பூ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 80
பூ_மகள் 1
பூங்காவின் 1
பூங்காவும் 1
பூச்சு 3
பூசல் 7
பூசலில் 2
பூசலின் 1
பூசலும் 3
பூசலொடு 1
பூசலோடு 2
பூசனை 3
பூசி 5
பூசிய 1
பூசினர் 1
பூசினும் 1
பூசுபு 1
பூசும் 1
பூட்ட 2
பூட்டி 8
பூட்டிய 1
பூட்டிய-காலை 1
பூட்டு 1
பூட்டுதல் 1
பூட்டுதும் 1
பூட்டுறு 1
பூண் 71
பூண்ட 19
பூண்டமை 1
பூண்டன 1
பூண்டனர் 1
பூண்டனை 1
பூண்டு 1
பூணி 2
பூணியும் 1
பூணும் 11
பூணொடு 1
பூத்த 2
பூத்தது 2
பூத்து 2
பூதத்து 2
பூதமும் 1
பூதி 2
பூதியும் 1
பூப்ப 1
பூம் 213
பூம்_குழை 1
பூம்_தொடி 1
பூமலி 1
பூமி 6
பூமிக்கு 1
பூமியில் 1
பூமியின் 1
பூமியும் 4
பூமியுள் 2
பூரண 6
பூரணகுண்டலன் 1
பூரணம் 1
பூவின் 2
பூவினுள் 2
பூவும் 5
பூவே 1
பூவையும் 5
பூவொடு 2
பூழி 2
பூழியுள் 1
பூழியொடு 1
பூளை 2
பூளையும் 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பூ (80)

தொடர் பூ மாலை கடை பல போகி – உஞ்ஞை:33/2
பூ தின் யாக்கை – உஞ்ஞை:33/67
பூ கண் மலர புலம்பிய பொய்கை – உஞ்ஞை:33/210
புரிதார் நெடுந்தகை பூ அணை வைகிய – உஞ்ஞை:34/5
பூ நறும் தேறல் பொலன் வள்ளத்து ஏந்தி – உஞ்ஞை:35/177
பூ மென் சேக்கையுள் புனை_இழை புகீஇ – உஞ்ஞை:36/128
புகழ்வனை ஆகி பூ கொண்டு எறிந்த பின் – உஞ்ஞை:36/193
பூ மலி சேக்கையுள் புகுத்தினென் போந்தேன் – உஞ்ஞை:36/319
பூ பெய் செப்பும் புகை அகில் அறையும் – உஞ்ஞை:38/165
புயல் மலை தொடுத்து பூ மலர் துதைந்து – உஞ்ஞை:38/271
பூ செய் கோலத்து பொலிந்த பொன் படை – உஞ்ஞை:38/296
தனி பூ பிடித்த தட கையன் ஆகி – உஞ்ஞை:38/309
அறிநர் தானத்து ஆயிரம் பொன் பூ
கருவி நிலை பள்ளிக்கு தொழுதனன் போக்கி – உஞ்ஞை:39/17,18
கோ தொழில் இளையர் பூ பலி கொடுத்து – உஞ்ஞை:39/22
பூ போது உறுத்த மீ பொன் கிண்கிணி – உஞ்ஞை:39/33
புயல் சேண் நீங்கினும் பூ வளம் குன்றா – உஞ்ஞை:39/62
புனல்-பால் பட்டன்றால் பூ நகர் புரிந்து என் – உஞ்ஞை:39/86
மகிழ் பூ மாலையொடு மருது இணர் மிடைந்த – உஞ்ஞை:40/110
பூ தூர் நிலையோடு யாப்புற அமைத்து – உஞ்ஞை:42/32
பொங்கு மலர் தவிசில் பூ மிசை ஆயினும் – உஞ்ஞை:42/103
பூ பெரும் பந்தர் நூல் திரை வளைஇய – உஞ்ஞை:44/15
தலை பூ நறு நீர் சிறப்பு முந்துறீஇ – உஞ்ஞை:47/196
பொம்மென உயிர்க்கும் பூ நுதல் பாவையை – உஞ்ஞை:48/80
புகர் பூ அவரையும் பொங்கு குலை பயறும் – உஞ்ஞை:49/106
வெண் பூ முசுண்டை பைம் குழை மேய – உஞ்ஞை:49/113
பொதி அவிழ் பூ மரம் பொதுளிய சோலை – உஞ்ஞை:51/5
செந்தளிர் இருப்பை பைம் துணர் வான் பூ
தீம் சுவை நசைஇய தூங்கு சிறை வாவல் – உஞ்ஞை:52/70,71
பூ மலர் கோதையும் பொறை என அசைவோள் – உஞ்ஞை:53/134
கார் பூ நீலம் கவினிய கலி துறை – உஞ்ஞை:53/172
புடை இடு பூளை பூ புறம் மடுத்து – உஞ்ஞை:56/19
பொலிக வேல் வலம் புணர்க பூ_மகள் – இலாவாண:2/40
புலந்தோர் பரிந்த புது பூ மாலையும் – இலாவாண:2/97
பொன் அணி மாலை பொலிந்த பூ முடீஇ – இலாவாண:3/73
வண்ண பூ முடி வாசவதத்தையை – இலாவாண:3/74
கோ வீற்றிருப்புழி பூ வீற்றிருந்த – இலாவாண:4/21
பொங்கு மயிர் தவிசொடு பூ மலர் புனைஇ – இலாவாண:4/99
பூ புரி மாடத்து போற்று என புகாஅ – இலாவாண:6/4
வெண் பூ நிரந்த வீதியுள் இயங்கி – இலாவாண:6/18
பூ வளம் கவினிய பொழில் உஞ்சேனை – இலாவாண:8/101
பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள – இலாவாண:9/65
பூ இரும் கூந்தல் புல்லென விரிய – இலாவாண:10/114
பூ மலர் பொதுளிய புனல் வரை சோலை – இலாவாண:11/28
தேனில் பூ நகர் புல்லென – இலாவாண:12/40
சுனை பூ குற்றும் சுள்ளி சூடியும் – இலாவாண:12/129
சினை பூ அணிந்தும் கொடி பூ கொய்தும் – இலாவாண:12/130
சினை பூ அணிந்தும் கொடி பூ கொய்தும் – இலாவாண:12/130
முரிந்து ஏந்து புருவம் பொருந்திய பூ நுதல் – இலாவாண:15/87
புகழப்பட்ட பூ மர காவினுள் – இலாவாண:15/102
பூ கண் போழும் புள்ளின் புலம்பி – இலாவாண:18/67
பூ அடர் மிதிப்பினும் புகைந்து அழலுறூஉம் – இலாவாண:19/183
தேவியை இழந்து பூ இதழ் சோலை – மகத:1/20
புதிதின் கொண்ட பூ கவின் வேழம் – மகத:1/34
பூ குழை மாதரை மீட்டனம் கொண்டு – மகத:1/80
ஏர் இலவங்கம் தீம் பூ ஏலம் – மகத:1/116
சாத்து கோயும் பூ தகை செப்பும் – மகத:5/78
ஏற்ப முடித்து பூ பிறிது அணியாள் – மகத:9/64
எள் பூ நிறத்தொடு கண் காமுறுத்தும் – மகத:12/71
பூ வீழ் கொடியும் பொலிவு இலவாக – மகத:13/61
நோக்கி கொண்டே பூ கமழ் தாரோன் – மகத:15/33
பூ புரி முற்றம் பொலிய புகுந்து – மகத:18/41
பூ அலர் தாரோய் புனை கழல் நோன் தாள் – மகத:21/47
புலவியின் நடுங்கி பூ புரை நெடும் கண் – மகத:24/171
கோபுரம்-தோறும் பூ மழை பொழிய – வத்தவ:1/24
பூ மலி புறவின் புண்டரம் குறுகி – வத்தவ:4/97
வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ
அம் கண் வரைப்பின் அமர் இறை அருள் வகை – வத்தவ:5/75,76
பூ எனப்படுவது பொருந்திய புணர்ச்சி நின் – வத்தவ:5/110
புணர்ச்சி பல் பூ இணர் தொகை ஈன்று – வத்தவ:9/75
நோக்குநர் மகிழ பூ குழல் முடித்தும் – வத்தவ:12/87
கோசலத்து அரசன் கோமகள் பூ அணி – வத்தவ:12/165
பூ வீழ்த்து எழுப்பி புறங்கையின் மற்றவை – வத்தவ:12/181
பூ கமழ் குழலி புகுந்து அடி வணங்கலின் – வத்தவ:13/26
பூ தொழில் மருவியது புகர்-வயின் அணைந்தோர்க்கு – வத்தவ:14/51
கற்று அறி வித்தகன் பொன் பணி வெண் பூ
கோவை தந்தம் மேவர சேர்த்தி – வத்தவ:14/64,65
பூ விரிந்து அன்ன போது அமர் தடம் கண் – வத்தவ:15/7
திரு முகம் சுடர பூ பிறிது அணியாள் – வத்தவ:15/14
பூ தோய் மாடமும் புலி முக மாடமும் – வத்தவ:15/108
பூ புரி வீதி பொலிய புகுந்து – வத்தவ:17/19
பூ விரி கூந்தல் பொங்கு இள வன முலை – வத்தவ:17/108
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ
கொள் வழி எழுதிய கொடுஞ்சி உடை தேர் – நரவாண:1/93,94
வெள்ளிய நறும் பூ தந்தனள் விளங்கு_இழை – நரவாண:3/202

TOP


பூ_மகள் (1)

பொலிக வேல் வலம் புணர்க பூ_மகள்
மலிக மண்_மகள் மன்னுக மன்னவன் – இலாவாண:2/40,41

TOP


பூங்காவின் (1)

மனை பூங்காவின் மருங்கில் கவினிய – மகத:7/13

TOP


பூங்காவும் (1)

தண் பூங்காவும் தலைத்தோன்று அருவிய – உஞ்ஞை:33/4

TOP


பூச்சு (3)

கலம் பூச்சு அரவத்து இலஞ்சி முற்றத்து – உஞ்ஞை:40/128
வாய்மைக்கு ஒத்த வாய் பூச்சு இயற்றி – உஞ்ஞை:53/87
மந்திர விதியின் வாய்_பூச்சு இயற்றி – இலாவாண:4/150

TOP


பூசல் (7)

பூசல் கிளவி சே_இழை பயிற்ற – உஞ்ஞை:35/155
புதை_வாள் உரீஇ பூசல் விளைத்தலும் – உஞ்ஞை:43/114
பூசல் உண்டு எனலும் பொறை உயர் மா மலை – உஞ்ஞை:44/20
ததும்பு குரல் பூசல் இரங்குவன ஒலிப்ப – உஞ்ஞை:53/168
போரகத்து எழுந்த பூசல் வினைஞர் – உஞ்ஞை:58/3
பூசல் கொண்டு புறங்கடை புரளும் – இலாவாண:18/89
கால் வல் இளையர் பூசல் வாயா – மகத:27/4

TOP


பூசலில் (2)

புலை_மகன் அறைய பூசலில் போந்தேன் – உஞ்ஞை:36/189
புற நகர் எல்லாம் பூசலில் துவன்றி – மகத:17/69

TOP


பூசலின் (1)

ஆகுல பூசலின் அஞ்சுவனள் எழவும் – மகத:24/190

TOP


பூசலும் (3)

புற மதில் சேரி பூசலும் ஆர்ப்பும் – உஞ்ஞை:44/2
ஓசை அறியா பூசலும் புலம்பும் – உஞ்ஞை:46/336
ஆகுல பூசலும் அழலும் மற்று இவை – உஞ்ஞை:47/185

TOP


பூசலொடு (1)

கோயில் மகளிர் ஆகுல பூசலொடு
வாயிலும் தகைப்பும் அறியார் மயங்கவும் – மகத:24/199,200

TOP


பூசலோடு (2)

ஊளை பூசலோடு ஆடல் கண்டு உவந்தும் – உஞ்ஞை:55/65
கிளை உடை பூசலோடு முளை அரில் பிணங்கிய – உஞ்ஞை:56/9

TOP


பூசனை (3)

ஆசு_அறு நறு நீர் பூசனை கொளீஇ – இலாவாண:4/171
பூசனை வழக்கொடு புரை அவை நடுவண் – மகத:19/5
வந்தனை செய்குநர் பூசனை களரியும் – நரவாண:4/121

TOP


பூசி (5)

வாச வெண்ணெய் பூசி புனைந்த – உஞ்ஞை:57/86
திருத்தி அணிந்து மருப்பு நெய் பூசி
சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி – உஞ்ஞை:58/69,70
வாச நறும் சாந்து வகைபெற பூசி
மாசு_இல் திரு_மகள் வண்ணம் பழிப்பதோர் – இலாவாண:5/181,182
கோல் நெய் பூசி தூய்மையுள் நிறீஇ – மகத:14/110
நீறு மெய் பூசி நெடிய மயிர் களை – வத்தவ:14/67

TOP


பூசிய (1)

நறு வெண் சாந்தம் பூசிய கையால் – நரவாண:8/97

TOP


பூசினர் (1)

வாச வெண் நெய் பூசினர் போற்றி – இலாவாண:5/101

TOP


பூசினும் (1)

ஒரு நாள் பூசினும் ஓர் யாண்டு விடாஅ – இலாவாண:5/98

TOP


பூசுபு (1)

பூசுபு புலரா யாக்கையொடு பெயரிய – இலாவாண:8/145

TOP


பூசும் (1)

பூவும் நானமும் பூசும் சாந்தமும் – மகத:13/24

TOP


பூட்ட (2)

உள்ள ஊர்தி ஊக்கம் பூட்ட
கள்ள காதல் தாங்கினள் ஆகி – இலாவாண:20/50,51
இற்பெரும் கிழமையொடு கற்பு கடம் பூட்ட
வரையும் வாயில் தெரியும் சூழ்ச்சியுள் – மகத:21/7,8

TOP


பூட்டி (8)

கடை மணை பூட்டி கணிகையில் விட்டு – உஞ்ஞை:36/33
மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை – உஞ்ஞை:36/160
கை புனை பாண்டியம் கட்டளை பூட்டி
வையம் தரூஉம் வயவர் அரவமும் – உஞ்ஞை:41/107,108
வையம் பூட்டி வழிவரல் விரைந்து என் – உஞ்ஞை:54/127
கண்ணி சூட்டி கடை மணை பூட்டி
வண்ண மகளிர் கண்ணுற கவினிய – உஞ்ஞை:56/195,196
பார்படு முத்தொடு தார் உடன் பூட்டி
ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர் – இலாவாண:2/197,198
பயந்த புதல்வரை படு நுகம் பூட்டி
வளைவித்து ஆரும் வாயில் நாடி – வத்தவ:15/32,33
அடைந்து வில் இமைப்ப அணி பெற பூட்டி
கல் உண் கலிங்கம் நீக்கி காவலன் – வத்தவ:16/32,33

TOP


பூட்டிய (1)

வெண் துகில் பூட்டிய வேழ குழவியும் – உஞ்ஞை:39/74

TOP


பூட்டிய-காலை (1)

போக பெரு நுகம் பூட்டிய-காலை
மாக விசும்பின் மதியமும் ஞாயிறும் – இலாவாண:9/183,184

TOP


பூட்டு (1)

பூண்ட பாண்டியம் பூட்டு முதல் விட்ட பின் – மகத:6/4

TOP


பூட்டுதல் (1)

இன்பம் துடைத்து அவற்கு இறைக்கடம் பூட்டுதல்
நிம் கடன் ஆம் என நினைந்து நெறி திரியாது – இலாவாண:9/236,237

TOP


பூட்டுதும் (1)

குற்றம் காட்டி கொலை கடம் பூட்டுதும்
தெற்றென நின்-வயின் தெளிந்தனராகி – மகத:25/103,104

TOP


பூட்டுறு (1)

பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன் – உஞ்ஞை:36/331

TOP


பூண் (71)

பட்டு உடை தானை பைம் பூண் சுடர – உஞ்ஞை:34/207
கொடும் பூண் மார்பில் கூந்தல் பரப்பி – உஞ்ஞை:37/244
இலை பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து – உஞ்ஞை:40/143
பொலன் கலம் மணி பூண் பொலிய புல்லி அவள் – உஞ்ஞை:40/180
மின் அவிர் மணி பூண் மன்னவன் மட மகள் – உஞ்ஞை:40/366
மணி உமிழ்ந்து இமைக்கும் வயங்கு கொடி பைம் பூண்
முத்தொடு முரணி தத்தும் ஆகத்து – உஞ்ஞை:41/53,54
புடை வீங்கு இள முலை பூண் பொறை ஆற்றாது – உஞ்ஞை:42/126
பூண் சேர் மார்பன் காண்பான் போல – உஞ்ஞை:43/88
முலை பூண் அழுத்திய மொய் சாந்து அகலம் – உஞ்ஞை:46/46
அடர் பூண் அகலத்து அரும் படை உற்று – உஞ்ஞை:46/52
நல் யாழ் நவிற்றிய நளி மணி கொடும் பூண்
உறு வரை மார்பின் உதயணகுமரன் – உஞ்ஞை:47/220,221
அணித்தும் அன்று அது மணி பூண் மார்ப – உஞ்ஞை:49/53
பெரும் பூண் பூணியும் பேழ் வாய் கொக்கும் – உஞ்ஞை:51/69
கச்சு ஆர் வன முலை கண் மணி கொடும் பூண்
பச்சை பால் கிளி பவழ செம் வாய் – உஞ்ஞை:52/20,21
மணியும் புரோசையும் அணி பூண் தவிசும் – உஞ்ஞை:53/33
மணி பூண் வன முலையிடை கரை புதைஇ – உஞ்ஞை:53/147
தார் பூண் மார்பில் தந்தை கடி மனை – உஞ்ஞை:54/22
சீர் பூண் களைந்த சில்லென் கோலமொடு – உஞ்ஞை:54/23
பூண் ஆர் ஆகத்து பொங்கு இள வன முலை – உஞ்ஞை:57/29
விறல் படை சூழ விளங்கு மணி பைம் பூண்
மற படை நோன் தாள் வத்தவர் பெருமகன் – உஞ்ஞை:58/1,2
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண்
சிலம்பு ஒலி சீறடி சென்று ஏந்து புருவத்து – இலாவாண:2/46,47
மண் ஆர் மணி பூண் மாதரை இரீஇய பின் – இலாவாண:3/156
கொடி பூண் திளைக்கும் கோல ஆகத்து – இலாவாண:4/11
வட்ட பெரும் பூண் வாசவதத்தையொடு – இலாவாண:4/25
முனைவர் வகுத்த புனை பூண் அகலத்து – இலாவாண:4/33
இலை பூண் கவைஇ முலை புறம் புதைஇ – இலாவாண:4/119
மண் ஆர் மணி பூண் மன்னனொடு மாதரை – இலாவாண:4/154
பூம் குழை மகளிர் புனை மணி பைம் பூண்
ஒளி பெற்று இலங்கும் உதயணகுமரன் – இலாவாண:7/79,80
இரு முலை பொன் பூண் இட-வயின் திருத்தா – இலாவாண:7/112
ஒளி மணி கொடும் பூண் உதயணகுமரனை – இலாவாண:8/52
மறு_இல் மணி பூண் மன்னவன் உள்வழி – இலாவாண:8/128
தமனிய பைம் பூண் தம் இறைக்கு இயன்ற – இலாவாண:8/169
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை நினைந்து – இலாவாண:11/2
பொன் அணி பைம் பூண் புதல்வன் தான் இவன் – இலாவாண:11/132
வாள் மணி கொழும் பூண் வாசவதத்தையும் – இலாவாண:14/57
பொறி பூண் ஆகத்து புல்லுவனன் ஒடுக்கி – இலாவாண:16/66
பூண் வடு பொறிப்ப புல்லு-வயின் வாராள் – இலாவாண:16/87
பொம்மென் முலையொடு பொன் பூண் நெருங்க – இலாவாண:16/98
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை குருசிலை – இலாவாண:17/13
முற்பட தோன்றிய முகை பூண் மார்பன் – இலாவாண:17/125
பூண் அணியுள்ளும் மாண் அணி உடையவை – இலாவாண:19/123
மணி பூண் மாதரும் மனம் புரி தோழனும் – இலாவாண:20/72
அரு மணி பைம் பூண் அரசகத்து அடைந்து – மகத:3/106
இலை பூண் திளைக்கும் ஏந்து இள முலையள் – மகத:5/22
புதை பூண் வன முலை போகம் பெறுக என – மகத:6/119
பொன் பூண் முலை மிசை அப்புபு தடாஅ – மகத:9/90
பொன் பூண் மாதரை பொருந்த வலிப்ப – மகத:10/14
மகதவன் தங்கை மணி பூண் வன முலை – மகத:10/38
கூப்புபு பணிந்த கொடும் பூண் குருசிலை – மகத:16/34
பூண் ஏற்று அகன்ற புடை கிளர் அகலத்து – மகத:20/62
பத்தி பைம் பூண் பதுமா நங்கை – மகத:20/180
மணி பூண் மார்பன் வத்தவ மன்னனொடு – மகத:21/13
நாணி நின்றோளை நின் பூண் இள வன முலை – மகத:22/117
பூண் தயங்கு இள முலை புனை வளை தோளி – மகத:22/166
சுற்றம் ஆதலின் சுடர் பூண் உதயணன் – மகத:23/16
பத்தி பைம் பூண் சத்தியகாயனொடு – மகத:23/28
எழுந்த மன்னன் செழும் பூண் அகலத்து – மகத:24/167
மணி தகை பைம் பூண் மகதவர் கோமான் – மகத:25/78
மணி பூண் கண்ணியர் மரபு அறி மாந்தர் – வத்தவ:1/37
இலங்கு கதிர் இலை பூண் ஏந்து முலை ஆகத்து – வத்தவ:5/95
பல் பூண் சில் சொல் பட்ட தேவியை – வத்தவ:6/24
மணி பூண் மார்பன் பணி தொழில் அன்மை – வத்தவ:7/204
பூண் கலம் இன்மையின் புல்லென கூப்பி – வத்தவ:7/210
பொன் பூண் வன முலை பொருந்த புல்லி – வத்தவ:8/22
பிறை பூண் அகலத்து பெருமகன் அவன்-மாட்டு – வத்தவ:10/25
பூண் திகழ் கொங்கை புயல் ஏர் கூந்தல் – வத்தவ:12/265
கயில் பூண் கோதை அயிர்த்தனள் இருப்ப – வத்தவ:13/166
மணி பூண் வன முலை வாசவதத்தை – வத்தவ:15/83
பறத்தல் ஊற்றம் பிறப்ப பைம் பூண்
சிறப்பொடு புணர்ந்த சே இழை மாதர் – நரவாண:1/175,176
பூண் தாங்கு அகலத்து புரவலன் குறுகி – நரவாண:4/34
பொறி பூண் மார்பில் புதல்வன் பயந்தனள் – நரவாண:7/35

TOP


பூண்ட (19)

மல்லர் பூண்ட மாட சிவிகை – உஞ்ஞை:38/255
கலம் கொடை பூண்ட கையர் ஆகி – உஞ்ஞை:39/73
புரவி பூண்ட பொன் நுக கொடுஞ்சி – உஞ்ஞை:48/15
போர்_கடம்_பூண்ட பொரு வலி தட கையின் – உஞ்ஞை:53/91
புதை குப்பாயத்து பூண்ட வாளின் – உஞ்ஞை:58/24
காவல் பூண்ட கடத்தினும் விரும்பி – இலாவாண:13/34
கச்சு பிணியுறுத்து கண்டகம் பூண்ட
அச்சுறு நோக்கின் அறுபது கழிந்த – மகத:5/108,109
பூண்ட பாண்டியம் பூட்டு முதல் விட்ட பின் – மகத:6/4
பூண்ட ஆகத்து பூம் துகில் அல்குல் – மகத:8/54
மாண் தகு கிளவி பூண்ட நோன்பிற்கு – மகத:13/20
பூண்ட பூணொடு பொறை ஒன்று ஆற்றேன் – மகத:14/149
பெருமகன் உள்ளத்து உரிமை பூண்ட என் – மகத:22/135
செம் கால் பாண்டியம் நன்று பூண்ட
பைம்பொன் ஊர்தியும் பவழ கட்டிலும் – மகத:23/34,35
அரும் கடம் பூண்ட அவியா காதலொடு – மகத:24/85
பொன் அணி புனை தார் புரவி பூண்ட
ஐம்பது தேரும் ஆயிரம் குதிரையும் – மகத:25/144,145
படிறு நீக்கும் படு நுகம் பூண்ட
குடிகட்கு எல்லாம் குளிர்ப்ப கூறி – வத்தவ:2/9,10
அரும் கடி நகரமும் நாடும் பூண்ட
பெரும் கடன் விடுக இரும் கடல் வரைப்பின் – நரவாண:6/51,52
கடம் பூண்ட பின் – நரவாண:7/38
கொடைக்கடம் பூண்ட கொள்கையன் ஆகி – நரவாண:8/43

TOP


பூண்டமை (1)

தனக்கு அவள் உரிமை பூண்டமை தமர்களை – மகத:9/146

TOP


பூண்டன (1)

தார் அணி புரவி தகை பெற பூண்டன
இருநூற்றைம்பதிற்று இரட்டி தேரும் – வத்தவ:11/29,30

TOP


பூண்டனர் (1)

பொறை கழி கோத்து பூண்டனர் ஆகி – மகத:3/58

TOP


பூண்டனை (1)

பூண்டனை ஆகுதல் பொருள் மற்று இது என – இலாவாண:19/25

TOP


பூண்டு (1)

பொழில் கண் விளக்கும் தொழில் நுகம் பூண்டு
புயல் மாசு கழீஇ புனிற்று நாள் உலவாது – உஞ்ஞை:33/54,55

TOP


பூணி (2)

பூணி இன்றியும் பொறியின் இயங்கும் – இலாவாண:8/177
பூணி இன்றி பொறி விசை கொளீஇ – இலாவாண:9/15

TOP


பூணியும் (1)

பெரும் பூண் பூணியும் பேழ் வாய் கொக்கும் – உஞ்ஞை:51/69

TOP


பூணும் (11)

அளகமும் பூணும் நீவி சிறிது நின் – உஞ்ஞை:33/163
பொரு வில் நாழிகை பூணும் ஆறும் – உஞ்ஞை:37/31
அக_வாய் கோடும் புற_வாய் பூணும்
பத்திர பந்தமும் சித்திர புளகமும் – உஞ்ஞை:58/48,49
இன மணி பூணும் ஏக வட்டமும் – இலாவாண:5/139
தாரும் பூணும் மார்பிடை துயல்வர – இலாவாண:10/110
புரி முத்தாரமும் பூணும் புரள – இலாவாண:18/100
இலை பெரும் பூணும் இதய வாசனையும் – இலாவாண:19/116
பல் மணி பூணும் சில் மணி தாலியும் – இலாவாண:19/118
சிப்ப பூணும் செம்பொன் கடிப்பும் – மகத:9/66
உத்தி பூணும் உளப்பட பிறவும் – மகத:17/166
பொன் மணி கொடியும் பூணும் சுடர – நரவாண:8/50

TOP


பூணொடு (1)

பூண்ட பூணொடு பொறை ஒன்று ஆற்றேன் – மகத:14/149

TOP


பூத்த (2)

ஈத்ததும் அமையாய் பூத்த கொம்பின் – இலாவாண:16/92
திருவொடு பூத்த நாள் வரை இறந்த பின் – நரவாண:1/61

TOP


பூத்தது (2)

பசும்பொன் நகர் அமர் விசும்பு பூத்தது போல் – உஞ்ஞை:54/19
பசும்பொன் புளகம் விசும்பு பூத்தது போல் – உஞ்ஞை:57/26

TOP


பூத்து (2)

மாசு_இல் சிறப்பின் வான் பூத்து அன்ன – இலாவாண:12/2
பொன் பூத்து அன்ன அம் பூம் பசப்பொடு – மகத:6/22

TOP


பூதத்து (2)

பொரு_இல் பூதத்து உருவுபட வரீஇ – இலாவாண:6/51
பெரு வலி பூதத்து உருவு கண்டு உணரார் – நரவாண:8/60

TOP


பூதமும் (1)

வெண் தார் ஒழுக்கும் விளக்குறு பூதமும்
தெரிவுறல் அரிய பல கல குப்பையும் – நரவாண:8/25,26

TOP


பூதி (2)

பொரு_இல் மாக்கள் பூதி என்று உரைஇ – நரவாண:6/114
தகை மிகு பூதி தவந்தகன் என்னும் – நரவாண:8/36

TOP


பூதியும் (1)

பூதியும் மண்ணும் பொத்தக கட்டும் – உஞ்ஞை:36/225

TOP


பூப்ப (1)

அரத்தகம் பூப்ப அலமந்து எழலும் – உஞ்ஞை:42/132

TOP


பூம் (213)

வெயில் கண் போழா பயில் பூம் பொதும்பில் – உஞ்ஞை:33/27
தளி பூம் கொம்பர் விளிப்பது நோக்கியும் – உஞ்ஞை:33/31
படைஅகத்து ஓங்கிய பல் பூம் சேக்கை – உஞ்ஞை:33/107
பொன் செய் ஓலையொடு பூம் குழை நீக்கி – உஞ்ஞை:34/198
பொன் கால் படுத்து பூம் துகில் வளைஇ – உஞ்ஞை:34/244
ஆங்கு இனிது இருந்த போழ்தில் பூம்_குழை – உஞ்ஞை:35/116
பூம் குழை மகளிர் புலவி கொள் திரு முகம் – உஞ்ஞை:35/200
பூம் துகில் தானை பற்றி காய்ந்தது – உஞ்ஞை:35/202
குவி பூம் கை_இணை கூப்பி திரு குழல் – உஞ்ஞை:35/206
பல் பூம் கோதாய் பள்ளி கொண்டு அருள் என – உஞ்ஞை:36/127
பயில் பூம் கொம்பர் பந்தர் முன் இழிந்து – உஞ்ஞை:36/133
உதிர் பூம் புன்கின் ஒருசிறை இரீஇ – உஞ்ஞை:36/140
பயில் பூம் பொதும்பினும் பல் மலர் காவு-தொறும் – உஞ்ஞை:38/52
புள் ஒலி பொய்கை பூம் துறை முன்னி – உஞ்ஞை:38/277
பனி பூம் குவளை பயத்தின் வளர்த்த – உஞ்ஞை:38/308
பொன் தொடர் பொலிந்த பூம் துகில் கச்சைய – உஞ்ஞை:38/332
பொங்கு இரும் புன்னை பூம் பொழில் முன்னி – உஞ்ஞை:40/22
பூம் குழை மாதர் புனலகம் புக்கனள் – உஞ்ஞை:40/26
புரை பூம் கொண்டையில் புகைப்பன காண்-மின் – உஞ்ஞை:40/107
அவிழ் பூம் கோதையோடு அவிர் இழை பொங்க – உஞ்ஞை:40/111
பனி பூம் குவளையொடு பாதிரி விரைஇ – உஞ்ஞை:40/123
பூம் புனல் மடந்தையை புணர்ந்து விளையாடி – உஞ்ஞை:40/202
தார் பூம் பேடை தையலர் எடுத்த – உஞ்ஞை:40/247
வெள்ளி பூம் தார் எள்ளும் தோற்றத்து – உஞ்ஞை:40/250
புலவி நோக்கத்து பூம்_தொடி புலம்பி – உஞ்ஞை:40/327
நங்கை ஆடும் பொங்கு புனல் பூம் துறை – உஞ்ஞை:40/368
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி – உஞ்ஞை:41/5
போதின் புனைந்த பூம் பொறி வளையம் – உஞ்ஞை:41/11
பூம் புனல் ஆடு-தொறும் புலம்பும் புதல்வரை – உஞ்ஞை:41/86
புனலகம் மூழ்கி பூம் துகில் களையார் – உஞ்ஞை:41/92
மட்ட பூம் துகில் கட்டளை கச்சையர் – உஞ்ஞை:41/98
வண்ணம் கொளீஇய நுண் நூல் பூம் படம் – உஞ்ஞை:42/34
பூம் தார் அணிந்த ஏந்தல் வெண் குடை – உஞ்ஞை:42/46
வல்லவன் எழுதிய பல் பூம் பத்தி – உஞ்ஞை:42/62
மலர் பூம் பந்தும் தலை தளிர் போதும் – உஞ்ஞை:42/67
கண்ட பூம் திரை மண்டபத்து இழைத்த – உஞ்ஞை:42/106
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ – உஞ்ஞை:42/145
நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை – உஞ்ஞை:42/148
பொதி பூம் பந்தின் எதிர் நீர் எறிந்தும் – உஞ்ஞை:42/191
செழும் பூம் பிணையல் அடக்குபு முடித்து – உஞ்ஞை:42/202
அவிழ்ந்த பூம் துகில் அங்கையின் அசைஇ – உஞ்ஞை:43/147
நகை பூம் கோதையொடு நான்ற கூந்தற்கு – உஞ்ஞை:43/148
உதிர் பூம் கொம்பின் ஒடுங்குவோரும் – உஞ்ஞை:44/26
பொறி அமை பேழையொடு பூம் துகில் தழீஇ – உஞ்ஞை:44/36
வீழ் பூம் கொடியின் விரைந்து செல்வோரும் – உஞ்ஞை:44/40
குயில் பூம் கோதையொடு குழல் குரல் வணரும் – உஞ்ஞை:44/142
நுகர் பூம் காமத்து நுதி முகம் உரிஞ்சி – உஞ்ஞை:45/7
நடுகல் அடுக்கலும் நறும் பூம் சாரலும் – உஞ்ஞை:46/272
ஆய் பூம் சேக்கையுள் அரு மணி சுடர – உஞ்ஞை:47/165
எலி பூம் போர்வையொடு மயிர் படம் விரித்து – உஞ்ஞை:47/179
ஆய்வனர் படுத்த அம் பூம் பள்ளியுள் – உஞ்ஞை:47/182
பொலம் பூம் குடத்தில் போற்றி தந்த – உஞ்ஞை:47/195
அம் பூம் தானை அடி முதல் தடவர – உஞ்ஞை:47/200
பூம் கொடி புனைந்த வீங்கு முலை ஆகத்து – உஞ்ஞை:47/218
இடு பூம் தாமம் இரும் கவுள் இசைஇ – உஞ்ஞை:48/26
நகை பூம் புறவில் பகல் துயில் அமரா – உஞ்ஞை:49/117
வரித்தார் அணிந்த விரி பூம் தொழுதி – உஞ்ஞை:49/118
ஆய் பூம் தில்லையும் அணி மாரோடமும் – உஞ்ஞை:50/31
பொதி கண் இறாஅல் பூம் புறம் புதைஇ – உஞ்ஞை:50/35
முதிர் பூம் காவின் உதிர் தாது அளைஇ – உஞ்ஞை:50/38
நறும் பூம் சோலை நாற்றம் கழுமிய – உஞ்ஞை:50/58
கொய் பூம் குறிஞ்சி கொழு நிலம் கைவிட்டு – உஞ்ஞை:51/2
வெண் பூம் கவள முனைஇ நெல்லி – உஞ்ஞை:52/66
புள் புகன்று உறையும் ஓர் பூம் பொக்கரணியை – உஞ்ஞை:53/79
பூம் போது அணிந்த வாங்கு கரை மருங்கின் – உஞ்ஞை:53/93
பொன் தார் வேந்தன் பூம் கொடி பாவையை – உஞ்ஞை:53/125
கடி தக பூம் படை கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/140
நீர் பூம் பொய்கை நெறியின் கண்டு அதன் – உஞ்ஞை:53/173
பூம் பொறி பெடையை புலவி உணர்த்தி – உஞ்ஞை:54/15
பொறி பூம் பள்ளி புகாஅது அயல – உஞ்ஞை:54/16
பனி_பூம்_கோதையொடு தனித்தனம் இயங்கின் – உஞ்ஞை:54/52
புலர்ந்த காலை பூம் கழல் குருசில் – உஞ்ஞை:55/1
புகை மிகு வெவ் அழல் பூம் பொழில் புதைப்ப – உஞ்ஞை:56/27
பூம் குழல் குருசில் தேம் கொள தீண்ட – உஞ்ஞை:56/140
பொங்கு புகை கழுமிய பூம் பொழில் படாஅன் – உஞ்ஞை:56/215
சிங்காசனமும் பொங்கு பூம் தவிசும் – உஞ்ஞை:57/60
பொதி அவிழ் பூம் தார் புரவலன் தழீஇ – உஞ்ஞை:57/110
புகர் அணிந்து ஓங்கிய நெற்றி பூம் கவுள் – உஞ்ஞை:58/11
காஞ்சனமாலை பூம் புறத்து அசைஇ – உஞ்ஞை:58/73
விரித்த பூம் கொடி வேறு பல நுடங்க – இலாவாண:1/9
விடாஅ விளக்கு ஒளி வெண் பூம் தாமமொடு – இலாவாண:1/11
சதிர திண்ணை தண் பூம் பந்தருள் – இலாவாண:2/69
பயில் பூம் பத்தி குயில் புரை கொளுவின – இலாவாண:2/122
வயிர பல் அரி பயில் பூம் பத்தி – இலாவாண:2/125
தாங்க_அரும் பெண்ணை பூம் குலை அமுதமும் – இலாவாண:2/178
பொன் அணி கொண்ட பூம் தண் சிகழிகை – இலாவாண:2/224
பல் பூம் பந்தருள் செல்வம் சிறக்கும் – இலாவாண:3/11
வெண் பூம் பட்டின் திண் பிணி அமைந்த – இலாவாண:3/136
யாணர் பூம் துகில் அணிந்த அல்குல் – இலாவாண:4/118
கண்ட பூம் திரை காழ் முதல் கொளீஇ – இலாவாண:4/134
வரித்த பூம் கொடி விரித்து விசும்பு இவர – இலாவாண:5/20
கொற்றக்குடையும் பொன் பூம் குடமும் – இலாவாண:5/27
பூம் சுமடு இரீஇ போற்றுவனர் தந்த – இலாவாண:5/49
கூந்தல் சோர பூம் துகில் அசைஇ – இலாவாண:5/118
கோடி பூம் துகில் கொய்து விளிம்பு உரீஇ – இலாவாண:5/165
அடர் பூம் பாலிகை அடி முதல் குளீஇ – இலாவாண:6/45
பொன் பொலிந்து இயலும் பொங்கு பூம் தானை – இலாவாண:6/141
பூம் குழை மகளிர் புனை மணி பைம் பூண் – இலாவாண:7/79
அளி பெற்று அமர்ந்த அம் பூம் சேக்கையுள் – இலாவாண:7/81
பூம் போது அன்ன தேங்கு வளை தட கை – இலாவாண:7/85
புதுவது புனைந்த பூம் கொடி புரையும் – இலாவாண:7/163
பொரு முரண் அண்ணல் பூம் தார் அகலத்து – இலாவாண:8/85
பூம் தார் மார்பின் புரந்தர குமரனின் – இலாவாண:8/196
புள் ஒலி பொய்கையொடு பூம் துறை மல்கி – இலாவாண:9/3
போர் மாறு அட்ட பூம் கழல் மறவர் – இலாவாண:9/11
பூம் தார் மார்ப புலம்பு கொண்டு அழீஇ – இலாவாண:10/158
திகிரியும் தில்லையும் பயில் பூம் பயினும் – இலாவாண:12/17
பைம் கூதாளமும் வெண் பூம் சுள்ளியும் – இலாவாண:12/22
கொடி பூம் பந்தரிடை பரந்து இயன்ற – இலாவாண:12/32
பூம் தண் சாரல் பொங்கு குலை எடுத்த – இலாவாண:12/67
கொய் பூம் காந்தள் கொண்ட கையினர் – இலாவாண:12/70
வீழ் பூம் கொம்பின் வேங்கை நிரந்த – இலாவாண:12/98
ஆய் பூம் கானத்து ஆடினர் ஒருசார் – இலாவாண:12/99
மலர் பூம் சோலையும் திளைத்தல் ஆனார் – இலாவாண:12/151
பூம் கொடி கவரி புடைபுடை வீசி – இலாவாண:13/21
பூம் கண் பாவைக்கு பொன் கலம் இவை என – இலாவாண:14/22
உருவ பூம் தார் உதயணகுமரனும் – இலாவாண:14/55
பூம் குழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – இலாவாண:14/60
தண் பூம் தணக்கம் தமாலம் தகரம் – இலாவாண:15/15
ஒண் பூம் காந்தள் வெண் பூம் சுள்ளி – இலாவாண:15/16
ஒண் பூம் காந்தள் வெண் பூம் சுள்ளி – இலாவாண:15/16
பூம் துடுப்பு அன்ன முன்கையின் பொலிந்து – இலாவாண:15/74
மணி குருக்கத்தியும் மணி பூம் சுள்ளியும் – இலாவாண:15/105
அம் பூம் குடம் கை அக-வயின் அடக்கி – இலாவாண:15/108
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் – இலாவாண:15/126
பொன் பூம் கிண்கிணி புற அடி பிறழ – இலாவாண:16/8
நல் பூம் கொம்பர் நடைபெற்றாங்கு – இலாவாண:16/9
பூம் தாது ஒழுக்கம் சாந்தொடு திமிர்ந்து – இலாவாண:16/29
தளிர் பூம் கண்ணியும் தழையும் வீசியிட்டு – இலாவாண:16/30
ஒளி பூம் தாமம் உள் பரிந்து சிதறி – இலாவாண:16/31
புது தளிர் கொடுத்தும் பூம் புறம் நீவியும் – இலாவாண:16/76
தடம் கண் பிறழ தளர் பூம் கொடியின் – இலாவாண:17/87
பொருள் என கருதி பூம் குழை மடவோய் – இலாவாண:17/142
பூம் குழை மாதர் பொச்சாப்பு உணர்ந்து – இலாவாண:18/94
போது அணி கூந்தல் பொன் பூம் பாவை – இலாவாண:19/97
பூம் கொடி பொன் கலம் போழ்ந்து வடு பொறிப்ப – இலாவாண:19/110
பூம் குழல் மாதரொடு புகுந்தனர் ஆகி – இலாவாண:20/134
வெண் நூல் பூம் துகில் வண்ணம் கொளீஇ – மகத:1/95
அரும் பூம் கோதை பூம் தாது உண்டு அவள் – மகத:1/178
அரும் பூம் கோதை பூம் தாது உண்டு அவள் – மகத:1/178
அவிழ் பூம் கூந்தலுள் மகிழ் துயில்வு எய்தி – மகத:1/179
ஒண் பூம் காந்தள் உழக்கி சந்தனத்து – மகத:1/189
எழில் பூம் புன்னை பொழில் புடை நிவந்த – மகத:4/44
பூம் கள் முற்றிய புறத்து புடை ஆடி – மகத:4/53
பொருள் புரி அமைச்சர் பூம் கழல் குருசிலொடு – மகத:5/1
மதில் புறம் கவைஇய புது பூம் காவில் – மகத:5/29
உருவ பூம் கொடி ஒசிய எடுத்து – மகத:5/42
பொன் பூத்து அன்ன அம் பூம் பசப்பொடு – மகத:6/22
நீங்கிய எழுந்தோன் பூம் குழை மாதரை – மகத:6/37
தாது உகு புனை மலர் தண் பூம் காவினுள் – மகத:6/90
நறு மலர் காவினுள் துறுமிய பூம் துணர் – மகத:7/77
பூண்ட ஆகத்து பூம் துகில் அல்குல் – மகத:8/54
நின் கை கொண்ட பூம் பந்து என் கை – மகத:8/84
பூம் குழை மாதர் நோக்கிடை நோக்கி – மகத:8/129
தாமரை பொய்கையும் தண் பூம் கேணியும் – மகத:9/12
நல் பூம் பொய்கை புக்கு விளையாடும் – மகத:9/34
தண் பூம் கண்ணி கொண்டு அதன் தாள் முதல் – மகத:9/106
ஒண் பூம் சாந்தின் நுண் பொறி ஒற்றி – மகத:9/107
போயினள் புரவலன் பூம் தார் மார்பிற்கு – மகத:9/108
வாங்கினன் உடுத்து பூம் தண் சாந்தம் – மகத:9/131
பக்கம் நின்ற பொன் பூம் கோதையும் – மகத:9/140
புகழ் வரை மார்பின் பூம் தார் அண்ணல் – மகத:12/63
போந்தனள் ஆகி பூம் தண் கானத்துள் – மகத:13/13
பூம் படம் மறைய புக்கனன் ஒடுங்க – மகத:13/47
அணி பூம் சேக்கை அறை முதலாக – மகத:13/88
நிரப்பம் எய்திய நேர் பூம் பொங்கு அணை – மகத:14/61
பூம் புறம் கவவ புனை தார் ஓதி – மகத:14/148
தந்து கை கொடுக்கலும் தண் பூம் கொடி போல் – மகத:14/193
புரவியும் யானையும் பூம் கொடி தேரும் – மகத:16/15
எடுத்த பூம் கொடி இரும் கண் விசும்பகம் – மகத:16/20
வெண் பூம் துகிலும் செம் பூம் கச்சும் – மகத:17/127
வெண் பூம் துகிலும் செம் பூம் கச்சும் – மகத:17/127
அரை விரித்து அசைத்த அம் பூம் கச்சொடு – மகத:17/171
புக்க மெய்யினர் பூம் தார் மார்பின் – மகத:17/228
விரை மலர் பூம் கொடி வேறுபட உயரி – மகத:18/68
முற்றும் மறை பருமமொடு பொன் பூம் சிக்கத்து – மகத:20/20
நறு மலர் கோதையை நாள் பூம் காவினுள் – மகத:21/70
நீங்கல் செல்லான் பூம் கழல் உதயணன் – மகத:22/80
சிதர் பூம் காவும் சே இழை மாதர் – மகத:22/82
ஆங்கு அப்பொழுதே பூம் குழை உணர – மகத:22/147
ஆய் பூம் காவின் அந்தண உருவொடு – மகத:22/159
புகுதுக வத்தவன் என்றலின் பூம் தார் – மகத:22/256
புது மலர் கோதை பூம் தொடி பணை தோள் – மகத:22/266
பல் பூம் பட்டில் பரூஉ திரள் திரு மணி – மகத:22/280
பூம் கழல் தோழர் புடைபுடை ஆர்தர – மகத:27/141
புதுமண காரிகை பூம் குழை மாதர் – வத்தவ:5/3
பயில் பூம் பள்ளி துயிலெடை மாக்கள் – வத்தவ:5/81
தரு மணல் ஞெமரிய தண் பூம் பந்தருள் – வத்தவ:6/12
பயில் பூம் சேக்கையுள் பலரறிவு இன்றி – வத்தவ:6/77
ஆய் பூம் தட்டத்து அகத்தோடு தெற்றிய – வத்தவ:7/26
கூந்தல் முதலா பூம் புறம் நீவி – வத்தவ:7/47
மயங்கு பூம் சோலை மலை-வயின் ஆடி – வத்தவ:7/54
உறழ்பட செய்த ஒண் பூம் காவின் – வத்தவ:7/150
பூம் தண் மாலையொடு பொங்கு நூல் புரள – வத்தவ:7/182
பூம் தார் குழைய புல்லினன் பொருக்கென – வத்தவ:7/191
பூம் குழை மாதரை பொருக்கென தம் என்று – வத்தவ:7/198
விரி பூம் கொடியொடு விழவு அயர்ந்து இயற்றி – வத்தவ:7/234
பூம் துடுப்பு அன்ன புனை வளை முன்கை – வத்தவ:11/79
பூம் புனல் நுரையும் புரைய குத்தி – வத்தவ:12/48
பிடித்த பூம் பந்து அடித்து விசும்பு ஏற்றியும் – வத்தவ:12/68
பூம் குழை தோற்றத்து பொறாஅ நிலைமையள் – வத்தவ:12/168
பூம் தாதோடு சாந்துற கூட்டி – வத்தவ:13/62
பூம் தார் மார்பன் புகும் இடன் அறிக என – வத்தவ:13/169
பல் பூம் படாகை பரந்த நீழல் – வத்தவ:17/103
நிலா உறழ் பூம் துகில் ஞெகிழ்ந்து இடை தோன்ற – நரவாண:1/137
நுகர் பூம் காவும் நோக்குபு வருதற்கு – நரவாண:1/192
புனைவு அமை நகரமும் பூம் தண் காவும் – நரவாண:4/117
நல்லோர் எடுத்த பல் பூம் படாகை – நரவாண:6/67
புனை பொன் பூம் தார் புரவலன் காக்கும் – நரவாண:7/26
ஈற்று மந்தி இற்று எழு பூம் கொடி – நரவாண:8/50
துதை பூம் கோதை சுமத்தல் ஆற்றா – நரவாண:8/66
உலா என போந்தோன் நிலா உறழ் பூம் துகில் – நரவாண:8/80
பத்தி படாகையும் பல் பூம் கொடியும் – நரவாண:8/19

TOP


பூம்_குழை (1)

ஆங்கு இனிது இருந்த போழ்தில் பூம்_குழை
காமுறப்பட்ட சேணிக சிறு_தொழில் – உஞ்ஞை:35/116,117

TOP


பூம்_தொடி (1)

புலவி நோக்கத்து பூம்_தொடி புலம்பி – உஞ்ஞை:40/327

TOP


பூமலி (1)

கோமகள் ஆடும் பூமலி பெரும் துறை – உஞ்ஞை:43/90

TOP


பூமி (6)

சித்திர பூமி வித்தகம் நோக்கி – உஞ்ஞை:33/7
அரக்கு பூமி ஆயமொடு ஏறி – உஞ்ஞை:34/226
பூமி சுவர்க்கம் புறப்பட்டாங்கு – உஞ்ஞை:42/21
பொன் இயல் புரிசை ஓர் பெண் உறை பூமி
அவண் எதிர்ப்பட்டாஅங்கு இவணகம் விரும்பாது – மகத:24/58,59
பொள்ளென சென்னி பூமி தோய – மகத:24/100
பூமி தேவியின் புறம் போவனள் போல் – வத்தவ:12/184

TOP


பூமிக்கு (1)

பொரீஇ காணின் போக பூமிக்கு
இரு மடங்கு இனிது என பெரு நகர் உற்ற – இலாவாண:6/26,27

TOP


பூமியில் (1)

கமழ் கொள் பூமியில் கபிலை முன்நிறீஇ – உஞ்ஞை:34/16

TOP


பூமியின் (1)

போக பூமியின் பொன் நகர் பொலிய – வத்தவ:15/97

TOP


பூமியும் (4)

கரப்பு_அறை வீதியும் கள்ள பூமியும்
மரத்தினும் மண்ணினும் மதியோர் புணர்க்கும் – உஞ்ஞை:33/17,18
பளிக்கறை பூமியும் பந்து எறி களத்தும் – உஞ்ஞை:34/115
வாயில் மாடமும் வஞ்ச பூமியும்
இலவந்திகையும் இள மர காவும் – மகத:14/15,16
வள மலர் கயமும் மணி நில பூமியும்
மேதகு மேருவும் அதன் மிசை காவும் – நரவாண:4/123,124

TOP


பூமியுள் (2)

பந்து எறி பூமியுள் பாணி பெயர்ப்புழி – உஞ்ஞை:33/179
இடுக்கண் போதின் ஏம பூமியுள்
வகுத்த வாயில் வகைவகை இவை என – உஞ்ஞை:37/34,35

TOP


பூரண (6)

பொன்னின் அடைப்பையும் பூரண கலசமும் – உஞ்ஞை:32/73
பூரண பெரும் கடை தோரணம் நாட்டி – இலாவாண:1/7
பூரண பொன் குடம் பொலிய இரீஇ – இலாவாண:3/20
பூரண படிமை காண்டலானும் – இலாவாண:6/38
காரண கிளவி பூரண நோக்கின் – மகத:3/64
பூரண குண்டலன் என்னும் அமைச்சனொடு – மகத:26/84

TOP


பூரணகுண்டலன் (1)

பூரணகுண்டலன் தார் அணி மார்ப – மகத:27/81

TOP


பூரணம் (1)

பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறி – இலாவாண:6/159

TOP


பூவின் (2)

பின்னர் அ பூவின் பக்கம் நோக்கி – நரவாண:1/96
பொய்கை தாமரை பூவின் உறையும் – நரவாண:6/24

TOP


பூவினுள் (2)

பூவினுள் பிறந்த புனை_இழை போல – உஞ்ஞை:40/229
பூவினுள் பொலிந்த தாமரை போல – இலாவாண:5/126

TOP


பூவும் (5)

பொன் அகல் கொண்ட பூவும் புகையும் – உஞ்ஞை:34/185
பூவும் நானமும் பூசும் சாந்தமும் – மகத:13/24
பொய் வகை பூவும் வை எயிற்று அகல் வாய் – மகத:14/71
வாச பளிதமும் சோண பூவும்
குங்கும குற்றியும் கொழும் கால் கொட்டமும் – மகத:17/133,134
ஐ வகை பூவும் பல் வகை பரப்ப – நரவாண:6/28

TOP


பூவே (1)

பொங்கு நீர் பொய்கையில் பூவே போலவும் – நரவாண:1/168

TOP


பூவையும் (5)

கந்து இயல் மயிலும் கரந்து உறை பூவையும்
கண்ணியும் கழங்கும் கதிர் முலை கச்சும் – உஞ்ஞை:34/161,162
பாவையும் முற்றிலும் பூவையும் குழலும் – உஞ்ஞை:57/32
கிளியும் மயிலும் தெளி மொழி பூவையும்
செம்பொன் கரண்டமும் – உஞ்ஞை:57/38,39
பூவையும் கிளியும் யூகமும் மந்தியும் – இலாவாண:15/30
கிளியும் பூவையும் தெளி மணி அடை பையும் – மகத:5/76

TOP


பூவொடு (2)

புரிந்த பூவொடு பொன் சுணம் கழும – உஞ்ஞை:39/46
பூவொடு பொலியும் பொலிவிற்று ஆகி – மகத:3/109

TOP


பூழி (2)

பூழி படுத்த சாதனை அமைவின் – உஞ்ஞை:46/86
அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர் – மகத:27/115

TOP


பூழியுள் (1)

தோழியர் எல்லாம் பூழியுள் புரளவும் – உஞ்ஞை:46/293

TOP


பூழியொடு (1)

களிறு கால் உதைத்த புஞ்ச பூழியொடு
மான் துகள் அவிய மது_பலி தூவவும் – உஞ்ஞை:33/85,86

TOP


பூளை (2)

பூளை மெல் அணை பொதி அவிழ்ந்து அன்ன – உஞ்ஞை:40/333
புடை இடு பூளை பூ புறம் மடுத்து – உஞ்ஞை:56/19

TOP


பூளையும் (2)

கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் – உஞ்ஞை:43/186
கிடையும் பூளையும் இடை வரி உலண்டும் – வத்தவ:12/42

TOP