சு – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுகிர்ந்து 1
சுட்டி 8
சுட்டியின் 1
சுட்டு 1
சுட்டுறு 1
சுட 1
சுடர் 46
சுடர்ந்து 2
சுடர 18
சுடரின் 1
சுடரும் 7
சுடல் 1
சுடு 4
சுடுதல் 1
சுடுதலின் 3
சுடுதற்கு 1
சுடும் 1
சுடுவான் 1
சுண்ண 3
சுண்ணக 1
சுண்ணம் 4
சுண்ணமும் 8
சுண்ணமொடு 2
சுணங்கின் 2
சுணங்கு 2
சுணம் 1
சுதை 12
சுதை_இல் 1
சுந்தர 1
சும்மை 2
சும்மையும் 1
சும்மையொடு 7
சுமக்கற்கு 1
சுமக்கும் 2
சுமடு 1
சுமத்தல் 3
சுமந்த 9
சுமந்தனர் 1
சுமந்து 8
சுமந்துகொண்டு 1
சுமை 1
சுர 5
சுரத்து 1
சுரந்து 1
சுரம் 2
சுரமும் 1
சுரி 3
சுரிகையும் 3
சுரிந்த 1
சுருக்கம் 3
சுருக்கி 5
சுருக்கியும் 2
சுருக்கு 1
சுருக்கும் 2
சுருங்க 2
சுருங்கா 7
சுருங்காள் 1
சுருங்கி 3
சுருங்கிய 3
சுருங்கியும் 1
சுருங்கு 1
சுருங்குபு 1
சுருங்கை 2
சுருங்கையுள் 1
சுருட்டுபு 1
சுரும்பு 5
சுரும்பும் 2
சுருள் 2
சுருளிற்று 1
சுரை 2
சுவட்டு 1
சுவடி 1
சுவடு 2
சுவடு-தொறும் 1
சுவடும் 1
சுவடுறுத்து 1
சுவணம் 1
சுவணர் 1
சுவர் 10
சுவர்க்கம் 1
சுவல் 4
சுவன் 1
சுவேகமொடு 1
சுவை 17
சுவைக்கும் 2
சுவைத்து 4
சுவைப்பட 1
சுவையும் 2
சுவையொடு 1
சுழல் 4
சுழல 1
சுழலும் 4
சுழற்சியள் 1
சுழற்ற 1
சுழற்றி 1
சுழற்று 1
சுழன்றன 1
சுழன்று 4
சுழன்றும் 1
சுழி 8
சுழிப்பட்ட 1
சுள்ளி 4
சுள்ளியும் 4
சுளியுநள் 1
சுற்ற 9
சுற்றத்தவர் 1
சுற்றத்தார் 1
சுற்றத்து 5
சுற்றம் 6
சுற்றமும் 7
சுற்றமொடு 12
சுற்றாளரை 1
சுற்றி 2
சுற்றிய 2
சுற்றியதாக 1
சுற்றினும் 1
சுற்று 3
சுற்றுபு 3
சுற்றும் 1
சுறவு 2
சுனை 10
சுனை-தோறும் 2
சுனையும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சுகிர்ந்து (1)

பண்_அற சுகிர்ந்து பன்னுதல் இன்மையும் – மகத:15/41

TOP


சுட்டி (8)

திரு நுதல் சுட்டி திகழ சூட்டி – உஞ்ஞை:34/196
வாயில் சுட்டி வள நகர் அறிய – உஞ்ஞை:36/38
சுட்டி கலனும் சுண்ணக குற்றியும் – உஞ்ஞை:38/168
பாளை கமுகின் படுவும் சுட்டி
புயல் சேண் நீங்கினும் பூ வளம் குன்றா – உஞ்ஞை:39/61,62
சுட்டி சிதைய குட்டத்து குளித்து – உஞ்ஞை:40/102
சுட்டி சுண்ணமொடு மட்டித்து கலந்த – உஞ்ஞை:40/222
சுந்தர பொடியும் சுட்டி சுண்ணமும் – உஞ்ஞை:42/73
அறிவர் சரிதம் முறையில் சுட்டி
உரையும் ஓத்தும் புரையா புலமை – இலாவாண:2/134,135

TOP


சுட்டியின் (1)

சுட்டியின் தோன்றிய சுருளிற்று ஆகி – உஞ்ஞை:38/195

TOP


சுட்டு (1)

சுட்டு உருக்கு அகிலின் வட்டித்து கலந்த – உஞ்ஞை:38/190

TOP


சுட்டுறு (1)

கட்டு அழல் புகூஉம் சுட்டுறு கோல் போல் – இலாவாண:8/155

TOP


சுட (1)

வகை தார் மார்பன் அகத்தே அழல் சுட
தம்பியர் பெற்றும் தனி யாழ் வந்தும் – வத்தவ:4/8,9

TOP


சுடர் (46)

சுடர் வெண் நிலவின் தொழில் பயன் கொண்ட – உஞ்ஞை:33/61
சுடர் பொன் வள்ளத்து மடல் விரல் தாங்கி – உஞ்ஞை:33/70
இலங்கு சுடர் விளக்கோடு எதிர்வந்து ஏத்தி – உஞ்ஞை:33/98
வல் இருள் புதைப்ப செல் சுடர் சுருக்கி – உஞ்ஞை:33/155
சுடர் குழை பயந்தோள் சொல்லா நிற்ப – உஞ்ஞை:37/172
வெண் சுடர் வீதி விலக்குவனர் போல – உஞ்ஞை:38/18
அம் புகை மருங்கில் செம் சுடர் மழுங்க – உஞ்ஞை:42/84
திடர் சேர் ஆகத்து சுடர் மணி பிறழ – உஞ்ஞை:46/252
செல் சுடர் அந்தி நல் இயல் ஓம்பி – உஞ்ஞை:47/163
சூழ் பொன் சூட்டில் சுடர் மணி புளகத்து – உஞ்ஞை:48/19
ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல் – உஞ்ஞை:48/24
விடு சுடர் மின் ஒளி விளக்க மாட்டி – உஞ்ஞை:49/83
பள்ளி மாடத்து பரூஉ சுடர் கொளீஇ – உஞ்ஞை:54/8
செழும் சுடர் விளங்கும் சிறு புன் மாலை – உஞ்ஞை:54/20
சுடர் முகம் புல்லென படரொடும் அயர்ந்து – உஞ்ஞை:55/11
வட திசை மா மலை சுடர் விடு பொன்னும் – உஞ்ஞை:58/33
தென் திசை பிறந்த வெண் சுடர் மணியும் – உஞ்ஞை:58/35
சூழியும் ஓடையும் சுடர் மணி கோவையும் – இலாவாண:2/200
சுருங்கா சுடர் ஒளி செம்பொன் பட்டம் – இலாவாண:3/70
செம் சுடர் போன்ற அங்குலி நுழையா – இலாவாண:3/114
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி – இலாவாண:3/115
படு சுடர் செக்கர் பசலை தீர – இலாவாண:3/123
விடு சுடர் மதியமொடு வெண் மீன் இவர்ந்த – இலாவாண:3/124
வட-பால் மருங்கில் சுடர் மீக்கூரிய – இலாவாண:3/125
நாட்டு பெயர் பொறித்த குட்டு பொலி சுடர் நுதல் – இலாவாண:4/10
பைம்பொன் விளக்கில் செம் சுடர் மாட்டி – இலாவாண:4/103
வெண் கண்ணாடியும் செம் சுடர் விளக்கும் – இலாவாண:5/29
சுருக்கம் இன்றி சுடர் பிறை போல – இலாவாண:6/35
சுவல் பொதி கூழையர் சுடர் பொன் தோட்டினர் – இலாவாண:7/95
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய – இலாவாண:15/134
மஞ்சொடு நிரைஇ வெம் சுடர் மழுக்க – இலாவாண:18/52
விடு சுடர் விசும்பின் மீன் என சிதற – இலாவாண:18/98
சூழ் வளை முன்கை சுடர் குழை மாதர் – இலாவாண:19/32
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல் – மகத:1/2
விடு சுடர் பேர் ஒளி விமானம் போல – மகத:3/99
செம் சுடர் மணி முடி திகழும் சென்னி – மகத:3/102
செம் சுடர் வேலின் நெஞ்சு இடம் போழ – மகத:6/16
செம் சுடர் முகத்தே செரு மீக்கூரிய – மகத:6/46
சூடக முன்கை சுடர் குழை மகளிரொடு – மகத:6/91
முயக்கிடை விடாஅ சுடர் குழை மகளிர் – மகத:7/103
சுடர் மணி ஆழி படை பயின்று பலித்த – மகத:9/135
அம் கதிர் சுடர் மணி அணி பெற இரீஇ – மகத:17/158
சூடகத்து ஏற்ற சுடர் ஒளி பவளமொடு – மகத:22/234
சுற்றம் ஆதலின் சுடர் பூண் உதயணன் – மகத:23/16
படு சொல் மாற்றத்து சுடர் முகம் புல்லென – வத்தவ:10/155
உதையத்து இவரும் ஒண் சுடர் போல – நரவாண:7/89

TOP


சுடர்ந்து (2)

நுதல் புறம் கவவி மிக சுடர்ந்து இலங்கும் – இலாவாண:19/81
மருப்பு பிறையின் மிக சுடர்ந்து இலங்காது – வத்தவ:7/165

TOP


சுடர (18)

முத்த வள்ளியொடு மு_மணி சுடர
மணி கால் கவைஇ – உஞ்ஞை:34/203,204
தணி பொன் தோரை தகை ஒளி சுடர
மட்டம் குயின்ற மங்கல அல்குல் – உஞ்ஞை:34/205,206
பட்டு உடை தானை பைம் பூண் சுடர
திரு முகை முருக்கின் விரி மலர் கடுப்ப – உஞ்ஞை:34/207,208
தேறு உவா மதியின் திரு முகம் சுடர
கதிர் விரல் கவியலுள் கண்_இணை பிறழ – உஞ்ஞை:38/186,187
திங்கள் அன்ன நின் திரு முகம் சுடர
துன்ப பேர் இருள் துமிக்க தோன்றிய – உஞ்ஞை:42/59,60
ஆய் பூம் சேக்கையுள் அரு மணி சுடர
பாயல் கோடல் பலர் அறிவுறீஇய – உஞ்ஞை:47/165,166
அரு மணி மாடத்து அக-வயின் சுடர
வாள் கெழு மழை கண் வாசவதத்தை – இலாவாண:7/106,107
கன்னி ஆயத்து பொன் அணி சுடர
வீசு வளி கொடியின் விளங்குபு நின்ற – இலாவாண:9/96,97
இருள்_அறு மதியின் திரு முகம் சுடர
அமை புரி தோளியை அன்பின் அளைஇ – இலாவாண:15/146,147
உருவு கொண்டது போல் திரு இழை சுடர
தன் அமர் தோழி தன் புறத்து அசைஇ – மகத:6/94,95
வான் அர_மகளிரின் தான் அணி சுடர
முகை நல காந்தள் முகிழ் விரல் நோவ – மகத:7/49,50
ஒண் கதிர் மதி முகம் ஒளியொடு சுடர
செம்பொன் ஓலை சேடு பட சுருக்கி – மகத:22/224,225
பாசிழை தோழியர் பாடகம் சுடர
தண் பெரும் பந்தருள் கண் பிணி கொள்ள – மகத:22/260,261
மதி முகம் சுடர மன்னவன் சூட்டி – மகத:22/276
திரு முகம் சுடர பூ பிறிது அணியாள் – வத்தவ:15/14
வண்டு ஆர் தெரியல் வாள் முகம் சுடர
பண்டே அணிந்த நின் பத்தினி ஆதலின் – வத்தவ:15/73,74
பொன் மணி கொடியும் பூணும் சுடர
மதனமஞ்சிகை நின்றோள் கண்டு – நரவாண:8/50,51
பொன் இழை சுடர பொம்மென உராஅய் – நரவாண:8/62

TOP


சுடரின் (1)

இருள் தெறு சுடரின் அன்ன இறைவன் முன் – இலாவாண:9/77

TOP


சுடரும் (7)

தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும்
சுட்டி சிதைய குட்டத்து குளித்து – உஞ்ஞை:40/101,102
சுடரும் வாளினர் சோர் நிணர் இழுக்கி – உஞ்ஞை:46/51
அரு மணி சுடரும் அராஅந்தாணம் – இலாவாண:6/161
திலதம் சுடரும் திரு மதி வாள் முகத்து – மகத:5/23
தன் ஒளி சுடரும் தையலை அ வழி – மகத:6/8
பிறை என சுடரும் சிறு நுதல் பிறையின் – வத்தவ:11/68
காசு கண் அரிந்து கதிர் ஒளி சுடரும்
மாசு_இல் வனப்பினன் மறு மதி தேய்வு என – நரவாண:2/24,25

TOP


சுடல் (1)

அகத்தோர்க்கு என்றும் அகம் சுடல் ஆனாது – இலாவாண:19/22

TOP


சுடு (4)

சுடு நாராசம் செவி செறித்தாங்கு – உஞ்ஞை:47/238
கடு விசை கனலி சுடு கதிர் மருங்கில் – உஞ்ஞை:55/19
சுடு கதிர் அணிந்த சூழ் கதிர் செல்வன் – மகத:3/98
தொடி கெழு தோளி சுடு தீ பட்டு என – மகத:8/106

TOP


சுடுதல் (1)

வெகுளி தீயில் கிளை அற சுடுதல்
முடிந்தது இ நிலை முடிந்தனர் அவர் என – மகத:24/116,117

TOP


சுடுதலின் (3)

மனத்திடை நின்று கனற்றுபு சுடுதலின்
மாற்று செய்கை என்னும் நீரால் – உஞ்ஞை:42/237,238
அக-வயின் சுடுதலின் அவிந்த ஆற்றலர் – உஞ்ஞை:46/31
உள்ளு-தோறும் உள்ளம் சுடுதலின்
கவற்சியின் கையறல் நீக்கி முயற்சியின் – உஞ்ஞை:53/51,52

TOP


சுடுதற்கு (1)

சுடுதற்கு ஒவ்வா சூழ்ச்சி அண்ணலை – இலாவாண:9/258

TOP


சுடும் (1)

உள்ளகம் சுடும் என உள் அவிழ்ந்து எழுதரும் – உஞ்ஞை:40/176

TOP


சுடுவான் (1)

சுற்ற மாக்களை சுடுவான் போல – உஞ்ஞை:47/104

TOP


சுண்ண (3)

சுண்ண வட்டும் சுழி நீர் கோடும் என்று – உஞ்ஞை:38/107
சுண்ண பெரும் குடம் பண் அமைத்து இரீஇ – இலாவாண:2/74
சுண்ண இலேகை வண்ணம் சிதைய – இலாவாண:2/213

TOP


சுண்ணக (1)

சுட்டி கலனும் சுண்ணக குற்றியும் – உஞ்ஞை:38/168

TOP


சுண்ணம் (4)

செம்பொன் சுண்ணம் சிதர்ந்த திரு நுதல் – உஞ்ஞை:33/120
சுண்ணம் விரவிய சுரி இரும் பித்தை – உஞ்ஞை:39/19
சுண்ணம் பொதிந்த வண்ண வட்டு இணை – உஞ்ஞை:41/14
நல் நீர் விரவிய செம் நிற சுண்ணம்
குல நல மகளிரொடு கோமகன் நாடி – நரவாண:7/59,60

TOP


சுண்ணமும் (8)

சுண்ணமும் சூட்டும் சுவை நறும் தேறலும் – உஞ்ஞை:37/268
சுண்ணமும் சாந்தும் சுரும்பு இமிர் கோதையும் – உஞ்ஞை:38/61
அனிச்ச கோதையும் ஆய் பொன் சுண்ணமும்
அந்தர மருங்கின் வண்டு கை விடாஅ – உஞ்ஞை:42/71,72
சுந்தர பொடியும் சுட்டி சுண்ணமும்
வித்தகர் கொடுத்த பித்திகை பிணையலும் – உஞ்ஞை:42/73,74
முத்தும் மணியும் பொன் குறு சுண்ணமும்
வெள்ளியும் பவழமும் உள் விழுந்து இமைப்ப – உஞ்ஞை:42/92,93
பாவை இஞ்சியும் கூவை சுண்ணமும்
நாகத்து அல்லியும் ஏலத்து இணரும் – உஞ்ஞை:51/23,24
வாதிகர் கடை தலை வாச சுண்ணமும்
கலந்தோர் உதிர்த்த கலவை சாந்தமும் – இலாவாண:2/95,96
வண்ண மலரும் சுண்ணமும் தூவ – மகத:5/115

TOP


சுண்ணமொடு (2)

வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும் – உஞ்ஞை:38/137
சுட்டி சுண்ணமொடு மட்டித்து கலந்த – உஞ்ஞை:40/222

TOP


சுணங்கின் (2)

மின் உறழ் சாயல் பொன் உறழ் சுணங்கின்
பண்ணுறும் இன் சொல் பதுமா நங்கை – மகத:16/5,6
பொற்பு அமை சுணங்கின் பொம்மல் வெம் முலை – நரவாண:6/7

TOP


சுணங்கு (2)

பிதிர் சுணங்கு ஆகமொடு பெரும் தோள் நீவி – உஞ்ஞை:37/163
சிதர்வன கிடந்த சில் அரி சுணங்கு இவை – இலாவாண:12/88

TOP


சுணம் (1)

புரிந்த பூவொடு பொன் சுணம் கழும – உஞ்ஞை:39/46

TOP


சுதை (12)

வெண் சுதை நல் இல் உறையுள் ஆக – உஞ்ஞை:32/89
வெண்_சுதை குன்றொடு வேண்டுவ பிறவும் – உஞ்ஞை:33/5
சொத்துற்று அமைந்த சுதை_இல் செம் சுவர் – உஞ்ஞை:34/221
செம்பொன் புரிசை வெண் சுதை மாடத்து – உஞ்ஞை:39/57
செம்சூட்டு இட்டிகை சுதை சுவர் படு-கால் – உஞ்ஞை:40/316
வெண் சுதை மாடமும் வேந்தன் கோயிலும் – உஞ்ஞை:43/176
மணி சுதை படு கால் மருங்கு அணி பெற்ற – மகத:9/56
சுதை வெண் குன்றமும் புதை இருள் தானமும் – மகத:14/26
மணி சுதை குன்றமும் மண்டபத்து உச்சியும் – மகத:20/148
சுதை வெண் குன்ற சிமை பரந்து இழிதரும் – வத்தவ:11/93
கூத்தாடு இடமும் கொழும் சுதை குன்றமும் – வத்தவ:15/109
ஆய் மயில் அகவும் அணி சுதை குன்றின் – நரவாண:8/46

TOP


சுதை_இல் (1)

சொத்துற்று அமைந்த சுதை_இல் செம் சுவர் – உஞ்ஞை:34/221

TOP


சுந்தர (1)

சுந்தர பொடியும் சுட்டி சுண்ணமும் – உஞ்ஞை:42/73

TOP


சும்மை (2)

சும்மை அறாஅ தன்மைத்து ஆகி – உஞ்ஞை:51/76
உத்தர குருவம் ஒத்த சும்மை
முத்து மணல் வீதி முற்று வலம் போகி – இலாவாண:7/141,142

TOP


சும்மையும் (1)

மடை வாய் திருத்தும் மள்ளர் சும்மையும்
இடையறவு இன்றி இரையாறு தழீஇ – உஞ்ஞை:48/167,168

TOP


சும்மையொடு (7)

பொலிந்த சும்மையொடு பொன் அணி மூதூர் – இலாவாண:2/1
ஒல்லென் சும்மையொடு பல் வளம் தரூஉம் – இலாவாண:3/162
கடி நகர் வரைப்பில் கல்லென் சும்மையொடு
அடிசில் அயினி ஆர்_பதம் அயின்று – இலாவாண:5/184,185
கல்லென் சும்மையொடு கார் தலைமணந்த – மகத:2/37
முழவு ஒலி சும்மையொடு முரசம் கறங்க – வத்தவ:1/40
விழவு இயல் சும்மையொடு வியல் நகர் துவன்றி – வத்தவ:1/41
மன்னிய சும்மையொடு மகாஅர் துவன்றி – நரவாண:6/65

TOP


சுமக்கற்கு (1)

மண்ணு நீர் சுமக்கற்கு பண்ணு முறை பிழையா – இலாவாண:2/202

TOP


சுமக்கும் (2)

மண்ணக கிழவற்கு மண்ணு நீர் சுமக்கும்
புண்ணியம் உடையீர் போது-மின் ஈங்கு என – இலாவாண:2/227,228
பாவையும் மற்று அதன் கோயிலும் சுமக்கும்
கூனும் குறளும் மேல் நாம் கூறிய – வத்தவ:10/70,71

TOP


சுமடு (1)

பூம் சுமடு இரீஇ போற்றுவனர் தந்த – இலாவாண:5/49

TOP


சுமத்தல் (3)

பல் கலம் சுமத்தல் ஆற்றாது பையென – இலாவாண:2/215
திரு நுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள் – நரவாண:1/139
துதை பூம் கோதை சுமத்தல் ஆற்றா – நரவாண:8/66

TOP


சுமந்த (9)

அரங்கம் நண்ணி அரிமா சுமந்த
மரகதத்து இயன்ற மணி கால் கட்டில் – உஞ்ஞை:34/141,142
சீயம் சுமந்த செம்பொன் ஆசனத்து – உஞ்ஞை:47/50
மாசு_இல் பைம் தாது சுமந்த மத்தகத்து – மகத:3/96
பாடகம் சுமந்த சூடுறு சேவடி – மகத:8/14
நீர் முதல் மண்ணகம் சுமந்த நிறை வலி – மகத:21/54
உட்குறும் உவணம் உச்சியில் சுமந்த
சக்கர வட்டமொடு சங்கு பல பொறித்த – வத்தவ:10/92,93
அரிமா சுமந்த அமளி காட்ட – நரவாண:1/90
பாடகம் சுமந்த சேடு படு சேவடி – நரவாண:3/60
அரிமா சுமந்த ஆசனத்து இருந்து – நரவாண:7/76

TOP


சுமந்தனர் (1)

திரு அமர் சிவிகையுள் சுமந்தனர் கொணர்ந்து – வத்தவ:16/3

TOP


சுமந்து (8)

அமிழ்ந்து கீழ் ஆழ அரும் கலம் சுமந்து
நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு – உஞ்ஞை:41/36,37
மரம் சுமந்து இழிதரும் கடும் புனல் கடுப்ப – உஞ்ஞை:46/68
நிலைக்கொளல் செல்லா நீர் சுமந்து அளைஇ – உஞ்ஞை:46/162
படை மலர் தடம் கண் பனி சுமந்து வீழ – உஞ்ஞை:46/210
புகைக்கொடி சுமந்து பொங்கு எரி தோன்ற – உஞ்ஞை:47/71
நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த – உஞ்ஞை:50/13
பட்டு சுமந்து அசைந்த பரவை அல்குல் – இலாவாண:4/123
பசும்பொன் கிண்கிணி பரடு சுமந்து அரற்ற – மகத:5/10

TOP


சுமந்துகொண்டு (1)

உச்சியில் சுமந்துகொண்டு ஓங்கு விசும்பு இவர்தற்கு – இலாவாண:6/115

TOP


சுமை (1)

இலைச்சினை ஒற்றிய தலை சுமை சரக்கினர் – மகத:17/152

TOP


சுர (5)

சுர முதல் அடைந்த சூழ் அகன் புரிசை – உஞ்ஞை:52/7
வெம் சுர கான்யாற்று வேயொடு பிணங்கி – உஞ்ஞை:52/90
சுர முதல் நிவந்த மர முதல்-தோறும் – உஞ்ஞை:57/111
ஆள் அவி காடும் அரும் சுர கவலையும் – இலாவாண:9/18
அரும் சுர கவலையும் அடவியும் யாறும் – மகத:1/137

TOP


சுரத்து (1)

உரத்தகையாளர் சுரத்து முதல் சீறூர் – மகத:7/25

TOP


சுரந்து (1)

தாள் இடு குழியும் தலை சுரந்து யாத்த – உஞ்ஞை:52/29

TOP


சுரம் (2)

சுரம் செல் வம்பலர் அரும் பதம் மடக்கி – உஞ்ஞை:55/50
வெம் சுரம் செல்வோர் வினை வழி அஞ்ச – மகத:1/160

TOP


சுரமும் (1)

படு கல் சுரமும் பாறையும் படுவும் – உஞ்ஞை:46/271

TOP


சுரி (3)

சுண்ணம் விரவிய சுரி இரும் பித்தை – உஞ்ஞை:39/19
யானையும் சுரி உளை அரிமான் ஏறும் – இலாவாண:11/30
வாச சுரி குழல் மாண் இழை ஒருத்தி என்று – வத்தவ:12/166

TOP


சுரிகையும் (3)

கொலை அமை வில்லும் கூர் வாய் சுரிகையும்
வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும் – உஞ்ஞை:46/56,57
சித்திர புனையலும் பத்திர சுரிகையும்
பத்தி கச்சினொடு ஒத்தவை பிறவும் – இலாவாண:5/143,144
சுரிகையும் வாளும் உருவொடு புணர்ந்த – மகத:17/128

TOP


சுரிந்த (1)

அணி வலம் சுரிந்த அமைதிக்கு ஏற்ப – இலாவாண:4/141

TOP


சுருக்கம் (3)

சுருக்கம் இன்றி சூழ்ந்து உடன் திரியா – இலாவாண:4/7
சுருக்கம் இன்றி சுடர் பிறை போல – இலாவாண:6/35
சுருக்கம் அல்லது பெருக்கம் இல்லை – மகத:27/21

TOP


சுருக்கி (5)

வல் இருள் புதைப்ப செல் சுடர் சுருக்கி
வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகி – உஞ்ஞை:33/155,156
தேன் கவர்வு ஓப்பி திரு நுதல் சுருக்கி
பூ நறும் தேறல் பொலன் வள்ளத்து ஏந்தி – உஞ்ஞை:35/176,177
கொற்ற வெம் கதிர் குளிர் கொள சுருக்கி
குண்டு அகன் கிடக்கை குட_கடல் குளிப்ப – உஞ்ஞை:48/44,45
செல் விசை கதுமென சுருக்கி மெல்லென – உஞ்ஞை:51/89
செம்பொன் ஓலை சேடு பட சுருக்கி
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை – மகத:22/225,226

TOP


சுருக்கியும் (2)

சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும் – உஞ்ஞை:37/123
இன் தீம் கரும்பினை சுருக்கியும் விண் தலை – மகத:15/7

TOP


சுருக்கு (1)

சுருக்கு கஞ்சிகை விரித்தனர் மறைஇ – மகத:13/54

TOP


சுருக்கும் (2)

பரப்பும் சுருக்கும் பாழியும் அறியான் – மகத:20/135
மதர்க்கும் தவிர்க்கும் சுருக்கும் பெருக்கும் – வத்தவ:12/259

TOP


சுருங்க (2)

அரும் தொழில் அந்தணன் சுருங்க சொல்லலும் – உஞ்ஞை:56/186
வெண் முக நிலா ஒளி சுருங்க மெல்லென – மகத:14/9

TOP


சுருங்கா (7)

சுருங்கா சுடர் ஒளி செம்பொன் பட்டம் – இலாவாண:3/70
அரும் தவம் கொடுக்கும் சுருங்கா செல்வத்து – இலாவாண:7/140
பெரும் படை கொற்றம் பீடு அழிந்து சுருங்கா
அரும் படை மன்னர் ஆற்றலின் நெருங்க – மகத:3/90,91
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை – மகத:12/14
சுருங்கா கடும் திறல் சூரவரன் எனும் – மகத:26/80
பொன் நிறை சுருங்கா மண்டிலம் போல – வத்தவ:7/171
சுருங்கா ஆகத்து அரம்பை தன்மையும் – நரவாண:5/26

TOP


சுருங்காள் (1)

நல் நிறை சுருங்காள் நாள்-தொறும் புறந்தரூஉ – வத்தவ:7/172

TOP


சுருங்கி (3)

சிறு வலி ஒருவனின் தன் மனம் சுருங்கி
நறு மெல் ஆகம் நந்து பொறை எள்க – உஞ்ஞை:40/207,208
வாள் முகம் அழுத்தலின் வயவு நடை சுருங்கி
செம் நிற குருதியின் பைம் நிணம் கெழீஇ – உஞ்ஞை:46/47,48
உகிர் அணி பெற்ற நுதி முறை சுருங்கி
நிரல் அளவு அமைத்த விரலிற்கு ஏற்ப – இலாவாண:15/54,55

TOP


சுருங்கிய (3)

சூடுறு பாண்டிலில் சுருங்கிய கதிர்த்தாய் – உஞ்ஞை:33/41
பசும் கதிர் சுருங்கிய பசலைத்து ஆகி – உஞ்ஞை:35/237
உள்ளுதல் ஆனாது உள்ளகம் சுருங்கிய
வள் இதழ் நறும் தார் வத்தவன்-தன்னொடு – மகத:4/1,2

TOP


சுருங்கியும் (1)

விறப்பினில் பெருகியும் வறப்பினில் சுருங்கியும்
உறுதி நோக்கி உயிர் புரை காதலோடு – மகத:1/40,41

TOP


சுருங்கு (1)

சுருங்கு அகம் – வத்தவ:3/75

TOP


சுருங்குபு (1)

சோர்ந்து கடும் கதம் சுருங்குபு நீங்க – வத்தவ:3/94

TOP


சுருங்கை (2)

அழிவுறு சுருங்கை வழி முதல் மறைஇ – இலாவாண:19/54
சுருங்கை வாயில் பெரும் கதவு ஒடுக்கி – மகத:25/19

TOP


சுருங்கையுள் (1)

போக அமைத்த பொய் நில சுருங்கையுள்
நற்பு உடை அமைச்சனை நண்ணிய பொழுதில் – இலாவாண:17/94,95

TOP


சுருட்டுபு (1)

ஆய் வலி தட கை சுருட்டுபு முறுக்கி என் – நரவாண:1/148

TOP


சுரும்பு (5)

சுண்ணமும் சாந்தும் சுரும்பு இமிர் கோதையும் – உஞ்ஞை:38/61
மதர்வை வண்டொடு சுரும்பு மணந்து ஆடும் – உஞ்ஞை:44/141
அரும்பு அணி புன்னையும் சுரும்பு இமிர் செருந்தியும் – இலாவாண:9/7
சுள்ளி வெண் சூழ்ச்சி சுரும்பு உண தொடுத்து – இலாவாண:12/108
சுள்ளி வெண் போது சுரும்பு உண விரித்து – மகத:1/187

TOP


சுரும்பும் (2)

சுரும்பும் தும்பியும் விரும்புபு விரைய – உஞ்ஞை:51/61
விரும்புறு சுரும்பும் பெரும் பொறி வண்டும் – இலாவாண:13/23

TOP


சுருள் (2)

சுருள் முறை வகுத்து சூட்டு புரி உறீஇ – உஞ்ஞை:34/191
வளம் கெழு வாழை இளம் சுருள் வாங்கி – மகத:9/11

TOP


சுருளிற்று (1)

சுட்டியின் தோன்றிய சுருளிற்று ஆகி – உஞ்ஞை:38/195

TOP


சுரை (2)

சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி – உஞ்ஞை:33/69
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி – வத்தவ:10/49

TOP


சுவட்டு (1)

சீறடி சுவட்டு எழுத்து ஏறிய சென்னியர் – உஞ்ஞை:35/210

TOP


சுவடி (1)

கட்டு அமை சுவடி பற்றிய கையினர் – மகத:1/121

TOP


சுவடு (2)

சொல்லினன் வினவும் சுவடு தனக்கு இன்மையின் – உஞ்ஞை:34/79
நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை – உஞ்ஞை:55/80

TOP


சுவடு-தொறும் (1)

வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும்
புள் அடி ஒழுக்கம் புரிவனர் நோக்கி – உஞ்ஞை:55/78,79

TOP


சுவடும் (1)

பிடியது வீழ்ச்சியும் பெண் பால் சுவடும்
அடு திறல் ஆடவர் அற்றமும் பிறவும் – உஞ்ஞை:55/75,76

TOP


சுவடுறுத்து (1)

சோலை போதக சுவடுறுத்து உழல்வோர் – உஞ்ஞை:55/70

TOP


சுவணம் (1)

எட்டு நூறாயிரம் எரி புரை சுவணம்
பட்டாங்கு இவற்றை பரதகற்கு ஈக என – வத்தவ:11/52,53

TOP


சுவணர் (1)

சூடுறு பொன் வினை சுவணர் புனைந்த – இலாவாண:7/19

TOP


சுவர் (10)

சொத்துற்று அமைந்த சுதை_இல் செம் சுவர்
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி – உஞ்ஞை:34/221,222
செம்சூட்டு இட்டிகை சுதை சுவர் படு-கால் – உஞ்ஞை:40/316
பண் அமை படை சுவர் கண் அகன்று அமைந்து – உஞ்ஞை:53/73
திகழ் பொன் போதிகை செம்பொன் செழும் சுவர்
வெள்ளி வேயுள் வெள்ளி அம் பலகை – இலாவாண:2/89,90
செம்பொன் இட்டிகை திண் சுவர் அமைத்து – இலாவாண:6/43
மணி விளக்கு உமிழும் அணி நிலா சுவர் மிசை – இலாவாண:6/139
சுவர் சார்வு ஆக துன்னுபு நிரைத்த – இலாவாண:7/46
அழி சுவர் மண்டபத்து அக-வயின் ஆர் இருள் – இலாவாண:8/111
சித்திர முது சுவர் வித்தக வேயுள் – மகத:5/38
பொன் பிரம்பு நிரைத்த நல் புற நிலை சுவர்
மணி கிளர் பலகை-வாய் புடை நிரைத்த – வத்தவ:15/104,105

TOP


சுவர்க்கம் (1)

பூமி சுவர்க்கம் புறப்பட்டாங்கு – உஞ்ஞை:42/21

TOP


சுவல் (4)

செம் சுவல் பாண்டியம் செல் கதி பெறாஅ – உஞ்ஞை:38/32
நூல் பிணித்து இன் நுகம் நோன் சுவல் கொளீஇ – உஞ்ஞை:38/155
கொய் சுவல் இரட்டை மெய்யுற கொளீஇ – உஞ்ஞை:38/339
சுவல் பொதி கூழையர் சுடர் பொன் தோட்டினர் – இலாவாண:7/95

TOP


சுவன் (1)

முதல் நிலை பலகை சுவன் முதல் ஓச்சி – இலாவாண:6/101

TOP


சுவேகமொடு (1)

பட்டு சுவேகமொடு பாட்டு புறம் எழுதிய – மகத:1/120

TOP


சுவை (17)

இசை சுவை தரீஇ எழுபவும் எறிபவும் – உஞ்ஞை:37/92
சுண்ணமும் சூட்டும் சுவை நறும் தேறலும் – உஞ்ஞை:37/268
சுவை சோர்ந்து அழிய நவை கூர்ந்து நடுங்கி – உஞ்ஞை:44/49
ஆய்ந்த நல் யாழ் தீம் சுவை உணர்ந்த நின் – உஞ்ஞை:44/119
தீம் சுவை நசைஇய தூங்கு சிறை வாவல் – உஞ்ஞை:52/71
பொன் கலத்து இயன்ற நல் சுவை அடிசில் – உஞ்ஞை:56/198
அமுதின் அன்ன அறு_சுவை அடிசில் – இலாவாண:2/80
இவையும் பிறவும் சுவை தெரியாளர் – இலாவாண:2/183
நறிய ஆகிய அறு_சுவை அடிசில் – இலாவாண:3/24
தீம் சுவை நெல்லி திரள் காய் தாரையுள் – இலாவாண:6/66
நயக்கும் வாயுள் நகை சுவை புலவியுள் – இலாவாண:7/83
இரந்து பின் எய்தும் இன் சுவை அமிர்தம் – இலாவாண:7/90
இன் சுவை அடிசில் உண்பதும் ஒரீஇ – இலாவாண:10/143
தேன் சுவை கொளீஇ வேம்பின் ஊட்டும் – இலாவாண:11/173
சுவை தொழில் மகன் என நகை தொழில் ஆடி – மகத:14/189
செவி சுவை அமிர்தம் இசைத்தலின் மயங்கி – மகத:14/277
அன்பு நெகிழ்ந்து அணைஇ இன் சுவை அமிழ்தம் – வத்தவ:17/115

TOP


சுவைக்கும் (2)

மத களி சுவைக்கும் மணி நிற பறவை – உஞ்ஞை:58/13
வேட்கை நாவின் விருப்பொடு சுவைக்கும்
மாற்றல் இல்லா மனத்தினர் ஆகி – நரவாண:8/81,82

TOP


சுவைத்து (4)

தேனினும் பாலினும் தீம் சுவைத்து ஆகி – உஞ்ஞை:32/44
நரம்பு இசை தள்ளி வறிதினில் சுவைத்து
மகிழின் மம்மர் எய்தி முகிழின் – உஞ்ஞை:35/181,182
பண் சுவைத்து ஒழிந்து பால்_இல் தோல் முலை – உஞ்ஞை:46/300
குரங்கு நடை களிற்றொடு திரங்கு மரல் சுவைத்து
நீர் நசைக்கு எள்கி தேர் மருங்கு ஓடவும் – உஞ்ஞை:52/52,53

TOP


சுவைப்பட (1)

சுவைப்பட நின்றமை அறிந்தே பொருக்கென – மகத:14/220

TOP


சுவையும் (2)

நச்சுபு தெரிந்த நாற்றமும் சுவையும்
ஒப்புமை இன்மையின் உயிர் முதல் தாங்க – இலாவாண:20/14,15
மண்ணின் சுவையும் இன்னது என்று ஒழியாது – மகத:12/75

TOP


சுவையொடு (1)

நவை அற இரு கண் சுவையொடு தோன்ற – வத்தவ:12/261

TOP


சுழல் (4)

அழல் நறும் தேறல் சுழல் வண்டு ஓப்பி – உஞ்ஞை:40/160
முகிழும் போதும் மகிழ் சுழல் அலரும் – இலாவாண:2/146
சூறை வளியிடை சுழல் இலை போல – வத்தவ:12/200
துடியுரு ஆகியும் சுழல் ஆறு ஆகியும் – வத்தவ:14/37

TOP


சுழல (1)

திரிதரல் ஓயாது திகிரியின் சுழல
ஊழ்வினை வலிப்பின் அல்லது யாவதும் – உஞ்ஞை:33/200,201

TOP


சுழலும் (4)

சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் – உஞ்ஞை:40/77
சுழலும் நெஞ்சமொடு துயரம் எய்தி – உஞ்ஞை:43/161
கண்ணகன் மருங்கின் விண்ணகம் சுழலும்
மண்ணக மருங்கின் விண்ணுற நீடிய – உஞ்ஞை:48/116,117
சுழலும் நிற்கும் சொல்வன போலும் – வத்தவ:12/257

TOP


சுழற்சியள் (1)

தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள்
செவ்விய தன் கையின் அம் வயிறு அதுக்கா – இலாவாண:18/74,75

TOP


சுழற்ற (1)

சூழ் வளி சுழற்ற ஆழ் கயத்து அழுந்தினன் – நரவாண:1/24

TOP


சுழற்றி (1)

இருப்பு அகல் நிறைந்த நெருப்பு நிறை சுழற்றி
தேவர் தூமம் மேவர எடுப்பி – இலாவாண:3/48,49

TOP


சுழற்று (1)

வளி சுழற்று அறாஅ முளி மர கானத்து – உஞ்ஞை:55/40

TOP


சுழன்றன (1)

சுழன்றன தாமம் குழன்றது கூந்தல் – வத்தவ:12/225

TOP


சுழன்று (4)

எண்பதின் எல்லை ஓடி கண் சுழன்று
உதிர புள்ளி ஊழூழ் வீழ்தர – உஞ்ஞை:52/103,104
சொல் வேறு குறியொடு சுழன்று அகத்து ஒடுங்கிய – இலாவாண:8/99
சூடக முன்கையில் சுழன்று மாறு அடித்தும் – வத்தவ:12/60
தேர் கால் ஆழியின் சுழன்று அவை தொழில் கொள – வத்தவ:12/205

TOP


சுழன்றும் (1)

தோள் மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும்
கூன் மேல் புரட்டியும் குயநடு ஒட்டியும் – வத்தவ:12/84,85

TOP


சுழி (8)

சுண்ண வட்டும் சுழி நீர் கோடும் என்று – உஞ்ஞை:38/107
நிலை_இன்று உழிதரும் நெடும் சுழி நீத்தத்து – உஞ்ஞை:40/185
புனல் சுழி நீத்தம் நீந்தி மற்றவை – உஞ்ஞை:41/42
புனல் சுழி புரையும் பொலிவிற்று ஆகி – இலாவாண:7/24
புனல் சுழி அலைத்து பொருந்திய கொப்பூழ் – இலாவாண:15/68
அரும் சுழி நீத்தத்து ஆழும் ஒருவன் – இலாவாண:17/122
அரும் சுழி நீத்தத்து ஆறு புக அமைத்த – மகத:25/18
சுழி என கிடந்த குழி நவில் கொப்பூழ் – வத்தவ:11/65

TOP


சுழிப்பட்ட (1)

மறு சுழிப்பட்ட நறு மலர் போல – வத்தவ:13/141

TOP


சுள்ளி (4)

சுள்ளி வெண் சூழ்ச்சி சுரும்பு உண தொடுத்து – இலாவாண:12/108
சுனை பூ குற்றும் சுள்ளி சூடியும் – இலாவாண:12/129
ஒண் பூம் காந்தள் வெண் பூம் சுள்ளி
வீயா நாற்றமொடு அணி வளம் கொடுப்ப – இலாவாண:15/16,17
சுள்ளி வெண் போது சுரும்பு உண விரித்து – மகத:1/187

TOP


சுள்ளியும் (4)

வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும் – உஞ்ஞை:46/276
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் – உஞ்ஞை:50/27
பைம் கூதாளமும் வெண் பூம் சுள்ளியும்
கொய்து அகை போந்தும் கைதகை காந்தளும் – இலாவாண:12/22,23
மணி குருக்கத்தியும் மணி பூம் சுள்ளியும்
நாள் சிறு சேடமும் நறும் செண்பகமும் – இலாவாண:15/105,106

TOP


சுளியுநள் (1)

வலி புணர் வதுவைக்கு சுளியுநள் போல – இலாவாண:3/106

TOP


சுற்ற (9)

பல் மயிர் கவரியொடு பரிசனம் சுற்ற
பெருமகன் இருந்த திரு மலி அவையத்து – உஞ்ஞை:37/16,17
ஆயம் சுற்ற அணி_இழை புகுதந்து – உஞ்ஞை:37/105
சுற்ற மாந்தர் தொக்கனர் புகல – உஞ்ஞை:37/183
காவலாளர் கால் புறம் சுற்ற
புயல் மலை தொடுத்து பூ மலர் துதைந்து – உஞ்ஞை:38/270,271
ஆக புறம் சுற்ற
கால் இயல் புரவியொடு களிறு பல பரப்பி – உஞ்ஞை:38/348,349
சுற்ற மாக்களை சுடுவான் போல – உஞ்ஞை:47/104
என்னோர் பிறரும் துன்னினர் சுற்ற
ஏவற்கு அமைந்த காவல் தொழிலொடு – உஞ்ஞை:57/68,69
சுற்ற பந்தமும் வேண்டினேன் என்றனன் – மகத:21/66
சுற்ற மாந்தர் சொல்லுவார் மாறு அல – நரவாண:1/35

TOP


சுற்றத்தவர் (1)

ஆர்வ சுற்றத்தவர் வரை நில்லாள் – உஞ்ஞை:35/147

TOP


சுற்றத்தார் (1)

சுற்றத்தார் எனும் சொல் உடை வேந்தர் – மகத:21/14

TOP


சுற்றத்து (5)

வல் வேல் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட – உஞ்ஞை:34/7
உரிமை சுற்றத்து உரியோர்க்கு திறந்த – உஞ்ஞை:34/139
பரந்த கவரி படாகை சுற்றத்து
உயர்ந்த உழை கலத்து இயன்ற அணியின் – உஞ்ஞை:38/128,129
நெருக்குறு சுற்றத்து விருப்பின் நோக்கி – உஞ்ஞை:38/188
தெய்வ சுற்றத்து திரு நடந்தது போல் – உஞ்ஞை:38/230

TOP


சுற்றம் (6)

சுற்றம் ஆக சூழ்ச்சியின் விளக்கி – உஞ்ஞை:37/59
புரிசை சுற்றம் காஞ்சனை ஆக – உஞ்ஞை:53/142
உரிமை சுற்றம் பின்பட உய்த்து – இலாவாண:13/6
சுற்றம் ஆக்கும் சூழ்ச்சியர் ஆகி – மகத:4/99
சுற்றம் ஆதலின் சுடர் பூண் உதயணன் – மகத:23/16
காமர் சுற்றம் கை தொழுது ஏத்த – வத்தவ:7/125

TOP


சுற்றமும் (7)

பைம்_தொடி சுற்றமும் பல பாராட்ட – உஞ்ஞை:36/307
துணிவு இயல் சுற்றமும் தொடர்ந்து உடன் விட்டு – உஞ்ஞை:56/202
பெருமூதாளரும் பெரும் கிளை சுற்றமும்
திருமாதேவிக்கு தெரிவனர் அமைத்த – உஞ்ஞை:57/17,18
மன் பெரும் சுற்றமும் வம்ப மாந்தரும் – இலாவாண:5/7
உழை கல சுற்றமும் ஒழித்தனன் ஆகி – வத்தவ:6/78
சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என – வத்தவ:13/12
துன்ன_அரும் சுற்றமும் முன் உரை என்றலும் – வத்தவ:13/33

TOP


சுற்றமொடு (12)

பைம்_தொடி சுற்றமொடு தந்தை தலைத்தாள் – உஞ்ஞை:32/24
பைம்_தொடி சுற்றமொடு பரிசனம் போக்கி – உஞ்ஞை:32/59
மல்லல் சுற்றமொடு கல்லென புகுதந்து – உஞ்ஞை:34/225
கோல் கொள் சுற்றமொடு குமரன் புகுதர – உஞ்ஞை:36/137
அடைப்பை சுற்றமொடு அன்னவை பிறவும் – உஞ்ஞை:38/162
விழா மலி சுற்றமொடு வெண் மணல் ஏறி – உஞ்ஞை:38/280
புரிந்த சுற்றமொடு புணர்ந்து உடன் கெழீஇ – உஞ்ஞை:40/1
கம்பல் சுற்றமொடு கன்னியர் காப்ப – உஞ்ஞை:40/62
மட்டு உண் மகளிர் சுற்றமொடு பொலிக என – உஞ்ஞை:40/81
உரிமை சுற்றமொடு ஒருங்கு உடன் துவன்றி – இலாவாண:6/162
இன் பல சுற்றமொடு நன்கனம் கெழீஇ – வத்தவ:3/107
ஆற்றல் சான்ற அரும்_பெறல் சுற்றமொடு
கூற்றமும் விழைய கோல் இனிது ஓச்சி – நரவாண:8/18,19

TOP


சுற்றாளரை (1)

உழை சுற்றாளரை புகுத்து-மின் விரைந்து என – உஞ்ஞை:33/14

TOP


சுற்றி (2)

எல் ஒளி பாவையை கல்லென சுற்றி
அளகமும் பூணும் நீவி சிறிது நின் – உஞ்ஞை:33/162,163
நூலினும் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றி
கோலமாக கொண்டனர் பிடித்து – வத்தவ:12/45,46

TOP


சுற்றிய (2)

பீலி சுற்றிய வேணு வெண் காழ் – உஞ்ஞை:32/97
கற்றறிவாளர் சுற்றிய நடுவண் – உஞ்ஞை:37/186

TOP


சுற்றியதாக (1)

கூத்தியர் இருக்கையும் சுற்றியதாக
காப்பிய வாசனை கலந்தவை சொல்லி – வத்தவ:3/42,43

TOP


சுற்றினும் (1)

கருவி தாக்கினும் காலாள் சுற்றினும்
தனியன் ஆயினும் தானையொடு ஆயினும் – உஞ்ஞை:37/40,41

TOP


சுற்று (3)

புறம் சுற்று அமைந்த பிறங்கு கடை படுகால் – உஞ்ஞை:37/12
சுற்று ஆர் கருவில் துணி என தோன்றி – மகத:20/49
பற்றிய கந்துகம் சுற்று முறை உரைத்தும் – வத்தவ:12/234

TOP


சுற்றுபு (3)

சுற்றுபு சூழ முற்றத்து ஏறி – உஞ்ஞை:38/134
சூட்டொடு விரைஇ சுற்றுபு முடித்து – இலாவாண:5/175
சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும் – இலாவாண:15/136

TOP


சுற்றும் (1)

தலை விரல் சுற்றும் தாது அணி வளையமும் – இலாவாண:19/179

TOP


சுறவு (2)

ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த – உஞ்ஞை:40/182
இரை வேட்டு உலாஅம் இன சுறவு இனத்தின் – உஞ்ஞை:45/89

TOP


சுனை (10)

சுனை வாய் நிறைக்கும் சூர் உடை சிலம்பின் – உஞ்ஞை:50/40
வறும் சுனை பரவையும் குறும் பரல் குன்றமும் – உஞ்ஞை:52/33
குண்டு சுனை அடுக்கத்து கொழும் கனி வீழ்ச்சி – உஞ்ஞை:53/72
காமர் கல் சுனை தானம் முதல் நிறீஇ – உஞ்ஞை:57/91
நிறை வாய் தண் சுனை நிவந்த நீலத்து – இலாவாண:12/54
சுனை பூ குற்றும் சுள்ளி சூடியும் – இலாவாண:12/129
கொய் குரல் ஏனலும் குளிர் சுனை பாறையும் – இலாவாண:12/149
நறு மலர் அணிந்த குறு வாய் குண்டு சுனை
நீள் நீர் முழவின் பாணியில் பாடியும் – இலாவாண:14/11,12
அருவி ஆட்டினும் அறல் சுனை திளைப்பினும் – இலாவாண:14/59
கல் சுனை நீலமும் கணி வாய் வேங்கையும் – இலாவாண:20/59

TOP


சுனை-தோறும் (2)

கை அமைத்து இயற்றிய செய் சுனை-தோறும்
வராலும் வாளையும் உராஅய் மறல – இலாவாண:15/18,19
பொன் சுனை-தோறும் புக்கு விளையாடியும் – வத்தவ:11/95

TOP


சுனையும் (1)

சுனையும் யாறும் இனையவை மல்கி – இலாவாண:12/8

TOP