கி – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடக்கை 3
கிடக்கையும் 2
கிடங்கிலுள் 1
கிடங்கு 1
கிடங்கும் 1
கிடத்தியும் 1
கிடந்த 45
கிடந்தது 2
கிடந்தமை 1
கிடந்தனமாக 1
கிடந்து 6
கிடந்தும் 1
கிடந்தோட்கு 1
கிடந்தோய் 1
கிடப்ப 3
கிடப்பவும் 1
கிடப்பினும் 1
கிடுகு 2
கிடுகும் 2
கிடை 3
கிடைப்பதில் 1
கிடையினும் 1
கிடையும் 3
கிடைஇ 2
கிண்கிணி 40
கிணறும் 2
கிம்புரி 1
கிரந்தம் 1
கிரிகை 1
கிரிகையன் 1
கிரிகையில் 1
கிரிகையின் 1
கிரிசை 3
கிரிசையின் 2
கிழங்கும் 1
கிழத்தி 5
கிழத்திக்கு 1
கிழத்தியை 2
கிழத்தியொடு 1
கிழத்தீ 1
கிழமை 11
கிழமைக்கு 1
கிழமையில் 2
கிழமையின் 2
கிழமையும் 2
கிழமையுள் 1
கிழமையொடு 1
கிழவர் 2
கிழவற்கு 3
கிழவன் 13
கிழவனின் 2
கிழவனும் 1
கிழவனை 6
கிழவி 1
கிழவோள் 1
கிழி 6
கிழிக்கும் 2
கிழித்து 1
கிழிந்து 2
கிழிப்ப 2
கிழிய 2
கிழியின் 1
கிழியினும் 1
கிழியும் 2
கிள்ளியும் 1
கிள்ளை 1
கிளந்த 6
கிளந்தவன் 1
கிளந்து 11
கிளப்ப 2
கிளப்பின் 1
கிளர் 21
கிளர்_இழை 1
கிளர்ந்தது 3
கிளர்ந்து 5
கிளர 1
கிளரி 1
கிளரும் 1
கிளவா 1
கிளவி 64
கிளவி-தன் 1
கிளவிக்கு 2
கிளவியர் 1
கிளவியில் 5
கிளவியின் 4
கிளவியும் 2
கிளவியை 4
கிளவியொடு 4
கிளவியோடு 1
கிளவீ 1
கிளி 7
கிளிக்கூடும் 1
கிளியின் 2
கிளியும் 8
கிளை 15
கிளை-வயின் 1
கிளைக்கும் 1
கிளைஞர் 1
கிளைஞரும் 1
கிளைஞரை 1
கிளைத்திட்ட 1
கிளைத்திறம் 1
கிளைப்பு 1
கிளைமை 3
கிளையில் 1
கிளையினும் 1
கிளையோ 1
கிளைஇ 1
கின்னர 1
கின்னரர் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கிடக்கை (3)

குண்டு அகன் கிடக்கை குட_கடல் குளிப்ப – உஞ்ஞை:48/45
கண் அகன் கிடக்கை கலி கெழும் ஊழியுள் – இலாவாண:8/6
கரும கிடக்கை காண்வர காட்டி – இலாவாண:9/247

TOP


கிடக்கையும் (2)

கரும கிடக்கையும் கலங்கா சூழ்ச்சியும் – உஞ்ஞை:46/117
தருமத்து இயற்கையும் கரும கிடக்கையும்
தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும் – இலாவாண:9/208,209

TOP


கிடங்கிலுள் (1)

நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி – மகத:25/21

TOP


கிடங்கு (1)

எங்கும் நிகர் இல்லது எழில் கிடங்கு அணிந்தது – இலாவாண:20/107

TOP


கிடங்கும் (1)

படை புற கிடங்கும் தொடை பெரு வாயிலும் – உஞ்ஞை:48/177

TOP


கிடத்தியும் (1)

வாக்குற பாடியும் மேற்பட கிடத்தியும்
நோக்குநர் மகிழ பூ குழல் முடித்தும் – வத்தவ:12/86,87

TOP


கிடந்த (45)

வண்ணம் சூட்டின கண்ணியில் கிடந்த
பனி பூம் குவளை பயத்தின் வளர்த்த – உஞ்ஞை:38/307,308
வளர்ந்து ஏந்து இள முலை மருங்கு இவர்ந்து கிடந்த
பொலன் கலம் மணி பூண் பொலிய புல்லி அவள் – உஞ்ஞை:40/179,180
அம்பு என கிடந்த ஐ அரி நெடும் கண் – உஞ்ஞை:41/72
குலாஅய் கிடந்த கொடு நுண் புருவத்து – உஞ்ஞை:41/77
கலாஅய் கிடந்த குலாத்தரு கலிங்கம் – உஞ்ஞை:42/141
புல் பரந்து கிடந்த கல் அதர் கடந்த பின் – உஞ்ஞை:43/65
மத்தக புல்லகம் நக்குபு கிடந்த
திலக திரு நுதல் வியர் பொடித்து இழிய – உஞ்ஞை:46/159,160
இடை முலை கிடந்த ஏகவல்லி – உஞ்ஞை:46/211
மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த
நித்தில தாமம் நிலையின் வழாமை – உஞ்ஞை:48/62,63
வல-பால் எல்லை வயல் பரந்து கிடந்த
அளற்று நிலை செறுவின் அகல் நிலம் கெழீஇ – உஞ்ஞை:48/172,173
வலத்தில் கிடந்த வழிவகைதானே – உஞ்ஞை:49/54
முல்லை பெரும் திணை புல்லுபு கிடந்த
ஐம்பதின் இரட்டியொடு ஐ_ஐந்து எல்லையுள் – உஞ்ஞை:49/125,126
குறிஞ்சி பெரும் திணை குலாஅய் கிடந்த
பதிற்றுப்பத்தொடு விதிப்பட எண்ணிய – உஞ்ஞை:50/59,60
குலாஅய் கிடந்த கோல கோணத்து – இலாவாண:4/82
அணிபெற கிடந்த அம் பொன் சூட்டினர் – இலாவாண:7/18
வனப்பு அமை அம் வயிற்று அணி தக கிடந்த
உந்தி உள்ளுற வந்து உடல் நடுங்கி – இலாவாண:7/25,26
ஒழுகு புனல் அகழினை உடை என கிடந்த
முழு மதில் நெடும் கடை முதல் பெரு நகரம் – இலாவாண:9/186,187
சிதர்வன கிடந்த சில் அரி சுணங்கு இவை – இலாவாண:12/88
மாயோன் மார்பின் மன்னுபு கிடந்த
ஆரம் போல அணி பெற தோன்றி – இலாவாண:14/3,4
குங்கும கொடியொடு குலாஅய் கிடந்த
பூம் தாது ஒழுக்கம் சாந்தொடு திமிர்ந்து – இலாவாண:16/28,29
சேடுற கிடந்த செம்பொன் செய் கலம் – இலாவாண:19/64
சால்பு என கிடந்த கோல பெரு நுகம் – மகத:3/57
அலர் என கிடந்த மதர் அரி மழை கண் – மகத:5/24
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர் – மகத:9/102
புல்லென கிடந்த புறத்தள் பொள்ளென – மகத:9/155
என்-கண் கிடந்த எல்லாம் மற்று இவள் – மகத:14/248
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை – மகத:24/22
மருங்கு அறை கிடந்த வயந்தககுமரன் – வத்தவ:3/123
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த
வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ – வத்தவ:5/74,75
எட்டு மெய்யோடு இசை பெற கிடந்த
விள்ளா விழு புகழ் வெள் ஏறு என்பதை – வத்தவ:5/114,115
வெம் முலை ஆகத்து தண் என கிடந்த
எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து – வத்தவ:7/78,79
பிணங்குபு கிடந்த பின்னு சேர் புறத்தொடு – வத்தவ:7/104
புல்லென கிடந்த நுதலினொடு அலமந்து – வத்தவ:7/166
ஆராய்கின்றோற்கு அகலத்து கிடந்த
பூம் தண் மாலையொடு பொங்கு நூல் புரள – வத்தவ:7/181,182
இறைஞ்சுபு கிடந்த சிறந்தோள் தழீஇ – வத்தவ:7/216
சுழி என கிடந்த குழி நவில் கொப்பூழ் – வத்தவ:11/65
வில் என கிடந்த புருவம் வில்லின் – வத்தவ:11/66
அம்பு என கிடந்த செம் கடை மழை கண் – வத்தவ:11/67
பை என கிடந்த அது ஏந்து அல்குல் – வத்தவ:11/71
படிந்த வண்டு எழுப்பியும் கிடந்த பந்து எண்ணியும் – வத்தவ:12/237
திரு நுதல் மீமிசை திறத்துளி கிடந்த
அருள் ஏர் வாசகம் தெருளுற அறிந்து – வத்தவ:13/154,155
பாயல் கிடந்த பல் மலர் மிதிப்பினும் – வத்தவ:17/96
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ – நரவாண:1/93
குடர்-வயின் கிடந்த குழவியது உள்ளத்து – நரவாண:1/177
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த
வால் இதழ் நறு மலர் வைகறை யாமத்து – நரவாண:3/194,195

TOP


கிடந்தது (2)

இடு கல் முதலன இட-வயின் கிடந்தது
இன்னா பேர் தேர் இயற்கைத்து எண்-மதி – உஞ்ஞை:49/44,45
கிடந்தது கண்டே நடுங்குவனன் ஆகி – வத்தவ:3/95

TOP


கிடந்தமை (1)

கிடந்தமை நோக்கி உடங்கு உணர்வு எய்தி – நரவாண:8/99

TOP


கிடந்தனமாக (1)

அசைந்து யாம் கிடந்தனமாக அவ்வழி – நரவாண:2/20

TOP


கிடந்து (6)

மணி கிடந்து இமைக்கும் மாடம் மா நகர் – உஞ்ஞை:46/264
அணி கிடந்து இமைக்கும் அகன் பெரும் கோயிலுள் – உஞ்ஞை:46/265
கலாஅய் கிடந்து கவ்விய கொழுந்தின் – இலாவாண:4/83
உடன் கிடந்து இமைக்கும் ஒரு காழ் முத்தினர் – இலாவாண:6/126
நெற்சிறு_தாலி நிரல் கிடந்து இலங்க – வத்தவ:16/29
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும் – நரவாண:8/41

TOP


கிடந்தும் (1)

பார்வை நின்றும் பதுக்கையுள் கிடந்தும்
போர்வை புல்லுள் பொதிந்தனர் ஒளித்தும் – உஞ்ஞை:56/260,261

TOP


கிடந்தோட்கு (1)

நுங்கை-தன் நகர் கங்குல் கிடந்தோட்கு
இன்னது நிகழ இவ்வயின் தந்த – இலாவாண:11/130,131

TOP


கிடந்தோய் (1)

பெரு மணி பாவையின் பிறந்தனை கிடந்தோய்
திருமெய் தழீஇ அருமைத்து ஆக – இலாவாண:11/72,73

TOP


கிடப்ப (3)

பவள துணியின் பசுமையொடு கிடப்ப
இன் அணி புக்கோர் இ வழி அல்லது – உஞ்ஞை:55/100,101
பந்தும் கழங்கும் பட்டுழி கிடப்ப
அம் தண் மஞ்ஞை ஆடு இடம் ஏய்ப்ப – இலாவாண:7/100,101
பாடி அரும் கலம் பட்டுழி கிடப்ப
நீடு இருளகத்து நீங்குதல் பொருள் என – மகத:17/258,259

TOP


கிடப்பவும் (1)

அற்றம்_இல் வால் அற்றன கிடப்பவும்
சித்திர தாமரை பத்திர பரூஉ தொடி – மகத:20/50,51

TOP


கிடப்பினும் (1)

அரவு வாய் கிடப்பினும் அலர் கதிர் தண் மதி – மகத:14/139

TOP


கிடுகு (2)

பொன் கிடுகு செறிந்து போர்வை முற்றி – உஞ்ஞை:34/135
அடி தொடைக்கு அமைந்த கிடுகு உடை காப்பில் – உஞ்ஞை:48/17

TOP


கிடுகும் (2)

பொங்கு மயிர் கிடுகும் புளக தண்டையும் – உஞ்ஞை:46/60
கண்ணுளாளர் கை புனை கிடுகும்
நாடும் நகரமும் ஆடுநர் பாடுநர் – நரவாண:8/30,31

TOP


கிடை (3)

எண்_நூற்று_அறுவர் இளம் கிடை காப்பரொடு – உஞ்ஞை:37/11
கிடை போழ் பந்தத்திடை புனைந்து இயற்றிய – உஞ்ஞை:41/4
மென் கிடை போழ்வை சந்திய ஆகி – உஞ்ஞை:42/36

TOP


கிடைப்பதில் (1)

கிடைப்பதில் இரப்போர்க்கு அளிப்பது நன்று என – வத்தவ:13/87

TOP


கிடையினும் (1)

ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் – இலாவாண:2/141

TOP


கிடையும் (3)

கிடையும் பீலியும் இடை வரித்து அழுத்தி – உஞ்ஞை:40/7
கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் – உஞ்ஞை:43/186
கிடையும் பூளையும் இடை வரி உலண்டும் – வத்தவ:12/42

TOP


கிடைஇ (2)

இடு மணி பெரு நிரை நெடு மணில் கிடைஇ
இரும் புறம் புதைய எழில் மறைந்திருந்த – உஞ்ஞை:39/34,35
பவழ பாவையும் பந்தும் கிடைஇ
புகழப்பட்ட பூ மர காவினுள் – இலாவாண:15/101,102

TOP


கிண்கிணி (40)

அம் செம் கிண்கிணி அடி அலைத்தன-கொல் – உஞ்ஞை:33/180
மழலை கிண்கிணி மடவோர் மருட்ட – உஞ்ஞை:34/4
அரம் கொல் கிண்கிணி இரங்க ஒல்கி – உஞ்ஞை:34/134
மழலை கிண்கிணி கழலோன் பெருமகள் – உஞ்ஞை:34/175
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப அரங்கின் – உஞ்ஞை:34/212
இரங்கு பொன் கிண்கிணி இளையோர் நடுவண் – உஞ்ஞை:35/70
பரட்டு அசை கிண்கிணி பக்கம் புல்லி – உஞ்ஞை:35/208
இரங்கு பொன் கிண்கிணி அரங்கு இயல் ஆயத்து – உஞ்ஞை:37/217
கிண்கிணி மயங்கிய தண் பெரும் கோயில் – உஞ்ஞை:38/160
ஏற்ற கோலத்து இயம்பும் கிண்கிணி
நூற்றுவர் தோழியர் போற்று இயல் கூற – உஞ்ஞை:38/228,229
பூ போது உறுத்த மீ பொன் கிண்கிணி
இடு மணி பெரு நிரை நெடு மணில் கிடைஇ – உஞ்ஞை:39/33,34
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப இயலி – உஞ்ஞை:40/18
செம்பொன் கிண்கிணி சேனாபதி மகள் – உஞ்ஞை:40/61
கிளரும் பாசிழை கிண்கிணி கணை கால் – உஞ்ஞை:40/104
கண் பிணி பகு வாய் கிண்கிணி அரவமும் – உஞ்ஞை:41/58
அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற – உஞ்ஞை:42/104
பொன் செய் கிண்கிணி புதல்வர் ஆடும் – உஞ்ஞை:43/183
தவளை கிண்கிணி ததும்பு சீறடியர் – உஞ்ஞை:46/246
செம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப – உஞ்ஞை:46/296
பைம்பொன் பகு வாய் கிண்கிணி ஒலியும் – உஞ்ஞை:48/183
தவளை கிண்கிணி தாங்குதல் ஆற்றாது – உஞ்ஞை:53/166
கிண்கிணி தாரொடு கலவிய கதிர் அணி – இலாவாண:2/126
அணி மிழற்று அரவத்து அம் பொன் கிண்கிணி
சிலம்பொடு சீறடி புறம் புதைந்து அரற்றவும் – இலாவாண:2/207,208
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும் – இலாவாண:3/85
ததும்பும் கிண்கிணி தகை மலர் சேவடி – இலாவாண:7/70
பொன் அணி கிண்கிணி போழ் வாய் நிறைய – இலாவாண:7/88
பகு வாய் கிண்கிணி பரட்டு மிசை ஆர்ப்ப – இலாவாண:10/69
ஆடு பொன் கிண்கிணி அடி மிசை அரற்ற – இலாவாண:14/42
பொன் பூம் கிண்கிணி புற அடி பிறழ – இலாவாண:16/8
அடி மிசை கிண்கிணி அடை துகள் அகற்றியும் – இலாவாண:16/72
மணி அரி கிண்கிணி சிலம்பொடு மிழற்ற – இலாவாண:19/152
சேவடிக்கு ஏற்ற செம்பொன் கிண்கிணி
பாட குரலொடு பரடு பிறழ்ந்து அரற்ற – இலாவாண:19/184,185
பசும்பொன் கிண்கிணி பரடு சுமந்து அரற்ற – மகத:5/10
பொன் அரி கிண்கிணி புடைபெயர்ந்து அரற்ற – மகத:6/97
வெகுளல் நீ என தவளை அம் கிண்கிணி
சேவடி சேர்ந்து செறிய பற்றி – மகத:9/167,168
பசும்பொன் கிண்கிணி பதுமா நங்கையும் – மகத:22/105
சூடுறு கிண்கிணி பாடு பெயர்ந்து அரற்ற – வத்தவ:8/18
தனக்கு அமைவு எய்திய தவளை அம் கிண்கிணி
வனப்பு எடுத்து உரைஇ வையகம் புகழினும் – வத்தவ:12/161,162
பசும்பொன் கிண்கிணி பாவையர் எல்லாம் – நரவாண:4/66
தானே வவ்விய தவளை அம் கிண்கிணி
மான் நேர் நோக்கின் மதனமஞ்சிகையும் – நரவாண:8/90,91

TOP


கிணறும் (2)

அந்த கேணியும் எந்திர கிணறும்
தண் பூங்காவும் தலைத்தோன்று அருவிய – உஞ்ஞை:33/3,4
கேணியும் கிணறும் நீள் நிலை படுவும் – மகத:3/6

TOP


கிம்புரி (1)

சிலை கவிழ்த்து அன்ன கிம்புரி கவ்வி – இலாவாண:6/120

TOP


கிரந்தம் (1)

விரி நூல் கிரந்தம் விளம்பிய நாவினர் – மகத:1/123

TOP


கிரிகை (1)

சமிதை கிரிகை சால்புளி கழிப்பி – இலாவாண:3/81

TOP


கிரிகையன் (1)

நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன்
பூம் போது அணிந்த வாங்கு கரை மருங்கின் – உஞ்ஞை:53/92,93

TOP


கிரிகையில் (1)

மெய் முதல் திரியாது வேண்டும் கிரிகையில்
கை முதல் கேண்மை கழுமி கழிந்த பின் – இலாவாண:3/132,133

TOP


கிரிகையின் (1)

மறையின் கிரிகையின் முறை அறிந்து ஓதி – இலாவாண:4/160

TOP


கிரிசை (3)

மறுமைக்கு எண்ணிய மயல்_அறு கிரிசை
அந்தணர் சேரியும் அரும் தவர் பள்ளியும் – உஞ்ஞை:43/174,175
கேள்வி முற்றி கிரிசை நுனித்த – இலாவாண:15/38
ஈர் எண் கிரிசை இயல்புளி நடாஅய் – நரவாண:6/86

TOP


கிரிசையின் (2)

கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை – உஞ்ஞை:42/161
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மையோர் – மகத:22/23

TOP


கிழங்கும் (1)

கிழங்கும் மஞ்சளும் கொழும் கால் தகரமும் – உஞ்ஞை:51/27

TOP


கிழத்தி (5)

முல்லை கிழத்தி முன் அருள் எதிர – உஞ்ஞை:49/90
ஆர் உயிர் கிழத்தி அகன்றனள் இவண் இலள் – இலாவாண:18/34
ஒள் நுதல் பாவை ஒரு பெரும் கிழத்தி
மண்ணக வரைப்பின் மகளிர் மற்று தன் – மகத:21/86,87
உயிர் ஏர் கிழத்தி ஆகலின் உள்ளகத்து – வத்தவ:8/14
திரு_மகன் ஆம் நின் பெரு மனை_கிழத்தி – நரவாண:3/46

TOP


கிழத்திக்கு (1)

குடி பெரும் கிழத்திக்கு தானம் செய்க என – வத்தவ:9/64

TOP


கிழத்தியை (2)

பிறப்பிடை கேண்மை பெரு மனை கிழத்தியை
மற படை மன்னன் வாய் சோர்ந்து அரற்றா – இலாவாண:18/116,117
மனை பெரும் கிழத்தியை நினைத்தனன் ஆகி – மகத:6/19

TOP


கிழத்தியொடு (1)

மித்திரகாமன் நல் பெரும் கிழத்தியொடு
ஆப்புற இரீஇய பிற்றை ஆருணி – வத்தவ:4/62,63

TOP


கிழத்தீ (1)

வீணை கிழத்தீ வித்தக உருவீ – இலாவாண:18/82

TOP


கிழமை (11)

மன் பெரும் சிறப்பின் மண்ணக கிழமை
ஒரு கோல் ஓச்சிய திரு ஆர் மார்ப நின் – உஞ்ஞை:49/65,66
இரு நில கிழமை ஏயர் இறைவன் – உஞ்ஞை:56/151
ஓர் உயிர் கிழமை ஓரை அளக்கும் – இலாவாண:3/5
சிறப்பு உடை கிழமை செய்ததை அறிதலின் – மகத:18/19
முற்பால் கிழமை முதலறவு இன்றி – மகத:18/25
ஒரு பெரும் கிழமை உண்மை உணர்த்தலும் – மகத:18/53
கண் போல் கிழமை கலப்பும் உண்டு என – மகத:18/56
திருமண கிழமை பெருமகள் உறையும் – வத்தவ:6/74
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய – வத்தவ:7/222
மேல்நாள் கிழமை விண்ணவர் மகளை – நரவாண:3/212
பயில்-தொறும் இனிய நின் பண்பு உடை கிழமை
உள்ளு-தொறு உள்ளு-தொறு உள்ளம் இன்புற – நரவாண:7/149,150

TOP


கிழமைக்கு (1)

சிறப்பின் விட்டிருந்து நல தகு கிழமைக்கு
யாவரும் உரியோர் இவளின் இல் என – நரவாண:8/150,151

TOP


கிழமையில் (2)

பழமையின் பசையாது கிழமையில் கெழுவாது – உஞ்ஞை:35/136
கிழமையில் செய்தனன் கெழுதகை தரும் என – வத்தவ:8/76

TOP


கிழமையின் (2)

திரு மனை கிழமையின் ஒரு மீக்கூரி – இலாவாண:5/93
நட்பு வலை கிழமையின் நம் பொருட்டாக – மகத:18/87

TOP


கிழமையும் (2)

இன்ப கிழமையும் மன் பேர் உலகினுள் – மகத:6/112
அன்றை கிழமையும் ஆற்ற அளைஇ – மகத:18/109

TOP


கிழமையுள் (1)

உண்கண் கிழமையுள் பண்பின் தீராது – மகத:22/145

TOP


கிழமையொடு (1)

இற்பெரும் கிழமையொடு கற்பு கடம் பூட்ட – மகத:21/7

TOP


கிழவர் (2)

மண்ணக கிழவர் மனக்கோள் அறாது – இலாவாண:2/21
திரு முடி இந்திரர் இரு நில கிழவர்
உரிமை மகளிரொடு உருபுபட புனைந்த – இலாவாண:6/147,148

TOP


கிழவற்கு (3)

வித்தக கோலத்து வீழ்ந்த கிழவற்கு
பத்தினி ஆகிய பைம் தொடி பணை தோள் – உஞ்ஞை:48/65,66
மண்ணக கிழவற்கு மண்ணு நீர் சுமக்கும் – இலாவாண:2/227
வயந்த கிழவற்கு நயந்து நகர் கொண்ட – மகத:6/178

TOP


கிழவன் (13)

விண்ணவர் கிழவன் வீற்றிடம் கடுப்ப – இலாவாண:3/149
சிறப்பு எதிர் கொள்கை சித்தி கிழவன்
பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் – இலாவாண:6/166,167
ஐம் கணை கிழவன் அமர்ந்து நிலை பெற்ற – மகத:4/35
பைம் கதிர் விரிக்கும் பனி மதி கிழவன்
அம் கண் ஞாலத்து அளவை ஆகிய – மகத:14/6,7
இன் உயிர் கிழவன் எழுதிய பாவை – மகத:22/162
இன்ப கிழவன் இட வகை அன்றி – வத்தவ:2/90
பொங்கு நிதி கிழவன் போற்றவும் மணப்ப – வத்தவ:5/77
ஆனா கனவிடை மா நிதி கிழவன்
விளங்கு அவை நாப்பண் துளங்கினர் புகுதலின் – நரவாண:1/88,89
ஒள் நிதி கிழவன் உரிமையொடு இருந்துழி – நரவாண:3/56
விழு நிதி கிழவன் விழையும் காதலின் – நரவாண:3/80
அறாஅ அரு நிதி கிழவன் அதனை – நரவாண:3/166
யாழின் கிழவன் இங்ஙனம் நினைஇ – நரவாண:4/104
அந்தர விசும்பின் ஆழி கிழவன்
வந்து உடன்பிறந்தனன் பிறந்த பின்றை – நரவாண:6/30,31

TOP


கிழவனின் (2)

விண்ணக கிழவனின் விழுப்பம் கூறி – இலாவாண:2/22
வானோர் கிழவனின் வரம்பு இன்று பொலிய – நரவாண:4/55

TOP


கிழவனும் (1)

துறக்க கிழவனும் துன்னிய-காலை – இலாவாண:15/13

TOP


கிழவனை (6)

பெருந்தகை கிழவனை பேரா மறவரை – உஞ்ஞை:56/241
சேனை கிழவனை சிறை என கொண்டு – இலாவாண:1/80
அலகை ஆகிய அரும் தவ கிழவனை
இருக்கை இயற்றிய திரு தகு செல்வத்து – இலாவாண:6/156,157
இயல்பின் திரியா இன் பெரும் கிழவனை
வியலக வரைப்பின் மேவர வேண்டி – வத்தவ:7/167,168
வள நிதி கிழவனை வாழ்த்துவனள் வணங்கி – நரவாண:3/147
குறையா இரும் தவ கிழவனை நோக்கி – நரவாண:3/190

TOP


கிழவி (1)

ஆண் பெயர் கிழவி நாள்_மகிழ் கடவ – உஞ்ஞை:36/279

TOP


கிழவோள் (1)

குன்றா கற்பின் எம் கோ பெரும் கிழவோள்
நித்திலம் பொதிந்த இப்பி போல – இலாவாண:11/47,48

TOP


கிழி (6)

துகிலின் வெண் கிழி துய் கடை நிமிடி – உஞ்ஞை:33/92
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி – உஞ்ஞை:41/5
கேள்வி செவியில் கிழி துகில் பஞ்சி – உஞ்ஞை:48/136
கிழி இடம் பெறாஅர் வழி இடம் பார்ப்ப – உஞ்ஞை:58/27
பஞ்சி பட்டொடு துரூஉ கிழி நீக்கி – இலாவாண:4/166
சித்திர கிழி மிசை வித்தகமாக – மகத:22/144

TOP


கிழிக்கும் (2)

உரற்றும் மழை கிழிக்கும் ஒள் மணி உச்சி – இலாவாண:2/118
கரு முகில் கிழிக்கும் கடு வளி போல – மகத:17/51

TOP


கிழித்து (1)

கந்து முதல் கிழித்து கார் என உரறி – உஞ்ஞை:44/78

TOP


கிழிந்து (2)

ஓரி மீமிசை பாய்தலில் கிழிந்து
பொதி கண் இறாஅல் பூம் புறம் புதைஇ – உஞ்ஞை:50/34,35
உரும் உறழ் முரசின் கண் கிழிந்து அதனொடு – மகத:27/76

TOP


கிழிப்ப (2)

இணை_இல் ஒரு சிறை கணை உளம் கிழிப்ப
தனித்து ஒழி பிணையின் நினைப்பனள் நின்ற – உஞ்ஞை:33/160,161
சிந்து அரி நெடும் கண் என் நெஞ்சகம் கிழிப்ப
கொந்து அழல் புண்ணொடு நொந்து உயிர் வாழ்தல் – வத்தவ:13/70,71

TOP


கிழிய (2)

முகில் உளம் கிழிய அகல போகி – நரவாண:4/87
முகில் உளம் கிழிய அகல் விசும்பு ஏறி – நரவாண:4/107

TOP


கிழியின் (1)

சித்திர கிழியின் வித்தகம் ஆக – மகத:17/167

TOP


கிழியினும் (1)

ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும்
நாற்றமும் தோற்றமும் வேற்றுமை இன்றி – இலாவாண:2/141,142

TOP


கிழியும் (2)

கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் – உஞ்ஞை:43/186
தருப்பண கிழியும் தண்ணீர் கரகமும் – இலாவாண:8/165

TOP


கிள்ளியும் (1)

பத்திர சேதம் பற்பல கிள்ளியும்
உறியோர்க்கு உதவுதல் செல்லாது ஒய்யென – இலாவாண:14/31,32

TOP


கிள்ளை (1)

கிள்ளை வாயின் அன்ன வள் உகிர் – வத்தவ:7/42

TOP


கிளந்த (6)

ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும் – உஞ்ஞை:36/242
மனம் உண கிளந்த மந்திர கோட்டியுள் – உஞ்ஞை:36/277
பதினோர் ஆண்டினுள் பாற்பட கிளந்த
விதி மாண் உறுப்பிற்கு வேண்டுவவேண்டுவ – உஞ்ஞை:42/151,152
அன்பு இன்று கிளந்த அருள்_இல் பொருள் மொழி – உஞ்ஞை:45/63
நான்முகன் மகளிர் நூன் முதல் கிளந்த
ஒழுக்கின் திரியாள் உறு பொருள் வேண்டும் – மகத:6/102,103
அன்னவை கிளந்த பின்னர் தன்னோடு – மகத:24/130

TOP


கிளந்தவன் (1)

ஆராய்வாளன் அகம் உண கிளந்தவன்
காரிய கிளவியில் காரணம் காட்டலின் – மகத:25/158,159

TOP


கிளந்து (11)

இன்னவை பிறவும் துன்னினர் கிளந்து
வேந்து இடையிட்ட வெம் சொல்லாதலின் – உஞ்ஞை:35/14,15
கயல் புரை கண்ணி இயல்பு கிளந்து ஏத்தி – உஞ்ஞை:47/258
இன்னவை கிளந்து பின் தன்-வயின் தழீஇ – இலாவாண:11/171
மெல் இயல் மாதரொடு மேவன கிளந்து
புல்லியும் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும் – மகத:14/159,160
கேகயத்து அரசனும் கிளந்து பல எண்ணி – மகத:19/125
இயற்பட ஈவல் என்று அமைச்சரொடு கிளந்து
வேறுவேறாக தேற காட்டி – மகத:23/43,44
பொய்யா வாய் புள் மெய் பெற கிளந்து
திரு வளர் அகலம் இருவரும் தழீஇ – மகத:24/24,25
கெழீஇய அவரை கிளந்து உடன் போக்கி – வத்தவ:14/156
முன் தனக்கு உரைத்தன முறைமுறை கிளந்து
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும் – நரவாண:5/37,38
கேட்டோர் மனம் உண கிளந்து அவன் கடாவ – நரவாண:7/98
பிறந்த நம்பி திறம் கிளந்து உரைப்பேன் – நரவாண:8/24

TOP


கிளப்ப (2)

கருமம் உண்மை மரபின் கிளப்ப
பெரும் குல பிறப்பினும் அரும் பொருள் வகையினும் – இலாவாண:13/31,32
திரு தகு மார்வன் திறவதின் கிளப்ப
தார் அணி மார்ப காரணம் கேள்-மதி – நரவாண:3/42,43

TOP


கிளப்பின் (1)

உள்ளிய அசாஅஃது ஒளி இன்று கிளப்பின்
மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி – நரவாண:3/51,52

TOP


கிளர் (21)

திரு கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து – உஞ்ஞை:33/181
புதை இருந்து அன்ன கிளர் ஒளி வனப்பினர் – உஞ்ஞை:34/133
கிளர்_இழை கற்கும் கேள்வி பொழுது என – உஞ்ஞை:36/134
புறம் கவின் கொண்ட நிறம் கிளர் செல்வத்து – உஞ்ஞை:38/55
அரணி கான்ற அணி கிளர் செம் தீ – உஞ்ஞை:42/160
கிளர் பொன் போதொடு களை அற பிணித்த – இலாவாண:4/143
ஆர் அணங்கு ஆகிய அணி கிளர் வனப்பின் – இலாவாண:6/158
நலம் கிளர் தடம் தோள் நவை_அற சேஎந்து – இலாவாண:19/130
திரு கிளர் மாடம் சேர்ந்து வலம் கொண்டு – மகத:6/99
கேழ் கிளர் மணி முடி கேகயத்து அரசன் – மகத:16/9
பூண் ஏற்று அகன்ற புடை கிளர் அகலத்து – மகத:20/62
திரு கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின் – மகத:22/108
நலம் கிளர் நறு நுதல் நாறு இரும் கூந்தல் – வத்தவ:5/96
திரு கிளர் முற்றம் விருப்பொடு புகுந்து – வத்தவ:10/176
திரு கண்டு அன்ன உரு கிளர் கண்ணி – வத்தவ:12/164
கேள் உடை முறையால் கிளர் ஒளி வனப்பின் – வத்தவ:13/49
நலம் கிளர் மலர் கொண்டு இறைஞ்சினள் இருந்து யான் – வத்தவ:13/188
மணி கிளர் பலகை-வாய் புடை நிரைத்த – வத்தவ:15/105
அரத்தம் கூரும் திரு கிளர் சேவடி – வத்தவ:17/97
கிளர் சேண் இமயமும் கெங்கையும் சிந்துவும் – நரவாண:4/122
மருங்கின் நீளமும் நிறம் கிளர் சேவடி – நரவாண:8/109

TOP


கிளர்_இழை (1)

கிளர்_இழை கற்கும் கேள்வி பொழுது என – உஞ்ஞை:36/134

TOP


கிளர்ந்தது (3)

கண்டு ஒரு பாணியில் கடல் கிளர்ந்தது போல் – உஞ்ஞை:39/28
கல்லென துவன்றி கார் கிளர்ந்தது போல் – உஞ்ஞை:55/113
கடல் கிளர்ந்தது போல் கால் படை துவன்றி – உஞ்ஞை:56/190

TOP


கிளர்ந்து (5)

வான் கிளர்ந்து அன்ன வள நீராட்டணி – உஞ்ஞை:37/273
கருவி பல் படை கடல் கிளர்ந்து என உற – உஞ்ஞை:48/31
கவ்வை ஓதம் கால் கிளர்ந்து உராஅய் – உஞ்ஞை:51/66
கடல் கிளர்ந்து அன்ன அடல்_அரும் தானை – உஞ்ஞை:58/97
கருவி வானம் கால் கிளர்ந்து எடுத்த – மகத:14/260

TOP


கிளர (1)

பள்ளி மண்டபத்து ஒள் ஒளி கிளர
திருவு கொள் உரோணி உருவு நலம் விரும்பிய – உஞ்ஞை:47/211,212

TOP


கிளரி (1)

தன்-வயின் பட்டது அவ்வயின் கிளரி
அகம்புரி செம்மை அன்பின் காட்டி – உஞ்ஞை:36/275,276

TOP


கிளரும் (1)

கிளரும் பாசிழை கிண்கிணி கணை கால் – உஞ்ஞை:40/104

TOP


கிளவா (1)

ஏல்வு அன்று என்ன மேலவை கிளவா
இளிவு அஞ்சு முனிவரேயாயினும் மற்று இனி – மகத:19/28,29

TOP


கிளவி (64)

சிறப்பு உடை கிளவி செவ்விதில் பயிற்றி – உஞ்ஞை:34/44
நன்னர் கிளவி நயவர பயிற்றி – உஞ்ஞை:34/234
காரண கிளவி நீர கூறி – உஞ்ஞை:35/112
பின்பயம் கருதும் பெரு நசை கிளவி
இன் நகை தோழற்கு இனிய பயிற்றி – உஞ்ஞை:35/114,115
தன் துறைக்கு ஒவ்வா தகை_இல் கிளவி
பைம் தொடி மாதர் பண்பு_இல பயிற்ற – உஞ்ஞை:35/132,133
பூசல் கிளவி சே_இழை பயிற்ற – உஞ்ஞை:35/155
படிற்று இயல் களைஇ பணி மொழி கிளவி
நடுக்குறு துயரமொடு நயவர பயிற்றி – உஞ்ஞை:35/204,205
உரைத்தகு கிளவி ஓம்பார் பயிற்றி – உஞ்ஞை:35/223
வேட்கை கிளவி வெளிப்பட பயிற்றி – உஞ்ஞை:35/244
நொதுமல் கிளவி கதுமென வெரீஇ – உஞ்ஞை:36/59
அன்பின் கொண்ட அரற்றுறு கிளவி
வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர – உஞ்ஞை:36/67,68
காரண கிளவி நீர காட்டி – உஞ்ஞை:36/96
ஐய கிளவி தெய்வம் தேற்றினும் – உஞ்ஞை:36/109
வெம் சொல் கிளவி நின் அங்கையின் அவித்து – உஞ்ஞை:36/187
சிறு_சொல் கிளவி கேளல செவி என – உஞ்ஞை:36/314
மாதர் நுதலிய மருந்து இயல் கிளவி
ஆரும் இல் ஒருசிறை அன்புற பயிற்றி – உஞ்ஞை:36/325,326
குறையுறு கிளவி முறை பல பயிற்றி – உஞ்ஞை:37/71
மகிழ்ச்சி கிளவி மழை என இசைப்ப – உஞ்ஞை:37/81
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி – உஞ்ஞை:38/225
துட்ட கிளவி பெட்டவை பயிற்றி – உஞ்ஞை:40/82
துனிப்பு உறு கிளவி பனி கடல் பிறந்த – உஞ்ஞை:40/169
மாதர் ஆற்றா மழலை அம் கிளவி
பேதை மகளிர் சேதடி அணிந்த – உஞ்ஞை:41/56,57
எவ்வாய் அமரும் இன் மொழி கிளவி
அ வாய் மங்கலம் ஆக என விரும்பி – உஞ்ஞை:44/125,126
ஆன் பால் செம் தேத்து அணியுறு கிளவி
அடு திறல் ஆற்றல் அறிய கூற – உஞ்ஞை:46/151,152
இன் தீம் கிளவி ஒன்றிரண்டு மிழற்றி – உஞ்ஞை:46/299
தெளிதகு கிளவி செவ்விதின் கேட்ப – உஞ்ஞை:47/131
கூறிய கிளவி கூற்றுவன் இமிழ்த்த – உஞ்ஞை:47/247
அமிழ்தின் அன்ன அம் சில் கிளவி
மதர்வை நோக்கின் மாதரை தழீஇ – உஞ்ஞை:48/35,36
மதுரம் பொதிந்த மழலை அம் கிளவி
சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து – உஞ்ஞை:50/6,7
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி – உஞ்ஞை:53/41
பெரும் பெயர் கிளவி பிரச்சோதனன் நாட்டு – உஞ்ஞை:56/91
நல் பல கிளவி பற்பல பயிற்றி – இலாவாண:5/95
தெரிவை மகளிர் தே மொழி கிளவி
குழி தலை புதல்வர் எழில் புறம் வரித்த – இலாவாண:7/113,114
முகமன் கிளவி தகுவ கூறி – இலாவாண:10/14
முகிழ் நகை கிளவி முகமன் கூறி – இலாவாண:17/185
அசதி கிளவி நயவர மிழற்றி – இலாவாண:17/191
அம் தீம் கிளவி என் அம் பிணை மூழ்கிய – இலாவாண:19/5
கரும் பேர் கிளவி கனம் குழை திற-வயின் – இலாவாண:20/29
திறல்படு கிளவி தெரிந்து அவன் உரைப்ப – மகத:1/82
தேன் நேர் கிளவி சென்ற உலகம் – மகத:1/149
செவ்வழி தீம் தொடை சிதைந்தன கிளவி என் – மகத:1/200
காரண கிளவி பூரண நோக்கின் – மகத:3/64
மெல்லென் கிளவி சில்லென மிழற்றி – மகத:8/27
மாண் தகு கிளவி பூண்ட நோன்பிற்கு – மகத:13/20
பண்டு உரை கிளவி பையென திரிய – மகத:14/131
கரும்பு ஏர் கிளவி கதிர் முகை முறுவல் – மகத:14/132
கோல் தேன் கிளவி குறிப்பின் காட்ட – மகத:14/205
உறு புகழ் கிளவி சிறிய கேளா – மகத:18/105
இன் இசை கிளவி இறை_மகன் இசைத்தலின் – மகத:22/86
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி – மகத:23/50
அற்பு தளை கிளவி பற்பல பயிற்றி – மகத:24/9
மாசு_இல் கற்பின் மருந்து ஏர் கிளவி
வாசவதத்தையை வாய் மிக்கு அரற்றி – வத்தவ:4/3,4
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி – வத்தவ:5/17
மழலை அம் கிளவி மறந்தனையோ என – வத்தவ:7/24
காரண கிளவி கழறுவனன் காட்ட – வத்தவ:7/97
முகனமர் கிளவி முன் நின்று உரைப்பின் – வத்தவ:8/6
ஆசிடை கிளவி பாசிழை பயிற்றி – வத்தவ:8/24
வந்தோர்க்கு ஒத்த இன்புறு கிளவி
அமிர்து கலந்து அளித்த அருளினன் ஆகி – வத்தவ:10/179,180
கிளி என மிழற்றும் கிளவி கிளியின் – வத்தவ:11/72
திரு தகு கற்பின் தீம் குயில் கிளவி
வரி குழல் கூந்தல் வசுந்தரி-தன் மகள் – வத்தவ:12/145,146
ஆசிடை கிளவி அவரின் எய்தி – நரவாண:1/63
உள்ளம் உருக்கும் ஒள் அமர் கிளவி
ஆரா உள்ளம் உடையோர் கேண்மை – நரவாண:5/32,33
பொருந்தா மன்னரும் பொலிக எனும் கிளவி
பெரும் திறையாக விரைந்தனர் வருக – நரவாண:6/55,56
மருந்து ஏர் கிளவி மதனமஞ்சிகை-தன் – நரவாண:8/142

TOP


கிளவி-தன் (1)

கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும் – வத்தவ:13/73

TOP


கிளவிக்கு (2)

கூறிய கிளவிக்கு ஒத்தது இன்று என – மகத:9/110
உரைத்த கிளவிக்கு ஒன்றே போல – நரவாண:7/104

TOP


கிளவியர் (1)

அன்புறு கிளவியர் இன்புறுவோரும – இலாவாண:1/43

TOP


கிளவியில் (5)

முன்னுறு கிளவியில் பண்ணுற பணிக்கலும் – உஞ்ஞை:32/71
தேம்படு கிளவியில் தீவிய மிழற்றி – உஞ்ஞை:41/87
பனிப்புறு கிளவியில் பக்கம் நோக்கி – உஞ்ஞை:46/254
சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப – மகத:14/185
காரிய கிளவியில் காரணம் காட்டலின் – மகத:25/159

TOP


கிளவியின் (4)

தந்து_உரை_கிளவியின் தம் துறை முடித்த – உஞ்ஞை:54/31
தே மொழி கிளவியின் திறல் வேறு ஆகி – இலாவாண:18/103
தேன் தோய்த்து அன்ன கிளவியின் தெளிபட – வத்தவ:10/19
துன்புறு கிளவியின் தொல் நலம் அழுங்க – நரவாண:3/156

TOP


கிளவியும் (2)

அறிய கூறிய அடையாண் கிளவியும்
செறிய செய்த சிறப்பும் ஆண்மையும் – உஞ்ஞை:56/184,185
சாயலும் கிளவியும் தம்மொடு நிகர்த்த – இலாவாண:12/117

TOP


கிளவியை (4)

அம் தீம் கிளவியை ஆண்மையில் பற்றி – உஞ்ஞை:43/39
கனி படு கிளவியை கையகப்படுத்து – உஞ்ஞை:57/6
தேன் நேர் கிளவியை தேடி அரற்ற – வத்தவ:6/15
தேன்_நேர்_கிளவியை திரு நாள் அமைத்து – வத்தவ:15/78

TOP


கிளவியொடு (4)

வழிமொழி கிளவியொடு வணக்கம் சொல்லி – உஞ்ஞை:36/47
அடையாண் கிளவியொடு அறிய கூறலும் – உஞ்ஞை:36/201
அவை புகழ்ந்து எடுத்த அரும்_பெறல் கிளவியொடு
தகை முடி வேந்தன் தாள் புகழ்ந்து ஏத்தி – உஞ்ஞை:37/54,55
பெரு முது கிளவியொடு பிறவும் பயிற்றி – மகத:12/85

TOP


கிளவியோடு (1)

எடுத்து இயல் கிளவியோடு ஏது காட்டி – உஞ்ஞை:35/142

TOP


கிளவீ (1)

தேன் நேர் கிளவீ சிறுமுதுக்குறைவீ – இலாவாண:18/83

TOP


கிளி (7)

பைம் கிளி காணாது பயிர்ந்து நின் கூஉம் – உஞ்ஞை:33/170
கிளி பயிர் அன்ன களி பயில் மழலை – உஞ்ஞை:35/196
பந்தும் பாவையும் பைம் கிளி கூடும் – உஞ்ஞை:38/173
பச்சை பால் கிளி பவழ செம் வாய் – உஞ்ஞை:52/21
கிளி வாய் அன்ன ஒளி வாய் உகிரின் – இலாவாண:15/76
கழனி காய் நெல் கவர் கிளி கடியும் – வத்தவ:8/41
கிளி என மிழற்றும் கிளவி கிளியின் – வத்தவ:11/72

TOP


கிளிக்கூடும் (1)

தெளித்து ஒளி பெறீஇய பளிக்கு கிளிக்கூடும்
அவரவர் மேயின அவ்வயின் அருளி – உஞ்ஞை:34/164,165

TOP


கிளியின் (2)

மதலை கிளியின் மழலை பாடலும் – உஞ்ஞை:48/164
கிளி என மிழற்றும் கிளவி கிளியின்
ஒளி பெறு வாயின் அன்ன ஒள் உகிர் – வத்தவ:11/72,73

TOP


கிளியும் (8)

பந்தும் கிளியும் பசும்பொன் தூதையும் – உஞ்ஞை:34/160
மயிலும் குயிலும் மந்தியும் கிளியும்
பயில் பூம் பொதும்பினும் பல் மலர் காவு-தொறும் – உஞ்ஞை:38/51,52
கிளியும் மயிலும் தெளி மொழி பூவையும் – உஞ்ஞை:57/38
தோகையும் கிளியும் தொக்கவை அகல – இலாவாண:12/118
பூவையும் கிளியும் யூகமும் மந்தியும் – இலாவாண:15/30
கிளியும் பூவையும் தெளி மணி அடை பையும் – மகத:5/76
ஆடு அமை பயிரும் அன்னமும் கிளியும்
பிறவும் இன்னன பறவையும் பறவா – மகத:14/279,280
மேதகு கிளியும் மெல் நடை அன்னமும் – வத்தவ:10/58

TOP


கிளை (15)

ஓர் இல் எழு கிளை உடன் தொக்கு ஈண்டி – உஞ்ஞை:35/135
மல்லல் பெரும் கிளை செல்வழி படர – உஞ்ஞை:38/260
கீழ் எழு செம் தீ கிளை பிரித்து அழற்ற – உஞ்ஞை:43/192
கிளை உடை பூசலோடு முளை அரில் பிணங்கிய – உஞ்ஞை:56/9
பெருமூதாளரும் பெரும் கிளை சுற்றமும் – உஞ்ஞை:57/17
பெறல்_அரும் பெரும் கிளை இறைகொண்டு ஈண்டி – இலாவாண:2/3
பிறந்த இல் பெரும் கிளை நிறைந்து ஒருங்கு ஈண்ட – இலாவாண:3/101
தாளே பெரும் கிளை தோளே துணைவி – இலாவாண:10/100
மகத மன்னனொடு மகள் கிளை ஆகி – மகத:1/25
முன் கிளை வேண்டுநர் மற்று அவர்க்கு இயைந்த – மகத:19/118
தந்தை பெரும் கிளை காரணமாக – மகத:19/130
கிளை பெரும் தொடர்ச்சியும் பயந்த இன்று எமக்கு என – மகத:24/8
வெகுளி தீயில் கிளை அற சுடுதல் – மகத:24/116
கிளை அல் மன்னர் கேளிர் சூழ – நரவாண:3/5
பேர் இனத்தவரொடு பெரும் கிளை பிரியா – நரவாண:8/132

TOP


கிளை-வயின் (1)

தளை-வயின் அகற்றலும் கிளை-வயின் பெயர்த்தலும் – உஞ்ஞை:47/133

TOP


கிளைக்கும் (1)

எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின் – உஞ்ஞை:40/155

TOP


கிளைஞர் (1)

தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி – உஞ்ஞை:38/98

TOP


கிளைஞரும் (1)

இளையவன் போலவும் கிளைஞரும் பிறரும் – உஞ்ஞை:46/313

TOP


கிளைஞரை (1)

ஒட்டா கிளைஞரை நட்பினுள் கெழீஇய – உஞ்ஞை:33/8

TOP


கிளைத்திட்ட (1)

யாறு செல் வம்பலர் சேறு கிளைத்திட்ட
உவலை கேணி அவல் அடுத்து உலாவவும் – உஞ்ஞை:52/68,69

TOP


கிளைத்திறம் (1)

கிளைத்திறம் பகருநர் தலைப்பெயல் அரிது என – உஞ்ஞை:36/142

TOP


கிளைப்பு (1)

குப்பை கிளைப்பு அறா கோழி போல்வர் – மகத:14/112

TOP


கிளைமை (3)

கிளைமை கூறி உளமை கொளீஇ – மகத:17/95
கூடிய கிளைமை குணம் பல கூறி – மகத:24/11
குருகுல கிளைமை கோடல் வேண்டி – வத்தவ:10/114

TOP


கிளையில் (1)

பெரு வலி கிளையில் கூடுவது போல – உஞ்ஞை:43/97

TOP


கிளையினும் (1)

கிளையினும் பிரித்தவன் கேடு தலை எய்தி – உஞ்ஞை:33/137

TOP


கிளையோ (1)

மாயாது இருப்பின் கிளையோ மற்று இவன் – மகத:19/122

TOP


கிளைஇ (1)

கயில் எருத்து இறைஞ்சி கால் நிலம் கிளைஇ
உருகும் நெஞ்சத்து உதயணகுமரனை – உஞ்ஞை:44/143,144

TOP


கின்னர (1)

கின்னர கீதத்து கேள்வி மாந்தர் – உஞ்ஞை:37/108

TOP


கின்னரர் (1)

கின்னரர் இட்டனராயினும் இயக்கர் – வத்தவ:3/97

TOP