வெ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃகு 1
வெகிர்முகம் 1
வெகுட்சி 1
வெகுட்சியின் 2
வெகுட்சியும் 1
வெகுட்சியுள் 1
வெகுட்டி 1
வெகுண்டு 4
வெகுளல் 1
வெகுளி 5
வெகுளியர் 2
வெட்கையில் 1
வெட்சி 1
வெட்சியும் 2
வெடிபட 1
வெடிபடு 1
வெண் 151
வெண்_சுதை 1
வெண்_மணை 1
வெண்ணெய் 1
வெண்ணெயின் 2
வெண்ணெயும் 2
வெண்மை 1
வெண்மைய 1
வெண்மையும் 1
வெதிர் 1
வெதிரமும் 1
வெதிரில் 1
வெதிரும் 1
வெந்த 6
வெந்நோய் 1
வெப்ப 2
வெப்பம் 2
வெப்பமும் 1
வெப்பமொடு 1
வெம் 151
வெம்ப 1
வெம்பரல் 1
வெம்பி 1
வெம்பிய 1
வெம்முறு 1
வெம்மை 6
வெம்மைத்து 1
வெம்மைய 2
வெம்மையின் 1
வெம்மையொடு 1
வெய்து 7
வெய்துபட 1
வெய்துயிர்த்து 4
வெய்துயிர்ப்பு 2
வெய்துற்று 1
வெய்துறு 1
வெய்ய 1
வெய்யவன் 1
வெய்யொன் 1
வெய்யோன் 8
வெயில் 5
வெரீஇ 12
வெரீஇய 4
வெரு 1
வெருட்டலும் 1
வெருவ 3
வெருவர 2
வெருவவும் 1
வெருவு 1
வெருவுறு 3
வெருள்பட 1
வெருளி 3
வெரூஉ 1
வெல் 16
வெல்க 1
வெல்லினும் 1
வெவ் 16
வெள் 25
வெள்_ஏட்டு 1
வெள்க 1
வெள்ள 2
வெள்ளத்து 3
வெள்ளம் 4
வெள்ளி 22
வெள்ளிடை 7
வெள்ளிதின் 2
வெள்ளிய 1
வெள்ளியின் 1
வெள்ளியும் 5
வெள்ளியோடு 1
வெள்ளிலும் 1
வெள்ளை 4
வெள்ளைமை 1
வெளி 1
வெளிப்பட 3
வெளிப்படாது 1
வெளிப்படாமை 1
வெளிப்படாஅள் 1
வெளிப்படீஇய 1
வெளிபடுத்த 1
வெளில் 1
வெற்பின் 1
வெற்பினுள் 1
வெற்பு 2
வெற்ற 8
வெற்றி 5
வெறி 2
வெறி_களம் 1
வெறிகோள் 1
வெறிது 1
வெறிய 1
வெறு 1
வெறுக்கை 8
வெறுக்கையுள் 2
வெறுக்கையொடு 2
வெறுத்த 2
வெறுத்தனை 1
வெறுப்பும் 1
வெறுமை 1
வெறுமைத்து 1
வெறுவது 1
வென் 3
வென்ற 3
வென்றனம் 1
வென்றார் 1
வென்றி 33
வென்றித்து 1
வென்றியின் 2
வென்றியும் 4
வென்றியொடு 4
வென்று 5
வென்றோன் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வெஃகு (1)

எஃகு எறிந்து என்ன வெஃகு அறு செவிய – உஞ்ஞை:44/80

TOP


வெகிர்முகம் (1)

மகரிகை நிறைய வெகிர்முகம் ஆக்கி – மகத:17/161

TOP


வெகுட்சி (1)

வெம் சின வேழத்து வெகுட்சி நீக்கி – மகத:18/98

TOP


வெகுட்சியின் (2)

வெம் சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின்
விடுத்த பல் படை பெயர்த்தல் பொருட்டா – உஞ்ஞை:54/114,115
தம்பியர் கூட வெம்பிய வெகுட்சியின்
ஒருங்கா மாந்தர் உள்ளம் அஞ்ச – மகத:1/28,29

TOP


வெகுட்சியும் (1)

வெம் சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின் – உஞ்ஞை:54/114

TOP


வெகுட்சியுள் (1)

தம்முள் தாக்கிய விம்ம வெகுட்சியுள்
பொரு முரண் அண்ணல் பூம் தார் அகலத்து – இலாவாண:8/84,85

TOP


வெகுட்டி (1)

ஐ_தலை_நாகம் அழல வெகுட்டி
பைம் தளிர் கோதையை பற்றுபு தழீஇ – இலாவாண:8/29,30

TOP


வெகுண்டு (4)

விழா கொள் கம்பலின் வெகுண்டு வெளில் முருக்கி – உஞ்ஞை:38/90
பொன் தார் மார்பன் பொங்குபு வெகுண்டு
முகை நகை முத்தொடு தகை முடி தயங்க – உஞ்ஞை:47/105,106
வெற்ற வேந்தன் வெகுண்டு எழல் இன்மையும் – இலாவாண:8/54
சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு
செரு உடை மன்னரை சென்று மேல் நெருங்குதும் – மகத:19/54,55

TOP


வெகுளல் (1)

வெகுளல் நீ என தவளை அம் கிண்கிணி – மகத:9/167

TOP


வெகுளி (5)

வெம் சின வேழ வெகுளி நீக்கும் – இலாவாண:11/92
கண்ணில் காட்டி காம வெகுளி
நண்ணின் மற்று இது நயந்து வழி ஓடி – இலாவாண:16/56,57
வெகுளி தீயில் கிளை அற சுடுதல் – மகத:24/116
வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ – மகத:27/151
அரசு இகந்து அடர்த்த ஆறா வெகுளி
தருசகன் தங்கையை தலைப்பட்டு எய்திய – நரவாண:3/15,16

TOP


வெகுளியர் (2)

அரதன நாகரின் சொரிதரு வெகுளியர்
ஏற்றோர் தாக்கி கூற்று உறை உலகினுள் – உஞ்ஞை:46/13,14
கழுமிய வெகுளியர் காண காட்டி – இலாவாண:12/64

TOP


வெட்கையில் (1)

பெருமகன் கொள்ளும் வெட்கையில் போந்த – இலாவாண:8/157

TOP


வெட்சி (1)

வெட்சி மிலைச்சிய வில்லுறு வாழ்க்கை – உஞ்ஞை:52/77

TOP


வெட்சியும் (2)

வேயும் வெதிரமும் வெட்சியும் குளவியும் – உஞ்ஞை:50/30
குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும் – இலாவாண:12/19

TOP


வெடிபட (1)

அடி வினை கம்மியர் வெடிபட அடுக்கிய – இலாவாண:4/183

TOP


வெடிபடு (1)

விண் உரும் அன்ன வெடிபடு சீற்றத்து – உஞ்ஞை:48/28

TOP


வெண் (151)

வெண் சுதை நல் இல் உறையுள் ஆக – உஞ்ஞை:32/89
பீலி சுற்றிய வேணு வெண் காழ் – உஞ்ஞை:32/97
வெண்_சுதை குன்றொடு வேண்டுவ பிறவும் – உஞ்ஞை:33/5
சுடர் வெண் நிலவின் தொழில் பயன் கொண்ட – உஞ்ஞை:33/61
விதானித்து படுத்த வெண் கால் அமளி – உஞ்ஞை:33/63
துகிலின் வெண் கிழி துய் கடை நிமிடி – உஞ்ஞை:33/92
விரி_நூல் அந்தணர் வெண்_மணை சூழ்ந்த – உஞ்ஞை:34/23
மறு_இல் வெண் கோட்டு மங்கலம் பொறித்த – உஞ்ஞை:34/189
பெரு வெண் சீப்பின் திருவுற வாரி – உஞ்ஞை:34/190
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி – உஞ்ஞை:34/222
வெண் கால் அமளி விருப்பின் ஏற்றி – உஞ்ஞை:35/99
நெடு வெண் நிலவின் நீர்மைக்கு இரங்கி – உஞ்ஞை:35/235
விசும்பு எழ தேயும் வெண் மதி போல – உஞ்ஞை:35/238
நெடு வெண் தானை வாங்கி கொண்டு தன் – உஞ்ஞை:36/98
ஏம வெண் குடை ஏயர் மகனொடு – உஞ்ஞை:36/104
பாக வெண் மதியின் பதித்த குடுமி – உஞ்ஞை:36/166
வெண் முகை அடுத்து பைம் தோடு படுத்து – உஞ்ஞை:37/259
வெண் சுடர் வீதி விலக்குவனர் போல – உஞ்ஞை:38/18
மடல் இவர் போந்தை மதர்வை வெண் தோட்டினும் – உஞ்ஞை:38/70
படலை வெண் சாந்தினும் படத்தினும் இயன்ற – உஞ்ஞை:38/71
தடவு நிலை நிழற்றிய தாம வெண் குடை – உஞ்ஞை:38/126
விசி பிணியுறுத்த வெண் கோட்டு ஊர்தி – உஞ்ஞை:38/157
விழா மலி சுற்றமொடு வெண் மணல் ஏறி – உஞ்ஞை:38/280
கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி – உஞ்ஞை:39/20
வெண் துகில் இட்ட விசய முரசம் – உஞ்ஞை:39/24
செம்பொன் புரிசை வெண் சுதை மாடத்து – உஞ்ஞை:39/57
வெண் துகில் பூட்டிய வேழ குழவியும் – உஞ்ஞை:39/74
மிடை வெண் துகிலின் இடை_நிலம் கோலி – உஞ்ஞை:40/8
வெள்ளி வெண் திரள் வேண்டு இடத்து ஊன்றி – உஞ்ஞை:40/13
உருவ வெண் மணல் பெரு வெண் கோயிலுள் – உஞ்ஞை:40/60
உருவ வெண் மணல் பெரு வெண் கோயிலுள் – உஞ்ஞை:40/60
நிரை வெண் மாடத்து நீர் அணி காணிய – உஞ்ஞை:40/66
பல் காசு நிரைஇய அல்குல் வெண் துகில் – உஞ்ஞை:40/99
வேதிகை எறிந்த வெண் மணல் திண்ணை – உஞ்ஞை:40/124
முன் துறை ஈண்டிய குன்ற வெண் மணல் – உஞ்ஞை:40/140
நுண் அயிர் வெண் துகள் குடங்கையின் வாரி – உஞ்ஞை:40/142
நனைந்து நிறம் கரந்த நார் நூல் வெண் துகில் – உஞ்ஞை:40/148
நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி – உஞ்ஞை:40/286
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் – உஞ்ஞை:40/295
வையமும் தேரும் வகை வெண் மாடமும் – உஞ்ஞை:42/18
பூம் தார் அணிந்த ஏந்தல் வெண் குடை – உஞ்ஞை:42/46
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில் – உஞ்ஞை:43/125
பறைந்து இடை சோர்தரு பசலை வெண் நரை – உஞ்ஞை:43/153
வெண் சுதை மாடமும் வேந்தன் கோயிலும் – உஞ்ஞை:43/176
அரக்கு வினை பலகையும் நிரைத்த வெண் குடையும் – உஞ்ஞை:46/61
வெண் நரை சூழ்ந்த தண்ணுமை பறை தலை – உஞ்ஞை:46/317
நிலா வெண் மாடமொடு உள் அறை சூழ்ந்த – உஞ்ஞை:47/46
வெண் முகில் பொடிக்கும் வெய்யோன் போல – உஞ்ஞை:47/198
நெடு வெண் திங்கள் அகடுற தழுவும் – உஞ்ஞை:47/202
கடி வெண் மாடத்து கன்னி அம் கடி மனை – உஞ்ஞை:47/203
வெண் நிற அருவி வீழ்ச்சி ஏய்ப்ப – உஞ்ஞை:48/61
இன்பம் ஆகிய ஏம வெண் குடை – உஞ்ஞை:49/64
ஆலி வெண் மணல் அணிபெற தூஉய் – உஞ்ஞை:49/84
வெண் பூ முசுண்டை பைம் குழை மேய – உஞ்ஞை:49/113
பால் வெண் கோட்டமும் பனிச்சையும் திலகமும் – உஞ்ஞை:50/29
வெருள்பட போக்கிய வெண் தீ விளக்கம் – உஞ்ஞை:50/54
வெண் சிறை பெடையோடு விளையாட்டு விரும்பி – உஞ்ஞை:52/47
வெண் பூம் கவள முனைஇ நெல்லி – உஞ்ஞை:52/66
பால் வெண் குருகின் பல் மயிர் சேவல் – உஞ்ஞை:54/14
வெள்ளி வெண் மாடத்து பள்ளிகொள்ளும் – உஞ்ஞை:54/18
நிலா வெண் முற்றத்து உலாவி ஆடி – உஞ்ஞை:54/24
வெண் மதி நெடும் குடை வேற்றவன் படையொடு – உஞ்ஞை:55/24
வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும் – உஞ்ஞை:55/78
வெண் மீன் போல வென்றி எய்தி – உஞ்ஞை:56/279
செங்கோடிகமும் வெண் பால் தவிசும் – உஞ்ஞை:57/43
பால் வெண் கடலின் பனி திரை அன்ன – உஞ்ஞை:57/112
நூல் வெண் மாடம் கோலோடு கொளீஇ – உஞ்ஞை:57/113
தென் திசை பிறந்த வெண் சுடர் மணியும் – உஞ்ஞை:58/35
விடாஅ விளக்கு ஒளி வெண் பூம் தாமமொடு – இலாவாண:1/11
நறு வெண் சாந்தொடு மாலை அணிந்து – இலாவாண:2/35
மறு_இல் வெண் துகில் மருங்கு அணி பெறீஇ – இலாவாண:2/36
வித்தக வெண் குடை விரகுளி கவிப்ப – இலாவாண:2/62
தண் நிழல் பொதிந்த வெண் மணல் பந்தர் – இலாவாண:2/76
வெண் மணல் நிரப்பம் கொளீஇ கண்ணுற – இலாவாண:3/13
வெண் மணல் ஞெமிரிய தண் நிழல் பந்தருள் – இலாவாண:3/21
பொம்மல் வெண் பொரி பொலிய பெய்த பின் – இலாவாண:3/90
விடு சுடர் மதியமொடு வெண் மீன் இவர்ந்த – இலாவாண:3/124
வெண் பூம் பட்டின் திண் பிணி அமைந்த – இலாவாண:3/136
மறு இன்று அமைந்த நறு வெண் சாந்தில் – இலாவாண:4/63
பால் நிற வெண் துகில் ஆன தானையர் – இலாவாண:4/147
வெண் நிற மலரும் தண் நறும் சாலியும் – இலாவாண:4/152
விரலில் கொண்ட வெண் நிற நுண் தாது – இலாவாண:4/189
வெண் கண்ணாடியும் செம் சுடர் விளக்கும் – இலாவாண:5/29
மங்கல மணை மிசை வெண் துகில் புதைஇ – இலாவாண:5/78
நறு வெண் சாந்தின் நல் நலம் குயில – இலாவாண:5/81
கலாவம் புதைத்த நிலா வெண் துகிலினர் – இலாவாண:5/85
வாச வெண் நெய் பூசினர் போற்றி – இலாவாண:5/101
குடைந்த வெண் நுரை குடங்கையின் வாரி – இலாவாண:5/115
வெண் துகில் இணை மடி விரித்தனர் உடீஇ – இலாவாண:5/131
விசும்பு இவர் மதி உறழ் வெண் பொன் போர்வை – இலாவாண:6/13
வெண் பூ நிரந்த வீதியுள் இயங்கி – இலாவாண:6/18
நிறை கதிர் வெண் மதி நிலா ஒளி விரிந்து – இலாவாண:6/152
வெண் முகில் நடுவண் மீன் முகத்து எழுதரும் – இலாவாண:7/104
தாமம் தாழ்ந்த ஏம வெண் குடை – இலாவாண:7/122
அசைவு_இல் தானை விசைய வெண் குடை – இலாவாண:8/15
மீன் கண்டு அன்ன வெண் மணல் விரிந்த – இலாவாண:9/5
வெண் நிலா முற்றத்து விரும்பி அசைதலின் – இலாவாண:11/52
பைம் கூதாளமும் வெண் பூம் சுள்ளியும் – இலாவாண:12/22
சுள்ளி வெண் சூழ்ச்சி சுரும்பு உண தொடுத்து – இலாவாண:12/108
விரும்பி நீ பிடித்த வெண் மலர் வீழ்ச்சி – இலாவாண:13/54
வீழ்ந்த வெண் மலர் வெறு நிலம் படாது – இலாவாண:13/57
விரிந்து வேய் உடைத்த வெண் கதிர் முத்தம் – இலாவாண:14/20
பைம் கொடி முல்லை வெண் போது பறித்தும் – இலாவாண:14/28
ஒண் பூம் காந்தள் வெண் பூம் சுள்ளி – இலாவாண:15/16
அந்தியுள் முளைத்த வெண் பிறை போல – இலாவாண:19/87
வெண் மதி கைப்புடை வியாழம் போல – இலாவாண:19/91
படு மணி யானை பைம் தார் வெண் குடை – இலாவாண:20/121
வெண் நூல் பூம் துகில் வண்ணம் கொளீஇ – மகத:1/95
இரும் பனை இள மடல் விரிந்து உளர் வெண் தோட்டு – மகத:1/107
வெண் சிறை செம் கால் நுண் பொறி புறவே – மகத:1/162
சுள்ளி வெண் போது சுரும்பு உண விரித்து – மகத:1/187
விரி கதிர் திங்கள் வெண் குடையாக – மகத:2/8
வெண் கதிர் மதியின் வீறு ஒளி திகழ்ந்து – மகத:5/6
தான் மீக்கூரிய ஏம வெண் குடை – மகத:5/7
வெண் முகில் பிறழும் மின்னென நுடங்கி – மகத:6/7
பைம் தார் முல்லை வெண் போது நெகிழ – மகத:7/14
வெண் முக நிலா ஒளி சுருங்க மெல்லென – மகத:14/9
சுதை வெண் குன்றமும் புதை இருள் தானமும் – மகத:14/26
வெண் போது கலந்த தண்கண் வாடை – மகத:14/262
மத்த நல் யானை மதிய வெண் குடை – மகத:17/6
மன்னரை முருக்கிய மதிய வெண் குடை – மகத:17/30
வெண் பூம் துகிலும் செம் பூம் கச்சும் – மகத:17/127
வெண் கடல் திரை என மிசைமிசை நிவத்தரும் – மகத:20/23
நுதி முக வெண் கோடு முதல் அற எறிதலின் – மகத:20/52
செக்கர் குளிக்கும் வெண் பிறை போல – மகத:20/53
வெண் சாந்து வரித்த அம் சில் ஆகத்து – மகத:22/216
உருவ வெண் குடை உதயணற்கு உணர்த்த – மகத:27/42
பொங்கு நூல் படாகையொடு வெண் கொடி நுடங்க – மகத:27/94
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப – வத்தவ:1/15
ஏம வெண் குடை இன் நிழல் பரப்பி – வத்தவ:2/78
விரி கதிர் திங்களொடு வெண் பளிங்கு உமிழும் – வத்தவ:5/70
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த – வத்தவ:5/74
வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ – வத்தவ:5/75
பரந்த வெண் திரை பாற்கடல் ஆகி – வத்தவ:5/117
விழு தகு வெண் துகில் விரித்தனன் உடுத்து – வத்தவ:6/79
உருவ வெண் குடை உதயணகுமரன் – வத்தவ:8/3
விரித்து அரிது இயற்றிய வெண் கால் அமளி – வத்தவ:8/26
சுதை வெண் குன்ற சிமை பரந்து இழிதரும் – வத்தவ:11/93
செ வாய் வெண் நகை திருந்து_இழை கண்டது – வத்தவ:13/191
கற்று அறி வித்தகன் பொன் பணி வெண் பூ – வத்தவ:14/64
தெருவில் கொண்ட பெரு வெண் மாடத்து – வத்தவ:15/103
வெண் குடை நிழற்றிய வேந்தே பெண் பெறின் – நரவாண:1/52
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ – நரவாண:1/93
வெண் பால் புள்ளின் விழையும் தன்மையொடு – நரவாண:1/128
விண்ணக மருங்கில் வெண் முகில் புரைவது ஓர் – நரவாண:1/146
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின் – நரவாண:1/154
இசைந்த வெண் துகில் ஏற்ற தானையன் – நரவாண:2/21
பசும்பொன் பைம் தார் பனி மதி வெண் குடை – நரவாண:4/2
வெண் முகில் ஒழுகிய வெள்ளி அம் பெரு மலை – நரவாண:6/136
நறு வெண் சாந்தம் பூசிய கையால் – நரவாண:8/97
வெண் தார் ஒழுக்கும் விளக்குறு பூதமும் – நரவாண:8/25

TOP


வெண்_சுதை (1)

வெண்_சுதை குன்றொடு வேண்டுவ பிறவும் – உஞ்ஞை:33/5

TOP


வெண்_மணை (1)

விரி_நூல் அந்தணர் வெண்_மணை சூழ்ந்த – உஞ்ஞை:34/23

TOP


வெண்ணெய் (1)

வாச வெண்ணெய் பூசி புனைந்த – உஞ்ஞை:57/86

TOP


வெண்ணெயின் (2)

தீயுறு வெண்ணெயின் உருகு நெஞ்சமொடு – உஞ்ஞை:33/153
வெம் கனல் மீமிசை வைத்த வெண்ணெயின்
நெஞ்சம் உருக நிறுத்தல் ஆற்றான் – மகத:7/69,70

TOP


வெண்ணெயும் (2)

உரைத்த வெண்ணெயும் நுரைப்பு அமல் அரைப்பும் – உஞ்ஞை:41/131
ஆன் நெயும் வெண்ணெயும் அனையவை பிறவும் – இலாவாண:4/93

TOP


வெண்மை (1)

வெண்மை மூன்று உடன் கண்டதன் பயத்தால் – வத்தவ:5/119

TOP


வெண்மைய (1)

செம்மை சேர்ந்த வெண்மைய ஆகிய – உஞ்ஞை:58/6

TOP


வெண்மையும் (1)

வெண்மையும் செம்மையும் கருமையும் உடையன – வத்தவ:12/51

TOP


வெதிர் (1)

வெதிர் இலை வீழ்ச்சியின் வேண்டு இடத்து அசைஇ – நரவாண:4/115

TOP


வெதிரமும் (1)

வேயும் வெதிரமும் வெட்சியும் குளவியும் – உஞ்ஞை:50/30

TOP


வெதிரில் (1)

வெதிரில் பிறந்த பொதி அவிழ் அரு நெல் – உஞ்ஞை:51/12

TOP


வெதிரும் (1)

பனையும் வெதிரும் பாசிலை கமுகும் – உஞ்ஞை:40/5

TOP


வெந்த (6)

தளை உலை வெந்த வளை வால் அரிசி – உஞ்ஞை:40/133
பால் உலை வெந்த வால் அவிழ் கலவையும் – இலாவாண:3/38
தேன் உலை வெந்த தூ நிற துழவையும் – இலாவாண:3/39
புளி உலை வெந்த பொன் நிற புழுக்கலும் – இலாவாண:3/40
கரும்பு உலை வெந்த கன்னல் துழவையும் – இலாவாண:3/41
நெய் உலை வெந்த மை நிற புழுக்கொடு – இலாவாண:3/42

TOP


வெந்நோய் (1)

தம்மால் வந்த தாங்க_அரும் வெந்நோய்
தம்மை நோவது அல்லது பிறரை – மகத:14/116,117

TOP


வெப்ப (2)

வெப்ப நீக்கி தட்பம் தான் செய – உஞ்ஞை:48/59
வெப்ப மன்னர் வீக்கம் சாய – மகத:20/122

TOP


வெப்பம் (2)

தட்ப காலத்தும் வெப்பம் ஆனாது – உஞ்ஞை:52/36
உருவு கதிர் வெப்பம் ஒன்றும் இல்லை – மகத:14/140

TOP


வெப்பமும் (1)

தட்பமும் வெப்பமும் தாம் படின் தீர்ப்பது – உஞ்ஞை:42/223

TOP


வெப்பமொடு (1)

இப்படி நிகழ்ந்த-காலை வெப்பமொடு
பெரும் படை செற்றத்து இரும் கடன் மாந்தி – மகத:27/116,117

TOP


வெம் (151)

வெம் துயர் கண்ணின் வேல் இட்டது போல் – உஞ்ஞை:33/95
புள்ளி வெம் பனி கரந்த கள்வி-தன் – உஞ்ஞை:33/124
வேந்து இடையிட்ட வெம் சொல்லாதலின் – உஞ்ஞை:35/15
வெம் சொல் கிளவி நின் அங்கையின் அவித்து – உஞ்ஞை:36/187
வெம் திறல் வேந்தனும் நன்று என அருளி – உஞ்ஞை:37/87
வெம் திறல் வேந்தன் விட்டு இவை கூற – உஞ்ஞை:39/27
குறி வெம் காதலன் பொறி யாப்புறுத்த – உஞ்ஞை:40/161
இமை தீர் வெம் பனி முலை முகம் நனைப்ப – உஞ்ஞை:40/192
கால் பரந்திருந்த கரும் கண் வெம் முலை – உஞ்ஞை:40/211
அழல் வெம் காமத்து அன்பு தலைக்கொண்ட – உஞ்ஞை:40/260
கொடி அணி பிறழும் கொம்மை வெம் முலை – உஞ்ஞை:41/69
தம் மொழி கொளீஇ வெம் முரண் வென்றியொடு – உஞ்ஞை:42/6
வெம் சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து – உஞ்ஞை:42/230
செம் தீ வெம் புகை இம்பர் தோன்றலும் – உஞ்ஞை:43/38
ஒளித்த வெம் படை வெளிப்பட ஏந்தி – உஞ்ஞை:43/44
வெம் புகை தவழ்ந்து வேந்து கண் புதைப்ப – உஞ்ஞை:43/180
ஓடு விசை வெம் காற்று உருமொடு ஊர்தர – உஞ்ஞை:44/46
அமிழ்து பெய் செப்பின் அன்ன வெம் முலை – உஞ்ஞை:45/6
வெம் செலல் பகழியும் வில்லும் தழீஇ – உஞ்ஞை:45/81
வெம் பெரும் துயரம் விடுத்தனை ஆகி – உஞ்ஞை:46/107
குமிழ்த்து எழு வெம் பனி கோங்கு அரும்பு ஏய்ப்ப – உஞ்ஞை:46/224
வேக வேந்தன் வெம் சமம் முருக்கி – உஞ்ஞை:46/326
வெம் முரண் வேழத்து வெம் சினம் அடக்கிய – உஞ்ஞை:47/80
வெம் முரண் வேழத்து வெம் சினம் அடக்கிய – உஞ்ஞை:47/80
வெம் போர் வேந்தன் மெல்லென இழிந்து – உஞ்ஞை:47/201
யானைக்கு எழுந்த வெம் சினம் அடக்கி நின் – உஞ்ஞை:47/229
கொற்ற வெம் கதிர் குளிர் கொள சுருக்கி – உஞ்ஞை:48/44
வெம் கல் சாரல் வேய் விண்டு உதிர்த்த – உஞ்ஞை:52/60
வெம் சுர கான்யாற்று வேயொடு பிணங்கி – உஞ்ஞை:52/90
ஊன் ததர்ந்து இழிந்த உதிர வெம் புனல் – உஞ்ஞை:52/117
வெம் நோய் முடுக வேற்றவன் நாடு இறந்து – உஞ்ஞை:52/126
வெம் சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின் – உஞ்ஞை:54/114
நம் படை ஒழிந்த வண்ணமும் வெம் படை – உஞ்ஞை:54/116
துஞ்சல் செல்லான் வெம் சின விடலை – உஞ்ஞை:54/140
உற்ற வெம் நோய் ஓம்பு என உற்ற – உஞ்ஞை:55/15
வெம் கணை திருத்தி வில் இடம் தழீஇ – உஞ்ஞை:55/38
வெம் சின வீரன் நின்ற-காலை – உஞ்ஞை:55/43
வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி – உஞ்ஞை:55/138
விசை உடை வெம் கணை வில் தொழில் நவின்ற – உஞ்ஞை:56/3
கான வெம் தீ கடும் புகைப்பட்ட – உஞ்ஞை:56/28
வெம் கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும் – உஞ்ஞை:56/157
வெம் நில மருங்கின் வேட்டுவர் எல்லாம் – உஞ்ஞை:56/163
விரைந்தனம் செல்க என வெம் படை தொகுத்து – உஞ்ஞை:56/187
அம்பு பட வீழ்ந்த வெம் கண் மறவர் – உஞ்ஞை:56/207
வெம் திறல் வேட்டுவர் விரைந்தனர் ஆகி – உஞ்ஞை:56/235
வெம் கணை வாளியுள் விளிந்தனர் வீழ – உஞ்ஞை:56/266
வெம் துயர் அரு வினை வீட்டிய அண்ணலை – இலாவாண:1/15
வெம் கண் இருள் துயர் இங்கண் நீக்கிய – இலாவாண:1/22
வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் – இலாவாண:2/190
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி – இலாவாண:3/115
வெம் திறல் வேந்தன் பைம்_தொடியோடும் – இலாவாண:3/120
வெம் கேழ் துகில் மிசை விதியுளி புரட்டி – இலாவாண:4/169
வென்றி வியல் நகர் வெம் துயர் உற்றதும் – இலாவாண:8/44
வெம் திறல் மிலைச்சர் விலக்குவனர் காக்கும் – இலாவாண:9/34
வெம் சின வேந்தனை விடுத்தல் வேண்டி – இலாவாண:9/38
சீற்ற வெம் புகை செருக்க ஊட்டி – இலாவாண:9/44
வெம் கதிர் வீழ்ந்த தண் கதிர் மாலை – இலாவாண:9/132
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து – இலாவாண:9/136
வெம் திறல் வேந்தனும் அவரொடு விராஅய் – இலாவாண:9/177
வேகம் தணியா வெம் சின நெடு வேல் – இலாவாண:9/201
வீழ்தரு வெம் துளி விரலின் நீக்கி – இலாவாண:10/62
வெம் கண் வேந்தன் பைம் தொடி பாவாய் – இலாவாண:10/65
யூகி தன்-வயின் உறுகண் வெம் தொழில் – இலாவாண:10/106
தண் தாமரை-கண் வெம் பனி வீழ – இலாவாண:10/124
அந்தணாளரின் வெம் திறல் வீரன் – இலாவாண:10/168
வெம் சின வேழ வெகுளி நீக்கும் – இலாவாண:11/92
புணர் வெம் காதலர் புனை இரும் கூந்தற்கு – இலாவாண:12/84
கரும் கண் வெம் முலை அரும்பின் அழித்து – இலாவாண:12/102
வெம் திறல் வேந்தன் வீழ்பவை காட்டி – இலாவாண:13/2
வெம் கண் மறவர் வில்லின் வீழ்த்த – இலாவாண:14/48
உருத்து அரி வெம் பனி ஊழூழ் சிதரி – இலாவாண:16/20
வந்து அவண் ஒடுங்கிய வெம் திறல் அமைச்சன் – இலாவாண:17/3
வெம் சொல் மாற்றம் வந்து கைகூட – இலாவாண:17/63
மஞ்சொடு நிரைஇ வெம் சுடர் மழுக்க – இலாவாண:18/52
வெம் புகை சூழ்ந்து மேல் எரி ஊர – இலாவாண:19/72
வீங்குபு செறிந்த வெம் கண் வன முலை – இலாவாண:19/109
வேக வெவ் அழல் வெம் புகை அணிந்த – இலாவாண:19/114
பிரிவு தலைக்கொண்ட எரி புரை வெம் நோய் – இலாவாண:20/47
தண் கோல் அல்லது வெம் கோல் புகாஅ – இலாவாண:20/56
காளவனமும் வெம் தீ புக்கு என – மகத:1/55
வெம் சுரம் செல்வோர் வினை வழி அஞ்ச – மகத:1/160
வெம் திறல் வேகமொடு விலக்குதற்கு அரிய – மகத:4/34
வெம் சின விடலை நெஞ்சு நிறை துயரமொடு – மகத:6/31
வெம் சின வேந்தர்க்கு நஞ்சு உமிழ் நாகத்து – மகத:6/47
வெம் தொழில் காம வேட்கை திறப்ப – மகத:6/57
வெம் சின விடலையொடு நெஞ்சு மாறாடி – மகத:6/76
அழல் புரை வெம் பனி அளைஇ வாடை – மகத:7/35
வெம் கண் நீரது ஆகி வேலின் – மகத:7/38
வெம் கனல் மீமிசை வைத்த வெண்ணெயின் – மகத:7/69
செம் தீ கதீஇய வெம் தழல் புண்ணினுள் – மகத:7/108
இன்னா வெம் நோய் தன் அமர் தோழிக்கு – மகத:8/47
மந்திர சூழ்ச்சியுள் வெம் திறல் வீரன் – மகத:8/90
தம்மின் தீர்ந்து வெம் முரண் வென்றி – மகத:10/37
முனை வெம் துப்பின் மன்னனும் முன் போல் – மகத:13/3
தகை வெம் துப்பின் தருசகற்கு இசைப்ப – மகத:16/12
வெம் திறல் செய்கை வேசாலியும் என – மகத:17/36
சங்கம் ஆகி வெம் கணை வீக்கமொடு – மகத:17/38
பருவரல் வெம் நோய் பசப்பொடு நீக்குவென் – மகத:17/82
வெம் முரண் வென்றியொடு மேல்வந்து இறுத்த – மகத:17/185
வந்தனன் இவன் என வெம் திறல் வேந்தன் – மகத:18/48
வெம் சின வேழத்து வெகுட்சி நீக்கி – மகத:18/98
வெம் போர் நிகழ்ச்சி என்-கொல் மற்று இது என – மகத:19/16
வஞ்சினம் செய்து வெம் சினம் பெருக – மகத:19/31
வெம் கண் செய் தொழில் தன்-கண் கூறலும் – மகத:19/47
நம் மேல் வந்த வெம் முரண் வீரர் – மகத:19/140
வந்து இவண் இருந்த வெம் திறல் வீரன் – மகத:19/150
வெம் கண் முரசொடு பல்லியம் கறங்க – மகத:19/216
வெம் முரண் வீரமொடு தம்முள் தாக்கவும் – மகத:20/29
மார்பின் வெம் படை ஆர மாந்தி – மகத:20/60
வெம் முரண் வேழம் வீழ்த்து மாற்றார் – மகத:20/66
வெம் சின வேந்தர் இங்கு இல் என்போரும் – மகத:20/163
வெம் சின வேந்தன் அவள் விளிவு முந்துறீஇ – மகத:20/173
மாணகன் பிரிந்த என் மம்மர் வெம் நோய்க்கு – மகத:22/57
வீர வென்றி விறல் வெம் துப்பின் – மகத:23/24
உள் அழல் வெம் பனி உகுத்தரு கண்ணீர் – மகத:24/101
வெம் பனி துடைத்து பண்புளி பேணி – மகத:24/127
அயிலுறு வெம் படை அழல வீசி – மகத:24/148
விசை புள் வெம் குரல் இசைப்ப கேட்ட – மகத:24/175
வெம் திறல் கலந்த விறல் வேசாலியொடு – மகத:25/40
வெம் சொல் மாற்றம் வேந்தரை உரைத்தோர் – மகத:25/75
வெம் பரி மான் தேர் தம்பியர் தழீஇ – மகத:27/45
வெம் திறல் நளகிரி-தன் படிவு ஆகும் – மகத:27/70
வீய நூறி வெம் சினம் தணிக என – மகத:27/154
வெம் களத்து அட்ட வென்றி இவை என – வத்தவ:1/11
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப – வத்தவ:1/15
வெம் கோல் வேந்தன் வேற்று நாடு இது என – வத்தவ:2/3
வெம் கண் செய் தொழில் வேட்டுவ தலைவரொடு – வத்தவ:3/8
முனை வெம் துப்பின முன் அவண் ஈக என – வத்தவ:3/23
மெய் வழி வெம் நோய் நீங்க பையென – வத்தவ:3/110
பொறை மலி வெம் நோய் புறந்தந்து ஓம்பி – வத்தவ:4/29
வெம் சின வேந்தன் கோயில் முற்றத்து – வத்தவ:4/47
வெம் கண் வேந்தர்-தங்கட்கு உற்றது – வத்தவ:6/32
வெம் முலை ஆகத்து தண் என கிடந்த – வத்தவ:7/78
இன்னா வெம் துயர் என்-கண் நீக்கிய – வத்தவ:8/34
வெம் திறல் வீரன் விளங்கிய முறுவலன் – வத்தவ:10/142
வெம் கோல் அகற்றிய வென்றி தானை – வத்தவ:12/16
வெம் சினம் தீர்ந்த விழு தவன் மகள் எனல் – வத்தவ:17/41
அசைவுறு வெம் நோய் அறிந்த அரசன் – நரவாண:1/212
இன்னா வெம் நோய் எத்திறத்தாயினும் – நரவாண:1/225
வெம் பரல் அழுவத்து எம்பரும் இன்மையின் – நரவாண:2/13
வெம் சின வீரனை நெஞ்சுற கழற – நரவாண:3/23
மிசை செலவு அசாஅ விழும வெம் நோய் – நரவாண:3/32
அஞ்சா பைம் கண் ஓர் வெம் சின வேழம் – நரவாண:3/76
காலகூடம் என்னும் வெம் நோய் – நரவாண:3/129
விலக்கு வரை நில்லாது வெம் பசி நலிய – நரவாண:3/131
விளங்கு ஒளி விமானம் வெம் கதிர் செல்வன் – நரவாண:4/82
விரை செலல் இவுளியொடு வெம் கண் வேழம் – நரவாண:5/10
விசும்பிடை திரிதரும் வேட்கை வெம் நோய் – நரவாண:5/12
பொற்பு அமை சுணங்கின் பொம்மல் வெம் முலை – நரவாண:6/7
நெஞ்சகம் படுப்ப வெம் சின வீரன் – நரவாண:8/86
குறிப்பு உடை வெம் நோய் நெறிப்பட நாடிய – நரவாண:8/122

TOP


வெம்ப (1)

கும்பன் என்போனை வெம்ப நூறி – மகத:27/211

TOP


வெம்பரல் (1)

உளி தலை வெம்பரல் ஊன்றுபு நலிய – உஞ்ஞை:53/164

TOP


வெம்பி (1)

புற-வயின் பொம்மென வெம்பி அக-வயின் – உஞ்ஞை:57/94

TOP


வெம்பிய (1)

தம்பியர் கூட வெம்பிய வெகுட்சியின் – மகத:1/28

TOP


வெம்முறு (1)

வெம்முறு படிவம் நீக்கி யூகி – உஞ்ஞை:46/82

TOP


வெம்மை (6)

வெல் வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்து – உஞ்ஞை:42/53
நம்மை எள்ளிய வெம்மை வேந்தன் – உஞ்ஞை:43/12
வெம்மை செல்வன் மேல் நிலை பெற்ற – உஞ்ஞை:58/21
வெம்மை பொதிந்த பொம்மென் இள முலை – இலாவாண:7/21
வெம்மை வேட்டுவர் வியன் மலை வரைப்பின் – இலாவாண:10/33
செம்மை நெடும் கண் வெம்மை அறாஅ – மகத:6/20

TOP


வெம்மைத்து (1)

வேல் எறிந்து அன்ன வெம்மைத்து ஆகி – வத்தவ:5/21

TOP


வெம்மைய (2)

செம்மையில் சிறந்து வெம்மைய ஆகி – இலாவாண:15/56
வீக்கம் கொண்டு வெம்மைய ஆகி – மகத:5/21

TOP


வெம்மையின் (1)

இன்னவை பிறவும் வெம்மையின் வருந்தி – உஞ்ஞை:52/73

TOP


வெம்மையொடு (1)

தன் நிறம் கரப்ப தவாஅ வெம்மையொடு
வீழ் அனல் கடுப்ப வெய்துயிர்த்து அலைஇ – மகத:14/127,128

TOP


வெய்து (7)

எஃகு ஒழி களிற்றின் வெய்து உயிர்த்து உயங்கி – உஞ்ஞை:33/109
விருப்பு உள் கூர விம்மி வெய்து உயிர்த்து – உஞ்ஞை:35/188
ஆவி போல ஐது வெய்து உயிரா – உஞ்ஞை:46/166
பெய் வளை தோளி வெய்து உயிர்த்து ஏங்க – உஞ்ஞை:56/32
நடுங்கி வெய்து உயிர்க்கும் நல் நுதல் பணை தோள் – இலாவாண:17/88
வெய்து உயிர்ப்பு அடக்கி நீ வேண்டியது வேண்டா – இலாவாண:17/179
அகத்தே நடுங்கி அழல்பட வெய்து உயிர்த்து – இலாவாண:19/167

TOP


வெய்துபட (1)

கையிகந்து சிவப்ப வெய்துபட உயிரா – உஞ்ஞை:40/325

TOP


வெய்துயிர்த்து (4)

வீழ் அனல் கடுப்ப வெய்துயிர்த்து அலைஇ – மகத:14/128
ஐயம் தீர்ந்து வெய்துயிர்த்து எழுந்து நின்று – வத்தவ:7/185
விம்மிவிம்மி வெய்துயிர்த்து என் குறை – வத்தவ:14/152
மை கொள் கண்ணியர் வெய்துயிர்த்து இரிய – நரவாண:8/63

TOP


வெய்துயிர்ப்பு (2)

செய்வதை அறியலள் வெய்துயிர்ப்பு அளைஇ – மகத:6/128
ஆவி வெய்துயிர்ப்பு அளைஇ அகம் உளைவனள் – மகத:24/188

TOP


வெய்துற்று (1)

எய்துவன் என்னும் சிந்தையன் வெய்துற்று
ஏர் அலர் தாரோன் ஆற்றலின் ஊர்தர – உஞ்ஞை:52/113,114

TOP


வெய்துறு (1)

வெய்துறு விழுமமொடு விம்மம் கூர – உஞ்ஞை:46/346

TOP


வெய்ய (1)

தேம் தார் மார்பம் திறப்ப வெய்ய
ஆழ்ந்த அம்போடு அழிந்தனன் ஆகி – மகத:27/130,131

TOP


வெய்யவன் (1)

வையகத்து இயங்கும் வெய்யவன் ஊரும் – இலாவாண:8/172

TOP


வெய்யொன் (1)

வெய்யொன் கதிர் ஒளி வீசு வளி நுழையா – இலாவாண:5/133

TOP


வெய்யோன் (8)

வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகி – உஞ்ஞை:33/156
உய் வகை இல்லை வெய்யோன் மாட்டு என்று – உஞ்ஞை:46/344
வெண் முகில் பொடிக்கும் வெய்யோன் போல – உஞ்ஞை:47/198
விரி கதிர் பரப்பிய வெய்யோன் போல – இலாவாண:1/21
விண்ணுற்று இயங்கும் வெய்யோன் அழுங்க – இலாவாண:6/24
வெய்யோன் பெறுதலும் விறல் அவன் எய்தலும் – நரவாண:1/117
பொன் நகர் புக்கனன் புகழ் வெய்யோன் என் – நரவாண:4/160
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும் – நரவாண:5/2

TOP


வெயில் (5)

வெயில் கண் போழா பயில் பூம் பொதும்பில் – உஞ்ஞை:33/27
வெயில் அழல் கவியாது வியலக வரைப்பின் – உஞ்ஞை:42/44
வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு – இலாவாண:19/151
கடு வெயில் வந்த காவலாளர் கண் – மகத:10/57
அயிலில் புனைந்த வெயில் புரை ஒள் வாள் – மகத:17/244

TOP


வெரீஇ (12)

நொதுமல் கிளவி கதுமென வெரீஇ
புது மர பாவை பொறி அற்றாங்கு – உஞ்ஞை:36/59,60
வெரீஇ அன்ன வியப்பினர் ஆகி – உஞ்ஞை:37/254
சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின – உஞ்ஞை:38/34
இன் ஒலி வீணை பண் ஒலி வெரீஇ
வஞ்சி கொம்பர் துஞ்சு அரித்து உளரி – உஞ்ஞை:40/117,118
கம்பலை வெரீஇ கவரல் செல்லா – உஞ்ஞை:43/184
பொறி வரி இரும் புலி போத்து நனி வெரீஇ
மறியுடன் தழீஇய மட மான் அம் பிணை – உஞ்ஞை:54/37,38
வரி நிற கோம்பி வால் இமிழ்ப்பு வெரீஇ
எரி மலர் இலவத்து இரும் சினை இருந்த – உஞ்ஞை:54/142,143
வேட்டிடை பாய்தலை வெரீஇ ஓடா – இலாவாண:9/161
வயல் கொள் வினைஞர் கம்பலை வெரீஇ
கயம் மூழ்கு எருமை கழை வளர் கரும்பின் – மகத:2/15,16
கூற்று ஆர்ப்பு இசைப்பு இது என் என்றனள் வெரீஇ
விசை புள் வெம் குரல் இசைப்ப கேட்ட – மகத:24/174,175
பொரு படை வேந்தனை வெரீஇ புணர்த்த – வத்தவ:7/8
புக்கது வீழ்தலும் பொருக்கென வெரீஇ
எழுந்த மாதரொடு இறைவனும் ஏற்று – நரவாண:1/109,110

TOP


வெரீஇய (4)

சொல் இசை வெரீஇய மெல்லென் பாவை – உஞ்ஞை:36/334
தொடி கை மகளிர் நீர் குடை வெரீஇய
நெட்டு இரும் பொய்கை குட்டம் மண்டி – உஞ்ஞை:40/33,34
அம் கண் அகல் வயல் ஆர்ப்பு இசை வெரீஇய
பைம் கண் எருமை படு கன்று ஓம்பி – உஞ்ஞை:48/141,142
நள்ளென் யாமத்து நல்_நுதல் வெரீஇய
புள்ளின் நற்குறி உரைத்தலும் பொருக்கென – மகத:22/168,169

TOP


வெரு (1)

வெரு பறை கொட்டி உருத்துவந்து ஈண்டி – மகத:24/209

TOP


வெருட்டலும் (1)

வெருட்டலும் தெருட்டலும் விடுத்தலும் விலக்கலும் – இலாவாண:9/85

TOP


வெருவ (3)

வீளை ஓட்டின் வெருவ எய்து அவர் – உஞ்ஞை:55/64
வெருவ குழறிய விழி கண் கூகை – மகத:22/151
கண்டோர் வெருவ கண் மலர் அடக்கம் – வத்தவ:14/69

TOP


வெருவர (2)

வெருவர தாக்கி வீழ நூறி – உஞ்ஞை:48/33
அரவ செய்கையர் வெருவர தாக்க – உஞ்ஞை:55/116

TOP


வெருவவும் (1)

கயல் கொள் பொலம்புள் கதுமென வெருவவும்
திணை விராய் மணந்து திரு விழை தகைத்தா – வத்தவ:2/69,70

TOP


வெருவு (1)

வெருவு தன்மைய ஒரு-வயின் ஒரு நாள் – இலாவாண:17/25

TOP


வெருவுறு (3)

வெருவுறு மஞ்ஞையின் தெருமந்து இகலி – உஞ்ஞை:46/214
வெருவுறு பிணையின் விம்முவனள் நடுங்கும் – இலாவாண:9/142
வெருவுறு பிணையின் விம்மாந்து எழாஅ – மகத:24/196

TOP


வெருள்பட (1)

வெருள்பட போக்கிய வெண் தீ விளக்கம் – உஞ்ஞை:50/54

TOP


வெருளி (3)

விசையின் வீழ்ந்து வெருளி ஆற்றான் – உஞ்ஞை:45/69
மருளி மாவும் வெருளி பிணையும் – இலாவாண:15/31
பெரும் குடி ஆக்கம் பீடு அற வெருளி
அரும் கடம் பூண்ட அவியா காதலொடு – மகத:24/84,85

TOP


வெரூஉ (1)

வில் விசை கேட்ட வெரூஉ பிணை போல – உஞ்ஞை:36/332

TOP


வெல் (16)

பகை வெல் சித்திரம் பல திறம் பயிற்றி – உஞ்ஞை:37/43
வயிர வெல் படை வானவர் இறைவன் – உஞ்ஞை:37/145
வெல் போர் உதயணன் வெல் துணை ஆக – உஞ்ஞை:37/206
வெல் போர் உதயணன் வெல் துணை ஆக – உஞ்ஞை:37/206
வெல் வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்து – உஞ்ஞை:42/53
வெல் போர் வேந்தன் மட மகள் விரும்பி – உஞ்ஞை:42/81
இல்லை ஆதலின் வெல் சமம் பெருக்கி – உஞ்ஞை:43/29
வெல் போர் வேந்தன் வீரரை சவட்டி – உஞ்ஞை:43/77
வெல் போர் வேந்தன் விடுக்கப்பட்ட – உஞ்ஞை:48/5
வெல் போர் விடலை வெள்ளிடை படுத்தலின் – உஞ்ஞை:56/47
வெல் போர் பெரும் படை வேந்தன் விடுத்ததும் – இலாவாண:8/41
மகர வெல் கொடி மகிழ் கணை காமற்கு – மகத:5/30
மல்லன் என்னும் வெல் போர் விடலையும் – மகத:17/32
பல் ஊழ் புல்லி வெல் போர் வேந்த – மகத:20/132
வெல் பொறி ஓலை விடுத்த பின் அல்லது – மகத:27/201
வெல் போர் வேந்தனும் விரும்பினன் ஆகி – நரவாண:4/68

TOP


வெல்க (1)

அம் தளிர் கண்ணி அவந்திகை வெல்க என – வத்தவ:12/243

TOP


வெல்லினும் (1)

வெல்லினும் தோற்பினும் விதி என வகுத்தல் – உஞ்ஞை:34/90

TOP


வெவ் (16)

ஆற்ற வெவ் அழல் அவிப்ப கூடுதல் – உஞ்ஞை:42/239
வேக புள்ளின் வெவ் இசை கேட்ட – உஞ்ஞை:44/44
வேக புள்ளின் வெவ் இசைக்கு உலந்த – உஞ்ஞை:46/23
மிகை செலற்கு எழுந்த வேக வெவ் அழல் – உஞ்ஞை:46/30
வெவ் வினையாளர் அல்லது விழுமிய – உஞ்ஞை:49/51
வெவ் வழி நிலம் மிசை வில்லேப்பாட்டிடை – உஞ்ஞை:53/68
புகை மிகு வெவ் அழல் பூம் பொழில் புதைப்ப – உஞ்ஞை:56/27
செய்தும் யாம் என வெவ் வினையாளர் – உஞ்ஞை:56/132
அருக்கன் வெவ் அழல் ஆற்றுவ போல – இலாவாண:1/8
வேக வெவ் அழல் விளிய மாட்டி – இலாவாண:12/112
வெவ் அழல் உறீஇ விளங்கு இழை பிரித்து – இலாவாண:17/5
அ இழிக்கு இரங்கி வெவ் அழல் உயிர்த்தும் – இலாவாண:19/106
வேக வெவ் அழல் வெம் புகை அணிந்த – இலாவாண:19/114
முன் நான் உரைத்த இன்னா வெவ் உரைக்கு – மகத:25/131
காதி வெவ் வினை கடையறு-காலை – மகத:27/149
மேல்நாள் காலை வெவ் அழற்பட்ட – வத்தவ:10/144

TOP


வெள் (25)

வெள்_ஏட்டு அங்கண் வித்தகம் எழுதிய – உஞ்ஞை:32/69
பால் பரந்து அன்ன வால் வெள் விதானத்து – உஞ்ஞை:34/21
கச்சினர் கண்ணியர் கதிர் வெள் வளையினர் – உஞ்ஞை:34/122
தேய்வுற்று அமைந்த திரு வெள் ஆரத்து – உஞ்ஞை:34/200
வெள் வளை முன்கை தோழியர் பற்றி – உஞ்ஞை:34/237
கூறை வெள் உறி குண்டிகை காவினர் – உஞ்ஞை:36/228
விசும்பு ஆடு ஊசல் வெள் வளைக்கு இயற்றிய – உஞ்ஞை:36/368
இன் நீர் வெள் வளை அலறும் ஆர்ப்பின் – உஞ்ஞை:38/131
தூ வெள் அரும் சிறை சேவலொடு உளரி – உஞ்ஞை:40/54
வெள் வளை மகளிர் முள்குவநர் குடையும் – உஞ்ஞை:40/56
வால் வெள் வசம்பும் வள் இதழ் காந்தளும் – உஞ்ஞை:50/28
தொடுப்போர் வீழ்த்த தூ வெள் அலரும் – இலாவாண:2/93
வெற்ற வெள் வேல் வீரியன் புகழ்ந்து – இலாவாண:5/74
வெள் இதழ் நறு மலர் வீழ பையாந்து – இலாவாண:13/45
அறை வெள் ஆரமும் அன்னவை பிறவும் – இலாவாண:18/48
வெள் வேல் விடலையொடு விளங்கு இழை மாதர்க்கு – மகத:7/107
வேக வெள் வேல் கேகயத்து அரசனை – மகத:20/97
செம் கடை வேல் கண் வெள் வளை பணை தோள் – மகத:21/18
கழிப்புறு வெள் வாள் தெழித்தனர் உரீஇ – மகத:27/214
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த – வத்தவ:5/74
விள்ளா விழு புகழ் வெள் ஏறு என்பதை – வத்தவ:5/115
வெள் வேல் கண்ணி ஒவ்வாள் என்று அவள் – வத்தவ:8/111
வேய் இரும் தடம் தோள் வெள் வளை ஆர்ப்ப – வத்தவ:12/74
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ – நரவாண:1/93
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த – நரவாண:3/194

TOP


வெள்_ஏட்டு (1)

வெள்_ஏட்டு அங்கண் வித்தகம் எழுதிய – உஞ்ஞை:32/69

TOP


வெள்க (1)

மதி அகம் வெள்க வனப்பொடு புணர்ந்த – இலாவாண:2/219

TOP


வெள்ள (2)

வெள்ள தானை வேந்தன் பெயர்ந்து – வத்தவ:12/268
வெள்ள தானை வியலக வேந்தன் – நரவாண:1/143

TOP


வெள்ளத்து (3)

சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி எய்தி – உஞ்ஞை:43/13
உலக வெள்ளத்து ஆழும் பல் உயிர்க்கு – இலாவாண:6/155
ஆய வெள்ளத்து அவனை அழைத்தே – நரவாண:3/189

TOP


வெள்ளம் (4)

குருதி வெள்ளம் கூலம் பரப்பி – உஞ்ஞை:37/230
வியன் கா மண்டிய வெள்ளம் போல – உஞ்ஞை:38/272
கண்ணீர் வெள்ளம் கால் அலைத்து ஒழுக – இலாவாண:10/47
அலை கடல் வெள்ளம் அலைய ஊழி – மகத:20/75

TOP


வெள்ளி (22)

வெள்ளி வெண் திரள் வேண்டு இடத்து ஊன்றி – உஞ்ஞை:40/13
வெள்ளி வள்ளம் பல் உற கவ்வி – உஞ்ஞை:40/71
வெள்ளி பூம் தார் எள்ளும் தோற்றத்து – உஞ்ஞை:40/250
திகழ் மணி வெள்ளி புகழ் மணை சேர்த்தி – உஞ்ஞை:42/97
வெள்ளி போழை உள்ளகத்து அடக்கி – உஞ்ஞை:46/239
கொள்ளி கூர் எரி வெள்ளி விளக்கில் – உஞ்ஞை:50/19
விளக்குறு வெள்ளி முளைத்து முன் தோன்ற – உஞ்ஞை:53/81
வெள்ளி விளக்கத்து உள் இழுது உறீஇ – உஞ்ஞை:54/7
வெள்ளி வெண் மாடத்து பள்ளிகொள்ளும் – உஞ்ஞை:54/18
வெள்ளி போர்வை உள் ஒளி படலத்து – உஞ்ஞை:57/52
வெள்ளி வேயுள் வெள்ளி அம் பலகை – இலாவாண:2/90
வெள்ளி வேயுள் வெள்ளி அம் பலகை – இலாவாண:2/90
பொன் அகல் மணி அகல் செப்பு அகல் வெள்ளி
ஒண் நிற போனகம் மண்ணகம் மலிர – இலாவாண:3/43,44
ஒள் ஒளி திகழும் வெள்ளி கதவின் – இலாவாண:6/74
வெள்ளி அம் பெரு மலை அன்ன விளங்கு ஒளி – மகத:3/119
விரும்பப்படும் அது வெள்ளி அம் பெரு மலை – வத்தவ:5/118
விளங்கு ஒளி விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை – நரவாண:1/115
விச்சை எய்தி வெள்ளி அம் பெரு மலை – நரவாண:3/177
விழு தகு வெள்ளி வியன் மலை விளங்க – நரவாண:6/22
வெண் முகில் ஒழுகிய வெள்ளி அம் பெரு மலை – நரவாண:6/136
வெள்ளி விமானம் விதிர்விதிர்த்து ஏறி – நரவாண:8/53
விறல் கெழு விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை – நரவாண:8/67

TOP


வெள்ளிடை (7)

புல்லும் பொள்ளலும் வெள்ளிடை களரும் – உஞ்ஞை:52/30
துள்ளு நடை இரலையொடு வெள்ளிடை குழும – உஞ்ஞை:54/39
வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும் – உஞ்ஞை:55/78
வில்லின் நீக்கி வெள்ளிடை செய்து அவர் – உஞ்ஞை:56/38
வெல் போர் விடலை வெள்ளிடை படுத்தலின் – உஞ்ஞை:56/47
வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு – இலாவாண:19/151
வெள்ளிடை புகுந்த வேட்டுவ படையினை – மகத:27/23

TOP


வெள்ளிதின் (2)

மல்லிகை நறும் சூட்டு வெள்ளிதின் விளங்க அதன் – உஞ்ஞை:46/233
பள்ளி கட்டில் வெள்ளிதின் விரிந்த – இலாவாண:3/137

TOP


வெள்ளிய (1)

வெள்ளிய நறும் பூ தந்தனள் விளங்கு_இழை – நரவாண:3/202

TOP


வெள்ளியின் (1)

விளங்கு அறல் வெள்ளியின் வீசுறும் என்று அதன் – மகத:12/72

TOP


வெள்ளியும் (5)

வெள்ளியும் பவழமும் உள் விழுந்து இமைப்ப – உஞ்ஞை:42/93
விஞ்சை அம் பெரு மலை விளங்கு ஒளி வெள்ளியும்
இலங்கை ஈழத்து கலம் தரு செப்பும் – உஞ்ஞை:58/36,37
வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும் – இலாவாண:3/139
பவழமும் வெள்ளியும் பசும்பொன் அடரும் – இலாவாண:15/128
இரும்பும் வெள்ளியும் இசைந்து உருக்குறீஇ – இலாவாண:17/69

TOP


வெள்ளியோடு (1)

இயை கொள் வெள்ளியோடு இரும்பு யாப்புறுத்து – உஞ்ஞை:38/142

TOP


வெள்ளிலும் (1)

கடிகை வெள்ளிலும் கள்ளி வற்றலும் – உஞ்ஞை:55/83

TOP


வெள்ளை (4)

வெள்ளை வேட்டுவீர் புள் எவன் பிழைத்தது என்று – உஞ்ஞை:56/16
வெள்ளை நோக்கமொடு விரும்புபு விதும்பி – இலாவாண:15/100
வாச வெள்ளை வரைந்த கழுத்தினர் – மகத:1/124
வெள்ளை சாந்தின் வள்ளி எழுதிய – மகத:8/61

TOP


வெள்ளைமை (1)

உள்ளம் இலன் என வெள்ளைமை கலந்த – இலாவாண:19/20

TOP


வெளி (1)

வான் வெளி படூஉம் வாரி விழு பொருள் – நரவாண:3/209

TOP


வெளிப்பட (3)

வேட்கை கிளவி வெளிப்பட பயிற்றி – உஞ்ஞை:35/244
ஒளித்த வெம் படை வெளிப்பட ஏந்தி – உஞ்ஞை:43/44
மனத்தது வெளிப்பட மறுமொழி கொடாஅன் – வத்தவ:5/29

TOP


வெளிப்படாது (1)

எயிறு வெளிப்படாது இறைஞ்சி ஞிமிறு இனம் – உஞ்ஞை:35/198

TOP


வெளிப்படாமை (1)

எரி மலர் செம் வாய் எயிறு வெளிப்படாமை
திரு மலர் தாமரை தேன் முரன்றது போல் – உஞ்ஞை:37/119,120

TOP


வெளிப்படாஅள் (1)

தான் வெளிப்படாஅள் இன்னும் நுனக்கு ஓர் – நரவாண:3/208

TOP


வெளிப்படீஇய (1)

இயம் வெளிபடுத்த பின் இசை வெளிப்படீஇய
எரி மலர் செம் வாய் எயிறு வெளிப்படாமை – உஞ்ஞை:37/118,119

TOP


வெளிபடுத்த (1)

இயம் வெளிபடுத்த பின் இசை வெளிப்படீஇய – உஞ்ஞை:37/118

TOP


வெளில் (1)

விழா கொள் கம்பலின் வெகுண்டு வெளில் முருக்கி – உஞ்ஞை:38/90

TOP


வெற்பின் (1)

விண் தோய் வெற்பின் விளை குரல் எனல் – வத்தவ:2/61

TOP


வெற்பினுள் (1)

முற்பால் கூறிய வெற்பினுள் பிறந்த – வத்தவ:11/51

TOP


வெற்பு (2)

வெறுத்த வேந்தனை வெற்பு இடை முற்றி – மகத:27/27
விண் தோய் வெற்பு ஒலி விரவுபு மயங்கி – மகத:27/103

TOP


வெற்ற (8)

வெற்ற வெள் வேல் வீரியன் புகழ்ந்து – இலாவாண:5/74
வெற்ற வேந்தன் வெகுண்டு எழல் இன்மையும் – இலாவாண:8/54
வெற்ற வேலான் மற்றும் கூறினன் – மகத:10/61
பெற்ற பயன் என வெற்ற வேந்தனும் – மகத:12/29
வெற்ற தானை முற்றத்து தோன்றி – மகத:20/130
வெற்ற வேந்தன் கொற்ற பெரும் கணி – மகத:22/244
வெற்ற வேந்தன் கொற்றம் கொள்க என – வத்தவ:7/160
வெற்ற தானையும் வேழமும் நீக்கி – நரவாண:2/10

TOP


வெற்றி (5)

கொற்றக்குடையும் வெற்றி வேலும் – உஞ்ஞை:57/56
கொற்றவன் காண்ம் என வெற்றி வேல் தட கையர் – இலாவாண:7/36
வெற்றி தானையொடு விசயம் பெருக்கி – இலாவாண:20/24
வெற்றி முரசம் வேழம் ஏற்றி – மகத:27/182
வெற்றி காலத்து வீட்டுதல் அரிது என – வத்தவ:8/54

TOP


வெறி (2)

விளக்கு ஒளி பரந்த வெறி கமழ் கூலத்து – உஞ்ஞை:33/82
வெறி_களம் கடுப்ப வீதியும் முற்றமும் – இலாவாண:2/104

TOP


வெறி_களம் (1)

வெறி_களம் கடுப்ப வீதியும் முற்றமும் – இலாவாண:2/104

TOP


வெறிகோள் (1)

வெறிகோள் பண்ணியும் தொழில் தலைப்பெயர்த்தவன் – உஞ்ஞை:32/94

TOP


வெறிது (1)

வெறிது சேறல் விழுப்பம் அன்று என – மகத:2/28

TOP


வெறிய (1)

வேட்போர் இன்றி வெறிய ஆக – உஞ்ஞை:38/68

TOP


வெறு (1)

வீழ்ந்த வெண் மலர் வெறு நிலம் படாது – இலாவாண:13/57

TOP


வெறுக்கை (8)

வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை அன்றி – உஞ்ஞை:35/80
வெறுக்கை இன்மையில் துறக்கப்பட்ட – உஞ்ஞை:46/312
அரும் கல வெறுக்கை ஆர வீசி – இலாவாண:4/200
அரும் கல வெறுக்கை அவை மீன் ஆக – இலாவாண:7/77
வெறுக்கை செல்வம் வீசுதல் ஆற்றாது – மகத:7/15
பயந்தோன் படைத்த படைப்ப_அரும் வெறுக்கை
இருந்துழி இசையான் இகந்து அயர்த்து ஒழிந்தனன் – மகத:12/7,8
கரந்துழி அறிய அரும் கல வெறுக்கை
வைத்துழி காட்டும் வாய் மொழி விச்சை – மகத:12/19,20
வேண்டல்-பால வெறுக்கை நாடி – நரவாண:7/116

TOP


வெறுக்கையுள் (2)

விலை வரம்பு அறியா வெறுக்கையுள் மிக்க – உஞ்ஞை:38/237
எண்ண_அரும் பல் உயிர் எய்தும் வெறுக்கையுள்
பெண்டிருள் மிக்க பெரும் பொருள் இன்மையின் – உஞ்ஞை:38/265,266

TOP


வெறுக்கையொடு (2)

பொருள்-வயின் பிரிந்து பொலம் கல வெறுக்கையொடு
இருள்-வயின் வந்த இன் உயிர் காதலன் – உஞ்ஞை:49/92,93
அரும் கல வெறுக்கையொடு பெரும் பதி நல்கி – வத்தவ:3/144

TOP


வெறுத்த (2)

வெறுத்த வேட்கை தாம் உளம் சிறப்ப – இலாவாண:4/16
வெறுத்த வேந்தனை வெற்பு இடை முற்றி – மகத:27/27

TOP


வெறுத்தனை (1)

பொறுத்தல் செல்லாது வெறுத்தனை போன்ம் என – நரவாண:3/94

TOP


வெறுப்பும் (1)

வெம் கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும் – உஞ்ஞை:56/157

TOP


வெறுமை (1)

வெறுமை நீங்கினர் விச்சையின் அமைந்து என – உஞ்ஞை:37/77

TOP


வெறுமைத்து (1)

வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகி – உஞ்ஞை:33/156

TOP


வெறுவது (1)

வெறுவது விடாஅ விழு தகு நெஞ்சத்து – மகத:7/24

TOP


வென் (3)

வென் வேல் வேந்தனை விடுத்தனிர் சிறை என – இலாவாண:8/113
வென் வேல் உதயணன் விதியுளி வினவும் – வத்தவ:8/32
வென் வேல் தலைவனும் வேட்கை இன்றி – வத்தவ:13/164

TOP


வென்ற (3)

வென்ற கொற்றமொடு விசயம் எய்தி – இலாவாண:8/20
விண்டு அலர் கழுநீர் வென்ற கண்ணியொடு – இலாவாண:20/94
கோல் கொள வென்ற கோபாலகனை – வத்தவ:11/44

TOP


வென்றனம் (1)

மகத மன்னனை மலைந்து வென்றனம் என – மகத:19/86

TOP


வென்றார் (1)

வென்றார் ஆயினும் விழையும் விழவு அணி – நரவாண:8/9

TOP


வென்றி (33)

வென்றி முரசம் வீதி-தோறு எருக்கி – உஞ்ஞை:37/198
பொங்கு புகழ் வேந்தன் வென்றி ஏத்தி – உஞ்ஞை:45/83
செரு மாண் வென்றி செல்வன் பக்கமும் – உஞ்ஞை:46/203
வென்றி எய்தி கொன்று பலர் திரிதர – உஞ்ஞை:47/92
கடும் சின வென்றி காவல் ஆடவர் – உஞ்ஞை:49/56
வெண் மீன் போல வென்றி எய்தி – உஞ்ஞை:56/279
ஒடிவு_இல் வென்றி உதயணகுமரன் – இலாவாண:5/154
வென்றி முழக்கம் குன்றாது வழங்குநர் – இலாவாண:6/7
ஒல்கா வென்றி உதயணன் தடைஇய – இலாவாண:8/40
வென்றி வியல் நகர் வெம் துயர் உற்றதும் – இலாவாண:8/44
வென்றி தானை விக்கிரற்கு அருளி – இலாவாண:11/61
விழு பெரும் செல்வமொடு வென்றி தாங்கிய – மகத:4/7
தவல்_அரும் வென்றி தருசகன் தங்கை – மகத:6/136
உர போர் வென்றி உதயணகுமரன் – மகத:10/28
தம்மின் தீர்ந்து வெம் முரண் வென்றி
மகதவன் தங்கை மணி பூண் வன முலை – மகத:10/37,38
தள்ளா வென்றி தம் இறை வைத்த – மகத:12/40
வேண்டியது முடிக்கும் வென்றி தானை – மகத:17/9
வென்றி மாற்றம் சென்று செவிக்கு இசைப்ப – மகத:18/40
வினை மேம்பட்ட வென்றி வேந்தனை – மகத:18/85
திண் தோள் கட்டிய வென்றி நோக்கி – மகத:20/93
வீர வென்றி விறல் வெம் துப்பின் – மகத:23/24
வென்றி எய்துதல் வேண்டுதும் நாம் என – மகத:24/208
ஓங்கு புகழ் வென்றி உதயணன் இசைக்கும் – மகத:25/59
வெம் களத்து அட்ட வென்றி இவை என – வத்தவ:1/11
பெயர்வு_இல் வென்றி பிரச்சோதனன் எனும் – வத்தவ:10/6
வீயா வென்றி விண்ணுத்தராயனோடு – வத்தவ:11/59
வெம் கோல் அகற்றிய வென்றி தானை – வத்தவ:12/16
வென்றி வேந்தன் விடுப்ப விரைவொடு – வத்தவ:14/22
தந்தனன் தனியே வென்றி வேந்தன் – வத்தவ:14/110
வென்றி தானை வீர வேந்த நின் – நரவாண:1/31
வியந்து தலை பனிக்கும் வென்றி வேட்கையொடு – நரவாண:1/130
உலைவு_இல் வென்றி உதயணகுமரன்கு – நரவாண:7/5
பாற்படு வென்றி நால் புடை மருங்கினும் – நரவாண:7/21

TOP


வென்றித்து (1)

விளங்குபு துளங்கும் வென்றித்து ஆகி – இலாவாண:20/112

TOP


வென்றியின் (2)

சென்று சார்ந்த பின் வென்றியின் பெருகி – மகத:3/2
வேறு அலன் அவனை வென்றியின் நீக்கி – மகத:18/22

TOP


வென்றியும் (4)

தமரது வென்றியும் தருக்கும் நிலைமையும் – உஞ்ஞை:46/127
ஆற்றலும் வென்றியும் அறிவும் மூன்றும் – உஞ்ஞை:46/141
வென்றியும் விறலும் விழு தகு விஞ்சையும் – உஞ்ஞை:56/152
உடைத்த தோழர் ஊக்க வென்றியும்
வென்றி வியல் நகர் வெம் துயர் உற்றதும் – இலாவாண:8/43,44

TOP


வென்றியொடு (4)

தம் மொழி கொளீஇ வெம் முரண் வென்றியொடு
வழு_இல் கொள்கை வானவர் ஏத்தும் – உஞ்ஞை:42/6,7
மிக்கு உயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து – மகத:17/23
வெம் முரண் வென்றியொடு மேல்வந்து இறுத்த – மகத:17/185
வென்றியொடு புக்கு நின்ற மறவருள் – மகத:27/207

TOP


வென்று (5)

வென்று அடு சிறப்பின் வீணை வித்தகன் – மகத:1/139
வென்று அடு குருசில் வீழ்ந்தனன் இரப்ப – மகத:9/169
அஞ்சாது இவனை அமர் வென்று அழிக்கும் – மகத:20/162
ஆருணி வேந்தை வென்று கைப்படுத்தின – வத்தவ:11/28
வென்று அடு தானை வேந்தன் விரும்பி – நரவாண:4/60

TOP


வென்றோன் (1)

வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் – மகத:20/107

TOP