ய – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யமுனை 3
யமுனையும் 1
யவன 12
யவனத்து 1
யவனர் 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யமுனை (3)

மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை
இடைக்கயத்து அழுந்த இடீஇய செல்வுழி – உஞ்ஞை:36/160,161
குழல் சிகை அவிழ குண்டு நீர் யமுனை
கணை கடு நீத்து இடை புணை புறம் தழீஇ – இலாவாண:10/140,141
குளிர் நீர் யமுனை குண்டு கயம் பாய – மகத:24/56

TOP


யமுனையும் (1)

முதல் கோசம்பியும் மொய் புனல் யமுனையும்
சிதர் பூம் காவும் சே இழை மாதர் – மகத:22/81,82

TOP


யவன (12)

ஆரிய செப்பும் யவன மஞ்சிகையும் – உஞ்ஞை:32/76
யவன கைவினை ஆரியர் புனைந்தது – உஞ்ஞை:38/233
யவன பாவை அணி விளக்கு அழல – உஞ்ஞை:47/175
யவன தச்சரும் அவந்தி கொல்லரும் – உஞ்ஞை:58/40
யவன பாடி ஆடவர் தலைமகன் – இலாவாண:8/168
ஐம்பதின் இரட்டி யவன சேரியும் – மகத:4/8
அரும் பொறி நுனித்த யவன கைவினை – மகத:5/48
யாணர் கூட்டத்து யவன கைவினை – மகத:15/22
யவன பேழையுள் அடைந்தோர் ஏந்திய – மகத:22/213
ஐ_ஐந்து இரட்டி யவன வையமும் – வத்தவ:10/41
பற்றிய யவன பாடையில் எழுத்து அவள் – வத்தவ:13/59
அரு வினை நுட்பத்து யவன புணர்ப்பும் – நரவாண:8/22

TOP


யவனத்து (1)

அடு திரை முந்நீர் யவனத்து அரசன் – வத்தவ:10/59

TOP


யவனர் (2)

அணி கால் பவழத்து யவனர் இயற்றிய – உஞ்ஞை:33/192
இனைய நுட்பத்து யவனர் இயற்றிய – நரவாண:8/59

TOP