ஆ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆஆ 1
ஆக்கி 9
ஆக்கிய 5
ஆக 22
ஆகம 1
ஆகமத்தினும் 1
ஆகலின் 1
ஆகி 36
ஆகிய 4
ஆகியும் 17
ஆகுகவே 1
ஆகுவள் 1
ஆகுவன் 1
ஆகுவனே 3
ஆங்கவன் 1
ஆங்காங்கு 1
ஆங்கு 6
ஆங்கே 1
ஆசனத்து 1
ஆசான் 1
ஆசி 1
ஆசை 1
ஆசையின் 2
ஆசையொடு 1
ஆட்டியும் 1
ஆட்டுறும் 1
ஆட 7
ஆடக 2
ஆடல் 1
ஆடாது 1
ஆடி 3
ஆடிய 8
ஆடு-மின் 1
ஆடுக 3
ஆடுநர் 1
ஆடும் 1
ஆடுறும் 1
ஆடையன் 1
ஆண்ட 1
ஆண்டருள் 1
ஆண்டு 1
ஆணை 1
ஆதல் 1
ஆதலின் 7
ஆதி 2
ஆதும்மே 1
ஆந்தையும் 3
ஆநநத்து 1
ஆம் 9
ஆம்பல் 5
ஆம்பி 1
ஆமான் 1
ஆமையும் 2
ஆய் 3
ஆய்ந்து 1
ஆய 3
ஆயத்தினர்களுமாக 1
ஆயதும் 1
ஆயம் 2
ஆயமும் 1
ஆயமொடு 1
ஆயா 1
ஆயிர 3
ஆயிரத்து 1
ஆயிரத்தெட்டில் 1
ஆயிரத்தொடும் 1
ஆயிரம் 12
ஆயில் 1
ஆயின் 2
ஆயின 1
ஆயினவே 2
ஆர் 2
ஆர்க்க 1
ஆர்த்து 2
ஆர்ந்த 1
ஆர்ப்ப 2
ஆர 1
ஆரணம் 1
ஆரம் 1
ஆரமும் 3
ஆரல் 1
ஆரா 1
ஆரிய 2
ஆரும் 1
ஆருயிர் 4
ஆல 2
ஆலயம் 1
ஆலவாய் 3
ஆலவாயினுள் 1
ஆவண 1
ஆவம் 1
ஆழ்ந்து 1
ஆழி 5
ஆழியன் 1
ஆற்றல் 1
ஆற்றாது 7
ஆற்றி 1
ஆற்றிடை 1
ஆற்றிய 1
ஆற்று 1
ஆற்றும் 1
ஆறது 1
ஆறலை 1
ஆறி 2
ஆறு 4
ஆறு_இரண்டு 1
ஆறு_ஐஞ்ஞூறொடு 1
ஆறுடன் 2
ஆறும் 2
ஆறுள் 1
ஆன 1
ஆனா 2
ஆனேற்று 1

ஆ (1)

அறுவாய்க்கு ஆ இரண்டு அணைத்து வரை கட்டி – கல்லாடம்:2 82/16

மேல்

ஆக்கி (9)

பொன் தலை புணர் வலை கொடும் கரம் ஆக்கி
நெடும் கடல் கலக்கும் ஒரு மீன் படுத்த – கல்லாடம்:2 15/27,28
ஆக்கி இடம் பதித்த வள்ளமும் ஆகி – கல்லாடம்:2 22/18
கரத்தது ஆக்கி அ நோ – கல்லாடம்:2 33/29
அணிவித்து அருள் கொடுத்து அரசன் ஆக்கி
அடு மால் அகற்றி நெடுநாள் புரக்க – கல்லாடம்:2 55/23,24
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன் – கல்லாடம்:2 75/19
எரியகல் ஏந்தி வெம் புயங்கம் மிசை ஆக்கி
எரி தளிர்த்து அன்ன வேணியில் குழவி – கல்லாடம்:2 85/32,33
மு தொழிலில் தன் முதல் தொழில் ஆக்கி
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல் – கல்லாடம்:2 87/33,34
பாணி இரண்டும் தாளம் ஆக்கி
ஒரு தாள் மிதித்து விண் உற விட்ட – கல்லாடம்:2 99/29,30
ஆங்கு அவை நான்கும் அணி உழை ஆக்கி
பூரகம் கும்பகம் புடை எழு விளரி – கல்லாடம்:2 100/23,24

மேல்

ஆக்கிய (5)

ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய
கூடல் பெருமான் பொதிய பொருப்பகத்து – கல்லாடம்:2 4/8,9
தென்கீழ்த்திசையோன் ஆக்கிய தனி முதல் – கல்லாடம்:2 31/10
நால் படை வன்னியர் ஆக்கிய பெருமான் – கல்லாடம்:2 37/15
ஆக்கிய விஞ்சை பிறை முடி அந்தணன் – கல்லாடம்:2 42/16
ஆக்கிய பனி பகை கூற்று இவை நிற்க – கல்லாடம்:2 76/23

மேல்

ஆக (22)

கொக்கின் தூவல் அப்புறம் ஆக
மாணிக்கத்தின் வளைத்த சுவர் என – கல்லாடம்:2 16/11,12
தயங்கிய மூன்று கண் எங்கணும் ஆக
கூடல் மா நகர் ஆடிய அமுதை – கல்லாடம்:2 16/18,19
வேலனும் வெறி களன் ஏறுதல் ஆக
அணங்காட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க – கல்லாடம்:2 16/23,24
எழு மலை விழு மலை புடை மணி ஆக
மீன் புகர் நிறைந்த வான் குஞ்சர முகம் – கல்லாடம்:2 19/2,3
அளவா பாதம் மண் பரப்பு ஆக
தனி நெடு விசும்பு திருவுடல் ஆக – கல்லாடம்:2 20/25,26
தனி நெடு விசும்பு திருவுடல் ஆக
இரும் திசை போக்கு பெரும் தோள் ஆக – கல்லாடம்:2 20/26,27
இரும் திசை போக்கு பெரும் தோள் ஆக
வழு அறு திரு மறை ஓசைகள் அனைத்தும் – கல்லாடம்:2 20/27,28
மொழிதர நிகழும் வார்த்தை ஆக
உள் நிறைந்து உழலும் பாடு இரண்டு உயிர்ப்பு – கல்லாடம்:2 20/29,30
பகல் இரவு ஒடுங்கா விடு வளி ஆக
அடு படை பூழியன் கடு முரண் பற்றி – கல்லாடம்:2 20/31,32
அன்ன திரளும் பெரும் கரி ஆக
சொல்லா இன்பமும் உயிருற தந்து – கல்லாடம்:2 21/23,24
செம் சரம் பேர் உருள் அருக்கன் மதி ஆக
தேர் வரை வையம் ஆக திருத்தி – கல்லாடம்:2 25/22,23
தேர் வரை வையம் ஆக திருத்தி – கல்லாடம்:2 25/23
முனிவர் செம் கரம் சென்னி ஆக
உருப்பசி முதலோர் முன்வாழ்த்து எடுப்ப – கல்லாடம்:2 30/18,19
பகு வாய் பாம்பு முடங்கல் ஆக
ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல் – கல்லாடம்:2 46/9,10
அ மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல் – கல்லாடம்:2 49/19
வரையறுத்து அமைந்த வகை நான்கு ஆக
விதிவர திருத்திய மேதினி பொறையை – கல்லாடம்:2 52/2,3
ஆக தனது பேர் அருள் மேனியில் – கல்லாடம்:2 64/20
பெரு மயல் எய்தா நிறையினள் ஆக
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு – கல்லாடம்:2 65/8,9
ஓவிய இல்லம் எம் உறையுள் ஆக
கேளா சிறுசொல் கிளக்கும் கலதியர் – கல்லாடம்:2 80/23,24
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக
மலர் சுமை சேக்கை மது மலர் மறுத்த இ – கல்லாடம்:2 80/27,28
திரு மனம் கொள்ளா சேக்கையது ஆக
நின் உளம் கண்டு நிகழ் உணவு உன்னி – கல்லாடம்:2 80/29,30
மற்று அதன் தாள் அம் புத்திரி ஆக
நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்தி – கல்லாடம்:2 99/6,7

மேல்

ஆகம (1)

அரும் கரை இறந்த ஆகம கடலும் – கல்லாடம்:2 66/25

மேல்

ஆகமத்தினும் (1)

வேத தலையினும் விதி ஆகமத்தினும்
கல்வியர் உளத்தும் கவர் நெஞ்சகத்தும் – கல்லாடம்:2 52/17,18

மேல்

ஆகலின் (1)

மலை வரும் காட்சிக்கு உரிய ஆகலின்
நிறை உடை கல்வி பெறு மதி மாந்தர் – கல்லாடம்:2 2/3,4

மேல்

ஆகி (36)

மாயா பெரு வரத்து ஒரு மயில் ஆகி
புடவி வைத்து ஆற்றிய பல் தலை பாந்தள் – கல்லாடம்:1 2/18,19
சென்னி வாரண கொடும் பகை ஆகி
தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடு திரள் – கல்லாடம்:1 2/28,29
வழுதி ஆகி முழுது உலகு அளிக்கும் – கல்லாடம்:2 2/13
அவை முதல் ஆகி இருவினை கெடுக்கும் – கல்லாடம்:2 11/23
மதி குலம் வாய்த்த மன்னவன் ஆகி
மேதினி புரக்கும் விதி உடை நல் நாள் – கல்லாடம்:2 12/14,15
மறைத்து ஒரு சிறுகுடி பரதவன் ஆகி
பொன் தலை புணர் வலை கொடும் கரம் ஆக்கி – கல்லாடம்:2 15/26,27
மதுரை மா நகர் செழியன் ஆகி
கதிர் முடி கவித்த இறைவன் மா மணி – கல்லாடம்:2 21/61,62
என்னுடை கண்ணும் உயிரும் ஆகி
உள் நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி – கல்லாடம்:2 22/5,6
மலை குஞ்சரத்தின் கட குழி ஆகி
நெடு மலை விழித்த கண்ணே ஆகி – கல்லாடம்:2 22/7,8
நெடு மலை விழித்த கண்ணே ஆகி
அ மலை திரு நுதற்கு அழியாது அமைத்த – கல்லாடம்:2 22/8,9
வெள்ளை கொள் சிந்துர நல் அணி ஆகி
தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி – கல்லாடம்:2 22/10,11
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி
அருவி வீச பறவை குடிபோகி – கல்லாடம்:2 22/13,14
ஆக்கி இடம் பதித்த வள்ளமும் ஆகி
இடை வளி போகாது நெருங்கு முலை கொடிச்சியர் – கல்லாடம்:2 22/18,19
சிறு முகம் காணும் ஆடி ஆகி
சிறந்த ஒரு சுனை இ மலை ஆட – கல்லாடம்:2 22/20,21
மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி
பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள் – கல்லாடம்:2 23/13,14
களையாது உடுக்கும் பைம் துகில் ஆகி
வேனில் கிழவன் பேரணி மகிழ – கல்லாடம்:2 23/15,16
முழக்காது தழங்கும் மா முரசு ஆகி
நெடியோன் துயிலாது அறிவொடு துயில – கல்லாடம்:2 23/17,18
பாயற்கு அமைந்த பள்ளியறை ஆகி
சலபதி ஆய்ந்து சேம நிலை வைத்த – கல்லாடம்:2 23/19,20
நாளும் விளைக்கும் பெரு வயல் ஆகி
கலம் எனும் நெடும் தேர் தொலையாது ஓட – கல்லாடம்:2 23/23,24
அளப்பு அற பரந்த வீதியது ஆகி
சுறவ வேந்து நெடும் படை செய்ய – கல்லாடம்:2 23/25,26
முழக்கமொடு வளைத்த அமர் களம் ஆகி
மகர தெய்வம் நாள் நிறைந்து உறைய – கல்லாடம்:2 23/27,28
மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி
நீர் நெய் வார்த்து சகரர் அமைத்த – கல்லாடம்:2 23/29,30
தீ வளர் வட்ட குண்டம் ஆகி
எண் திகழ் பகுவாம் இன மணி பாந்தள் – கல்லாடம்:2 23/31,32
தண்டில் நின்று எரியும் தகளியது ஆகி
பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட – கல்லாடம்:2 23/33,34
அடும் தீ மாறா மடைப்பள்ளி ஆகி
இன்னும் பலமாய் மன்னும் கடலே – கல்லாடம்:2 23/37,38
அண்ணிய விருந்தினன் ஆகி
நண்ணுவன் சிறு நுதல் பெரு விழியோளே – கல்லாடம்:2 26/33,34
அருளும் பொருளும் ஆகி
திருவுலகு அளிக்கும் பருதி வானவனே – கல்லாடம்:2 29/30,31
பஞ்சின் மெல் அடி பாவை கூறு ஆகி
கரும் குருவிக்கு கண்ணருள் கொடுத்த – கல்லாடம்:2 39/7,8
கூலம் சுமக்க கொட்டாள் ஆகி
நரை தலை முதியோள் இடித்து அடு கூலிகொண்டு – கல்லாடம்:2 47/23,24
பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி
அருச்சுனன் அரும் தவம் அழித்து அமர் செய்து அவன் – கல்லாடம்:2 48/3,4
பொறை அழி காட்சியள் ஆகி
நிறை அழிந்தவட்கு நீ ஆயினவே – கல்லாடம்:2 48/21,22
தண்ணம் நின்று உதவலின் நிறைமதி ஆகி
பொன்னம் பொகுட்டு தாமரை குவித்து – கல்லாடம்:2 49/2,3
அளவு சென்று எட்டா அளவினர் ஆகி
மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும் – கல்லாடம்:2 58/20,21
குறவரும் குறவ துணையரும் ஆகி
நிலம் பெற்று இமைத்து நெடு வரை இறும்பிடை – கல்லாடம்:2 78/11,12
இரு வடிவு ஆகி பழ மறை வேதியன் – கல்லாடம்:2 90/7
மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி
எழு கதிர் விரிக்கும் திரு மணி எடுத்து – கல்லாடம்:2 98/3,4

மேல்

ஆகிய (4)

வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு – கல்லாடம்:2 10/14
சூயை கைவிட பதஞ்சலி ஆகிய
ஆயிரம் பணாடவி அரும் தவத்து ஒருவனும் – கல்லாடம்:2 41/6,7
ஆகிய மணி வேல் சேவல் அம் கொடியோன் – கல்லாடம்:2 56/9
அவிகார குறி ஆகிய தன் குணம் – கல்லாடம்:2 86/29

மேல்

ஆகியும் (17)

பரப்பி காட்டலின் பதுமன் ஆகியும்
அவ் உயிர் எவ் உயிர் அனைத்தும் காத்தலின் – கல்லாடம்:2 9/2,3
செவ்வி கொள் கரு முகில் செல்வன் ஆகியும்
கட்டிய கரை வரம்பு உட்புக அழித்து – கல்லாடம்:2 9/4,5
நீர் தலை தரித்தலின் நிமலன் ஆகியும்
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின் – கல்லாடம்:2 9/6,7
அரி முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்
மூன்று அழல் நான் மறை முனிவர் தோய்ந்து – கல்லாடம்:2 9/8,9
மறை நீர் உகுத்தலின் மறையோன் ஆகியும்
மீனும் கொடியும் விரி திணை ஐந்தும் – கல்லாடம்:2 9/10,11
மணத்தலின் மதி குல மன்னவன் ஆகியும்
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின் – கல்லாடம்:2 9/13,14
வளர் குறி மயங்கா வணிகன் ஆகியும்
விழைதரும் உழவும் வித்தும் நாறும் – கல்லாடம்:2 9/15,16
தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும்
விரி திரை வையை திரு நதி சூழ்ந்த – கல்லாடம்:2 9/17,18
தமனிய பராரை சயிலம் ஆகியும்
அளக்க என்று அமையா பரப்பினதானும் – கல்லாடம்:2 11/5,6
அதிர் வளை தடியும் அளக்கர் ஆகியும்
நிறை உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை – கல்லாடம்:2 11/10,11
தருதலின் வான தரு ஐந்து ஆகியும்
மறை வெளிப்படுத்தலின் கலைமகள் இருத்தலின் – கல்லாடம்:2 11/12,13
அக மலர் வாழ்தலின் பிரமன் ஆகியும்
உயிர் பரிந்து அளித்தலின் புலம் மிசை போக்கலின் – கல்லாடம்:2 11/14,15
படி முழுது அளந்த நெடியோன் ஆகியும்
இறுதியில் சலியாது இருத்தலானும் – கல்லாடம்:2 11/16,17
பெண் இடம் கலந்த புண்ணியன் ஆகியும்
அருள் வழி காட்டலின் இரு விழி ஆகியும் – கல்லாடம்:2 11/19,20
அருள் வழி காட்டலின் இரு விழி ஆகியும்
கொள்ளுநர் கொள்ள குறையாது ஆதலின் – கல்லாடம்:2 11/20,21
நிறை உளம் நீங்காது உறை அருள் ஆகியும்
அவை முதல் ஆகி இருவினை கெடுக்கும் – கல்லாடம்:2 11/22,23
திருவடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும்
மு கணில் அருள் கண் முறைபெற முயங்கியும் – கல்லாடம்:2 13/3,4

மேல்

ஆகுகவே (1)

கற்பில் தோன்றா கடன் ஆகுகவே – கல்லாடம்:2 36/15

மேல்

ஆகுவள் (1)

அவளே ஆகுவள் யானே தவல் அரும் – கல்லாடம்:2 55/38

மேல்

ஆகுவன் (1)

நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன்
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன் – கல்லாடம்:2 66/12,13

மேல்

ஆகுவனே (3)

புறம்பு தோன்றி நின்-கண் ஆகுவனே – கல்லாடம்:2 39/22
மருவுதல் ஒருவும் மதி ஆகுவனே – கல்லாடம்:2 67/26
குறை உளம் நீங்கி இன்பு ஆகுவனே – கல்லாடம்:2 68/34

மேல்

ஆங்கவன் (1)

ஆங்கவன் தரித்த கலைமான் கடுக்கும் – கல்லாடம்:2 41/48

மேல்

ஆங்காங்கு (1)

ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள் – கல்லாடம்:2 98/6

மேல்

ஆங்கு (6)

பேறு ஆங்கு ஒழிக பெரு நாண் கற்பினர் – கல்லாடம்:2 36/13
ஆங்கு அவர் துயர்பெற ஈன்ற என் ஒருத்தி – கல்லாடம்:2 76/24
நாரணன் ஆங்கு அவன் கூர் உடை காவல் – கல்லாடம்:2 87/31
மலை புள் போல நிலை குரல் அணைந்து ஆங்கு
உணவு உளம் கருதி ஒளி இசை பாட – கல்லாடம்:2 91/12,13
ஆங்கு ஒரு பதின்மூன்று அடைந்தன குற்றமும் – கல்லாடம்:2 98/44
ஆங்கு அவை நான்கும் அணி உழை ஆக்கி – கல்லாடம்:2 100/23

மேல்

ஆங்கே (1)

முன் உறின் அவள் மனம் ஆங்கே
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே – கல்லாடம்:2 86/37,38

மேல்

ஆசனத்து (1)

பல் மணி ஆசனத்து இருந்து செவ்வானின் – கல்லாடம்:2 75/5

மேல்

ஆசான் (1)

பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல் – கல்லாடம்:2 35/2

மேல்

ஆசி (1)

நன்னர் கொள் ஆசி நாட்டியது இவ் உழை – கல்லாடம்:2 6/15

மேல்

ஆசை (1)

ஆசை செருநர்க்கு அடைந்து செல் வழியும் – கல்லாடம்:2 29/29

மேல்

ஆசையின் (2)

ஆசையின் தணியா அழல் பசி தணிக்க – கல்லாடம்:2 7/24
ஆசையின் செறிந்த பொங்கர் குல தாய் – கல்லாடம்:2 46/2

மேல்

ஆசையொடு (1)

கூறுபட நாடி ஆசையொடு மயங்கி – கல்லாடம்:2 20/13

மேல்

ஆட்டியும் (1)

ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும் – கல்லாடம்:2 54/14

மேல்

ஆட்டுறும் (1)

ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை – கல்லாடம்:2 55/30

மேல்

ஆட (7)

உடல் உயிர் ஆட ஆடுறும் அனலமும் – கல்லாடம்:1 1/11
கூடல் மா நகர் ஆட எடுத்த – கல்லாடம்:2 5/19
எங்கு உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட
நாடக விதியொடு ஆடிய பெருமான் – கல்லாடம்:2 21/59,60
சிறந்த ஒரு சுனை இ மலை ஆட
அளவா காதல் கைம்மிக்கு அணைந்தனள் – கல்லாடம்:2 22/21,22
மாமி ஆட புணரி அழைத்த – கல்லாடம்:2 25/38
துறை நீர் ஆட பரந்த கார் மதமும் – கல்லாடம்:2 26/22
கானம் பாடி சுற்றி நின்று ஆட
சுழல் விழி சிறுநகை குட வயிற்று இரு குழை – கல்லாடம்:2 34/5,6

மேல்

ஆடக (2)

ஆடக சயில சேகரம் தொடர்ந்த – கல்லாடம்:2 69/25
ஆடக சயிலத்து ஓர் உடல் பற்றி – கல்லாடம்:2 73/1

மேல்

ஆடல் (1)

கூடல் பதி வரும் ஆடல் பரியோன் – கல்லாடம்:2 96/13

மேல்

ஆடாது (1)

காட்டி உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது
பிதிர் கனல் மணி சூழ் முடி நடுங்காது – கல்லாடம்:2 21/42,43

மேல்

ஆடி (3)

ஆடி நிழல் காட்டிய பீடதுவானும் – கல்லாடம்:2 19/16
சிறு முகம் காணும் ஆடி ஆகி – கல்லாடம்:2 22/20
மரக்கால் ஆடி அரக்கர் கொன்ற – கல்லாடம்:2 41/18

மேல்

ஆடிய (8)

பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான் – கல்லாடம்:2 7/33
நாடு இரு முனிவர்க்கு ஆடிய பெருமான் – கல்லாடம்:2 8/29
கூடல் மா நகர் ஆடிய அமுதை – கல்லாடம்:2 16/19
நாடக விதியொடு ஆடிய பெருமான் – கல்லாடம்:2 21/60
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல் – கல்லாடம்:2 85/40
காலுடன் சுழல ஆடிய காளி – கல்லாடம்:2 99/24
அமரர் கண் களிப்ப ஆடிய பெருமான் – கல்லாடம்:2 99/42
கூளியும் துள்ள ஆடிய நாயகன் – கல்லாடம்:2 100/28

மேல்

ஆடு-மின் (1)

உருளின் பூழி உள்ளுற ஆடு-மின்
எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின் – கல்லாடம்:2 10/5,6

மேல்

ஆடுக (3)

முன்னி ஆடுக முன்னி ஆடுக – கல்லாடம்:2 39/1
முன்னி ஆடுக முன்னி ஆடுக
குமுதமும் வள்ளையும் நீலமும் குமிழும் – கல்லாடம்:2 39/1,2
முளரி நிறை செம்மகள் முன்னி ஆடுக
நின் பெறு தவத்தினை முற்றிய யானும் – கல்லாடம்:2 39/4,5

மேல்

ஆடுநர் (1)

ஊடி ஆடுநர் திரையொடு பிணங்கி – கல்லாடம்:2 41/33

மேல்

ஆடும் (1)

தொய்யில் ஆடும் கடன் உடை கன்னியர் – கல்லாடம்:2 26/19

மேல்

ஆடுறும் (1)

உடல் உயிர் ஆட ஆடுறும் அனலமும் – கல்லாடம்:1 1/11

மேல்

ஆடையன் (1)

தழல் கண் தரக்கின் சரும ஆடையன்
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என – கல்லாடம்:2 3/17,18

மேல்

ஆண்ட (1)

மு முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட
கூடற்கு இறைவன் இரு தாள் இருத்தும் – கல்லாடம்:2 30/20,21

மேல்

ஆண்டருள் (1)

இரண்டு என கவைத்த நல் ஆண்டருள் தோழியை – கல்லாடம்:2 7/41

மேல்

ஆண்டு (1)

ஒரு மதி முறித்து ஆண்டு இரு கவுள் செருகிய – கல்லாடம்:2 16/31

மேல்

ஆணை (1)

திக்கு படர் ஆணை வேலி கோலி – கல்லாடம்:2 37/13

மேல்

ஆதல் (1)

உற்றனள் ஆதல் வேண்டும் – கல்லாடம்:2 98/57

மேல்

ஆதலின் (7)

அளந்து கொடு முடித்தல் நின் கடன் ஆதலின்
வரி உடல் சூழ குடம்பை நூல் தெற்றி – கல்லாடம்:1 1/25,26
பாய் பார் அறிய நீயே ஆதலின்
வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழல் கால் – கல்லாடம்:1 2/55,56
கொள்ளுநர் கொள்ள குறையாது ஆதலின்
நிறை உளம் நீங்காது உறை அருள் ஆகியும் – கல்லாடம்:2 11/21,22
தோன்றினர் ஆதலின் நீயே மட மகள் – கல்லாடம்:2 14/24
ஆதலின் பெரும் புகழ் அணைகுதியாயின் – கல்லாடம்:2 51/25
மனன் எழு வருத்தமது உடையை ஆதலின்
பெரு மயல் எய்தா நிறையினள் ஆக – கல்லாடம்:2 65/7,8
ஆதலின் நின் வரவு எனக்கே – கல்லாடம்:2 71/38

மேல்

ஆதி (2)

ஆதி சாரணை அடர் நிலை பார்வை – கல்லாடம்:2 49/9
ஆதி நாயகன் அகன் மலர் கழல் இணை – கல்லாடம்:2 72/14

மேல்

ஆதும்மே (1)

வாரி துறைவற்கு என் ஆதும்மே – கல்லாடம்:2 30/25

மேல்

ஆந்தையும் (3)

பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ – கல்லாடம்:2 7/21
வீசு கோட்டு ஆந்தையும் சேவலோடு அலமர – கல்லாடம்:2 79/2
ஆந்தையும் கூகையும் அணி தாலுறுத்த – கல்லாடம்:2 88/21

மேல்

ஆநநத்து (1)

ஆநநத்து ஒட்டல் அணி மயில் புரோகம் – கல்லாடம்:2 49/12

மேல்

ஆம் (9)

அடியவர்க்கு எவ்வளவு அது ஆம்
கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே – கல்லாடம்:2 24/35,36
உளம் ஆம் வேட்கையள் இன்னள் என்று உரையே – கல்லாடம்:2 28/34
போகா காலை புணர்க்குவது என் ஆம்
நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப்பு ஒலி வரைப்பகை – கல்லாடம்:2 30/7,8
அண்டமும் பார்ப்பும் ஆம் என அணைக்கும் – கல்லாடம்:2 45/24
அணங்கினள் ஆம் என நினையல் – கல்லாடம்:2 45/27
இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என – கல்லாடம்:2 73/13
நின்ற இவட்கு இனி என் ஆம்
கன்றிய உடலுள் படும் நனி உயிரே – கல்லாடம்:2 79/26,27
ஆம் என காட்டும் அணி இருள் மின்னலின் – கல்லாடம்:2 97/7
மாங்கனி இரண்டில் ஆம் கனி ஒன்றால் – கல்லாடம்:2 99/38

மேல்

ஆம்பல் (5)

ஆம்பல் முக அரக்கன் கிளையொடு மறிய – கல்லாடம்:1 1/19
வள்ளை செங்கமலம் கள் அவிழ் ஆம்பல்
பாசடை மறைக்கும் கூடல் பெருமான் – கல்லாடம்:2 7/37,38
பசும் தாள் சே கொள் ஆம்பல் மலர – கல்லாடம்:2 38/17
மரகத பன்னத்து ஆம்பல் அம் குப்பையை – கல்லாடம்:2 54/28
பசும் தாள் புல் இதழ் கரும் தாள் ஆம்பல்
சிறிது உவா மதுவமும் குறைபெற அருந்தி அ – கல்லாடம்:2 95/20,21

மேல்

ஆம்பி (1)

கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப – கல்லாடம்:2 14/11

மேல்

ஆமான் (1)

வெறி விழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை – கல்லாடம்:2 42/2

மேல்

ஆமையும் (2)

ஆமையும் சலமும் மேவலின் மருதமும் – கல்லாடம்:2 64/18
இடங்கரும் ஆமையும் எழு வெயில் கொளுவும் – கல்லாடம்:2 74/19

மேல்

ஆய் (3)

ஆய் மலர் தெரிந்திட்டு வான் பலி தூவி – கல்லாடம்:2 15/12
குணம் குடி போய்வித்த ஆய் உளம் தவறே – கல்லாடம்:2 15/31
உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி – கல்லாடம்:2 85/16

மேல்

ஆய்ந்து (1)

சலபதி ஆய்ந்து சேம நிலை வைத்த – கல்லாடம்:2 23/20

மேல்

ஆய (3)

கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/17
அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினை – கல்லாடம்:2 37/10
கடல் கிடந்து அன்ன நிரைநிரை ஆய
வெள்ளமும் மற்றையர் கள்ளமும் கடந்து – கல்லாடம்:2 64/10,11

மேல்

ஆயத்தினர்களுமாக (1)

இவ்வுழி ஆயத்தினர்களுமாக
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் – கல்லாடம்:2 80/25,26

மேல்

ஆயதும் (1)

அவ் அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும்
ஒரு கணம் கூடி ஒருங்கே – கல்லாடம்:2 75/28,29

மேல்

ஆயம் (2)

தாய் கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள் – கல்லாடம்:2 40/14
நின் உயிர் ஆயம் நாப்பண் – கல்லாடம்:2 99/57

மேல்

ஆயமும் (1)

சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக – கல்லாடம்:2 7/6

மேல்

ஆயமொடு (1)

நீயே ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி – கல்லாடம்:2 51/13

மேல்

ஆயா (1)

ஆயா அமுதம் ஈகுதலானும் – கல்லாடம்:2 19/20

மேல்

ஆயிர (3)

ஆயிர மணி கரத்து அமைத்த வான் படையுடன் – கல்லாடம்:2 4/3
திரு உடல் நிறை விழி ஆயிர திரளும் – கல்லாடம்:2 23/2
ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள் – கல்லாடம்:2 98/6

மேல்

ஆயிரத்து (1)

ஆயிரத்து இரட்டி கீழ் மேல் நிலையும் – கல்லாடம்:2 61/3

மேல்

ஆயிரத்தெட்டில் (1)

ஆயிரத்தெட்டில் அமைந்தன பிறப்பு – கல்லாடம்:2 82/8

மேல்

ஆயிரத்தொடும் (1)

மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடும்
எழு கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க – கல்லாடம்:2 21/32,33

மேல்

ஆயிரம் (12)

ஆயிரம் தழல் கரத்து இருள்_பகை மண்டிலத்து – கல்லாடம்:2 13/9
துறை கொள் ஆயிரம் முகமும் சுழல – கல்லாடம்:2 16/9
ஆயிரம் தீ வாய் அரவு நாண் கொளுவி – கல்லாடம்:2 25/20
ஆயிரம் பணாடவி அரும் தவத்து ஒருவனும் – கல்லாடம்:2 41/7
ஆயிரம் எடுத்து வான் வழி படர்ந்து – கல்லாடம்:2 57/21
ஆயிரம் திரு முகத்து அருள் நதி சிறுமதி – கல்லாடம்:2 58/31
ஆயிரம் பணாடவி அரவு வாய் அணைத்து – கல்லாடம்:2 71/1
மாசறு திருமகள் மலர் புகுந்து ஆயிரம்
புறவிதழ் புதவு அடைத்து அதன் வெதுப்பு உறுக்கவும் – கல்லாடம்:2 76/3,4
ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்து – கல்லாடம்:2 82/5
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற புனைந்தும் – கல்லாடம்:2 89/20
ஆயிரம் பணாடவி அரவு கடு வாங்க – கல்லாடம்:2 95/6
ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த – கல்லாடம்:2 100/11

மேல்

ஆயில் (1)

என் பேறுடையர் ஆயில்
கற்பில் தோன்றா கடன் ஆகுகவே – கல்லாடம்:2 36/14,15

மேல்

ஆயின் (2)

நீயும் குதட்டினை ஆயின் சேயாய் – கல்லாடம்:2 56/18
சேய் குறி இனிய ஆயின்
கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டு எமக்கே – கல்லாடம்:2 100/36,37

மேல்

ஆயின (1)

நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின
பகழி செய் கம்மியர் உள்ளம் போல – கல்லாடம்:2 98/51,52

மேல்

ஆயினவே (2)

புனைய காணேன் சொல் ஆயினவே – கல்லாடம்:2 20/46
நிறை அழிந்தவட்கு நீ ஆயினவே – கல்லாடம்:2 48/22

மேல்

ஆர் (2)

புறம் ஆர் கல்வி அற மா மகளை – கல்லாடம்:2 17/23
ஆர் எரி மணி திரள் அருளியது எனவும் – கல்லாடம்:2 73/24

மேல்

ஆர்க்க (1)

என புயம் கொட்டி நகைத்து எடுத்து ஆர்க்க
பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும் – கல்லாடம்:2 78/17,18

மேல்

ஆர்த்து (2)

ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின் – கல்லாடம்:2 65/23
சாதகம் வெறுப்ப சரிந்து அகழ்ந்து ஆர்த்து
திரள் பளிங்கு உடைத்து சிதறுவது என்ன – கல்லாடம்:2 68/19,20

மேல்

ஆர்ந்த (1)

பழி நாட்டு ஆர்ந்த பாவம் போல – கல்லாடம்:2 8/35

மேல்

ஆர்ப்ப (2)

நீயே ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி – கல்லாடம்:2 51/13
வண்டு எழுந்து ஆர்ப்ப மணி எடுத்து அலம்பி – கல்லாடம்:2 68/25

மேல்

ஆர (1)

ஆர பொதும்பர் அடை குளிர் சாரல் – கல்லாடம்:2 81/29

மேல்

ஆரணம் (1)

ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும் – கல்லாடம்:1 1/32

மேல்

ஆரம் (1)

பெற்று வளர்த்த கல் புடை ஆரம்
அணியும் மா மகிழ்நர் பதி உறை புகுந்தால் – கல்லாடம்:2 17/19,20

மேல்

ஆரமும் (3)

துணர் பெறு கோதையும் ஆரமும் புனைக – கல்லாடம்:2 14/37
நிரை தலை சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும்
வண்டு கிளை முரற்றிய பாசிலை துளவும் – கல்லாடம்:2 41/15,16
வளை உமிழ் ஆரமும் சுரி முக சங்கும் – கல்லாடம்:2 60/17

மேல்

ஆரல் (1)

வஞ்சனை தூங்கி ஆரல் உண்ணும் – கல்லாடம்:2 36/3

மேல்

ஆரா (1)

ஆரா இன்ப பேர் அமுது அருந்தி – கல்லாடம்:2 80/7

மேல்

ஆரிய (2)

ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய – கல்லாடம்:2 4/8
ஆரிய பதம் கொள் நாரத பேரியாழ் – கல்லாடம்:2 82/10

மேல்

ஆரும் (1)

பொருத்தம் காண்டி வண்டு ஆரும்
அருத்தி அம் கோதை மன்னவன்-பாலே – கல்லாடம்:2 50/34,35

மேல்

ஆருயிர் (4)

ஆருயிர் கவரும் கார் உடல் செம் கண் – கல்லாடம்:2 15/19
பேர் அழல் வாடை ஆருயிர் தடவ – கல்லாடம்:2 20/15
அண்டநாடவர்க்கு ஆருயிர் கொடுத்த – கல்லாடம்:2 32/4
ஆருயிர் வாழ அருள் வர நிறுத்திய – கல்லாடம்:2 38/25

மேல்

ஆல (2)

பசும் தழை பரப்பி கண மயில் ஆல
முல்லை அம் திருமகள் கோபம் வாய் மலர்ந்து – கல்லாடம்:2 14/17,18
மயில் சிறை ஆல வலி_முகம் பனிப்ப – கல்லாடம்:2 68/26

மேல்

ஆலயம் (1)

மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி – கல்லாடம்:2 23/29

மேல்

ஆலவாய் (3)

ஆலவாய் உறைதரும் மூல கொழும் சுடர் – கல்லாடம்:2 28/10
ஆலவாய் அமர்ந்த நீலம் நிறை கண்டன் – கல்லாடம்:2 29/11
ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல் – கல்லாடம்:2 46/10

மேல்

ஆலவாயினுள் (1)

ஆலவாயினுள் அருளுடன் நிறைந்த – கல்லாடம்:2 80/20

மேல்

ஆவண (1)

ஆவண வீதி அனையவர் அறிவுறின் – கல்லாடம்:2 78/25

மேல்

ஆவம் (1)

பொன் உடை ஆவம் தொலையாது சுரக்க – கல்லாடம்:2 48/6

மேல்

ஆழ்ந்து (1)

ஆழ்ந்து அகன்று இருண்ட சிறை நீர் கயத்துள் – கல்லாடம்:2 68/2

மேல்

ஆழி (5)

நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன் – கல்லாடம்:2 5/18
புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ ஆழி
வளர் முலை இன்பு எனின் மறித்து நோக்கு-மதி – கல்லாடம்:2 31/14,15
பெரு நீர் ஆழி தொல் உலகுழிக்கே – கல்லாடம்:2 55/40
ஆழி வலவன் அடர்த்தன போல – கல்லாடம்:2 57/2
கொலை கொண்டு ஆழி குறி உடன் படைத்து – கல்லாடம்:2 80/15

மேல்

ஆழியன் (1)

ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர் – கல்லாடம்:2 30/14

மேல்

ஆற்றல் (1)

தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல் செய் – கல்லாடம்:2 86/17

மேல்

ஆற்றாது (7)

ஆற்றாது அலைந்த நீர் நசை அடக்க – கல்லாடம்:2 10/21
நுண் இடை சுமந்து ஆற்றாது
கண்ணிய சுணங்கின் பெரு முலையவட்கே – கல்லாடம்:2 25/45,46
ஆற்றாது பெரு முழை வாய் விட்டு கலுழ்ந்து என – கல்லாடம்:2 28/18
ஆற்றாது அழன்று காற்றின் முகம் மயங்கி – கல்லாடம்:2 71/26
ஆற்றாது அகன்று தேக்கு வழி கண்ட – கல்லாடம்:2 74/15
ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும் – கல்லாடம்:2 75/14
ஆற்றாது அலந்து காற்று என கொட்புற்று – கல்லாடம்:2 91/2

மேல்

ஆற்றி (1)

இருள் குறள் ஊன்றி எம் அருள் களி ஆற்றி
உருள் வாய் கொக்கரை உம்பர்நாட்டு ஒலிக்க – கல்லாடம்:2 85/24,25

மேல்

ஆற்றிடை (1)

கொடுமர கொலைஞர் ஆற்றிடை கவர – கல்லாடம்:2 6/18

மேல்

ஆற்றிய (1)

புடவி வைத்து ஆற்றிய பல் தலை பாந்தள் – கல்லாடம்:1 2/19

மேல்

ஆற்று (1)

பாசடை புதைத்த நெட்டு ஆற்று ஏரியுள் – கல்லாடம்:2 24/31

மேல்

ஆற்றும் (1)

வெம்மையும் தண்மையும் வினை உடற்கு ஆற்றும்
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன் – கல்லாடம்:2 75/18,19

மேல்

ஆறது (1)

கூறவும் பெறுமே ஆறது நிற்க – கல்லாடம்:2 92/19

மேல்

ஆறலை (1)

ஆறலை எயினர் அமர் கலிக்கு அழுங்கினை – கல்லாடம்:2 69/11

மேல்

ஆறி (2)

தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி
அமுதொடு கிடக்கும் நிறைமதி பக்கம் – கல்லாடம்:2 22/11,12
சிறிது நின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி
ஒரு கணன் நிலைக்க மருவுதியாயின் – கல்லாடம்:2 22/25,26

மேல்

ஆறு (4)

ஆறு_இரண்டு அருக்கர் அவிர் கதிர் கனலும் – கல்லாடம்:1 1/9
ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு – கல்லாடம்:1 2/50
ஆறு எதிர்ப்பட்ட அரும் தவ திருவினர் – கல்லாடம்:2 40/7
ஆறு_ஐஞ்ஞூறொடு வேறு நிரை அடுத்த – கல்லாடம்:2 75/7

மேல்

ஆறு_இரண்டு (1)

ஆறு_இரண்டு அருக்கர் அவிர் கதிர் கனலும் – கல்லாடம்:1 1/9

மேல்

ஆறு_ஐஞ்ஞூறொடு (1)

ஆறு_ஐஞ்ஞூறொடு வேறு நிரை அடுத்த – கல்லாடம்:2 75/7

மேல்

ஆறுடன் (2)

ஐம்பதிற்று_இரட்டி ஆறுடன் கழித்த – கல்லாடம்:2 82/13
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து – கல்லாடம்:2 99/22

மேல்

ஆறும் (2)

எட்டும் ஏழும் சொற்றன ஆறும்
ஐந்தும் நான்கும் அணி தரு மூன்றும் – கல்லாடம்:2 38/22,23
தரு செளகந்தி தன் நிறம் ஆறும்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை – கல்லாடம்:2 98/37,38

மேல்

ஆறுள் (1)

காமம் ஆறுள் கவர்தரும் வெகுளுநர் – கல்லாடம்:2 97/9

மேல்

ஆன (1)

வவ்வினரிடத்தும் அவ் வழி ஆன
திரை கடல் குடித்த கரத்த மா முனிக்கும் – கல்லாடம்:2 17/13,14

மேல்

ஆனா (2)

ஆனா பெரும் புகழ் அருள் நகர் கூடல் – கல்லாடம்:2 41/37
ஆனா இன்னல் அழிபட காண்பான் – கல்லாடம்:2 47/3

மேல்

ஆனேற்று (1)

இடி குரல் ஆனேற்று இனம் எதிர் செறுப்ப – கல்லாடம்:2 94/10

மேல்

ஆஆ (1)

தன் உயிர்க்கு இன்னல் தவறில ஆஆ
இரண்டு உயிர் தணப்பு என எனது கண் புணர இ – கல்லாடம்:2 97/23,24

மேல்