நீ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 65
நீஇர் 1
நீக்க 1
நீக்கப்பட்டனென் 1
நீக்கம் 3
நீக்கல் 1
நீக்கலும் 2
நீக்கவும் 1
நீக்கற்கு 1
நீக்கி 58
நீக்கிய 5
நீக்கு 1
நீக்குதல் 2
நீக்குதற்கு 1
நீக்குநர் 1
நீக்கும் 7
நீக்குவனர் 1
நீக்குவனன் 1
நீக்குவென் 2
நீங்க 15
நீங்கல் 3
நீங்கலும் 6
நீங்கா 2
நீங்கி 31
நீங்கிய 11
நீங்கியது 1
நீங்கிற்று 2
நீங்கினர் 1
நீங்கினள் 1
நீங்கினும் 1
நீங்கு 7
நீங்கு-மின் 3
நீங்குக 1
நீங்குதல் 1
நீங்குநர் 1
நீங்கும் 4
நீங்குமோ 1
நீங்குவல் 1
நீங்குவையாயின் 1
நீட்ட 5
நீட்டம் 2
நீட்டலும் 2
நீட்டி 8
நீட்டிய 1
நீட்டியும் 1
நீடி 2
நீடிய 3
நீடு 12
நீடுதல் 1
நீண்ட 4
நீத்த 2
நீத்தத்து 4
நீத்தம் 3
நீத்தலின் 1
நீத்தவர் 1
நீத்தனெம் 1
நீத்தி 1
நீத்திற்று 1
நீத்து 5
நீத்து_அரும் 1
நீத்தொடு 1
நீத்தோர் 1
நீத்தோள் 1
நீதி 6
நீதியது 1
நீதியர் 1
நீதியன் 1
நீதியாள 1
நீதியாளர் 1
நீதியில் 2
நீதியின் 3
நீதியும் 4
நீதியுள் 1
நீதியை 1
நீந்தி 12
நீந்து 1
நீந்துதல் 2
நீந்துபு 1
நீந்தும் 1
நீப்ப 6
நீப்ப_அரும் 6
நீப்பிடம் 2
நீப்பிடம்-தோறும் 1
நீப்பு 1
நீப்புறவு 1
நீயான் 1
நீயும் 9
நீயே 4
நீர் 198
நீர்-தான் 1
நீர்-வயின் 2
நீர்-வாய் 1
நீர்_கடன் 1
நீர்_அல 1
நீர்_அற 1
நீர்_இல் 1
நீர்த்தால் 1
நீர்த்து 2
நீர்தர 1
நீர்ப்பட்ட 1
நீர்ப்பட்டன 1
நீர்மை 6
நீர்மைக்கு 2
நீர்மைத்து 2
நீர்மையர் 1
நீர்மையில் 1
நீர்மையின் 1
நீர்மையும் 5
நீர 2
நீரணி 1
நீரதில் 1
நீரது 1
நீராட்டணி 5
நீராட்டி 2
நீராட்டின் 2
நீராட்டினுள் 1
நீராட்டு 8
நீரால் 1
நீரிடை 2
நீரில் 3
நீரின் 7
நீரும் 1
நீரோடு 1
நீல் 5
நீல 25
நீலகேசி 1
நீலத்து 5
நீலம் 4
நீலமும் 2
நீலமொடு 1
நீலமோடு 1
நீவி 12
நீவியும் 1
நீழல் 5
நீள் 19
நீளமும் 3
நீளி 1
நீறு 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நீ (65)

சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என – உஞ்ஞை:36/181
தாய் என்று அறிந்தனன் நீ இனி வளர்க்க என – உஞ்ஞை:36/269
காமுறற்கு ஒவ்வா கயக்கம்_இலாள நீ
ஒட்டா கணிகையை பெட்டனை என்பது – உஞ்ஞை:36/283,284
நுந்தை நெஞ்சம் நீ அற பெற்றாங்கு – உஞ்ஞை:37/174
நீ செலல் பாணி நின் தாயர் எல்லாம் – உஞ்ஞை:38/207
செல்லல் ஆணை நில் இவண் நீ என – உஞ்ஞை:40/93
என் வலித்தனையோ இறைவ நீ என – உஞ்ஞை:46/187
ஆறு என அருளாய் அண்ணல் மற்று அது நீ
வேறு என அருளிய வேட்கை உண்டு எனின் – உஞ்ஞை:47/141,142
நெடித்தல் செல்லாய் விடுத்தல் நீ என – உஞ்ஞை:54/89
சேக்கையுள் நின்று நீ சென்ற செலவும் – உஞ்ஞை:54/125
மை அணி இரும் பிடி வீழ மற்று நீ
உய்வல் என்று எண்ணி ஒளித்தனை போந்தனை – உஞ்ஞை:55/134,135
யாரை நீ எமக்கு அறிய கூறு என – உஞ்ஞை:55/137
போத்தந்து அல்லது போதாய் நீ என – இலாவாண:8/189
நங்கையை தழீஇ நீ போந்த கங்குல் – இலாவாண:10/24
நீ முன் உண்ணினும் நீங்குவல் யான் என – இலாவாண:11/119
அ வழி மற்று நீ வளர இ வழி – இலாவாண:11/148
ஈண்டு இவண் வந்து நீ வீற்றிருப்பதூஉம் – இலாவாண:11/160
விரும்பி நீ பிடித்த வெண் மலர் வீழ்ச்சி – இலாவாண:13/54
பொருந்தி நீ அளக்கும் பொரு_இல் போகத்து – இலாவாண:13/55
அருளின் நீ விழைந்த மருளின் நோக்கின் – இலாவாண:16/96
இவறினை நீ என தவறு முந்துறீஇ – இலாவாண:16/104
அரண் நீ அருள் என்று அடைவது போன்று ஓர் – இலாவாண:16/108
வலிக்கற்பாலை வயங்கு_இழை நீ என்று – இலாவாண:17/146
வெய்து உயிர்ப்பு அடக்கி நீ வேண்டியது வேண்டா – இலாவாண:17/179
நீதியாள நீ வேண்டுவ வேண்டு என – இலாவாண:17/184
நன் பொன் குழை நீ நல் நுதல் மாதரை – இலாவாண:19/95
நீ யார் நங்கை நின்னே போலும் எம் – மகத:9/95
வெகுளல் நீ என தவளை அம் கிண்கிணி – மகத:9/167
நன்னர் நெஞ்சம் நாடுவை நீ என – மகத:9/179
நீ நனி பாடு என நேர்_இழை அருளி – மகத:14/198
உய்ந்தனை ஆகுதி அஞ்சல் நீ என – மகத:20/114
பெறற்கு_அரு நும்பியை பெறுதி நீ என – மகத:20/118
வலித்ததை உணர்த்தி வருதி நீ என – மகத:21/28
விள்ளா படையொடு வேறு நீ இருப்ப – மகத:24/142
நெஞ்சு நீ நெகிழ்ந்து அவன் தெளியலை செல் என – மகத:25/77
செல் சார்வு ஆகி சிறந்தோய் நீ என – மகத:25/164
தாரகாரியை தரீஇ நீ சென்று – மகத:26/5
அகைத்தது அறிந்தனை அருள்-மதி நீ என்று – மகத:27/83
இயக்கும் ஒருவனை இவண் தரல் நீ என – வத்தவ:3/128
தருக என் தனி துணை தந்தோய் நீ இவண் – வத்தவ:3/142
அ நகர் இருக்க பெறாஅய் நீ என – வத்தவ:3/145
எனக்கு அணங்கு ஆகி நின்ற நீ பயிற்றிய – வத்தவ:4/5
நயந்து நீ அரற்றும் நல் நுதல் அரிவையும் – வத்தவ:6/17
காண தருகுறு முனிவனை நீ இனி – வத்தவ:7/188
பொருள் வகையாயினும் புகழோய் நீ இனி – வத்தவ:7/196
கற்பு மேம்படீஇயர் கணம்_குழை நீ என – வத்தவ:8/23
அமைத்தனை நீ என அவையது நடுவண் – வத்தவ:8/81
நீட்டம் இன்று அவள் நீ அளவிடினே – வத்தவ:10/164
தனித்து நீ கண்டருள் அவைக்குள் என் என – வத்தவ:13/19
இற்றது என் உயிர் இது நீ விலக்கு என – வத்தவ:14/13
நிகழ்ந்தது என் என நீ கடைக்கூட்ட – வத்தவ:14/14
வேறு ஒரு வரை நீ விடுத்தருள் என்று – வத்தவ:14/21
மற்றொன்று உளதேல் பொன்_தொடி அருள் நீ
இ தகைத்து ஈது என எடுத்தனன் எறிய – வத்தவ:14/55,56
தானே கூறும் நீ அது தாங்கி என் – வத்தவ:14/90
யானே முன்நின்று அடுப்ப நீ என் – வத்தவ:15/77
நன்றி இல் விலங்கின் பிறவி நயந்து நீ
கானம் செய்தது காரணமாக – நரவாண:3/97,98
பிறந்த பின்றை சிறந்து நீ நயந்த – நரவாண:3/101
ஊரப்படு நீ ஓர் இருள் எல்லையுள் – நரவாண:3/127
அஞ்சாது ஐம்பதம் நினை-மதி நீ என – நரவாண:3/134
எஞ்சாது அவண் நீ இயல்பினில் திரியாது – நரவாண:3/135
பெரிது அவன் உணர்ந்து பெற்றனை நீ என – நரவாண:3/168
ஒள் அரி மழை கண் தேவியை உள்ளி நீ
பள்ளிகொண்டுழி பரிவு கை அகல – நரவாண:3/200,201
மகனது வரவும் முறைமையின் உணர்த்து நீ
அகனமர்ந்து உரைத்த அயாஅ அரும் பொருள் – நரவாண:3/216,217
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர் – நரவாண:5/35
வருக என்றனன் செல்-மதி நீ என – நரவாண:7/153

TOP


நீஇர் (1)

நிறை மலர் நெடும் கண் நீஇர் நெகிழ – இலாவாண:10/58

TOP


நீக்க (1)

நீக்க சென்றனென் நெருநல் இன்று இவண் – மகத:6/32

TOP


நீக்கப்பட்டனென் (1)

நீக்கப்பட்டனென் ஆதலின் நிலையா – மகத:6/33

TOP


நீக்கம் (3)

வேண்டிடத்து ஆடும் விருப்புறு நீக்கம்
யாண்டு கழிந்து அன்ன ஆர்வம் ஊர்தர – இலாவாண:16/5,6
நோக்க_அரும் கதிரவன் நீக்கம் பார்த்து – மகத:14/5
காவலன் நீக்கம் நோக்கி வந்து – வத்தவ:8/19

TOP


நீக்கல் (1)

நீக்கல் நின் கடன் என மா கேழ் இரும் பிடி – உஞ்ஞை:45/48

TOP


நீக்கலும் (2)

இன்னா நீக்கலும் ஏயர் குலத்தோற்கு – மகத:18/102
காம்பு_ஏர்_தோளி கையின் நீக்கலும்
மானனீகை-தான் ஊடினள் ஆகி – வத்தவ:13/224,225

TOP


நீக்கவும் (1)

விலக்கவும் நீக்கவும் பெறீஇர் என்று தன் – மகத:6/105

TOP


நீக்கற்கு (1)

சிறை துயர் நீக்கற்கு செய்த வேடமும் – உஞ்ஞை:45/25

TOP


நீக்கி (58)

பொன் செய் பேழையொடு பொறி தாழ் நீக்கி
நன்கனம் படுத்து நகு மலர் பரப்பி – உஞ்ஞை:32/77,78
விட்டு உழல் யானை அச்சம் நீக்கி
வெறிகோள் பண்ணியும் தொழில் தலைப்பெயர்த்தவன் – உஞ்ஞை:32/93,94
பொன் செய் ஓலையொடு பூம் குழை நீக்கி
மணி செய் கடிப்பிணை மட்டம் செய்து – உஞ்ஞை:34/198,199
வீழ்தரு கண்ணீர் விரலின் நீக்கி
கவாஅன் கொண்டு காரணம் காட்டி – உஞ்ஞை:36/72,73
மகள்-வயின் புக்கு மம்மர் நோய் நீக்கி
நல்லோள் கற்கும் நாழிகை இறந்தன – உஞ்ஞை:36/349,350
பண்டு கண் அழிந்த பகையினை நீக்கி
பொன்னும் நெல்லும் புரிவின் வழங்குக என்று – உஞ்ஞை:37/195,196
வேக ஊடல் அவள்-வயின் நீக்கி
உருவ கோலமொடு ஓம்பல் செல்லாது – உஞ்ஞை:40/340,341
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி
கதிர் நிழற்கு அவாஅ பதும நிறம் கடுக்கும் – உஞ்ஞை:42/143,144
வெம்முறு படிவம் நீக்கி யூகி – உஞ்ஞை:46/82
சிறை இவன் என்னும் சிந்தையின் நீக்கி
குறை உடை உள்ளமொடு கொள்க என தந்து தன் – உஞ்ஞை:46/145,146
ஏனோர் உணர்த்துதல் நீக்கி கோமான் – உஞ்ஞை:47/153
கை புனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி
அம் பூம் தானை அடி முதல் தடவர – உஞ்ஞை:47/199,200
வெப்ப நீக்கி தட்பம் தான் செய – உஞ்ஞை:48/59
தெய்வ பேரியாழ் கை-வயின் நீக்கி
வீக்குறு புரோசை வாய் பொன் பந்தத்து – உஞ்ஞை:49/11,12
அகப்பட்டு இயங்குநர் அச்சம் நீக்கி
புறப்பட்டு இயங்குநர் புன்கண் செய்யும் – உஞ்ஞை:49/21,22
கவற்சியின் கையறல் நீக்கி முயற்சியின் – உஞ்ஞை:53/52
வில்லின் நீக்கி வெள்ளிடை செய்து அவர் – உஞ்ஞை:56/38
நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம் – உஞ்ஞை:56/82
யானை வேட்கையின் சேனை நீக்கி
பற்றா மன்னனின் பற்றவும் பட்டனை – இலாவாண:1/27,28
திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி
உருவொடு புணர்ந்த ஒளியினர் ஆகு-மின் – இலாவாண:2/43,44
பதர் சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கி
பொருள் சொல் நிரப்பும் புலவர் போல – இலாவாண:4/51,52
பஞ்சி பட்டொடு துரூஉ கிழி நீக்கி
பைம் கதிர் அவிர் மதி பாகத்து அன்ன – இலாவாண:4/166,167
பறவை தொழுதி பக்கம் நீக்கி
நிறைய முகந்து முறைமையின் ஏந்தி – இலாவாண:5/45,46
நீராட்டு இடத்தின் நீக்கி நடுவிற்கு – இலாவாண:5/162
இட்டு இடர் பொழுதின் இன்பம் நீக்கி
கட்டு அழல் புகூஉம் சுட்டுறு கோல் போல் – இலாவாண:8/154,155
சிறை வினை நீக்கி இறை வினை இரீஇ – இலாவாண:8/183
அகலாதோரையும் அகல்க என நீக்கி
உம்மை பிறப்பில் கொண்டும் செம்மற்கு – இலாவாண:9/213,214
வீழ்தரு வெம் துளி விரலின் நீக்கி
செவிலி தவ_மகள் தேற காட்டி – இலாவாண:10/62,63
ஞாலம் காவல் நஞ்சு என நீக்கி
பாய் பரி இவுளி ஏயர் பெருமகன் – இலாவாண:11/58,59
அரணம் வேண்டாது அச்சம் நீக்கி
வருணம் ஒன்றாய் மயங்கிய ஊழி – இலாவாண:13/9,10
பயில் இதழ் பனி நீர் பக்கம் நீக்கி
வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு – இலாவாண:19/150,151
கணம் புரி பெரும் படை காவல் நீக்கி
குணம் புரி தோழர் கொண்டனர் போதர – மகத:1/91,92
பழ மணல் நீக்கி புது மணல் பரப்பி – மகத:5/44
பக்கம் நீக்கி பைம் தொடி கோமாள் – மகத:9/33
வாயில் நாடி வையம் நீக்கி
பல் வகை தானம் நல்குகம் இன்று என – மகத:13/8,9
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி
பஞ்சி உண்ட அம் செம் சீறடி – மகத:13/39,40
ஒள் உறை நீக்கி ஒளி பெற துடைத்து – மகத:14/201
வேறு அலன் அவனை வென்றியின் நீக்கி
மாறுசெயற்கு இருந்த மன்னரை ஓட்டியது – மகத:18/22,23
வெம் சின வேழத்து வெகுட்சி நீக்கி
பல் உயிர் பருவரல் ஓம்பிய பெருமகன் – மகத:18/98,99
கூர் எரி படுத்து குறை வினை நீக்கி
மகதவர் இறைவனும் வத்தவர் மன்னனும் – மகத:20/145,146
தன் நகர் துறந்து தலைமை நீக்கி
பின் இவண் இரங்க பெற்றனளாதலின் – மகத:20/175,176
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி
மறுத்தல் செல்லா சிறப்பு முந்துறீஇ – மகத:21/63,64
மனத்து எழு கவற்சியொடு மண் முதல் நீக்கி
நய தகு மாதரொடு அமைச்சனை இழந்து இனி – மகத:21/89,90
பெண் பால் பேர் அணி நீக்கி திண்-பால் – மகத:24/157
புன் சொல் படு நுகம் புதியவை நீக்கி
செங்கோல் செல்வம் சிறப்ப ஓச்சி – வத்தவ:2/5,6
தீயன நீக்கி திரு விழை தகைத்தா – வத்தவ:2/96
சேண் புலம்பு அகல சிந்தை நீக்கி
வீணை கைவலத்து இரீஇ விதியுளி – வத்தவ:6/83,84
நின் அணி எல்லாம் நீக்கி ஓரா – வத்தவ:7/60
கோட்டிய முடியன் ஏட்டு பொறி நீக்கி
மெல்லென விரித்து வல்லிதின் நோக்கி – வத்தவ:10/109,110
மாவும் வேழமும் வழக்கு நனி நீக்கி
வல்லென மணி நிலம் உறாமை வாயில் – வத்தவ:15/139,140
கல் உண் கலிங்கம் நீக்கி காவலன் – வத்தவ:16/33
கேட்டு அவள் கலுழ வேட்கையின் நீக்கி
காசு_அறு கடவுள் படிவம் கொண்டு ஆங்கு – வத்தவ:17/8,9
நின்ற அரும் தவம் நீக்கி நிதானமொடு – வத்தவ:17/62
வெற்ற தானையும் வேழமும் நீக்கி
உற்றோர் சிலரோடு ஒரு நாள் இடைவிட்டு – நரவாண:2/10,11
உரிமை தேவி உறு நோய் நீக்கி
பொன் நகர் புக்கனன் புகழ் வெய்யோன் என் – நரவாண:4/159,160
அன்று தான் கொண்ட உருவும் நீக்கி
தன் அமர் உருவம் மன்னவன் காண – நரவாண:5/40,41
பட்ட தேவியை பதுமையின் நீக்கி
முட்டு_இல் செல்வமொடு முறைமையில் பிழையாது – நரவாண:6/8,9
கயல் மிகு கண்ணியை கவவு பிணி நீக்கி
புகலும் உள்ளமோடு அகலத்து அடக்கி – நரவாண:8/99,100

TOP


நீக்கிய (5)

வெம் கண் இருள் துயர் இங்கண் நீக்கிய
பொங்கு மலர் தாரோய் புகுக என்போரும் – இலாவாண:1/22,23
ஒலி கெழு நகரத்து உறு பிணி நீக்கிய
வலி கெழு தட கை வயவன் வாழ்க என – இலாவாண:9/63,64
நும்மை தந்து என் புன்மை நீக்கிய
உம்மை செய்த செம்மை தவத்தன் என – மகத:24/124,125
இன்னா வெம் துயர் என்-கண் நீக்கிய
பின் நாள் பெயர்த்து நின் இறுதியும் பிறை நுதல் – வத்தவ:8/34,35
பாவம் நீக்கிய பரதன் பிறந்த – நரவாண:3/184

TOP


நீக்கு (1)

கவற்சி நீக்கு என பெயர்த்து அவள் போக்கி – மகத:17/84

TOP


நீக்குதல் (2)

புன்கண் நீக்குதல் புகழ் உடைத்து ஆதலின் – உஞ்ஞை:45/39
மன் உயிர் உற்ற நடுக்கம் நீக்குதல்
இன் இயல் மான் தேர் ஏயற்கு இயல்பு என – இலாவாண:9/53,54

TOP


நீக்குதற்கு (1)

இருவேம் இ இடர் நீக்குதற்கு இயைந்தனம் – உஞ்ஞை:53/55

TOP


நீக்குநர் (1)

அலகை பல் உயிர்க்கு அச்சம் நீக்குநர்
கவலை கொண்டு தம் காவலில் தளரின் – மகத:21/57,58

TOP


நீக்கும் (7)

கலுழி நீக்கும் கம்மியர் போல – உஞ்ஞை:35/217
பொங்கு திரை ஞாலத்து மயக்கம் நீக்கும்
திங்கள் அன்ன நின் திரு முகம் சுடர – உஞ்ஞை:42/58,59
வெம் சின வேழ வெகுளி நீக்கும்
மந்திர நாமம் வந்து நீர் கன்ம் என – இலாவாண:11/92,93
துன்பம் நீக்கும் தோற்றமும் அன்றி – இலாவாண:20/12
துன்பம் நீக்கும் தொழிலிற்று ஆகி – மகத:3/113
படிறு நீக்கும் படு நுகம் பூண்ட – வத்தவ:2/9
துன்பம் நீக்கும் தோழரோடு இயைந்தே – நரவாண:1/238

TOP


நீக்குவனர் (1)

நில்லன்-மின் நீர் என நீக்குவனர் கடிய – இலாவாண:7/11

TOP


நீக்குவனன் (1)

நெஞ்சு வலிப்புறுத்து நீக்குவனன் நிறீஇ – இலாவாண:9/144

TOP


நீக்குவென் (2)

பருவரல் வெம் நோய் பசப்பொடு நீக்குவென்
என்றனன் என்பதை சென்றனை கூறி – மகத:17/82,83
துன்பம் நீக்குவென் என்று அவன் தந்த – நரவாண:2/57

TOP


நீங்க (15)

மொய்த்தலின் மற்றவை மொய்ப்பின் நீங்க
தத்து அரி நெடும் கண் தகை விரல் புதைஇ – உஞ்ஞை:40/307,308
வாளி வல் வில் வயவர் நீங்க
சில்_இரும்_கூந்தலை மெல்லென நடாஅய் – உஞ்ஞை:56/45,46
சிறு வரை நடாஅய் செல்லல் நீங்க
கறுவு கொளாளர் மறுவு வந்து ஓடி – இலாவாண:9/165,166
அடு போர் மா ஊர்ந்து அங்கண் நீங்க
வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி – இலாவாண:17/54,55
சேண் வரு பெரும் குடி சிறுசொல் நீங்க
ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும் – இலாவாண:17/132,133
மாதவர் தேவி மறுத்து நீங்க
தண் மலர் படலை தருசகன் தங்கை – மகத:9/173,174
மடம் கெழு மாதர் மறைந்தனள் நீங்க
கடும் கதிர் கனலி கால் சீத்து எழுதர – மகத:9/181,182
தம் உயிர் நீங்க தாழ்ந்தனர் வீழவும் – மகத:20/67
துன்பம் நீங்க இன்பம் பயப்ப – வத்தவ:2/38
சோர்ந்து கடும் கதம் சுருங்குபு நீங்க
கிடந்தது கண்டே நடுங்குவனன் ஆகி – வத்தவ:3/94,95
மெய் வழி வெம் நோய் நீங்க பையென – வத்தவ:3/110
தோள் மீதூர்ந்த துயரம் நீங்க
காந்தள் நறு முகை கவற்று மெல் விரல் – வத்தவ:7/208,209
கொடுத்தனன் அருளி கோயிலுள் நீங்க
விடுத்தவள் ஏகி அடுத்ததும் உரைத்ததும் – வத்தவ:13/181,182
ஒருமையின் தீயவை நீங்க பெருமையின் – நரவாண:6/14
பகை முதல் சாய பசி பிணி நீங்க
மாரியும் விளையுளும் வாரியும் சிறப்ப – நரவாண:6/19,20

TOP


நீங்கல் (3)

நெஞ்சில் பின்னி நீங்கல் செல்லா – இலாவாண:16/40
நீங்கல் செல்லா நெறிமையின் ஓங்கி – இலாவாண:20/98
நீங்கல் செல்லான் பூம் கழல் உதயணன் – மகத:22/80

TOP


நீங்கலும் (6)

இற்ற இரும் பிடி பக்கம் நீங்கலும்
தெருள கூறி தீது_இல் காலத்து – உஞ்ஞை:56/180,181
விடிந்து இருள் நீங்கலும் வடிந்த மான் தேர் – மகத:10/1
இயைந்த வதுவை எழு நாள் நீங்கலும்
பசும்பொன் கிண்கிணி பதுமா நங்கையும் – மகத:22/104,105
யானை நீங்கலும் தான் அவண் குறுகி – வத்தவ:3/96
பள்ளி எய்திய நள்ளிருள் நீங்கலும்
விளியா விருப்பினொடு ஒளி பெற புதுக்கி – வத்தவ:4/1,2
நள்ளிருள் நீங்கலும் பள்ளி எழுந்து – வத்தவ:7/124

TOP


நீங்கா (2)

பயத்தின் நீங்கா சிவப்பு உள்ளுறுவின – இலாவாண:19/202
நிறைந்து வந்து இழிதரும் நீங்கா செல்வமொடு – மகத:2/35

TOP


நீங்கி (31)

திருமணி மாடத்து ஒருசிறை நீங்கி
பெரு மதர் மழை கண் வரு பனி அரக்கி – உஞ்ஞை:33/135,136
பரந்து கண் புதைஇய பாய் இருள் நீங்கி
புலர்ந்தது மாதோ பொழில் தலைப்பெயர்ந்து என் – உஞ்ஞை:33/212,213
முடி கெழு மன்னரொடு முற்றவை நீங்கி
கடி பெரும் கோயிலுள் காட்சி விரும்பி – உஞ்ஞை:34/33,34
தான் கொண்டு எழுந்த தவ_துறை நீங்கி
தானை வேந்தன் தாள் நிழல் தங்கி – உஞ்ஞை:36/196,197
நீராட்டு இயல் அணி நின்-வயின் நீங்கி அ – உஞ்ஞை:36/218
தாய் கை பிரிந்து தன் தமர்-வயின் நீங்கி
என் கைக்கு இவரும் அன்பினள் ஆதலின் – உஞ்ஞை:36/267,268
பரிவு மெய் நீங்கி பசலையும் தீர்க என – உஞ்ஞை:36/322
அவன்-வயின் நீங்கி ஆயம் கூஉய் – உஞ்ஞை:36/348
வேல்கெழு முற்றமொடு வீதியின் நீங்கி
குஞ்சர சேரி தன் நகர் எய்தி – உஞ்ஞை:37/2,3
நீர் போர் கவ்வையின் நீங்கி முனாஅது – உஞ்ஞை:40/248
இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
இன்னன் என்று தன் அறிவுறீஇ பின் – உஞ்ஞை:43/58,59
மலையும் மரனும் நிலையுறல் நீங்கி
கடுகிய விசையொடு காற்று என உராஅய் – உஞ்ஞை:48/118,119
நடக்கல்வேண்டும் நாம் இவண் நீங்கி
இடுக்கண் இல்லா இடம் புகும்-அளவு என – உஞ்ஞை:53/122,123
காவலன் நாடு கங்குல் நீங்கி
சார வந்த தன்மையும் சார்ந்த பின் – உஞ்ஞை:54/117,118
இற்ற இரும் பிடி பக்கம் நீங்கி
இடுக்கண் எய்தி இலங்கு இழை மாதர் – உஞ்ஞை:54/121,122
அரணிடை அகற்றி அச்சம் நீங்கி
முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி – உஞ்ஞை:56/48,49
கண்டீர் நீங்கி காண் இடம் தம் என – இலாவாண:7/109
சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும் – இலாவாண:8/109
அறம்புரியாட்டி அமைச்சனின் நீங்கி
மறம் புரி தானை மன்னவன் இருந்த – இலாவாண:10/1,2
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை – இலாவாண:12/48
புதல்வர் பயப்பின் புலந்து கை நீங்கி
மலையக மருங்கின் மரம் பொருந்தின என – இலாவாண:12/89,90
ஆடுதல் ஆனா அவாவொடு நீங்கி
வனப்பு எனப்படூஉம் தெய்வம் தனக்கு ஓர் – மகத:6/92,93
அடு முரண் நீங்கி அறுபது கழிந்தோர் – மகத:10/56
தனக்கே தருகுவன் சினத்தின் நீங்கி
ஊனம் கொள்ளாது தான் அவள் பெறுக என – மகத:17/56,57
பனி மலர் கோதை பதுமையை நீங்கி
தனியை ஆகி தங்குதல் பொருள் என – வத்தவ:6/67,68
ஐயம் நீங்கி எம் அறிவு மதித்து ஒழுகிய – வத்தவ:8/68
முற்ற நீங்கி தத்துவ வகையினும் – வத்தவ:10/16
எல்லை இறந்து வல்லை நீங்கி
அழிந்த-காலை ஆணை ஓட்டி – வத்தவ:11/5,6
நீங்கி புருவ நெரிவுடன் எற்றியும் – வத்தவ:12/103
அறிவது அறியா பருவம் நீங்கி
செறிவொடு புணர்ந்த செவ்வியள் ஆதலின் – வத்தவ:15/11,12
பகையும் பிணியும் பசியும் நீங்கி
தகையும் செல்வமும் தாம் படுக என்ன – நரவாண:7/46,47

TOP


நீங்கிய (11)

வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகி – உஞ்ஞை:33/156
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த – உஞ்ஞை:38/344
நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து – உஞ்ஞை:39/64
நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவேன் – உஞ்ஞை:48/38
நயம் தலை நீங்கிய நார்_இல் முருங்கை – உஞ்ஞை:52/65
காலை நீங்கிய மாலை யாமத்து – உஞ்ஞை:54/51
ஊன் சேர் கடு வேல் உதயணன் நீங்கிய
கான் சேர் பெரு வழி கடத்தல் செல்லீர் – இலாவாண:8/116,117
உயிர்ப்பு நீங்கிய உடம்பினன் ஆகி – இலாவாண:9/253
நீங்கிய எழுந்தோன் பூம் குழை மாதரை – மகத:6/37
இடையிருள் யாமம் நீங்கிய வைகறை – வத்தவ:5/88
பொய் பொருள் நீங்கிய இ பொருள் கேள்-மதி – நரவாண:3/50

TOP


நீங்கியது (1)

முகில் தோய் மா மதி புகர் நீங்கியது என – வத்தவ:14/166

TOP


நீங்கிற்று (2)

நீரும் நிழலும் நீங்கிற்று ஆகி – உஞ்ஞை:49/50
நீங்கிற்று அம்ம நீத்தோள் நினைந்து என – வத்தவ:5/46

TOP


நீங்கினர் (1)

வெறுமை நீங்கினர் விச்சையின் அமைந்து என – உஞ்ஞை:37/77

TOP


நீங்கினள் (1)

மறுத்தே நீங்கினள் வயந்தக வாராய் – வத்தவ:7/108

TOP


நீங்கினும் (1)

புயல் சேண் நீங்கினும் பூ வளம் குன்றா – உஞ்ஞை:39/62

TOP


நீங்கு (7)

மறு நீங்கு சிறப்பின் மதில் உஞ்சேனை – உஞ்ஞை:40/3
கலக்கம் நீங்கு என காஞ்சனை தெருட்டி – உஞ்ஞை:46/199
நின் உயிர்க்கு ஏமம் அறிந்தனை நீங்கு என – உஞ்ஞை:52/122
வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி – இலாவாண:17/55
நீங்கு திறன் உண்டெனின் தாங்கு திறன் அறியேன் – மகத:22/59
மறு நீங்கு சிறப்பின் புண்ணிய திங்கள் – வத்தவ:15/55
சிறு மான் பிணையும் மறு நீங்கு யூகமும் – வத்தவ:17/14

TOP


நீங்கு-மின் (3)

நிறை களிறு இவை காண் நீங்கு-மின் எனவும் – உஞ்ஞை:38/21
கொள்குவிர் ஆயின் கொலை தொழில் நீங்கு-மின்
உள் வழி அ பொருள் காட்டுகம் உய்த்து என – உஞ்ஞை:56/83,84
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி – மகத:13/39

TOP


நீங்குக (1)

வழுக்கு உடைத்து அதனை வலித்தல் நீங்குக
யாவை ஆயினும் யான் துணி கருமம் – உஞ்ஞை:43/71,72

TOP


நீங்குதல் (1)

நீடு இருளகத்து நீங்குதல் பொருள் என – மகத:17/259

TOP


நீங்குநர் (1)

நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை – உஞ்ஞை:55/80

TOP


நீங்கும் (4)

துன்பம் நீங்கும் தொழில் முறை போக்கி – உஞ்ஞை:34/32
துறக்கம் கூடினும் துறந்து இவண் நீங்கும்
பிறப்போ வேண்டேன் யான் என கூறி – உஞ்ஞை:40/88,89
நீங்குவையாயின் நீங்கும் என் உயிர் என – வத்தவ:7/197
புறஞ்சொலும் அன்றி அறம் தலை நீங்கும்
திறம் பல ஆயினும் குறைந்த என் திறத்து – வத்தவ:13/121,122

TOP


நீங்குமோ (1)

மாறி நீங்குமோ மட_மொழி-தான் என – வத்தவ:7/122

TOP


நீங்குவல் (1)

நீ முன் உண்ணினும் நீங்குவல் யான் என – இலாவாண:11/119

TOP


நீங்குவையாயின் (1)

நீங்குவையாயின் நீங்கும் என் உயிர் என – வத்தவ:7/197

TOP


நீட்ட (5)

உழை பெரும் சிலதியர் பிழைப்பு இலர் நீட்ட
அரு வரை பிளந்த அஞ்சுவரு நெடு வேல் – இலாவாண:5/146,147
இணர் இவை அணி-மின் என்று இரந்தனர் நீட்ட
விரும்பினர் கொண்டு வீ என உணரார் – இலாவாண:12/85,86
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட
நூலொடு புணர்ந்த வால் இயல் மார்பின் – இலாவாண:15/113,114
நீட்ட கொள்ளாள் மீட்டு அவள் இறைஞ்சி – மகத:14/231
புது கோல் கொணர்ந்து பொருக்கென நீட்ட
நோக்கி கொண்டே பூ கமழ் தாரோன் – மகத:15/32,33

TOP


நீட்டம் (2)

நிலைமை அறிய நீட்டம் இன்றி – மகத:23/51
நீட்டம் இன்று அவள் நீ அளவிடினே – வத்தவ:10/164

TOP


நீட்டலும் (2)

வயந்தககுமரன் மறைத்து நீட்டலும்
நயந்த நெஞ்சமொடு நன்கனம் அடக்கி – உஞ்ஞை:45/35,36
கோவே அருளி கொடுக்க என நீட்டலும்
ஏய மற்று இதுவும் இனிது என வாங்கி – வத்தவ:14/111,112

TOP


நீட்டி (8)

வாச நறும் திரை வகுத்து முன் நீட்டி
தாமரை அங்கையில் தான் பின் கொண்டு – உஞ்ஞை:34/47,48
ஊகந்தராயற்காக நீட்டி
தமரது வென்றியும் தருக்கும் நிலைமையும் – உஞ்ஞை:46/126,127
அரு வரை அகலத்து அஞ்சுவனள் நீட்டி
திரு வளர் சாயலை திண்ணிதின் தழீஇ – உஞ்ஞை:48/129,130
கவர் கணை நோன் சிலை கை-வயின் நீட்டி
அரண கூர் வாள் அசைத்த தானையன் – உஞ்ஞை:53/59,60
அவிர் இழை நன் கலம் அமைவர நீட்டி
அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய – உஞ்ஞை:56/68,69
வல தாள் நீட்டி இட தாள் முடக்கி – இலாவாண:6/140
செம் தளிர் கோதைக்கு சேடம் நீட்டி
பொலிக நங்கை பொரு படை அழித்த – மகத:21/31,32
முடக்கு அமை ஓலை மட_தகை நீட்டி
மூப்பினும் முறையினும் யாப்பு அமை குலத்தினும் – வத்தவ:10/96,97

TOP


நீட்டிய (1)

துன்ன_அரும் விசும்புற நீட்டிய நெறியும் – மகத:15/8

TOP


நீட்டியும் (1)

குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும் – உஞ்ஞை:37/124

TOP


நீடி (2)

இறங்கு குரல் இறடி இறுங்கு கடை நீடி
கவை கதிர் வரகும் கார் பயில் எள்ளும் – உஞ்ஞை:49/104,105
நீடி அன்ன நிழல் அறை மருங்கில் – இலாவாண:14/43

TOP


நீடிய (3)

மண்ணக மருங்கின் விண்ணுற நீடிய
மலையும் மரனும் நிலையுறல் நீங்கி – உஞ்ஞை:48/117,118
நீடிய பின்றை கூடாது தாங்கும் – இலாவாண:7/35
கொய் தகை கொடியொடு மெய்யுற நீடிய
கரப்பு அமை நெடு வேய் நரப்பு புறம் வருட – வத்தவ:3/79,80

TOP


நீடு (12)

நீடு அகத்து இருந்த வாசவதத்தையை – உஞ்ஞை:38/206
நீடு உர வழியினூடு நிமிர்ந்து ஒழுகி – உஞ்ஞை:40/225
நீடு மலர் தடம் கண் பாடு பிறழ்ந்து உறழ – உஞ்ஞை:48/126
நீடு இருள் அல்லது நீந்துதல் அரிது என – உஞ்ஞை:52/81
நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை – உஞ்ஞை:55/80
வாடிய உவலொடு நீடு அதர் பரப்பி – உஞ்ஞை:55/84
மன்னுக வேந்தே மண் மிசை நீடு என – இலாவாண:4/202
நீடு புகழ் குருசில் நெஞ்சிடை நலிய – மகத:3/121
நீடு இருளகத்து நீங்குதல் பொருள் என – மகத:17/259
பாடா பாணியின் நீடு உயிர்ப்பினளாய் – வத்தவ:12/207
ஊடியும் கூடியும் நீடு விளையாடியும் – வத்தவ:13/175
நீடு பெறல் அரிதாம் நெடும் கை விலங்கின் – நரவாண:3/106

TOP


நீடுதல் (1)

ஓடினை சொல் என நீடுதல் இன்றி – மகத:26/12

TOP


நீண்ட (4)

நீண்ட இஞ்சியும் நிறை மணி மாடமும் – உஞ்ஞை:40/279
வேண்டும் கொள்கையன் ஆகி நீண்ட
தடம் பெரும் கண்ணி தகை பாராட்டி – மகத:7/60,61
நீண்ட குறங்கின் நிழல் மணி பல் கலம் – மகத:8/53
நீண்ட திண் தோள் ஈண்டுவனள் நக்கு – மகத:22/176

TOP


நீத்த (2)

சிறை கொளப்பட்டு செல்வம் நீத்த
குறை_மகன் என்பது கோடல் செல்லாது – இலாவாண:8/31,32
இன் உயிர் நீத்த இலங்கு இழை மடவோய் – வத்தவ:7/59

TOP


நீத்தத்து (4)

நிலை_இன்று உழிதரும் நெடும் சுழி நீத்தத்து
வினை தீர் உயிரின் மிதந்தது கீழா – உஞ்ஞை:40/185,186
நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு – உஞ்ஞை:41/37
அரும் சுழி நீத்தத்து ஆழும் ஒருவன் – இலாவாண:17/122
அரும் சுழி நீத்தத்து ஆறு புக அமைத்த – மகத:25/18

TOP


நீத்தம் (3)

புனல் சுழி நீத்தம் நீந்தி மற்றவை – உஞ்ஞை:41/42
பொரும் புனல் நீத்தம் புணையில் போகி – மகத:1/133
கங்கை நீத்தம் கடல் மடுத்தாங்கு – வத்தவ:1/17

TOP


நீத்தலின் (1)

அல் ஊண் நீத்தலின் அஃகிய உடம்பினன் – வத்தவ:7/159

TOP


நீத்தவர் (1)

நீத்தவர் வேண்டிய துப்புரவு அல்லால் – மகத:14/179

TOP


நீத்தனெம் (1)

வழிபாடு ஆற்றலும் வன்கணின் நீத்தனெம்
கழி பெரும் சிறப்பின் காவல் வேந்தே – மகத:24/94,95

TOP


நீத்தி (1)

நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள் – நரவாண:7/23

TOP


நீத்திற்று (1)

நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி – உஞ்ஞை:51/81

TOP


நீத்து (5)

நிரம்பா செலவின் நீத்து_அரும் சிறு நெறி – உஞ்ஞை:49/31
நெஞ்சம் மகிழ்ந்து நீத்து மிக உடைய – உஞ்ஞை:57/10
கணை கடு நீத்து இடை புணை புறம் தழீஇ – இலாவாண:10/141
நெறி திரிந்து ஒரீஇ நீத்து உயிர் வழங்கா – இலாவாண:20/5
வினைக்கும் பொருட்கும் நினைத்து நீத்து உறையுநர் – மகத:7/10

TOP


நீத்து_அரும் (1)

நிரம்பா செலவின் நீத்து_அரும் சிறு நெறி – உஞ்ஞை:49/31

TOP


நீத்தொடு (1)

நெடும் புணை தழீஇ நீத்தொடு மறல – உஞ்ஞை:40/354

TOP


நீத்தோர் (1)

மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅர் என – இலாவாண:2/192

TOP


நீத்தோள் (1)

நீங்கிற்று அம்ம நீத்தோள் நினைந்து என – வத்தவ:5/46

TOP


நீதி (6)

நீதி மருங்கின் நினைவு அவன் சூழ்ந்து – உஞ்ஞை:34/71
நீதி அன்று நெறி உணர்வோர்க்கு என – உஞ்ஞை:44/68
நில வரை நிமிர்வுறு நீதி நிறீஇ – உஞ்ஞை:54/65
நீதி பெருமை நூல் ஓதியும் ஓராய் – இலாவாண:1/26
நீதி அன்று என நெஞ்சத்து அடக்கி – மகத:14/35
நீதி நல் நூல் ஓதிய நாவினள் – வத்தவ:10/14

TOP


நீதியது (1)

நீதியது நேர்மை உளனாய் ஓதிய – இலாவாண:8/140

TOP


நீதியர் (1)

நில_மகள் நயக்கும் நீதியர் ஆகி – உஞ்ஞை:37/76

TOP


நீதியன் (1)

நிலைமையொடு தெரிதரு நீதியன் ஆகி – உஞ்ஞை:36/54

TOP


நீதியாள (1)

நீதியாள நீ வேண்டுவ வேண்டு என – இலாவாண:17/184

TOP


நீதியாளர் (1)

நீதியாளர் ஆதி ஆகிய – மகத:1/36

TOP


நீதியில் (2)

யூகி நீதியில் பேதை பிணிப்புண்டு – இலாவாண:20/54
ஆதி துணிவு உடை நீதியில் கரந்த – மகத:1/27

TOP


நீதியின் (3)

நெஞ்சு புரை அமைச்சன் நீதியின் செய்த – இலாவாண:17/99
நீதியின் காட்ட நெடும் தகை அண்ணல் – மகத:10/41
நேரா மன்னனை நீதியின் தரீஇ – மகத:27/63

TOP


நீதியும் (4)

நீதியும் பிறவும் ஓதிய எல்லாம் – உஞ்ஞை:36/360
ஏதம் இன்மையும் நீதியும் வினாஅய் – மகத:18/60
பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்
தெரிய எல்லாம் விரிய கூறி – வத்தவ:6/6,7
நிகழ்ந்ததும் கூறி நின் நீதியும் விளக்கி – வத்தவ:10/186

TOP


நீதியுள் (1)

ஏதில் பெரும் பொருள் நீதியுள் இன்மையின் – இலாவாண:9/217

TOP


நீதியை (1)

நிலைமைக்கு ஒத்த நீதியை ஆகி – உஞ்ஞை:36/327

TOP


நீந்தி (12)

நீந்தி அன்ன நினைப்பினர் ஆகி – உஞ்ஞை:33/207
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய – உஞ்ஞை:40/199
புனல் சுழி நீத்தம் நீந்தி மற்றவை – உஞ்ஞை:41/42
நெடும் துறை நீந்தி நிலைகொளல் அறியார் – உஞ்ஞை:41/116
நாட்டு சந்து இது நாம் இவண் நீந்தி
ஒன்றிரு காவதம் சென்ற பின்றை – உஞ்ஞை:53/109,110
துன்ப பெரும் கடல் நீந்தி இன்பத்து – உஞ்ஞை:57/107
வேட்டோன் விட்டு காட்டகம் நீந்தி
குண்டு நீர் குமரி தெண் திரை ஆடிய – இலாவாண:20/81,82
நலம் கெழு சிறப்பின் நாட்டகம் நீந்தி
பைம் தொடி அரிவைக்கு படு கடம் கழீஇய – மகத:1/127,128
நீள் நிலை படுவில் பேர் புணை நீந்தி
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் – மகத:1/135,136
கானம் நீந்தி சேனை வேந்தன் – வத்தவ:3/104
கண்டது முதலா கானம் நீந்தி
கொண்டனன் போந்தது நடுவா பொங்கு அழல் – வத்தவ:5/55,56
நன் பல் நாட்டகம் பின்பட நீந்தி
வளம் கவின் எய்திய வத்தவன் இருந்த – நரவாண:7/163,164

TOP


நீந்து (1)

நீர் இயல் மாடமும் நீந்து இயல் புணையும் – உஞ்ஞை:37/267

TOP


நீந்துதல் (2)

நீடு இருள் அல்லது நீந்துதல் அரிது என – உஞ்ஞை:52/81
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி – உஞ்ஞை:54/137

TOP


நீந்துபு (1)

நெடும் கொடி வீதி நீந்துபு போகி – வத்தவ:7/148

TOP


நீந்தும் (1)

நீல தெள் நீர் நீந்தும் ஆமையின் – உஞ்ஞை:46/261

TOP


நீப்ப (6)

நீப்ப_அரும் காதல் நின் பயந்து எடுத்த – உஞ்ஞை:48/85
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி – உஞ்ஞை:56/128
நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல் – இலாவாண:5/71
நீப்ப_அரும் சேவலை நிலை-வயின் காணாது – இலாவாண:18/66
நீப்ப_அரும் காதல் நிலைமை தோழியும் – இலாவாண:20/131
நீப்ப_அரும் காதல் நிறைந்து உடன் ஆடல் – மகத:9/115

TOP


நீப்ப_அரும் (6)

நீப்ப_அரும் காதல் நின் பயந்து எடுத்த – உஞ்ஞை:48/85
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி – உஞ்ஞை:56/128
நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல் – இலாவாண:5/71
நீப்ப_அரும் சேவலை நிலை-வயின் காணாது – இலாவாண:18/66
நீப்ப_அரும் காதல் நிலைமை தோழியும் – இலாவாண:20/131
நீப்ப_அரும் காதல் நிறைந்து உடன் ஆடல் – மகத:9/115

TOP


நீப்பிடம் (2)

நீப்பிடம் இது என நினைப்பது போல – உஞ்ஞை:52/88
கோப்பெருந்தேவிக்கு நீப்பிடம் உணர்த்தி – இலாவாண:10/54

TOP


நீப்பிடம்-தோறும் (1)

நீப்பிடம்-தோறும் யாப்புற அறிவுறீஇ – இலாவாண:20/79

TOP


நீப்பு (1)

நின்னொடு என் இடை நீப்பு இவண் உண்டு என – மகத:25/60

TOP


நீப்புறவு (1)

யாப்புறு பால் வகை நீப்புறவு இன்றி – மகத:6/63

TOP


நீயான் (1)

நீயான் போல நெஞ்சு உணர் மதிப்பினன் – உஞ்ஞை:49/10

TOP


நீயும் (9)

யாயும் நீயும் யானும் எல்லாம் – உஞ்ஞை:36/75
தேயா திருவ நீயும் தேரின் – உஞ்ஞை:37/141
நடுக்கம் வேண்டா நங்கையும் நீயும்
அடுத்த காவலன் இவளொடும் அமர்ந்து – உஞ்ஞை:46/188,189
நீயும் எவ்வம் தீர யானும் – மகத:1/180
தானும் நீயும் ஆகல் வேண்டலின் – மகத:21/106
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும்
விரைந்தனை சென்று நம் அரும்_பெறல் பேரியாழ் – வத்தவ:3/126,127
மாதரும் நீயும் மயல் உரைத்து எழுந்து – வத்தவ:13/199
பண் அமை பிடியாய் நீயும் அவற்றுள் – நரவாண:3/117
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும் – நரவாண:5/38

TOP


நீயே (4)

நோய்கூர்ந்து அழியும் நீயே அளியை – இலாவாண:19/113
நீயே சென்று அவன் வாயது கேட்டு – மகத:25/161
நீயே என்-வயின் நினைந்திலையோ என – வத்தவ:4/7
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ – வத்தவ:15/24

TOP


நீர் (198)

மலர் கண் அளைஇய மந்திர நறு நீர்
பலருடன் வாழ்த்த பண்புளி எய்தி – உஞ்ஞை:34/19,20
உவந்ததை எல்லாம் உரை-மின் நீர் என – உஞ்ஞை:34/109
சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி – உஞ்ஞை:34/188
மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை – உஞ்ஞை:36/160
ஆணையின் திரீஇயர் அஞ்சன்-மின் நீர் என – உஞ்ஞை:36/173
நீர் இயல் மாடமும் நீந்து இயல் புணையும் – உஞ்ஞை:37/267
விரைந்தனர் கொண்ட விரி நீர் ஆத்திரை – உஞ்ஞை:38/1
பெரு நீர் கரும் கடல் துளுப்பிட்டது போல் – உஞ்ஞை:38/29
நீர் அங்காடி நெறிப்பட நாட்டி – உஞ்ஞை:38/57
தேவரும் விழையும் திரு நீர் பொய்கை – உஞ்ஞை:38/75
நிரை வளை மகளிர் நீர் பாய் மாடமொடு – உஞ்ஞை:38/77
ஊர் இறைகொண்ட நீர் நிறை விழவினுள் – உஞ்ஞை:38/85
சுண்ண வட்டும் சுழி நீர் கோடும் என்று – உஞ்ஞை:38/107
இன் நீர் வெள் வளை அலறும் ஆர்ப்பின் – உஞ்ஞை:38/131
நாள் பெரு வாயில் நாறு நீர் ஆத்திரை – உஞ்ஞை:38/139
நறு நீர் கோலத்து கதிர் நலம் புனைஇயர் – உஞ்ஞை:38/205
நிரந்த நீர் விழவினுள் இரந்தோர்க்கு ஈக்க என – உஞ்ஞை:38/282
ஓடு நீர் பெரும் துறை உள்ளம் பிறந்துழி – உஞ்ஞை:39/41
விரி நீர் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய – உஞ்ஞை:40/2
நறு நீர் விழவின் நாள் அணி கூறுவென் – உஞ்ஞை:40/4
நீர் அணி மாடத்து நிலா நெடு முற்றத்து – உஞ்ஞை:40/17
தொடி கை மகளிர் நீர் குடை வெரீஇய – உஞ்ஞை:40/33
நீர் ஒலி மயக்கிய ஊர் மலி பெரும் துறை – உஞ்ஞை:40/57
நிரை வெண் மாடத்து நீர் அணி காணிய – உஞ்ஞை:40/66
நிரை வளை மகளிர் நீர் குடைவு ஒரீஇ – உஞ்ஞை:40/106
எக்கர் தாழை நீர் துறை தாழ்ந்த – உஞ்ஞை:40/112
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி – உஞ்ஞை:40/156
நீர் பொறை ஆற்றாது நெகிழ்ந்து வீழ் இசைந்த – உஞ்ஞை:40/194
தலை நீர் பெரும் துறை நிலை நீர் நின்ற – உஞ்ஞை:40/197
தலை நீர் பெரும் துறை நிலை நீர் நின்ற – உஞ்ஞை:40/197
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய – உஞ்ஞை:40/199
நீர் போர் கவ்வையின் நீங்கி முனாஅது – உஞ்ஞை:40/248
எதிர் நீர் தூஉம் இளையோர் திரு முகத்து – உஞ்ஞை:40/299
மண்ணு மணி அன்ன ஒள் நிற தெள் நீர்
தண் நிழல் கண்டே என் நிழல் என்னும் – உஞ்ஞை:40/318,319
நீர் அர_மகளிரொடு நிரந்து உடன் நின்ற – உஞ்ஞை:40/328
நீர் அர_மடந்தையும் கணவனும் இதனுள் – உஞ்ஞை:40/337
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் – உஞ்ஞை:40/364
கோவின் ஆணை போ-மின் நீர் என – உஞ்ஞை:40/374
முழு நீர் விழவின் மூ_எழு நாளும் – உஞ்ஞை:40/380
புண்ணியம் உடைமையின் காண்-மின் நீர் என – உஞ்ஞை:40/385
அரக்கு உறு நறு நீர் அம் செங்குலிகம் – உஞ்ஞை:41/16
மலி நீர் மாடத்து பொலிவு கொள் மறுகின் – உஞ்ஞை:42/43
நீர் கால்கழீஇய வார் மணல் எக்கர் – உஞ்ஞை:42/91
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி – உஞ்ஞை:42/113
முத்து உறழ் நறு நீர் முறைமையின் ஆட்டி – உஞ்ஞை:42/136
மங்கல மண்ணு நீர் ஆவன என்று – உஞ்ஞை:42/138
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி – உஞ்ஞை:42/143
கார் இரும் கூந்தல் நீர் அற வாரி – உஞ்ஞை:42/146
நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை – உஞ்ஞை:42/148
நீர் தலைக்கொண்ட நெடும் பெரும் துறை-வயின் – உஞ்ஞை:42/184
நறு நீர் சிவிறி பொறி நீர் எக்கியும் – உஞ்ஞை:42/188
நறு நீர் சிவிறி பொறி நீர் எக்கியும் – உஞ்ஞை:42/188
மதி மருள் திரு முகத்து எதிர் நீர் தூவியும் – உஞ்ஞை:42/190
பொதி பூம் பந்தின் எதிர் நீர் எறிந்தும் – உஞ்ஞை:42/191
நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி – உஞ்ஞை:42/201
நெடு நீர் விழவில் படை பிடித்தோரை – உஞ்ஞை:43/15
நறு நீர் விழவின் நாள் அணி அகலம் – உஞ்ஞை:43/87
நீர் உடை கொண்மூ நெகிழா காலொடு – உஞ்ஞை:43/101
ஊற்று நீர் அரும்பிய உள் அழி நோக்கினர் – உஞ்ஞை:43/137
பொங்கு நீர் பொய்கை புக்கனர் ஒருசார் – உஞ்ஞை:43/152
உறு நீர் பெரும் கடல் உவா உற்றாஅங்கு – உஞ்ஞை:44/3
நீர் உடை களைதல் செல்லார் கலங்கி – உஞ்ஞை:44/7
விண்ணகம் ஏறின் அல்லது விரி நீர்
மண்ணக வரைப்பின் எம் அண்ணலை பிழைத்தோர்க்கு – உஞ்ஞை:45/84,85
கலக்குறு சில் நீர் கரும் கயல் போல – உஞ்ஞை:46/161
நிலைக்கொளல் செல்லா நீர் சுமந்து அளைஇ – உஞ்ஞை:46/162
நீல தெள் நீர் நீந்தும் ஆமையின் – உஞ்ஞை:46/261
குழியும் குவடும் வழி நீர் அசும்பும் – உஞ்ஞை:46/275
எறி நீர் வரைப்பின் எ பொருள் ஆயினும் – உஞ்ஞை:47/147
தலை பூ நறு நீர் சிறப்பு முந்துறீஇ – உஞ்ஞை:47/196
தத்து நீர் பெரும் கடல் சங்கு பொறை உயிர்த்த – உஞ்ஞை:47/254
எழு நீர் குவளையொடு இன்னவை பிறவும் – உஞ்ஞை:48/49
நீர் நிறை கொளீஇய தாமரை கம்மத்து – உஞ்ஞை:49/14
முற்று நீர் வையகம் முழுதும் உவப்ப – உஞ்ஞை:49/78
நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி – உஞ்ஞை:51/81
கரை ஏறினனால் கார் நீர் கடந்து என் – உஞ்ஞை:51/91
கார் நீர் நருமதை கரையகம் கடந்த பின் – உஞ்ஞை:52/1
வார் நீர் துடைத்து வயந்தகன் ஏறி – உஞ்ஞை:52/2
நீர்_இல் யாறும் நிரம்பா நிலனும் – உஞ்ஞை:52/31
நீர் நசைக்கு எள்கி தேர் மருங்கு ஓடவும் – உஞ்ஞை:52/53
நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு – உஞ்ஞை:53/3
மல்கு நீர் உடுக்கை மண்ணக மடந்தையை – உஞ்ஞை:53/20
நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன் – உஞ்ஞை:53/92
நீர் பூம் பொய்கை நெறியின் கண்டு அதன் – உஞ்ஞை:53/173
நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி – உஞ்ஞை:54/42
செழு நீர் பொய்கையுள் கொழு மலர் கூம்ப – உஞ்ஞை:54/44
மலர்ந்த பொய்கையுள் மணி நிற தெள் நீர்
கொழு மலர் தட கையில் கூட்டுபு கொண்டு – உஞ்ஞை:55/2,3
வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி – உஞ்ஞை:55/138
அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய – உஞ்ஞை:56/69
வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின் – உஞ்ஞை:56/78
யாரே நீர் எமக்கு அறிய கூறு என – உஞ்ஞை:56/88
நில்-மின் நீர் என மன்ன_குமரன் – உஞ்ஞை:56/106
நீர் கரை பொய்கை நெற்றி முன் நிவந்த – உஞ்ஞை:56/213
காப்பு உடை நறு நீர் காதலின் ஆடி – உஞ்ஞை:57/87
நிறை துவர் நறு நீர் சிறப்பொடு ஆடிய – உஞ்ஞை:57/89
தண்மை அடக்கிய நுண் நிறை தெள் நீர்
வரி வளை பணை தோள் வண்ண மகளிர் – உஞ்ஞை:57/95,96
பொன் பெரும் குடத்தில் புது நீர் விலங்கி – இலாவாண:1/19
மண்ணு நீர் சுமக்கற்கு பண்ணு முறை பிழையா – இலாவாண:2/202
மண்ணக கிழவற்கு மண்ணு நீர் சுமக்கும் – இலாவாண:2/227
முது நீர் பொழில் உகந்து எதிர் இன்று ஓத – இலாவாண:4/5
நீர் அளந்து ஊட்டிய நிறை அமை வாளினை – இலாவாண:4/165
ஆசு_அறு நறு நீர் பூசனை கொளீஇ – இலாவாண:4/171
திரு மண்ணு நறு நீர் விரைவதின் வருக என – இலாவாண:5/4
நிழல் திகழ் தெள் நீர் நீலம் சூழ – இலாவாண:5/44
செம் நீர் போதொடு செறிய வீக்கி – இலாவாண:5/48
தேம் கமழ் நறு நீர் திறவதின் பற்றி – இலாவாண:5/50
தாமரை மூய தமனிய குட நீர்
தாம் முறை சொரிந்து தம் முறைமையின் ஆட்டி – இலாவாண:5/104,105
கோதை பரிந்தும் குட நீர் தூயும் – இலாவாண:5/111
நெட்டு இரும் கூந்தல் நீர் அற வாரி – இலாவாண:5/172
காமர் கோலம் காண்-மின் நீர் என – இலாவாண:6/15
நில்லன்-மின் நீர் என நீக்குவனர் கடிய – இலாவாண:7/11
மங்கல மண்ணு நீர் மரபின் ஆட – இலாவாண:7/148
பால் நீர் நெடும் கடல் பனி நாள் எழுந்த – இலாவாண:7/154
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய – இலாவாண:7/155
நீர் துறை கரையினும் கூத்து உறை சேரியும் – இலாவாண:8/69
புற நகர் போந்த பின்றை செறு நீர்
அள்ளல் படப்பை அகல் நிலம் தழீஇ – இலாவாண:9/1,2
எதிர் மலர் குவளை இடு நீர் சொரிந்து – இலாவாண:9/156
சில பகல் கழிந்த பின் வருவன் நீர் சென்று – இலாவாண:10/35
குழல் சிகை அவிழ குண்டு நீர் யமுனை – இலாவாண:10/140
மந்திர நாமம் வந்து நீர் கன்ம் என – இலாவாண:11/93
நீர் அணி பெரு மலை சாரல் எய்தி – இலாவாண:12/41
ஒழிக உள் அழிவு இவற்றொடு நீர் என – இலாவாண:12/63
எமக்கு அணி உடையர் என்று எம்மொடு உறையும் நீர்
நுமக்கு அணி உடையரை எதிர்ந்தனிர் ஈங்கு என – இலாவாண:12/71,72
நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி – இலாவாண:13/18
நீள் நீர் முழவின் பாணியில் பாடியும் – இலாவாண:14/12
ஊன் பெற பிறங்கி ஒழுகு நீர் ஆமை – இலாவாண:15/57
நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை – இலாவாண:15/88
முழு நீர் பொய்கையுள் பொழுதொடு விரிந்த – இலாவாண:16/32
நீர் மலர் படலை நெடுந்தகையாள – இலாவாண:18/35
கண்ணுற மலர்ந்த தெள் நீர் பொய்கையுள் – இலாவாண:18/65
சந்தனம் கலந்த அம் தண் நறு நீர்
தண் தளி சிதறி வண்டு இனம் இரிய – இலாவாண:18/109,110
பயில் இதழ் பனி நீர் பக்கம் நீக்கி – இலாவாண:19/150
குண்டு நீர் குமரி தெண் திரை ஆடிய – இலாவாண:20/82
பள்ளம் படரும் பல் நீர் போல் அவன் – மகத:1/89
நெடு நீர் பேரியாறு நிறைந்து விலங்கு அறுத்து – மகத:3/39
மணி தெளித்து அன்ன அணி நிற தெண் நீர்
பெரும் தண் பொய்கை மருங்கில் குலாஅய் – மகத:4/39,40
கழிப்பு நீர் ஆரலொடு கொழுப்பு இறா கொளீஇய – மகத:4/42
அரும் தவம் உண்மை அறி-மின் நீர் என – மகத:5/112
அறி-மின் நீர் என பொறி அமை புதவின் – மகத:6/145
அளி மலர் பொய்கையுள் குளிர் நீர் குடைய – மகத:8/17
திண்ணிது ஆகுதல் தெளி-மின் நீர் என – மகத:8/134
பாரம் ஆகி நீர் அசைந்து ஒசிந்த – மகத:9/62
கார் இரும் கூந்தல் நீர் அற புலர்த்தி – மகத:9/63
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர் – மகத:9/102
நீர் உடை வரைப்பின் நெடு மொழி நிறீஇய – மகத:9/150
குன்று பல ஓங்கிய குளிர் நீர் வரைப்பில் – மகத:10/30
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை – மகத:12/14
அகத்து நீர் உடை அதனது மாட்சி – மகத:12/53
நீர் நலன் உணர்ந்து சீர் நல குருசிற்கு – மகத:12/57
எழு கோல் எல்லையுள் எழும் இது நீர் மற்று – மகத:12/58
தெள் நீர் எ வழி தேரினும் இல்லை – மகத:12/62
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி – மகத:13/39
நீர் செல் பேரியாறு நிரந்து இழிந்தாங்கு – மகத:16/23
முறைமையின் கேட்டு நிறை நீர் வரைப்பில் – மகத:18/64
புடை நிரைத்தாரை கடி நீர் கை வாள் – மகத:20/11
நீல கொண்மூ நீர் திரை பெய்வது ஓர் – மகத:20/78
நீர் முதல் மண்ணகம் சுமந்த நிறை வலி – மகத:21/54
பெரும் தண் நறு நீர் விரும்புவனர் ஆட்டி – மகத:22/201
நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ – மகத:22/208
ஊர் மடி கங்குல் நீர் நெறி போகி – மகத:23/56
கோல் தொழில் கொற்றம் கொடுத்து நீர் பெயர்-மின் என்று – மகத:23/60
குளிர் நீர் யமுனை குண்டு கயம் பாய – மகத:24/56
குளிர் நீர் நெடும் கடல் கொண்ட அமிழ்து என – மகத:24/111
அளி நீர் கட்டுரை அயல் நின்றோர்க்கும் – மகத:24/112
முது நீர் பௌவம் கதுமென கலங்க – மகத:24/140
ஓர் உயிர் கணவற்கு நீர் உகுப்பனள் போல் – மகத:24/183
நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி – மகத:25/21
சென்று அறிந்து இன்னும் வம்-மின் நீர் என – மகத:25/180
ஒடுங்கி நீர் இருக்க என ஒளித்தனன் வைத்து – மகத:26/4
நிறை நீர் அக-வயின் பிறழும் கெண்டையை – மகத:26/21
ஏரி பெரும் குளம் நீர் நிறை இலவாம் – மகத:27/18
வேண்டின கொள்ள பெறுதிர் நீர் என – வத்தவ:2/39
தலை நீர் பெரும் தளி நலன் அணி கொளீஇ – வத்தவ:3/21
கார் வளி முழக்கின் நீர் நசைக்கு எழுந்த – வத்தவ:3/67
வலியாது எனக்கு வம்-மின் நீர் என – வத்தவ:3/101
நினைப்பின் நெகிழ்ந்து நீர் கொள இறைஞ்சி – வத்தவ:5/27
புண்ணிய நறு நீர் துன்னினர் குழீஇ – வத்தவ:7/240
கேடு_இல் விமானமும் நீர் இயங்கு புரவியும் – வத்தவ:10/61
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும் – வத்தவ:11/7
கழுநீர் பொருவி செழு நீர் கயல் போல் – வத்தவ:12/258
சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என – வத்தவ:13/12
விடைகொடுத்து அவரை கொணர்-மின் நீர் என – வத்தவ:14/107
எழுதரு மழை கண் இரங்கி நீர் உகுப்ப – வத்தவ:14/150
அற நீர் அத்தத்து அகன்று யான் போக – வத்தவ:15/54
ஆர்கலி நறு நீர் மேவர ஆட்டி – வத்தவ:16/7
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து – வத்தவ:16/41
அறு இல் தெள் நீர் ஆழ் கயம் முனிந்து – வத்தவ:17/37
நீர் அர_மகள் இவள் நீர்மையும் அதுவே – வத்தவ:17/40
அம்மை அணிந்த அணி நீர் மன்றல் – வத்தவ:17/89
நல்லோர் தூஉம் நறு நீர் நனைப்ப – வத்தவ:17/104
பொங்கு நீர் பொய்கையில் பூவே போலவும் – நரவாண:1/168
வேட்டம் போகி வேட்டு நீர் பெறாஅ – நரவாண:2/12
யாவிர் மற்று நீர் அசைவு பெரிது உடையீர் – நரவாண:2/34
திரு மலர் கெழீஇய தெள் நீர் படுவின் – நரவாண:3/53
படை உடை வேந்தன் பனி நீர் விழவினுள் – நரவாண:3/120
நீர் சார்பாக ஊர்பவும் மரத்தொடு – நரவாண:4/21
வரு பரிசார மணி நீர் பேரியாற்று – நரவாண:7/39
நல் நீர் விரவிய செம் நிற சுண்ணம் – நரவாண:7/59
போந்து கடல் மண்டும் புண்ணிய நீர் துறை – நரவாண:7/161

TOP


நீர்-தான் (1)

தன் முளை எயிற்று நீர்-தான் என அயின்றும் – மகத:14/163

TOP


நீர்-வயின் (2)

நீர்-வயின் கம்பலை நினைக்குநர் இல்லை – உஞ்ஞை:43/28
ஆய் தார் மார்பன் நீர்-வயின் நிரைத்த – மகத:26/91

TOP


நீர்-வாய் (1)

நாவாய் பெரும் சிறை நீர்-வாய் கோலி – மகத:26/77

TOP


நீர்_கடன் (1)

நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன் – உஞ்ஞை:53/92

TOP


நீர்_அல (1)

வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி – உஞ்ஞை:55/138

TOP


நீர்_அற (1)

நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி – உஞ்ஞை:42/201

TOP


நீர்_இல் (1)

நீர்_இல் யாறும் நிரம்பா நிலனும் – உஞ்ஞை:52/31

TOP


நீர்த்தால் (1)

அலவலை நீர்த்தால் அத்தை நின் அலர் என – உஞ்ஞை:36/286

TOP


நீர்த்து (2)

அ தொழில் நீர்த்து என எய்த்தனன் என்ன – மகத:8/124
மறித்தும் போகி நெறித்து நீர்த்து ஒழுகி – மகத:15/52

TOP


நீர்தர (1)

பாத சக்கரம் மாறு எதிர் நீர்தர
கோதை தாமமொடு கொட்டை முதல் கோத்த – இலாவாண:2/131,132

TOP


நீர்ப்பட்ட (1)

இடை நீர்ப்பட்ட மட மான் அம் பிணை – உஞ்ஞை:41/39

TOP


நீர்ப்பட்டன (1)

நீல தண் மலர் நீர்ப்பட்டன போல் – உஞ்ஞை:56/141

TOP


நீர்மை (6)

நீர்மை பல் காசு நிழல் உமிழ்ந்து இமைப்ப – உஞ்ஞை:45/3
முறைமையில் தேயும் நிறை_மதி நீர்மை
நண்பு கொள் ஒழுக்கின் நஞ்சு பொதி தீம் சொல் – உஞ்ஞை:46/309,310
உறையுள் எய்திய நிறை உடை நீர்மை
இளையோன் அமைந்த-காலை மற்று தன் – மகத:6/152,153
நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி – மகத:22/17
இயல்பின் நீர்மை இற்று என உரைப்பின் – வத்தவ:6/36
கண் அணங்குறூஉம் காரிகை நீர்மை
பத்திரை மேனகை திலோத்தமை ஒருத்தி – நரவாண:3/57,58

TOP


நீர்மைக்கு (2)

நெடு வெண் நிலவின் நீர்மைக்கு இரங்கி – உஞ்ஞை:35/235
பெண் நீர்மைக்கு இயல் பிழையே போன்ம் என – வத்தவ:14/142

TOP


நீர்மைத்து (2)

நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி – இலாவாண:13/18
நின்னை நினைத்தல் நீர்மைத்து அன்று என – நரவாண:3/27

TOP


நீர்மையர் (1)

நிதியம் பெற்ற நீர்மையர் போல – மகத:3/68

TOP


நீர்மையில் (1)

நெறியின் திரியா நீர்மையில் காட்டி – இலாவாண:17/174

TOP


நீர்மையின் (1)

நிறையுற உய்த்து நீர்மையின் வழாஅ – நரவாண:8/45

TOP


நீர்மையும் (5)

நிறத்தது நீர்மையும் நெடுமையது அளவும் – உஞ்ஞை:45/24
நிலையது நீர்மையும் தலையது தன்மையும் – இலாவாண:9/125
தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும்
வேறுவேறாக கூறுகூறு உணர்த்தி – இலாவாண:9/209,210
நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும் – வத்தவ:14/49
நீர் அர_மகள் இவள் நீர்மையும் அதுவே – வத்தவ:17/40

TOP


நீர (2)

காரண கிளவி நீர கூறி – உஞ்ஞை:35/112
காரண கிளவி நீர காட்டி – உஞ்ஞை:36/96

TOP


நீரணி (1)

நேர்ந்து வனப்பு எய்திய நீரணி மாடம் – உஞ்ஞை:42/39

TOP


நீரதில் (1)

நிழல் தரு படு கால் நீரதில் புனைந்த – உஞ்ஞை:46/269

TOP


நீரது (1)

வெம் கண் நீரது ஆகி வேலின் – மகத:7/38

TOP


நீராட்டணி (5)

கழிந்த யாண்டும் கய நீராட்டணி
ஒழிந்ததன் தண்டம் உயர் கொடி மூதூர் – உஞ்ஞை:37/228,229
திரு நீராட்டணி மருவீர் ஆயின் – உஞ்ஞை:37/248
நாள் நீராட்டணி நாளை என்று அறைதலும் – உஞ்ஞை:37/263
வான் கிளர்ந்து அன்ன வள நீராட்டணி
சேணிடை உறைநரும் சென்று காண்புழி – உஞ்ஞை:37/273,274
பெரு நீராட்டணி பெட்கும் பொழுது என – உஞ்ஞை:39/4

TOP


நீராட்டி (2)

அழல் புரை வேகத்துள் அன்பு நீராட்டி
சிறு வரை தணித்து அவள் திரு முகம் திருத்தி – உஞ்ஞை:40/335,336
மண்ணக மடந்தையை மண்ணும் நீராட்டி
முல்லை கிழத்தி முன் அருள் எதிர – உஞ்ஞை:49/89,90

TOP


நீராட்டின் (2)

மண்ணு நீராட்டின் மலைந்தனர் ஆகி – இலாவாண:5/53
மண்ணு நீராட்டின் மரபுளி கழிந்த பின் – இலாவாண:5/121

TOP


நீராட்டினுள் (1)

திரு நீராட்டினுள் தேவியர்க்கு ஆவன – உஞ்ஞை:38/113

TOP


நீராட்டு (8)

நீராட்டு இயல் அணி நின்-வயின் நீங்கி அ – உஞ்ஞை:36/218
புதல்வர் ஆணை புது நீராட்டு என – உஞ்ஞை:38/23
நேர் இழை மகளிரை நீராட்டு அயரும் – உஞ்ஞை:41/105
நீராட்டு அரவம் நிகழுமால் இனிது என் – உஞ்ஞை:41/135
நீராட்டு அரவம் நெடு நகர் வரைப்பகம் – உஞ்ஞை:42/1
நீராட்டு இடத்தின் நீக்கி நடுவிற்கு – இலாவாண:5/162
நெய்யாட்டு அரவமும் நீராட்டு அரவமும் – நரவாண:6/72
நீராட்டு அயர்ந்து பல் கலன் அணிந்து – நரவாண:7/73

TOP


நீரால் (1)

மாற்று செய்கை என்னும் நீரால்
ஆற்ற வெவ் அழல் அவிப்ப கூடுதல் – உஞ்ஞை:42/238,239

TOP


நீரிடை (2)

ஈர தானை நீரிடை சோர – உஞ்ஞை:40/100
ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி – உஞ்ஞை:40/266

TOP


நீரில் (3)

கை கொள் நீரில் கண் நிழல் கயல் என – உஞ்ஞை:40/153
அளற்று எழு தாமரை அள் இலை நீரில்
துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு விம்மி – உஞ்ஞை:42/119,120
நெகிழ்ந்த நீரில் கண் கையாக – மகத:24/180

TOP


நீரின் (7)

நீரின் வந்த காரிகை நேர்த்தது – உஞ்ஞை:38/217
தலைமை நீரின் தண்ணென தெளித்து – இலாவாண:20/48
சூட்டு முகம் திருத்தி வேட்டு நறு நீரின்
மயிரும் இறகும் செயிர்_அற கழீஇ – மகத:14/108,109
கனல் இரும்பு உண்ட நீரின் விடாது – மகத:25/71
மாட்சி நீரின் மாண் சினை பல்கிய – வத்தவ:9/73
நீரின் கொண்டு நேர் இழை மாதரை – வத்தவ:15/92
கல்வி நீரின் கண் விட்டு கவினி – நரவாண:8/76

TOP


நீரும் (1)

நீரும் நிழலும் நீங்கிற்று ஆகி – உஞ்ஞை:49/50

TOP


நீரோடு (1)

உட்படு நீரோடு ஊற்று உடைத்தாகி – உஞ்ஞை:53/76

TOP


நீல் (5)

நீல் நிற கொண்மூ நெற்றி முள்கும் – உஞ்ஞை:41/74
நீல் நிற முகில் இடை காமுற தோன்ற – இலாவாண:6/146
நானம் மண்ணி நீல் நிறம் கொண்டவை – இலாவாண:19/68
நானம் மண்ணிய நீல் நிற குஞ்சியர் – மகத:17/153
ஆற்றல் அமைந்தன நீல் பால் புறத்தன – மகத:19/168

TOP


நீல (25)

நீல யானை நெஞ்சு புக்கனன் போல் – உஞ்ஞை:32/55
நீல கண்ட நிரைத்த மருங்கின் – உஞ்ஞை:38/59
நீல குவளை நிரை இதழ் உடுத்த – உஞ்ஞை:40/52
நீல தெள் நீர் நீந்தும் ஆமையின் – உஞ்ஞை:46/261
நீல தண் மலர் நீர்ப்பட்டன போல் – உஞ்ஞை:56/141
நீல மால் வரை நிமிர்ந்து நடந்து அன்ன – உஞ்ஞை:58/17
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி – இலாவாண:2/129
நீல உண் மணி கோல குழிசி – இலாவாண:6/62
நீல திரள் மணி கோல கரு நிரை – இலாவாண:6/97
கோலம் குயின்ற நீல சார்வு அயல் – இலாவாண:6/122
நீல பொய்கை பாசடை தாமரை – இலாவாண:10/67
நீல யானை நின்றது பண்ணி – இலாவாண:11/142
நீல மா மணி நிமிர்ந்து இயன்று அன்ன – இலாவாண:15/90
நீல நாகம் பை விரித்து அன்ன – இலாவாண:15/142
நீல வேழம் நினைந்து உழன்றாங்கு – இலாவாண:19/212
நீல கட்டியும் மரகதத்து அகவையும் – மகத:1/96
நீல கச்சை நிரை கழல் மறவரை – மகத:17/231
நீல கொண்மூ நீர் திரை பெய்வது ஓர் – மகத:20/78
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய – மகத:27/72
நீல வேல் கண் நிரை_தொடிக்கு ஈக என – வத்தவ:11/46
நீல பட்டு உடை நிரை மணி மேகலை – வத்தவ:12/262
நீல நெடும் கண் நிரை வளை தோளி – வத்தவ:13/107
நீல நெடு மயிர் எறியும் கருவி – வத்தவ:16/25
நீல பருப்பமும் தீபமும் அப்பால் – நரவாண:1/181
நீல உண்கண் நிலவு விடு கதிர் நுதல் – நரவாண:7/129

TOP


நீலகேசி (1)

நீலகேசி என்னும் பெரும் பெயர் – வத்தவ:15/46

TOP


நீலத்து (5)

நீலத்து அன்ன கோல தடம் கண் – உஞ்ஞை:47/244
நிறை வாய் தண் சுனை நிவந்த நீலத்து
ஒண் மலர் குற்ற மகளிர் அவை நம் – இலாவாண:12/54,55
மணி வாய் நீலத்து அணி முகை அலர்த்தி – மகத:1/188
நீலத்து அன்ன நெறி இரும் கூந்தலை – மகத:21/79
நிழல் படு வனப்பின் நீலத்து அன்ன – நரவாண:2/27

TOP


நீலம் (4)

இட்டதை உண்ணும் நீலம் போல – உஞ்ஞை:35/139
கார் பூ நீலம் கவினிய கலி துறை – உஞ்ஞை:53/172
நிழல் திகழ் தெள் நீர் நீலம் சூழ – இலாவாண:5/44
நீலம் உண்ட நூல் இழை வண்ணம் – இலாவாண:9/88

TOP


நீலமும் (2)

நீலமும் அரத்தமும் வால் இழை வட்டமும் – உஞ்ஞை:42/208
கல் சுனை நீலமும் கணி வாய் வேங்கையும் – இலாவாண:20/59

TOP


நீலமொடு (1)

கூல பொய்கையுள் நீலமொடு மலர்ந்த – உஞ்ஞை:48/47

TOP


நீலமோடு (1)

நீலமோடு இகன்ற நேர் இழை மகளிரை – இலாவாண:12/57

TOP


நீவி (12)

அளகமும் பூணும் நீவி சிறிது நின் – உஞ்ஞை:33/163
ஓதியும் நுதலும் மாதரை நீவி
தக்கது நோக்கான் பெற்றது விரும்பி – உஞ்ஞை:36/85,86
நங்கையை தழீஇ நல் நுதல் நீவி
மனம் கொள் காரணம் மருள காட்டி – உஞ்ஞை:36/316,317
பிதிர் சுணங்கு ஆகமொடு பெரும் தோள் நீவி
கதிர் பொன் பட்டமொடு கனம் குழை திருத்தி – உஞ்ஞை:37/163,164
அம் செம் சாந்தமொடு மஞ்சள் நீவி
இருப்பு அகல் நிறைந்த நெருப்பு நிறை சுழற்றி – இலாவாண:3/47,48
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி
தென் மருங்கு மடுத்த தீர்த்த புல் மிசை – இலாவாண:3/115,116
நறு நெய் தோய்த்து முறை முதல் நீவி
நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல் – இலாவாண:5/70,71
பொன் புனை பாவை புறக்கு உடை நீவி
செம் கையின் திருத்தி பைம் தோடு அணிந்து – மகத:14/144,145
குடுமி கூந்தலுள் நறு நெய் நீவி
நல்லவை நாப்பண் பல் சிறப்பு அயர்ந்து – வத்தவ:2/31,32
கூந்தல் முதலா பூம் புறம் நீவி
ஆய்ந்த திண் தோள் ஆகத்து அசைஇ – வத்தவ:7/47,48
மணம் கமழ் நுதலும் மருங்குலும் நீவி
அழிவு நனி தீர்ந்த யாக்கையேன் ஆகி – வத்தவ:7/105,106
சிறகர் விரித்து மெல்லென நீவி
பறவை கொளீஇ பல் ஊழ் நடாஅய் – வத்தவ:10/54,55

TOP


நீவியும் (1)

புது தளிர் கொடுத்தும் பூம் புறம் நீவியும்
செயிர் இடையிட்டு இது சிறக்குவது ஆயின் – இலாவாண:16/76,77

TOP


நீழல் (5)

ஏந்திய நீழல் சாந்து கண் புலர்த்திய – உஞ்ஞை:38/127
குராஅ நீழல் கோல் வளை ஒலிப்ப – இலாவாண:14/40
பெரும் தண் பிண்டி பிணங்கிய நீழல்
அரும் படை தானை அகன்ற செவ்வியுள் – இலாவாண:15/45,46
ஓங்கு குடை நீழல் உலகு துயில் மடிய – வத்தவ:10/133
பல் பூம் படாகை பரந்த நீழல்
நல்லோர் தூஉம் நறு நீர் நனைப்ப – வத்தவ:17/103,104

TOP


நீள் (19)

மிசை நீள் முற்றத்து அசை வளி போழ – உஞ்ஞை:33/62
கூட கூம்பின் நீள் திரள் ஏறி – உஞ்ஞை:40/72
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய – உஞ்ஞை:40/199
கோணை நீள் மதில் கொடி கோசம்பி – உஞ்ஞை:48/69
நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி – உஞ்ஞை:51/81
கோல நீள் மதில் கொடி கோசம்பி – இலாவாண:2/50
உருப்ப நீள் அதர்க்கு அமைத்து முன் வைத்த – இலாவாண:9/238
நீள் நீர் முழவின் பாணியில் பாடியும் – இலாவாண:14/12
நீள் புடை இகந்துழி ஞாயில் ஒதுங்கி – இலாவாண:19/51
நீள் நிலை படுவில் பேர் புணை நீந்தி – மகத:1/135
கேணியும் கிணறும் நீள் நிலை படுவும் – மகத:3/6
துன்ன_அரும் நீள் மதில் துவராபதிக்கு இறை – மகத:17/29
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி – மகத:24/138
நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி – மகத:25/21
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து – வத்தவ:16/41
ஆர் அரண் அமைத்து வாள் நடு நீள் மதில் – நரவாண:2/3
உலப்ப_அரும் நீள் அதர் தலைச்செல ஓடி – நரவாண:3/128
நீள் அரி ஒழுகி நிகர் தமக்கு இல்லா – நரவாண:8/84
கோல நீள் மதில் கொடி கோசம்பி – நரவாண:8/2

TOP


நீளமும் (3)

விலங்கும் நீளமும் இலங்கி தோன்றி – இலாவாண:2/114
மருங்கின் நீளமும் நிறம் கிளர் சேவடி – நரவாண:8/109
நிறமும் நீளமும் பிறவும் தெரியா – நரவாண:8/113

TOP


நீளி (1)

நிணம் பசை கொண்ட நீளி நெடும் பல் – இலாவாண:8/108

TOP


நீறு (2)

ஒளிறு வேல் இளையர் தேர் நீறு அளைஇ – உஞ்ஞை:33/84
நீறு மெய் பூசி நெடிய மயிர் களை – வத்தவ:14/67

TOP