பொ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொகுட்டு 1
பொங்கர் 5
பொங்கரும் 1
பொங்கருள் 1
பொங்கி 1
பொங்கு 1
பொங்கும் 1
பொடி 7
பொடித்த 3
பொடித்தது 1
பொடித்தலின் 1
பொடித்தவர்க்கு 1
பொடித்தன 1
பொடித்து 1
பொடியாகு 1
பொதி 2
பொதிந்த 2
பொதிந்து 1
பொதிய 3
பொதியத்து 1
பொதியமும் 2
பொது 4
பொதும்பர் 3
பொதும்பரில் 2
பொதுவகம் 1
பொதுவில் 2
பொதுவுடன் 2
பொதுளி 2
பொதுளிய 5
பொம்மல் 1
பொய் 8
பொய்கை-வாய் 1
பொய்கையும் 1
பொய்த்தற்கு 1
பொய்தல் 1
பொய்யினர் 2
பொய்யினர்க்கு 1
பொய்யினள் 1
பொய்யினை 1
பொரி 6
பொரிய 1
பொரியின் 1
பொரியும் 1
பொரிவு 1
பொரு 6
பொருட்கு 2
பொருட்கோ 1
பொருத்தம் 1
பொருத்தமும் 1
பொருத்தலும் 2
பொருத 1
பொருது 2
பொருந்தா 1
பொருந்தி 2
பொருந்திய 1
பொருந்தியது 1
பொருந்தியும் 2
பொருந்துக 1
பொருந்துபு 1
பொருநை 1
பொருப்ப 1
பொருப்பகத்து 1
பொருப்பன் 1
பொருப்பின் 1
பொருப்பினும் 1
பொருப்பு 5
பொருப்பும் 5
பொரும் 1
பொருவ 1
பொருள் 20
பொருளினர் 1
பொருளுடன் 1
பொருளும் 4
பொருளொடு 1
பொலம் 4
பொலன் 2
பொலி 5
பொலிகுவை 1
பொலிந்த 4
பொலிந்து 2
பொலிந்தும் 1
பொலிந்தே 2
பொலிந்தோய் 2
பொலிய 1
பொலிவு 1
பொழி 4
பொழிந்த 1
பொழியும் 1
பொழில் 8
பொழிலில் 1
பொழிலே 2
பொழுது 1
பொள்ளென 1
பொற்பு 1
பொற்றை 1
பொறாது 1
பொறாதே 1
பொறி 4
பொறுத்த 1
பொறுத்து 3
பொறை 2
பொறையும் 2
பொறையே 1
பொறையை 1
பொன் 45
பொன்_கொடி 1
பொன்_தொடி 1
பொன்மலை 5
பொன்றிட 1
பொன்னம் 2
பொன்னும் 3
பொன்னுலகு 2
பொன்னுறு 1
பொன்னொடும் 1

பொகுட்டு (1)

பொன்னம் பொகுட்டு தாமரை குவித்து – கல்லாடம்:2 49/3

மேல்

பொங்கர் (5)

பொங்கர் கிடந்த சூல் கார் குளிறலும் – கல்லாடம்:2 39/11
கடைக்கால் மடியும் பொங்கர் பக்கமும் – கல்லாடம்:2 41/32
ஆசையின் செறிந்த பொங்கர் குல தாய் – கல்லாடம்:2 46/2
சந்தன பொங்கர் தழை சிறை மயிலும் – கல்லாடம்:2 50/23
நெடு வரை பொங்கர் புனம் எரி காழ் அகில் – கல்லாடம்:2 59/1

மேல்

பொங்கரும் (1)

பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்க – கல்லாடம்:2 43/13

மேல்

பொங்கருள் (1)

பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக – கல்லாடம்:2 69/3

மேல்

பொங்கி (1)

எங்கும் சிதறி பொங்கி எழு வனப்பும் – கல்லாடம்:2 21/5

மேல்

பொங்கு (1)

கங்கையில் படிந்த பொங்கு தவத்தானும் – கல்லாடம்:2 19/31

மேல்

பொங்கும் (1)

மு கண் மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த – கல்லாடம்:1 1/6

மேல்

பொடி (7)

குழை பொடி கூவையின் சிறை சிறை தீந்த – கல்லாடம்:2 7/20
வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை – கல்லாடம்:2 33/27
நிலவு பகல் கான்ற புண்ணிய அருள் பொடி
இருவினை துரந்த திருவுடல் மூழ்கி – கல்லாடம்:2 40/1,2
முடை தலை எரி பொடி உடைமையின் பாலையும் – கல்லாடம்:2 64/17
எரி தெறற்கு அரிய பொடி பொறுத்து இயங்கினை – கல்லாடம்:2 69/1
ஏன கோடு வெண்_பொடி புறத்து ஒளிர – கல்லாடம்:2 85/37
சுடு பொடி காப்பு உடல் துளங்க சுரி குரல் – கல்லாடம்:2 88/20

மேல்

பொடித்த (3)

எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 1/6
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த
குறுவெயிர்ப்பு ஒழுக்கு என பிறை அமுது எடுக்க – கல்லாடம்:2 16/4,5
அமுதம் பொடித்த முழுமதி என்ன – கல்லாடம்:2 45/12

மேல்

பொடித்தது (1)

உடு என கொப்புள் உடல் நிறை பொடித்தது
ஈங்கு இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும் – கல்லாடம்:2 71/27,28

மேல்

பொடித்தலின் (1)

எழு மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும் – கல்லாடம்:2 56/2

மேல்

பொடித்தவர்க்கு (1)

எழு மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி – கல்லாடம்:2 86/2

மேல்

பொடித்தன (1)

வடுத்து எழு கொலை முலை பொடித்தன அன்றே – கல்லாடம்:2 5/30

மேல்

பொடித்து (1)

பொடித்து அரும்பாத சின் முலை கொடி மடந்தையள் – கல்லாடம்:2 7/1

மேல்

பொடியாகு (1)

கை வளர் கொழுந்து மெய் பொடியாகு என – கல்லாடம்:2 6/20

மேல்

பொதி (2)

பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில் – கல்லாடம்:2 17/28
காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்தி – கல்லாடம்:2 17/29

மேல்

பொதிந்த (2)

ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல் – கல்லாடம்:2 46/10
செம்பு உடல் பொதிந்த தெய்வ பொதியமும் – கல்லாடம்:2 65/16

மேல்

பொதிந்து (1)

கரும் புகை வானம் கையுற பொதிந்து
தரு நிழல் தேவர்-தம் உடல் பனிப்ப – கல்லாடம்:2 59/2,3

மேல்

பொதிய (3)

பொதிய பொருப்பன் மதிய கருத்தினை – கல்லாடம்:2 1/10
கூடல் பெருமான் பொதிய பொருப்பகத்து – கல்லாடம்:2 4/9
பொதிய பொருப்பும் நெடு முதுகு வருந்தி – கல்லாடம்:2 17/18

மேல்

பொதியத்து (1)

கூடம் சூழ்ந்த நெடு முடி பொதியத்து
கண் நுழையாது காட்சிகொள தோற்றிய – கல்லாடம்:2 28/12,13

மேல்

பொதியமும் (2)

பொதியமும் களிப்ப விரிதரு தென்றலும் – கல்லாடம்:2 24/21
செம்பு உடல் பொதிந்த தெய்வ பொதியமும்
உவட்டாது அணையாது உணர்வு எனும் பசியெடுத்து – கல்லாடம்:2 65/16,17

மேல்

பொது (4)

ஊருணி ஒத்த பொது வாய் தம்பலம் – கல்லாடம்:2 56/17
வன்மீன் நெடும் கயல் பொது வினையகத்து – கல்லாடம்:2 69/18
ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்து – கல்லாடம்:2 82/5
பொரு புனல் ஊரனை பொது என அமைத்த – கல்லாடம்:2 91/7

மேல்

பொதும்பர் (3)

புன்னை அம் பொதும்பர் குழை முகம் குழை-முகம் – கல்லாடம்:2 72/19
ஆர பொதும்பர் அடை குளிர் சாரல் – கல்லாடம்:2 81/29
சந்தன பொதும்பர் தழை சினை பொழிலே – கல்லாடம்:2 81/41

மேல்

பொதும்பரில் (2)

புன்னை அம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும் – கல்லாடம்:2 21/16
பெரும் பகலிடையே பொதும்பரில் பிரிந்த – கல்லாடம்:2 71/17

மேல்

பொதுவகம் (1)

பொலன் மிளிர் மன்ற பொதுவகம் நாடி – கல்லாடம்:2 85/38

மேல்

பொதுவில் (2)

முனிவர் ஏமுற வெள்ளி அம் பொதுவில்
மனமும் கண்ணும் கனிய குனிக்கும் – கல்லாடம்:2 18/7,8
வெள்ளியம் பொதுவில் கள் அவிழ் குழலொடும் – கல்லாடம்:2 26/27

மேல்

பொதுவுடன் (2)

பூழி அம் போனகம் பொதுவுடன் உண்டும் – கல்லாடம்:2 85/4
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி – கல்லாடம்:2 100/20

மேல்

பொதுளி (2)

கல் செறி பாசியின் சினை குழை பொதுளி
அகல் திரை பரப்பின் சடை அசைந்து அலையாது – கல்லாடம்:1 2/9,10
எண் திசை சாகை கொண்டு இருள் மனம் பொதுளி
கொடும் கொலை வடுத்து கடும் பழி சடை அலைந்து – கல்லாடம்:2 83/2,3

மேல்

பொதுளிய (5)

பொதுளிய தருவினுள் புகுந்து இமையாது – கல்லாடம்:2 40/11
விரி சினை பொதுளிய பாசிலை ஒடுக்கி – கல்லாடம்:2 43/12
மணமுடன் பொதுளிய வாடா மலர் தழை – கல்லாடம்:2 48/15
பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே – கல்லாடம்:2 59/9
கொழும் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய
நெடு மரத்து இளம் கா நிலைத்தலானும் – கல்லாடம்:2 81/4,5

மேல்

பொம்மல் (1)

பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும்-கொல் என – கல்லாடம்:2 88/13

மேல்

பொய் (8)

தெய்வம் விடுத்து பொய் கொள் சிந்தையினும் – கல்லாடம்:2 52/19
பொய் பல புகன்றும் மெய் ஒழித்து இன்பம் – கல்லாடம்:2 56/15
புலனொடு தியங்கும் பொய் உளம் கடந்த – கல்லாடம்:2 62/27
பொய் வரும் ஊரன் புகல் அரும் இல் புக – கல்லாடம்:2 79/16
நாணா நவ பொய் பேணி உள் புணர்த்தி – கல்லாடம்:2 80/31
இரு மன பொய் உளத்து ஒரு மகள்-தன்னை – கல்லாடம்:2 87/4
கட்டிய பொய் பரப்பு அனைத்தும் நிற்கு உறுத்தின் – கல்லாடம்:2 89/21
பொய் வழி கதியகம் மெய் என புகாத – கல்லாடம்:2 92/3

மேல்

பொய்கை-வாய் (1)

புள் குலம் பொய்கை-வாய் தாள்கொள – கல்லாடம்:2 38/4

மேல்

பொய்கையும் (1)

பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து – கல்லாடம்:2 26/23

மேல்

பொய்த்தற்கு (1)

நீளவும் பொய்த்தற்கு அவர் மனம் கரியே – கல்லாடம்:2 85/43

மேல்

பொய்தல் (1)

கைதை அம் கரை சேர் பொய்தல் பாவையோடு – கல்லாடம்:2 9/21

மேல்

பொய்யினர் (2)

மெய்யுற தணந்த பொய்யினர் இன்று – கல்லாடம்:2 21/26
பொய்யினர் செய்யும் புல்லம் போல – கல்லாடம்:2 37/22

மேல்

பொய்யினர்க்கு (1)

தெய்வம் கருதா பொய்யினர்க்கு உரைத்த – கல்லாடம்:2 26/5

மேல்

பொய்யினள் (1)

பொய்யினள் அன்றி மெய்யினை நீயும் – கல்லாடம்:2 86/6

மேல்

பொய்யினை (1)

மெய்யினை பரப்பி பொய்யினை காட்டி – கல்லாடம்:2 33/7

மேல்

பொரி (6)

சிவந்த வாய்-தொறும் வெண் பொரி சிதற – கல்லாடம்:2 18/23
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பி – கல்லாடம்:2 47/4
பொரி என தாரகை கணன் உடல் குத்தி – கல்லாடம்:2 67/20
மேல் கடல் கவிழ் முக பொரி உடல் மாவும் – கல்லாடம்:2 70/2
உலர் கவட்டு ஓமை பொரி சினை கூகையும் – கல்லாடம்:2 79/1
பொரி குறி மட மான் சுழி தலை கவிழ – கல்லாடம்:2 94/11

மேல்

பொரிய (1)

கரும் கடல் பொரிய ஒருங்கு வேல் விடுத்த – கல்லாடம்:2 75/16

மேல்

பொரியின் (1)

பொரியின் கொறிப்ப புரிந்த பொருள் நாடி – கல்லாடம்:1 2/30

மேல்

பொரியும் (1)

பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின் – கல்லாடம்:2 84/11

மேல்

பொரிவு (1)

எச்சம் பொரிவு புகைதல் புடாயம் – கல்லாடம்:2 98/24

மேல்

பொரு (6)

பொருத்தலும் பிரித்தலும் பொரு பகை காட்டலும் – கல்லாடம்:2 3/2
புக்க தேவர்கள் பொரு கடல் படையினை – கல்லாடம்:2 4/7
இரு திரை எடுக்க பொரு திரை எடுத்தும் – கல்லாடம்:2 9/22
கவையா நெஞ்சமொடு பொரு வினை சென்றோர் – கல்லாடம்:2 46/16
திருநடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை – கல்லாடம்:2 90/13
பொரு புனல் ஊரனை பொது என அமைத்த – கல்லாடம்:2 91/7

மேல்

பொருட்கு (2)

இறையோன் பொருட்கு பரணர் முதல் கேட்ப – கல்லாடம்:1 2/53
வேந்து விடைக்கு அணங்கியும் விளை பொருட்கு உருகியும் – கல்லாடம்:2 79/25

மேல்

பொருட்கோ (1)

புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ ஆழி – கல்லாடம்:2 31/14

மேல்

பொருத்தம் (1)

பொருத்தம் காண்டி வண்டு ஆரும் – கல்லாடம்:2 50/34

மேல்

பொருத்தமும் (1)

விரித்து கூறி பொருத்தமும் காண்டி – கல்லாடம்:2 25/43

மேல்

பொருத்தலும் (2)

பொருத்தலும் பிரித்தலும் பொரு பகை காட்டலும் – கல்லாடம்:2 3/2
உட்பகை அமைத்தலும் உணர்ந்து சொல் பொருத்தலும்
ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும் – கல்லாடம்:2 3/3,4

மேல்

பொருத (1)

மண் திரு வேட்டு பஞ்சவன் பொருத
கிள்ளியும் கிளையும் கிளர் படை நான்கும் – கல்லாடம்:2 80/11,12

மேல்

பொருது (2)

மிடை உடு உதிர செம் களம் பொருது
ஞாட்பினுள் மறைந்து நடுவுறு வரத்தால் – கல்லாடம்:1 2/3,4
போர் வலி அவுணர் புக பொருது உடற்றிய – கல்லாடம்:2 88/30

மேல்

பொருந்தா (1)

பூம் புனல் ஊரனை பொருந்தா நெடும் கண் – கல்லாடம்:2 83/27

மேல்

பொருந்தி (2)

அரும் புது விருந்து என பொருந்தி மற்று அவர் தரும் – கல்லாடம்:2 12/4
போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி
உந்தி தோற்றம் ஓசை நின்று ஒடுங்க – கல்லாடம்:2 43/27,28

மேல்

பொருந்திய (1)

திரு பெரு வதுவை பொருந்திய அ நாள் – கல்லாடம்:2 10/18

மேல்

பொருந்தியது (1)

பொருந்தியது எப்படி உள்ளம் – கல்லாடம்:2 7/45

மேல்

பொருந்தியும் (2)

வெம்மையொடு கூடியும் தண்மை பொருந்தியும்
உலக இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் – கல்லாடம்:2 23/10,11
பொருள் கான் தடைந்தும் பாசறை பொருந்தியும்
போக்கு அரும் கடும் சுரம் போக முன் இறந்தும் – கல்லாடம்:2 79/22,23

மேல்

பொருந்துக (1)

பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக
கரும் கடத்து எறிந்த கொடும் புலிக்கு ஒதுங்கினை – கல்லாடம்:2 69/3,4

மேல்

பொருந்துபு (1)

பெரும் துயில் இன்பம் பொருந்துபு நடுநாள் – கல்லாடம்:2 68/9

மேல்

பொருநை (1)

பொருநை அம் கன்னிக்கு அணி அணி பூட்டும் – கல்லாடம்:2 65/15

மேல்

பொருப்ப (1)

பொன்னம் பொருப்ப நின் உளத்து இயையின் – கல்லாடம்:2 59/5

மேல்

பொருப்பகத்து (1)

கூடல் பெருமான் பொதிய பொருப்பகத்து
அருவி அம் சாரல் இருவி அம் புனத்தினும் – கல்லாடம்:2 4/9,10

மேல்

பொருப்பன் (1)

பொதிய பொருப்பன் மதிய கருத்தினை – கல்லாடம்:2 1/10

மேல்

பொருப்பின் (1)

பளிங்க பொருப்பின் திடர் கொள் மூதூர் – கல்லாடம்:2 61/5

மேல்

பொருப்பினும் (1)

தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும்
கொண்டல் வந்து உலவும் நீல குவட்டினும் – கல்லாடம்:2 52/11,12

மேல்

பொருப்பு (5)

சலியா பராரை தமனிய பொருப்பு எனும் – கல்லாடம்:2 14/1
பொருப்பு மலி தோளினும் நெருப்பு உமிழ் வேலினும் – கல்லாடம்:2 20/1
பொருப்பு வளன் வேண்டி மழை கண்திறப்ப – கல்லாடம்:2 24/1
புள் குலம் சூழ்ந்த பொருப்பு உடை குறவர்-தம் – கல்லாடம்:2 51/11
கலம் சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என – கல்லாடம்:2 72/22

மேல்

பொருப்பும் (5)

செம் மணி சிலம்பும் மரகத பொருப்பும்
குடுமி அம் தழலும் அவண் இருள் குவையும் – கல்லாடம்:2 6/29,30
வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும்
நெடும் கடல் கிடங்கும் ஒருங்கு உயிர் பருகிய – கல்லாடம்:2 6/38,39
பொதிய பொருப்பும் நெடு முதுகு வருந்தி – கல்லாடம்:2 17/18
படர் மலை ஏழும் குருகு அமர் பொருப்பும்
மா என கவிழ்ந்த மறி கடல் ஒன்றும் – கல்லாடம்:2 61/7,8
புள் பெயர் குன்றமும் எழு வகை பொருப்பும்
மேல் கடல் கவிழ் முக பொரி உடல் மாவும் – கல்லாடம்:2 70/1,2

மேல்

பொரும் (1)

வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும் – கல்லாடம்:2 27/10

மேல்

பொருவ (1)

நீர் வடு பொருவ நிறுத்திட படரினும் – கல்லாடம்:2 61/20

மேல்

பொருள் (20)

பொரியின் கொறிப்ப புரிந்த பொருள் நாடி – கல்லாடம்:1 2/30
உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க – கல்லாடம்:2 3/10
உலகியல் கூறி பொருள் இது என்ற – கல்லாடம்:2 13/21
தோன்றி நில்லா நிலை பொருள் செய்ய – கல்லாடம்:2 20/20
ஈயா மாந்தர் பொருள் தேய்ந்து என்ன – கல்லாடம்:2 25/44
நெடும் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை – கல்லாடம்:2 29/5
பொருள் செயல் அருத்தியின் எண் வழி தடைந்து – கல்லாடம்:2 31/1
பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே – கல்லாடம்:2 31/16
அருள் திரு எழுத்தும் பொருள் திரு மறையும் – கல்லாடம்:2 38/19
அறிவும் பொறையும் பொருள் அறி கல்வியும் – கல்லாடம்:2 42/10
அ புலத்து உயிர்கொடுத்து அருள் பொருள் கொண்ட பின் – கல்லாடம்:2 44/18
புனை பெரும் கவியுள் தரு பொருள் என்ன – கல்லாடம்:2 45/2
நெடும் பொருள் ஈட்ட நின் பிரிந்து இறந்து – கல்லாடம்:2 53/3
அளகைக்கு இறையும் அரும் பொருள் ஈட்டமும் – கல்லாடம்:2 58/11
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன் – கல்லாடம்:2 66/13
அரும் பொருள் செல்வி எனும் திருமகட்கு – கல்லாடம்:2 73/15
பொருள் கான் தடைந்தும் பாசறை பொருந்தியும் – கல்லாடம்:2 79/22
நிறை பொருள் அழுந்தல் அருள் இன கூட்டம் – கல்லாடம்:2 86/33
இருள் அறு புலனும் மெய் பொருள் உறும் கல்வியும் – கல்லாடம்:2 88/7
இனையவை விரித்து பல பொருள் கூறும் – கல்லாடம்:2 98/10

மேல்

பொருளினர் (1)

கிளைஞர்கள் நச்சா பொருளினர் போல – கல்லாடம்:2 68/18

மேல்

பொருளுடன் (1)

புல்லர் வாய் சூள் என பொருளுடன் அழியும் – கல்லாடம்:2 80/3

மேல்

பொருளும் (4)

அருளும் பொருளும் ஆகி – கல்லாடம்:2 29/30
செந்தமிழ் பாடலும் தேக்கிய பொருளும்
பாலும் சுவையும் பழமும் இரதமும் – கல்லாடம்:2 58/3,4
கருத்து உறை பொருளும் விதிப்பட நினைந்து – கல்லாடம்:2 63/17
நனி நிறை செல்வ நாடும் நல் பொருளும்
எதிர்பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும் – கல்லாடம்:2 66/3,4

மேல்

பொருளொடு (1)

புவனம் காண பொருளொடு பொலிந்தோய் – கல்லாடம்:1 2/25

மேல்

பொலம் (4)

ஓடா வென்றி பொலம் பூண் குரிசில் – கல்லாடம்:2 2/16
சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலம் தார் – கல்லாடம்:2 14/5
சொரி அலர் தள்ளி துணர் பொலம் கடுக்கை – கல்லாடம்:2 84/17
பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை அருள் தரும் – கல்லாடம்:2 86/7

மேல்

பொலன் (2)

பொலன் மணி விரித்த உடை மணி இழுக்கியும் – கல்லாடம்:2 56/23
பொலன் மிளிர் மன்ற பொதுவகம் நாடி – கல்லாடம்:2 85/38

மேல்

பொலி (5)

புண்ணிய நீறு என பொலி கதிர் காற்றியும் – கல்லாடம்:2 13/6
புண்ணிய குன்றம் புடை பொலி கூடல் – கல்லாடம்:2 61/12
பொன் அணி மாடம் பொலி நகர் கூடல் – கல்லாடம்:2 78/24
இரு விழி பொலி அ திரு நகர்ப்புறத்து – கல்லாடம்:2 93/7
மின் பொலி வேலோய் அன்பினர்க்கு அருளும் – கல்லாடம்:2 96/12

மேல்

பொலிகுவை (1)

பொன் கொடி தேர் மிசை பொலிகுவை அன்றே – கல்லாடம்:2 51/22

மேல்

பொலிந்த (4)

பேர் அருள் குன்றம் ஒரு-பால் பொலிந்த
அற பெரும் கூடல் பிறை சடை பெருமான் – கல்லாடம்:2 48/12,13
நெட்டு இலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில் – கல்லாடம்:2 54/23
கொலைஞர் பொலிந்த கொடி தேர்க்கு அணங்கினை – கல்லாடம்:2 69/7
ஒரு பால் பொலிந்த உயர் நகர் கூடல் – கல்லாடம்:2 79/14

மேல்

பொலிந்து (2)

பொள்ளென வானத்து அசனியின் பொலிந்து
பூதம் ஐந்து உடையும் கால கடையினும் – கல்லாடம்:2 71/8,9
தென் திசை கோமகன் பகடு பொலிந்து அன்ன – கல்லாடம்:2 96/3

மேல்

பொலிந்தும் (1)

கொடுமரம் பற்றி நெட்டு இதண் பொலிந்தும்
தினை குரல் அறையும் கிளி கணம் கடிந்தும் – கல்லாடம்:2 22/38,39

மேல்

பொலிந்தே (2)

பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே – கல்லாடம்:2 14/48
செறிக இன்று அம்ம திருவொடும் பொலிந்தே – கல்லாடம்:2 64/34

மேல்

பொலிந்தோய் (2)

புவனம் காண பொருளொடு பொலிந்தோய்
போழ்பட கிடந்த ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/25,26
நின் தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய்
மணிக்கால் அறிஞர் பெரும் குடி தோன்றி – கல்லாடம்:1 2/51,52

மேல்

பொலிய (1)

போற்றுறு திருவம் நால் திசை பொலிய
மரகத தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 14/8,9

மேல்

பொலிவு (1)

பொன்மலை கண்ட பொலிவு போல – கல்லாடம்:2 50/13

மேல்

பொழி (4)

அருள் பொழி கடைக்கண் தாக்கி – கல்லாடம்:1 1/39
பொழி மத கறையடி அழிதர கடந்து – கல்லாடம்:2 62/22
மது பொழி முளரியின் மாழ்கின என்றால் – கல்லாடம்:2 79/18
பொழி மது புது மலர் போக்கு உடை சுரும்பே – கல்லாடம்:2 81/39

மேல்

பொழிந்த (1)

அன்பு மக பிழைத்து கல் அறை பொழிந்த
வறள் பால் இன்ன எம்முழை உள அயின்று – கல்லாடம்:2 96/21,22

மேல்

பொழியும் (1)

கருவி வானம் அடிக்கடி பொழியும்
கூடம் சூழ்ந்த நெடு முடி பொதியத்து – கல்லாடம்:2 28/11,12

மேல்

பொழில் (8)

நெருக்கு பொழில் புக்கும் நெடு மலை கூயும் – கல்லாடம்:2 28/27
நெருக்கு பொழில் கூடல் அன்ன செம் மகளிர் – கல்லாடம்:2 33/25
நாவலம் தண் பொழில் இன்புடன் துயில – கல்லாடம்:2 43/4
பொழில் நிறை கூடல் புதுமதி சடையோன் – கல்லாடம்:2 62/29
கவலையும் கால் குறி கண்டு பொழில் துள்ளும் – கல்லாடம்:2 83/18
தெரிந்து அலர் கொய்தும் பொழில் குறி வினவியும் – கல்லாடம்:2 85/15
இல் பொழில் கிடைக்குமளவும் நின்று உலைந்தும் – கல்லாடம்:2 85/18
துணை கரம் பிடித்து என தோற்றிடும் பொழில் சூழ் – கல்லாடம்:2 97/16

மேல்

பொழிலில் (1)

கடி மலர் பொழிலில் சிறிது கண்படுத்து – கல்லாடம்:2 17/31

மேல்

பொழிலே (2)

காவல் அடைகிடக்கும் கைதை அம் பொழிலே
வெம்மையொடு கூடியும் தண்மை பொருந்தியும் – கல்லாடம்:2 23/9,10
சந்தன பொதும்பர் தழை சினை பொழிலே
கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய – கல்லாடம்:2 81/41,42

மேல்

பொழுது (1)

பொழுது கண் மறைந்த தீ வாய் செக்கர் – கல்லாடம்:2 43/20

மேல்

பொள்ளென (1)

பொள்ளென வானத்து அசனியின் பொலிந்து – கல்லாடம்:2 71/8

மேல்

பொற்பு (1)

பத்துடை_நூறு பொற்பு அமர் பரப்பும் – கல்லாடம்:2 61/2

மேல்

பொற்றை (1)

நிறை கிடை பொற்றை வரை கடந்து இறந்தால் – கல்லாடம்:2 27/12

மேல்

பொறாது (1)

நிணம் உயிர் உண்ட புலவு பொறாது
தலை உடல் அசைத்து சாணை வாய் துடைத்து – கல்லாடம்:2 6/1,2

மேல்

பொறாதே (1)

உய்ய கூறில் ஓர் நெஞ்சிடம் பொறாதே – கல்லாடம்:2 16/41

மேல்

பொறி (4)

எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று – கல்லாடம்:2 27/13
கரும் கவை தீ நா பெரும் பொறி பகு வாய் – கல்லாடம்:2 60/5
பொறி உடல் உழையே எறி புன மணியே – கல்லாடம்:2 81/35
பொறி விழி பாந்தள் புற்று அளை வதிய – கல்லாடம்:2 94/8

மேல்

பொறுத்த (1)

திங்கள் முடி பொறுத்த பொன்மலை அருவி – கல்லாடம்:1 1/1

மேல்

பொறுத்து (3)

எரி தெறற்கு அரிய பொடி பொறுத்து இயங்கினை – கல்லாடம்:2 69/1
புங்கவம் வாரம் புடை நிலை பொறுத்து
சச்ச புடத்தில் தனி எழு மாத்திரை – கல்லாடம்:2 99/10,11
நின்று முன் இட்ட நிறை அணி பொறுத்து
பரும் குலை கயத்துள் கரும் தாள் கழுநீர் – கல்லாடம்:2 99/54,55

மேல்

பொறை (2)

பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள் – கல்லாடம்:2 23/14
பொறை அழி காட்சியள் ஆகி – கல்லாடம்:2 48/21

மேல்

பொறையும் (2)

நிறையும் பொறையும் பெறும் நிலையானும் – கல்லாடம்:2 11/3
அறிவும் பொறையும் பொருள் அறி கல்வியும் – கல்லாடம்:2 42/10

மேல்

பொறையே (1)

நிலமகள் கடந்தது நலனவள் பொறையே
இருவினை நாடி உயிர்-தொறும் அமைத்த – கல்லாடம்:2 62/7,8

மேல்

பொறையை (1)

விதிவர திருத்திய மேதினி பொறையை
குரு மணி விரித்தலின் தேனொடு கிடந்து – கல்லாடம்:2 52/3,4

மேல்

பொன் (45)

பொன் நகர் கூடல் சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 1/9
பொன் குவை தருமிக்கு அற்புடன் உதவி – கல்லாடம்:2 1/12
பூ மணி யானை பொன் என எடுத்து – கல்லாடம்:2 2/1
மழலை மகார்க்கும் பொன் அணிந்தற்கே – கல்லாடம்:2 4/26
பொன் குட முகட்டு கரு மணி அமைத்து என – கல்லாடம்:2 5/10
பொன் பெயர் உடையோன் தன் பெயர் கடுப்ப – கல்லாடம்:2 5/15
சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன் – கல்லாடம்:2 6/21
பொன் துணர் தாமம் புரிந்து ஒளிர் மணி தேர் – கல்லாடம்:2 10/26
பொன் சிலை வளைத்து வாயில் போக்கி – கல்லாடம்:2 14/4
பொன் தலை புணர் வலை கொடும் கரம் ஆக்கி – கல்லாடம்:2 15/27
அண்ட பொன் சுவர் கொண்ட அழுக்கை – கல்லாடம்:2 16/7
தன்னால் படைத்த பொன் அணி அண்டம் – கல்லாடம்:2 16/14
பொன் நெடும் குன்றம் மன்னிய தோளன் – கல்லாடம்:2 16/36
பந்து பயிற்றியும் பொன் கழங்கு உந்தவும் – கல்லாடம்:2 17/4
பொன் பதி நீங்கி உண்பதும் அடங்கி – கல்லாடம்:2 17/56
மற்று அது பூத்த பொன் திகழ் தாமரை – கல்லாடம்:2 18/19
பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும் – கல்லாடம்:2 19/25
வெண் துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் – கல்லாடம்:2 22/35
வெள்ளி இரும்பு பொன் எனப்பெற்ற – கல்லாடம்:2 22/40
நல் நயம் கிடந்த பொன் நகர் மூடி – கல்லாடம்:2 25/10
பூவையும் கோங்கின் பொன் அலர் சூட்டிய – கல்லாடம்:2 29/3
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/11
என் உயிர் அடைத்த பொன் முலை செப்பின் – கல்லாடம்:2 31/12
கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி – கல்லாடம்:2 34/14
ஒப்புறு பொன் தொடி சிற்றிடை மடந்தை-தன் – கல்லாடம்:2 35/12
பொன் பழித்து எடுத்த இன்புறு திருவடி – கல்லாடம்:2 36/6
பொன் உடல் தேவர் ஒக்கலொடு மயங்கி – கல்லாடம்:2 40/9
பொன் அடி வருந்தியும் கூடி – கல்லாடம்:2 40/24
பொன் அம் தோகையும் மணி அரி சிலம்பும் – கல்லாடம்:2 41/14
பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என – கல்லாடம்:2 41/39
கூடல் பெருமான் பொன் பிறழ் திருவடி – கல்லாடம்:2 42/29
எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று – கல்லாடம்:2 45/5
ஒப்புடைத்தாய இ பொன் தொடி மடந்தை – கல்லாடம்:2 45/26
பொன் உடை ஆவம் தொலையாது சுரக்க – கல்லாடம்:2 48/6
பொன் கொடி தேர் மிசை பொலிகுவை அன்றே – கல்லாடம்:2 51/22
நெட்டு இலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில் – கல்லாடம்:2 54/23
சிற்றிலை நெரிஞ்சில் பொன் பூ என்ன – கல்லாடம்:2 62/15
பொன் முடி சயில கணவன் புணர்ந்து – கல்லாடம்:2 65/2
உடைமையன் பொன் கழல் பேணி – கல்லாடம்:2 66/30
பொன் உருள் வையம் போவது காண்க – கல்லாடம்:2 69/10
முடம்படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த – கல்லாடம்:2 74/7
முத்தமிழ் கூடல் முதல்வன் பொன் தாள் – கல்லாடம்:2 75/21
பொன் அணி மாடம் பொலி நகர் கூடல் – கல்லாடம்:2 78/24
புரந்தரன் போலும் பொன் எயில் எறிந்த – கல்லாடம்:2 81/13
பெற்று உயிர்த்த அரும் பொன் தொடி மடந்தை-தன் – கல்லாடம்:2 93/6

மேல்

பொன்_கொடி (1)

கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி
இரவிக்கு அண்ணிய வைகறை-காறும் – கல்லாடம்:2 34/14,15

மேல்

பொன்_தொடி (1)

திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி
என் உயிர் அடைத்த பொன் முலை செப்பின் – கல்லாடம்:2 31/11,12

மேல்

பொன்மலை (5)

திங்கள் முடி பொறுத்த பொன்மலை அருவி – கல்லாடம்:1 1/1
அடுக்கு நிலை சுமந்த வலி தட பொன்மலை
கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி – கல்லாடம்:2 25/18,19
பொன்மலை பிடுங்கி கார் முகம் என்ன – கல்லாடம்:2 33/22
பொன்மலை பனிப்பினும் பனியா – கல்லாடம்:2 41/53
பொன்மலை கண்ட பொலிவு போல – கல்லாடம்:2 50/13

மேல்

பொன்றிட (1)

திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட
எரி வாய் உரகர் இருள் நாட்டு உருவ – கல்லாடம்:2 80/13,14

மேல்

பொன்னம் (2)

பொன்னம் பொகுட்டு தாமரை குவித்து – கல்லாடம்:2 49/3
பொன்னம் பொருப்ப நின் உளத்து இயையின் – கல்லாடம்:2 59/5

மேல்

பொன்னும் (3)

வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து – கல்லாடம்:2 28/22
வேங்கையும் பொன்னும் ஓருழி திரட்டி – கல்லாடம்:2 68/22
ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும்
சுண்ணமும் கலந்து திமிர்ந்து உடல் ஊற்றி – கல்லாடம்:2 87/13,14

மேல்

பொன்னுலகு (2)

உலவா பொன்னுலகு அடைதர வைத்த – கல்லாடம்:2 25/36
பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம் – கல்லாடம்:2 55/31

மேல்

பொன்னுறு (1)

பொன்னுறு ஞாழல் பூவுடன் கடுக்கும் – கல்லாடம்:2 50/6

மேல்

பொன்னொடும் (1)

மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த – கல்லாடம்:2 84/7

மேல்