மெ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சா 1
மெச்சார் 1
மெச்சுவனன் 1
மெத்த 1
மெத்தென் 2
மெய் 50
மெய்-கொல் 1
மெய்-வயின் 3
மெய்க்கொள 1
மெய்கோள் 1
மெய்த்த 1
மெய்ந்நிறீஇ 1
மெய்ப்பட 1
மெய்ப்பாட்டினுள் 1
மெய்ப்பொருட்டு 1
மெய்ப்பொருள் 1
மெய்பெற 1
மெய்ம்மறந்து 1
மெய்ம்மறப்ப 2
மெய்ம்முறை 1
மெய்யா 2
மெய்யில் 1
மெய்யின் 1
மெய்யினர் 1
மெய்யினும் 1
மெய்யும் 2
மெய்யுற 4
மெய்யொடு 1
மெய்யோடு 1
மெல் 44
மெல்_இயல் 5
மெல்_இயல்-தன்னை 2
மெல்ல 4
மெல்லிது 1
மெல்லிய 1
மெல்லியற்கு 1
மெல்லென் 4
மெல்லென 20
மெல 1
மெலிந்த 1
மெலிந்தது 2
மெலிந்து 1
மெலிய 2
மெலிவது 1
மெலிவின் 1
மெலிவினும் 1
மெலிவு 2
மெலிவும் 1
மெழுகி 1
மெழுகிய 1
மெழுகின் 3
மெழுகு 2
மென் 30
மென்மெல 5
மென்மை 1
மென்மைய 1
மென்மையின் 1
மென்மையும் 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மெச்சா (1)

மெச்சா மன்னரை மெலிவது நாடி – மகத:17/71

TOP


மெச்சார் (1)

மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின் – நரவாண:3/44

TOP


மெச்சுவனன் (1)

தச்சனை நோக்கி மெச்சுவனன் ஆக – நரவாண:4/61

TOP


மெத்த (1)

மெய் தகு நுண் பொருள் மெத்த பன்னி – நரவாண:7/99

TOP


மெத்தென் (2)

பத்தர் அன்ன மெத்தென் அம் வயிற்று – உஞ்ஞை:40/270
தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் – உஞ்ஞை:41/97

TOP


மெய் (50)

ஐயமுற்று மெய் வகை நோக்கி – உஞ்ஞை:33/12
திருவின் செய்யோள் உருவம் மெய் தோன்ற – உஞ்ஞை:33/111
இது மெய் ஆயின் இன் உயிர் வேண்டி – உஞ்ஞை:36/62
பரிவு மெய் நீங்கி பசலையும் தீர்க என – உஞ்ஞை:36/322
மெய் பனிபது போல் மொய் அவை மருள – உஞ்ஞை:37/114
மெய் காப்பு இளையர் அல்லது கைகூர்ந்து – உஞ்ஞை:38/102
இளம் கலம் தழீஇ எண்ணி மெய் நோக்கி – உஞ்ஞை:38/211
மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து – உஞ்ஞை:40/154
காற்று எறி வாழையில் கலங்கி மெய் நடுங்கி – உஞ்ஞை:43/138
நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த – உஞ்ஞை:50/13
அம் மடி அன்றியும் ஆகும் மெய் மொழி – உஞ்ஞை:54/97
மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என – உஞ்ஞை:55/95
மன் உயிர் காவலற்கு அ மொழி மெய் எனின் – உஞ்ஞை:56/167
வத்தவர் இறைவனும் மெய் தகைத்து ஆக – உஞ்ஞை:56/244
வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் – இலாவாண:2/190
மெய் முதல் திரியாது வேண்டும் கிரிகையில் – இலாவாண:3/132
ஒரு மெய் சேர்ந்து இவை பெருமை பெறுக என – இலாவாண:5/155
மெய் பேய் படிவமொடு பொய் பேய் ஆகி – இலாவாண:9/41
மேயோர்க்கு அல்லது மெய் பொருள் உணர்த்தல் – இலாவாண:9/216
கருத்து மெய் தெரிதல் காவலன் கடன் என – இலாவாண:10/93
மெய் பெற புனைந்து கை_வல் கம்மிய – இலாவாண:19/121
கை வல் ஓவியர் மெய் பெற எழுதிய – மகத:5/41
யாவள் இ நங்கை யாது இவள் மெய் பெயர் – மகத:6/161
திகழ்தரு மதியில் திரு மெய் தழீஇ – மகத:8/60
செவ்வி அறியார் சென்று மெய் சாரின் – மகத:14/39
ஐ வேறு உருவின் மெய் பெற புனைந்த – மகத:14/70
மெய் பெறு விசேடம் வியந்தனன் இருப்ப – மகத:14/102
பெரு மொழி மெய் என பிரியா காதலொடு – மகத:14/254
வைகல்-தோறும் மெய் வகை தெரிவார் – மகத:15/69
பொய்யா வாய் புள் மெய் பெற கிளந்து – மகத:24/24
ஒத்தது நோக்கி மெய் தக தேறி – மகத:25/50
வத்தவ மன்னனும் மெய் தக கேட்டு – மகத:25/70
செய்வதை எல்லாம் மெய் என கருதும் என்று – மகத:25/96
மெய் என தெளிந்து மீட்டு அவன் விட்ட – மகத:25/98
ஏறிய யானையும் தன் மெய் கலனும் – வத்தவ:1/5
மெய் வழி வெம் நோய் நீங்க பையென – வத்தவ:3/110
மெய் காப்பாளனை அவ்வழி ஆய்வோன் – வத்தவ:3/122
செய்வதை எல்லாம் மெய் பெற நாடு என – வத்தவ:4/83
மெய் என கொண்டனையாயின் மற்று அது – வத்தவ:5/99
ஆனா உவகையொடு அவள் மெய் தீண்டியும் – வத்தவ:7/64
துன்றிய வேல் கண் தொழிலும் மெய் அழகும் – வத்தவ:13/80
நீறு மெய் பூசி நெடிய மயிர் களை – வத்தவ:14/67
மெய் அன்று அ மொழி பொய் என்போரும் – வத்தவ:17/30
மிக்கோள் மாற்றம் மெய் எனின் மேலை – நரவாண:1/48
வீழா விழு பொருள் மெய் பெற கண்டனை – நரவாண:1/163
மெய் பொருள் தெரியும் மிடை தார் மன்னவ – நரவாண:3/49
தெய்வ திரு_மகள் சேர்ந்து மெய் காப்ப – நரவாண:6/25
மேற்கொண்டு உரைக்கும் மெய் துறை மருங்கின் – நரவாண:7/96
மெய் தகு நுண் பொருள் மெத்த பன்னி – நரவாண:7/99
மெய் பெற உரை என மேயினன் வினவ – நரவாண:8/94

TOP


மெய்-கொல் (1)

ஒள்_நுதற்கு உற்றது மெய்-கொல் என்று உள்ளி – வத்தவ:10/154

TOP


மெய்-வயின் (3)

மெய்-வயின் கழிந்து வியல் நிலத்து இங்க – உஞ்ஞை:55/143
நெய் தலைப்பெய்த பின்றை மெய்-வயின்
மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும் – இலாவாண:5/96,97
தெய்வ மகடூஉ மெய்-வயின் பணித்து – வத்தவ:5/79

TOP


மெய்க்கொள (1)

எ துறை மாக்களும் மெய்க்கொள பரப்பி – உஞ்ஞை:35/229

TOP


மெய்கோள் (1)

மெய்கோள் மள்ளரும் மீளி மாந்தரும் – உஞ்ஞை:57/71

TOP


மெய்த்த (1)

பொய்த்தல் இன்றி மெய்த்த தாம் என – உஞ்ஞை:55/36

TOP


மெய்ந்நிறீஇ (1)

எண் மெய்ப்பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ
ஒள் வினை ஓவியர் கண்ணிய விருத்தியுள் – உஞ்ஞை:35/45,46

TOP


மெய்ப்பட (1)

அ பகல் கழிந்த பின்றை மெய்ப்பட
மாண் தகு கிளவி பூண்ட நோன்பிற்கு – மகத:13/19,20

TOP


மெய்ப்பாட்டினுள் (1)

எண் மெய்ப்பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ – உஞ்ஞை:35/45

TOP


மெய்ப்பொருட்டு (1)

வேட்கையின் பெருகி நின் மெய்ப்பொருட்டு அமைந்த – வத்தவ:15/62

TOP


மெய்ப்பொருள் (1)

பொய்ப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் கண்ணும் – உஞ்ஞை:46/343

TOP


மெய்பெற (1)

அவ்வழி இரீஇய பின்றை மெய்பெற
சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை – இலாவாண:5/64,65

TOP


மெய்ம்மறந்து (1)

மெய்ம்மறந்து ஒழிந்தனராயினும் மேலை – வத்தவ:3/98

TOP


மெய்ம்மறப்ப (2)

சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப
இடியேறுண்ட நாகம் போல – இலாவாண:10/111,112
மைம் மலர் கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப
ஏனோர்க்கு இசைப்பின் ஏதம் தரும் என – மகத:14/284,285

TOP


மெய்ம்முறை (1)

வல் வேல் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட – உஞ்ஞை:34/7

TOP


மெய்யா (2)

பண்டே உரைத்த பழமொழி மெய்யா
கண்டேன் ஒழிக இனி காம கலப்பு என – இலாவாண:16/37,38
மேல் நிலை உயர்ச்சியின் மெய்யா மதிக்க – நரவாண:8/74

TOP


மெய்யில் (1)

மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின் – இலாவாண:4/47

TOP


மெய்யின் (1)

மெய்யின் கூறி கை வரை நில்லாது – உஞ்ஞை:52/125

TOP


மெய்யினர் (1)

புக்க மெய்யினர் பூம் தார் மார்பின் – மகத:17/228

TOP


மெய்யினும் (1)

மேதகு மெய்யினும் ஓதல் இன்றி – மகத:15/65

TOP


மெய்யும் (2)

கையும் காலும் மெய்யும் இயைய – வத்தவ:12/186
கையும் காலும் மெய்யும் காணார் – வத்தவ:12/213

TOP


மெய்யுற (4)

கொய் சுவல் இரட்டை மெய்யுற கொளீஇ – உஞ்ஞை:38/339
பொய்யாது முடித்தலின் மெய்யுற தழீஇ – வத்தவ:1/4
கொய் தகை கொடியொடு மெய்யுற நீடிய – வத்தவ:3/79
மெய்யொடு மெய்யுற குழீஇ மற்றவை – வத்தவ:3/91

TOP


மெய்யொடு (1)

மெய்யொடு மெய்யுற குழீஇ மற்றவை – வத்தவ:3/91

TOP


மெய்யோடு (1)

எட்டு மெய்யோடு இசை பெற கிடந்த – வத்தவ:5/114

TOP


மெல் (44)

திரு முகை மெல் விரல் கூப்பி நுந்தை – உஞ்ஞை:33/166
சொல் எதிர்கொள்ளாள் மெல்_இயல் இறைஞ்சி – உஞ்ஞை:33/178
பல் கலம் சேரா மெல் என் யாக்கையர் – உஞ்ஞை:34/124
பால் பரந்து அன்ன பஞ்சி மெல் அணை – உஞ்ஞை:34/145
உள்ளகத்து ஒடு மெல் அடி – உஞ்ஞை:34/211
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற – உஞ்ஞை:35/248
அணங்கு உறை மெல் விரல் வணங்கினள் கூப்பி – உஞ்ஞை:37/161
மெல் இயல் மாதரை உள்ளகம் புகுத்தி – உஞ்ஞை:38/259
நறு மெல் ஆகம் நந்து பொறை எள்க – உஞ்ஞை:40/208
அல்லி மெல் அணை பள்ளி கொண்ட – உஞ்ஞை:40/246
பூளை மெல் அணை பொதி அவிழ்ந்து அன்ன – உஞ்ஞை:40/333
சில் மெல் ஓதி சேர்ந்த சிறு நுதல் – உஞ்ஞை:41/76
மெல் விரல் மெலிவு கொண்டு உள்ளகத்து ஒடுங்க – உஞ்ஞை:48/95
அணி கவின் மெல் நடை அனுக்க அசைந்து_அசைந்து – உஞ்ஞை:53/154
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண் – இலாவாண:2/46
கோயில் மகளிர் கோல மெல் அடி – இலாவாண:2/231
மெல் மருங்கு எழிலியை மெல்லென நடாஅய் – இலாவாண:3/117
சீர் கெழு மெல் விரல் செறிய பற்றி – இலாவாண:5/15
பஞ்சி மெல் அடி பரல் வடு பொறிப்ப – இலாவாண:9/162
மெழுகு செய் பாவையின் மெல் இயல் அசைந்து – இலாவாண:16/115
செம் சாந்து வரித்த சில் மெல் ஆகத்து – இலாவாண:19/107
பஞ்சி மெல் அடி பாவாய் பரந்த – இலாவாண:19/169
கல் சூழ் புல் அதர் மெல் அடி ஒதுங்கி – இலாவாண:20/46
எல்லை கருதியது இது என மெல் இயல் – மகத:7/11
மெல் இயல் கோமகள் மெல்லென வாங்கி – மகத:8/94
அன்ன மெல் நடை அரிவை காண – மகத:9/6
மெல் இயல் மாதரொடு மேவன கிளந்து – மகத:14/159
மெல் விரல் நோவ பல்-கால் ஏற்றி – மகத:14/203
பல் மணி தாலியும் மெல் முலை கச்சும் – மகத:17/165
வல்லே வா என மெல்_இயல் புல்லி – மகத:22/66
மிக்கது என் மனன் என மெல்_இயல் நினைஇ – மகத:22/98
மெல் இயல் மாதர் நகு மொழி பயிற்ற – மகத:22/119
காந்தள் நறு முகை கவற்று மெல் விரல் – வத்தவ:7/209
முகை புரை மெல் விரல் பால் நயம் எய்த – வத்தவ:10/52
மேதகு கிளியும் மெல் நடை அன்னமும் – வத்தவ:10/58
காந்தள் முகிழ் அன்ன மெல் விரல் காந்தள் – வத்தவ:11/78
அன்னத்து அன்ன மெல் நடை அன்னத்து – வத்தவ:11/80
அன்ன மெல் நடை அவந்திகை உவந்தவள் – வத்தவ:12/65
பல்லினும் கண்ணினும் மெல் விரல் வகையினும் – வத்தவ:12/155
காந்தள் முகிழ் நனி கவற்று மெல் விரலின் – வத்தவ:12/197
தேற்றா மெல் நடை சே_இழை-தன்னொடு – வத்தவ:17/20
சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை – வத்தவ:17/70
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற – நரவாண:1/235
மெல்_இயல்-தன்னை வேந்தன் விடுக்க அ – நரவாண:3/63

TOP


மெல்_இயல் (5)

சொல் எதிர்கொள்ளாள் மெல்_இயல் இறைஞ்சி – உஞ்ஞை:33/178
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற – உஞ்ஞை:35/248
வல்லே வா என மெல்_இயல் புல்லி – மகத:22/66
மிக்கது என் மனன் என மெல்_இயல் நினைஇ – மகத:22/98
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற – நரவாண:1/235

TOP


மெல்_இயல்-தன்னை (2)

சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை
கண்டோர் விழையும் கானத்து அக-வயின் – வத்தவ:17/70,71
மெல்_இயல்-தன்னை வேந்தன் விடுக்க அ – நரவாண:3/63

TOP


மெல்ல (4)

திருவே மெல்ல செல்க என்போரும் – உஞ்ஞை:42/57
நங்காய் மெல்ல நட என்போரும் – உஞ்ஞை:42/61
செல்க நங்கை மெல்ல நடந்து என – இலாவாண:16/3
அறியாதான் போல் மெல்ல மற்று அதன் – மகத:14/234

TOP


மெல்லிது (1)

மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய – இலாவாண:7/155

TOP


மெல்லிய (1)

மெல்லிய இடையினும் நல் அணி குறங்கினும் – வத்தவ:12/158

TOP


மெல்லியற்கு (1)

மெல்லியற்கு ஒத்த இவை என புகழ்ந்து – வத்தவ:13/92

TOP


மெல்லென் (4)

சொல் இசை வெரீஇய மெல்லென் பாவை – உஞ்ஞை:36/334
புல்லகம் பொருந்திய மெல்லென் ஓதி – இலாவாண:3/72
மெல்லென் கிளவி சில்லென மிழற்றி – மகத:8/27
மெல்லென் நறு மலர் நல்லவை படுக்க என – வத்தவ:15/142

TOP


மெல்லென (20)

மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து – உஞ்ஞை:40/154
வெம் போர் வேந்தன் மெல்லென இழிந்து – உஞ்ஞை:47/201
செல் விசை கதுமென சுருக்கி மெல்லென
வரை ஏறு அரிமா போல மற்று அதன் – உஞ்ஞை:51/89,90
சில் அரி தடம் கண் மெல்லென மிளிர – உஞ்ஞை:53/150
சில்_இரும்_கூந்தலை மெல்லென நடாஅய் – உஞ்ஞை:56/46
மெல் மருங்கு எழிலியை மெல்லென நடாஅய் – இலாவாண:3/117
இடு மணல் முற்றத்து மெல்லென இழிதர – மகத:5/93
மேதகு வையத்தின் மெல்லென இழிந்து – மகத:6/89
சில்லென பிடித்து மெல்லென இழிந்து – மகத:7/52
மெல் இயல் கோமகள் மெல்லென வாங்கி – மகத:8/94
வெண் முக நிலா ஒளி சுருங்க மெல்லென
உள் மகிழ் உரோணியொடு ஒளித்தது போலவும் – மகத:14/9,10
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி – வத்தவ:5/17
எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து – வத்தவ:7/79
சிறகர் விரித்து மெல்லென நீவி – வத்தவ:10/54
மெல்லென விரித்து வல்லிதின் நோக்கி – வத்தவ:10/110
சில் அரி கண்ணி மெல்லென முரியா – வத்தவ:12/220
நிகழ்ந்ததை அறியான் எழுந்து மெல்லென
நடந்தவன் சென்று அவள் இடம் தலைப்படலும் – வத்தவ:13/221,222
புல்லினன் கொண்டு மெல்லென இருந்து ஒன்று – வத்தவ:14/84
சில்லென் கூந்தலை மெல்லென வாரி – வத்தவ:16/11
பல் கால் சென்று மெல்லென சேர்ந்து – நரவாண:8/121

TOP


மெல (1)

மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் – இலாவாண:7/138

TOP


மெலிந்த (1)

பரிபு மெலிந்த படிவ பண்டிதன் – உஞ்ஞை:36/230

TOP


மெலிந்தது (2)

கலங்க தாக்கலின் மெலிந்தது ஆகி – மகத:17/220
நொந்து புறம் மெலிந்தது அன்றியும் அந்தரத்து – நரவாண:1/202

TOP


மெலிந்து (1)

விச்சையின் மெலிந்து தன் விழு தகு நகர் இழந்து – உஞ்ஞை:53/62

TOP


மெலிய (2)

சேக்கை மெலிய செம்மாந்து இருந்த – உஞ்ஞை:34/146
மை தோய் கண்ணி மதியின் மெலிய
பசைவுறு காதல் பட்ட தேவி – நரவாண:1/210,211

TOP


மெலிவது (1)

மெச்சா மன்னரை மெலிவது நாடி – மகத:17/71

TOP


மெலிவின் (1)

வைகல்-தோறும் வான் மதி மெலிவின்
பையுள் கொண்ட படிமை நோக்கி – இலாவாண:11/3,4

TOP


மெலிவினும் (1)

பள்ளிகொள்ளா பரிவிடை மெலிவினும்
கவர் கணை வேடரொடு அமர் வினை வழியினும் – உஞ்ஞை:57/82,83

TOP


மெலிவு (2)

மெல் விரல் மெலிவு கொண்டு உள்ளகத்து ஒடுங்க – உஞ்ஞை:48/95
மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி – வத்தவ:4/95

TOP


மெலிவும் (1)

நல் நகர் செல்வமும் மெலிவும் நோக்கி – நரவாண:4/158

TOP


மெழுகி (1)

சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து – மகத:14/147

TOP


மெழுகிய (1)

செம் சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து – உஞ்ஞை:45/22

TOP


மெழுகின் (3)

தீ முகத்து இட்ட மெழுகின் தேம்பியும் – உஞ்ஞை:35/52
எரியுறு மெழுகின் உள்ளம் சோர – உஞ்ஞை:46/249
எரியுறு மெழுகின் உருகிய முகத்தன் – உஞ்ஞை:47/67

TOP


மெழுகு (2)

மெழுகு செய் பாவையின் மெல் இயல் அசைந்து – இலாவாண:16/115
மெழுகு செய் பாவையின் உருகும் நெஞ்சினள் – மகத:7/89

TOP


மென் (30)

விழு_நிதி அடுத்த கொழு மென் செல்வத்து – உஞ்ஞை:32/60
மணி முகிழ்த்து அன்ன மாதர் மென் முலை – உஞ்ஞை:33/116
உருத்து எழு மென் முலை முத்து அலைத்தன-கொல் – உஞ்ஞை:33/183
பூ மென் சேக்கையுள் புனை_இழை புகீஇ – உஞ்ஞை:36/128
நானம் தோய்த்த நறு மென் கூந்தலுள் – உஞ்ஞை:40/265
மென் தோள் நெகிழ பற்றி குன்றா – உஞ்ஞை:40/334
பைம் தாள் குருகின் மென் பறை தொழுதி – உஞ்ஞை:41/26
கடிகை வேய் நலம் கழிக்கும் மென் தோள் – உஞ்ஞை:41/70
அம் மென் சாயல் அரிவை மகளிர் – உஞ்ஞை:41/84
நரை இடை படர்ந்த நறு மென் கூந்தலர் – உஞ்ஞை:41/99
மென் கிடை போழ்வை சந்திய ஆகி – உஞ்ஞை:42/36
செறி மென் கச்சை சேர்ந்த அல்குலர் – உஞ்ஞை:43/126
அம் மென் மருங்குல் அசைந்து_அசைந்து ஆட – உஞ்ஞை:48/79
அணை மிசை அசைந்த அம் மென் சிறுபுறம் – உஞ்ஞை:56/136
அம் மென் கூந்தல் அரிவையர் கம்பலும் – இலாவாண:2/173
அம் மென் மருங்குல் அசைய அடி பரந்த – இலாவாண:2/209
கோங்கு அரும்பு அழித்த வீங்கு இள மென் முலை – இலாவாண:2/211
அம் மென் சாயல் செம் முது பெண்டிர் – இலாவாண:3/60
மணக்கால் பந்தருள் வடம் மென் மருங்குல் – இலாவாண:4/43
அசைந்து அணிகொண்ட அம் மென் சாயல் – இலாவாண:4/125
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் – இலாவாண:7/138
கொழு முகை குவித்த செழு மென் சிறு விரல் – இலாவாண:15/75
அம் மென் பாளையுள் அசைந்த வண்டு இனம் – மகத:4/50
குறுகிய நடுவில் சிறுகிய மென் முலை – மகத:8/52
ஆடு கொம்பு அன்ன அம் மென் மருங்குல் – மகத:9/31
மன்னவன் வைத்த சில் மென் போதுடன் – மகத:9/75
மாவடு மட கண் மாதர் மென் முலை – மகத:25/149
வேய் என திரண்ட மென் தோள் வேயின் – வத்தவ:11/76
நறு மென் குழலினும் செறி நுண் புருவத்து – வத்தவ:12/156
பணை வேய் மென் தோள் பதுமாதேவி – நரவாண:4/99

TOP


மென்மெல (5)

அன்ன தொழுதியின் மென்மெல வலங்கொண்டு – இலாவாண:3/59
விம்முவனர் தளர்ந்து மென்மெல ஒதுங்கி – இலாவாண:5/117
மென்மெல விடுக என பல் முறை பணிய – மகத:5/82
அன்னம் போல மென்மெல ஒதுங்கி – மகத:9/50
மென்மெல இயலி வீதி போந்து – வத்தவ:17/99

TOP


மென்மை (1)

அணை புரை மென்மை அமைபடு பணை தோள் – இலாவாண:15/72

TOP


மென்மைய (1)

எழுது வினை பொலிந்த இழுது உறழ் மென்மைய
முறைமையின் அடுத்த குறைவு_இல் கோலமொடு – மகத:14/59,60

TOP


மென்மையின் (1)

மென்மையின் இயன்று செம்மைய ஆகி – மகத:5/13

TOP


மென்மையும் (2)

மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும் – இலாவாண:5/97
செம்மையும் மென்மையும் சிறந்து வனப்பு எய்தி – இலாவாண:19/176

TOP