மி – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 11
மிக்கது 2
மிக்கமை 1
மிக்கு 11
மிக்கோய் 1
மிக்கோர் 1
மிக்கோள் 1
மிக்கோன் 1
மிக 24
மிகு 25
மிகுத்த 2
மிகுத்து 1
மிகுதி 4
மிகுதியின் 1
மிகும் 1
மிகை 6
மிகைக்கை 1
மிகையா 1
மிகையுற 1
மிச்சில் 1
மிசை 109
மிசைக்கு 1
மிசைகுற 1
மிசைமிசை 1
மிசையும் 1
மிசையே 2
மிசையோன் 1
மிஞிற்றினம் 1
மிஞிறும் 1
மிடறும் 1
மிடை 3
மிடைந்த 5
மிடைந்து 4
மிடைபு 1
மித்திரகாமன் 2
மித்திரகாமனை 1
மிதந்தது 1
மிதி 1
மிதித்த 1
மிதித்து 2
மிதிப்பினும் 3
மிதியா 1
மிருகாபதி 1
மிலைச்ச 3
மிலைச்சர் 2
மிலைச்சரும் 1
மிலைச்சன் 2
மிலைச்சிய 1
மிழற்ற 5
மிழற்றி 10
மிழற்றிய 1
மிழற்று 1
மிழற்றுபு 1
மிழற்றும் 2
மிளகும் 1
மிளிர்ந்தது 1
மிளிர்ந்திட்ட 1
மிளிர 2
மிளிரா 1
மிளிரும் 3
மிளை 1
மின் 26
மின்_இழை 3
மின்ன 2
மின்னு 1
மின்னென 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மிக்க (11)

மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப – உஞ்ஞை:36/121
விலை வரம்பு அறியா வெறுக்கையுள் மிக்க
தலை அளவு இயன்றது தனக்கு இணை இல்லது – உஞ்ஞை:38/237,238
பெண்டிருள் மிக்க பெரும் பொருள் இன்மையின் – உஞ்ஞை:38/266
மலிந்த யாக்கையின் மங்கலம் மிக்க தன் – உஞ்ஞை:38/314
தக்க எல்லை இரத்தலின் மிக்க
காழ் அகில் நறும் புகை ஊழ் சென்று உண்ட – மகத:13/85,86
வீணை வித்தகத்தவனினும் மிக்க தன் – மகத:15/13
வீரம் மிக்க விறல் தறுகண்மை – மகத:21/10
மிக்க பெரும் குடி பிறந்த மாந்தர்க்கு – மகத:21/100
ஆற்றலின் மிக்க ஆருணி மற்றும் – வத்தவ:8/43
பெருமையின் மிக்க எம் பெருமகன்-தன்னோடு – வத்தவ:10/151
உருவின் மிக்க உதயணன் சேர்ந்து – வத்தவ:17/50

TOP


மிக்கது (2)

தக்கனள் கொடுப்பின் மிக்கது என்போரும் – மகத:20/181
மிக்கது என் மனன் என மெல்_இயல் நினைஇ – மகத:22/98

TOP


மிக்கமை (1)

ஒழுக்கினும் குலத்தினும் விழுப்பம் மிக்கமை
சென்று உரை செம்மற்கு என்று அவன் ஒருப்பட – மகத:22/36,37

TOP


மிக்கு (11)

எவ்வம் மிக்கு அவனும் புலம்ப அ வழி – உஞ்ஞை:33/128
வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர – உஞ்ஞை:36/68
மிக்கு வாய் கூரும் மீட்சி வேட்கையன் – உஞ்ஞை:42/247
தப்புதல் அல்லது மிக்கு உயல் காணேம் – உஞ்ஞை:47/75
மித்திரகாமன் மிக்கு உயர் பெரு மனை – இலாவாண:20/127
பின்னரும் மிக்கு பெருமகன் இரப்ப – மகத:9/180
மிக்கு உயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து – மகத:17/23
துப்பு நிலத்து எழுந்த துகள் என மிக்கு எழுந்து – மகத:20/83
வாசவதத்தையை வாய் மிக்கு அரற்றி – வத்தவ:4/4
மிக்கு நன்கு உடற்ற மேவலள் ஆகி – வத்தவ:8/105
மக்கள் இன்று எனின் மிக்கு உயர் சிறப்பின் – நரவாண:1/57

TOP


மிக்கோய் (1)

நக்கனள் ஆகி மிக்கோய் கூறிய – வத்தவ:13/248

TOP


மிக்கோர் (1)

ஆடலும் பாடலும் அணியினும் மிக்கோர்
சேடிமாரையும் இரு கூறாக்கி – வத்தவ:9/68,69

TOP


மிக்கோள் (1)

மிக்கோள் மாற்றம் மெய் எனின் மேலை – நரவாண:1/48

TOP


மிக்கோன் (1)

தக்கது-மன்ற மிக்கோன் கூற்று என – இலாவாண:13/72

TOP


மிக (24)

நெஞ்சம் மகிழ்ந்து நீத்து மிக உடைய – உஞ்ஞை:57/10
வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் – இலாவாண:2/190
மேயினர் தருக என மிக பல வாழ்த்தி – இலாவாண:4/159
உரைத்த வண்ணமும் மிக பலவாக – இலாவாண:8/38
தோழரோடு மிக பல கழறி – இலாவாண:8/146
உகப்ப கூறி மிக பல வருட்டி – இலாவாண:10/74
நுதல் புறம் கவவி மிக சுடர்ந்து இலங்கும் – இலாவாண:19/81
பசப்பு மீது அடர்ந்து மிக பொலிந்து இலங்க – மகத:9/93
காம வேகம் தான் மிக பெருக – மகத:14/104
மிக நனி வல்லன் இ தகை மலி மார்பன் என்று – மகத:14/292
இவண் வர பெற்றேன் தவம் மிக உடையென் என்று – மகத:18/59
தகை பெரு வேந்தனாகலின் மிக சிறந்து – மகத:22/100
நமக்கு படையாகி மிக புகுந்து எற்றவும் – மகத:24/210
மிக செறிவு உடையையாய் விடு-மதி விடூஉம் – மகத:25/63
அன்னவன் மதித்து தன் மிக தருக்கும் – மகத:25/82
பகை கொள் மன்னர் மிக உவந்து ஒன்றி – வத்தவ:4/20
மக காண் தாயின் மிக பெரிது விதும்பி – வத்தவ:7/40
மருப்பு பிறையின் மிக சுடர்ந்து இலங்காது – வத்தவ:7/165
மிக பெரு முரட்சியை முருக்கும் உபாயம் – வத்தவ:8/52
ஆனாது நுகர்பவால் அன்பு மிக சிறந்து என் – வத்தவ:11/99
அன்பு மிக சிறந்து ஆண்டு அமரும்-காலை – வத்தவ:12/1
தமிழ் இயல் வழக்கினன் தணப்பு மிக பெருக்கி – வத்தவ:17/67
சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப – வத்தவ:17/98
பதன் அறிந்து நுகருமால் பண்பு மிக செறிந்து என் – நரவாண:8/158

TOP


மிகு (25)

நலம் மிகு சிறப்பொடு நல் வை புகழ – உஞ்ஞை:37/117
நலம் மிகு புகழோய் நால்_இருநூற்று வில் – உஞ்ஞை:52/94
புகை மிகு வெவ் அழல் பூம் பொழில் புதைப்ப – உஞ்ஞை:56/27
நலம் மிகு வேந்தனை நண்ணு-மின் விரைந்து என்று – இலாவாண:10/36
செரு மிகு சீற்றத்து குரு குலத்து அரசன் – இலாவாண:11/127
செரு மிகு குருசில் தன் மருமகன் தழீஇ – இலாவாண:11/141
நலம் மிகு பெருமை நின் குலமும் நோக்கி – இலாவாண:17/136
அழல் மிகு சீற்றத்து ஆருணி அரசன் – மகத:1/5
வள மிகு தானை வத்தவர்க்கு இறையை – மகத:17/94
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி – மகத:21/63
அருளொடு புணர்ந்த அன்பு மிகு கட்டுரை – மகத:21/108
தகை மிகு தானை தருசகன் குறுகி – மகத:22/2
செரு மிகு சேனை செய் தொழில் நவின்ற – மகத:23/26
வாள் மிகு தானை வத்தவன் கைவிட்டு – மகத:25/153
வகை மிகு தானை வத்தவன் குறுகி – மகத:26/13
தகை மிகு சிறப்பின் தாரகாரி – மகத:26/14
வகை மிகு மான் தேர் வத்தவர் கோமான் – வத்தவ:1/2
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி – வத்தவ:3/85
எறுழ் மிகு மொய்ம்பன் இழிந்து அகம் புகவே – வத்தவ:7/151
நயம் மிகு சிறப்பொடு நகர் மிசை பொலிந்த – நரவாண:6/108
நலம் மிகு புதல்வன் நல் நாள் பிறந்த – நரவாண:7/6
தகை மிகு பூதி தவந்தகன் என்னும் – நரவாண:8/36
மிகு மனத்து உவகையின் ஒல்லை விருப்பம் – நரவாண:8/136
இகல் மிகு குமரனை துயில் மிசை பெருக்கி – நரவாண:8/98
கயல் மிகு கண்ணியை கவவு பிணி நீக்கி – நரவாண:8/99

TOP


மிகுத்த (2)

நகை பதம் மிகுத்த கையர் ஆகி – உஞ்ஞை:40/131
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட – மகத:12/54

TOP


மிகுத்து (1)

வாயின் மிகுத்து வலித்து உரைப்போரும் – மகத:20/185

TOP


மிகுதி (4)

மிகுதி வேந்தே புகுக என்போரும் – இலாவாண:1/31
மிகுதி காதல் மகத மன்னனோடு – மகத:4/98
மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின் – மகத:19/87
மிகுதி அச்சம் மீட்டு அவற்கு உணர்த்தி – மகத:25/113

TOP


மிகுதியின் (1)

மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப – உஞ்ஞை:36/121

TOP


மிகும் (1)

செரு மிகும் தாமமொடு சேனையின் கூடி – உஞ்ஞை:38/352

TOP


மிகை (6)

நினைத்தது மிகை என நெஞ்சு வலியுறீஇ – உஞ்ஞை:35/18
மிகை கை காணாது புகை தீ எறிப்ப – உஞ்ஞை:43/149
நகரி முழக்கினும் மிகை எழு தீயினும் – உஞ்ஞை:44/86
மிகை செலற்கு எழுந்த வேக வெவ் அழல் – உஞ்ஞை:46/30
மிகை செய்து இருந்ததன் மேலும் மீட்டு இனி – மகத:25/36
மிகை பல புகழ்ந்து தொகைஇ ஆற்றிய – நரவாண:7/48

TOP


மிகைக்கை (1)

மிகைக்கை காணார் நகைப்படும் அவள் என – வத்தவ:12/223

TOP


மிகையா (1)

கோல யானை நால்_இரண்டு மிகையா
ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம் – இலாவாண:2/203,204

TOP


மிகையுற (1)

பகை நரம்பு எறிந்து மிகையுற படூஉம் – மகத:14/221

TOP


மிச்சில் (1)

மிச்சில் எய்தா உட்குவர் ஒருசிறை – இலாவாண:3/26

TOP


மிசை (109)

மிசை நீள் முற்றத்து அசை வளி போழ – உஞ்ஞை:33/62
நான பங்கி கரம் மிசை திவள – உஞ்ஞை:35/207
முத்த மாலை முகம் மிசை அணிந்து – உஞ்ஞை:36/31
கழி பெரு நன் கலம் களிற்றின் மிசை உயரி – உஞ்ஞை:36/48
காவலாட்டியர் நா மிசை எடுத்த – உஞ்ஞை:36/333
மண் மிசை நிறுக்கும் மந்திரம் இருக்க என – உஞ்ஞை:37/192
மேவிய வனப்பொடு மிசை பிறர் பொறாதன – உஞ்ஞை:38/114
அரச மங்கையர் அடி மிசை கொண்ட – உஞ்ஞை:38/159
நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி – உஞ்ஞை:40/286
பொங்கு மலர் தவிசில் பூ மிசை ஆயினும் – உஞ்ஞை:42/103
வனப்பொடு புணர வகுத்து அணி முடி மிசை
நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை – உஞ்ஞை:42/147,148
பத்திராபதி மிசை பனி கடல் பிறந்த – உஞ்ஞை:42/229
எண்ணமோடு இருந்தனன் இரும் பிடி மிசை என் – உஞ்ஞை:42/250
பெருந்தகை அண்ணல் பிடி மிசை ஏற்றி – உஞ்ஞை:45/1
பொன் படை புளகம் மிசை பொங்கும் சாமரை – உஞ்ஞை:45/14
பண் அமை பிடி மிசை பை_அரவு_அல்குலை – உஞ்ஞை:45/77
பிடி மிசை கொண்டவன் பெயரும் நேரத்து – உஞ்ஞை:46/102
கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் – உஞ்ஞை:46/251
மடவை மன்ற மடவோய் மண் மிசை
உடை-வயின் பிரியா உறைநரும் உளரோ – உஞ்ஞை:47/251,252
பறத்தரல் விசையினும் பண்ணினும் மண் மிசை
உற புனைந்து ஊரும் உதயணன் வலப்புறத்து – உஞ்ஞை:48/72,73
நோக்கல் செல்லாது இரு என நுதல் மிசை
வேர் துளி துடைத்து வித்தக வீரன் – உஞ்ஞை:48/127,128
அம் சொல் மகளிர் அடி மிசை ஆற்றும் – உஞ்ஞை:48/182
பிரம்பு எழு பெரும் பார் அடைந்து மிசை செற்றி – உஞ்ஞை:49/27
ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய – உஞ்ஞை:50/17
நிலம் மிசை வீழ்ந்தது நிற்க நின் பிடி என – உஞ்ஞை:52/93
கரு வரை மிசை நின்று இரு நிலத்து இழிதரும் – உஞ்ஞை:53/14
மருங்குற மண் மிசை வீழின் மற்று என் – உஞ்ஞை:53/18
வெவ் வழி நிலம் மிசை வில்லேப்பாட்டிடை – உஞ்ஞை:53/68
பிடி மிசை இருந்து பெரும் கவின் வாடி – உஞ்ஞை:54/56
தேர் மிசை திரிந்த திறலோன் போல – உஞ்ஞை:56/58
அணை மிசை அசைந்த அம் மென் சிறுபுறம் – உஞ்ஞை:56/136
மணல் மிசை அசைந்து மா கவின் வாட – உஞ்ஞை:56/137
தறி மிசை கொளீஇய செறி நூல் மாடமொடு – உஞ்ஞை:57/24
கடிது செல் இயற்கை பிடி மிசை இருந்த – உஞ்ஞை:57/76
அணை மிசை அமர்தந்து அஞ்சுவரு வேழத்து – இலாவாண:2/37
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி – இலாவாண:2/129
வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் – இலாவாண:2/190
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும் – இலாவாண:3/85
தென் மருங்கு மடுத்த தீர்த்த புல் மிசை
மெல் மருங்கு எழிலியை மெல்லென நடாஅய் – இலாவாண:3/116,117
ஏற்று உரி அதல் மிசை ஆற்றுளி இருந்து – இலாவாண:3/122
பொன்_தொடி நுதல் மிசை புனை விரல் கூப்பி – இலாவாண:3/127
நிரப்பம் கொளீஇ நின்ற நிலம் மிசை
விசும்பு உறை தேவர் வேள்வி சேதான் – இலாவாண:4/60,61
நிலத்து மிசை இழிந்த நிகர்_இல் நெடு முடி – இலாவாண:4/114
அம் கேழ் கல் மிசை அறிந்து வாய் தீட்டி – இலாவாண:4/168
வெம் கேழ் துகில் மிசை விதியுளி புரட்டி – இலாவாண:4/169
மன்னுக வேந்தே மண் மிசை நீடு என – இலாவாண:4/202
முடி மிசை ஏந்தி முன்னர் நடப்ப – இலாவாண:5/35
மங்கல மணை மிசை வெண் துகில் புதைஇ – இலாவாண:5/78
முடி மிசை அணிந்த முல்லை அம் கோதை – இலாவாண:5/83
கோணம் கொண்ட கொளூஉ திரள் சந்து மிசை
உறுப்பு பல தெரிந்த சிறப்பிற்று ஆகி – இலாவாண:6/41,42
மணி விளக்கு உமிழும் அணி நிலா சுவர் மிசை
வல தாள் நீட்டி இட தாள் முடக்கி – இலாவாண:6/139,140
அழகுபட புனைந்த அலங்கு மணி தவிசின் மிசை
நிறை கதிர் வெண் மதி நிலா ஒளி விரிந்து – இலாவாண:6/151,152
மிசை மருந்து இயன்ற இசைவு கொள் இன்பத்து – இலாவாண:8/164
பகு வாய் கிண்கிணி பரட்டு மிசை ஆர்ப்ப – இலாவாண:10/69
காவலன் அதிர்ந்த-காலை மண் மிசை
தா_இல் பல் உயிர் தளர்ச்சி எய்தலின் – இலாவாண:11/6,7
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை – இலாவாண:12/48
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை
அந்தர மருங்கின் நந்தன வனத்தொடு – இலாவாண:12/48,49
வள மலை சாரல் வரை மிசை உறையும் – இலாவாண:12/124
மணி தார் மார்பனை மணல் மிசை அடுத்த – இலாவாண:13/39
இயற்றா தவிசின் மிசை இருக்கை காட்ட – இலாவாண:13/41
நிலத்து மிசை இருந்தனை ஆதலின் மற்று நின் – இலாவாண:13/60
ஆடு பொன் கிண்கிணி அடி மிசை அரற்ற – இலாவாண:14/42
அம் தளிர் படை மிசை அயர்ந்தனர் ஒடுங்கியும் – இலாவாண:14/45
அடி மிசை கிண்கிணி அடை துகள் அகற்றியும் – இலாவாண:16/72
இறு வரை இமயத்து உயர் மிசை இழிந்து – இலாவாண:17/33
பண் அமை காழ் மிசை பசும்பொன் வலக்கும் – இலாவாண:18/21
முடி மிசை அணிந்த முத்தொடு பல் மணி – இலாவாண:18/97
நிலம் மிசை மருங்கின் வீழ்ந்தனையோ என – இலாவாண:19/89
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன் – மகத:3/12
தீ அழல் செல்வன் செலவு மிசை தவிர்க்கும் – மகத:3/30
விண் மிசை உலகின் விழவு அமைந்தாங்கு – மகத:5/45
மண் மிசை உலகில் மன்னிய சீர்த்தி – மகத:5/46
பொன் பூண் முலை மிசை அப்புபு தடாஅ – மகத:9/90
நிலம் மிசை விடுதலின் தலை மயிர் தழீஇ – மகத:15/44
சின்ன சோலை என்னும் மலை மிசை
பன்னல் கேள்வி பண் வர பாடிட – மகத:17/104,105
இடு மணி இல்லது ஓர் பிடி மிசை ஏறி – மகத:18/76
படை மிசை நிரைத்த வடிவு அமை வார் நூல் – மகத:20/16
வரை மிசை மறிநரின் மற படை திருத்தி – மகத:20/65
செரு அடு தோள் மிசை சேர்ந்தனள் வைகும் – மகத:20/166
சித்திர கிழி மிசை வித்தகமாக – மகத:22/144
பாடக நூபுரம் பரட்டு மிசை அரற்ற – மகத:22/235
மிசை உலகு எய்திய அசைவு_இல் ஊக்கத்து – மகத:23/7
சீர் அலங்கார சித்திர முடி மிசை
தார் அணி கோதை தாழ்ந்து புறத்து அசைய – மகத:24/185,186
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப – வத்தவ:1/15
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி – வத்தவ:3/85
பிடி மிசை வந்து பிணா உருவாகி – வத்தவ:12/26
காவலன் பிடி மிசை காண் தக ஏறி – வத்தவ:12/30
பாடக கால் மிசை பரிந்தவை விடுத்தும் – வத்தவ:12/59
பிடி மிசை தோன்றலும் பேதையர் தம்தம் – வத்தவ:12/269
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை
பூம் தாதோடு சாந்துற கூட்டி – வத்தவ:13/61,62
அங்கு அவள் நுதல் மிசை முன்பு அவள் எழுதிய – வத்தவ:13/105
பணை நிலை பிடி மிசை பலர் வர சாற்றி – வத்தவ:14/175
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ – வத்தவ:15/24
விண் மிசை ஞாயிறு விழுங்க கண்டனென் – நரவாண:1/155
இமைப்போன் கண் மிசை இலங்கிய ஒளியொடு – நரவாண:2/64
பண் அமை பிடி மிசை படைநரும் ஒழிய – நரவாண:3/8
மிசை செலவு அசாஅ விழும வெம் நோய் – நரவாண:3/32
எண்ண_அரும் பருப்பதம் என்னும் மலை மிசை
ஒள் நிதி கிழவன் உரிமையொடு இருந்துழி – நரவாண:3/55,56
நிச்ச நிரப்பின் நில மிசை உறைநர்க்கு – நரவாண:3/144
மேதகு மேருவும் அதன் மிசை காவும் – நரவாண:4/124
மயில் ஆடு சிமைய பொதியிலும் அதன் மிசை
குளிர் கொள் சந்தனத்து ஒளிர் மலர் காவும் – நரவாண:4/146,147
நயம் மிகு சிறப்பொடு நகர் மிசை பொலிந்த – நரவாண:6/108
துகில் மடி அணை மிசை துளக்கம் இன்றி – நரவாண:7/20
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து – நரவாண:8/17
கையில் கொண்டோன் கண்டனன் அதன் மிசை
ஒற்றிய ஒற்றை தெற்றென தெரிந்து – நரவாண:8/95,96
இகல் மிசை உள்ளத்து எவ்வம் கேட்டு – நரவாண:8/147
இகல் மிகு குமரனை துயில் மிசை பெருக்கி – நரவாண:8/98
மண் மிசை வந்தனென் மயக்கு அற இன்று – நரவாண:8/102
விண் மிசை உலகிற்கு விழு பொருள் பெற்றேன் – நரவாண:8/103

TOP


மிசைக்கு (1)

தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய – இலாவாண:6/58

TOP


மிசைகுற (1)

கூடிய கொழுநன் கொழும் குடர் மிசைகுற
ஓடிய உள்ளத்து உயர் துணை தேவியை – நரவாண:1/220,221

TOP


மிசைமிசை (1)

வெண் கடல் திரை என மிசைமிசை நிவத்தரும் – மகத:20/23

TOP


மிசையும் (1)

பெரும் சோற்று அமலை பரந்து பலர் மிசையும்
மிச்சில் எய்தா உட்குவர் ஒருசிறை – இலாவாண:3/25,26

TOP


மிசையே (2)

நாவாய் மிசையே மேவார் உட்க – மகத:26/92
மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும் – நரவாண:1/232

TOP


மிசையோன் (1)

யானை மிசையோன் மா முடி குருசில் – உஞ்ஞை:32/26

TOP


மிஞிற்றினம் (1)

மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய – இலாவாண:12/146

TOP


மிஞிறும் (1)

தேம் கொடி பறவையும் திருந்து சிறை மிஞிறும்
விரும்புறு சுரும்பும் பெரும் பொறி வண்டும் – இலாவாண:13/22,23

TOP


மிடறும் (1)

மிடறும் நரம்பும் இடைதெரிவு இன்றி – மகத:14/275

TOP


மிடை (3)

மிடை வெண் துகிலின் இடை_நிலம் கோலி – உஞ்ஞை:40/8
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண் – இலாவாண:2/46
மெய் பொருள் தெரியும் மிடை தார் மன்னவ – நரவாண:3/49

TOP


மிடைந்த (5)

பொய்யொடு மிடைந்த பொருள் நசை கடும் சொல் – உஞ்ஞை:35/119
மகிழ் பூ மாலையொடு மருது இணர் மிடைந்த
அவிழ் பூம் கோதையோடு அவிர் இழை பொங்க – உஞ்ஞை:40/110,111
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள் – உஞ்ஞை:41/28
படிறு இடை மிடைந்த பணி கோள் ஈயா – உஞ்ஞை:46/150
நாணொடு மிடைந்த நடுக்குறு மழலையள் – இலாவாண:16/88

TOP


மிடைந்து (4)

மறுவொடு மிடைந்து மாண்பு_இல ஆகிய – உஞ்ஞை:36/313
மழை மலைத்து அன்ன மாண் இழை மிடைந்து
வம்பு விசித்து யாத்த செம்பொன் கச்சையர் – உஞ்ஞை:39/30,31
வேல் இடை மிடைந்து வாள் இடை மின்ன – மகத:27/120
விரை பரி தேரொடு படை மிடைந்து ஆர்ப்ப – வத்தவ:14/176

TOP


மிடைபு (1)

மிடைபு தலைமணந்த மேதகு வனப்பின் – உஞ்ஞை:38/78

TOP


மித்திரகாமன் (2)

மித்திரகாமன் மிக்கு உயர் பெரு மனை – இலாவாண:20/127
மித்திரகாமன் நல் பெரும் கிழத்தியொடு – வத்தவ:4/62

TOP


மித்திரகாமனை (1)

மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி – வத்தவ:4/95

TOP


மிதந்தது (1)

வினை தீர் உயிரின் மிதந்தது கீழா – உஞ்ஞை:40/186

TOP


மிதி (1)

மிதி தோல் கொல்லன் பொதி உலை செம் தீ – உஞ்ஞை:58/9

TOP


மிதித்த (1)

வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும் – உஞ்ஞை:55/78

TOP


மிதித்து (2)

கையொடு துமித்த வை வாள் வாய் மிதித்து
அற்ற அடியினர் செற்றத்தில் கழுமி – உஞ்ஞை:46/40,41
சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப – வத்தவ:17/98

TOP


மிதிப்பினும் (3)

அனித்தம் மிதிப்பினும் பனித்தல் ஆனா – உஞ்ஞை:53/162
பூ அடர் மிதிப்பினும் புகைந்து அழலுறூஉம் – இலாவாண:19/183
பாயல் கிடந்த பல் மலர் மிதிப்பினும்
அரத்தம் கூரும் திரு கிளர் சேவடி – வத்தவ:17/96,97

TOP


மிதியா (1)

அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற – உஞ்ஞை:42/104

TOP


மிருகாபதி (1)

அருமை சால் கற்பின் மிருகாபதி எனும் – இலாவாண:11/129

TOP


மிலைச்ச (3)

மிலைச்ச மன்னர் தலை படை ஒட்ட – உஞ்ஞை:58/95
மிலைச்ச சேரியும் தலைத்தலை சிறந்து – மகத:4/13
மிலைச்ச மன்னரும் கூடி தலைத்தலை – மகத:25/54

TOP


மிலைச்சர் (2)

வெம் திறல் மிலைச்சர் விலக்குவனர் காக்கும் – இலாவாண:9/34
மிலைச்சர் ஏறி தலை படை தருக்குவ – மகத:26/74

TOP


மிலைச்சரும் (1)

வேல் திறலாளரும் மிலைச்சரும் சிலதரும் – உஞ்ஞை:42/23

TOP


மிலைச்சன் (2)

மிலைச்சன் என்னும் நல தகை ஒருவனும் – மகத:17/26
மிலைச்சன் வாழ்க என தலைக்காப்பு இருந்த – மகத:17/235

TOP


மிலைச்சிய (1)

வெட்சி மிலைச்சிய வில்லுறு வாழ்க்கை – உஞ்ஞை:52/77

TOP


மிழற்ற (5)

சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற
அ இருள் அடக்கி வைகு இருள் போக்கி – உஞ்ஞை:35/248,249
அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற
வேழ தாழ் கை காழொடு சேர்த்த – உஞ்ஞை:42/104,105
மணி அரி கிண்கிணி சிலம்பொடு மிழற்ற
நின் அணி காண்கம் சிறிது_சிறிது உலாஅய் – இலாவாண:19/152,153
செ வாய் திறந்து சில்லென மிழற்ற
ஐது ஏந்து அல்குலும் ஆகமும் அசைஇ – நரவாண:1/208,209
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற
எளிது எனக்கு என்ன அமைச்சரோடு ஆராய்ந்து – நரவாண:1/235,236

TOP


மிழற்றி (10)

வாரலோ என வாய் திறந்து மிழற்றி
ஓராது புலக்கும் ஓர் ஒள்_இழை காண்-மின் – உஞ்ஞை:40/204,205
அச்ச பணி மொழி அமிழ்து என மிழற்றி
நச்சுவனர் ஆடும் நல்லோர் அரவமும் – உஞ்ஞை:41/50,51
தேம்படு கிளவியில் தீவிய மிழற்றி
பாலுறு வன முலை பகு வாய் சேர்த்தி – உஞ்ஞை:41/87,88
இன் தீம் கிளவி ஒன்றிரண்டு மிழற்றி
பண் சுவைத்து ஒழிந்து பால்_இல் தோல் முலை – உஞ்ஞை:46/299,300
திருந்து வாய் திறந்து தேன் என மிழற்றி
பெரும் தண் மலரில் பிணையல் தொடுத்து என் – இலாவாண:15/110,111
அசதி கிளவி நயவர மிழற்றி
நேர்ந்த மாதரை நெடுந்தகை குருசில் – இலாவாண:17/191,192
மெல்லென் கிளவி சில்லென மிழற்றி
புனை மாண் வையம் பொருக்கென தருக என – மகத:8/27,28
நெஞ்சின் அகத்தே அம் சில மிழற்றி
குன்றா கோயில் சென்று அவள் சேர்ந்த பின் – மகத:9/144,145
பைம் தளிர் கோதை பையென மிழற்றி
ஏதிலன் நல் நாட்டு என் துறந்து இறந்தனை – மகத:9/161,162
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி
நகை நய குறிப்பொடு தகை விரல் கூப்ப – வத்தவ:5/17,18

TOP


மிழற்றிய (1)

அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய
காஞ்சனை நமை பொரு கானவர்-தமக்கு – உஞ்ஞை:56/69,70

TOP


மிழற்று (1)

அணி மிழற்று அரவத்து அம் பொன் கிண்கிணி – இலாவாண:2/207

TOP


மிழற்றுபு (1)

மிழற்றுபு விளங்கும் எழில் பொலிவு எய்த – இலாவாண:2/115

TOP


மிழற்றும் (2)

சலசல மிழற்றும் சமய விகற்பமும் – உஞ்ஞை:32/4
கிளி என மிழற்றும் கிளவி கிளியின் – வத்தவ:11/72

TOP


மிளகும் (1)

முதிர் பழ மிளகும் எதிர்வது திகழ்ந்த – மகத:17/141

TOP


மிளிர்ந்தது (1)

கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் – உஞ்ஞை:46/251

TOP


மிளிர்ந்திட்ட (1)

புன் புல உழவர் படை மிளிர்ந்திட்ட
ஒண் கதிர் திரு மணி அம் கண் யாணர் – வத்தவ:2/65,66

TOP


மிளிர (2)

மருங்கு இரும் மணி புடை நிரந்து உடன் மிளிர
நான் முகம் கவைஇய வான் செய் பச்சைய – உஞ்ஞை:38/328,329
சில் அரி தடம் கண் மெல்லென மிளிர
மானின் மட பெடை மம்மர் எய்த – உஞ்ஞை:53/150,151

TOP


மிளிரா (1)

பொரும் கயல் போர வருந்துபு மிளிரா
களைகண் பெறாஅ கலக்க நோக்கமொடு – இலாவாண:19/101,102

TOP


மிளிரும் (3)

வடி ஏர் தடம் கண் வாள் என மிளிரும்
கொடியேர் சாயலை குடங்கையில் தழீஇ – உஞ்ஞை:44/153,154
வேல் என விலங்கும் சேல் என மிளிரும்
மால் என நிமிரும் காலனை கடுக்கும் – வத்தவ:12/253,254
மிளிரும் கச்சையோடு ஒளி விசும்பு எழுந்து – நரவாண:8/105

TOP


மிளை (1)

அரு மிளை உடுத்த அமைவின் குன்றாது – உஞ்ஞை:58/103

TOP


மின் (26)

மேற்கொண்டனனால் மின்_இழை பொருட்டு என் – உஞ்ஞை:35/251
மின்_இழை பொருட்டா மேலவன் கொண்ட – உஞ்ஞை:36/1
மின் இழை மகளிரொடு மன்னவன் தோன்றி – உஞ்ஞை:39/38
மின் இரும் கூந்தல் மேதக புனைந்த – உஞ்ஞை:40/349
மின் அவிர் மணி பூண் மன்னவன் மட மகள் – உஞ்ஞை:40/366
மின் ஒசிந்தது போல் பொன் அணி பிறழ – உஞ்ஞை:41/91
மின் உமிழ்ந்தது போல் வீசிய வாளினர் – உஞ்ஞை:46/10
கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் – உஞ்ஞை:46/251
துன்ன கூஉய் மின்_இழை பக்கம் – உஞ்ஞை:47/58
விடு சுடர் மின் ஒளி விளக்க மாட்டி – உஞ்ஞை:49/83
மின் வாள் அழித்த மேதகு கைவினை – இலாவாண:4/161
பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர் – இலாவாண:7/96
தன் உயிர் வைத்த மின் உறழ் சாயல் – இலாவாண:19/39
விடு கதிர் மின் என விளங்கு மணி இமைப்ப – மகத:5/92
மின் உறழ் சாயல் பொன் உறழ் சுணங்கின் – மகத:16/5
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு – மகத:18/6
மின் ஒளிர் வாளொடு பின் அவன் வாங்க – மகத:27/148
என் நேர் என்ற மின் ஏர் சாயலை – வத்தவ:8/107
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை – வத்தவ:12/8
நல் நாள் அமயத்து மின் என நுடங்கி – நரவாண:1/125
விசும்பின் மின் என மறைந்தனன் விரைந்து என் – நரவாண:3/227
விசும்பில் மின் என விரைந்தனன் மறைந்த பின் – நரவாண:4/1
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும் – நரவாண:5/2
மின் ஆர் மணி முடி மன்னனும் இழிந்து – நரவாண:8/18
மீமிசை மருங்கின் மின் என நுடங்கி – நரவாண:8/47
என்னும் உவகையின் மின் ஏர் நுடங்கிட – நரவாண:8/104

TOP


மின்_இழை (3)

மேற்கொண்டனனால் மின்_இழை பொருட்டு என் – உஞ்ஞை:35/251
மின்_இழை பொருட்டா மேலவன் கொண்ட – உஞ்ஞை:36/1
துன்ன கூஉய் மின்_இழை பக்கம் – உஞ்ஞை:47/58

TOP


மின்ன (2)

கடிகை ஆரம் கழுத்தின் மின்ன
பயிர் கொள் வேழத்து பணை எருத்து இரீஇ – உஞ்ஞை:38/123,124
வேல் இடை மிடைந்து வாள் இடை மின்ன
கணை துளி பொழிந்த கார் வரை சாரல் – மகத:27/120,121

TOP


மின்னு (1)

மின்னு கொடி பிறழும் கன்னி கோலமொடு – உஞ்ஞை:41/66

TOP


மின்னென (2)

மன்னவன் மார்பில் மின்னென ஒடுங்கி – இலாவாண:16/116
வெண் முகில் பிறழும் மின்னென நுடங்கி – மகத:6/7

TOP