நெ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ் 2
நெகிழ்க்கும 1
நெகிழ்ச்சியும் 1
நெகிழ்த்து 1
நெகிழ்த்தும் 1
நெகிழ்ந்த 3
நெகிழ்ந்து 15
நெகிழ்பு 1
நெகிழ 6
நெகிழா 2
நெகிழும் 1
நெஞ்சகம் 5
நெஞ்சத்து 15
நெஞ்சம் 16
நெஞ்சமும் 2
நெஞ்சமொடு 22
நெஞ்சமோடு 2
நெஞ்சிடை 1
நெஞ்சில் 6
நெஞ்சின் 13
நெஞ்சினர் 4
நெஞ்சினள் 4
நெஞ்சினன் 5
நெஞ்சினை 3
நெஞ்சு 31
நெஞ்சுற 1
நெஞ்சொடு 1
நெட்டு 3
நெடிக்கும் 1
நெடித்த 1
நெடித்தல் 3
நெடித்தனென் 1
நெடிது 1
நெடிய 1
நெடியவன் 1
நெடியோன் 1
நெடு 47
நெடுந்தகை 12
நெடுந்தகைக்கு 1
நெடுந்தகையாள 1
நெடும் 92
நெடுமையது 1
நெடுமையும் 1
நெடுமொழி 1
நெடுமொழியாள 2
நெய் 30
நெய்த்தோர் 3
நெய்தல் 2
நெய்தலும் 1
நெய்தற்கு 1
நெய்யாட்டு 1
நெய்யும் 1
நெய்யொடு 2
நெயும் 2
நெரித்த 1
நெரித்து 2
நெரிய 2
நெரியும் 1
நெரிவுடன் 1
நெருக்கி 7
நெருக்குதும் 1
நெருக்குற்ற 1
நெருக்குறு 1
நெருங்க 9
நெருங்காது 1
நெருங்கி 12
நெருங்கிய 1
நெருங்கிற்றால் 1
நெருங்கின் 1
நெருங்கினம் 1
நெருங்கு-காலை 1
நெருங்குதும் 1
நெருங்குபு 1
நெருங்கும் 1
நெருஞ்சி 1
நெருநல் 3
நெருப்பின் 2
நெருப்பு 2
நெல் 4
நெல்லி 3
நெல்லியும் 1
நெல்லின் 2
நெல்லும் 3
நெற்சிறு 1
நெற்சிறு_தாலி 1
நெற்றி 11
நெற்றித்து 1
நெற்றியர் 1
நெற்றியில் 1
நெற்றியும் 1
நெற்றினை 1
நெறி 61
நெறி-தானே 1
நெறி-வயின் 4
நெறித்து 2
நெறிப்பட 4
நெறிப்படுத்து 1
நெறிப்படுதல் 1
நெறிமையில் 2
நெறிமையின் 6
நெறியில் 5
நெறியிற்கு 1
நெறியின் 5
நெறியின 1
நெறியினன் 1
நெறியினும் 1
நெறியும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நெகிழ் (2)

கண் நெகிழ் கடு நோய் கைவரு காலை – உஞ்ஞை:45/44
பண் நெகிழ் பாடலின் பழத்திடை தேன் போல் – இலாவாண:16/100

TOP


நெகிழ்க்கும (1)

அளி குரல் அழைஇ தெளித்து மனம் நெகிழ்க்கும
குயில் புணர் மகிழ்ச்சி அயில் கூட்டு அமைத்த – மகத:6/14,15

TOP


நெகிழ்ச்சியும் (1)

தலை-கண் தாழ்வும் இடை-கண் நெகிழ்ச்சியும்
கடை-கண் முடுக்கும் கலந்த கரணமும் – மகத:14/273,274

TOP


நெகிழ்த்து (1)

பொன்னே காண் என புரி முறை நெகிழ்த்து
துன்னார் கடந்தோன் தோன்ற காட்ட – மகத:15/46,47

TOP


நெகிழ்த்தும் (1)

சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும்
குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும் – உஞ்ஞை:37/123,124

TOP


நெகிழ்ந்த (3)

அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர் – உஞ்ஞை:42/193
திரு மனன் நெகிழ்ந்த அருள் மலி அன்பொடு – இலாவாண:8/33
நெகிழ்ந்த நீரில் கண் கையாக – மகத:24/180

TOP


நெகிழ்ந்து (15)

நீர் பொறை ஆற்றாது நெகிழ்ந்து வீழ் இசைந்த – உஞ்ஞை:40/194
இந்திர வில் நெகிழ்ந்து உருகியாங்கு – உஞ்ஞை:40/224
ஓராங்கு நிலைபெற்று உள் நெகிழ்ந்து அவிழ்ந்த – உஞ்ஞை:40/305
நெஞ்சம் நெகிழ்ந்து உவந்து அன்பு கலந்து ஆடு இயல் – உஞ்ஞை:42/139
உள் நெகிழ்ந்து கலிழ்ந்த உறாஅ நோக்கின் – உஞ்ஞை:45/43
உள் நெகிழ்ந்து உறைக்கும் கண் அகன் புறவில் – உஞ்ஞை:48/150
கண்ணிய காதல் உள் நெகிழ்ந்து விரும்பி – இலாவாண:7/158
தன் உயிர் கணவன் உள் நெகிழ்ந்து உரைக்க – இலாவாண:16/79
உள் நெகிழ்ந்து கலவா ஊடல் செவ்வியுள் – இலாவாண:16/101
ஒன்றிய காதலோடு உள் நெகிழ்ந்து உரைப – மகத:17/202
உப்பு சிறை போல் உள் நெகிழ்ந்து உருகி – மகத:20/121
என்பது கூறி அன்பு நெகிழ்ந்து உருகி – மகத:20/143
நெஞ்சு நீ நெகிழ்ந்து அவன் தெளியலை செல் என – மகத:25/77
நினைப்பின் நெகிழ்ந்து நீர் கொள இறைஞ்சி – வத்தவ:5/27
அன்பு நெகிழ்ந்து அணைஇ இன் சுவை அமிழ்தம் – வத்தவ:17/115

TOP


நெகிழ்பு (1)

சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து – மகத:14/147

TOP


நெகிழ (6)

அரையிடை நெகிழ அசைத்தல் செல்லார் – உஞ்ஞை:40/296
மென் தோள் நெகிழ பற்றி குன்றா – உஞ்ஞை:40/334
இறை வளை நில்லார் நிறை வரை நெகிழ
நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப – இலாவாண:7/57,58
நிறை மலர் நெடும் கண் நீஇர் நெகிழ
தமர்-வயின் நினைஇய தன்மையள் ஆகி – இலாவாண:10/58,59
பைம் தார் முல்லை வெண் போது நெகிழ
வெறுக்கை செல்வம் வீசுதல் ஆற்றாது – மகத:7/14,15
புல்லுகை நெகிழ புணர்வு நனி வேண்டாள் – மகத:14/106

TOP


நெகிழா (2)

நீர் உடை கொண்மூ நெகிழா காலொடு – உஞ்ஞை:43/101
நெஞ்சம் நெகிழா வஞ்சம் மனத்து அடக்கி – உஞ்ஞை:45/62

TOP


நெகிழும் (1)

உரிமை தேவி உள்ளகம் நெகிழும்
வழிமொழி கட்டளை வழிவழி அளைஇ – இலாவாண:16/69,70

TOP


நெஞ்சகம் (5)

நிறை தாழ் பறித்து என் நெஞ்சகம் புகுந்து – உஞ்ஞை:33/150
விஞ்சை அம் பெரு மலை நெஞ்சகம் பிளந்து – உஞ்ஞை:51/8
அஞ்சல் ஓம்பு என நெஞ்சகம் புகல – இலாவாண:11/77
சிந்து அரி நெடும் கண் என் நெஞ்சகம் கிழிப்ப – வத்தவ:13/70
நெஞ்சகம் படுப்ப வெம் சின வீரன் – நரவாண:8/86

TOP


நெஞ்சத்து (15)

பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா – உஞ்ஞை:33/108
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி – உஞ்ஞை:42/163
உருகும் நெஞ்சத்து உதயணகுமரனை – உஞ்ஞை:44/144
ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும் – இலாவாண:17/133
அவவுறு நெஞ்சத்து அகல்வு இடத்து அழற்ற – இலாவாண:18/9
ஆள் அவி நெஞ்சத்து அந்தணன் இருந்த – மகத:1/54
அழுங்கல் நெஞ்சத்து அயாஅ நோய் தீர – மகத:1/204
ஆய்ந்த நெஞ்சத்து அந்தணன் மகனென் – மகத:6/195
வெறுவது விடாஅ விழு தகு நெஞ்சத்து
உரத்தகையாளர் சுரத்து முதல் சீறூர் – மகத:7/24,25
நீதி அன்று என நெஞ்சத்து அடக்கி – மகத:14/35
ஆண நெஞ்சத்து அயிராபதி வந்து – மகத:17/74
ஈர நெஞ்சத்து ஆர்வலாளர் – மகத:19/35
தத்துவ நெஞ்சத்து உத்தமன் என்மரும் – மகத:20/158
தரும நெஞ்சத்து தவம் புரி தந்தை – வத்தவ:15/16
நன்னர் நெஞ்சத்து நயம் பாராட்டி – நரவாண:2/42

TOP


நெஞ்சம் (16)

ஓர்ப்புறு நெஞ்சம் தேர்ச்சியில் திருத்தி – உஞ்ஞை:32/52
நிறைமை சான்ற நின் நெஞ்சம் கொண்ட – உஞ்ஞை:36/83
நுந்தை நெஞ்சம் நீ அற பெற்றாங்கு – உஞ்ஞை:37/174
நெஞ்சம் நெகிழ்ந்து உவந்து அன்பு கலந்து ஆடு இயல் – உஞ்ஞை:42/139
நெஞ்சம் நெகிழா வஞ்சம் மனத்து அடக்கி – உஞ்ஞை:45/62
நெஞ்சம் மகிழ்ந்து நீத்து மிக உடைய – உஞ்ஞை:57/10
காவல் நெஞ்சம் கட்டு அழித்தனன் என – மகத:6/75
நெஞ்சம் உருக நிறுத்தல் ஆற்றான் – மகத:7/70
நன்னர் நெஞ்சம் நாடுவை நீ என – மகத:9/179
நெஞ்சம் துட்கென நெடு விடை நின்ற – மகத:14/155
யாப்பு உடை நெஞ்சம் அழித்தனன் அறிந்தேன் – மகத:22/96
நெஞ்சம் கொண்ட நெடுமொழியாள – மகத:22/177
நெடு நகர் மாந்தர் நெஞ்சம் தெளிய – மகத:22/242
நயந்தது நெஞ்சம் நயவாதாயினும் – வத்தவ:6/57
நிறுத்தல் ஆற்றேன் நெஞ்சம் இனி என – வத்தவ:7/109
மாட்சி நெஞ்சம் மற்று நினக்கு அல்லது – வத்தவ:15/63

TOP


நெஞ்சமும் (2)

இருவர் நெஞ்சமும் இடைவிடல் இன்றி – உஞ்ஞை:33/199
நிணம் பட நெஞ்சமும் நெற்றியும் அழுத்தி – மகத:20/9

TOP


நெஞ்சமொடு (22)

தீயுறு வெண்ணெயின் உருகு நெஞ்சமொடு
மறைந்து அவண் நின்ற மாதரை இறைஞ்சிய – உஞ்ஞை:33/153,154
உவகை நெஞ்சமொடு உவப்பன கூறி – உஞ்ஞை:36/123
மயங்கிய சனத்திடை மம்மர் நெஞ்சமொடு
நயந்த காதல் நல் நுதல் மகளிரை – உஞ்ஞை:41/112,113
சுழலும் நெஞ்சமொடு துயரம் எய்தி – உஞ்ஞை:43/161
நயந்த நெஞ்சமொடு நன்கனம் அடக்கி – உஞ்ஞை:45/36
நெஞ்சமொடு உசாவும் சிந்தையன் ஆகி – உஞ்ஞை:55/42
எண்ணிய நெஞ்சமொடு நுண் வினை பொலிந்த – இலாவாண:5/159
ஆழும் நெஞ்சமொடு அச்சம் எய்தி – இலாவாண:9/148
மறு_இல் நெஞ்சமொடு மா தவம் தாங்கி – இலாவாண:11/62
அவாவுறு நெஞ்சமொடு கவான் முதல் இரீஇ – இலாவாண:16/93
மயக்க நெஞ்சமொடு மனம் வலித்து இருந்துழி – மகத:1/57
அவல நெஞ்சமொடு அறிவு பிறிது ஆக – மகத:1/208
படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம் – மகத:8/107
புலவி நெஞ்சமொடு கலவியுள் கலங்கி – மகத:14/105
ஆகம் தோய்தற்கு அவாஅ நெஞ்சமொடு
பாசிழை நன் கலம் பரிசம் முந்துறீஇ – மகத:16/7,8
நினைப்பு உள்ளுறுத்த நெஞ்சமொடு இருந்தோற்கு – மகத:18/39
வாழேன் என்று வலித்த நெஞ்சமொடு
போகியது எல்லாம் பொய்யே போலும் – மகத:21/91,92
மகிழ்ந்த நெஞ்சமொடு மன்னவன் புகழ்ந்து – வத்தவ:4/23
அழிந்த நெஞ்சமொடு அலமரல் எய்தி – வத்தவ:5/58
நடுங்கிய நெஞ்சமொடு ஒடுங்கு_ஈர்_ஓதி – வத்தவ:7/77
உவந்த நெஞ்சமொடு நயந்து இது நன்று என – வத்தவ:15/85
வருந்திய நெஞ்சமொடு மகத நல் நாட்டு – நரவாண:3/14

TOP


நெஞ்சமோடு (2)

தோயும் மையலில் துண்ணென் நெஞ்சமோடு
ஆய்_இழை பட்டதற்கு ஆற்றாளாய் அவள் – வத்தவ:14/143,144
நயப்புறு நெஞ்சமோடு நண்பு மீக்கூரி – நரவாண:2/67

TOP


நெஞ்சிடை (1)

நீடு புகழ் குருசில் நெஞ்சிடை நலிய – மகத:3/121

TOP


நெஞ்சில் (6)

வஞ்சம் இன்மை நெஞ்சில் தேறி – உஞ்ஞை:33/21
நிறுத்தல் ஆற்றா நெஞ்சில் நிகழ் கவற்சியன் – உஞ்ஞை:53/46
நெஞ்சில் பின்னி நீங்கல் செல்லா – இலாவாண:16/40
இளையோர் நெஞ்சில் தளை முதல் பரிந்து அவர்க்கு – மகத:6/50
அரும் தனம் தாங்கி அழியும் என் நெஞ்சில்
பெரும் துயர் தீர்க்கும் மருந்து-தானே – வத்தவ:13/78,79
அடிகள் நெஞ்சில் கடிகொண்டருளும் அ – வத்தவ:14/87

TOP


நெஞ்சின் (13)

புண்ணுறு நெஞ்சின் புலம்பு கையகல – உஞ்ஞை:36/324
துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு விம்மி – உஞ்ஞை:42/120
நெஞ்சின் அஞ்சாது நிகழ்ந்தது கூறு என்று – உஞ்ஞை:47/65
மட்டு மகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய – உஞ்ஞை:48/180
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் – இலாவாண:9/137
நெறி தாழ் ஓதி நெஞ்சின் அகத்தே – இலாவாண:17/148
ஏது-கொல் உற்றது என்று எஞ்சிய நெஞ்சின்
ஊறு அவண் உண்மை தேறினள் ஆகி – இலாவாண:18/57,58
தம் தொழில் திரியா தரும நெஞ்சின்
அந்தணர் சேரி அக இதழாக – மகத:3/86,87
நெஞ்சின் அகத்தே அம் சில மிழற்றி – மகத:9/144
காமுறு நெஞ்சின் காதலர் பிரிந்தோர்க்கு – வத்தவ:7/134
நெடிக்கும் அவா என நெஞ்சின் நினைஇ – நரவாண:4/9
விருப்புறு நெஞ்சின் வியந்து விரல் நொடித்து அவன் – நரவாண:4/42
மயக்குறு நெஞ்சின் மன்னவன் முன் நாள் – நரவாண:5/30

TOP


நெஞ்சினர் (4)

நிலத்தொடு நேரா நெஞ்சினர் போல – உஞ்ஞை:46/32
பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும் – உஞ்ஞை:46/250
மத்துறு கடலின் தத்துறு நெஞ்சினர்
பை வரி நாகத்து ஐ வாய் பிறந்த – உஞ்ஞை:56/272,273
நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என – மகத:19/11

TOP


நெஞ்சினள் (4)

பருவரல் உறாஅ பையுள் நெஞ்சினள்
கண் திரள் வேய் தோள் காஞ்சனமாலையை – உஞ்ஞை:46/167,168
நினைப்பு உள்ளுறுத்த நெஞ்சினள் ஆகி – உஞ்ஞை:47/189
மெழுகு செய் பாவையின் உருகும் நெஞ்சினள்
பள்ளி கொள்ளாள் உள்ளுபு வதிய – மகத:7/89,90
கன்னி-தானும் கடி வரை நெஞ்சினள்
வேட்டுழி வேட்கை ஓட்டா ஒழுக்கினள் – மகத:8/103,104

TOP


நெஞ்சினன் (5)

இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும் – உஞ்ஞை:36/9
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி – உஞ்ஞை:54/137
ஆர்வ நெஞ்சினன் ஆகிய கல்வி – இலாவாண:11/103
நிறுக்கல் ஆற்றா நெஞ்சினன் ஆகி – மகத:10/54
வையம் போக்கி நவை_அறு நெஞ்சினன்
மக்கள் இன்று எனின் மிக்கு உயர் சிறப்பின் – நரவாண:1/56,57

TOP


நெஞ்சினை (3)

உள் வழி உணராது உழலும் என் நெஞ்சினை
பல் இதழ் கோதை பதுமாபதி எனும் – மகத:8/92,93
திண்-பால் நெஞ்சினை திரிதல் ஒன்று இன்றி – மகத:8/96
கொட்புறு நெஞ்சினை திட்பம் கொளீஇ – வத்தவ:13/142

TOP


நெஞ்சு (31)

நீல யானை நெஞ்சு புக்கனன் போல் – உஞ்ஞை:32/55
ஒழுகுபு சோர்ந்தாங்கு உக்கது என் நெஞ்சு என – உஞ்ஞை:33/132
நெஞ்சு தம் கூறி – உஞ்ஞை:34/74
நேர்வது பொருள் என நெஞ்சு வலியுறீஇ – உஞ்ஞை:34/95
நினைத்தது மிகை என நெஞ்சு வலியுறீஇ – உஞ்ஞை:35/18
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுறீஇ – உஞ்ஞை:36/78
நுந்தை நேரா நெஞ்சு கொள் காரணம் – உஞ்ஞை:36/87
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் – உஞ்ஞை:40/364
அஞ்சல் செல்லாது நெஞ்சு வலித்து ஆடும் இ – உஞ்ஞை:41/102
நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்து உரையா – உஞ்ஞை:44/147
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுற – உஞ்ஞை:44/148
நீயான் போல நெஞ்சு உணர் மதிப்பினன் – உஞ்ஞை:49/10
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி – இலாவாண:3/115
நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப – இலாவாண:7/58
நெடு நகர் மாந்தர் நெஞ்சு உண திரிதரும் – இலாவாண:8/132
வஞ்ச இறுதி நெஞ்சு உண தேற்றி – இலாவாண:9/39
நெஞ்சு வலிப்புறுத்து நீக்குவனன் நிறீஇ – இலாவாண:9/144
நேர் தனக்கு இல்லா நெஞ்சு உண் அமைதி – இலாவாண:11/104
நெஞ்சு புரை அமைச்சன் நீதியின் செய்த – இலாவாண:17/99
வஞ்சமாயினும் நெஞ்சு வலியுறுக்க என – மகத:4/68
பைம் தொடி மகளிர் நெஞ்சு நிறை அன்பொடு – மகத:5/114
செம் சுடர் வேலின் நெஞ்சு இடம் போழ – மகத:6/16
வெம் சின விடலை நெஞ்சு நிறை துயரமொடு – மகத:6/31
நெஞ்சு இறைகொளீஇய நிறை அமை நெடும் தாழ் – மகத:6/56
வெம் சின விடலையொடு நெஞ்சு மாறாடி – மகத:6/76
நெஞ்சு நிறை விட்டனள் ஆகும் அன்றெனின் – மகத:8/113
நெஞ்சு நீ நெகிழ்ந்து அவன் தெளியலை செல் என – மகத:25/77
நிலைப்பாடு எல்லாம் நெஞ்சு உண கேட்டு – வத்தவ:4/32
கண் கவர் அழகொடு நெஞ்சு அகலாதன – வத்தவ:12/53
இயைந்த நெஞ்சு உடை யாம் இருவர்க்கும் – வத்தவ:13/237
நெஞ்சு அமர் தோழி நிலைமை கேள்-மதி – நரவாண:3/31

TOP


நெஞ்சுற (1)

வெம் சின வீரனை நெஞ்சுற கழற – நரவாண:3/23

TOP


நெஞ்சொடு (1)

சினம் கொள் நெஞ்சொடு பெயர்ந்து அவள் வதிய – வத்தவ:13/254

TOP


நெட்டு (3)

நெட்டு இரும் பொய்கை குட்டம் மண்டி – உஞ்ஞை:40/34
நெட்டு இரும் கூந்தல் நீர் அற வாரி – இலாவாண:5/172
கட்டு அழல் கதிய நெட்டு இரும் கூந்தல் – இலாவாண:18/70

TOP


நெடிக்கும் (1)

நெடிக்கும் அவா என நெஞ்சின் நினைஇ – நரவாண:4/9

TOP


நெடித்த (1)

முடித்த நோன்பின் நெடித்த வகை அறியார் – மகத:13/68

TOP


நெடித்தல் (3)

நெடித்தல் செல்லாய் விடுத்தல் நீ என – உஞ்ஞை:54/89
நெடித்தல் செல்லாது வா என வழிநாள் – வத்தவ:10/187
நெடித்தல் செல்லாது அரியவை ஆயினும் – நரவாண:4/44

TOP


நெடித்தனென் (1)

நெடித்தனென் எழுக என விடுத்தனள் போக – நரவாண:1/102

TOP


நெடிது (1)

இடம் புகுதக்கன்று இருத்தல் நெடிது என – உஞ்ஞை:32/90

TOP


நெடிய (1)

நீறு மெய் பூசி நெடிய மயிர் களை – வத்தவ:14/67

TOP


நெடியவன் (1)

நெடியவன் மூவகை படிவம் பயின்ற – இலாவாண:15/10

TOP


நெடியோன் (1)

நெடியோன் அன்ன நெடும் தகை மற்று நின் – வத்தவ:5/9

TOP


நெடு (47)

நிலம் தோய்பு உடுத்த நெடு நுண் ஆடையர் – உஞ்ஞை:32/64
நிறை_நூல் பொத்தக நெடு மணை ஏற்றி – உஞ்ஞை:34/26
நெடு வெண் நிலவின் நீர்மைக்கு இரங்கி – உஞ்ஞை:35/235
நெடு வெண் தானை வாங்கி கொண்டு தன் – உஞ்ஞை:36/98
அயிர் இடு நெடு வழி அரசிடை இருந்துழி – உஞ்ஞை:36/224
கால் நெடு மணையும் கட்டுறுத்து யாத்த – உஞ்ஞை:36/227
நெடு நிலை மாநகர் நில்லான் போதந்து – உஞ்ஞை:38/310
இடு மணி பெரு நிரை நெடு மணில் கிடைஇ – உஞ்ஞை:39/34
நீர் அணி மாடத்து நிலா நெடு முற்றத்து – உஞ்ஞை:40/17
நெடு வீழ் ஊசல் முடி பிணி ஏறி – உஞ்ஞை:40/113
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி – உஞ்ஞை:40/156
கள் அமர் தேவி நின் கதிர் விடு நெடு முகத்து – உஞ்ஞை:40/173
நீராட்டு அரவம் நெடு நகர் வரைப்பகம் – உஞ்ஞை:42/1
நெடு நீர் விழவில் படை பிடித்தோரை – உஞ்ஞை:43/15
நெடு வெண் திங்கள் அகடுற தழுவும் – உஞ்ஞை:47/202
வரம்பு அணி கொண்ட நிரம்பு அணி நெடு விடை – உஞ்ஞை:48/160
கொடி மணி நெடு மதில் கொற்றவன் மட மகள் – உஞ்ஞை:54/55
கொடி அணி நெடு மதில் கொடி கோசம்பி – உஞ்ஞை:54/76
நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை – உஞ்ஞை:55/53
படை அமை நெடு மதில் கடை முகம்-தோறும் – இலாவாண:2/57
பொன் அணி நெடு மலை போலவும் பொழில்-வயின் – இலாவாண:3/92
நிலத்து மிசை இழிந்த நிகர்_இல் நெடு முடி – இலாவாண:4/114
அரு வரை பிளந்த அஞ்சுவரு நெடு வேல் – இலாவாண:5/147
நெடு நகர் மாந்தர் நெஞ்சு உண திரிதரும் – இலாவாண:8/132
வேகம் தணியா வெம் சின நெடு வேல் – இலாவாண:9/201
நெடு காழ் போல நிலைமையின் வழாஅது – இலாவாண:10/163
நின் பெறு சிறப்பொடு நெடு நகர் புகல – இலாவாண:17/124
மணி கை நெடு வரை மா மலை சாரல் – இலாவாண:19/35
நெடு முடி மன்னருள் மன்னன் நேரார் – இலாவாண:20/119
கடு முரண் அழித்த காய் சின நெடு வேல் – இலாவாண:20/120
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல் – மகத:1/2
நெடு நீர் பேரியாறு நிறைந்து விலங்கு அறுத்து – மகத:3/39
நீர் உடை வரைப்பின் நெடு மொழி நிறீஇய – மகத:9/150
நெஞ்சம் துட்கென நெடு விடை நின்ற – மகத:14/155
ஊன் இவர் நெடு வேல் உருவ கழல் கால் – மகத:17/34
நெடு நகர் மாந்தர் நெஞ்சம் தெளிய – மகத:22/242
அழல் மணி நெடு முடி அரசருள் அரசன் – மகத:22/252
அண்ணல் நெடு முடி அமர் இறை போல – மகத:23/8
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி – மகத:24/138
மன் அடு நெடு வேல் மகத மன்னற்கு – மகத:25/43
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய – மகத:27/72
கரப்பு அமை நெடு வேய் நரப்பு புறம் வருட – வத்தவ:3/80
பெரு நகர் நெடு மதில் புறம் மருங்கு இயன்ற – வத்தவ:16/4
நீல நெடு மயிர் எறியும் கருவி – வத்தவ:16/25
மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி – நரவாண:3/52
எரியுறு நெடு வேல் ஏய இறைவன் – நரவாண:7/152
நிலம் பெறு திருவின் நெடு முடி அண்ணலை – நரவாண:8/2

TOP


நெடுந்தகை (12)

புரிதார் நெடுந்தகை பூ அணை வைகிய – உஞ்ஞை:34/5
நிலம் பெயர்ந்து உறைதல் நெடுந்தகை வேண்டான் – உஞ்ஞை:38/97
வாள் கெழு நெடுந்தகை வளம் பட எழலும் – உஞ்ஞை:38/140
நும்-பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய – உஞ்ஞை:46/106
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான் – இலாவாண:4/176
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை நினைந்து – இலாவாண:11/2
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை குருசிலை – இலாவாண:17/13
நேர்ந்த மாதரை நெடுந்தகை குருசில் – இலாவாண:17/192
நிகழ்ந்தது இற்று என நெடுந்தகை கேட்டு – மகத:18/35
நேர்ந்தனன் நின்னை நெடுந்தகை இன்று என – மகத:21/36
வாழிய நெடுந்தகை எம் இடர் தீர்க்க என – வத்தவ:1/23
கூறு நனி செய்து வீறு உயர் நெடுந்தகை
கொடுத்த-காலை அடுத்த அன்போடு – வத்தவ:12/10,11

TOP


நெடுந்தகைக்கு (1)

நேர்ந்ததை எல்லாம் நெடுந்தகைக்கு உரைப்ப – உஞ்ஞை:34/111

TOP


நெடுந்தகையாள (1)

நீர் மலர் படலை நெடுந்தகையாள
காணாய் ஆகி ஆனா இரக்கமொடு – இலாவாண:18/35,36

TOP


நெடும் (92)

மதர் அரி நெடும் கண் வேல் கடை கான்ற – உஞ்ஞை:33/123
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி – உஞ்ஞை:34/222
வண் பரி புரவியும் வால் நெடும் தேரும் – உஞ்ஞை:37/44
கால் புடைத்து எடுத்த கதலிகை நெடும் கொடி – உஞ்ஞை:38/8
மாக்கள் உழிதரும் மணல் நெடும் தெருவில் – உஞ்ஞை:38/69
பாகர் நின்ற பண் அமை நெடும் தேர் – உஞ்ஞை:38/347
நிலை_இன்று உழிதரும் நெடும் சுழி நீத்தத்து – உஞ்ஞை:40/185
பண் அமை நெடும் புணை திண்ணிதின் தழீஇ – உஞ்ஞை:40/187
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய – உஞ்ஞை:40/199
ஐ அரி பரந்த அரி மலர் நெடும் கண் – உஞ்ஞை:40/218
தத்து அரி நெடும் கண் தகை விரல் புதைஇ – உஞ்ஞை:40/308
நெடும் புணை தழீஇ நீத்தொடு மறல – உஞ்ஞை:40/354
கயல் ஏர் நெடும் கண் கடும் பனி கால – உஞ்ஞை:40/359
அம்பு என கிடந்த ஐ அரி நெடும் கண் – உஞ்ஞை:41/72
மணல் இகு நெடும் துறை மங்கலம் பேணி – உஞ்ஞை:41/93
நெடும் துறை நீந்தி நிலைகொளல் அறியார் – உஞ்ஞை:41/116
நில்லா தண் புனல் நெடும் கோட்டு ஒருசார் – உஞ்ஞை:42/82
செரு கயல் அன்ன சே அரி நெடும் கண் – உஞ்ஞை:42/131
நீர் தலைக்கொண்ட நெடும் பெரும் துறை-வயின் – உஞ்ஞை:42/184
அயில் இடு நெடும் கண் அரும் பனி உறைத்தர – உஞ்ஞை:44/9
வடு போழ்ந்து அன்ன வாள் அரி நெடும் கண் – உஞ்ஞை:46/223
மையார் நெடும் கண் மாலை யாமத்து – உஞ்ஞை:46/302
கோமகன் இருந்த கோயில் நெடும் கடை – உஞ்ஞை:47/5
செரு செய் நெடும் கண் தீ என சிவப்ப – உஞ்ஞை:47/100
தத்தரி நெடும் கண் தத்தை-தம் இறை – உஞ்ஞை:48/67
நெடும் தாள் மாவின் நெய் படு கனியும் – உஞ்ஞை:51/17
நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி – உஞ்ஞை:54/42
படி அணி நெடும் கடை பகல் அங்காடியுள் – உஞ்ஞை:54/77
வெண் மதி நெடும் குடை வேற்றவன் படையொடு – உஞ்ஞை:55/24
நேரம் பார்த்து நெடும் தகை குரிசிலை – உஞ்ஞை:57/74
ஏம நெடும் கரை எய்தி யாமத்து – உஞ்ஞை:57/108
தண் மகிழ் நெடும் குழல் தத்து ஒளி தாமத்து – இலாவாண:2/5
நிறை போது பரப்பி நெடும் கடை-தோறும் – இலாவாண:2/105
வித்தகர் புனைந்த சித்திர நெடும் குடை – இலாவாண:5/12
நெடும் தோள் வளையும் கடும் கதிர் கடகமும் – இலாவாண:5/141
தாம நெடும் குடை தகைபெற கவிப்ப – இலாவாண:6/14
அரி மதர் நெடும் கண் அளவு இகந்து அகல – இலாவாண:7/111
பால் நீர் நெடும் கடல் பனி நாள் எழுந்த – இலாவாண:7/154
நிணம் பசை கொண்ட நீளி நெடும் பல் – இலாவாண:8/108
முழு மதில் நெடும் கடை முதல் பெரு நகரம் – இலாவாண:9/187
நிறை மலர் நெடும் கண் நீஇர் நெகிழ – இலாவாண:10/58
நொய் மர நெடும் புணை கைம்முதல் தழீஇ – இலாவாண:11/33
நெடும் தோள் அரிவை நின்னை பெற்றதூஉம் – இலாவாண:11/152
அரி மலர் நெடும் கண் அழல் எழ நோக்கி – இலாவாண:12/92
காமர் நெடும் கண் கைம்மீ சிவப்ப – இலாவாண:14/63
செரு வேல் பழித்த சே அரி நெடும் கண் – இலாவாண:15/85
இணை மலர் நெடும் கண் இமைத்தலும் வாடிய – இலாவாண:15/117
மது களி கொண்ட மதர் அரி நெடும் கண் – இலாவாண:16/74
தளை அவிழ்ந்து அகன்ற தாமரை நெடும் கண் – இலாவாண:19/103
அரி பரந்து அகன்ற அம் மலர் நெடும் கண் – மகத:1/46
கடை போழ் நெடும் கண் காம நோக்கம் – மகத:1/144
வரு திரை நெடும் கடல் வாய் கொண்டு உமிழ்தலும் – மகத:4/87
செம்மை நெடும் கண் வெம்மை அறாஅ – மகத:6/20
நலத்தொடு புணர்ந்த இலக்கண நெடும் கண் – மகத:6/53
நெஞ்சு இறைகொளீஇய நிறை அமை நெடும் தாழ் – மகத:6/56
அரி மதர் நெடும் கண் அயல் நின்றோர்க்கும் – மகத:6/80
துணை பிரி மகளிர் இணை மலர் நெடும் கண் – மகத:7/32
அரி மலர் நெடும் கண் அக-வயின் போகா – மகத:7/84
காமர் நெடும் கண் கலந்த காமமும் – மகத:9/18
நெடும் தோள் செல்லல் தீர சிறந்தவன் – மகத:9/77
நீதியின் காட்ட நெடும் தகை அண்ணல் – மகத:10/41
செருக்கிய நெடும் கண் செவ்வி பெற்றாங்கு – மகத:14/36
குறும் புரி கொள்ளாது நெடும் புரித்து ஆதலும் – மகத:15/43
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய – மகத:17/14
கொலை வினை படை மா கொடி அணி நெடும் தேர் – மகத:17/249
குளிர் நீர் நெடும் கடல் கொண்ட அமிழ்து என – மகத:24/111
புலவியின் நடுங்கி பூ புரை நெடும் கண் – மகத:24/171
கொடும் தாழ் நூக்கி நெடும் புணை களைந்து – மகத:25/20
சக்கர நெடும் கொடி அற்றன ஆகி – மகத:27/77
நெடியோன் அன்ன நெடும் தகை மற்று நின் – வத்தவ:5/9
சினம் மலி நெடும் கண் சேர்த்திய பொழுதின் – வத்தவ:7/67
எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து – வத்தவ:7/79
கொடுஞ்சி நெடும் தேர் கோல் கொள ஏறி – வத்தவ:7/147
நெடும் கொடி வீதி நீந்துபு போகி – வத்தவ:7/148
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர் – வத்தவ:8/2
சிலை பொலி நெடும் தேர் செவ்விதின் நல்கி – வத்தவ:11/58
வரி நெடும் பந்து வந்து எதிர் கொள்ளுநர் – வத்தவ:12/133
சிந்து அரி நெடும் கண் என் நெஞ்சகம் கிழிப்ப – வத்தவ:13/70
நீல நெடும் கண் நிரை வளை தோளி – வத்தவ:13/107
வரி நெடும் தொடையல் வயந்தகன் அவ்வயின் – வத்தவ:14/164
நெடும் தேர் வீதியும் அல்லா இடமும் – வத்தவ:15/149
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி – நரவாண:1/77
நீடு பெறல் அரிதாம் நெடும் கை விலங்கின் – நரவாண:3/106
மண் அமை நெடும் தோள் மறமாச்சேனற்கு – நரவாண:3/116
திரு மலர் நெடும் கண் தெண் பனி உறைத்தந்து – நரவாண:3/157
துனை சேர் நெடும் தேர் துவன்றிய தானை – நரவாண:6/2
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள் – நரவாண:7/23
மதி மருள் நெடும் குடை மறமாச்சேனற்கு – நரவாண:7/28
ஊர் திரை நெடும் கடல் உலப்பு_இல் நாளொடு – நரவாண:7/44
மா படு வடு உறழ் மலர் நெடும் கண்ணும் – நரவாண:8/104
சேண் நெடும் தெருவும் சிற்றங்காடியும் – நரவாண:8/37
தாமரை நெடும் கண் தம் தொழில் தொடங்க – நரவாண:8/94

TOP


நெடுமையது (1)

நிறத்தது நீர்மையும் நெடுமையது அளவும் – உஞ்ஞை:45/24

TOP


நெடுமையும் (1)

நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும் – வத்தவ:14/49

TOP


நெடுமொழி (1)

நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ – வத்தவ:15/24

TOP


நெடுமொழியாள (2)

நெஞ்சம் கொண்ட நெடுமொழியாள
வஞ்ச உருவொடு வலைப்படுத்தனை என – மகத:22/177,178
நின்-கண் மாண்பின் நெடுமொழியாள
ஆயிற்று என்று பல அருளொடும் புணர்ந்த – நரவாண:7/138,139

TOP


நெய் (30)

நெய் சூட்டு இயன்ற சிறு பல் உண்டி – உஞ்ஞை:40/130
உருக்குறு நறு நெய் உள்ளுற பெய்த – உஞ்ஞை:40/280
மொய்யுற தோய்ந்த நெய் தயங்கு பைம் தாள் – உஞ்ஞை:42/111
நெய் பெய் அழலில் கை இகந்து பெருகி – உஞ்ஞை:42/235
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில் – உஞ்ஞை:43/125
நறு நெய் பயந்த நல் நகர் மு_தீ – உஞ்ஞை:43/173
கை-வயின் கொண்ட நெய் அகல் சொரியும் – உஞ்ஞை:47/174
சேதா நறு நெய் ஆசு இன்று உகுத்து – உஞ்ஞை:48/92
நிறை உறு தீம் தேன் நெய் தொடை முதிர்வை – உஞ்ஞை:48/147
நெடும் தாள் மாவின் நெய் படு கனியும் – உஞ்ஞை:51/17
திருத்தி அணிந்து மருப்பு நெய் பூசி – உஞ்ஞை:58/69
நெய் சூட்டு அமைந்த சிற்றூண் பந்தரோடு – இலாவாண:2/81
நெய் உலை வெந்த மை நிற புழுக்கொடு – இலாவாண:3/42
துடுப்பில் தோய்த்த சேதா நறு நெய்
அடுத்த செம் தீ அங்கு அழல் ஆர்த்தி – இலாவாண:3/83,84
நல் நெய் தீட்டிய செம் மலர் அங்கை – இலாவாண:3/89
நெய் தலைப்பெய்தற்கு எய்திய சிறப்பு அணி – இலாவாண:5/67
நறு நெய் தோய்த்து முறை முதல் நீவி – இலாவாண:5/70
நானம் கலந்த நறு நெய் தோய்த்து – இலாவாண:5/89
நெய் தலைப்பெய்த பின்றை மெய்-வயின் – இலாவாண:5/96
வாச வெண் நெய் பூசினர் போற்றி – இலாவாண:5/101
மான் நிண புழுக்கலொடு தேன் நெய் விதவையின் – இலாவாண:12/113
நல தகு சேதா நறு நெய் தீம் பால் – இலாவாண:17/6
நெய் நிறம் கொண்ட பைம் நிற மஞ்சளின் – மகத:5/60
கோல் நெய் பூசி தூய்மையுள் நிறீஇ – மகத:14/110
நெய் தலைப்பெய்து மை அணி உயர் நுதல் – மகத:22/199
குடுமி கூந்தலுள் நறு நெய் நீவி – வத்தவ:2/31
அழல் நெய் பெய்து என்று ஆற்றேன் என்னை – வத்தவ:7/23
நெய் தோய்த்து அன்ன நிறத்த ஆகி – வத்தவ:16/9
கான காழ் அகில் தேன் நெய் தோய்த்து – வத்தவ:16/12
நெய் கூட்டு இலங்கு நித்திலம் நிகர்த்து – நரவாண:1/206

TOP


நெய்த்தோர் (3)

மத்தகத்து இழிதரு நெய்த்தோர் பெரும் புனல் – உஞ்ஞை:46/36
நெய்த்தோர் கச்சையின் நித்திலம் போல – உஞ்ஞை:58/5
நெய்த்தோர் பட்டிகை ஆக வைத்து – வத்தவ:1/12

TOP


நெய்தல் (2)

நெய்தல் புலையன் நெறியில் சாற்றி – உஞ்ஞை:36/158
கோல கழுநீர் குழி வாய் நெய்தல்
எழு நீர் குவளையொடு இன்னவை பிறவும் – உஞ்ஞை:48/48,49

TOP


நெய்தலும் (1)

பாலையும் நெய்தலும் வேலி ஆக – மகத:2/39

TOP


நெய்தற்கு (1)

எவ்வம் தீராது நெய்தற்கு அவாவும் – இலாவாண:16/35

TOP


நெய்யாட்டு (1)

நெய்யாட்டு அரவமும் நீராட்டு அரவமும் – நரவாண:6/72

TOP


நெய்யும் (1)

திரியும் நெய்யும் ஒரு-வயின் செல்லிய – மகத:1/6

TOP


நெய்யொடு (2)

ஐஇய வாச ஆன் நெய்யொடு கலந்த – இலாவாண:3/22
மலை பெய் நெய்யொடு தலைப்பெய்தாங்கு – இலாவாண:8/12

TOP


நெயும் (2)

ஆன் நெயும் வெண்ணெயும் அனையவை பிறவும் – இலாவாண:4/93
பண்ணிய நறு நெயும் எண்ணெயும் பெய்து – வத்தவ:14/159

TOP


நெரித்த (1)

காலம் அன்றியும் கையின் நெரித்த
கழுநீர் குவளை பெரும் பொதி அவிழ்ந்த – உஞ்ஞை:35/183,184

TOP


நெரித்து (2)

கண்ணில் கண்டேன் என்று கை நெரித்து
ஒள் நுதல் மாதர் உரு கெழு சினத்தள் – மகத:14/114,115
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து – வத்தவ:16/41

TOP


நெரிய (2)

நிரை கொள் அன்பு தளை நெரிய ஊர்தரும் – உஞ்ஞை:40/326
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி – உஞ்ஞை:42/113

TOP


நெரியும் (1)

நெரியும் தெருவும் நிரம்பிய மறுகும் – நரவாண:8/39

TOP


நெரிவுடன் (1)

நீங்கி புருவ நெரிவுடன் எற்றியும் – வத்தவ:12/103

TOP


நெருக்கி (7)

வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர – உஞ்ஞை:36/68
பைதல் பம்பை இடம் கண் நெருக்கி
மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை – உஞ்ஞை:36/159,160
கண்ட வேட்டுவர் தண்டாது நெருக்கி
மை அணி இரும் பிடி வீழ மற்று நீ – உஞ்ஞை:55/133,134
படையும் நெருக்கி
பாலிகை விளிக்கும் பண் அமை பற்றினர் – மகத:20/12,13
முன்னும் பின்னும் பக்கமும் நெருக்கி அவன் – மகத:25/127
மற போர் ஆனையின் மதம் தவ நெருக்கி
அற பேராண்மையின் அடக்கிய யாக்கையன் – வத்தவ:7/156,157
பொன்றா வேட்கை புலங்களை நெருக்கி
வென்றார் ஆயினும் விழையும் விழவு அணி – நரவாண:8/8,9

TOP


நெருக்குதும் (1)

செறப்படு மன்னனை சென்றனம் நெருக்குதும்
என்றனன் விடுத்தலின் நன்று என விரும்பி – மகத:26/63,64

TOP


நெருக்குற்ற (1)

வம்பு நெருக்குற்ற பொங்கு இள முலையர் – உஞ்ஞை:46/244

TOP


நெருக்குறு (1)

நெருக்குறு சுற்றத்து விருப்பின் நோக்கி – உஞ்ஞை:38/188

TOP


நெருங்க (9)

முழுது நுதல் நெருங்க முரிய ஏற்றி – உஞ்ஞை:40/322
கரும் கண் பம்பை நெருங்க கொட்டி – உஞ்ஞை:49/4
பொம்மென் முலையொடு பொன் பூண் நெருங்க
விம்மம் உறும் அவள் வேண்டா முயக்கு என – இலாவாண:16/98,99
அரும் படை மன்னர் ஆற்றலின் நெருங்க
தலைமையின் வழீஇய நிலைமை எய்தினும் – மகத:3/91,92
அன்று முதலாக சென்று முறை நெருங்க
பவழமும் மணியும் பாங்குபட விரீஇ – மகத:7/44,45
கடும் புனல் நெருங்க உடைந்து நிலை ஆற்றா – மகத:20/120
செவ்வாய் விருச்சிகம் சென்று மேல் நெருங்க
ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி – மகத:27/134,135
வந்தனென் என்றே சென்று மேல் நெருங்க
இடு களி யானை எதிர் கண்டாங்கு உருத்து – மகத:27/144,145
நிறுத்து பல ஊசி நெருங்க ஊன்றினும் – வத்தவ:10/22

TOP


நெருங்காது (1)

சென்று நெருங்காது பின்றியும் விடாது – இலாவாண:19/223

TOP


நெருங்கி (12)

மதம் தலை நெருங்கி மத களிறு வலியா – உஞ்ஞை:44/61
சிறை அழி புனலில் சென்று மேல் நெருங்கி
வேலும் கணையமும் வீழினும் இமையார் – உஞ்ஞை:46/16,17
முன்னும் பின்னும் பக்கமும் நெருங்கி
பொன் அணி மார்பன் போர் தொழில் அடங்க – உஞ்ஞை:56/50,51
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் – இலாவாண:7/138
பட்டவர் தம் தமர் பகையின் நெருங்கி
கட்டு எரி கொளீஇ கரந்தனர் எனலும் – இலாவாண:9/149,150
வேண்டிய மருங்கில் காண் தக நெருங்கி
செம் சுடர் மணி முடி திகழும் சென்னி – மகத:3/101,102
வேண்டு இடம்-தோறும் காண் தக நெருங்கி
ஆதி ஆகி அமைந்த வனப்பு எய்தி – மகத:4/29,30
மறத்தால் நெருங்கி மற்று அவருடன் – மகத:20/58
மறனில் நெருங்கி நெறிமையின் ஒரீஇ – வத்தவ:2/54
நெருங்கி மேல் செற்றி ஒருங்கு வந்து இறுப்ப – வத்தவ:10/84
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும் – வத்தவ:11/7
சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி
விலக்கு வரை நில்லாது வெம் பசி நலிய – நரவாண:3/130,131

TOP


நெருங்கிய (1)

நெருங்கிய பல் சனம் விரும்புபு நோக்க – வத்தவ:16/1

TOP


நெருங்கிற்றால் (1)

நிலை இடம் பெறாது நெருங்கிற்றால் சனம் என் – வத்தவ:15/151

TOP


நெருங்கின் (1)

மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின்
என் ஆம் அன்னது இன்னா தரூஉம் – மகத:19/87,88

TOP


நெருங்கினம் (1)

அரும் திறன் மன்னனை நெருங்கினம் ஆகி – மகத:17/44

TOP


நெருங்கு-காலை (1)

மேல் படை நெருங்கு-காலை மாற்றவன் – மகத:27/29

TOP


நெருங்குதும் (1)

செரு உடை மன்னரை சென்று மேல் நெருங்குதும்
பொரு படை தொகுத்து போதுக என்று ஏவலின் – மகத:19/55,56

TOP


நெருங்குபு (1)

நிலை இடம் பெறாஅர் நெருங்குபு செற்றி – இலாவாண:5/8

TOP


நெருங்கும் (1)

மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும்
இசையா அரும் பொருள் இற்று என உரைத்தல் – நரவாண:1/232,233

TOP


நெருஞ்சி (1)

செம் கதிர் விரும்பும் பைம் கொடி நெருஞ்சி
பொன் புனை மலரின் புகற்சி போல – இலாவாண:4/14,15

TOP


நெருநல் (3)

நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை – உஞ்ஞை:55/80
நீக்க சென்றனென் நெருநல் இன்று இவண் – மகத:6/32
ஒரு புள் பெற்றேன் நெருநல் இனிது என – வத்தவ:14/169

TOP


நெருப்பின் (2)

புனல்படு நெருப்பின் பொம்மென உரறி – உஞ்ஞை:47/129
நிலன் உடன் அதிர நெருப்பின் காய்ந்து – மகத:24/63

TOP


நெருப்பு (2)

நிகழ்ந்தது இற்று என நெருப்பு நுனை உறீஇ – உஞ்ஞை:47/237
இருப்பு அகல் நிறைந்த நெருப்பு நிறை சுழற்றி – இலாவாண:3/48

TOP


நெல் (4)

மல்லிகை சூட்டும் நெல் வளர் கதிரும் – உஞ்ஞை:42/68
வெதிரில் பிறந்த பொதி அவிழ் அரு நெல்
மருப்பினுள் பிறந்த மண்ணா முத்தம் – உஞ்ஞை:51/12,13
கழனி விளை நெல் கனை எரி கொளீஇ – மகத:19/41
கழனி காய் நெல் கவர் கிளி கடியும் – வத்தவ:8/41

TOP


நெல்லி (3)

சிற்றிலை நெல்லி சிறு காய் துணரும் – உஞ்ஞை:51/29
வெண் பூம் கவள முனைஇ நெல்லி
பைம் காய் அமிழ்தம் பல்-வயின் அடக்கி – உஞ்ஞை:52/66,67
தீம் சுவை நெல்லி திரள் காய் தாரையுள் – இலாவாண:6/66

TOP


நெல்லியும் (1)

ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும்
வாகையும் பிறவும் வன் மரம் ஒடுங்கி – உஞ்ஞை:52/43,44

TOP


நெல்லின் (2)

செம்பொன் நெல்லின் செல் கதிர் சூட்டி – உஞ்ஞை:39/23
இன்பம் விளைந்த நன் பெரு நெல்லின்
ஆணை மடையின் காண்வர பற்றி – நரவாண:8/78,79

TOP


நெல்லும் (3)

பொன்னும் நெல்லும் புரிவின் வழங்குக என்று – உஞ்ஞை:37/196
வட்ட நெல்லும் மாண்பு இல பெரிது என – உஞ்ஞை:37/237
ஐவன நெல்லும் கை வளர் கரும்பும் – உஞ்ஞை:51/21

TOP


நெற்சிறு (1)

நெற்சிறு_தாலி நிரல் கிடந்து இலங்க – வத்தவ:16/29

TOP


நெற்சிறு_தாலி (1)

நெற்சிறு_தாலி நிரல் கிடந்து இலங்க – வத்தவ:16/29

TOP


நெற்றி (11)

நெற்றி உற்ற குற்றம் இது என – உஞ்ஞை:36/175
கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி – உஞ்ஞை:39/20
நீல் நிற கொண்மூ நெற்றி முள்கும் – உஞ்ஞை:41/74
கண்ணி நெற்றி காவிதி மகளிரும் – உஞ்ஞை:42/176
குடுமி நெற்றி கூர் உளி அன்ன – உஞ்ஞை:55/20
நீர் கரை பொய்கை நெற்றி முன் நிவந்த – உஞ்ஞை:56/213
புகர் அணிந்து ஓங்கிய நெற்றி பூம் கவுள் – உஞ்ஞை:58/11
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி – இலாவாண:2/129
முழு திரள் தெங்கின் விழு குலை நெற்றி
அக மடல் வதிந்த அன்பு புரி பேடை – மகத:4/46,47
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை – மகத:12/14
ஓடை அணிந்த ஒண் பொன் நெற்றி
கோடு உடை வேழம் பாடு பெற பண்ணி – நரவாண:7/17,18

TOP


நெற்றித்து (1)

நீல நெடு வரை நெற்றித்து ஆகிய – மகத:27/72

TOP


நெற்றியர் (1)

கண்ணி நெற்றியர் கைதொழூஉ புகுதர – உஞ்ஞை:32/67

TOP


நெற்றியில் (1)

பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும் – வத்தவ:12/88

TOP


நெற்றியும் (1)

நிணம் பட நெஞ்சமும் நெற்றியும் அழுத்தி – மகத:20/9

TOP


நெற்றினை (1)

நன்று விளை நெற்றினை சிறுக்கியும் குன்றா – மகத:15/6

TOP


நெறி (61)

நெறி என படுத்த நில பெரும் தவிசின் – உஞ்ஞை:34/210
துறை நெறி போகிய தோழி தூதினர் – உஞ்ஞை:35/87
துறை நெறி போகிய துணிவினர் ஆயினர் – உஞ்ஞை:37/140
ஆணை தடைஇய நூல் நெறி அவையத்து – உஞ்ஞை:38/66
நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி – உஞ்ஞை:42/201
நீதி அன்று நெறி உணர்வோர்க்கு என – உஞ்ஞை:44/68
குறு நெறி கொண்ட கூழை கூந்தலுள் – உஞ்ஞை:46/221
நிரம்பா செலவின் நீத்து_அரும் சிறு நெறி
நல தகு புகழோய் நடத்தற்கு ஆகாது – உஞ்ஞை:49/31,32
முதல் நெறி கொண்டு மு_நால் காவதம் – உஞ்ஞை:49/38
சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி – உஞ்ஞை:58/70
சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி – உஞ்ஞை:58/70
செல்வ பாவையை சேர்த்தி செம் நெறி
அல்வழி வந்து நம் அல்லல் தீர – இலாவாண:1/70,71
பெரியோர் நடாவும் திரியா திண் நெறி
ஒராஅ உலகிற்கு ஓங்குபு வந்த – இலாவாண:2/136,137
மந்திர விழு நெறி தந்திரம் பிழையாது – இலாவாண:3/82
மன்னுக இவர் என தன் நெறி பிழையான் – இலாவாண:3/93
காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன் – இலாவாண:4/34
சித்திர இருநிதி செம் நெறி நுனித்த – இலாவாண:5/151
பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் – இலாவாண:6/167
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி
பண்ணவர் முனிவர் பட்டதும் படுவதும் – இலாவாண:8/134,135
அசைவிலாளர் அற நெறி வலித்தது – இலாவாண:8/142
அந்தி மந்திரத்து அரு நெறி ஒரீஇ – இலாவாண:9/193
நிம் கடன் ஆம் என நினைந்து நெறி திரியாது – இலாவாண:9/237
நல் நெறி நூல் வழி திண் அறிவாளன் – இலாவாண:10/79
தான் அயர் பெரு நெறி தலை நின்றனனால் – இலாவாண:10/173
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற – இலாவாண:12/109
கோலம் கொண்ட குறு நெறி கூழை – இலாவாண:15/91
நெறி தாழ் ஓதி நெஞ்சின் அகத்தே – இலாவாண:17/148
நெறி திரிந்து ஒரீஇ நீத்து உயிர் வழங்கா – இலாவாண:20/5
உள்ளவை உரைத்து தள்ளா தவ நெறி
அற்றம் தீர உற்று பிரிந்து ஒழுகிய – இலாவாண:20/76,77
ஏம நல் நெறி ஈதல் ஆற்றார் – மகத:10/35
உள் நெறி கருத்தின் நண்ணியது ஆகிய – மகத:12/74
நீலத்து அன்ன நெறி இரும் கூந்தலை – மகத:21/79
நல் நெறி அறியுநர் நாள் தெரிந்து உரைப்ப – மகத:22/41
தன் நெறி வழாஅ தருசக குமரன் – மகத:22/42
சிதை பொருள் இல்லா சில் நெறி கேண்மை – மகத:22/131
நெறித்து நெறி பட வாருநர் முடித்து – மகத:22/210
மங்கல மன்னற்கு மந்திர விழு நெறி
ஆசான் முன் நின்று அமைய கூட்டி – மகத:22/263,264
ஊர் மடி கங்குல் நீர் நெறி போகி – மகத:23/56
இம்மை என்பது எமக்கு நெறி இன்மையின் – மகத:24/96
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின் – வத்தவ:7/34
திரிதல் இல்லா செம் நெறி கொள்கையள் – வத்தவ:7/170
தன் நெறி திரியா தவ முது தாயொடும் – வத்தவ:7/173
கோல் நெறி வேந்தே கூறும்-காலை – வத்தவ:8/77
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது – வத்தவ:8/78
நூல் நெறி மரபின் தான் அறிவு தளரான் – வத்தவ:10/159
அவந்தியர் கோமான் அருளிட நூல் நெறி
இகழ்ந்து பிழைப்பு இல்லா யூகி சென்று இவண் – வத்தவ:10/184,185
அரவு அணி அல்குல் துகில் நெறி திருத்தியும் – வத்தவ:12/232
பழித்து யான் புனை நெறி பார் என புனைவோன் – வத்தவ:13/58
நெறி மயிர்க்கு அருகே அறிவு அரிதாக – வத்தவ:13/109
நெறி உடை மகளிர் நினைப்பவும் காண்பவும் – வத்தவ:13/207
நேர் நின்றனனாய் நெறி பட பொருது-கொல் – வத்தவ:14/123
தானை வேந்தன் தான் நெறி திரியான் – வத்தவ:17/107
ஆன்ற கேள்வியொடு அற நெறி திரியார் – நரவாண:1/14
நூல் நெறி இது என நுழைந்தவன் உரைத்தலும் – நரவாண:1/54
நூல் நெறி மரபின் வல்லோன் பேணி – நரவாண:1/112
ஓதிய வனப்போடு உயர் நெறி முற்றி – நரவாண:1/172
சிதைவு_இல் செம் நெறி சேர்ந்து பின் திரியா – நரவாண:3/173
ஆர் இயல் அமை நெறி அரசன்-தன் உரை – நரவாண:6/87
குறி கோள் கூறிய நெறி புகழ்வோரும் – நரவாண:6/135
சிதை பொருள் இன்றி செம் நெறி தழீஇ – நரவாண:7/88
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை – நரவாண:7/114

TOP


நெறி-தானே (1)

அற நெறி-தானே அமர்ந்து கைகொடுப்ப – வத்தவ:17/88

TOP


நெறி-வயின் (4)

நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி – உஞ்ஞை:49/42
நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம் – உஞ்ஞை:56/82
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி – உஞ்ஞை:56/128
குறி-வயின் புணர்ந்து நெறி-வயின் திரியார் – மகத:15/63

TOP


நெறித்து (2)

மறித்தும் போகி நெறித்து நீர்த்து ஒழுகி – மகத:15/52
நெறித்து நெறி பட வாருநர் முடித்து – மகத:22/210

TOP


நெறிப்பட (4)

நீர் அங்காடி நெறிப்பட நாட்டி – உஞ்ஞை:38/57
இருக்க தான் என நெறிப்பட கூறி – உஞ்ஞை:54/95
குறிப்பின் எச்சம் நெறிப்பட நாடி – வத்தவ:10/18
குறிப்பு உடை வெம் நோய் நெறிப்பட நாடிய – நரவாண:8/122

TOP


நெறிப்படுத்து (1)

பொறுத்தனை அருள் என நெறிப்படுத்து உரைப்ப – வத்தவ:8/79

TOP


நெறிப்படுதல் (1)

பிற நெறிப்படுதல் செல்லாள் பெருமையின் – வத்தவ:17/87

TOP


நெறிமையில் (2)

நிகழ்ந்ததை எல்லாம் நெறிமையில் கேட்டு – வத்தவ:4/79
அறிவின் அமர்வார் நெறிமையில் திரியா – நரவாண:7/42

TOP


நெறிமையின் (6)

நீங்கல் செல்லா நெறிமையின் ஓங்கி – இலாவாண:20/98
நிறை பெரும் கோலத்து நெறிமையின் வழாஅ – வத்தவ:2/35
மறனில் நெருங்கி நெறிமையின் ஒரீஇ – வத்தவ:2/54
கூட்டு அமை தீ முதல் குறையா நெறிமையின்
வேட்டு அவள் புணர்ந்து வியன் உலகு ஏத்த – வத்தவ:17/113,114
அறிய வேண்டி நெறிமையின் நாடி – நரவாண:2/38
நினைப்பில் திரியா நெறிமையின் ஓதி – நரவாண:2/63

TOP


நெறியில் (5)

நெய்தல் புலையன் நெறியில் சாற்றி – உஞ்ஞை:36/158
நினைத்தோன் பெயர்ந்து நெறியில் தீர்ந்தவர் – இலாவாண:8/137
நிகழ்ந்ததை எல்லாம் நெறியில் கூறி – இலாவாண:8/161
விதி அமை நெறியில் பதினெட்டு ஆகிய – வத்தவ:3/64
அறியான் இவன் எனல் நெறியில் கேள்-மதி – வத்தவ:6/62

TOP


நெறியிற்கு (1)

நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி – மகத:22/17

TOP


நெறியின் (5)

நீர் பூம் பொய்கை நெறியின் கண்டு அதன் – உஞ்ஞை:53/173
அதிரா நெறியின் அ தொழில் கழிந்த பின் – இலாவாண:3/95
நெறியின் திரியா நீர்மையில் காட்டி – இலாவாண:17/174
நெறியின் திரியா நிமிர்ந்து சென்று ஆட – மகத:6/82
அரும் பொறி நெறியின் ஆற்ற அமைத்த – நரவாண:6/84

TOP


நெறியின (1)

நிரம்பா நெறியின ஆகி அரும்_பொருள் – உஞ்ஞை:50/11

TOP


நெறியினன் (1)

பிறிதில் தீரா நெறியினன் ஆக – உஞ்ஞை:44/74

TOP


நெறியினும் (1)

நூல் இயல் நெறியினும் மதியினும் தெளிந்து – இலாவாண:8/98

TOP


நெறியும் (1)

துன்ன_அரும் விசும்புற நீட்டிய நெறியும்
இன்னவை பிறவும் இசைவு இல எல்லாம் – மகத:15/8,9

TOP