்டு உடல் பேழ் வாய் பெரும் சுறவு தடியும்
வரை நிரை கிடந்த திரை உவர் புகுந்து – கல்லாடம்:2 15/21,22

மேல்

தடுத்து (1)

காலால் தடுத்து கனன்று எதிர் கறுத்தும் – கல்லாடம்:2 66/2

மேல்

தடுமாறி (1)

கால குறியை மனம் தடுமாறி
பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல் – கல்லாடம்:2 70/17,18

மேல்

தடை (1)

பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே – கல்லாடம்:2 31/16

மேல்

தடைகொண்டு (1)

மங்கையர் குழை பெறு வள்ளையில் தடைகொண்டு
அவர் கரும் கண் என குவளை தழை பூத்த – கல்லாடம்:2 74/9,10

மேல்

தடைதரு (1)

கடும் கான் தள்ளி தடைதரு நெஞ்சம் – கல்லாடம்:2 31/5

மேல்

தடைந்த (1)

மைந்தர் கண் சென்று மாதர் உள் தடைந்த
பொழி மது புது மலர் போக்கு உடை சுரும்பே – கல்லாடம்:2 81/38,39

மேல்

தடைந்தன (1)

தரைபடு மறுக்கம் தடைந்தன போல – கல்லாடம்:2 29/16

மேல்

தடைந்து (2)

பொருள் செயல் அருத்தியின் எண் வழி தடைந்து
நால் திசை நடக்கும் அணங்கின் அவயவத்து – கல்லாடம்:2 31/1,2
தாமரை ஒன்றில் தடைந்து வளர்செய்த – கல்லாடம்:2 39/3

மேல்

தடைந்தும் (2)

தைவரல் ஏற்றும் கனவினும் தடைந்தும்
திரை கடல் தெய்வம் முன் தெளி சூள் வாங்கியும் – கல்லாடம்:2 79/20,21
பொருள் கான் தடைந்தும் பாசறை பொருந்தியும் – கல்லாடம்:2 79/22

மேல்

தடைய (2)

வளைத்த ஞான்று நெடு விண் தடைய
கால் கொடுத்து அன்ன கந்திகள் நிமிர்ந்து – கல்லாடம்:2 33/23,24
நாட்டவர் தடைய மற்று உதிர்ந்து நடந்ததுவே – கல்லாடம்:2 90/22

மேல்

தடையா (2)

தடையா அறிவும் உடையோய் நீயே – கல்லாடம்:2 20/18
அன்று என தடையா கேண்மை – கல்லாடம்:2 92/22

மேல்

தடையாது (1)

விண் தடையாது மண் புக புதைத்த – கல்லாடம்:1 2/48

மேல்

தண் (10)

தண் மதி கடும் சுடர் வெவ் அழல் கண் வைத்து – கல்லாடம்:2 20/24
வெம் சுடர் தண் மதி என புகழ் நிறீஇய – கல்லாடம்:2 28/2
அமையா தண் அளி உமையுடன் நிறைந்த – கல்லாடம்:2 28/9
ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர் – கல்லாடம்:2 30/14
தண் நடை கணவன் பண்புடன் புணரும் – கல்லாடம்:2 42/27
நாவலம் தண் பொழில் இன்புடன் துயில – கல்லாடம்:2 43/4
முலை குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம் – கல்லாடம்:2 44/9
பஞ்சு எழ பிழிந்து தண் புனல் பருகி – கல்லாடம்:2 67/17
தண் மதி கலைகள் தான் அற ஒடுங்க – கல்லாடம்:2 95/10
நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை – கல்லாடம்:2 96/19

மேல்

தண்_சுடர் (1)

ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர்
அண்டம் விளர்ப்ப பெரு விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 30/14,15

மேல்

தண்டம் (1)

மாவுடை கூற்றம் மலர் அயன் தண்டம்
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல் – கல்லாடம்:2 73/7,8

மேல்

தண்டமும் (1)

தென்புல கோமகன் தீ தெறு தண்டமும்
நரகொடு துறக்கத்து உழல் வரு பீழையும் – கல்லாடம்:1 2/62,63

மேல்

தண்டலை (1)

கந்தி தண்டலை வந்து வீற்றிருந்து – கல்லாடம்:2 17/30

மேல்

தண்டா (2)

தண்டா மயல் கொடு வண்டு பரந்து அரற்ற – கல்லாடம்:2 20/6
அயரா வெறியில் தண்டா வரு நோய் – கல்லாடம்:2 30/5

மேல்

தண்டி (1)

சுருதியை தண்டி வலிகொண்டு அமைப்ப – கல்லாடம்:2 99/33

மேல்

தண்டில் (1)

தண்டில் நின்று எரியும் தகளியது ஆகி – கல்லாடம்:2 23/33

மேல்

தண்டின் (1)

மரகத தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 14/9

மேல்

தண்டு (1)

சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து – கல்லாடம்:2 91/10

மேல்

தண்டை (1)

தளிர்த்து சிவந்த தண்டை அம் துணை தாள் – கல்லாடம்:2 92/5

மேல்

தண்ணம் (3)

தண்ணம் பிறையும் தலை பெற நிறுத்துக – கல்லாடம்:2 14/39
தண்ணம் பழனம் சூழ்ந்த – கல்லாடம்:2 27/31
தண்ணம் நின்று உதவலின் நிறைமதி ஆகி – கல்லாடம்:2 49/2

மேல்

தண்ணம்துறைவற்கு (1)

தண்ணம்துறைவற்கு இன்று இவள் ஒருத்தி – கல்லாடம்:2 23/40

மேல்

தண்ணீர் (1)

தண்ணீர் வாய் தரும் செம் நிற சிதலை – கல்லாடம்:2 96/17

மேல்

தண்ணுமை (2)

இரு தலை குவிந்த நெட்டு உடல் தண்ணுமை
ஒரு முகம் தாழ்த்தி இரு கடிப்பு ஒலிப்ப – கல்லாடம்:2 8/21,22
கல்லவடத்திரள் மணி வாய் தண்ணுமை
மொந்தை கல்லலசு துத்தரி ஏங்க – கல்லாடம்:2 34/9,10

மேல்

தண்மை (1)

வெம்மையொடு கூடியும் தண்மை பொருந்தியும் – கல்லாடம்:2 23/10

மேல்

தண்மையும் (1)

வெம்மையும் தண்மையும் வினை உடற்கு ஆற்றும் – கல்லாடம்:2 75/18

மேல்

தணக்க (1)

துறைவன் தணக்க அறிகிலம் யாமே – கல்லாடம்:2 72/16

மேல்

தணக்கினும் (1)

தனித்தனி ஒளித்து தணக்கினும் அரிது என – கல்லாடம்:2 77/19

மேல்

தணந்த (1)

மெய்யுற தணந்த பொய்யினர் இன்று – கல்லாடம்:2 21/26

மேல்

தணந்தோர் (3)

தணந்தோர் உளத்தில் காம தீ புக – கல்லாடம்:2 38/8
தணந்தோர் உள்ளத்துள் உற புகுந்த பின் – கல்லாடம்:2 43/21
தணந்தோர் சினத்தும் மணந்தோர்க்கு அளித்தும் – கல்லாடம்:2 60/8

மேல்

தணந்தோர்க்கு (1)

மணந்தோர்க்கு அமுதும் தணந்தோர்க்கு எரியும் – கல்லாடம்:2 51/3

மேல்

தணப்பு (1)

இரண்டு உயிர் தணப்பு என எனது கண் புணர இ – கல்லாடம்:2 97/24

மேல்

தணிக்க (1)

ஆசையின் தணியா அழல் பசி தணிக்க
காளி முன் காவல் காட்டிவைத்து ஏகும் – கல்லாடம்:2 7/24,25

மேல்

தணித்த (1)

சுட்டும் கொய்தும் உதைத்தும் தணித்த
விட்டு ஒளிர் மாணிக்க மலையின் ஒருபால் – கல்லாடம்:2 17/40,41

மேல்

தணிப்ப (1)

உளை கடல் சேர்ப்பன் அளி விடம் தணிப்ப
நீலமும் கரும் கொடி அடம்பும் சங்கமும் – கல்லாடம்:2 92/14,15

மேல்

தணியா (2)

ஆசையின் தணியா அழல் பசி தணிக்க – கல்லாடம்:2 7/24
தணியா கொடும் சுரம் தரும் தழல் தாவி – கல்லாடம்:2 40/8

மேல்

தத்தை (1)

பழம் கொள் தத்தை வழங்கு சொல் போலும் – கல்லாடம்:2 50/9

மேல்

தந்த (5)

தந்த எம் குரிசில் தனி வந்து எமது – கல்லாடம்:2 13/18
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில் – கல்லாடம்:2 17/35
மல்லுற தந்த ஈர்ம் தழை தானே – கல்லாடம்:2 18/41
தெருமரல் தந்த அறிவு நிலை கிடக்க – கல்லாடம்:2 22/24
கடும் சுரம் தந்த கல் அதர் வெப்பம் – கல்லாடம்:2 53/5

மேல்

தந்தமை (1)

செவ்வே தந்தமை துயர் இருப்ப – கல்லாடம்:2 16/37

மேல்

தந்திரி (3)

ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்து – கல்லாடம்:2 82/5
ஒன்பது தந்திரி உறுத்தி நிலை நீக்கி – கல்லாடம்:2 82/15
தந்திரி நூறு தழங்கிய முகத்த – கல்லாடம்:2 82/20

மேல்

தந்து (7)

சயம் பெறு வீரனை தந்து அவன்-தன்னால் – கல்லாடம்:2 4/4
சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/24
மறுமை தந்து உதவும் இருமையானும் – கல்லாடம்:2 11/18
பெறும் உயிர் தந்து மருவி அளித்த – கல்லாடம்:2 16/35
சொல்லா இன்பமும் உயிருற தந்து
நாள் இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து – கல்லாடம்:2 21/24,25
பெரும் களவு இணர் தந்து அவை கீழ் குலவிய – கல்லாடம்:2 83/8
அன்பும் சூளும் அளியுற தந்து என் – கல்லாடம்:2 100/32

மேல்

தந்தும் (2)

கடும் சூள் தந்தும் கை புனை புனைந்தும் – கல்லாடம்:2 85/3
தனது முன் புன்மொழி நீள தந்தும்
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற புனைந்தும் – கல்லாடம்:2 89/19,20

மேல்

தப்பியும் (1)

எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் – கல்லாடம்:2 54/20

மேல்

தபு (1)

கூர் வாய் பறை தபு பெரும் கிழ நாரை – கல்லாடம்:2 36/2

மேல்

தபுத்தியும் (1)

முழுக்கியும் தபுத்தியும் முலை ஒளி நோக்கியும் – கல்லாடம்:2 54/16

மேல்

தம் (9)

எம்முடை குன்றவர் தம் மனம் புகுத இ – கல்லாடம்:2 4/21
நெடும் சுரம் நீங்க தம் கால் – கல்லாடம்:2 6/43
புலவு உடல் பரதவர் தம் குடி ஓம்ப – கல்லாடம்:2 23/22
தம் உளம் தவறி போந்தது இவ்விடனே – கல்லாடம்:2 63/30
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல் – கல்லாடம்:2 70/13
தம் உடல் மயங்கின ஒடுங்கின உறங்கின – கல்லாடம்:2 71/29
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம் – கல்லாடம்:2 72/15
கழு கடை அன்ன தம் கூர் வாய் பழி புலவு – கல்லாடம்:2 78/3
தனி முகம் மலர்ந்து தம் இசை பாட – கல்லாடம்:2 100/27

மேல்

தம்பலம் (1)

ஊருணி ஒத்த பொது வாய் தம்பலம்
நீயும் குதட்டினை ஆயின் சேயாய் – கல்லாடம்:2 56/17,18

மேல்

தம்மில் (2)

தம்மில் இன்பம் சூளுடன் கூடி – கல்லாடம்:2 17/54
தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும் – கல்லாடம்:2 20/23

மேல்

தம்முடை (1)

புன்னை அம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும் – கல்லாடம்:2 21/16

மேல்

தம்மையும் (1)

நின் முக கிளையினர் தம்மையும் கடந்தனர் – கல்லாடம்:2 62/16

மேல்

தமக்கு (1)

தமக்கு என காட்டும் ஒளி கண் கெடலும் – கல்லாடம்:2 69/31

மேல்

தமக்கும் (1)

தமக்கும் படைக்க விதி பேற்று அடியவர் – கல்லாடம்:2 86/35

மேல்

தமது (4)

செரு விழும் இச்சையர் தமது உடல் பெற்ற – கல்லாடம்:2 7/42
உலகினில் தமது முக்குறியாக – கல்லாடம்:2 55/20
முடித்து தமது முடியா பதி புக – கல்லாடம்:2 93/20
தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும் – கல்லாடம்:2 95/38

மேல்

தமர் (2)

ஈங்கு இவை நிற்க சீறூர் பெரும் தமர்
இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில் மொழி – கல்லாடம்:2 1/24,25
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு – கல்லாடம்:2 87/39

மேல்

தமருகம் (1)

எரி மழு நவ்வி தமருகம் அமைத்த – கல்லாடம்:2 58/27

மேல்

தமனிய (2)

தமனிய பராரை சயிலம் ஆகியும் – கல்லாடம்:2 11/5
சலியா பராரை தமனிய பொருப்பு எனும் – கல்லாடம்:2 14/1

மேல்

தமியில் (1)

விள்ளும் தமியில் கூறினர் – கல்லாடம்:2 1/26

மேல்

தமியே (1)

நிறை நாண் வேலி நீங்கி தமியே
ஓருழி நில்லாது அலமரல்கொள்ளும் என் – கல்லாடம்:2 88/3,4

மேல்

தமியை (1)

அருளுடன் தமியை வாடினை ஐய – கல்லாடம்:2 96/16

மேல்

தமிழ் (15)

பெரும் தமிழ் விரித்த அரும் தமிழ் புலவனும் – கல்லாடம்:1 2/54
பெரும் தமிழ் விரித்த அரும் தமிழ் புலவனும் – கல்லாடம்:1 2/54
பரப்பின் தமிழ் சுவை திரட்டி மற்று அவர்க்கு – கல்லாடம்:2 3/15
தெளிதர கொடுத்த தென் தமிழ் கடவுள் – கல்லாடம்:2 3/16
தமிழ் எனும் கடலை காணிகொடுத்த – கல்லாடம்:2 17/17
அரும் தமிழ் கீரன் பெரும் தமிழ் பனுவல் – கல்லாடம்:2 50/28
அரும் தமிழ் கீரன் பெரும் தமிழ் பனுவல் – கல்லாடம்:2 50/28
மலைய தமிழ் கால் வாவியுள் புகுந்து – கல்லாடம்:2 51/5
தேவர் மருந்தும் தென் தமிழ் சுவையும் – கல்லாடம்:2 53/6
நின்று அறிந்து உணர்த்தவும் தமிழ் பெயர் நிறுத்தவும் – கல்லாடம்:2 63/24
பெரும் தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த – கல்லாடம்:2 65/19
தென் தமிழ் வட கலை சில கொடுத்து எனவும் – கல்லாடம்:2 73/22
அரும் தமிழ் கூடல் பெரும் தவர் காண – கல்லாடம்:2 76/19
தமிழ் கலை மாலை சூடி தாவா – கல்லாடம்:2 92/7
தெய்வம் மறைத்த செழும் தமிழ் பாடலும் – கல்லாடம்:2 100/7

மேல்

தமிழும் (2)

தேன் உறை தமிழும் திரு உறை கூடலும் – கல்லாடம்:2 9/12
கனை கடல் குடித்த முனிவனும் தமிழும்
மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும் – கல்லாடம்:2 24/22,23

மேல்

தயங்க (1)

தலை ஏது அலையா நகுதலை தயங்க
அணி தலை மாலையை நிறைமதி திரள் என – கல்லாடம்:2 55/7,8

மேல்

தயங்கிய (1)

தயங்கிய மூன்று கண் எங்கணும் ஆக – கல்லாடம்:2 16/18

மேல்

தர (2)

அவள் தர இவள் பெறும் அரந்தை அம் பேறினுக்கு – கல்லாடம்:2 73/27
மற்றவள் தர நெடும் கற்பே – கல்லாடம்:2 73/29

மேல்

தரக்கின் (3)

தழல் கண் தரக்கின் சரும ஆடையன் – கல்லாடம்:2 3/17
புள்ளி பரந்த வள் உகிர் தரக்கின்
அதள் பிறக்கிட்டு குதி பாய் நவ்வியின் – கல்லாடம்:2 26/13,14
தழல் விழி பேழ் வாய் தரக்கின் துளி முலை – கல்லாடம்:2 40/19

மேல்

தரக்கு (1)

பேழ் வாய் தழல் விழி தரக்கு அடித்து அவிந்த – கல்லாடம்:2 87/21

மேல்

தரக்கும் (1)

பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும் – கல்லாடம்:2 64/16

மேல்

தரள (3)

நடம்செய தரள வடம் தெறு நகரோய் – கல்லாடம்:2 51/18
நிரை வளை ஈட்டமும் தரள குப்பையும் – கல்லாடம்:2 67/1
குளிர் வெண் தரள குவால் இவை காண்க – கல்லாடம்:2 69/16

மேல்

தரளத்தினை (1)

கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை
அரும்பு என சுரும்பு இனம் அலர நின்று இசைத்தும் – கல்லாடம்:2 72/20,21

மேல்

தரளம் (4)

அன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வினரிடத்தும் அவ் வழி ஆன – கல்லாடம்:2 17/12,13
முலை குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம்
செம் மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் – கல்லாடம்:2 44/9,10
தரளம் சொரியும் பழன கூடல் – கல்லாடம்:2 74/23
ஒலி கடல் இப்பி தரளம் சூல்கொள – கல்லாடம்:2 94/29

மேல்

தரளமும் (3)

நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும்
புனம் பட எறிந்த கார் அகில் தூமமும் – கல்லாடம்:2 50/18,19
கண்-தொறும் விசைத்த கருப்பு தரளமும்
வளை உமிழ் ஆரமும் சுரி முக சங்கும் – கல்லாடம்:2 60/16,17
தரளமும் சந்தும் எரி கெழு மணியும் – கல்லாடம்:2 65/12

மேல்

தரித்த (7)

தாள் தலை தரித்த கோளினர் போல – கல்லாடம்:2 6/42
தரித்த உள்ள தாமரை ஊரன் – கல்லாடம்:2 10/25
அன்பு உரு தரித்த இன்பு இசை பாணன் – கல்லாடம்:2 11/28
கரம் மான் தரித்த பெருமான் இறைவன் – கல்லாடம்:2 36/5
ஆங்கவன் தரித்த கலைமான் கடுக்கும் – கல்லாடம்:2 41/48
மகள் என தரித்த நிலை அறிகுவனேல் – கல்லாடம்:2 67/12
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன் – கல்லாடம்:2 77/16

மேல்

தரித்தலின் (1)

நீர் தலை தரித்தலின் நிமலன் ஆகியும் – கல்லாடம்:2 9/6

மேல்

தரித்தவர் (1)

நிறை உளம் தரித்தவர் போல – கல்லாடம்:2 68/33

மேல்

தரித்து (3)

உரிசெய்து உடுத்து செம் கரம் தரித்து
செம்மலர் பழித்த தாள் கீழ் கிடத்தி – கல்லாடம்:2 33/18,19
தரித்து உலகு அளிக்கும் திரு தகு நாளில் – கல்லாடம்:2 75/10
எட்டும் தரித்து விட்டு அறு குற்றம் – கல்லாடம்:2 86/30

மேல்

தரித்தும் (1)

தரித்தும் அணைத்தும் தான் என கண்டும் – கல்லாடம்:2 52/7

மேல்

தரிந்து (1)

அறிவு ஒளி நிறைவே ஓர் உரு தரிந்து வந்து – கல்லாடம்:2 44/25

மேல்

தரு (18)

குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும் – கல்லாடம்:1 1/37
குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும் – கல்லாடம்:1 1/37
தருதலின் வான தரு ஐந்து ஆகியும் – கல்லாடம்:2 11/12
தரு மலர் விண் புக மணி முடி நிறைத்து – கல்லாடம்:2 14/32
கண்ட கறையோன் கண் தரு நுதலோன் – கல்லாடம்:2 32/5
தாளி போந்தின் தரு மயிர் பெரும் தலை – கல்லாடம்:2 34/3
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர் – கல்லாடம்:2 35/3
அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினை – கல்லாடம்:2 37/10
ஐந்தும் நான்கும் அணி தரு மூன்றும் – கல்லாடம்:2 38/23
புனை பெரும் கவியுள் தரு பொருள் என்ன – கல்லாடம்:2 45/2
நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும் – கல்லாடம்:2 56/6
தரு நிழல் தேவர்-தம் உடல் பனிப்ப – கல்லாடம்:2 59/3
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும் – கல்லாடம்:2 76/2
கூக்குரல் கொள்ளா கொலை தரு நவ்வியும் – கல்லாடம்:2 77/14
சந்தை நெய்ப்பிலி என தரு பதினாறு – கல்லாடம்:2 98/25
தரு செளகந்தி தன் நிறம் ஆறும் – கல்லாடம்:2 98/37
மணி தரு தெருவில் கொடி தரு தேரும் – கல்லாடம்:2 99/49
மணி தரு தெருவில் கொடி தரு தேரும் – கல்லாடம்:2 99/49

மேல்

தரு-மின் (1)

முண்டக முகையின் முலை-முகம் தரு-மின்
உருளின் பூழி உள்ளுற ஆடு-மின் – கல்லாடம்:2 10/4,5

மேல்

தருக்கத்து (1)

நாரணன் நடித்த எழுவாய் தருக்கத்து
அறிவு நிலை போகி அருச்சனை விடுத்த – கல்லாடம்:2 25/15,16

மேல்

தருகிலீர் (1)

உற்ற வாய்மை சற்றும் தருகிலீர்
அன்று எனின் நும்மில் ஒன்றுபட்டு ஒருகால் – கல்லாடம்:2 23/46,47

மேல்

தருதலின் (1)

தருதலின் வான தரு ஐந்து ஆகியும் – கல்லாடம்:2 11/12

மேல்

தருதி (1)

மீளா காட்சி தருதி இன்று எனவே – கல்லாடம்:1 2/65

மேல்

தரும் (12)

அரும் புது விருந்து என பொருந்தி மற்று அவர் தரும்
இடியும் துய்த்து சுரை குடம் எடுத்து – கல்லாடம்:2 12/4,5
மருங்கில் பாதி தரும் துகில் புனைந்தும் – கல்லாடம்:2 20/21
வினை தரும் அடைவின் அல்லது – கல்லாடம்:2 20/45
வளம் தரும் உங்கள் தொல் குடி சீறூர்க்கு – கல்லாடம்:2 26/32
அருள் தரும் கேள்வி அமைய தேக்க – கல்லாடம்:2 35/1
தணியா கொடும் சுரம் தரும் தழல் தாவி – கல்லாடம்:2 40/8
தாரியில் காட்டி தரும் சாதாரி – கல்லாடம்:2 43/31
முகன் தரும் இருசெயல் அகன் பெற கொளுவும் – கல்லாடம்:2 50/2
இருள் கலர் புலன் என சுழல் தரும் சூறை – கல்லாடம்:2 59/14
பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை அருள் தரும்
குளிர்ச்சி நீங்கி கொடுங்கோல் வேந்து என – கல்லாடம்:2 86/7,8
அவன் தரும் உலகத்து அரும் தொழில் ஓங்க – கல்லாடம்:2 95/13
தண்ணீர் வாய் தரும் செம் நிற சிதலை – கல்லாடம்:2 96/17

மேல்

தரும (1)

தரும பெரும் பயிர் உலகு பெற விளைக்கும் – கல்லாடம்:2 37/14

மேல்

தருமிக்கு (1)

பொன் குவை தருமிக்கு அற்புடன் உதவி – கல்லாடம்:2 1/12

மேல்

தருமே (1)

ஏகின எனக்கே அற்புதம் தருமே – கல்லாடம்:2 53/21

மேல்

தருவன (1)

தருவன அன்றி மலரவன் அவன் தொழில் – கல்லாடம்:2 87/30

மேல்

தருவின் (1)

தருவின் கிழவன்தான் என நிற்றி – கல்லாடம்:2 97/21

மேல்

தருவினுள் (1)

பொதுளிய தருவினுள் புகுந்து இமையாது – கல்லாடம்:2 40/11

மேல்

தருவும் (3)

அமுதமும் தருவும் பணிவர படைத்த – கல்லாடம்:2 1/1
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின் – கல்லாடம்:2 9/7
தேவர்க்கு அரசனும் காவல் தருவும்
வழுவா விதியும் எழுதா மறையும் – கல்லாடம்:2 24/25,26

மேல்

தரைபடு (1)

தரைபடு மறுக்கம் தடைந்தன போல – கல்லாடம்:2 29/16

மேல்

தலை (52)

புடவி வைத்து ஆற்றிய பல் தலை பாந்தள் – கல்லாடம்:1 2/19
கார் விரித்து ஓங்கிய மலை தலை கதிர் என – கல்லாடம்:1 2/23
குங்கும கொங்கையும் தலை கண் கறாது – கல்லாடம்:2 5/11
தலை உடல் அசைத்து சாணை வாய் துடைத்து – கல்லாடம்:2 6/2
செடி தலை கார் உடல் இடி குரல் கிராதர் – கல்லாடம்:2 6/12
தாள் தலை தரித்த கோளினர் போல – கல்லாடம்:2 6/42
வானுற நிமிர்ந்த மலை தலை முன்றிலின் – கல்லாடம்:2 7/9
கரும் தலை சாரிகை செவ் வாய் பசுங்கிளி – கல்லாடம்:2 7/15
குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க – கல்லாடம்:2 8/12
இரு தலை குவிந்த நெட்டு உடல் தண்ணுமை – கல்லாடம்:2 8/21
கல்லவடத்திரள் விரல் தலை கறங்க – கல்லாடம்:2 8/26
நீர் தலை தரித்தலின் நிமலன் ஆகியும் – கல்லாடம்:2 9/6
விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு – கல்லாடம்:2 12/3
பின்னல் விட்டு அமைத்த தன் தலை மலர் இணைஇ – கல்லாடம்:2 14/31
தண்ணம் பிறையும் தலை பெற நிறுத்துக – கல்லாடம்:2 14/39
பொன் தலை புணர் வலை கொடும் கரம் ஆக்கி – கல்லாடம்:2 15/27
நுனி தலை அந்தணர் கதழ் எரி வளர்த்து – கல்லாடம்:2 18/22
தலை பெற இருந்த நிலை புகழானும் – கல்லாடம்:2 19/18
பல தலை அரக்கர் பேரணி போல – கல்லாடம்:2 21/19
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும் – கல்லாடம்:2 21/21
கால் தலை கொள்ளா கையினர் போல – கல்லாடம்:2 21/63
கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் – கல்லாடம்:2 24/15
மலர் தலை உலகத்து இருள் எறி விளக்கும் – கல்லாடம்:2 29/23
தாளி போந்தின் தரு மயிர் பெரும் தலை
விண் புடைத்து அப்புறம் விளங்கு உடல் குணங்கு இனம் – கல்லாடம்:2 34/3,4
விண் தலை உடைத்து பிறை வாய் வைப்ப – கல்லாடம்:2 41/2
நிரை தலை சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும் – கல்லாடம்:2 41/15
கவை தலை மணி வேல் பிறை தலை கன்னி – கல்லாடம்:2 41/19
கவை தலை மணி வேல் பிறை தலை கன்னி – கல்லாடம்:2 41/19
முடி தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும் – கல்லாடம்:2 47/18
நரை தலை முதியோள் இடித்து அடு கூலிகொண்டு – கல்லாடம்:2 47/24
முடி தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி – கல்லாடம்:2 50/5
தலை ஏது அலையா நகுதலை தயங்க – கல்லாடம்:2 55/7
அணி தலை மாலையை நிறைமதி திரள் என – கல்லாடம்:2 55/8
தலை நடுக்குற்ற தன்மை போல – கல்லாடம்:2 55/32
புன் தலை மேதி புனல் எழ முட்டிய – கல்லாடம்:2 57/3
கனல் தலை பழுத்த திரள் பரல் முரம்பு – கல்லாடம்:2 59/6
முடை தலை எரி பொடி உடைமையின் பாலையும் – கல்லாடம்:2 64/17
முகில் தலை சுமந்த ஞிமிறு எழுந்து இசைக்கும் – கல்லாடம்:2 69/2
தழல் தலை பழுத்த பரல் முரம்பு அடுத்தனை – கல்லாடம்:2 69/14
பல் தலை பாந்தள் சுமை திரு தோளில் – கல்லாடம்:2 75/9
பார் முதல் படைத்தவன் நடு தலை அறுத்து – கல்லாடம்:2 77/8
தலை மதில் வயிற்றுள் படும் அவர் உயிர் கணம் – கல்லாடம்:2 77/18
கவை தலை பிறை எயிற்று இருள் எழில் அரக்கன் – கல்லாடம்:2 78/9
திருவடி பெருவிரல் தலை நக நுதியால் – கல்லாடம்:2 78/22
பவள சடையோன் பதம் தலை சுமந்த – கல்லாடம்:2 80/21
அரவ பசும் தலை அரும்பு அவிழ் கணை கால் – கல்லாடம்:2 82/36
நோன் தலை கொடும் சூர் களவு உயிர் நுகர்ந்த – கல்லாடம்:2 84/5
தலை இருந்து அரும் கதி முழுதும் நின்று அளிக்கும் – கல்லாடம்:2 87/35
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து – கல்லாடம்:2 91/10
முள் தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து – கல்லாடம்:2 91/14
பொரி குறி மட மான் சுழி தலை கவிழ – கல்லாடம்:2 94/11
மான் தலை கரத்தினில் கூடை வயக்கி – கல்லாடம்:2 99/4

மேல்

தலைக்கடை (1)

போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி – கல்லாடம்:2 43/27

மேல்

தலைபெறும் (1)

தடா உடல் உம்பர் தலைபெறும் முழவம் – கல்லாடம்:2 8/15

மேல்

தலைமயங்கும் (1)

ஒன்றினொடு ஒன்று சென்று தலைமயங்கும்
குழகன் குன்ற கூடல் அம் பதி நிறை – கல்லாடம்:2 50/25,26

மேல்

தலையம் (1)

கரம் கால் காட்டி தலையம் இயக்கி – கல்லாடம்:2 85/26

மேல்

தலையின் (1)

சூல தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து – கல்லாடம்:2 17/46

மேல்

தலையினும் (1)

வேத தலையினும் விதி ஆகமத்தினும் – கல்லாடம்:2 52/17

மேல்

தலைவன் (2)

தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும் – கல்லாடம்:2 9/17
புதிய நாயகன் பழ மறை தலைவன்
கைஞ்ஞின்றவன் செம் கால் கண்டவர் போல – கல்லாடம்:2 18/9,10

மேல்

தலைவனும் (1)

விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும் – கல்லாடம்:2 58/10

மேல்

தலைவிரல் (1)

சல்லரி அங்கை தலைவிரல் தாக்க – கல்லாடம்:2 8/18

மேல்

தலைவைத்து (1)

பல தலைவைத்து முடியாது பாயும் – கல்லாடம்:2 21/6

மேல்

தலைவைத்தும் (1)

நடை_மலை எயிற்றினிடை தலைவைத்தும்
உயர்ந்த இன்பதற்கு ஒன்றுவமும் உண்டு எனின் – கல்லாடம்:2 12/10,11

மேல்

தவ (6)

தவ நதி போகும் அரு மறை தாபதர் – கல்லாடம்:2 6/14
ஆறு எதிர்ப்பட்ட அரும் தவ திருவினர் – கல்லாடம்:2 40/7
ஐம்பகை அடக்கிய அரும் தவ முனிவன் – கல்லாடம்:2 57/24
மெய் தவ கூடல் விளைபொருள் மங்கையர் – கல்லாடம்:2 63/26
மா தவ கூடல் மதி சடை காரணன் – கல்லாடம்:2 73/12
அரும் தவ கண்ணினோடு அடைந்த மா முனி-பால் – கல்லாடம்:2 81/17

மேல்

தவத்தானும் (1)

கங்கையில் படிந்த பொங்கு தவத்தானும்
அ நெடு வேணியில் கண்ணி என இருந்து – கல்லாடம்:2 19/31,32

மேல்

தவத்தினை (1)

நின் பெறு தவத்தினை முற்றிய யானும் – கல்லாடம்:2 39/5

மேல்

தவத்து (1)

ஆயிரம் பணாடவி அரும் தவத்து ஒருவனும் – கல்லாடம்:2 41/7

மேல்

தவம் (10)

தவம் என தேய்ந்தது துடி எனும் நுசுப்பே – கல்லாடம்:2 1/19
பெரும் கவின் முன் நாள் பேணிய அரும் தவம்
கண்ணிடை உளத்திடை காண்-மின் கருது-மின் – கல்லாடம்:2 10/9,10
தவம் சூழ் இமயமும் கமம் சூல் மழையும் – கல்லாடம்:2 24/28
அருச்சுனன் அரும் தவம் அழித்து அமர் செய்து அவன் – கல்லாடம்:2 48/4
தவம் கற்று ஈன்ற நெடும் கற்பு அன்னை – கல்லாடம்:2 58/15
உணா நிலன் உண்டு பராய அ பெரும் தவம்
கண்ணுற உருப்பெறும் காட்சியது என்ன – கல்லாடம்:2 62/2,3
முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும் – கல்லாடம்:2 63/23
தோன்றி நின்று அழியா துகள் அறு பெரும் தவம்
நிதி என கட்டிய குறுமுனிக்கு அருளுடன் – கல்லாடம்:2 65/10,11
வரப்பெறு மா தவம் பெரிது உடையேமே – கல்லாடம்:2 80/34
அவ் வினை பயனுழி அரும் தவம் பெறுமோ – கல்லாடம்:2 82/48

மேல்

தவம்செய்து (1)

தாமரை தவம்செய்து அளியுடன் பெற்ற – கல்லாடம்:2 3/20

மேல்

தவமும் (1)

ஒழுக்கமும் குலனும் அமுக்கு அறு தவமும்
இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே – கல்லாடம்:2 42/11,12

மேல்

தவர் (7)

மா தவர் வழுத்தும் கூடற்கு இறைவன் – கல்லாடம்:2 11/30
விருந்து கொண்டு உண்ணும் பெரும் தவர் போல – கல்லாடம்:2 14/46
பெரும் தவர் குழுவும் அரும் கதி இருப்பும் – கல்லாடம்:2 24/20
பேர் அருள் அளித்த மா தவர் போல – கல்லாடம்:2 70/10
அரும் தமிழ் கூடல் பெரும் தவர் காண – கல்லாடம்:2 76/19
பெரும் திரு கூடல் அரும் தவர் பெருமான் – கல்லாடம்:2 84/8
தீ வாய் புலியினை திரு தவர் நகைப்ப – கல்லாடம்:2 87/27

மேல்

தவராம் (1)

மா தவராம் என மேல் மலை மறைந்தனன் – கல்லாடம்:2 96/11

மேல்

தவல் (2)

அவளே ஆகுவள் யானே தவல் அரும் – கல்லாடம்:2 55/38
தவல் அரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த – கல்லாடம்:2 100/9

மேல்

தவழ் (1)

வான் தவழ் உடல் கறை மதி என சுருங்கி – கல்லாடம்:2 80/2

மேல்

தவழ (1)

பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ
உடை கவட்டு ஓமை உலர் சினை இருக்கும் – கல்லாடம்:2 7/21,22

மேல்

தவழும் (1)

சுரி வளை சாத்து நிறைமதி தவழும்
எறி திரை பழன கூடல் – கல்லாடம்:2 64/32,33

மேல்

தவள (2)

தவள மாடத்து அகல் முதுகு பற்றி – கல்லாடம்:2 19/22
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகை – கல்லாடம்:2 89/2

மேல்

தவளையும் (1)

பாசுடல் பகு வாய் பீழை அம் தவளையும்
பேழ் வாய் தழல் விழி தரக்கு அடித்து அவிந்த – கல்லாடம்:2 87/20,21

மேல்

தவறா (3)

ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தன போல் – கல்லாடம்:2 58/13
ஒருகால் தவறா உடைமைத்து என்ன – கல்லாடம்:2 61/14
விதி நிறை தவறா ஒரு பங்கு உடைமையும் – கல்லாடம்:2 66/21

மேல்

தவறாவால் (1)

கூடி நின்றனை எனின் குறி தவறாவால்
தேம் படர்ந்தனன் எனின் திசை குறிக்குநரால் – கல்லாடம்:2 71/36,37

மேல்

தவறி (1)

தம் உளம் தவறி போந்தது இவ்விடனே – கல்லாடம்:2 63/30

மேல்

தவறில (1)

தன் உயிர்க்கு இன்னல் தவறில ஆஆ – கல்லாடம்:2 97/23

மேல்

தவறு (5)

கல்லா தவறு உளம் புல்லிய குழலும் – கல்லாடம்:2 15/2
அமரர்கள் முனி கணத்தவை முன் தவறு
புரிந்து உடன் உமை கண் புதைப்ப மற்று உமையும் – கல்லாடம்:2 69/23,24
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல் – கல்லாடம்:2 70/13
அன்னையின் போக்கிய அரும் பெரும் தவறு
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும் – கல்லாடம்:2 83/28,29
சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர் புலன் – கல்லாடம்:2 97/5

மேல்

தவறே (1)

குணம் குடி போய்வித்த ஆய் உளம் தவறே – கல்லாடம்:2 15/31

மேல்

தவிசு (1)

ஒலிவர ஓதிமம் எரி மலர் தவிசு இருந்து – கல்லாடம்:2 93/13

மேல்

தவிர் (1)

பகை தவிர் பாம்பும் நகை பெறும் எருக்கமும் – கல்லாடம்:2 58/32

மேல்

தவிர்தி (1)

வழுத்தலும் வருதலும் தவிர்தி
மொழி குறி கூடா செவ் வேலோயே – கல்லாடம்:2 5/32,33

மேல்

தவிர்மோ (1)

சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ
நெட்டு உகிர் கரும் கால் தோல் முலை பெரும் பேய் – கல்லாடம்:2 88/14,15

மேல்

தழங்கிய (1)

தந்திரி நூறு தழங்கிய முகத்த – கல்லாடம்:2 82/20

மேல்

தழங்கும் (1)

முழக்காது தழங்கும் மா முரசு ஆகி – கல்லாடம்:2 23/17

மேல்

தழல் (27)

உழல் மதில் சுட்ட தழல் நகை பெருமான் – கல்லாடம்:1 2/41
தழல் கண் தரக்கின் சரும ஆடையன் – கல்லாடம்:2 3/17
கறை அணல் புயங்கன் எரி தழல் விடத்தை – கல்லாடம்:2 6/16
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே – கல்லாடம்:2 6/44
திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறி – கல்லாடம்:2 7/29
அரும் தழல் சுரத்தில் ஒருவன் அன்பு எடுத்தே – கல்லாடம்:2 7/46
ஆயிரம் தழல் கரத்து இருள்_பகை மண்டிலத்து – கல்லாடம்:2 13/9
பாணிக்குள் பெய் செம் தழல் பரப்ப – கல்லாடம்:2 16/13
விடு தழல் உச்சம் படு கதிர் தாக்க – கல்லாடம்:2 17/47
வெள் உடல் பேழ் வாய் தழல் விழி மடங்கல் – கல்லாடம்:2 26/11
எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று – கல்லாடம்:2 27/13
மந்திர தழல் குழி தொட்டு வயிறு வருந்தி – கல்லாடம்:2 33/14
கரு முகிற்கு அணி நிற தழல் கண் பிறை எயிற்று – கல்லாடம்:2 37/9
தணியா கொடும் சுரம் தரும் தழல் தாவி – கல்லாடம்:2 40/8
தழல் விழி பேழ் வாய் தரக்கின் துளி முலை – கல்லாடம்:2 40/19
தழல் விழி மடங்கல் கொலை அரி குருளையை – கல்லாடம்:2 50/12
கரும் கடல் குடித்தலின் பெரும் தழல் கொழுந்தும் – கல்லாடம்:2 56/3
இரு நிலம் உருவிய ஒரு தழல் தூணத்து – கல்லாடம்:2 58/26
தழல் விழி பாந்தள் தான் இரை மாந்தியும் – கல்லாடம்:2 60/6
தழல் தலை பழுத்த பரல் முரம்பு அடுத்தனை – கல்லாடம்:2 69/14
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும் – கல்லாடம்:2 76/2
சயமகள் சீற்ற தழல் மனம் வைத்து – கல்லாடம்:2 76/5
தழல் உண கொடுக்க அதன் உணவிடையே – கல்லாடம்:2 79/6
தழல் வேல் குமரன் சால் பரங்குன்றம் – கல்லாடம்:2 84/6
மன்னி நின்று அடங்கா குடுமி அம் பெரும் தழல்
பசும் கடல் வளைந்து பருக கொதித்த – கல்லாடம்:2 86/15,16
பேழ் வாய் தழல் விழி தரக்கு அடித்து அவிந்த – கல்லாடம்:2 87/21
முனி தழல் செல்வம் முற்றி பழம் கல் – கல்லாடம்:2 95/26

மேல்

தழலுக்கு (1)

வாய் வலம் கொண்ட வயிற்று எழு தழலுக்கு
ஆற்றாது அலந்து காற்று என கொட்புற்று – கல்லாடம்:2 91/1,2

மேல்

தழலும் (1)

குடுமி அம் தழலும் அவண் இருள் குவையும் – கல்லாடம்:2 6/30

மேல்

தழீஇ (2)

பிள்ளையும் பெடையும் பறை வர தழீஇ
சுற்றமும் சூழ்ந்து குருகு கண்படுப்ப – கல்லாடம்:2 43/8,9
பறைவர தழீஇ பெற்று உவை-தம் கம்பலைக்கு – கல்லாடம்:2 74/14

மேல்

தழீஇனள் (1)

உள்ளமும் கண்ணும் நிலையுற தழீஇனள்
உவண_கொடியினன் உந்தி மலர் தோன்றி – கல்லாடம்:2 77/6,7

மேல்

தழும்பு (1)

கொடுமர தழும்பு திருமுடிக்கு அணிந்து – கல்லாடம்:2 48/5

மேல்

தழுவ (1)

பின்னும் தழுவ உன்னும் அவ் ஒருத்தி – கல்லாடம்:2 55/37

மேல்

தழுவி (1)

ஒழுக புக்கு தழுவி எடுத்தும் – கல்லாடம்:2 16/30

மேல்

தழை (17)

பசும் தழை பரப்பி கண மயில் ஆல – கல்லாடம்:2 14/17
மல்லுற தந்த ஈர்ம் தழை தானே – கல்லாடம்:2 18/41
வாய் சொரி மழை மத தழை செவி புழை கை – கல்லாடம்:2 32/13
சினை தழை விளைத்த பழுமரம் என்ன – கல்லாடம்:2 32/15
தழை குற மங்கையர் ஐவனம் துவைக்கும் – கல்லாடம்:2 42/5
மணமுடன் பொதுளிய வாடா மலர் தழை
ஒரு நீ விடுத்தனை யான் அவை கொடுத்தனன் – கல்லாடம்:2 48/15,16
அவ் வழி கூறின் அ தழை வந்து – கல்லாடம்:2 48/17
சந்தன பொங்கர் தழை சிறை மயிலும் – கல்லாடம்:2 50/23
தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே – கல்லாடம்:2 59/19
குரு வளர் மரகத பறை தழை பரப்பி – கல்லாடம்:2 71/5
உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன் – கல்லாடம்:2 71/10
பசும் தழை தோகையும் செம் சிறை சேவலும் – கல்லாடம்:2 73/4
அவர் கரும் கண் என குவளை தழை பூத்த – கல்லாடம்:2 74/10
சந்தன பொதும்பர் தழை சினை பொழிலே – கல்லாடம்:2 81/41
கையுறை சுமந்தும் கடி தழை தாங்கியும் – கல்லாடம்:2 85/6
கழை தோள் நெகிழ தழை உடல் குழைய – கல்லாடம்:2 87/11
தாது உடல் துதைந்த மென் தழை சிறை வண்டு இனம் – கல்லாடம்:2 95/19

மேல்

தழைக்க (1)

பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும் – கல்லாடம்:2 61/18

மேல்

தழைக்கும் (1)

உடல் உயிர் தழைக்கும் அருள் வரவு உணர்த்த – கல்லாடம்:2 84/15

மேல்

தழைத்த (3)

புண்ணியம் தழைத்த முன் ஓர் நாளில் – கல்லாடம்:2 8/10
இரு புறம் தழைத்த திரு நிழல் இருக்கும் – கல்லாடம்:2 56/11
பவளம் தழைத்த பத மலர் சுமந்த நம் – கல்லாடம்:2 91/6

மேல்

தழைத்தலின் (1)

தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் – கல்லாடம்:2 64/15

மேல்

தழைத்து (1)

கிடைப்பல் வல் யானே நும்மை தழைத்து எழு – கல்லாடம்:2 64/14

மேல்

தழைதலின் (1)

தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும் – கல்லாடம்:2 9/17

மேல்

தழைப்ப (1)

தனி கொடி காண எவ்விடத்து உயிர் தழைப்ப
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல் – கல்லாடம்:2 85/39,40

மேல்

தள்ளா (3)

சநந பீழையும் தள்ளா காமமும் – கல்லாடம்:1 2/60
தள்ளா மொய்ம்பின் உள் உடைந்து ஒருகால் – கல்லாடம்:2 25/12
தள்ளா விதியின் செல்குநள் என்று – கல்லாடம்:2 40/18

மேல்

தள்ளி (4)

செருப்பு உடை தாளால் விருப்புடன் தள்ளி
வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த – கல்லாடம்:2 14/28,29
கடும் கான் தள்ளி தடைதரு நெஞ்சம் – கல்லாடம்:2 31/5
சொரி அலர் தள்ளி துணர் பொலம் கடுக்கை – கல்லாடம்:2 84/17
திரை எதிர் தள்ளி மலர் துகில் கண் புதைத்து – கல்லாடம்:2 87/12

மேல்

தள்ளிய (1)

நீட்டி வலி தள்ளிய நெடும் கயிற்று ஊசலும் – கல்லாடம்:1 1/35

மேல்

தளர் (1)

விளரி உள் விளைக்கும் தளர் நடை சிறுவனும் – கல்லாடம்:2 88/10

மேல்

தளர (1)

உயிரின் தளர இரங்கியும் உணங்கியும் – கல்லாடம்:2 85/7

மேல்

தளவு (1)

களவு அலர் தூற்ற தளவு கொடி நடுங்க – கல்லாடம்:2 20/4

மேல்

தளிர் (3)

கிடந்து எரி வடவையின் தளிர் முகம் ஈன்று – கல்லாடம்:1 2/7
வெண் நகை கரும் குழல் செம் தளிர் சீறடி – கல்லாடம்:2 26/3
கொய் தளிர் அன்ன மேனி – கல்லாடம்:2 94/40

மேல்

தளிர்க்கும் (1)

கண்டு உளம் தளிர்க்கும் கருணை அம் செல்வி – கல்லாடம்:2 79/10

மேல்

தளிர்த்து (2)

எரி தளிர்த்து அன்ன வேணியில் குழவி – கல்லாடம்:2 85/33
தளிர்த்து சிவந்த தண்டை அம் துணை தாள் – கல்லாடம்:2 92/5

மேல்

தளை (2)

தளை கரை கடந்த காம கடல் உள் – கல்லாடம்:2 5/3
எழில் மதி விரித்த வெண் தளை இதழ் தாமரை – கல்லாடம்:2 78/4

மேல்

தளையது (1)

தாதையும் இரப்ப தளையது விடுத்தோய் – கல்லாடம்:1 2/46

மேல்

தளையொடு (1)

தளையொடு நிறை நீர் விடுவன போல – கல்லாடம்:2 20/34

மேல்

தளைவிட (1)

முளரி அம் கோயில் தளைவிட வந்து – கல்லாடம்:2 50/31

மேல்

தறிந்த (1)

முளியம் தறிந்த கணைகொள் வாய் திரிகல் – கல்லாடம்:2 24/13

மேல்

தறியினை (1)

உயிரொடும் வளர்ந்த பெரு நாண் தறியினை
வெற்பன் காதல் கால் உலை வேலையில் – கல்லாடம்:2 36/8,9

மேல்

தறுகண் (1)

நதி கடம் தறுகண் புகர் கொலை மறுத்த – கல்லாடம்:2 29/9

மேல்

தன் (17)

தன் பெயர் புணர்த்தி கற்பினொடு கொடுத்த – கல்லாடம்:1 2/14
தன் படு துயரமும் அடைவு கெட்டு இறத்தலும் – கல்லாடம்:1 2/61
தன் கண் போலும் என் கண் நோக்கி – கல்லாடம்:2 2/20
பொன் பெயர் உடையோன் தன் பெயர் கடுப்ப – கல்லாடம்:2 5/15
சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன்
கவைஇய கற்பினை காட்டுழி இதுவே – கல்லாடம்:2 6/21,22
பின்னல் விட்டு அமைத்த தன் தலை மலர் இணைஇ – கல்லாடம்:2 14/31
தன் உடல் அன்றி பிறிது உண் கனை இருள் – கல்லாடம்:2 32/1
தன் பழம் கூடம் தனி நிலை அன்றி – கல்லாடம்:2 61/22
தன் நிலை கடவாது அவன் பரி தேரே – கல்லாடம்:2 62/32
தன் உரு ஒன்றில் அருள் உரு இருத்திய – கல்லாடம்:2 72/13
மற்ற தன் சேக்கையுள் வதிபெறும் செம் கால் – கல்லாடம்:2 74/12
அவிகார குறி ஆகிய தன் குணம் – கல்லாடம்:2 86/29
மு தொழிலில் தன் முதல் தொழில் ஆக்கி – கல்லாடம்:2 87/33
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு – கல்லாடம்:2 87/39
தன் உயிர்க்கு இன்னல் தவறில ஆஆ – கல்லாடம்:2 97/23
தரு செளகந்தி தன் நிறம் ஆறும் – கல்லாடம்:2 98/37
புதவு தொட்டு என தன் புயல் முதிர் கரத்தினை – கல்லாடம்:2 100/5

மேல்

தன்மை (1)

தலை நடுக்குற்ற தன்மை போல – கல்லாடம்:2 55/32

மேல்

தன்னால் (1)

தன்னால் படைத்த பொன் அணி அண்டம் – கல்லாடம்:2 16/14

மேல்

தன்னுடை (2)

வெள் உடல் ஓதிமம் தன்னுடை பெடை என – கல்லாடம்:2 74/13
மண்ணுளர் வணங்கும் தன்னுடை தகைமையும் – கல்லாடம்:2 88/6

மேல்

தன்னுழை (1)

தன்னுழை பல உயிர் தனித்தனி படைத்து – கல்லாடம்:2 9/1

மேல்

தன்னுள் (1)

தன்னுள் தோன்றி தான் அதில் தோன்றா – கல்லாடம்:2 90/5

மேல்

தன்னை (2)

தன்னை நின்று அளித்த என்னையும் ஒருவுக – கல்லாடம்:2 7/4
தன்னை நின்று உணர்ந்து தாமும் ஒன்று இன்றி – கல்லாடம்:2 13/25

மேல்

தனது (3)

ஆக தனது பேர் அருள் மேனியில் – கல்லாடம்:2 64/20
தனது முன் புன்மொழி நீள தந்தும் – கல்லாடம்:2 89/19
வழி நடம் தனது மரக்கால் அன்றி – கல்லாடம்:2 99/2

மேல்

தனம் (1)

காந்தள் அம் கடுக்கை கனல் தனம் மலர – கல்லாடம்:2 94/2

மேல்

தனமும் (1)

தாமரை நிதியும் வால் வளை தனமும்
இல்லம் புகுதரில் இரும் கதவு அடைத்தும் – கல்லாடம்:2 66/5,6

மேல்

தனி (21)

மூவா தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் – கல்லாடம்:2 7/40
தந்த எம் குரிசில் தனி வந்து எமது – கல்லாடம்:2 13/18
போன நம் தனி நமர் புள் இயல் மான் தேர் – கல்லாடம்:2 14/21
தனி நெடு விசும்பு திருவுடல் ஆக – கல்லாடம்:2 20/26
மூவா திருப்பதத்து ஒரு தனி பெருமான் – கல்லாடம்:2 27/15
தென்கீழ்த்திசையோன் ஆக்கிய தனி முதல் – கல்லாடம்:2 31/10
குருகு அணி செறித்த தனி முதல் நாயகன் – கல்லாடம்:2 45/22
ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல் – கல்லாடம்:2 46/10
ஒரு தனி அடியாற்கு உதவுதல் வேண்டி – கல்லாடம்:2 49/7
உலகு பெற்றெடுத்த ஒரு தனி செல்வி – கல்லாடம்:2 58/29
தன் பழம் கூடம் தனி நிலை அன்றி – கல்லாடம்:2 61/22
தாயவர் மயங்கும் தனி துயர் நிறுத்தி – கல்லாடம்:2 64/12
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன் – கல்லாடம்:2 69/33
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை இன்று – கல்லாடம்:2 74/3
தனி கொடி காண எவ்விடத்து உயிர் தழைப்ப – கல்லாடம்:2 85/39
தனி நடை நிறையும் ஒரு தனி கோலத்து – கல்லாடம்:2 90/6
தனி நடை நிறையும் ஒரு தனி கோலத்து – கல்லாடம்:2 90/6
தனி பார்த்து உழலும் கிராதரும் பலரே – கல்லாடம்:2 96/8
சச்ச புடத்தில் தனி எழு மாத்திரை – கல்லாடம்:2 99/11
முது நகர் கூடலுள் மூவா தனி முதல் – கல்லாடம்:2 100/10
தனி முகம் மலர்ந்து தம் இசை பாட – கல்லாடம்:2 100/27

மேல்

தனித்த (1)

கயிலை தென்-பால் கானகம் தனித்த
தேவர் நெஞ்சு உடைக்கும் தாமரை ஏவின் – கல்லாடம்:2 31/6,7

மேல்

தனித்தனி (2)

தன்னுழை பல உயிர் தனித்தனி படைத்து – கல்லாடம்:2 9/1
தனித்தனி ஒளித்து தணக்கினும் அரிது என – கல்லாடம்:2 77/19

மேல்