தா – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தாக்க 4
தாக்கி 2
தாங்கி 2
தாங்கிய 2
தாங்கியும் 2
தாங்கும் 2
தாடி 1
தாது 2
தாதுடன் 1
தாதும் 2
தாதையும் 1
தாபதர் 3
தாபதர்க்கும் 1
தாபதன் 1
தாமம் 1
தாமரை 35
தாமரை_மகளே 1
தாமரையே 1
தாமும் 1
தாய் 3
தாயம் 1
தாயர் 1
தாயவர் 1
தாயாம் 1
தார் 5
தாரகை 2
தாரம் 2
தாரா 1
தாரி 1
தாரியில் 1
தாரியும் 1
தாரியை 1
தாரை 3
தாரைகள் 1
தாரொடு 1
தாலுறுத்த 1
தாவா 1
தாவி 2
தாழ் 1
தாழ்த்தி 2
தாழ்ந்தனள் 1
தாழும் 1
தாழை 2
தாள் 35
தாள்கொள 1
தாள்பணியார் 1
தாளம் 2
தாளால் 1
தாளி 1
தாளியும் 2
தாளோன் 1
தான் 4
தானம் 1
தானவர்க்கு 1
தானும் 1
தானே 3

தாக்க (4)

சல்லரி அங்கை தலைவிரல் தாக்க
கயந்தலை அடி என கயிறு அமை கைத்திரி – கல்லாடம்:2 8/18,19
முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க
நாடு இரு முனிவர்க்கு ஆடிய பெருமான் – கல்லாடம்:2 8/28,29
விடு தழல் உச்சம் படு கதிர் தாக்க
பாடல் சால் பச்சை கோடக காற்றை – கல்லாடம்:2 17/47,48
நான்முக விதியே தாளம் தாக்க
அந்த நான்முகனை உந்தி பூத்தோன் – கல்லாடம்:2 21/28,29

மேல்

தாக்கி (2)

அருள் பொழி கடைக்கண் தாக்கி
தெருளுற ஐய முடிப்பை இன்று எனவே – கல்லாடம்:1 1/39,40
வழி எதிர் கிடந்த உலமுடன் தாக்கி
வேங்கையும் பொன்னும் ஓருழி திரட்டி – கல்லாடம்:2 68/21,22

மேல்

தாங்கி (2)

மலையினை தாங்கி அமுதினை கடைந்து – கல்லாடம்:2 33/5
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி
உடையா அமுதம் உறைதலானும் – கல்லாடம்:2 81/8,9

மேல்

தாங்கிய (2)

இரு நிலம் தாங்கிய வலி கெழு நோன்மை – கல்லாடம்:2 65/1
தாங்கிய கூடல் பெரு நகர் – கல்லாடம்:2 69/34

மேல்

தாங்கியும் (2)

தாங்கியும் மலர் கரம் தங்கியும் நிலைத்த – கல்லாடம்:2 73/5
கையுறை சுமந்தும் கடி தழை தாங்கியும்
உயிரின் தளர இரங்கியும் உணங்கியும் – கல்லாடம்:2 85/6,7

மேல்

தாங்கும் (2)

மருந்து பகுத்து உண்டு வல் உயிர் தாங்கும்
வட்டை வந்தனை என வழங்கும் மொழி நிற்க – கல்லாடம்:2 40/12,13
நான்முகன் தாங்கும் தேன் உடை தாமரை – கல்லாடம்:2 67/14

மேல்

தாடி (1)

மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய் – கல்லாடம்:2 57/9

மேல்

தாது (2)

இதழி தாது உதிர்ப்ப பிறை அமுது உகுக்க – கல்லாடம்:2 34/12
தாது உடல் துதைந்த மென் தழை சிறை வண்டு இனம் – கல்லாடம்:2 95/19

மேல்

தாதுடன் (1)

வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும் – கல்லாடம்:2 50/21

மேல்

தாதும் (2)

சுண்ணமும் தாதும் துணை துகள் தூற்று-மின் – கல்லாடம்:2 84/12
ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும் – கல்லாடம்:2 87/13

மேல்

தாதையும் (1)

தாதையும் இரப்ப தளையது விடுத்தோய் – கல்லாடம்:1 2/46

மேல்

தாபதர் (3)

தவ நதி போகும் அரு மறை தாபதர்
நன்னர் கொள் ஆசி நாட்டியது இவ் உழை – கல்லாடம்:2 6/14,15
கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும் – கல்லாடம்:2 39/10
நான்மறை தாபதர் முத்தழல் களம் புக்கு – கல்லாடம்:2 90/8

மேல்

தாபதர்க்கும் (1)

முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும்
நின்று அறிந்து உணர்த்தவும் தமிழ் பெயர் நிறுத்தவும் – கல்லாடம்:2 63/23,24

மேல்

தாபதன் (1)

அரு மறை தாபதன் அமைத்திடு செம் மலர் – கல்லாடம்:2 14/27

மேல்

தாமம் (1)

பொன் துணர் தாமம் புரிந்து ஒளிர் மணி தேர் – கல்லாடம்:2 10/26

மேல்

தாமரை (35)

தாமரை பழித்த கை மருங்கு அமைத்தோய் – கல்லாடம்:1 2/31
இதழ் நிறை மது அம் தாமரை துளித்து என – கல்லாடம்:2 3/8
தாமரை தவம்செய்து அளியுடன் பெற்ற – கல்லாடம்:2 3/20
மலர அவிழ்ந்த தாமரை கயல் என – கல்லாடம்:2 5/12
விரித்த தாமரை குவித்த தாளோன் – கல்லாடம்:2 5/20
தரித்த உள்ள தாமரை ஊரன் – கல்லாடம்:2 10/25
மற்று அது பூத்த பொன் திகழ் தாமரை
இரண்டு முகிழ்செய்து நெஞ்சுற பெருகும் – கல்லாடம்:2 18/19,20
தாமரை கண்ணால் உட்புக அறிந்தும் – கல்லாடம்:2 18/37
பணிவாய் புரிந்து தாமரை_மகளே – கல்லாடம்:2 19/35
பூத்து அலர் விரித்த சேப்படு தாமரை
உள் வளை உறங்கும் வள் வாய் கூடல் – கல்லாடம்:2 24/32,33
தேவர் நெஞ்சு உடைக்கும் தாமரை ஏவின் – கல்லாடம்:2 31/7
திருக்குளம் முளைத்த கண் தாமரை கொடு – கல்லாடம்:2 31/9
தாமரை ஒன்றில் தடைந்து வளர்செய்த – கல்லாடம்:2 39/3
மதர் விழி தாமரை மலர்ந்து இமைத்து அமர்ந்தன – கல்லாடம்:2 45/9
தாமரை பாடும் அறுகால் கிளியும் – கல்லாடம்:2 47/16
பொன்னம் பொகுட்டு தாமரை குவித்து – கல்லாடம்:2 49/3
புல் இதழ் தாமரை புது முகை அவிழ்ப்ப – கல்லாடம்:2 51/6
சுரும்பொடு கிடந்த சொரி இதழ் தாமரை
கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது – கல்லாடம்:2 63/5,6
எரி விரிந்து அன்ன இதழ் பல் தாமரை
அருள் முக திருவொடு மலர் முகம் குவிய – கல்லாடம்:2 64/23,24
தாமரை நிதியும் வால் வளை தனமும் – கல்லாடம்:2 66/5
நான்முகன் தாங்கும் தேன் உடை தாமரை
இதழும் கொட்டையும் சிதற குதர்ந்து – கல்லாடம்:2 67/14,15
எரி விரிந்து அன்ன பல இதழ் தாமரை
நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்கு – கல்லாடம்:2 68/3,4
தாமரை உடைத்த காமர் சேவடி – கல்லாடம்:2 68/32
புல் இதழ் தாமரை இல் அளித்து எனவும் – கல்லாடம்:2 73/17
நவத்தலை தாமரை வளை வாய் பருந்து என – கல்லாடம்:2 77/11
எழில் மதி விரித்த வெண் தளை இதழ் தாமரை
மலர் மலர் துவட்டும் வயல் அணி ஊர – கல்லாடம்:2 78/4,5
தாமரை அக-வயின் சே இதழ் வாட்டிய – கல்லாடம்:2 78/21
பேர் இதழ் தாமரை பெருகலானும் – கல்லாடம்:2 81/7
இதழ் அவிழ் தாமரை எனும் தகுணித்தம் – கல்லாடம்:2 85/27
கண்டு உளம் களிப்ப கனை கழல் தாமரை
வானக வாவியூடு உற மலர – கல்லாடம்:2 88/32,33
தாமரை குவித்த காமர் சீறடி – கல்லாடம்:2 90/2
செங்கதிர் விரித்த செம் திரு மலர் தாமரை
பெரும் தேன் அருந்தி எ பேர் இசை அனைத்தினும் – கல்லாடம்:2 95/16,17
தாமரை பழித்த இரு சரண் அடையா – கல்லாடம்:2 97/18
சாதக புள்-கண் தாமரை கழுநீர் – கல்லாடம்:2 98/27
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என – கல்லாடம்:2 99/56

மேல்

தாமரை_மகளே (1)

பணிவாய் புரிந்து தாமரை_மகளே – கல்லாடம்:2 19/35

மேல்

தாமரையே (1)

மதி தாமரையே மயங்கிய ஒருவேன் – கல்லாடம்:2 21/12

மேல்

தாமும் (1)

தன்னை நின்று உணர்ந்து தாமும் ஒன்று இன்றி – கல்லாடம்:2 13/25

மேல்

தாய் (3)

அறிவின் தங்கி அறு தாய் முலை உண்டு – கல்லாடம்:1 2/40
தாய் கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள் – கல்லாடம்:2 40/14
ஆசையின் செறிந்த பொங்கர் குல தாய்
அருப்பு முலை கண் திறந்து உமிழ் மது பால் – கல்லாடம்:2 46/2,3

மேல்

தாயம் (1)

மற்று அவன் தாயம் வவ்வுறு மாக்கள் – கல்லாடம்:2 44/19

மேல்

தாயர் (1)

மு முறை சுழன்று தாயர் உள் மகிழ – கல்லாடம்:2 18/25

மேல்

தாயவர் (1)

தாயவர் மயங்கும் தனி துயர் நிறுத்தி – கல்லாடம்:2 64/12

மேல்

தாயாம் (1)

பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள் – கல்லாடம்:2 23/14

மேல்

தார் (5)

சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலம் தார்
நிரைநிரை நாற்றி நெடும் காய் மயிர் அமைத்து – கல்லாடம்:2 14/5,6
பாடலம் புது தார் காளை பின் ஒன்றால் – கல்லாடம்:2 40/17
உருள் இணர் கடம்பின் நெடும் தார் கண்ணியன் – கல்லாடம்:2 41/11
உடைந்து உமிழ் நறவு உண்டு உறங்கு தார் கொன்றையன் – கல்லாடம்:2 41/41
அளி தார் பாடும் குரல் நீர் வறந்த – கல்லாடம்:2 91/11

மேல்

தாரகை (2)

இருளொடு தாரகை இரண்டினை மயக்கி – கல்லாடம்:2 33/1
பொரி என தாரகை கணன் உடல் குத்தி – கல்லாடம்:2 67/20

மேல்

தாரம் (2)

மந்தரம் மத்திமம் தாரம் இவை மூன்றில் – கல்லாடம்:2 21/55
துத்தம் தாரம் கைக்கிளை அதனுக்கு – கல்லாடம்:2 100/25

மேல்

தாரா (1)

விதியவன் தாரா உடலொடு நிலைத்த – கல்லாடம்:2 75/20

மேல்

தாரி (1)

ஒற்றை தாரி ஒரு நரம்பு இரட்ட – கல்லாடம்:2 100/17

மேல்

தாரியில் (1)

தாரியில் காட்டி தரும் சாதாரி – கல்லாடம்:2 43/31

மேல்

தாரியும் (1)

வண்டின் தாரியும் கஞ்ச நாதமும் – கல்லாடம்:2 21/50

மேல்

தாரியை (1)

பாசடைக்கு உலகவர் பயிலா தாரியை
மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர – கல்லாடம்:2 95/22,23

மேல்

தாரை (3)

குருதி தாரை கல்லொடு பிறங்க – கல்லாடம்:2 55/17
தாரை எட்டு உடைய கூர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 61/10
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல் – கல்லாடம்:2 87/34

மேல்

தாரைகள் (1)

திளையா தாரைகள் சேரா – கல்லாடம்:2 60/28

மேல்

தாரொடு (1)

தாரொடு மயங்கி பெருமையும் இலனே – கல்லாடம்:2 37/24

மேல்

தாலுறுத்த (1)

ஆந்தையும் கூகையும் அணி தாலுறுத்த
ஓரி பாட்டு எடுப்ப உவணமும் கொடியும் – கல்லாடம்:2 88/21,22

மேல்

தாவா (1)

தமிழ் கலை மாலை சூடி தாவா
புகழ் கலை உடுத்து புண்ணிய கணவன் – கல்லாடம்:2 92/7,8

மேல்

தாவி (2)

தணியா கொடும் சுரம் தரும் தழல் தாவி
பொன் உடல் தேவர் ஒக்கலொடு மயங்கி – கல்லாடம்:2 40/8,9
உறைத்து எறி கம்பலை உம்பரை தாவி
முடி தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும் – கல்லாடம்:2 47/17,18

மேல்

தாழ் (1)

கட்செவி சுழல தாழ் சடை நெறிப்ப – கல்லாடம்:2 34/11

மேல்

தாழ்த்தி (2)

ஒரு முகம் தாழ்த்தி இரு கடிப்பு ஒலிப்ப – கல்லாடம்:2 8/22
கொண்மூ பல் திரை புனலுடன் தாழ்த்தி
பொதுளிய தருவினுள் புகுந்து இமையாது – கல்லாடம்:2 40/10,11

மேல்

தாழ்ந்தனள் (1)

தாய் கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள் – கல்லாடம்:2 40/14

மேல்

தாழும் (1)

ஏழு முனிவர்கள் தாழும் மாதவர் – கல்லாடம்:2 21/38

மேல்

தாழை (2)

முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும் – கல்லாடம்:2 67/4
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/17

மேல்

தாள் (35)

நின் தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய் – கல்லாடம்:1 2/51
நிறை நீர் கயத்துள் ஒரு தாள் நின்று – கல்லாடம்:2 3/19
தாள் தலை தரித்த கோளினர் போல – கல்லாடம்:2 6/42
நெடும் தாள் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப – கல்லாடம்:2 7/28
செம் தாள் விடுத்து உறை அந்தர்கள்-தம்மினும் – கல்லாடம்:2 7/39
சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/24
கார் உடல் சிறுநகை குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 10/20
முண்டகம் மலர்த்தி முருகு அவிழ் இரு தாள்
உறைகுநர் உண்ணும் இன்பமே – கல்லாடம்:2 12/19,20
தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி – கல்லாடம்:2 22/11
இரு தாள் பெற்றவர் பெறும் திரு போல – கல்லாடம்:2 22/52
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய – கல்லாடம்:2 27/6
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன் – கல்லாடம்:2 30/10
கூடற்கு இறைவன் இரு தாள் இருத்தும் – கல்லாடம்:2 30/21
குழி கண் பரூஉ தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 32/14
செம்மலர் பழித்த தாள் கீழ் கிடத்தி – கல்லாடம்:2 33/19
சங்க குறும் தாள் பாரிடம் குனிப்ப – கல்லாடம்:2 34/7
கூடற்கு இறைவன் இரு தாள் விடுத்த – கல்லாடம்:2 37/21
பசும் தாள் சே கொள் ஆம்பல் மலர – கல்லாடம்:2 38/17
வீதிகுத்திய குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 41/1
கூடற்கு இறையோன் தாள் விடுத்தோர் என – கல்லாடம்:2 43/34
முத்தமிழ் கூடல் முதல்வன் பொன் தாள்
கனவினும் காணா கண்ணிலர் துயரும் – கல்லாடம்:2 75/21,22
பசும் தாள் தோன்றி மலர் நனி மறித்து – கல்லாடம்:2 77/2
வெள் உடல் கூர் வாய் செம் தாள் குருகு இனம் – கல்லாடம்:2 82/39
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல் – கல்லாடம்:2 87/34
ஒரு தாள் எழு புவி ஒருவ திண் தோள் – கல்லாடம்:2 88/34
மஞ்சு அடை கிளைத்த வரி குறு முள் தாள்
கூர் அரிவாளின் தோகை அம் சேவல்_கொடியோன் – கல்லாடம்:2 89/5,6
முளரி நீர் புகுத்திய பத மலர் தாள் துணை – கல்லாடம்:2 89/11
முள் தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து – கல்லாடம்:2 91/14
தளிர்த்து சிவந்த தண்டை அம் துணை தாள்
சேயோன் பரங்குன்று இழை என செறித்து – கல்லாடம்:2 92/5,6
பசும் தாள் புல் இதழ் கரும் தாள் ஆம்பல் – கல்லாடம்:2 95/20
பசும் தாள் புல் இதழ் கரும் தாள் ஆம்பல் – கல்லாடம்:2 95/20
மற்று அதன் தாள் அம் புத்திரி ஆக – கல்லாடம்:2 99/6
ஒரு தாள் மிதித்து விண் உற விட்ட – கல்லாடம்:2 99/30
மறு தாள் மலரில் மலர் கரம் துடக்கி – கல்லாடம்:2 99/31
பரும் குலை கயத்துள் கரும் தாள் கழுநீர் – கல்லாடம்:2 99/55

மேல்

தாள்கொள (1)

புள் குலம் பொய்கை-வாய் தாள்கொள
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி – கல்லாடம்:2 38/4,5

மேல்

தாள்பணியார் (1)

கூடல் நாயகன் தாள்பணியார் என – கல்லாடம்:2 44/27

மேல்

தாளம் (2)

நான்முக விதியே தாளம் தாக்க – கல்லாடம்:2 21/28
பாணி இரண்டும் தாளம் ஆக்கி – கல்லாடம்:2 99/29

மேல்

தாளால் (1)

செருப்பு உடை தாளால் விருப்புடன் தள்ளி – கல்லாடம்:2 14/28

மேல்

தாளி (1)

தாளி போந்தின் தரு மயிர் பெரும் தலை – கல்லாடம்:2 34/3

மேல்

தாளியும் (2)

தாளியும் அறுகும் வால் உழை எருக்கமும் – கல்லாடம்:2 19/26
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் – கல்லாடம்:2 64/15

மேல்

தாளோன் (1)

விரித்த தாமரை குவித்த தாளோன்
பேர் அருள் விளையா சீரிலர் போல – கல்லாடம்:2 5/20,21

மேல்

தான் (4)

தரித்தும் அணைத்தும் தான் என கண்டும் – கல்லாடம்:2 52/7
தழல் விழி பாந்தள் தான் இரை மாந்தியும் – கல்லாடம்:2 60/6
தன்னுள் தோன்றி தான் அதில் தோன்றா – கல்லாடம்:2 90/5
தண் மதி கலைகள் தான் அற ஒடுங்க – கல்லாடம்:2 95/10

மேல்

தானம் (1)

வீணை பதித்து தானம் தெரிக்க – கல்லாடம்:2 99/35

மேல்

தானவர்க்கு (1)

தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப – கல்லாடம்:2 95/24

மேல்

தானும் (1)

நாணி நின்று ஒடுங்க தானும் ஓர் நாடகம் – கல்லாடம்:2 99/25

மேல்

தானே (3)

மல்லுற தந்த ஈர்ம் தழை தானே – கல்லாடம்:2 18/41
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து – கல்லாடம்:2 25/41
சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/58

மேல்