சா – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாஅய் 2
சாக்காடு 2
சாங்கிய 5
சாங்கியம் 2
சாண்டியன் 1
சாத்தி 1
சாத்திரம் 1
சாத்து 3
சாத்தொடு 1
சாத்தோடு 1
சாதக 1
சாதகன் 4
சாதத்தின் 1
சாதரும் 1
சாதல் 1
சாதனை 2
சாதி 2
சாதிங்குலிகம் 1
சாதிங்குலிகமொடு 1
சாதியும் 1
சாதிலிங்கமும் 1
சாந்த 1
சாந்தம் 12
சாந்தமும் 7
சாந்தமொடு 1
சாந்தாற்றியும் 1
சாந்திட்டு 1
சாந்திடை 1
சாந்தில் 1
சாந்திற்கு 1
சாந்தின் 6
சாந்தினர் 1
சாந்தினும் 2
சாந்து 18
சாந்தும் 6
சாந்துற 1
சாந்தொடு 3
சாபம் 3
சாபமும் 1
சாம்பி 1
சாம 1
சாமரை 2
சாய்ஞ்சு 1
சாய்த்த 1
சாய்த்தவன் 2
சாய்த்து 1
சாய்த்தும் 1
சாய்ப்பு 1
சாய 4
சாயல் 21
சாயலர் 1
சாயலும் 1
சாயலை 5
சாயலொடு 1
சாயனும் 2
சாயா 4
சார் 5
சார்ங்கம் 1
சார்ச்சியை 1
சார்த்தி 3
சார்த்தியும் 1
சார்த்தும் 1
சார்தல் 1
சார்தலும் 1
சார்ந்த 4
சார்ந்தனரால் 1
சார்ந்தனள் 3
சார்ந்தனை 1
சார்ந்து 6
சார்ந்தோர் 1
சார்பாக 2
சார்பு 1
சார்வா 2
சார்வு 8
சார 3
சாரணர் 1
சாரல் 29
சாரலில் 1
சாரலும் 1
சாரலொடு 1
சாரி 1
சாரியை 2
சாரின் 1
சாரும் 1
சால் 12
சால்க 1
சால்பகத்து 1
சால்பு 7
சால்பு_இல 1
சால்புளி 2
சால்பொடும் 1
சால்வு 2
சால 4
சாலங்காயற்கு 1
சாலங்காயன் 2
சாலங்காயனை 2
சாலவும் 1
சாலி 5
சாலிகைக்கு 1
சாலியும் 3
சாலேகத்து 3
சாலேகம் 3
சாலேகமும் 5
சாலேகமொடு 1
சாலை 6
சாலையும் 8
சாலையொடு 1
சாவது 3
சாவம் 1
சாவினும் 1
சாவினை 1
சாவு 2
சாற்றி 4
சாற்றிட 1
சாற்றியது 1
சாற்று 2
சாற்றுவனர் 1
சாற்றுவனள் 1
சாறு 2
சான்ற 20
சான்றதும் 1
சான்றோர் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சாஅய் (2)

சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும் – இலாவாண:8/109
தருமமும் கருமமும் தளர சாஅய்
ஆழின் அல்லதை அரசியல் வழாமை – இலாவாண:10/136,137

TOP
சாக்காடு (2)

மாய சாக்காடு மனங்கொள தேற்றி – இலாவாண:1/52
செயற்கை சாக்காடு தெளிய காட்ட – இலாவாண:9/254

TOP


சாங்கிய (5)

சாங்கிய சமயம் தாங்கிய பின்னர் – உஞ்ஞை:36/252
சாங்கிய முது_மகள் தான் தெரிந்து உணர – உஞ்ஞை:45/28
சாங்கிய மகளை பாங்கினில் தரீஇ – இலாவாண:8/160
சாங்கிய முது_மகள் தான் தெரிந்து உரைக்கும் – இலாவாண:10/22
சாங்கிய மட மகள் தலையா சென்ற – வத்தவ:16/44

TOP


சாங்கியம் (2)

சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை – உஞ்ஞை:36/231
சாங்கியம் தாங்கிய சால்பு அணி படிமை – உஞ்ஞை:46/324

TOP


சாண்டியன் (1)

சாண்டியன் என்னும் சால்பு உடை ஒழுக்கின் – மகத:6/194

TOP


சாத்தி (1)

நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி
உள்ளகம் புக்கு நள்ளிருள் நடுநாள் – மகத:24/138,139

TOP


சாத்திரம் (1)

தரும சாத்திரம் தலைக்கொள்கு என்று – மகத:19/4

TOP


சாத்து (3)

வில் ஏர் உழவர் செல் சாத்து எறிந்துழி – உஞ்ஞை:52/26
அணங்க_அரும் பெரும் சாத்து அவிய நூறி – உஞ்ஞை:55/47
சாத்து கோயும் பூ தகை செப்பும் – மகத:5/78

TOP


சாத்தொடு (1)

வயிர சாத்தொடு வட திசை போகி – உஞ்ஞை:36/223

TOP


சாத்தோடு (1)

அடி நிலை சாத்தோடு யாப்பு பிணியுறீஇ – இலாவாண:18/22

TOP


சாதக (1)

சாதக பட்டிகை சால் அவை நாப்பண் – நரவாண:6/83

TOP


சாதகன் (4)

தீது_இல் கேள்வி சாதகன் என்போன் – வத்தவ:4/36
வாயின் உரைக்க என சாதகன் கூறும் – வத்தவ:4/54
தூது செல் ஒழுக்கின் சாதகன் உரைப்ப – வத்தவ:4/84
இலாவாணக வழி சாதகன் என்னும் – வத்தவ:9/47

TOP


சாதத்தின் (1)

போதத்தின் அகன்று சாதத்தின் வழி நின்று – உஞ்ஞை:43/61

TOP


சாதரும் (1)

அம் கோசிகமும் வங்க சாதரும்
கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன – உஞ்ஞை:42/205,206

TOP


சாதல் (1)

சாதல் பொருள் என காதல் கழுமி – உஞ்ஞை:56/218

TOP


சாதனை (2)

பூழி படுத்த சாதனை அமைவின் – உஞ்ஞை:46/86
தவாஅ அன்பின் தவ மா சாதனை
போகிய பொழுதின் ஆகிய நலத்தொடு – மகத:4/76,77

TOP


சாதி (2)

போதிக்கு ஒத்த சாதி பவழ – இலாவாண:6/59
குளிர் கொள் சாதி சந்தன கொழும் குறை – வத்தவ:16/18

TOP


சாதிங்குலிகம் (1)

சாதிங்குலிகம் ஆதி ஆக – உஞ்ஞை:40/221

TOP


சாதிங்குலிகமொடு (1)

சாதிங்குலிகமொடு சமரம் ஒழுகிய – இலாவாண:5/22

TOP


சாதியும் (1)

இமயத்து பிறந்த வயிர சாதியும்
கடாரத்து இரும்பொடு கையகத்து அடக்கி – உஞ்ஞை:58/38,39

TOP


சாதிலிங்கமும் (1)

சாதிலிங்கமும் சந்தன தேய்வையும் – உஞ்ஞை:41/130

TOP


சாந்த (1)

ஈர் நறும் சாந்த தாரொடு குழைய – மகத:24/168

TOP


சாந்தம் (12)

தண் நறும் சாந்தம் நுண்ணிதின் எழுதி – உஞ்ஞை:42/150
அம் செம் சாந்தம் ஆகத்து எறிந்தும் – உஞ்ஞை:42/187
குழங்கல் சாந்தம் அழுந்துபட அணிந்து – உஞ்ஞை:42/203
அம் செம் சாந்தம் எழுதிய அகலம் – உஞ்ஞை:46/25
தவல்_அரும் சாந்தம் தடியுற அப்பி – இலாவாண:10/120
குவி முலை சாந்தம் நவிர் முதல் பொறித்தே – மகத:9/79
வாங்கினன் உடுத்து பூம் தண் சாந்தம்
எழு உறழ் தோளும் அகலமும் எழுதி – மகத:9/131,132
அம் தண் சாந்தம் ஆகத்து திமிர்ந்து – மகத:14/130
சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து – மகத:14/147
எழுந்தது குறு வியர் இழிந்தது சாந்தம்
ஓடின தடம் கண் கூடின புருவம் – வத்தவ:12/227,228
கை நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன் – நரவாண:2/23
நறு வெண் சாந்தம் பூசிய கையால் – நரவாண:8/97

TOP


சாந்தமும் (7)

அரைப்பு அமை சாந்தமும் உரைப்பு அமை நானமும் – உஞ்ஞை:41/126
கலந்தோர் உதிர்த்த கலவை சாந்தமும்
புலந்தோர் பரிந்த புது பூ மாலையும் – இலாவாண:2/96,97
பாகும் சாந்தமும் போகமொடு புணர்ந்த – இலாவாண:3/63
புனை நறும் சாந்தமும் துணை மலர் பிணையலும் – மகத:9/71
புது மலர் பிணையலும் புனை நறும் சாந்தமும்
கதிர் மணி ஆழியும் கண்டனன் ஆகி – மகத:9/120,121
மற்று இவள் வைத்த மாலையும் சாந்தமும்
அணிந்ததை பொல்லாது அருளினை இனி இவள் – மகத:10/6,7
பூவும் நானமும் பூசும் சாந்தமும்
யாவையாவை அவைஅவை மற்று அவர் – மகத:13/24,25

TOP


சாந்தமொடு (1)

அம் செம் சாந்தமொடு மஞ்சள் நீவி – இலாவாண:3/47

TOP


சாந்தாற்றியும் (1)

ஆலவட்டமும் அணி சாந்தாற்றியும்
மாலை பந்தும் ஏனைய பிறவும் – உஞ்ஞை:57/45,46

TOP


சாந்திட்டு (1)

சந்தன சாந்திட்டு அன்ன தண்மையொடு – மகத:7/109

TOP


சாந்திடை (1)

குழங்கல் சாந்திடை குளித்து விளையாடி என் – மகத:1/203

TOP


சாந்தில் (1)

மறு இன்று அமைந்த நறு வெண் சாந்தில்
பத்தியும் கொடியும் பல் வழி எழுதி – இலாவாண:4/63,64

TOP


சாந்திற்கு (1)

சந்தன குறையொடு சாந்திற்கு உரியவை – மகத:17/139

TOP


சாந்தின் (6)

சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல் – உஞ்ஞை:41/10
வரித்த சாந்தின் வண்ணம் சிதைப்ப – உஞ்ஞை:46/226
நறு வெண் சாந்தின் நல் நலம் குயில – இலாவாண:5/81
மங்கல சாந்தின் மலர் கொடி எழுதி – மகத:5/50
வெள்ளை சாந்தின் வள்ளி எழுதிய – மகத:8/61
ஒண் பூம் சாந்தின் நுண் பொறி ஒற்றி – மகத:9/107

TOP


சாந்தினர் (1)

தகரம் கலந்த தண் நறும் சாந்தினர்
பால் நிற வெண் துகில் ஆன தானையர் – இலாவாண:4/146,147

TOP


சாந்தினும் (2)

படலை வெண் சாந்தினும் படத்தினும் இயன்ற – உஞ்ஞை:38/71
புகையினும் சாந்தினும் தகை இதழ் மலரினும் – மகத:7/74

TOP


சாந்து (18)

மாலையும் சாந்து மடியும் பெய்த – உஞ்ஞை:35/27
ஏந்திய நீழல் சாந்து கண் புலர்த்திய – உஞ்ஞை:38/127
நக்கிர பலகையும் நறும் சாந்து அம்மியும் – உஞ்ஞை:38/171
சாந்து அரை கூல பெரும் கடை – உஞ்ஞை:40/24
செம் சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து – உஞ்ஞை:45/22
முலை பூண் அழுத்திய மொய் சாந்து அகலம் – உஞ்ஞை:46/46
தனி முத்து அணிந்த தண் சாந்து ஆகத்து – உஞ்ஞை:46/237
சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில் – உஞ்ஞை:57/35
வாச நறும் சாந்து வகைபெற பூசி – இலாவாண:5/181
அம் சாந்து அழிய ஆகத்து அடக்கி – இலாவாண:7/115
தாழ் நகை ஆகத்து தண் சாந்து சிதைய – இலாவாண:10/61
திகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய – இலாவாண:16/86
சாந்து புலர் ஆகத்து தேம் தார் திவள – இலாவாண:18/99
செம் சாந்து வரித்த சில் மெல் ஆகத்து – இலாவாண:19/107
சாந்து வினை கம்மியன் கூட்டு வினை அமைத்து – மகத:1/196
பைம் தாள் பொருந்தி செம் சாந்து உதிர – மகத:9/28
வெண் சாந்து வரித்த அம் சில் ஆகத்து – மகத:22/216
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா – மகத:26/78

TOP


சாந்தும் (6)

சுண்ணமும் சாந்தும் சுரும்பு இமிர் கோதையும் – உஞ்ஞை:38/61
பைம் கேழ் சாந்தும் குங்கும குவையும் – உஞ்ஞை:42/66
மாலையும் சாந்தும் மங்கல மரபின் – இலாவாண:7/161
ஆற்றேன் அவள்-தன் சாந்தும் இள முலை – மகத:7/54
சூடு அமை சாந்தும் ஈடு அறிந்து புனைந்த – மகத:9/44
கோதையும் சாந்தும் கொண்டு அணிந்தனை என – மகத:9/172

TOP


சாந்துற (1)

பூம் தாதோடு சாந்துற கூட்டி – வத்தவ:13/62

TOP


சாந்தொடு (3)

கூந்தல் நறு மண் சாந்தொடு கொண்டு – உஞ்ஞை:40/28
நறு வெண் சாந்தொடு மாலை அணிந்து – இலாவாண:2/35
பூம் தாது ஒழுக்கம் சாந்தொடு திமிர்ந்து – இலாவாண:16/29

TOP


சாபம் (3)

நூலின் இயன்றவை நோக்கார் சாபம் என்று – உஞ்ஞை:55/59
வணங்கு சிலை சாபம் வார் கணை கொளீஇ – மகத:20/8
சாபம் தீர்ந்து தானே வந்த – வத்தவ:17/52

TOP


சாபமும் (1)

மணி ஒலி வீணையும் சாபமும் மரீஇ – உஞ்ஞை:35/101

TOP


சாம்பி (1)

புலம்புகொள் மஞ்ஞையின் புல்லென சாம்பி
புனல் கொல் கரையின் இனைவனள் விம்மி – உஞ்ஞை:33/196,197

TOP


சாம (1)

சாம கீத ஓசையில் தணிக்கும் – உஞ்ஞை:44/63

TOP


சாமரை (2)

சாமரை இரட்டையும் தமனிய குடையும் – உஞ்ஞை:36/21
பொன் படை புளகம் மிசை பொங்கும் சாமரை
நல் பிடி நட-தொறும் நடுங்கும் தோழியை – உஞ்ஞை:45/14,15

TOP


சாய்ஞ்சு (1)

காஞ்சுகி முதியர் சாய்ஞ்சு அஞர் எய்தலும் – உஞ்ஞை:46/318

TOP


சாய்த்த (1)

ஏற்றோர் சாய்த்த இ குருகுலத்தகத்து ஓர் – வத்தவ:11/13

TOP


சாய்த்தவன் (2)

வினவிய மகளிர்க்கு சினவுநர் சாய்த்தவன்
வேத விழு பொருள் ஓதினர் உளர் எனின் – மகத:14/174,175
மாற்றோர் சாய்த்தவன் மறுத்த வண்ணமும் – மகத:22/3

TOP


சாய்த்து (1)

தடவும் பிடவும் தாழ சாய்த்து
முளவும் முருக்கும் முருங்க ஒற்றி – உஞ்ஞை:51/43,44

TOP


சாய்த்தும் (1)

வேலில் சாய்த்தும் கோல மான் தேர் – மகத:17/232

TOP


சாய்ப்பு (1)

சாய்ப்பு இடமாக போர் படை பரப்பி – மகத:17/63

TOP


சாய (4)

மர முதல் சாய மருந்து கொண்டாஅங்கு – உஞ்ஞை:37/188
வெப்ப மன்னர் வீக்கம் சாய
உடைந்து கை அகல அவர் உரிமை தழீஇ – மகத:20/122,123
பாயல் அகத்தே சாய நூறி – மகத:24/151
பகை முதல் சாய பசி பிணி நீங்க – நரவாண:6/19

TOP


சாயல் (21)

அம் மென் சாயல் அரிவை மகளிர் – உஞ்ஞை:41/84
சாயல் செல்வ தலையளித்து ஓம்பி – உஞ்ஞை:47/215
பட்டிமை ஒழுக்கில் பலர் தோய் சாயல்
அரம் போழ் அம் வளை மகளிர் மனத்தின் – உஞ்ஞை:50/9,10
பள்ளி கொண்ட வள்ளி அம் சாயல்
கற்பொடு புணர்வியை காஞ்சனமாலாய் – உஞ்ஞை:53/119,120
செம்மலின் விடுக்கும் சிறந்த சாயல்
அம் மென் கூந்தல் அரிவையர் கம்பலும் – இலாவாண:2/172,173
அம் மென் சாயல் செம் முது பெண்டிர் – இலாவாண:3/60
அசைந்து அணிகொண்ட அம் மென் சாயல்
தாமரை எள்ளிய காமரு திரு முகத்து – இலாவாண:4/125,126
நேர் இயல் சாயல் நிகர் தமக்கு இல்லா – இலாவாண:7/72
கொடி ஏர் சாயல் கொழும் கவின் வாட – இலாவாண:10/113
தன் உயிர் வைத்த மின் உறழ் சாயல்
உடப்பு சட்டகம் உண்டு எனில் காண்கம் – இலாவாண:19/39,40
நுண் சிறு மருங்குல் நுகர்வு இன் சாயல்
பாச பாண்டில் பல் காழ் அல்குல் என் – மகத:1/163,164
சாயல் நோம் என தாய் அகட்டு எடுத்து – மகத:5/95
சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து – மகத:14/147
மின் உறழ் சாயல் பொன் உறழ் சுணங்கின் – மகத:16/5
தருசகன் தங்கை தகை ஏர் சாயல்
பத்தி பைம் பூண் பதுமா நங்கை – மகத:20/179,180
வள மயில் சாயல் வாசவதத்தையை – வத்தவ:5/26
பண்பு ஆர் சாயல் பதுமாபதி-தன் – வத்தவ:9/15
அடி நனி காண்புழி அணங்கு ஏர் சாயல்
கொடி புரை நுண் இடை கொவ்வை செ வாய் – வத்தவ:12/34,35
சாயல் வகையினும் சால்பு உடை மொழியினும் – வத்தவ:12/153
மதர் மான் நோக்கின் மாதர் அம் சாயல்
பதர் இலை பணி மொழி பணை தோள் சில் நுதல் – நரவாண:8/67,68
ஏ என அஞ்சும் சாயல் நோக்கி – நரவாண:8/65

TOP


சாயலர் (1)

பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர்
பாப்பு எயிற்று அன்ன பல் நிரை தாலி – இலாவாண:7/96,97

TOP


சாயலும் (1)

சாயலும் கிளவியும் தம்மொடு நிகர்த்த – இலாவாண:12/117

TOP


சாயலை (5)

கொடியேர் சாயலை குடங்கையில் தழீஇ – உஞ்ஞை:44/154
திரு வளர் சாயலை திண்ணிதின் தழீஇ – உஞ்ஞை:48/130
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய் – உஞ்ஞை:53/56
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு – மகத:18/6
என் நேர் என்ற மின் ஏர் சாயலை
பருகுவனன் போல பல்லூழ் முயங்கி – வத்தவ:8/107,108

TOP


சாயலொடு (1)

பையென் சாயலொடு பாணியின் ஒதுங்கி – உஞ்ஞை:38/231

TOP


சாயனும் (2)

சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா – மகத:26/78
காந்தாரகனும் கழல் கால் சாயனும்
தேம் தார் சூரனும் திறல் பிரமசேனனும் – மகத:27/125,126

TOP


சாயா (4)

சாயா செங்கோல் சதானிகன் தேவி – இலாவாண:11/128
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா
காந்தாரகனும் கலக்கம்_இல் பெரும் படை – மகத:26/78,79
சால்புளி பயந்த சாயா கற்பின் – வத்தவ:11/45
வாயில் மறவரும் சாயா செய் தொழில் – நரவாண:6/90

TOP


சார் (5)

எ சார் மருங்கினும் இன்னோர் பிறரும் – இலாவாண:12/127
எ சார் மருங்கினும் எரி புரை தாமரை – இலாவாண:18/64
தச்ச மாக்களை எ சார் மருங்கினும் – நரவாண:4/16
நிலம் சார் பாக செல்பவும் அலங்கு சினை – நரவாண:4/22
எ சார் மருங்கினும் இனிதின் உறையும் – நரவாண:4/130

TOP


சார்ங்கம் (1)

அணி தலை சார்ங்கம் அணிபெற எழுதி – இலாவாண:4/197

TOP


சார்ச்சியை (1)

சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே – மகத:26/47

TOP


சார்த்தி (3)

அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி
கட்டளை அமைய சட்டகம் கோலி – உஞ்ஞை:41/5,6
எம்மை கொண்டு வந்து ஏமம் சார்த்தி
வெம்மை வேட்டுவர் வியன் மலை வரைப்பின் – இலாவாண:10/32,33
படை கல பாரம் பற்பல சார்த்தி
இடுக்கண் யாம் செய இயைந்தது இன்று என – மகத:27/60,61

TOP


சார்த்தியும் (1)

கண்ணியில் சார்த்தியும் கைக்குள் போக்கியும் – வத்தவ:12/72

TOP


சார்த்தும் (1)

கரை முதல் சார்த்தும் காளைகள் அரவமும் – உஞ்ஞை:41/38

TOP


சார்தல் (1)

வீர வேட்டுவர் சார்தல் ஆற்றார் – உஞ்ஞை:55/145

TOP


சார்தலும் (1)

உறைத்து எழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்
யவன கைவினை ஆரியர் புனைந்தது – உஞ்ஞை:38/232,233

TOP


சார்ந்த (4)

சார வந்த தன்மையும் சார்ந்த பின் – உஞ்ஞை:54/118
தன் புடை சார்ந்த தவ முது_மகளையும் – இலாவாண:16/48
சென்று சார்ந்த பின் வென்றியின் பெருகி – மகத:3/2
சார்ந்த பின் ஒருசிறை சேர்ந்தனள் இருப்ப – வத்தவ:13/171

TOP


சார்ந்தனரால் (1)

சென்று சார்ந்தனரால் செம்மலொடு ஒருங்கு என் – மகத:2/55

TOP


சார்ந்தனள் (3)

சார்ந்தனள் ஆகி அவட்கு ஓம்படை குறிப்பொடு – உஞ்ஞை:45/33
தவத்து இயல் பள்ளி சார்ந்தனள் உறையும் – இலாவாண:15/115
சார்ந்தனள் இருந்து வாங்குபு கொண்டு – வத்தவ:7/41

TOP


சார்ந்தனை (1)

பசு மரம் சார்ந்தனை ஆதலின் மற்று நின் – இலாவாண:13/50

TOP


சார்ந்து (6)

ஆய் மணி அணை சார்ந்து அரத்தம் மீக்கோள் – உஞ்ஞை:47/51
விண்டு அலர் இலவத்து அண்டை சார்ந்து அவனை – உஞ்ஞை:55/132
தாள் முதல் சார்ந்து தோள் முதல் தோழனை – இலாவாண:13/43
படை திற மன்னர் பாடி சார்ந்து
விடை பேர் அமைச்சன் மேல்நாள் போக்கிய – மகத:17/177,178
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் – மகத:20/107
சாவம் மற்று அவன் இடுதலும் சார்ந்து
தேவ வாய் மொழி திரியாதாகலின் – நரவாண:3/104,105

TOP


சார்ந்தோர் (1)

சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும் – இலாவாண:8/109

TOP


சார்பாக (2)

நீர் சார்பாக ஊர்பவும் மரத்தொடு – நரவாண:4/21
இலை சார்பாக இயல்பவும் என்று இ – நரவாண:4/23

TOP


சார்பு (1)

சார்பு பிறிது இன்மையில் சாற்றுவனர் இறைஞ்ச – நரவாண:4/26

TOP


சார்வா (2)

பெண் துணை சார்வா கண்டுழி கலங்கி – உஞ்ஞை:34/130
ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா
ஆழி காலின் கீழ் மேல் வருதல் – மகத:6/34,35

TOP


சார்வு (8)

தவம் சார்வு ஆக தலைப்பெயல் விரும்பி – உஞ்ஞை:36/262
அறம் சார்வு ஆக அன்புசெய்து அருளி – உஞ்ஞை:36/263
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி – உஞ்ஞை:37/15
கோலம் குயின்ற நீல சார்வு அயல் – இலாவாண:6/122
சுவர் சார்வு ஆக துன்னுபு நிரைத்த – இலாவாண:7/46
சிறை கொளப்பட்டு யான் செல் சார்வு அறுத்த பின் – இலாவாண:10/126
தண் நிதி பலகை சந்தன சார்வு அணை – இலாவாண:18/41
செல் சார்வு ஆகி சிறந்தோய் நீ என – மகத:25/164

TOP


சார (3)

சார வந்த தன்மையும் சார்ந்த பின் – உஞ்ஞை:54/118
ஆர கம்மம் சார வீற்றிருந்து – இலாவாண:19/60
சார சென்று அதன் சீர் கெழு செல்வமும் – மகத:3/117

TOP


சாரணர் (1)

உறும் பெரும் சாரணர் உரை வேறு உண்மையும் – இலாவாண:13/66

TOP


சாரல் (29)

அறை வரை சாரல் சிறுகுடி சீறூர் – உஞ்ஞை:41/30
தகரம் கவினிய தண் வரை சாரல்
நறையும் நாகமும் உறை இருவேரியும் – உஞ்ஞை:50/21,22
நறவம் சாரல் குறவர் பரீஇய – உஞ்ஞை:51/20
வெம் கல் சாரல் வேய் விண்டு உதிர்த்த – உஞ்ஞை:52/60
குன்றக சாரல் குறும்பு பல அடக்கி நம் – உஞ்ஞை:53/111
மட பிடி வீழ்ந்த மணி மலை சாரல்
அடக்க_அரும் சீறூர் அரணக உறையுளர் – உஞ்ஞை:55/44,45
குன்ற சாரல் குறும்பினுள் உறையும் – உஞ்ஞை:56/77
நாடு வண்டு அரற்றும் கோடு உயர் சாரல்
இறை_மகன் விட்டிட உறையுள் முறைமையின் – உஞ்ஞை:57/21,22
பெரு மலை சாரல் சீறூர் வாழும் – உஞ்ஞை:58/80
தகரம் கமழும் தண் வரை சாரல்
தக்கோர் உறையும் தாபத பள்ளியும் – இலாவாண:12/4,5
நீர் அணி பெரு மலை சாரல் எய்தி – இலாவாண:12/41
பூம் தண் சாரல் பொங்கு குலை எடுத்த – இலாவாண:12/67
வள மலை சாரல் வரை மிசை உறையும் – இலாவாண:12/124
தேம் கண் சாரல் திருந்து சினை மலர்ந்த – இலாவாண:14/23
வண்டு ஆர் சோலை வள மலை சாரல்
உண்டாட்டு அயர்பவால் உவகையுள் மகிழ்ந்து என் – இலாவாண:14/67,68
வண்டு ஆர் சோலை வள மலை சாரல்
உண்டாட்டு அயரும் பொழுதின் ஒரு நாள் – இலாவாண:15/1,2
குரவை அயரும் குன்ற சாரல்
துகில் இணை பொலிந்த பகல் அணை பள்ளியுள் – இலாவாண:16/83,84
பலா அமல் அசும்பின் பய மலை சாரல்
உலா வேட்டு எழுந்த உதயணகுமரன் – இலாவாண:18/3,4
மணி கை நெடு வரை மா மலை சாரல்
புன தீ புதைப்ப போக்கிடம் காணாது – இலாவாண:19/35,36
அணி வரை சாரல் அருவி ஆடியும் – இலாவாண:19/159
அந்தண உருவொடு சந்தன சாரல்
பெரு வரை அடுக்கத்து அருமைத்து ஆகிய – இலாவாண:20/44,45
மணி வரை சாரல் மஞ்ஞை போல – மகத:13/50
கணை துளி பொழிந்த கார் வரை சாரல்
ஒரு பெரும் சிறப்பின் உதயணகுமரன் – மகத:27/121,122
குன்ற சாரல் குறும்பரை கூஉய் – வத்தவ:3/9
நருமதை கடந்து ஓர் பெரு மலை சாரல்
பெற்ற வண்ணம் மற்று அவன் உரைப்ப – வத்தவ:3/133,134
குன்றக சாரல் தென் திசை வீழ்ந்த – வத்தவ:3/138
சயந்தி அம் பதியும் பயம்படு சாரல்
இலாவாணகமும் நிலவ நிறீஇ – வத்தவ:9/21,22
குன்ற சாரல் குறைவின் மாதவர் – வத்தவ:17/63
குன்றக சாரல் குளிறுபு வீழ்ந்த – நரவாண:4/4

TOP


சாரலில் (1)

வரை உடை சாரலில் வரூஉம் குற்றத்து – இலாவாண:17/21

TOP


சாரலும் (1)

நடுகல் அடுக்கலும் நறும் பூம் சாரலும்
தேன் உடை வரையும் கானக குறும்பும் – உஞ்ஞை:46/272,273

TOP


சாரலொடு (1)

மா மலை சாரலொடு கானம் காட்டுதல் – இலாவாண:11/29

TOP


சாரி (1)

சாரி பல ஓட்டியும் வாழி என வாழ்த்தியும் – வத்தவ:12/242

TOP


சாரியை (2)

அரிது இயல் சாரியை அந்தரத்து இயக்கமும் – உஞ்ஞை:37/30
சாரியை விலக்கும் வேல் திரி வகையும் – உஞ்ஞை:37/33

TOP


சாரின் (1)

செவ்வி அறியார் சென்று மெய் சாரின்
காட்ட காணாள் கதம் பாடு ஏற்றி – மகத:14/39,40

TOP


சாரும் (1)

விச்சாதரர் நகர் எ சாரும் மயங்கி – இலாவாண:6/145

TOP


சால் (12)

தகை சால் அரிவைக்கு தக்கன இவை என – உஞ்ஞை:36/27
இசை சால் சிறப்பின் இரும் கல பேழையொடு – உஞ்ஞை:36/28
தகை சால் சிறப்பின் தன்னொடு நம்மிடை – உஞ்ஞை:37/56
செம் நிலம் மருங்கில் செம் சால் சிதைய – உஞ்ஞை:46/67
கோடித்து அன்ன கோடு சால் வையத்து – இலாவாண:8/185
அருமை சால் கற்பின் மிருகாபதி எனும் – இலாவாண:11/129
மறம் சால் பெரும் படை வருடகாரனும் – மகத:26/40
பாடு சால் சிறப்பின் பாஞ்சாலராயன் – மகத:27/209
நல்குரவு அடைந்த நசை சால் ஆடவர் – நரவாண:6/53
சாதக பட்டிகை சால் அவை நாப்பண் – நரவாண:6/83
சால் அவை நாப்பண் சலத்தில் தீர்ந்த – நரவாண:7/92
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும் – நரவாண:8/41

TOP


சால்க (1)

அறம் சால்க எண்ணியது அவப்பட்டது என – மகத:26/41

TOP


சால்பகத்து (1)

தளரா கொள்கையொடு சால்பகத்து அடக்கி – வத்தவ:2/23

TOP


சால்பு (7)

சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின – உஞ்ஞை:38/34
சாங்கியம் தாங்கிய சால்பு அணி படிமை – உஞ்ஞை:46/324
சாவினும் பழியார் சால்பு உடையோர் என – மகத:1/70
சால்பு என கிடந்த கோல பெரு நுகம் – மகத:3/57
சாண்டியன் என்னும் சால்பு உடை ஒழுக்கின் – மகத:6/194
வாழ்தல் ஆற்றா சால்பு அணி மகளிரும் – வத்தவ:2/34
சாயல் வகையினும் சால்பு உடை மொழியினும் – வத்தவ:12/153

TOP


சால்பு_இல (1)

சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின – உஞ்ஞை:38/34

TOP


சால்புளி (2)

சமிதை கிரிகை சால்புளி கழிப்பி – இலாவாண:3/81
சால்புளி பயந்த சாயா கற்பின் – வத்தவ:11/45

TOP


சால்பொடும் (1)

சண்பை பெரு நகர் சால்பொடும் விளங்கிய – இலாவாண:20/125

TOP


சால்வு (2)

சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த – உஞ்ஞை:42/164
போல்வர் என்னும் சால்வு உடை ஒழுக்கின் – நரவாண:8/52

TOP


சால (4)

காலினும் கலத்தினும் சால தந்த – உஞ்ஞை:42/177
சமைய விகற்பம் சால காட்டி – இலாவாண:8/141
சால கொள்க என தன்-வயின் திரியா – மகத:9/46
சலம்_இல் அருள் மொழி சால கூறி – வத்தவ:7/226

TOP


சாலங்காயற்கு (1)

சாலங்காயற்கு இளையோள் ஆகிய – நரவாண:7/128

TOP


சாலங்காயன் (2)

ஞாலம் புகழும் சாலங்காயன்
ஏற்ற சிறப்பின் யூகி-தன்னொடு – நரவாண:7/84,85
வாதம் வேண்டிய சாலங்காயன்
மாற்றம் பகுத்தற்கு ஆற்றின் நாடி – நரவாண:7/94,95

TOP


சாலங்காயனை (2)

சாலங்காயனை தலைக்கை ஆக்க – உஞ்ஞை:47/123
சாலங்காயனை தோல்வினை ஏற்றி – நரவாண:7/103

TOP


சாலவும் (1)

சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி – நரவாண:3/130

TOP


சாலி (5)

கால் வளர் சாலி ஆய் பத அரிசி – உஞ்ஞை:43/182
கால் தோய் கணை கதிர் சாறு ஓய் சாலி
வரம்பு அணி கொண்ட நிரம்பு அணி நெடு விடை – உஞ்ஞை:48/159,160
சாலி வால் அவிழ் பாலொடு கலந்த – உஞ்ஞை:54/26
திரு கொடி சாலி செம்பொன் வாகை என்று – இலாவாண:5/87
சாலி கவினிய கோல செறுவில் – மகத:3/8

TOP


சாலிகைக்கு (1)

சாலிகைக்கு அவயம் கோலம் ஆக – மகத:17/227

TOP


சாலியும் (3)

உழுந்தும் சாலியும் உப்பும் மலரும் – இலாவாண:3/61
வெண் நிற மலரும் தண் நறும் சாலியும்
புண்ணிய புல்லும் பொன்னொடு முறைமையின் – இலாவாண:4/152,153
சாலியும் உழந்தும் கால் வழி பரப்பி – இலாவாண:5/60

TOP


சாலேகத்து (3)

நுண் சாலேகத்து எம்பரும் நோக்கினர் – இலாவாண:7/116
அரி சாலேகத்து அறை பல பயின்ற – மகத:6/98
அணி சாலேகத்து அணி தகு துளையூடு – நரவாண:8/71

TOP


சாலேகம் (3)

வரி சாலேகம் விரித்தனர் அகற்றி – இலாவாண:7/69
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட – மகத:14/264
அரி சாலேகம் அகற்றினன் இருந்துழி – வத்தவ:3/114

TOP


சாலேகமும் (5)

அரி சாலேகமும் ஆர வள்ளியும் – உஞ்ஞை:40/9
கதிர் சாலேகமும் கந்தும் கதிர்ப்ப – உஞ்ஞை:40/10
அரி சாலேகமும் நாசியும் முகடும் – உஞ்ஞை:42/37
கண் சாலேகமும் உள் காழ் அகிலும் – உஞ்ஞை:51/25
காழ் அகில் நூறும் கண் சாலேகமும்
கோழ் இருவேரியும் பேர் இலவங்கமும் – மகத:17/136,137

TOP


சாலேகமொடு (1)

திருந்து சாலேகமொடு பொருந்து கதவு ஒற்றி – உஞ்ஞை:47/176

TOP


சாலை (6)

கீத சாலை வேதி நிறைய – உஞ்ஞை:34/224
கீத சாலை வேதிகை காக்கும் – உஞ்ஞை:36/136
ஓதுநர் சாலை அகத்தும் ஓவா – இலாவாண:8/61
மந்திர சாலை மருங்கு அணி பெற்ற – இலாவாண:15/8
தீ வேள் சாலை திறத்துளி மூட்டி – மகத:22/255
அந்தணர் சாலை அரும் கலம் எல்லாம் – வத்தவ:17/17

TOP


சாலையும் (8)

அந்தணர் சாலையும் அரும் தவர் பள்ளியும் – உஞ்ஞை:39/78
கீத சாலையும் கேள்வி பந்தரும் – இலாவாண:7/131
ஓது சாலையும் சூது ஆடு கழகமும் – இலாவாண:7/132
சித்திர சாலையும் ஒத்து இயைந்து ஓங்கிய – மகத:4/15
தண்ணீர் பந்தரும் தகை அமை சாலையும்
அறத்து இயல் கொட்டிலும் அம்பல கூடமும் – மகத:4/17,18
அற சோற்று அட்டிலும் அம்பல சாலையும்
தேவர் குலனும் தேசிக பாடியும் – மகத:4/24,25
தட வளர் செம் தீ முதல்வர் சாலையும்
வேண்டு இடம்-தோறும் காண் தக நெருங்கி – மகத:4/28,29
சாலையும் தளியும் பால் அமைத்து இயற்றி – வத்தவ:3/41

TOP


சாலையொடு (1)

செல்வ சாலையொடு பல் வழி எல்லாம் – இலாவாண:2/78

TOP


சாவது (3)

சாவது உறுதி யான் தப்பிய பின்றை – உஞ்ஞை:36/65
நோவ கூறி சாவது அல்லது – உஞ்ஞை:56/23
சாவது துணிந்து யான் சேயிடை போந்தனென் – மகத:19/73

TOP


சாவம் (1)

சாவம் மற்று அவன் இடுதலும் சார்ந்து – நரவாண:3/104

TOP


சாவினும் (1)

சாவினும் பழியார் சால்பு உடையோர் என – மகத:1/70

TOP


சாவினை (1)

சாவினை துணியும் மாத்திரை யாவதும் – உஞ்ஞை:36/312

TOP


சாவு (2)

சாவு முந்துறுத்த வலிப்பினன் ஆகி – மகத:1/18
காதலன்-தன்னையும் சாவு அறல் உறீஇ – மகத:1/56

TOP


சாற்றி (4)

நெய்தல் புலையன் நெறியில் சாற்றி
பைதல் பம்பை இடம் கண் நெருக்கி – உஞ்ஞை:36/158,159
வட்டு அமைத்து இயற்றிய வலம்புரி சாற்றி
ஆடக பொன் கயிற்று அரும் பொறி யாப்பின – இலாவாண:2/123,124
உதயணன் இறை என அறிவர சாற்றி
வேத்தவை நடுவண் வீற்று இனிது இருத்தி – இலாவாண:11/145,146
பணை நிலை பிடி மிசை பலர் வர சாற்றி
விரை பரி தேரொடு படை மிடைந்து ஆர்ப்ப – வத்தவ:14/175,176

TOP


சாற்றிட (1)

சாற்றிட கொண்ட ஏற்று உரி முரசம் – உஞ்ஞை:38/100

TOP


சாற்றியது (1)

ஆக்கமும் கேடும் சாற்றியது ஒப்ப – உஞ்ஞை:51/83

TOP


சாற்று (2)

பெரும் சாற்று உறூஉம் பெற்றியள் போல – மகத:5/113
தன்-பால் மண நிலை சாற்று என்று உரைப்ப – வத்தவ:14/173

TOP


சாற்றுவனர் (1)

சார்பு பிறிது இன்மையில் சாற்றுவனர் இறைஞ்ச – நரவாண:4/26

TOP


சாற்றுவனள் (1)

தமியள் என்பது சாற்றுவனள் போல – வத்தவ:15/137

TOP


சாறு (2)

சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை – உஞ்ஞை:36/231
கால் தோய் கணை கதிர் சாறு ஓய் சாலி – உஞ்ஞை:48/159

TOP


சான்ற (20)

அலகை சான்ற உலக புராணமும் – உஞ்ஞை:32/2
பெண் துணை சான்ற பெருமை பெற்றனள் என் – உஞ்ஞை:35/105
திருத்தம் சான்ற நும் துணைவி இல் செல்க என – உஞ்ஞை:35/190
நிறைமை சான்ற நின் நெஞ்சம் கொண்ட – உஞ்ஞை:36/83
அத்துணை சான்ற அந்தணாளரும் – உஞ்ஞை:38/133
அருமை சான்ற ஆய் பொருள் கேள்வி – இலாவாண:11/12
ஆற்றல் சான்ற நூல் துறை மருங்கின் – இலாவாண:19/2
ஆற்றல் சான்ற அரசருள் அரிமா – மகத:17/28
ஆற்றல் சான்ற அவன் அன்பு கந்தாக – மகத:22/4
ஆற்றல் சான்ற ஆருணி தொலைச்சி – மகத:23/59
ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி – மகத:27/135
வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ – மகத:27/151
பொருத்தம் சான்ற புரைதபு நண்பின் – வத்தவ:4/71
ஆற்றல் சான்ற தருசகன் கண்டு அவன் – வத்தவ:4/85
அருமை சான்ற ஆருணி அரசன் – வத்தவ:12/3
ஊக்கம் சான்ற உலகியல் திரியேன் – வத்தவ:15/39
ஆக்கம் சான்ற ஆர் உயிர் ஓகையும் – நரவாண:6/77
ஆற்றல் சான்ற அரும்_பெறல் சுற்றமொடு – நரவாண:8/18
ஏமம் சான்ற இ நில வரைப்பின் – நரவாண:8/46
ஆற்றல் சான்ற நூற்றொருபதின்மர் – நரவாண:8/16

TOP


சான்றதும் (1)

வீக்கம் சான்றதும் விழுப்பம் அறாத – நரவாண:6/76

TOP


சான்றோர் (1)

ஒழுக்கம் சான்றோர் பிழைப்பு இலர் ஓம்ப – மகத:27/215

TOP