பௌ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பௌவத்து (4)

ஆழ் கடல் பௌவத்து அரும் கலம் இயக்கும் – உஞ்ஞை:49/9
அலை திரை பௌவத்து அகத்தினீர் ஆயினும் – இலாவாண:3/51
படு திரை பௌவத்து கடு வளி கலக்க – இலாவாண:20/3
சிங்க பாலும் தெண் திரை பௌவத்து
மூவா அமரர் முயன்று உடன் கொண்ட – மகத:3/72,73

TOP


பௌவம் (7)

பௌவம் எல்லாம் படரும் ஈண்டு என – உஞ்ஞை:44/70
பரவை பௌவம் பருகுபு நிமிர்ந்து – உஞ்ஞை:49/80
பௌவம் புகூஉம் படர்ச்சித்து ஆகி – உஞ்ஞை:51/67
ஊர் திரை பௌவம் உலாவும் ஊக்கமொடு – உஞ்ஞை:53/133
பல் முகம் பரப்பி பௌவம் புகூஉம் – இலாவாண:17/34
அலை திரை பௌவம் ஆடை ஆகிய – மகத:20/188
முது நீர் பௌவம் கதுமென கலங்க – மகத:24/140

TOP