தை – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தைஇயும் (1)

செண்பக சோலை தண் தழை தைஇயும்
பேறு அரும் கற்பின் பிரச்சோதனன் மகள் – இலாவாண:14/36,37

TOP


தையல் (2)

தளை அவிழ் கோதை தையல் இவள் எனும் – மகத:6/154
தன்-வயின் தாழ்ந்த தையல் நிலைமை – மகத:8/88

TOP


தையல்-தான் (1)

மையல் ஒழிக்க தையல்-தான் மற்று – வத்தவ:14/134

TOP


தையலர் (1)

தார் பூம் பேடை தையலர் எடுத்த – உஞ்ஞை:40/247

TOP


தையலீர் (1)

தாழ்தரும் வலி-மின் தையலீர் என – உஞ்ஞை:41/47

TOP


தையலுக்கு (1)

தாது அலர் கோதை தையலுக்கு இசைத்து அவள் – வத்தவ:8/20

TOP


தையலும் (3)

தனிமை எய்திய மன்னனும் தையலும்
அணியும் கலனும் அகன் பரியாளமும் – உஞ்ஞை:56/200,201
தாயும் தையலும் தீ உண விளிந்தமை – இலாவாண:19/57
தன் அலது இலளே தையலும் தானும் – வத்தவ:10/125

TOP


தையலை (1)

தன் ஒளி சுடரும் தையலை அ வழி – மகத:6/8

TOP


தைவந்து (2)

குளிர்ப்ப தைவந்து அளித்தல் ஆனான் – உஞ்ஞை:53/39
தைவந்து அளித்து தக்கது செய்தோய் – நரவாண:3/160

TOP


தைவர (1)

தெய்வ நல் யாழ் திருந்து_இழை தைவர
மெய் பனிபது போல் மொய் அவை மருள – உஞ்ஞை:37/113,114

TOP


தைவரற்கு (1)

தைவரற்கு இயைந்த தான் பயில் வீணையை – உஞ்ஞை:36/365

TOP