மீ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 5
மீக்கூரி 10
மீக்கூரிய 11
மீக்கூரும் 1
மீக்கூற்றமும் 2
மீக்கூறி 3
மீக்கூறிய 6
மீக்கூறும் 1
மீக்கொற்றவன் 1
மீக்கோள் 3
மீட்கும் 1
மீட்சி 1
மீட்டல் 1
மீட்டனம் 1
மீட்டனன் 2
மீட்டனை 1
மீட்டிடம் 1
மீட்டின 1
மீட்டு 14
மீட்டும் 3
மீட்டுமீட்டு 1
மீண்டனன் 2
மீண்டு 3
மீண்டும் 1
மீத்தக 1
மீது 6
மீதூர்ந்த 1
மீதூர்ந்து 2
மீதூர 1
மீமிசை 20
மீளி 3
மீன் 17
மீனில் 1
மீனின் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மீ (5)

பூ போது உறுத்த மீ பொன் கிண்கிணி – உஞ்ஞை:39/33
காழகம் மீ கொண்டு ஆழும் தானையன் – உஞ்ஞை:40/79
பாப்பு உரி அன்ன மீ கொள் தானை – உஞ்ஞை:42/244
உணராதான் போல் ஒரு மீ கொற்றவன் – இலாவாண:8/46
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் – இலாவாண:15/126

TOP


மீக்கூரி (10)

தானம் மீக்கூரி மேல் நிவந்து ஓங்கி – உஞ்ஞை:45/5
திரு நகர் அக-வயின் திறன் மீக்கூரி
ஒரு துணை வயவர் உள் வழி திரிதர – உஞ்ஞை:46/1,2
திரு முக மருங்கில் செரு மீக்கூரி
ஒள் இழை மகளிர் உள்ளம் கவற்றும் – உஞ்ஞை:55/5,6
ஆண்மை அழிய நாண் மீக்கூரி
மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என – உஞ்ஞை:55/94,95
திரு மனை கிழமையின் ஒரு மீக்கூரி
கற்பு மேம்படீஇயர் பொன்_தொடி பொலிந்து என – இலாவாண:5/93,94
அழல் கண் அகற்றி நிழல் மீக்கூரி
நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி – இலாவாண:13/17,18
நயப்புறு நெஞ்சமோடு நண்பு மீக்கூரி
இயக்கன் அவ்வழி இழிந்தன இனிது என் – நரவாண:2/67,68
மாறு தனக்கு இன்றி மறம் மீக்கூரி
ஆறு தனக்கு அரணா அணி நலம் நுகர்ந்து – நரவாண:3/70,71
பொலிந்த செல்வமொடு புகழ் மீக்கூரி
மலிந்த திருவின் வத்தவர் பெரும் குடி – நரவாண:7/1,2
வட திசை மீனில் கற்பு மீக்கூரி
வடு_இல் செய் தொழில் வத்தவர் பெருமகன் – நரவாண:7/32,33

TOP


மீக்கூரிய (11)

உரிமை தேவியர்க்கு ஒரு மீக்கூரிய
பட்ட தேவிக்கு பட்டதை எல்லாம் – உஞ்ஞை:47/151,152
மண் மீக்கூரிய மன்னவன் மட மகள் – இலாவாண:1/44
பெண் மீக்கூரிய பெரு நல வனப்பின் – இலாவாண:1/45
வட-பால் மருங்கில் சுடர் மீக்கூரிய
கற்பு உடை விழு மீன் காண காட்டி – இலாவாண:3/125,126
தா_இல் அணியின் தான் மீக்கூரிய
அறுவைக்கு ஓதிய ஐ வகை வண்ணத்து – இலாவாண:5/127,128
தன்னின் அல்லது தாம் மீக்கூரிய
மன்னரை வணக்கும் மற மாச்சேனன் – இலாவாண:17/106,107
தான் மீக்கூரிய ஏம வெண் குடை – மகத:5/7
செம் சுடர் முகத்தே செரு மீக்கூரிய
வெம் சின வேந்தர்க்கு நஞ்சு உமிழ் நாகத்து – மகத:6/46,47
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய
படை நவில் தட கை பைம் தார் கரும் கழல் – மகத:17/14,15
தேர் அணி சேனை திறன் மீக்கூரிய
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள் – வத்தவ:7/98,99
பெரு முது தலைமையின் ஒரு மீக்கூரிய
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய – வத்தவ:7/221,222

TOP


மீக்கூரும் (1)

வம்பு மீக்கூரும் பொங்கு இள முலையின் – உஞ்ஞை:41/79

TOP


மீக்கூற்றமும் (2)

பெரு மீக்கூற்றமும் பேணான் பிறரொடு – மகத:25/83
செரு மீக்கூற்றமும் செய்கையும் வேண்டாம் – மகத:25/84

TOP


மீக்கூறி (3)

உரிமை மகளிரொடு செரு மீக்கூறி
கரை செல் மாக்கள் கலாஅம் காமுறூஉம் – உஞ்ஞை:41/21,22
பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறி
திரு மணி அடக்கிய செம்பொன் செப்பின் – இலாவாண:6/159,160
பொன் நகர் புக்க பின் புகழ் மீக்கூறி
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும் – நரவாண:5/1,2

TOP


மீக்கூறிய (6)

எறி கடல் தானை இறை மீக்கூறிய
செம்பொன் பட்டத்து சேனாபதி மகள் – உஞ்ஞை:42/169,170
பொரு_இல் போகமொடு ஒரு மீக்கூறிய
உருவ பூம் தார் உதயணகுமரனும் – இலாவாண:14/54,55
இகல் அடு தானை இறை மீக்கூறிய
தவல்_அரும் வென்றி தருசகன் தங்கை – மகத:6/135,136
மாமாத்தியருள் மதி மீக்கூறிய
பகை புலம் தேய்க்கும் படை திறல் தட கை – மகத:23/21,22
இறை மீக்கூறிய இராமன் தம்பி – மகத:24/90
உள் முதல் உலகிற்கு ஒரு மீக்கூறிய
தெய்வ வாழி கை வலத்து உருட்டலும் – நரவாண:6/137,138

TOP


மீக்கூறும் (1)

உரு மீக்கூறும் மன்னவன் ஒரு மகள் – உஞ்ஞை:40/233

TOP


மீக்கொற்றவன் (1)

ஒரு மீக்கொற்றவன் உடை பொருள் உடைய – உஞ்ஞை:40/343

TOP


மீக்கோள் (3)

ஆய் மணி அணை சார்ந்து அரத்தம் மீக்கோள்
தாள் முதல் அசைத்து ஓர் தாமரை கையன் – உஞ்ஞை:47/51,52
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து அசைஇ – மகத:17/172
கை நுண் மீக்கோள் கச்சினோடு அணவர – நரவாண:2/22

TOP


மீட்கும் (1)

மீட்கும் வேட்கையொடு சேண் புலம் போகி – மகத:2/7

TOP


மீட்சி (1)

மிக்கு வாய் கூரும் மீட்சி வேட்கையன் – உஞ்ஞை:42/247

TOP


மீட்டல் (1)

மீட்டல் செல்லா வேட்ட விருப்பொடு – இலாவாண:7/92

TOP


மீட்டனம் (1)

பூ குழை மாதரை மீட்டனம் கொண்டு – மகத:1/80

TOP


மீட்டனன் (2)

வாள் தொழில் தருசகன் மீட்டனன் போக்கி – வத்தவ:4/16
வாள் திறல் வேந்தன் மீட்டனன் விடுத்தலின் – வத்தவ:13/137

TOP


மீட்டனை (1)

தோள் துணை மாதரை மீட்டனை பணி என – வத்தவ:6/81

TOP


மீட்டிடம் (1)

மீட்டிடம் பெற்று கூட்டிடம் கூடி – உஞ்ஞை:57/75

TOP


மீட்டின (1)

காட்டினை சென்மோ மீட்டின தெளிக என – உஞ்ஞை:35/203

TOP


மீட்டு (14)

மீட்டு அவன் போக்கும் மாற்றம் கேட்டே – உஞ்ஞை:46/155
மீட்டு அகம் புக்கு மேவரு செல்வமொடு – இலாவாண:7/147
தந்தனன் மீட்டு எனும் சிந்தையன் ஆகி – மகத:6/43
நீட்ட கொள்ளாள் மீட்டு அவள் இறைஞ்சி – மகத:14/231
காட்டுதல் குறை என மீட்டு அவள் உரைப்ப – மகத:15/37
கூட்டம் பெருக்கி மீட்டு வந்தனரெனின் – மகத:19/50
மீட்டு அவன் போக்க வேட்பனன் விரும்பி அவன் – மகத:19/155
பெரு விறல் கொழுநன் இன் உயிர் மீட்டு
பெற்ற ஒழுக்கின் பெரியோள் போல – மகத:22/170,171
மிகை செய்து இருந்ததன் மேலும் மீட்டு இனி – மகத:25/36
மெய் என தெளிந்து மீட்டு அவன் விட்ட – மகத:25/98
மிகுதி அச்சம் மீட்டு அவற்கு உணர்த்தி – மகத:25/113
வீறு பெற்றனரால் மீட்டு தலைப்புணர்ந்து என் – வத்தவ:7/245
மீட்டு தலைப்புணர்ந்த-காலை மேவார் – வத்தவ:8/1
கூட்டினளாகி மீட்டு அவண் மொழிவோள் – வத்தவ:13/35

TOP


மீட்டும் (3)

வேக மன்னர் மீட்டும் வந்து இறுத்த – மகத:19/46
கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன் – மகத:24/203
மேவர காட்டலும் மீட்டும் கூறுவன் – வத்தவ:6/61

TOP


மீட்டுமீட்டு (1)

கேட்டோர் உருக மீட்டுமீட்டு அரற்ற – இலாவாண:10/157

TOP


மீண்டனன் (2)

அமைச்சன் மீண்டனன் அகம் நனி புகன்று என் – மகத:21/111
வேண்டி கொண்டு மீண்டனன் போந்துழி – வத்தவ:4/89

TOP


மீண்டு (3)

மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட – உஞ்ஞை:43/191
விடுக்க போந்தனென் மீண்டு இது கூறு என – உஞ்ஞை:47/95
வேண்டா அஃது இவண் மீண்டு இது கேட்க என – மகத:25/57

TOP


மீண்டும் (1)

வேண்டா என்ற பின் மீண்டும் மேக்கு ஓங்கி – நரவாண:4/102

TOP


மீத்தக (1)

கோலம் மீத்தக வால் அணி கொளீஇ – மகத:22/205

TOP


மீது (6)

பரந்து மீது அரும்பிய பசலை வானத்து – உஞ்ஞை:33/50
நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப – இலாவாண:7/58
தோள் மீது ஊர்ந்து தொலைவு இடம் நோக்கி – இலாவாண:7/59
பசப்பு மீது அடர்ந்து மிக பொலிந்து இலங்க – மகத:9/93
அவந்தி நாடும் இகந்து மீது இயங்கி – நரவாண:4/143
எழிலி மீது ஆங்கு இனிதின் நடப்ப – நரவாண:5/44

TOP


மீதூர்ந்த (1)

தோள் மீதூர்ந்த துயரம் நீங்க – வத்தவ:7/208

TOP


மீதூர்ந்து (2)

வேலை எல்லை மீதூர்ந்து இரண்டு – மகத:6/59
வேழம் நினைஇ வேட்கை மீதூர்ந்து
ஊழ் வினை வகையின் உடம்பு இட்டு ஏகி – நரவாண:3/95,96

TOP


மீதூர (1)

நாண் மீதூர நடுங்குவனள் எழுந்து – வத்தவ:7/207

TOP


மீமிசை (20)

மீமிசை உலகினும் தீது இகந்தன்று என – உஞ்ஞை:37/147
எக்கர் மீமிசை தொக்கு ஒருங்கு ஈண்டி – உஞ்ஞை:40/141
அரவின் பரந்த அல்குல் மீமிசை
கலாஅய் கிடந்த குலாத்தரு கலிங்கம் – உஞ்ஞை:42/140,141
ஓடுதல் புரிந்த உறு பிடி மீமிசை
கூந்தலும் கூந்தல் வேய்த்த கோதையும் – உஞ்ஞை:48/76,77
ஓரி மீமிசை பாய்தலில் கிழிந்து – உஞ்ஞை:50/34
கட்டில் மீமிசை கட்டு அலர் கமழும் – இலாவாண:3/146
மை வரை மீமிசை மகளிர் போல – இலாவாண:7/30
பொங்கு மழை தவழும் பொதியின் மீமிசை
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி – மகத:1/184,185
வெம் கனல் மீமிசை வைத்த வெண்ணெயின் – மகத:7/69
மீமிசை கட்டின் வாய் முதல் தாழ்ந்த – மகத:14/79
உருவொடு புணர்ந்த உயர் அணை மீமிசை
இரு புடை மருங்கினும் எழில் பட விரீஇ – மகத:14/89,90
கொம்பர் மீமிசை கூகை வந்து உலாஅய் – மகத:14/152
கொட்டை மீமிசை குளிர் மதி விசும்பிடை – வத்தவ:5/113
சேண் உயர் மாடத்து மீமிசை எடுத்த – வத்தவ:7/233
மாட மீமிசை மயில் இறைகொண்டு என – வத்தவ:13/66
திரு நுதல் மீமிசை திறத்துளி கிடந்த – வத்தவ:13/154
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின் – நரவாண:1/154
எருத்தின் மீமிசை திரு தக இரீஇ – நரவாண:7/19
படு முகில் மீமிசை பனி மதி போல – நரவாண:8/79
மீமிசை மருங்கின் மின் என நுடங்கி – நரவாண:8/47

TOP


மீளி (3)

மெய்கோள் மள்ளரும் மீளி மாந்தரும் – உஞ்ஞை:57/71
மேல் வரவு உண்டு எனின் மீளி வாட்டி – இலாவாண:19/222
மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின் – நரவாண:3/44

TOP


மீன் (17)

வரம்பு_இல் பல் மீன் வயின்வயின் விலங்கி – உஞ்ஞை:33/49
புரை மீன் கூடிய பொழுது இயல் கூற – உஞ்ஞை:39/7
வால் மதி இழந்த மீன் இனம் போல – உஞ்ஞை:47/260
மண்டில மதியமொடு கதிர் மீன் மயங்கி – உஞ்ஞை:48/113
பறவை பார்ப்பு இனம் சிறு மீன் செகுத்து – உஞ்ஞை:51/74
வானக நாள்_மீன் தானம் நோக்கி – உஞ்ஞை:52/3
வெண் மீன் போல வென்றி எய்தி – உஞ்ஞை:56/279
நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும் – உஞ்ஞை:58/56
நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும் – உஞ்ஞை:58/56
விடு சுடர் மதியமொடு வெண் மீன் இவர்ந்த – இலாவாண:3/124
கற்பு உடை விழு மீன் காண காட்டி – இலாவாண:3/126
அரும் கல வெறுக்கை அவை மீன் ஆக – இலாவாண:7/77
வெண் முகில் நடுவண் மீன் முகத்து எழுதரும் – இலாவாண:7/104
மீன் கண்டு அன்ன வெண் மணல் விரிந்த – இலாவாண:9/5
விடு சுடர் விசும்பின் மீன் என சிதற – இலாவாண:18/98
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன்
அக-வயின் பொலிந்து தன் அலங்கு கதிர் பரப்பி – மகத:3/12,13
மீன் முகம் புல்லென – மகத:7/100

TOP


மீனில் (1)

வட திசை மீனில் கற்பு மீக்கூரி – நரவாண:7/32

TOP


மீனின் (1)

வான மீனின் வயின்வயின் இமைக்கும் – இலாவாண:5/56

TOP