கூ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூஉய் 1
கூஉயும் 1
கூக்குரல் 3
கூகையும் 3
கூட்டத்து 1
கூட்டம் 2
கூட்டமும் 3
கூட்டி 4
கூட்டியும் 2
கூட்டு 1
கூட்டுக 2
கூடம் 4
கூடமும் 1
கூடல் 78
கூடலம் 1
கூடலும் 1
கூடலுள் 3
கூடவும் 1
கூடற்கு 10
கூடா 3
கூடாது 2
கூடார் 1
கூடி 8
கூடிய 1
கூடியும் 1
கூடினர் 1
கூடும் 1
கூடை 1
கூண்ட 1
கூண்டு 2
கூத்து 1
கூந்தல் 1
கூப்புக 1
கூம்ப 1
கூயும் 1
கூர் 12
கூர்ம் 1
கூரிய 1
கூலம் 1
கூலிகொண்டு 1
கூவல் 1
கூவலும் 1
கூவிளம் 1
கூவையின் 1
கூழை 1
கூழையும் 1
கூளியும் 3
கூற்றம் 3
கூற்றமும் 1
கூற்று 1
கூற்றும் 1
கூற 2
கூறவும் 1
கூறா 1
கூறாது 2
கூறாம் 1
கூறார் 2
கூறி 7
கூறிடும் 1
கூறிய 3
கூறியும் 2
கூறில் 1
கூறின் 1
கூறினர் 1
கூறு 4
கூறுதல் 1
கூறுதியாயின் 1
கூறுதிர் 1
கூறுபட 2
கூறும் 2
கூறுவிர் 1
கூன் 3

கூஉய் (1)

முழங்க பெரும் குரல் கூஉய்
பழங்கண் எய்தியது பேதைமை அறிவே – கல்லாடம்:2 17/57,58

மேல்

கூஉயும் (1)

அருவி ஏற்றும் முழை மலை கூஉயும்
பெரும் சுனை விழித்த நீலம் கொய்தும் – கல்லாடம்:2 22/36,37

மேல்

கூக்குரல் (3)

வளை கண் கூர் உகிர் கூக்குரல் மொத்தையை – கல்லாடம்:2 71/18
கூக்குரல் கொள்ளா கொலை தரு நவ்வியும் – கல்லாடம்:2 77/14
மா குயில் மாழ்கி கூக்குரல் அடைப்ப – கல்லாடம்:2 94/18

மேல்

கூகையும் (3)

வளை கண் கூகையும் மயங்கி வாய் குழற – கல்லாடம்:2 7/23
உலர் கவட்டு ஓமை பொரி சினை கூகையும்
வீசு கோட்டு ஆந்தையும் சேவலோடு அலமர – கல்லாடம்:2 79/1,2
ஆந்தையும் கூகையும் அணி தாலுறுத்த – கல்லாடம்:2 88/21

மேல்

கூட்டத்து (1)

அரக்கர் கூட்டத்து அமர் விளையாட – கல்லாடம்:2 5/17

மேல்

கூட்டம் (2)

அரக்கர்-தம் கூட்டம் தொலைத்து நெய் உண்டு – கல்லாடம்:2 72/5
நிறை பொருள் அழுந்தல் அருள் இன கூட்டம்
இருள் பவம் நடுங்கல் எனும் குணம் எட்டும் – கல்லாடம்:2 86/33,34

மேல்

கூட்டமும் (3)

பெரு நகை கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை – கல்லாடம்:2 57/18
வலம்புரி கூட்டமும் சலஞ்சல புஞ்சமும் – கல்லாடம்:2 60/18
காலமுற்று ஒடுங்கும் நீள் முகில் கூட்டமும்
மணி தரு தெருவில் கொடி தரு தேரும் – கல்லாடம்:2 99/48,49

மேல்

கூட்டி (4)

கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி
ஆயிரம் தீ வாய் அரவு நாண் கொளுவி – கல்லாடம்:2 25/19,20
நகை தொகை கூட்டி கவைத்து எழு சொல்லில் – கல்லாடம்:2 87/2
நாதம் கூட்டி மாத்திரை அறுத்து – கல்லாடம்:2 99/37
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி
விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து – கல்லாடம்:2 100/20,21

மேல்

கூட்டியும் (2)

ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும் – கல்லாடம்:2 54/14
இறடி அம் சேவற்கு எறி கவண் கூட்டியும்
புனமும் எம் உயிரும் படர் கரி தடிந்தும் – கல்லாடம்:2 85/9,10

மேல்

கூட்டு (1)

நால் குறி புலவர் கூட்டு எழு நனி புகழ் – கல்லாடம்:2 99/50

மேல்

கூட்டுக (2)

ஐம்பால் குழலையும் அணி நிலை கூட்டுக
விருந்து கொண்டு உண்ணும் பெரும் தவர் போல – கல்லாடம்:2 14/45,46
பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே – கல்லாடம்:2 14/48

மேல்

கூடம் (4)

கூடம் சுமந்த நெடு முடி நேரி – கல்லாடம்:1 2/47
கூடம் சூழ்ந்த நெடு முடி பொதியத்து – கல்லாடம்:2 28/12
தன் பழம் கூடம் தனி நிலை அன்றி – கல்லாடம்:2 61/22
செய்யும் ஓர் கூடம் புணர்த்தின் – கல்லாடம்:2 61/24

மேல்

கூடமும் (1)

கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப – கல்லாடம்:2 20/36

மேல்

கூடல் (78)

பொன் நகர் கூடல் சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 1/9
பெரு நீர் வையை வளை நீர் கூடல்
உடல் உயிர் என்ன உறைதரும் நாயகன் – கல்லாடம்:2 2/7,8
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என – கல்லாடம்:2 3/18
கூடல் பெருமான் பொதிய பொருப்பகத்து – கல்லாடம்:2 4/9
கூடல் மா நகர் ஆட எடுத்த – கல்லாடம்:2 5/19
குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன் – கல்லாடம்:2 6/41
பாசடை மறைக்கும் கூடல் பெருமான் – கல்லாடம்:2 7/38
குன்றம் உடுத்த கூடல் அம் பதி இறை – கல்லாடம்:2 8/8
கூடல் அம் பதி உறை குண பெரும் கடவுள் – கல்லாடம்:2 10/23
தேவ நாயகன் கூடல் வாழ் இறைவன் – கல்லாடம்:2 12/18
கூடல் நின்று ஏத்தினர் குல கிளை போல – கல்லாடம்:2 14/36
நிறை அருள் நாயகன் உறைதரு கூடல்
வணங்கார் இனம் என மாழ்கி – கல்லாடம்:2 15/29,30
கூடல் மா நகர் ஆடிய அமுதை – கல்லாடம்:2 16/19
மூதூர் கூடல் வந்து அருள் முக்கணன் – கல்லாடம்:2 17/37
கூடல் வீற்றிருந்த நாடக கடவுள் – கல்லாடம்:2 19/24
பெரு நகர் கூடல் உறைதரு கடவுளை – கல்லாடம்:2 20/39
கூடல் அம் பதி அகம் வீடுபெற இருந்தோன் – கல்லாடம்:2 22/51
உள் வளை உறங்கும் வள் வாய் கூடல்
நிறைந்து உறை முக்கண் பெரும் திறல் அடிகள் – கல்லாடம்:2 24/33,34
நிறை நீர் வளைக்கும் புகழ் நீர் கூடல்
வெள்ளியம் பொதுவில் கள் அவிழ் குழலொடும் – கல்லாடம்:2 26/26,27
கண் இவர் கூடல் பெரு வளம் பதியே – கல்லாடம்:2 27/32
முன்னவன் கூடல் மூதூர் அன்ன – கல்லாடம்:2 32/10
நெருக்கு பொழில் கூடல் அன்ன செம் மகளிர் – கல்லாடம்:2 33/25
கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி – கல்லாடம்:2 34/14
பெம்மான் வாழும் பெரு நகர் கூடல்
ஒப்புறு பொன் தொடி சிற்றிடை மடந்தை-தன் – கல்லாடம்:2 35/11,12
நீங்கா பழன பெரு நகர் கூடல்
கரம் மான் தரித்த பெருமான் இறைவன் – கல்லாடம்:2 36/4,5
பேர் அருள் கூடல் பெரும் பதி நிறைந்த – கல்லாடம்:2 38/26
புன்னை அம் பெதும்பர் பூ நிறை கூடல் நும் – கல்லாடம்:2 40/23
ஆனா பெரும் புகழ் அருள் நகர் கூடல்
பெண் உடல் பெற்ற சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 41/37,38
கூடல் பெருமான் பொன் பிறழ் திருவடி – கல்லாடம்:2 42/29
கூடல் நாயகன் தாள்பணியார் என – கல்லாடம்:2 44/27
அலை நீர் பழன முது நகர் கூடல்
ஒப்புடைத்தாய இ பொன் தொடி மடந்தை – கல்லாடம்:2 45/25,26
காப்புற துயிற்றும் கடி நகர் கூடல்
அருளுடன் நிறைந்த கரு உயிர் நாயகன் – கல்லாடம்:2 46/6,7
அள்ளல் பழனத்து அணி நீர் கூடல்
நீங்காது உறையும் நிமிர் சடை பெருமான் – கல்லாடம்:2 47/19,20
அற பெரும் கூடல் பிறை சடை பெருமான் – கல்லாடம்:2 48/13
கூடல் அம் கானல் பெடையுடன் புல்லி – கல்லாடம்:2 49/17
குழகன் குன்ற கூடல் அம் பதி நிறை – கல்லாடம்:2 50/26
கூடல் கூடினர் போல – கல்லாடம்:2 51/32
பெரு மறை முழங்கும் திரு நகர் கூடல்
ஒப்புற்று அடை மலர் சுமந்த – கல்லாடம்:2 52/25,26
கூடல் பெருமான் நீடு அருள் மூழ்கி – கல்லாடம்:2 53/18
காலனை காய்ந்த காலினன் கூடல்
திரு மருங்கு அணைந்து வரு புனல் வையை – கல்லாடம்:2 54/9,10
நெடு மதில் கூடல் விரி புனல் வையையுள் – கல்லாடம்:2 55/26
ஒரு பரங்குன்றம் மருவிய கூடல்
பெரு நதி சடை மிசை சிறுமதி சூடிய – கல்லாடம்:2 56/12,13
கூடல் பெருமான் குரை கழல் கூறும் – கல்லாடம்:2 57/26
பேர் அருள் கொடுத்த கூடல் அம் பதியோன் – கல்லாடம்:2 58/34
சூழ்கொள இருந்த கூடல் அம் பெருமான் – கல்லாடம்:2 59/33
புண்ணிய குன்றம் புடை பொலி கூடல்
பிறை சடை முடியினன் பேர் அருள் அடியவர்க்கு – கல்லாடம்:2 61/12,13
பொழில் நிறை கூடல் புதுமதி சடையோன் – கல்லாடம்:2 62/29
மெய் தவ கூடல் விளைபொருள் மங்கையர் – கல்லாடம்:2 63/26
எறி திரை பழன கூடல்
செறிக இன்று அம்ம திருவொடும் பொலிந்தே – கல்லாடம்:2 64/33,34
தோடு அணி கடுக்கை கூடல் எம் பெருமான் – கல்லாடம்:2 65/20
பேர் ஒளி இணையா கூடல் மா மணி – கல்லாடம்:2 66/19
நாடக கடவுள் கூடல் நாயகன் – கல்லாடம்:2 68/31
தாங்கிய கூடல் பெரு நகர் – கல்லாடம்:2 69/34
புண்ணியம் குமிழ்த்த குன்று உடை கூடல்
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 70/8,9
பரங்குன்று உடுத்த பயன் கெழு கூடல்
பெரு நகர் நிறைந்த சிறுபிறை சென்னியன் – கல்லாடம்:2 72/10,11
மா தவ கூடல் மதி சடை காரணன் – கல்லாடம்:2 73/12
தரளம் சொரியும் பழன கூடல்
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன் – கல்லாடம்:2 74/23,24
முத்தமிழ் கூடல் முதல்வன் பொன் தாள் – கல்லாடம்:2 75/21
அரும் தமிழ் கூடல் பெரும் தவர் காண – கல்லாடம்:2 76/19
கூடல் ஒப்புடையாய் குல உடு தடவும் – கல்லாடம்:2 77/17
பொன் அணி மாடம் பொலி நகர் கூடல்
ஆவண வீதி அனையவர் அறிவுறின் – கல்லாடம்:2 78/24,25
ஒரு பால் பொலிந்த உயர் நகர் கூடல்
கடுக்கை அம் சடையினன் கழல் உளத்து இலர் போல் – கல்லாடம்:2 79/14,15
மாடமும் ஓங்கிய மணி நகர் கூடல்
ஆலவாயினுள் அருளுடன் நிறைந்த – கல்லாடம்:2 80/19,20
பேர் அணி உடுத்த பெரு நகர் கூடல்
கோயில்கொண்டிருந்த குண பெரும் குன்றம் – கல்லாடம்:2 81/15,16
முன்னவன் கூடல் முறை வணங்கார் என – கல்லாடம்:2 82/35
அருள் பரங்குன்றம் உடுத்து அணி கூடல்
குறும்பிறை முடித்த நெடும் சடை ஒருத்தனை – கல்லாடம்:2 83/12,13
பெரும் திரு கூடல் அரும் தவர் பெருமான் – கல்லாடம்:2 84/8
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல்
கனவினும் வினவாதவரினும் நீங்கி – கல்லாடம்:2 85/40,41
கூடல் அம் பதியகம் பரவி – கல்லாடம்:2 88/37
குன்றம் புடை வளர் கூடல்
கணிச்சி அம் கைத்தலத்து அருள் பெரும் காரணன் – கல்லாடம்:2 89/7,8
சேயோன் குன்று அக திரு பெறு கூடல்
கொழும் சுடர் கிளைத்த நெடும் சடை புயங்கன் – கல்லாடம்:2 91/4,5
தொல் நிலை கூடல் துடி_இடை அகத்தனை – கல்லாடம்:2 92/10
கூடல் கூடார் குணம் குறித்து எனவே – கல்லாடம்:2 93/25
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல – கல்லாடம்:2 94/35
ஒரு நுதல் கண்ணவன் உறைதரு கூடல்
தெளி வேல் கண் குறுந்தொடியினர் காணின் – கல்லாடம்:2 95/40,41
கூடல் பதி வரும் ஆடல் பரியோன் – கல்லாடம்:2 96/13
கூடல் பதி வரும் குண பெரும் குன்றினன் – கல்லாடம்:2 97/17
கூடல் கூடா குணத்தினர் போல – கல்லாடம்:2 98/46

மேல்

கூடலம் (1)

நான்மறை புகழும் கூடலம் பெருமான் – கல்லாடம்:2 86/24

மேல்

கூடலும் (1)

தேன் உறை தமிழும் திரு உறை கூடலும்
மணத்தலின் மதி குல மன்னவன் ஆகியும் – கல்லாடம்:2 9/12,13

மேல்

கூடலுள் (3)

மாதுடன் தோன்றி கூடலுள் நிறைந்தோன் – கல்லாடம்:2 13/24
புண்ணிய கூடலுள் நிறை பெருமான் – கல்லாடம்:2 39/16
முது நகர் கூடலுள் மூவா தனி முதல் – கல்லாடம்:2 100/10

மேல்

கூடவும் (1)

திணி புகும் வென்றி செரு அழல் கூடவும்
ஐயர் பயிற்றிய விதி அழல் ஓம்பவும் – கல்லாடம்:2 76/6,7

மேல்

கூடற்கு (10)

மா தவர் வழுத்தும் கூடற்கு இறைவன் – கல்லாடம்:2 11/30
காமரு கூடற்கு இறைவன் கழல் இணை – கல்லாடம்:2 25/39
கூடற்கு இறைவன் இரு தாள் இருத்தும் – கல்லாடம்:2 30/21
கூடற்கு இறைவன் இரு தாள் விடுத்த – கல்லாடம்:2 37/21
கூடற்கு இறையோன் தாள் விடுத்தோர் என – கல்லாடம்:2 43/34
கூடற்கு இறையோன் குரை கழல் படையால் – கல்லாடம்:2 60/21
கூடற்கு இறையோன் குறி உரு கடந்த – கல்லாடம்:2 67/24
அருவி அம் குன்றத்து அணி அணி கூடற்கு
இறையவன் பிறையவன் கறை கெழு மிடற்றோன் – கல்லாடம்:2 71/13,14
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும் – கல்லாடம்:2 87/39,40
கூடற்கு இறையவன் காலன் காய்ந்தோன் – கல்லாடம்:2 90/12

மேல்

கூடா (3)

அறிவு நிலை கூடா சில் மொழி கொண்டு – கல்லாடம்:1 2/58
மொழி குறி கூடா செவ் வேலோயே – கல்லாடம்:2 5/33
கூடல் கூடா குணத்தினர் போல – கல்லாடம்:2 98/46

மேல்

கூடாது (2)

விரிதரு கூழையும் திரு முடி கூடாது
துணை மீன் காட்சியில் விளை கரு என்ன – கல்லாடம்:2 5/26,27
ஓருழி கூடாது உம்பரில் புகுந்து – கல்லாடம்:2 74/26

மேல்

கூடார் (1)

கூடல் கூடார் குணம் குறித்து எனவே – கல்லாடம்:2 93/25

மேல்

கூடி (8)

படைப்பு முதல் மாய வான் முதல் கூடி
தாதையும் இரப்ப தளையது விடுத்தோய் – கல்லாடம்:1 2/45,46
தங்குவன கண்டும் வலி மனம் கூடி
ஏகவும் துணிந்தனம் எம் பெரும் படிறு – கல்லாடம்:2 4/14,15
தம்மில் இன்பம் சூளுடன் கூடி
ஒன்றி விளைந்து சென்றாட்கு உடைத்து – கல்லாடம்:2 17/54,55
நெடியோன் முதலாம் தேவர் கூடி
வாங்கி கடைந்த தேம்படு கடலில் – கல்லாடம்:2 19/12,13
கூடி உண்ணும் குணத்தினர் கிளை போல் – கல்லாடம்:2 35/15
பொன் அடி வருந்தியும் கூடி
அன்னையர்க்கு உதவல் வேண்டும் இ குறியே – கல்லாடம்:2 40/24,25
கூடி நின்றனை எனின் குறி தவறாவால் – கல்லாடம்:2 71/36
ஒரு கணம் கூடி ஒருங்கே – கல்லாடம்:2 75/29

மேல்

கூடிய (1)

கூடிய கானம் அன்பொடு பரவ – கல்லாடம்:2 21/57

மேல்

கூடியும் (1)

வெம்மையொடு கூடியும் தண்மை பொருந்தியும் – கல்லாடம்:2 23/10

மேல்

கூடினர் (1)

கூடல் கூடினர் போல – கல்லாடம்:2 51/32

மேல்

கூடும் (1)

கொழுநர் கூடும் காம உததியை – கல்லாடம்:2 19/7

மேல்

கூடை (1)

மான் தலை கரத்தினில் கூடை வயக்கி – கல்லாடம்:2 99/4

மேல்

கூண்ட (1)

கொலையினர் நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும் – கல்லாடம்:2 14/44

மேல்

கூண்டு (2)

மருங்கு கூண்டு எழுந்து கரும் காய் நெருங்கி – கல்லாடம்:2 21/20
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி – கல்லாடம்:2 24/4

மேல்

கூத்து (1)

கண மயில் நடன் எழ காளி கூத்து ஒடுங்க – கல்லாடம்:2 94/16

மேல்

கூந்தல் (1)

மை புற கூந்தல் கொடி வணங்கு இடையே – கல்லாடம்:2 52/27

மேல்

கூப்புக (1)

எண்ணி விரல் தேய்ந்த செம் கரம் கூப்புக
கொய் தளிர் அன்ன மேனி – கல்லாடம்:2 94/39,40

மேல்

கூம்ப (1)

கோடல் ஈன்று கொழு முனை கூம்ப
பிடவமும் களவும் ஒடு நிறை பூப்ப – கல்லாடம்:2 94/3,4

மேல்

கூயும் (1)

நெருக்கு பொழில் புக்கும் நெடு மலை கூயும்
நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்ற – கல்லாடம்:2 28/27,28

மேல்

கூர் (12)

பார்வையில் தொழில்கள் கூர் விழி கொள்ளாது – கல்லாடம்:2 5/28
சேர மறைந்த கூர் இருள் நடுநாள் – கல்லாடம்:2 8/36
கழு கடை அன்ன கூர் வாய் பெரும் கண் – கல்லாடம்:2 15/17
செம்மாந்து மணத்த அளிய கூர் எரி – கல்லாடம்:2 18/24
கைதை முள் செறிந்த கூர் எயிற்று அரவினை – கல்லாடம்:2 33/16
கூர் வாய் பறை தபு பெரும் கிழ நாரை – கல்லாடம்:2 36/2
தாரை எட்டு உடைய கூர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 61/10
வளை கண் கூர் உகிர் கூக்குரல் மொத்தையை – கல்லாடம்:2 71/18
கழு கடை அன்ன தம் கூர் வாய் பழி புலவு – கல்லாடம்:2 78/3
வெள் உடல் கூர் வாய் செம் தாள் குருகு இனம் – கல்லாடம்:2 82/39
நாரணன் ஆங்கு அவன் கூர் உடை காவல் – கல்லாடம்:2 87/31
கூர் அரிவாளின் தோகை அம் சேவல்_கொடியோன் – கல்லாடம்:2 89/6

மேல்

கூர்ம் (1)

குழி கண் பரூஉ தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 32/14

மேல்

கூரிய (1)

கொடும் சூர் கொன்ற கூரிய நெடு வேல் – கல்லாடம்:2 86/19

மேல்

கூலம் (1)

கூலம் சுமக்க கொட்டாள் ஆகி – கல்லாடம்:2 47/23

மேல்

கூலிகொண்டு (1)

நரை தலை முதியோள் இடித்து அடு கூலிகொண்டு
அடைப்பது போல உடைப்பது நோக்கி – கல்லாடம்:2 47/24,25

மேல்

கூவல் (1)

நீள் நிலை கூவல் தெளி புனல் உண்டும் – கல்லாடம்:2 12/6

மேல்

கூவலும் (1)

குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற – கல்லாடம்:2 94/27

மேல்

கூவிளம் (1)

கூவிளம் கண்ணியில் குல கிளை முரற்றியும் – கல்லாடம்:2 54/3

மேல்

கூவையின் (1)

குழை பொடி கூவையின் சிறை சிறை தீந்த – கல்லாடம்:2 7/20

மேல்

கூழை (1)

படர் காய்க்கு அணைந்த புன் கூழை அம் குறுநரி – கல்லாடம்:2 90/18

மேல்

கூழையும் (1)

விரிதரு கூழையும் திரு முடி கூடாது – கல்லாடம்:2 5/26

மேல்

கூளியும் (3)

குணங்கு இனம் துள்ள கூளியும் கொட்ப – கல்லாடம்:2 41/3
பூதமும் கூளியும் பேயும் நடிப்ப – கல்லாடம்:2 99/41
கூளியும் துள்ள ஆடிய நாயகன் – கல்லாடம்:2 100/28

மேல்

கூற்றம் (3)

கூற்றம் உருத்து எழுந்த கொள்கை போல – கல்லாடம்:2 15/20
உலகு உயிர் கவரும் கொடு நிலை கூற்றம்
மகள் என தரித்த நிலை அறிகுவனேல் – கல்லாடம்:2 67/11,12
மாவுடை கூற்றம் மலர் அயன் தண்டம் – கல்லாடம்:2 73/7

மேல்

கூற்றமும் (1)

பிறவியும் கூற்றமும் பிரிந்தன போல – கல்லாடம்:2 30/23

மேல்

கூற்று (1)

ஆக்கிய பனி பகை கூற்று இவை நிற்க – கல்லாடம்:2 76/23

மேல்

கூற்றும் (1)

மா உயிர் வௌவலின் தீ விழி கூற்றும்
என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும் – கல்லாடம்:2 56/4,5

மேல்

கூற (2)

கடவுள் கூற உலவா அருத்தியும் – கல்லாடம்:1 2/59
மூன்று காலமும் தோன்ற கூற
வேலன் சுழன்று குறுமறி அறுப்ப – கல்லாடம்:2 24/8,9

மேல்

கூறவும் (1)

கூறவும் பெறுமே ஆறது நிற்க – கல்லாடம்:2 92/19

மேல்

கூறா (1)

கூறா கற்பம் குறித்து நிலைசெய்த – கல்லாடம்:2 70/7

மேல்

கூறாது (2)

சமய கணக்கர் மதி வழி கூறாது
உலகியல் கூறி பொருள் இது என்ற – கல்லாடம்:2 13/20,21
உளத்து வேறு அடக்கி முகமன் கூறாது
வேட்கையின் நீயிர் வீழ் நாள்_பூ இனத்துள் – கல்லாடம்:2 35/5,6

மேல்

கூறாம் (1)

கூறாம் மதிய திரு நுதல் கொடியே – கல்லாடம்:2 2/25

மேல்

கூறார் (2)

கடவுள் கூறார் உளம் என குழலும் – கல்லாடம்:2 1/20
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என – கல்லாடம்:2 3/18

மேல்

கூறி (7)

கொங்கு தேர் வாழ்க்கை செந்தமிழ் கூறி
பொன் குவை தருமிக்கு அற்புடன் உதவி – கல்லாடம்:2 1/11,12
மதி மலி புரிசை திருமுகம் கூறி
அன்பு உரு தரித்த இன்பு இசை பாணன் – கல்லாடம்:2 11/27,28
உலகியல் கூறி பொருள் இது என்ற – கல்லாடம்:2 13/21
விரித்து கூறி பொருத்தமும் காண்டி – கல்லாடம்:2 25/43
எவ்வழி கிளவியின் கூறி
செவ்விதின் செல்லும் திறன் இனி யானே – கல்லாடம்:2 44/28,29
வீதி கூறி விதித்த முன் வரத்தால் – கல்லாடம்:2 45/17
பெரு மறை கூறி அறை விதி-தோறும் – கல்லாடம்:2 60/11

மேல்

கூறிடும் (1)

தோளும் இசையும் கூறிடும் கலையும் – கல்லாடம்:2 38/18

மேல்

கூறிய (3)

கோளொடு குறித்து வரும் வழி கூறிய
மறை வாய் பார்ப்பான் மகனும் பழுது இலன் – கல்லாடம்:2 15/4,5
எம் எதிர் கூறிய இ மொழி-தனக்கு – கல்லாடம்:2 17/7
இவை என கூறிய நிறை அருள் கடவுள் – கல்லாடம்:2 98/45

மேல்

கூறியும் (2)

எண்ணா வாய்மை எண்ணி கூறியும்
கல் உயர் நெடும் தோள் அண்ணல் – கல்லாடம்:2 18/39,40
ஊடியும் வணங்கியும் உவந்து அளி கூறியும்
பொறை அழி காட்சியள் ஆகி – கல்லாடம்:2 48/20,21

மேல்

கூறில் (1)

உய்ய கூறில் ஓர் நெஞ்சிடம் பொறாதே – கல்லாடம்:2 16/41

மேல்

கூறின் (1)

அவ் வழி கூறின் அ தழை வந்து – கல்லாடம்:2 48/17

மேல்

கூறினர் (1)

விள்ளும் தமியில் கூறினர்
உள்ளம் கறுத்து கண் சிவந்து உருத்தே – கல்லாடம்:2 1/26,27

மேல்

கூறு (4)

கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/17
ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு – கல்லாடம்:1 2/50
கூறு பெயரொடு வேறு பெயரிட்டு – கல்லாடம்:2 16/38
பஞ்சின் மெல் அடி பாவை கூறு ஆகி – கல்லாடம்:2 39/7

மேல்

கூறுதல் (1)

மாறுபாடு கூறுதல் இலனே – கல்லாடம்:2 16/28

மேல்

கூறுதியாயின் (1)

கண்டு அது கூறுதியாயின்
எண்தக போற்றி நின் கால் வணங்குதுமே – கல்லாடம்:2 21/65,66

மேல்

கூறுதிர் (1)

ஏகியது உண்டேல் கூறுதிர் புரிந்தே – கல்லாடம்:2 32/18

மேல்

கூறுபட (2)

ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த – கல்லாடம்:1 2/12
கூறுபட நாடி ஆசையொடு மயங்கி – கல்லாடம்:2 20/13

மேல்

கூறும் (2)

கூடல் பெருமான் குரை கழல் கூறும்
செம்மையர் போல கோடாது – கல்லாடம்:2 57/26,27
இனையவை விரித்து பல பொருள் கூறும்
வேதம் முளைத்த ஏதம்_இல் வாக்கால் – கல்லாடம்:2 98/10,11

மேல்

கூறுவிர் (1)

கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டு எமக்கே – கல்லாடம்:2 100/37

மேல்

கூன் (3)

வால் பெற முளைத்த கூன் கோடானும் – கல்லாடம்:2 19/4
மார்பமும் இருத்தியது என்ன கூன் புறத்து – கல்லாடம்:2 85/36
வரன்முறை செய்த கூன் மதி கோவும் – கல்லாடம்:2 100/6

மேல்