பீ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பீடத்து (1)

பீடத்து இரீஇய பாடு அறிந்து ஏற்றி – மகத:22/207

TOP


பீடம் (1)

பீடம் காட்டலின் ஈடுபட இருந்து – இலாவாண:10/10

TOP


பீடிகை (4)

சந்தன பீடிகை சார்வு அணை ஏறி – உஞ்ஞை:37/15
பாத பீடிகை பக்கம் சேர்த்தலும் – உஞ்ஞை:38/241
பீடிகை நிரைத்த மாட மறுகில் – இலாவாண:2/91
ஈடு அமை பீடிகை பாடு பெற இருந்த – இலாவாண:3/28

TOP


பீடு (8)

பெருந்தகை கவரி அன்ன பீடு அழிந்து – உஞ்ஞை:35/234
பெருமகன் ஆடும் பீடு கெழு சிறப்பின் – இலாவாண:5/3
பெரும் படை கொற்றம் பீடு அழிந்து சுருங்கா – மகத:3/90
பெருமை பீடு அற நாடி தெருமந்து – மகத:7/19
பீடு கெழு தானை பிரச்சோதனற்கு – மகத:24/10
பெரும் குடி ஆக்கம் பீடு அற வெருளி – மகத:24/84
வருக வேந்தன் பெரு விறல் பீடு அற – மகத:25/114
பீடு உடை ஒழுக்கின் பிரச்சோதனன் மகள் – வத்தவ:6/26

TOP


பீடுடன் (1)

பீடுடன் பேரா பெரும் துறை எங்கும் – உஞ்ஞை:41/132

TOP


பீடுற (1)

இல் வழி வந்த தம் பெருமை பீடுற
தொல் வழி வயத்து தொடர்வினை தொடர – உஞ்ஞை:32/39,40

TOP


பீதக (1)

பாசிலை கட்டியும் பீதக பிண்டமும் – மகத:1/97

TOP


பீலி (6)

பீலி சுற்றிய வேணு வெண் காழ் – உஞ்ஞை:32/97
உழை கோடு அணிந்து பீலி நாற்றி – உஞ்ஞை:52/13
மணி கண் பீலி மா மயில் பேடை – உஞ்ஞை:53/153
மணி மயில் பீலி மா மயில் தொழுதி – இலாவாண:12/136
மணி இரும் பீலி மல்க உளரி – மகத:1/153
பாம்பின் தோலும் பீலி கண்ணும் – வத்தவ:12/47

TOP


பீலியும் (3)

கிடையும் பீலியும் இடை வரித்து அழுத்தி – உஞ்ஞை:40/7
மழுவும் குந்தமும் முழு மயில் பீலியும்
சங்கமும் கணையமும் சத்தியும் வாளும் – மகத:20/35,36
பீலியும் மயிரும் வாலிதின் வலந்து – வத்தவ:12/44

TOP