நூ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்க 1
நூக்கல் 1
நூக்கி 2
நூக்குபு 1
நூக்குவனர் 1
நூபுரம் 2
நூல் 78
நூல்-கண் 1
நூல்-கண்ணும் 1
நூல்-பால் 2
நூல்-வழி 1
நூல்_வினை 1
நூலவன் 1
நூலறிவாளர் 1
நூலாக 1
நூலாளரை 1
நூலாளன் 1
நூலியலாளரொடு 1
நூலின் 5
நூலினும் 3
நூலும் 4
நூலேந்திரமும் 1
நூலொடு 2
நூலோர் 1
நூழிலாட்டவும் 1
நூற்கணாளரொடு 1
நூற்கும் 2
நூற்று 3
நூற்றுவர் 2
நூற்றுஇருபத்தோரைந்து 1
நூற்றொரு 1
நூற்றொருபதின்மர் 1
நூற 1
நூறலின் 2
நூறாயிரத்து 1
நூறாயிரம் 4
நூறி 12
நூறியும் 1
நூறின் 1
நூறு 1
நூறுதல் 2
நூறும் 2
நூன் 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நூக்க (1)

ஞாழல் படு சினை தோழியர் நூக்க
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி – உஞ்ஞை:40/37,38

TOP


நூக்கல் (1)

போக நூக்கல் பொருள் என கூறி – மகத:19/154

TOP


நூக்கி (2)

ஞாழலும் புன்னையும் வீழ நூக்கி
குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி – உஞ்ஞை:51/41,42
கொடும் தாழ் நூக்கி நெடும் புணை களைந்து – மகத:25/20

TOP


நூக்குபு (1)

நோயின் கடுமை நூக்குபு நலிய – உஞ்ஞை:52/120

TOP


நூக்குவனர் (1)

நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு – உஞ்ஞை:41/37

TOP


நூபுரம் (2)

நூபுரம் கலந்த பாடக கம்பலும் – இலாவாண:2/232
பாடக நூபுரம் பரட்டு மிசை அரற்ற – மகத:22/235

TOP


நூல் (78)

எண்_நால் இலக்கணத்து நுண் நூல் வாங்கி – உஞ்ஞை:33/100
காலனும் கடியும் நூல் ஒண் காட்சியர் – உஞ்ஞை:34/10
விரி_நூல் அந்தணர் வெண்_மணை சூழ்ந்த – உஞ்ஞை:34/23
நிறை_நூல் பொத்தக நெடு மணை ஏற்றி – உஞ்ஞை:34/26
பொருள்_நூல் ஆயும் புலவோர் துணிவு என – உஞ்ஞை:34/91
நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் – உஞ்ஞை:34/143
வால் அரக்கு ஊட்டிய வால் நூல் நிணவை – உஞ்ஞை:34/144
செம் நூல் நிணந்த சித்திர கம்மத்து – உஞ்ஞை:35/98
செலவு அயா_உயிர்த்த-காலை நூல் துறை – உஞ்ஞை:36/241
நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என – உஞ்ஞை:36/290
நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி – உஞ்ஞை:37/48
வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து – உஞ்ஞை:37/101
ஆணை தடைஇய நூல் நெறி அவையத்து – உஞ்ஞை:38/66
நூல் வினை நுனித்த நுண் வினை படாத்து – உஞ்ஞை:38/80
நூல் பிணித்து இன் நுகம் நோன் சுவல் கொளீஇ – உஞ்ஞை:38/155
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த – உஞ்ஞை:38/242
நனைந்து நிறம் கரந்த நார் நூல் வெண் துகில் – உஞ்ஞை:40/148
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் – உஞ்ஞை:40/295
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி – உஞ்ஞை:41/5
வண்ணம் கொளீஇய நுண் நூல் பூம் படம் – உஞ்ஞை:42/34
என துணிந்து இளையோர் இரு நூல் பெய்த – உஞ்ஞை:42/70
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ – உஞ்ஞை:42/145
சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த – உஞ்ஞை:42/164
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை – உஞ்ஞை:43/22
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில் – உஞ்ஞை:43/125
பூ பெரும் பந்தர் நூல் திரை வளைஇய – உஞ்ஞை:44/15
நூல் அறி பாகரொடு மேல் அறிவு கொள்ளாது – உஞ்ஞை:44/64
மேல் இயல் முறைவர் நூல் இயல் ஓசை – உஞ்ஞை:44/79
செம் நூல் பத்தி சேடக கையர் – உஞ்ஞை:46/8
சேடக வட்டமும் செம் நூல் பாரமும் – உஞ்ஞை:46/58
முன்னோர் காலை பல் நூல் பயிற்றிய – உஞ்ஞை:49/67
தறி மிசை கொளீஇய செறி நூல் மாடமொடு – உஞ்ஞை:57/24
நூல் வெண் மாடம் கோலோடு கொளீஇ – உஞ்ஞை:57/113
நூல் இட்டு அமைத்த கோல கூடத்து – உஞ்ஞை:58/55
நீதி பெருமை நூல் ஓதியும் ஓராய் – இலாவாண:1/26
நூல் பொருள் உணர்ந்து பாற்பொருள் பன்னி – இலாவாண:2/13
நூல் பொருள் இனித்து தீ பொருள் ஒரீஇ – இலாவாண:2/14
காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன் – இலாவாண:4/34
தொல்லோர் வகுத்த நூல் துறை முறை போகிய – இலாவாண:4/71
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் – இலாவாண:5/102
நூல் இயல் நெறியினும் மதியினும் தெளிந்து – இலாவாண:8/98
அரு நூல் அமைச்சன் அயல் புறம் நிறீஇ – இலாவாண:9/24
வேத முதல்வன் விளம்பிய நூல் வழி – இலாவாண:9/82
நீலம் உண்ட நூல் இழை வண்ணம் – இலாவாண:9/88
பண்டு இயல் தொல் நூல் பாகு இயல்பு ஆதலின் – இலாவாண:9/90
நல் நெறி நூல் வழி திண் அறிவாளன் – இலாவாண:10/79
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் – இலாவாண:15/126
தெரி நூல் வாங்கி இரு நூல் கொளீஇ – இலாவாண:15/127
தெரி நூல் வாங்கி இரு நூல் கொளீஇ – இலாவாண:15/127
நூல் வல்லாளர் நால்வருள்ளும் – இலாவாண:17/150
ஆற்றல் சான்ற நூல் துறை மருங்கின் – இலாவாண:19/2
நூல் அமை வீணை கோல் அமை கொளீஇ – இலாவாண:19/199
வெண் நூல் பூம் துகில் வண்ணம் கொளீஇ – மகத:1/95
ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த – மகத:1/108
புரி நூல் அணிந்த பொன் வரை மார்பினர் – மகத:1/122
விரி நூல் கிரந்தம் விளம்பிய நாவினர் – மகத:1/123
புரி நூல் மார்பன் புண்ணிய நறும் தோள் – மகத:7/85
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட – மகத:12/54
நுண் பால் நூல் வழி நன்கனம் நாடின் – மகத:14/32
நூல் திறம் முற்றி ஆற்றுளி பிழையாது – மகத:17/111
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் – மகத:17/170
படை மிசை நிரைத்த வடிவு அமை வார் நூல்
சித்திர குரத்தின வித்தக கைவினை – மகத:20/16,17
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை – மகத:22/125
பொங்கு நூல் படாகையொடு வெண் கொடி நுடங்க – மகத:27/94
வகை அமை நல் நூல் பயன் நனி பயிற்றி – வத்தவ:3/51
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின் – வத்தவ:7/34
பூம் தண் மாலையொடு பொங்கு நூல் புரள – வத்தவ:7/182
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது – வத்தவ:8/78
நீதி நல் நூல் ஓதிய நாவினள் – வத்தவ:10/14
துணிந்த நூல் பொருள் செவி உளம் கெழீஇ – வத்தவ:10/33
நூல் நெறி மரபின் தான் அறிவு தளரான் – வத்தவ:10/159
அவந்தியர் கோமான் அருளிட நூல் நெறி – வத்தவ:10/184
நூல் நெறி இது என நுழைந்தவன் உரைத்தலும் – நரவாண:1/54
நூல் நெறி மரபின் வல்லோன் பேணி – நரவாண:1/112
நால் வகை மரபின் அல்லதை நூல் வழி – நரவாண:4/24
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை – நரவாண:7/114
வில் பொருள் நல் நூல் விதியின் நுனித்து – நரவாண:8/41
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த – நரவாண:8/14

TOP


நூல்-கண் (1)

நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் – இலாவாண:10/105

TOP


நூல்-கண்ணும் (1)

எ நூல்-கண்ணும் இடம்பாடு உடைய – மகத:19/189

TOP


நூல்-பால் (2)

நாற்பாலோரையும் நூல்-பால் செய் தொழில் – இலாவாண:2/193
நூல்-பால் தழீஇய குற்றம் இவை என – நரவாண:7/97

TOP


நூல்-வழி (1)

தேர்ந்த நூல்-வழி திண்ணிது ஆகலின் – உஞ்ஞை:53/30

TOP


நூல்_வினை (1)

நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் – உஞ்ஞை:34/143

TOP


நூலவன் (1)

நூலவன் உரைப்ப – நரவாண:3/193

TOP


நூலறிவாளர் (1)

நூலறிவாளர் நால்வரை விட்ட பின் – உஞ்ஞை:37/277

TOP


நூலாக (1)

கரும மேற்கோள் தெரி நூலாக
பா இடு குழலின் ஆயிடை திரிதர – வத்தவ:4/38,39

TOP


நூலாளரை (1)

பயில் நூலாளரை பயிர்வனர் கூஉய் – உஞ்ஞை:39/53

TOP


நூலாளன் (1)

புதிதின் வந்த புரி நூலாளன்
எதிர் மனை வரைப்பகம் இயைந்தனன் புக்கு – வத்தவ:3/130,131

TOP


நூலியலாளரொடு (1)

நூலியலாளரொடு நுண்ணிதின் கேட்டு – உஞ்ஞை:36/51

TOP


நூலின் (5)

நூலின் இயன்றவை நோக்கார் சாபம் என்று – உஞ்ஞை:55/59
நூலின் திரியாது நுண் எழில் புரிய – இலாவாண:7/162
நூலின் பரந்த கோல வீதியுள் – மகத:17/213
கற்ற நூலின் செற்ற வேந்தன் – மகத:19/8
தன்மையும் எல்லாம் முன் முறை நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதி – நரவாண:8/110,111

TOP


நூலினும் (3)

நூலினும் உலண்டினும் நாரினும் இயன்றன – உஞ்ஞை:42/210
மயிரினும் தோலினும் நூலினும் இயன்ற – வத்தவ:6/76
நூலினும் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றி – வத்தவ:12/45

TOP


நூலும் (4)

பொருள்_புரி_நூலும் – உஞ்ஞை:32/1
இசையொடு சிவணிய யாழின் நூலும்
நாடக பொருளும் – உஞ்ஞை:32/5,6
நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே – உஞ்ஞை:37/133
தரும நூலும் தந்து உரை கதையும் – மகத:12/84

TOP


நூலேந்திரமும் (1)

நூலேந்திரமும் நோக்கினர் போகா – இலாவாண:2/154

TOP


நூலொடு (2)

நூலொடு புணர்ந்த வால் இயல் மார்பின் – இலாவாண:15/114
நூலொடு பட்ட நுனிப்பு இயல் வழாமை – இலாவாண:17/172

TOP


நூலோர் (1)

மேலோர் உள்ளம் போல நூலோர்
புகழப்பட்ட போர் வல் புரவி – மகத:20/26,27

TOP


நூழிலாட்டவும் (1)

பாழி பயிற்றி நூழிலாட்டவும்
போர் கள வட்டம் கார் கடல் ஒலி என – மகத:20/42,43

TOP


நூற்கணாளரொடு (1)

நூற்கணாளரொடு நுனித்து கதி வினாய் – இலாவாண:18/27

TOP


நூற்கும் (2)

ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் – மகத:12/18
பரந்த எ நூற்கும் விருந்தினன் அன்றி – வத்தவ:3/60

TOP


நூற்று (3)

ஒரு_நூற்று_ஒரு கழஞ்சு உரை கண்டு எண்ணிய – உஞ்ஞை:35/75
எண்_நூற்று_அறுவர் இளம் கிடை காப்பரொடு – உஞ்ஞை:37/11
கோல் தகை மாக்களும் நூற்று வில் அகலம் – உஞ்ஞை:42/24

TOP


நூற்றுவர் (2)

நூற்றுவர் தோழியர் போற்று இயல் கூற – உஞ்ஞை:38/229
நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆக என – மகத:1/94

TOP


நூற்றுஇருபத்தோரைந்து (1)

ஒரு நூற்றுஇருபத்தோரைந்து எல்லையுள் – உஞ்ஞை:48/171

TOP


நூற்றொரு (1)

நூற்றொரு பதின்மர் கோல் தொடி மகளிருள் – வத்தவ:11/38

TOP


நூற்றொருபதின்மர் (1)

ஆற்றல் சான்ற நூற்றொருபதின்மர்
அரைசருள்ளும் உரை செல விளங்கிய – நரவாண:8/16,17

TOP


நூற (1)

திறப்பட கூறி மற படை நூற
கடும் புனல் நெருங்க உடைந்து நிலை ஆற்றா – மகத:20/119,120

TOP


நூறலின் (2)

ஏழேழ் மறவரை வீழ நூறலின்
ஆழும் நெஞ்சமொடு அச்சம் எய்தி – இலாவாண:9/147,148
அரு முரண் அழிய நூறலின் அவன் அமர்க்கு – மகத:24/54

TOP


நூறாயிரத்து (1)

ஒரு நூறாயிரத்து ஒரு கழஞ்சு இறுத்த – உஞ்ஞை:39/10

TOP


நூறாயிரம் (4)

அன்னவை பிறவும் பல் நூறாயிரம்
ஒடிவு_இல் கம்பலை ஒருங்கு தலைக்கூடி – இலாவாண:2/233,234
பல் நூறாயிரம் பழுதின்று வருவன – வத்தவ:9/11
எட்டு நூறாயிரம் எரி புரை சுவணம் – வத்தவ:11/52
ஒன்றே போல்வன ஒரு நூறாயிரம்
வந்தனை செய்குநர் பூசனை களரியும் – நரவாண:4/120,121

TOP


நூறி (12)

எதிர் எழுவோரை அதிர நூறி
வத்தவர் கோமான் வயவர் திரிதர – உஞ்ஞை:44/92,93
வெருவர தாக்கி வீழ நூறி
நல் துணை தோழர் உற்றுழி உதவ – உஞ்ஞை:48/33,34
வேழ வேட்டத்து வீழ நூறி
அரும் சிறை எய்தி யாப்பொடு புக்க – உஞ்ஞை:54/132,133
அணங்க_அரும் பெரும் சாத்து அவிய நூறி
பல் விலை பண்டம் கவர்ந்து பயம் அறியார் – உஞ்ஞை:55/47,48
வீழ நூறி வேழம் தொலைச்சி – மகத:17/247
தாக்கிய ஆறும் தகர நூறி
போக்கிய ஆறும் போந்த வண்ணமும் – மகத:18/62,63
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி
வீரம் மிக்க விறல் தறுகண்மை – மகத:21/9,10
பாயல் அகத்தே சாய நூறி
மாவும் வேழமும் மா மணி தேரும் – மகத:24/151,152
வீய நூறி வெம் சினம் தணிக என – மகத:27/154
கனல் சொரி மலையின் கவிய நூறி
தார் கெழு மார்பும் தலையும் தகர – மகத:27/170,171
கும்பன் என்போனை வெம்ப நூறி
இன்று மற்று இங்கு இவன் தமர் உளரெனின் – மகத:27/211,212
பற்றா மன்னனை பணிய நூறி
கொற்றம் கொண்டதும் கேட்டனென் தெற்றென – வத்தவ:10/127,128

TOP


நூறியும் (1)

வேலியலாளரை வீழ நூறியும்
வெம் கணை வாளியுள் விளிந்தனர் வீழ – உஞ்ஞை:56/265,266

TOP


நூறின் (1)

தலைவரும் பெரும் படை தொலைய நூறின்
சுருக்கம் அல்லது பெருக்கம் இல்லை – மகத:27/20,21

TOP


நூறு (1)

ஒரு நூறு ஆகிய உயர் நிலை வேழமும் – வத்தவ:11/31

TOP


நூறுதல் (2)

தம் மேல் சென்று தருக்கு அற நூறுதல்
வத்தவர் இறைவனும் வலித்தனன் அவனோடு – மகத:19/141,142
வேற்று வேந்தனை வீழ நூறுதல்
மாற்றாது எனக்கு மன்ன அருள் என – மகத:27/156,157

TOP


நூறும் (2)

தமர்_அல் மாக்களை தருக்கின் நூறும்
அமர் அடு நோன் தாள் நமருளர் அவ்வயின் – உஞ்ஞை:43/66,67
காழ் அகில் நூறும் கண் சாலேகமும் – மகத:17/136

TOP


நூன் (2)

நூன் முறை படைத்த நான்முக கடவுள் – இலாவாண:3/36
நான்முகன் மகளிர் நூன் முதல் கிளந்த – மகத:6/102

TOP